Skip to content
Home » இதயத்தின் ரோமியோ 1

இதயத்தின் ரோமியோ 1

SRK கல்லூரி 

கல்லூரி நுழைவு வாயில் நீலம் மற்றும் வெள்ளை நிற பலூன்கள் ஆர்ச் வடிவத்தில் கட்டப்பட்டு இருந்தது. கல்லூரி மாணவர்களின் கூட்டம் அங்கும் இங்கும் நடந்து கொண்டே இருந்தனர்.

அந்தக் கல்லூரியில் அனைத்து துறைகளும் இருக்கிறது. ஒவ்வொரு துறையின் புது மாணவர்களை வரவேற்கும் விதமாகப் பயின்று கொண்டிருக்கும் மாணவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். வேலைகள் அனைத்தும் சரியாக நடக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தாள் விஸ்காம் துறை எச்சோடி மது மேம். அவளைப் பார்த்த அனைவரும் அந்த இடத்தை விட்டு ஓட்டம் பிடித்தனர் பின்ன அங்கேயே நின்று யார் அவளிடம் திட்டு வாங்குவது என்று தான். மாணவர்கள் கூட்டம் நடுவே நண்பர்களின் பட்டாளத்தின் சந்தோஷ சத்தம் கேட்டுக் கொண்டிருத்தது. அதைக் கவனித்தவள் அங்கே நின்ற தன் மாணவியை அழைத்தாள். 

“ப்ரித்தி” குரல் சற்று கண்டிப்புடன் வர 

“வசமா மாட்டிகிட்டோம் போல ச்ச! சொல்லுங்க மேம்”  பெண்ணவள் முகத்தைத் தொங்க போட்டுக் கொண்டு வந்து நின்றாள்.  

“எங்கே கல்லூரி ACPL?” (Assistant college people leader)  

“மேம்! அவன் ஒரு முக்கியமான வேலைக்காக ஹாஸ்டல் வரைக்கும் சென்றிருக்கிறான்.”

“வாட்? ஹாஸ்டலுக்கா. அவனுக்குக் கொஞ்சம் கூடப் பொறுப்பு இல்லை. இன்னும் ஐந்து நிமிடத்தில் அவன் என் கண்  முன்னாடி நிற்க வேண்டும். இல்லைன்னா நீ தான் கிரண்டை சுற்ற வேண்டி வரும்.” மது அவளுக்குத் தண்டனைபற்றிச் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட. அவளை ஓரக்கண்ணில் முறைத்து கொண்டே அலைபேசி மூலம் தன் நண்பனுக்கு அழைப்பு விடுத்தாள்.

“டே… எருமை வாசு. எவ்வளவு நேரம் ரெடியாகி வர. இங்கே எச்சோடி பொறித்து தள்ளுது சீக்கிரம் அந்த ரோமியோவை கூட்டிட்டு வா.” 

“வாயை மூடுடி பல்லி.இந்த மன்மதன் ரெடியாகி வரதுக்கு தான் நேரமாகுது.” கடுப்போடு  அழைப்பைத் துண்டித்து விட்டுக் குளியல் அறை கதவைத் தட்டினான்.

“டே…. சீக்கிரம் குளிச்சிட்டு வாடா. எவ்வளவு நேரம் அங்க பெரிய ப்ரச்சனையே நடந்து விடும் போல” 

“இதோ!வந்துட்டேன்.” துண்டை இடுப்பில் கட்டி கொண்டு தலையைத் துவட்டிய படி வெளியே வந்தவன். ஆள் உயர கண்ணாடியில் முகத்தைத் துடைத்துக் கொண்டு. அருகே இருந்த கபோர்டிலிருந்து பிங்க் நிற சட்டை அதற்கு ஏற்றார் போல் நீலநிற ஜீன்ஸ் அணிந்தவன். தலையைச் சரி செய்து. கையில் ஒரு வாட்ச்யை கட்டி கொண்டான். பால் நிறம், இதழில் பெண்களை மயக்கும் சிறு புன்னகை இதற்கு நடுவில் மேலே இருந்த பட்டனை கழட்டி விட்டு அதில் அவன் கழுத்தில் மின்னும் தங்க நிற ஜெயின் அனைவரின் கண்களையும் கவர்ந்து அவன் பக்கம் இழுத்து  விடும் அழகன். 

“வாசு… வாப்போகலாம்.” கண்ணாடி டிரெயில் இருந்த ஐ டி கார்டை எடுத்துச் சுற்றி கொண்டே அறையிலிருந்து வெளியே வந்தான். அங்கே இருந்த மாணவர் அனைவரும் மரியாதைக்காக அவனுக்கு வணக்கம் வைத்தனர். அவன் இரண்டாம் ஆண்டு படிக்கிறான். இதற்கு நடுவில் நடந்த எலக்ஸ்னில் மாணவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு  ACPL ஆகிவிட்டான். அப்பறம் அனைவரும் மரியாதை தந்து தானே ஆக வேண்டும்.

