அவர் வழக்கம் போல் மீடியாவின் முன் தனது கட்சியின் பெருமை அவரின் ஆட்சியின் பெருமை அவர் செய்தது செய்ய போவது என்று அனைத்தையும் கூறி முடித்து இயலினிக்கு இதை செய்கிறேன் அதை செய்கிறேன் என்று எல்லாம் அவர் கூறி கொண்டு இருந்தார்.
பள்ளி படிக்கும் மாணவி தானே… இளங்கன்று பயம் அறியாது என்பது போலவே இடை புகுந்த இயலினி தொண்டர் ஒருவர் கூறிய படியே சார் என்ற வார்த்தையை விடுத்து தலைவரே என்றே ஆரம்பித்தாள்.
“தலைவரே… எனக்கு ஹாஸ்டல் எல்லாம் வேணாம் தலைவரே… நான் என் ஆயுசுக்கும் இங்க இருந்து என் ஊருக்கும் ஊர் மக்களுக்கும் பெருமைய சேர்த்து அவங்க கண்ணு முன்னாடியே நல்ல முறையில வாழ ஆசைப்படுறேன் தலைவரே… அதனால நீங்க தான்…” என்று நிறுத்த
அவரும், “அதனால நான் என்னம்மா? எதுவா இருந்தாலும் சொல்லும்மா… நான் உனக்கு செஞ்சி தரேன்… உன்னைய உன் பெற்றோர்கள் உடன் சேர்த்து வைக்கணும்மா? ஹாஸ்டல் வேணாம்ன்னா வேற தனியார் ஸ்கூல் ஏதாவது சேரணும்மா? சொல்லு தான் ரெக்கமெண்ட் பண்ணுறேன்… இல்லன்னா வேற ஏதாவது எக்ஸ்ட்ரா கிளாசஸ் சேரணும்ன்னு ஆசைப்படுறியா ம்மா… சொல்லும்மா…” என்று அன்பாக கேட்டார்.
இயலினியும், “தலைவரே… நானே தினமும் சாப்பிடுவதற்கே ஸ்கூலுக்கு போயிட்டு வந்ததும் தனியா வேலைக்கு போயி தான் தலைவரே சாப்பிடுறேன்… இதுல தனியார் ஸ்கூல் எல்லாம் எனக்கு ஒத்து வராது தலைவரே… அப்படியே நீங்க ஆபர் தரிங்கன்னு நான் போயி சேர்ந்தாலும் பாதி பணம் அவங்க குறைச்சாலும் மீதி பணத்தை நான் கட்டி தானே ஆகணும்… லோன் போட்டு படிச்சா கூட அது எனக்கு அயுசுக்கும் கடன் தான தலைவரே…” என்று பேச பேச அவர் இயலினியை சிறிது எரிச்சலுடன் பார்த்தார்.
இருந்தும் அமைதியாக கேட்பது போலவே, “சரி ம்மா… இப்ப நீ என்ன சொல்ல வர? அத சொல்லு…” என்றார்.
இயலினியும், “தலைவரே… இந்த ஊர்லையே நான் தங்க எனக்கு வீடு வேணும்… அதுக்கு நீங்க எனக்கு காசு எல்லாம் தர வேணாம்… இப்போ ஒரு திட்டத்துல அரசாங்கம்மே வீடு கட்டி தருதுல… அந்த திட்டத்துல என் பேர இணைச்சி எனக்கு வீடு கட்டி தர எனக்கு உதவி செய்ங்க தலைவரே…” என்றாள்.
அதை கேட்டதும் அவரும் சிறு யோசனையுடன், “அதுக்கு சொந்தம்மா இடம் இருக்கனும் ரேஷன் கார்டு இருக்கனும்மே ம்மா… உன் கிட்ட அது எல்லாம் இருக்கா?” என்றே கேட்டார்.
