ஊருக்குள்ளே வந்த சதாசிவத்திடம் உங்களின் மகள் இயலினி பஞ்சாயத்தில் நிற்கிறாள் என்று கூறியவர்கள் கூடவே, “அவள் நம்மை விட கீழ் ஜாதியை சேர்ந்த ஒரு பையன் உடன் தனியாக பேசி சிரித்து கொண்டு இருக்கையில் கையும் காலும் ஆக பிடிக்கப்பட்டு உள்ளாள்… அப்படி பிடித்ததுமே அவளை கொண்டு வந்து ஊர் பஞ்சாயத்துல நிறுத்திட்டான் எப்படா நீங்க எதுலையாவது மாட்ட மாட்டீங்கலான்னே நாக்க தொங்க போட்டு கிட்டு இருக்குற அந்த பேச்சியப்பன்…” என்று கூறி விட சதாசிவத்திற்கு ஆத்திரம்மாக வந்தது.
சரியாக ஜோசியர் வேறு உன் பொண்ணால் தான் உன் மானம் போகும் என்று வேற கூறி இருக்க அதே நாளில் இந்த கூத்தும் வேறு நடந்தேறி விட, “போனதும் என்ன ஏதுன்னு அந்த கழுதைய கேட்டு விசாரித்து பெண் பிள்ளைய வச்சி பிரச்சனை செய்ற அந்த பேச்சியப்பனுகு இருக்கு…” என்றே கூறி கொண்டு பஞ்சாயத்தை நோக்கி விரைந்தார்.
பஞ்சாயத்து நடக்கும் மரத்தடி இடம் வந்ததும் பைக்க விட்டு இறங்கி கொண்டு அந்த கூட்டங்களை எல்லாம் கலைந்து கொண்டு உள்ளே சதாசிவம் வந்தார்… வந்தவர் பார்வையில் முதலில் விழுந்தது மரத்தில் கட்டி வைக்கப்பட்ட பையன் தான்… அவனை கண்டதும் அவரின் புருவங்கள் முடிச்சியிட்டது… ஏன் எனில் அவனுடன் இயலினி ஓரிரு முறை பேசியதை கண்டது அவருக்கு நினைவு வந்தது.
அதுவரைக்கும் பேச்சியப்பன்னால் தான் இருக்கும்… ஆகையால் என்ன நடந்தது என்று குடும்ப மானத்திற்காக கேட்டு விட்டே முடிவு எடுக்க வேண்டும் என்று நினைத்து இருந்த சதாசிவத்திற்கு தானே தன் மகள் அந்த பையனுடன் பேசியதை கண்டு உள்ளேன்… அப்போ ஜோசியரும் பேச்சியப்பனும் ஊரும் கூறியதே உண்மை என்று அவரின் மூளையிலும் மனதிலும் பதிந்து விட தன் தந்தையாவது தன்னை நம்புவார் என்று அது வரைக்கும் நம்பி இருந்த இயலினி தன் தந்தையை கண்டதும், “அப்பா…” என்றே அவரிடம் ஓடி வந்து அணைத்து கொண்டாள்.
அதுவரை நான் எதுவும் செய்ய வில்லை என்று ஊராரிடம் கூறி கலைத்துப் போய் கண்ணீர் கூட வற்றி நின்றிருந்தவள் தன் தந்தையை கண்டதும் சிறிது நம்பிக்கை வந்தவளாக தன் தந்தையை கட்டிக்கொண்டு, “அப்பா… அப்பா… நான் எதுவும் பண்ணல…” என்று கூறும் போது எல்லாம் சதாசிவத்தின் ஐவிரல்கள் அவளின் கன்னத்தில் பதிந்து இருந்தது.
அந்த ஐவிரல் கன்னத்தில் பதிந்த வேகத்திலேயே தரையில் தொப்பு என்று விழுந்து விட்டாள் இயலினி… அப்போது காட்டில் வேலை செய்து முடித்து விட்டு மதிய உணவு உண்ண வீடு வந்த விசாலம் இப்படி ஒன்று நடப்பதை அறிந்ததும் ஓடி வந்தவர் கண்டது இயலினியை அறை வாங்கி தரையில் விழுந்தது தான்.