“டே…. நேரம் ஆகுது. மது மேம் உன்னை ஏற்கனவே தேட ஆரம்பித்து விட்டார்கள்.” 

“அப்படியா! அப்போ ரேஸ் தான் ரெடியா மச்சான்.” அவன் கையைப் பிடித்து ஓட ஆரம்பித்தான்.

இருவரும் ஹாஸ்டலில் பிடித்த ஓட்டத்தை  டிபார்ட்மென்ட் முன்னே வந்து நிறுத்தினர். அவர்களுக்காவே காத்திருந்தது போல் மது இருவரையும் முறைத்து கொண்டு நின்றிருந்தாள் 

“மேம்”

 தன்  கைக்கடிகாரத்தை பார்த்தவள். “என்ன டைம் தெரியுமா?”

” நான் அப்பவே சொன்னேன் மேம். இவன் தான் லேட் ஆகிட்டா.” பக்கத்தில் இருந்த வாசுவை கோர்த்து விட 

“வாசு! நான் நிறைய டைம் வார்னிங் கொடுத்துட்டேன். இனி இப்படி லேட்டா வரக் கூடாது. அப்படியே லேட்டா வந்த இரண்டு நாள் கிளாஸ் வெளியே தான் நிக்கனும் சொல்லிட்டேன். சீக்கிரம் வேலையைப் பாருங்க போங்க.” மது அவனைத் திட்டி விட்டு உள்ளே  சென்று விட்டாள். 

“அப்பாடா! இது என்ன உலகமகா நடிப்பா இருக்கு. நீ என்ன சொன்னாலும் மேம் கேப்பாங்க போல.  சும்மாவா… சொல்றாங்க நீ இந்தக் காலேஜ் ரோமியோ என்று.”

“டே… வயிறு எரியுதா. பரவாயில்லை வா… ஒரு ஜுஸ் குடித்து கொண்டே பேசலாம்.” அவன்மேல் கைப்போட்டு அழைத்துச் சென்றான்.

துர்ஷயன் தந்தை மிகப்பெரிய தொழிலதிபர். தந்தை பெயர் ஆனந்த் தாய் பெயர் மாலா. துர்ஷயனுக்கு ஒரு அண்ணன் சரவணன் இருக்கிறான். அவர் தந்தையின் பிஸ்னஸ்யை பார்த்துக் கொள்கிறான். இதில் கடை குட்டி நம் நாயகன். அவனுடைய வீடு இங்கேயே இருந்தாலும் ஹாஸ்டலிலிருந்து நண்பர்களுடன் இருப்பது பிடித்து இருக்கிறது ஒரு சில நேரத்தில் வீட்டிற்கு கூடச் சென்று விடுவான். எல்லாம் அவனுடைய விருப்பம் தான். ஏனென்றால் அவனைக் கேள்வி கேட்கப் போவது யாரும் இல்லை அதனால் எப்பொழுதும் ஒரு உற்சாகத்தோடும்  கல்லூரியில் பெண்களை மயக்கும் ஆண் அழகன் மிஸ்டர். ரோமியோ 😍 என்ற கெத்தோடும் சுற்றி கொண்டிருக்கிறான். 

“பிள்ளையார்பட்டி கணபதியே. நான் வந்த நோக்கம் நிறை வேற வேண்டும். என் அப்பா நினைத்ததுப் போல் நான் நல்லா  படிக்கனும். அப்படியே என் மனதில் இருப்பதையும் நிறைவேற்றி விடு.” இரு கைக்கூப்பி மரத்தடியில் வீற்றிருந்த பிள்ளையாரிடம் வேண்டுதல் வைத்தாள். அந்தக் கிராமத்து குயில். 

“அடியேய்! உன் வேண்டுதல் போதும். பாவம் பிள்ளையார் வேண்டுதல் கேட்டு இடத்தைக் காலி பண்ணிட போறாரு.”

இரண்டு தோப்புக்கரணம் போட்டு விட்டு அவளிடம் நோட்டு புத்தகத்தை வாங்கி கொண்டு அவளை முறைத்து தள்ளினாள். 

“ஏன்டி… என்னை முறைக்கிற நான் உண்மையைத் தானே சொன்னேன்.”

“கீதா… ஏன் இப்படி கிண்டல் பண்ற.

என் மனதில் இருப்பது உனக்குத் தெரியும் தானே.”