அதை கேட்டதும் இயலினி, “என்ன தலைவரே? நானே அப்பா அம்மா எல்லாம் கை விட்டதால அனாதையா நிக்கிற பொண்ணு… ஊரே என்னைய ஒதுக்கி வைத்திருக்கிறது… அப்படி இருக்கிற என் கிட்ட இத எல்லாம் எப்படி தலைவரே இருக்கும்? என்னைய மாதிரி பொண்ணுங்களுக்கும் மக்களுக்கும் தானே தலைவரே உதவுறேன்னு வரீங்க… அப்படி உதவ வந்து எங்க கிட்ட அது இருக்கா? இது இருக்கான்னு கேட்டா என்ன தலைவரே அர்த்தம்?”
“அத்தோட உதவிங்குறது நிரந்தரமான ஒரு தீர்வ எங்களுக்கு தரதா மட்டும் ஏன் தலைவரே எங்களுக்கு எப்பையும் தர மாட்டேங்கறீங்க? நீங்க ஹாஸ்டல் சேர்த்து விட்டா… நான் மாசம் மாசம் உங்க கிட்ட வந்த பீஸ்க்காக நிக்கணும்… சரி… உங்க ஆட்சி மாறி போனா வர ஆட்சி நீங்க சொன்னத செய்யணும்ன்னு என்ன அவசியம் இருக்கு? அழகா அரசாங்க ஸ்கூல்ல படிச்சி கிட்டு இருக்குற எனக்கு எதுக்கு தலைவரே தனியார் ஸ்கூல்? அங்க போயி நான் ஏன் தலைவரே கடனாளியா ஆகணும்?”
“இதுக்கு எந்த ஒரு உதவி செய்தாலும் அதனால அந்த மக்கள் நிரந்தரம்மா அந்த பிரட்ச்சனைய விட்டுட்டு வெளிய வரணும்ன்னு நீங்க உதவி செய்து தந்தா எவ்வளவு நல்லா இருக்கும் தலைவரே… இதையும் வச்சி ஏன் தலைவரே எங்கள மாதிரி ஆளுங்கள அலக்கடிக்கிறீங்க?” என்றே கேட்க அவரின் முகம் நொடி பொழுதில் கருத்து போனது.
அவரின் முக மாறுதலை கண்டு கொண்டு அருகில் இருந்த தொண்டன் ஒருவன் அவரின் செவியில், “தலைவரே… இந்த பொண்ணு கொஞ்சம் வில்லங்கம்மா இருக்கு… மீடியா வேற இருக்கு… அதனால அந்த பொண்ண எந்த ஒரு பேச்சியையும் வளர்க்க விடாமல் எவ்வளவு சீக்கிரம் முடியும்மோ அவ்வளவு சீக்கிரம் பேசி சரி கட்டிட்டு இங்க இருந்து கிளம்புவோம் தலைவரே… அதான் நல்லது…” என்று எடுத்து கூறினார்.
அப்போது அனைத்தும் லைவ்வில் ஓடி கொண்டு இருக்க ஒரு ரிப்போர்டர், “சொல்லுங்க தலைவரே… அந்த பொண்ணு நேருக்கு நேராக அந்த பொண்ணுக்கு என்ன தேவையோ அதையே சொல்லி நிரந்தர தீர்வு வேண்டும் என்று கேட்டு விட்டது…. இப்பொழுது இந்த விஷயத்தை வைத்து நீங்கள் அரசியலாகக்க போகிறீர்களா? அல்லது அந்த பொண்ணு கேட்ட படியே அவருக்கான நிரந்தரமான ஏதேனும் ஒரு தீர்வை தரப் போகிறீர்களா? சொல்லுங்கள் தலைவரே…” என்றே ஒருவர் கேட்க மற்ற ரிப்போர்ட்டர்களும் கேட்க தயாராகினர்.
அப்போதே அவரும் சொந்த காசிலே சூனியம் வைத்துக் கொண்டோம் என்பதனை புரிந்து கொண்டு பற்களைக் கடித்துக் கொண்டே தனது தொண்டனிடம், “டேய்… போயி செக் புக் எடுத்து கிட்டு வாடா…” என்று கூற
அந்த தொடணும், “அச்சோ… செக் புக் எடுத்து கிட்டு வரல தலைவரே…” என்று கூற, “கார்ல பணம் இருக்கும்… ஒரு ஐந்து இலட்சம் எடுத்து கிட்டு வா…” என்று கூற அடுத்த சில நொடியிலே அவர் கரத்தில் ஐந்து இலட்சம் வந்து சேர்ந்தது.