ஓடி வந்து இயலினியை தாங்கி தூக்கிய கரம் உண்மையில் அந்த நேரம் தன் அன்னையின் கரம்மாக தான் இருக்கும் என்று நினைத்து இயலினி பார்க்க அது விசாலம்… தந்தையும் தன்னை நம்ப வில்லை தாயும் தனக்கு ஆதரவாக வர வில்லை என்று விசாலத்தை கண்ட அப்போதே சிறு பெண்ணாண இயலினி மீண்டும் உடைந்து போனாள்… அவளின் அம்மாவை இயலினி வெற்று பார்வையாக பார்க்க அவரோ ஒரு ஓரம்மாக நின்று கொண்டு முந்தியால் வாய் பொத்தி அழுது கொண்டு இருந்தார்.
விசாலம் தான், “அண்ணா… என்ன காரியம் செய்றிங்க? இவ நம்ம வீட்டு பொண்ணு ண்ணா… அவ எந்த தப்பும் பண்ணி இருக்க மாட்டா… அவள நம்புங்க அண்ணா… இயலு புள்ள… நீ அழாத… அத்தை இருக்கேன்… நான் உன்னைய நம்புறேன்…” என்றார்.
சினத்தில் இருந்த சதாசிவம்மோ தங்கையை தள்ளி விட்டு இயலினி பிடித்து இழுத்து மீண்டும் அடிக்க செல்ல விசாலம் தன் அண்ணனின் கரத்தைப் பிடித்துக் கொண்டு, “அண்ணா… நம்ப புள்ளைய நம்பளே நம்ப வில்லை என்றால் எப்படி அண்ணா? அவளை நான் நம்புறேன்… நீங்களும் நம்புங்க அண்ணா நம்ம பொண்ணு இந்த மாதிரி எந்த தப்பும் பண்ணிருக்க மாட்டான்னு…” என்றவரின் பேச்சி எல்லாம் காற்றில் பறந்து போனது.
சதாசிவம் விசாலத்தையும் தள்ளி விட்டு இயலினியின் கரத்தை பிடித்து மீண்டும் அடிக்க சென்றார்… அப்போது அங்கே சினமாக வந்த விசாலத்தின் மகன் மாமன் என்று பாராமல் ஓங்கிய அவரின் கரத்தை அப்படியே பிடித்து விட்டான்… அவனுக்கு சிறு வயதில் இருந்தே இயலினியை பிடிக்கும்… அதன் பெயர் காதல் என்று வைக்க வேணாம்… மாமன் மகள் என்ற பிரியம் நேசம் அதுபோல… விசாலத்திற்கும் இயலினியை பிடிக்கும் அவளை தன் மருமகளாக ஆக்கி கொள்ள ஆசையும் அவருக்கு உண்டு… மருமகளிடம் கொட்டு வாங்கினாலும் தன் அண்ணன் மகளிடம் வாங்கிக்கலாம் என்று.
ஆகையால் இயலினியை இவ்வாறு பஞ்சாயத்தில் நிற்க வைத்து குற்றம் சாட்டிக் கொண்டு இருப்பது விசாலத்திற்கு பிடிக்க வில்லை… அதே போலவே இயலினியை குற்றம் சாட்டிக் கொண்டு இருக்கிறார்கள் என்று அறிந்த விசாலத்தின் மகன் அவன் கோபமாக வந்து கொண்டு இருந்தான்… வந்த இடத்தில் தனது அம்மாவையும் சதாசிவம் தள்ளி விட்டதை கண்டதும் அவனுக்கும் கோபம் ஆக்ரோஷமும் வந்து விட மாமனின் கரத்தை வலுவாக பிடித்து உதறி விட்டே இயலினியின் தோளில் கையை போட்டு அணைத்தது போல பிடித்து கொண்டே
“யோவ் நீ எல்லாம் மனுஷனா யா… ஊரே தன் பிள்ளைய தப்பு சொன்னாலும் தன் பிள்ளை தப்பு செய்யாதுன்னு நினைக்கிறவன் தான்யா பெத்தவன்… நீ என்னய்யா இப்படி இருக்குற? இதுல என் அம்மா மேல வேற கை வைக்கிறியா? மாமன் **றுன்னு எல்லாம் பார்க்க மாட்டேன் வெட்டி போட்டுடுவேன்…” என்றே வார்த்தைகளை விட்டான்.