“அது தெரிந்ததால் தானே! உன்னுடன் நானும் வந்து கல்லூரியில் சேர்ந்து இருக்கேன்.” கீதா சலிப்போடு கூறியவள் அவளைக் கடந்து செல்லும் பெண்களைக் கண்டவள். 

“இங்க பாருடி எல்லாம் சுடிதார், ஜீன்ஸ், டாப் போட்டு இருக்காங்க. இந்தப் பொண்ணுங்களை அவங்க வீட்டில் திட்டமாட்டாங்க.”

“கீதா வாயை மூடிட்டு வா. தேவையில்லாத விஷயத்தில் நாம தலையிடக் கூடாது” 

“ஓகே!” கீதா தலையசைத்தவள் அவளோடு காலேஜ் உள்ளே அடியெடுத்து வைத்தாள். அவர்கள் போகும் பாதையில் கூடி நின்ற இளைஞர்கள் வட்டம் இருவரையும் போக விடாமல் நிறுத்தி வைத்தனர்

“நீங்கப் புது ஸ்டூடன்டா.”

“ஆமாம்…. கொஞ்சம் வழியை விடுங்களேன்.” கீதா கூற 

“அதெப்படி விட முடியும். நாங்க சொல்றதை செய்ங்க விடுகிறோம்.”

“என்ன செய்ய வேண்டும்?”

“இதோ நிக்கிறானே இவனைப் பார்த்து ‘நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க மாமா’அப்படின்னு சொல்லு.”

“யார் இவரைப் பார்த்து நான் சொல்ல வேண்டுமா. பார்த்தா பாதி கருகிய மாங்கா மாதிரி இருக்கான் இவன் எனக்கு மாமா வா!

அதெல்லாம் சொல்ல முடியாது.”

கீதா சொல்ல 

“அதெப்படி நீ சொல்லமாட்டாய்.” அவன் முன்னே வர. அவன் பின்னே நின்றிருந்தவன் அவனது கைபற்றி நிறுத்தினான். 

“டே. ASPL வரான்.” அவன் சொல்லி முடிக்கவில்லை அதற்குள் துர்ஷயன், வாசு இருவரும் அங்கே வந்து இருந்தனர். 

“இங்க என்ன ப்ரச்சனை?”

கூட்டத்தில் நின்றவன் “அதெல்லாம் எதுவும் இல்லையே. புது பசங்க கிளாஸ்க்கு எப்படி போறதுன்னு வழி கேட்டாங்க அதான் சொன்னோம்.”

“ஐய்யோ. இது உலகமகா பொய். இந்தக் கருகிய மாங்காவை நான் மாமான்னு கூப்பிடனுமா அப்படி சொல்லவில்லை என்றால் வழி விடமாட்டேன் என்று கூறினான்.”

“அய்யோ…. பச்சக்கிளி போட்டுக் கொடுத்து விட்டாளே.”

“வாட் இஸ் திஸ்… இப்படி எல்லாம் பண்ண கூடாதுன்னு உங்க கூட்டத்துக்கு எத்தனை முறை வார்னிங் கொடுப்பது. இனி இப்படி நடந்தது கரஸ்பான்ட் அறையில் தான் மீட் பண்ண வேண்டி வரும்.”

“ஸாரி… ASPL”

“எல்லாம் போங்க” துர்ஷயன் கத்த  அங்கிருந்த அனைவரும் சென்றனர். 

“நீங்க எந்த டிபார்ட்மெண்ட் மா?”

“நாங்க விஸ்காம் அண்ணா”

கீதா கூற 

“அட… நம்ம டிபார்ட்மெண்ட் வாங்க”  இருவரையும் அழைத்துச் சென்றனர். 

“ஆமா… உன்னோட பெயர் என்ன?”

“என்னோட பெயர் கீதா. இவள் என்னோட ப்ரண்டு தரங்கிணி”

“ஓகே… ஆல் தி பெஸ்ட் நல்லா படிங்க இப்போ உள்ளே போங்க பாய்” துர்ஷயன்  அவர்களை  வகுப்பறையில் விட்டுச் சென்றான். அவளருகே வந்த தரங்கிணியை அப்பொழுது தான் கீதா பார்த்தாள். முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிந்து கொண்டிருந்தது. 

“இவள் என்ன திருவிழாக்கு போட்ட பல்பு மாதிரி இவ்வளவு பிரகாசமா தெரியுறா.”

“ஏய்! தரங்கிணி” அவளைப் பிடித்து உலுக்கினாள். 

“ஏய்…. என்ன முகம் இவ்வளவு பிரகாசமா இருக்கு?”