அவரும் அந்த பணத்தை இயலினியின் முன் நீட்டி, “இந்த பணத்த வாங்கிக்கோமா… நீ எதுக்கும் யோசிக்காத… இந்த பணத்த வைத்து இந்த ஊர்லையே இடம் ஏதாவது வாங்கி அதோட பத்திரத்தோட நகலையும் ரேஷன் கார்டையும் விஏஓ கிட்ட தந்து அப்ளே பண்ணு… உனக்கே முன்னுரிமை தர சொல்லி நானே சொல்லிட்டு போறேன்…” என்று கூறியே பணத்தை இயலினியின் கரத்தில் தந்து விட்டு
மனதிலே, “இனி இவ முகத்துல கூட முழிக்க கூடாது…” என்றே நினைத்து கொண்டு வெளியே மலர்ந்த முகம்மாக, “வேற எதாவது வேணும் என்றாலும் உன்னை போன்ற பெண்களுக்கு உதவ என் ஆட்சி எப்போதும் காத்து இருக்கும்மா…” என்று கூறியே ஆள விட்டால் போதும் என்றே சென்று விட்டார்.
அதன் பின் என்ன? விசாலம் தன் அண்ணன் வீட்டு பக்கத்திலையே அவருடையதாக இருந்த ஐந்து சென்டு இடத்தை அப்படியே தரேன் தரேன் என்றவரிடம், “நீ ஒன்னும் இந்த இயலினிக்கு பிச்சை போட வேணாம் அத்தை… பண வாங்கி கிட்டு தரதா இருந்தா தா… இல்லாட்டி போயி கிட்டே இரு…” என்று கூறி விட விசாலமும் தன்னிடமும் வேத்தாளிடம் பழகுவது போல் பழகுவது மனதை காயப்படுத்த
“ஏன் டி? எவனோ ஒருத்தன் தந்த காச தானே டி… நீ இப்போ வாங்கி பேரம் பேசுற…” என்று அவரும் இடித்து கூறினார்.
அதற்கு எல்லாம் அசருபவள் நான் இல்லை என்றே, “நீங்க எல்லாம் உங்க ஒரு ஓட்டுக்கு வாங்குற ஒத்த நோட்ட நான் கட்டா வாங்கி கிட்டேன்… ஏன்னா அவர் என்னைய வச்சி விளம்பரம் ஆக பார்க்குறாரு… நான் அவர வச்சி என் வாழ்க்கைய சீராக்க பார்க்குறேன்… இது எல்லாம் கிவன் டேக் பாலிஸி அத்தை… இது எல்லாம் சொன்னாலும் உனக்கு புரியாது… இந்தா இந்த ஊர்ல இந்த இடத்துக்கான விலை தான் இந்த பணம்… நாளைக்கே ரிஜிஸ்டர் பண்ணிக்கலாம்…” என்று கூறியே அவரின் கரத்தில் இரண்டு இலட்சம் வைத்தாள்.
அதன் பின் தனி ரேஷன் கார்டு போட வேண்டும் என்று கூறிய இயலினியை செல்லத்தாயி தான், “என் கூடயும் வர மாட்டேங்குற… நான் தர பணத்தையும் வாங்கிக்க மாட்டேங்குற… இப்போ என் ரேஷன் கார்டுல உன் பேரையும் சேர்த்துக்க மாட்டேங்குற… அப்போ நான் எதுக்கு உயிரோட இருக்கணும்… நான் செத்துப் போறேன்… அது… இது…” என்று எல்லாம் அழுது ஆர்பாட்டம் பண்ணி மிரட்டி அவரின் ரேஷன் கார்டில் அவரின் பெயருடன் இயலினியின் பெயரையும் இணைத்துக் கொண்டார்.
இயலினியும் பத்தாம் வகுப்பு விடுமுறையில் அரசாங்கம் வீடு கட்டி தரும் திட்டத்திற்கு அப்ளே செய்தாள்… அடுத்து விசாலம் வாங்கிய இடத்திலும் செலவு செய்ய மனம்மில்லாமல் கூடாரம்மே அமைத்து கொண்டு மீதம் இருந்த பணத்தில் மாடு இரண்டும் குத்தகைக்கு இரண்டு ஏக்கர் நிலத்தையும் வாங்கி மாடு மேய்க்கவும் சிறிது சிறிதாக விவசாயம் பார்க்கவும் ஆரம்பித்தாள்.
கூடவே வீடும் கட்ட ஆரம்பிக்க அப்போ பதினொன்றாம் வகுப்பும் போக ஆரம்பித்தாள்… ஆனால் என்ன? அவள் உண்ணும் உணவை மட்டும் மாத்தி கொள்ளவே இல்லை… கஞ்சியிலையே தான் உண்டாள்… செல்லத்தாயி ஏதேனும் காய் கறியில் வளரும் பிள்ளை சாப்பிட வேண்டும் என்று செய்து வைத்தாலும் அதில் ஒரு வாய் கூட சாப்பிடாமல் பட்டினியாக சென்று படுத்து விடுவாள்.
அவர் ஏதேனும் கேட்டால், “என் கூட இருந்து உன்னைய கஞ்சி சாப்பாடு சாப்பிட சொல்லி நான் உன்னைய கட்டாயப்படுத்தல… உனக்கு என்ன பிடிச்சிருக்கோ அதை செஞ்சு நீ சாப்பிடு… என்னைய என் போக்குல விட்டுடு…” என்றே ஒருமுறை கூறி விட்டாள்.
அதன் பின் செல்லத்தாயும் தனது பேத்தி என்ன சொல்லுகிறாளோ அதையே செய்ய கடமைப்பட்டவராக அப்படியே செய்ய ஆரம்பித்தார்… அவள் கூறிய படியே சமைக்க ஆரம்பித்தார்… அவள் உண்ணும் உணவையே அவரும் உண்ண ஆரம்பித்து விட்டார்.
காலையில ஐந்து மணிக்கு எழுவதும் குத்தகைக்கு வாங்கிய காட்டில் மாட்டிற்காக கட்டி இருந்த மாட்டு தொழுவத்திற்கு சென்று மாடுகளை சுத்தம் செய்வதும் பாலை கரப்பதும் அதன் பின் தீனி அறுத்து மாடுகளுக்கு போடுவதும் என்று எட்டரை மணி வரைக்கும் வேலையாக செய்து விட்டு அவசரமாக வீட்டிற்கு வந்து குளித்து விட்டு பள்ளிக்கு செல்வாள்.
இவ்வாறே இரண்டு வருடம் படித்தாள்… அதாவது பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்தாள்… தேர்வு எழுதி முடித்து விட்டு முழு விவசாயியாகவே மாறி போனாள் என்றால் பார்த்துக்கோங்களேன்… இவள் ஒரு பக்கம் இவளின் வளர்ச்சியில் அழகாக இருக்க மறுபக்கம் ஊர் மக்களும் அவளைப் பெற்ற சதாசிவமும் வயிற்றில் புளியை கரைக்காத குறையாக அவளின் ரிசல்ட் வரும் நாளில் இருந்தனர்.
பின்ன என்ன? இம்முறையும் எங்கு இயலினி நல்ல மதிப்பெண் எடுத்து மீடியா ரிபோட்டர்கள் எல்லாரும் வந்து நின்னு இவளை பற்றி கேள்வி கேட்டு ஊர் மானத்தையும் பெத்தவங்க மானத்தையும் இவள் மறுபடியும் வாங்கி விட்டு விடுவாளோ என்றே தான் அவர்கள் அனைவரும் பயந்து இருந்தனர்.
சரியாக அவர்களின் பயத்தை எல்லாம் உண்மையாக்குவது போலவே தான் இயலினியின் மதிப்பெண்கள் இம்முறையும் இருந்தது.
Ella pethavangalum pasanga nalla mark vanganum tha ninaipanga aanainga eduthuruvalo nu baya paduranga
thank you sis
அப்படி போடு அருவாளைன்னானம்.
நன்றிகள் சகோ
Good epi
👌👌👌👌