அவன் கூறிய வார்த்தைகள் எல்லாம் சரியான வார்த்தைகள் தான்… ஆனால் என்ன செய்ய? இந்த இடத்தில் அவன் கூறிய வார்த்தைகள் எல்லாம் சதாசிவத்திற்கு அத்தனை கோவத்தை தந்தது… தங்கையின் மகன்னாகவே இருந்தாலும் யோவ் அதன் கூடவே கெட்ட வார்த்தை எல்லாம் கூறி ஒரு இருவத்திரண்டு வயது பையன் தன்னை ஊரார்கள் முன் பஞ்சாயத்தில் எதிர்த்து குரல் உயர்த்தி பேசி விட்டானே என்று அவருக்கு அத்தனை கோவம் வந்தது.
அதே சினத்துடன் விழிகள் இரண்டும் சிவந்து, “ச்சி… வாய மூடுடா நாயே… இப்ப என்ன ஊர் எல்லாம் மேய்ஞ்சது பத்தாதுன்னு அடுத்து பேர் கெட்டு போச்சி இனி யார் கேட்பான்னு என் பொண்ணையும் மேய பாக்குறியா டா…” என்று அவர் கேட்ட வார்த்தையில் விசாலாம், “அண்ணாணா…” என்று கத்தி விட அவரின் மகன்னோ சதாசிவத்தின் சட்டையை கொத்தாக பிடித்து விட்டான்.
அனைத்தும் கை மீறி போயி விட்டது… இதற்கு மேலும் எதையும் கேட்க விரும்பாத இயலினியும் தனது கண்ணீரை துடைத்து கொண்டாள்… இயலினியும் பிறந்ததில் இருந்து சிறிது துடுக்காகவும் சிறிது நறுக்கென்று பேசக்கூடிய பெண் தான்… ஆகையால் தன் தந்தை இப்படி ஒரு வார்த்தையை கூறி விட்டார் என்று அவரை சிறிது அருவருப்பாகவே பார்த்து,
“இப்ப என்ன? உங்க எல்லாருக்கும் நான் அந்த பையனோட சிரிச்சு பேசி பழகி கூத்தடிச்சேன்… அதானே… அதை என் வாயால சொல்லணும்னு இங்க இருக்குற எல்லாரும் எதிர் பார்க்கிறீங்க… அப்படி தானே… ஆமாம்… ஆமாம்… நான் அந்த பையன்னோட சிரிச்சு பேசினேன் தான்… பழகுனேன் தான்… கூத்தடிச்சேன் தான்… இப்ப அதுக்கு என்ன? என்னைய என்ன பண்ண போறீங்க எல்லாரும் சேர்ந்து… சொல்லுங்க…” என்றே அவளும் ஆத்திரத்தில் கத்தினாள்.
இது போதாதா… பெண்ணவள் வீட்டில் சத்தம்மாக பேசினாலே தாங்காது குடும்பம் என்று கூறும் சமூகம்… அதுவும் பொது இடத்தில் சிறிது சத்தமாக சிரித்து விட்டாலும் தாங்காது இந்த உலகம்… அப்படி இருக்க பஞ்சாயத்தில் இவ்வளவு தூரம் ஆக்ரோஷமாக ஒரு பெண் அவள் பேசினால் ஏற்றுக் கொள்ளுமா என்ன?
அவ்வளவே… ஊர் மக்கள் எல்லாரும், “ம்… அப்போ எல்லாம் உண்மை தான் போல…” என்று ஏதோ இதுவரையும் பொய் என்று இயலினிக்கு சார்பாக பேசியது போலவும் இப்பொழுதே அவள் இவ்வாறு கூறிய பிறகு தான் நம்புவது போலவும், “ஓஓ… அப்போ பேச்சியப்பன் சொன்னது எல்லாம் உண்மை தான் போல…” என்றது.
பிறகு என்ன சொல்லவா வேணும்… சதாசிவம் அவரும் நன்றாக முடிவே செய்து விட்டார்… “அவளே ஒத்து கொண்டாள்… தன் மகள் அவனுடன் பழகி விட்டாள் தான்… தன் குடும்பத்தோட மொத்த மானத்தையும் வாங்கி விட்டாள் தான்… இந்த நிமிடத்தில் இருந்து இவள் என் மகளே இல்லை… சனியன் செத்து தொலைந்தால் நிம்மதி… இன்னம் இருந்து என்ன என்ன என் மானத்தை வாங்க போறாளோ…” என்றே சினம் கொண்டு அந்த பஞ்சாயத்தில் தன் மகளை அடித்து விலாசி தன் மகள் தவறு செய்தாள் தான் என்று நிரூபித்து விட்டார்.
ஏதோ நான்கு அடி வாங்கும் போதே அந்தப் பையனின் பெற்றோர்கள் எப்படியும் தன் பயனை இந்த ஊர் காரங்கள் உயிரோடு விட மாட்டார்கள் என்று போலீசில் தகவல் செய்து வர வைத்து விட்டதால் பஞ்சாயத்தில் குற்றவாளியாக எந்த தவறும் செய்யாமல் நின்று கொண்டு இருந்த அந்த இரு சிறு பிள்ளைகளையும் காப்பாற்றி விட்டார்கள் காவல் துறையினர் வந்து.
அன்று இயலினி தனது பெற்றோர்களை வெறுத்தது தான்… தன்னை நம்பாத யாரையும் அவள் மதிக்க தயாராக இல்லை… தன்னை குற்றவாளியாக ஊரார்கள் ஆக்கியதை விட தன் குடும்பம் தான் ஆக்கியது… நிரூபித்தது… இனி அங்கு போக மாட்டேன் என்று அந்த பஞ்சாயத்து நடந்த இடத்திலே இருந்து விட்டாள்… ஏன்? இயலினியின் பெற்றோர்கள் கூட வந்து அவளை அழைக்க வில்லை ஒரு முறை.
விசாலம் தான் அவளை தன் வீட்டுக்கு அழைக்க அப்போதே விசாலத்தின் மகன், “ஏன் உன் நொண்ணன் சொன்னத அவள நம்ப வீட்டுக்கு கூட்டி கிட்டு வந்து நீயே நிரூபிக்க போறியா? ஒழுங்கா செல்லத்தாயி ஆயாவ வர சொல்லி அவரோட இவள அனுப்பி வை… அது தான் இவ வாழ்க்கைக்கு சரியா இருக்கும்…” என்று கூறி அவனே செல்லத்தாயிக்கு தகவல் தர அதன் பின்பே அவர் அவரின் ஊரில் இருந்து இரவோடு இரவாக ஒருவரின் உதவியுடன் காரப்பட்டிக்கு வந்து சேர்ந்தார்.
ஜாதி, ஜாதகம், நேரம் போன்ற விஷயங்களால் பல பெண்கள் ஆண்கள் என்று பேதம் இன்றியே பாதிக்கப்படுகிறார்கள் தான்… ஆனால் என்ன பண்ண? பெண்கள் கொஞ்சம் அதிகம்மாகவே பாதிக்க படுகிறார்கள் என்பது மறுக்கப்படாத உண்மையும் கூட.
அடப்பாவிங்களா..! உங்க உங்க பஞ்சாயத்துக்கு ஒரு பொண்ணோட வாழ்க்கையையே பணயம் வைச்சுட்டிங்களே டா..!
சில இடத்தில் கொஞ்சம் பெண்களுக்கு இது போன்ற தவறுகள் நடக்க தான் செய்கின்றது
Nice epi
😱