“அதுவா!”அவள் தாவணியை கையில் உருட்டிய படி வெட்கம் கொள்ள 

“அய்யோ… இந்தக் கருமத்தை எல்லாம் பார்க்க வேண்டுமா.” தலையில் அடித்துக் கொண்டாள். 

“ஏய்… லூசு சொல்லு. இப்படி எல்லாம் பண்ணாத”

“கீதா… நான் சொன்னேன் இல்லை. அது அவர் தான்.”

“எவரு… அந்த மாங்காவா!”

“ஏய்! அவன் இல்லைடி. நம்மளை வந்து காப்பாற்றி இங்கே கொண்டு வந்து விட்டுப் போனாறே அவரு தான்.”

“யாரு… இப்ப நம்முடன் வந்தாரே”

“ஆமாம்” என்று அவள் தலை அசைத்துக் கீழே குனிந்து கொள்ள 

“ஏய்… நீ என்ன வேணா பண்ணு ஆனால் இந்த வெட்கப்படுவதை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியலை.”

“கீதா…. அவர் பெயரைக் கேட்டு இருக்கலாம்.”

“நீயே கேட்க வேண்டியது தானே!”

“நான் எப்படி கேட்பது நீயே கேட்டுச் சொல்லு.”

“கேட்டுச் சொல்கிறேன்!” இருவரும் பேசிக் கொண்டே இருக்க. பேராசிரியர் உள்ளே வந்தார். 

அந்த வகுப்பறை ஜன்னல் வைத்து விசாலமான  தான் இருந்தது. முதலில் இருந்த ஏழு டேபுள் மட்டுமே நிறைந்து இருந்தது அதன் பிறகு இருந்த நாலு டேபுள் ஆட்கள் இல்லாமல் தான் இருந்தது.

ஒவ்வொருவரும் அவர்களின் பாடத்தையும், பெயர்களையும் அறிமுகம் செய்து கொண்டனர். இன்று வகுப்பு நிறைவு என்பது போல் அனைவரையும் அனுப்பி விட்டனர். அங்குப் படிப்பவர்களுக்கு  ஆண்கள், பெண்கள் என்று தனித்தனி ஹாஸ்டல் வசதி உண்டு. டைனிங் கால், தியேட்டர் என்று அனைத்தும் இணைந்து தான். இதிலும் பெண்கள் விடுதியில் CPL, ACPL  இருவருக்கும் இரவு 10 மணிவரை அனுமதி உண்டு தரங்கிணி, கீதா இருவரும் மூன்று நபர் தங்கும் அறையில் இருக்கின்றனர்.  இருவரும் கிராமத்திலிருந்து வந்திருக்கின்றனர். தரங்கிணிக்கு தந்தை மட்டுமே சண்முகம்.  மகள்மீது அத்தனை பாசம் அதனால் தான் என்னவோ மகளைப் பட்டணத்திற்கு படிக்க அனுப்ப வேண்டாம் என்று ஊர் மக்கள் இலவசமாக அறிவுரை சொல்லியும் தன் மகளின் விருப்பத்தை நிறைவேற்ற அவளைப் பட்டணத்தில்  படிக்கப் போகிறேன் என்றவுடன் ஒப்பு கொண்டார். கீதா பெற்றோர்  ராஜஸ்தானில்  செட்டில் ஆகி விட்டனர்.  சண்முகத்தின் தங்கையின் முதல் கணவர் இறந்து விட்டதால் இரண்டாவது திருமணம் செய்து ராஜஸ்தானிக்கு அனுப்பி விட அவர்களும் அங்கே செட்டில் ஆகி விட்டனர். எத்தனை முறை அவளை அழைத்தும் கீதா மாமாவுடனே இருப்பதாகக் கூறி விட்டாள். சண்முகமும் கீதாவையும் தன் மகள் போலவே நினைக்கிறார். அதனால் இருவரையும் ஒரே கல்லூரியில் சேர்ந்து விட்டார். இருவருக்கும் உறவைவிட நல்ல நட்பு இருக்கிறது. தரங்கிணி சின்ன வயதில் இருந்தே கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவள். கீதா அதற்கு நேர் மாறு வாயும் கையும் சும்மாவே இருக்காது.

தரங்கிணி ஒரு வித மஞ்சள் நிற அழகி, வில் போன்று வலைந்த புருவம், கூர் நாசி, மௌன புன்னகை வீசும் இதழ், இடை வரை வளர்ந்த கூந்தல். அவள் படித்தது எல்லாம் கிராமம் இங்கு வளர்ந்த நாகரீக பெண்களின் நடுவே கிராமத்து குயில் இரண்டு தங்களின் வாழ்வை வாழ வந்திருக்கின்றனர். 

5 thoughts on “இதயத்தின் ரோமியோ 1”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *