Skip to content
Home » இதயத்திருடா-14

இதயத்திருடா-14

இதயத்திருடா-14

  •  🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

     “கைலாஷ்… கைலாஷ் எதுக்கு.?” என்றவள் நொடியும் தாமதிக்காது கமிஷனருக்கு கால் செய்தாள்.

    “சார் என்னை கொல்ல வந்தது முன்னாடி பிடிச்ச கேஸோட சம்மந்தப்பட்டவங்க இல்லை… இப்ப பிடிக்கணும்னு துரத்திய டிரக் கேஸ் விஷயமா. அன்னிக்கு துரத்திய பையன் குமாரை தேடி கைலாஷ் என்றவரோட வீட்டுக்கு போய் விசாரிச்சேனே… அந்த கைலாஷ் செத்து கடற்கரையில பிணமா இருக்கார்.” என்றதும் தர்ஷனோ, “சோ… உன்னை கொல்ல முடியலைனு நீ தேடிய நபரை கொன்று போட்டுயிருக்காங்கனு சொல்ல வர்ற” என்று கேட்டார்.

    “ஆ..ஆமா சார்.” என்றதும் தர்ஷனோ “கைலாஷை சுட்டிக்காட்டின அந்தப் பொண்ணு சேப்பா இருக்காளா… எதுக்கோ செக் பண்ணிக்கோ.

    எனக்கென்னவோ அந்த பையன் உன்னை அப்சர்வ் பண்ணறான். அதனால தான் நீ தேடி போனவனை கொன்றிருக்கான். சுத்தி இன்னும் க்ளோஸா  கவனி நற்பவி. நீ எதையோ விடற” என்றதும் நற்பவிக்கு இதயம் வெளியே வந்து விழுந்திடும் அளவிற்கு அச்சம் பரவியது.

    “சார்… இங்க செத்துப்போனவனு பார்க்க கூட்டம் கூடியிருக்கு… நம்ம மெரீனா பத்தி உங்களுக்கு தெரியாதா.? சுத்தி நின்று வேடிக்கை பார்க்கறாங்க. இதுல யாருனே தெரியாம யாரை சார் தேடுவேன்.” என்றதும் தர்ஷனோ “உன்னிடம் கைலாஷை பற்றி சொன்ன பொண்ண போய் பாரு” என்றார். 

“ஓகே சார். இங்க கைலாஷ் பாடியை ஹாஸ்பிடல் அனுப்பிட்டு, நான் அந்த மஹாவை தேடறேன் சார்” என்று  கத்தரித்தாள்.

    கைலாஷ் உடலை மற்ற பார்மாலிடிஸ் செய்து தகவல் அளிக்கும் பணியை மேற்க்கொண்டாள்.

    படகிலிருந்து தவறி விழுந்து உப்புதண்ணீர் நுரையீரலில் நுழைந்து இறந்ததாக அனுபவம் கொண்ட மருத்துவர் உரைத்தார். 

    மாலை இறுதி ஊர்வலம் நடத்தப்பட்டது.

    ‘அந்த மஹா என்ற பொண்ணை எங்க போய் தேடறது. முன்னயே அட்ரஸை கேட்டு வைக்கலை. இதை சொன்னேன் அந்த அங்கிள் அதுக்கும் திட்டுவார்.

    வெளிப்படையா கேட்டா கைலாஷை கொன்றவங்களுக்கும் க்ளூ கொடுத்த மாதிரி தெரியும். அவங்களை தேடறதும் தெரிந்திடும். என்ன பண்ண?’ என்றவள் நெத்தியை தட்டி ஆழ்ந்து யோசிக்க ஆரம்பித்தாள். 

      அந்த பையன் ஏதோ மைக்கானிக் ஷாப் வச்சிருக்கறதா சொன்னானே. ஏதோ… சாமி பெயரு…. அந்த பொண்ணு பேர் மஹா.. ஆனா லட்சுமி சொன்ன மாதிரி தோணலை. வேற ஏதோ… என்றவள் தெருதெருவாக சகாதேவனை வைத்து தேடினாள்.

    இரண்டு நாளாய் சகாதேவன் பட்டினப்பாக்கத்தை சுற்றி சுற்றி வந்த தேடுதலிலேயே அலுத்துவிட்டார்.

    “மேடம் யாரை தேடறிங்க, என்ன பெயரு, ஏதாவது சொல்லுங்க, நானும் தேடறேன். கடைப் பெயரையாவது சொல்லுங்க மேம்.” என்று கேட்டுவிட்டார்.

     “அண்ணா… கடைப் பெயர் நினைவில்லை.” என்று வருத்தமாய் கூறினாள்.

    அப்பொழுது ஒரிடத்தில் ‘தேவி மெக்கானிக் ஷாப்’ என்றதில் போலீஸ் வண்டினை கண்டு தலைகுனிந்தான் குரு.

     ‘இந்த குருவிக்கூடு தலையை எங்கயோ… பார்த்திருக்கேன்.. இது அவன் தானா? அவனே தான்.’ என்று நற்பவி வண்டியை நிறுத்த கூறினாள்.

       குருவோ முகத்தை மறைத்து ஒளிய, நற்பவி “குரு” என்று அழைத்தாள்.

     “இங்க பாருங்க மா. ஏதோ அன்னிக்கு மூச்சு பிடிக்க ஒடியதை பார்த்து எங்குட்டுல அது பாவம் பார்த்து உன்னான்ட அந்த பையனை பார்த்தேன் கைலாஷுக்கிட்ட வேலைக்கு கேட்டு வந்ததையும் வேலை செய்ததையும் சொல்லிச்சு. சும்மா எங்களை ஏன் சுத்துற. கடலம்மா மேல சத்தியமா அதுக்கு வேற எதுவும் தெரியாது எங்களை வுட்று” என்று குரு இறைஞ்சினான்.

   “குரு கைலாஷ் செத்துட்டான். உனக்கு தெரியாதுனு மட்டும் போய் சொல்லாத. தெருவுக்கு தெரு போஸ்டரா இருக்கு.” என்று பேச ஆரம்பித்தாள் 

     “தெரியும்மா… எல்லாம் தெரியும். நீ அந்த பையனை பிடிக்க வரலை. அவங்ககிட்ட பணத்து வாங்கிட்டனும் தெரியும்” என்று மொழிந்தான்.

     “என்ன சொல்லற.” என்று நற்பவி விழித்தாள்.

      “பார்த்தேன் மா.. நீயும் அன்னிக்கு மஹா சொன்ன பையனும் பேசி சிரிக்கிறதை பார்த்தோம்.

   நீ பணம் வாங்கு வாங்காதே. அது உன்னிஷ்டம். என் பொண்டாட்டிய வுட்ரு. நாங்களே இப்ப தான் எங்களோட வாழ்க்கைய சந்தோஷமா வாழ்ந்துகுனு கீறோம்.  உனக்கு பொறுக்கலையா அது.

     கைலாஷ் பொணத்தை கடல்ல மிதக்க வுட்டு கொலையை விபத்தா நீ மாத்தி நீயே கூடவேயிருந்து இறுதி காரியம் வரை இருந்த.
 
     இப்ப இன்னா… என் பொண்டாட்டிய தேடிட்டு ரோட் ரோடா சுத்திறியா” என்று கேட்டதும் நற்பவி அதே திகைப்பில் தான் இருந்தாள்.

     “லுக்… எனக்கு ஒன்னு புரியலை. நான் எப்ப அந்த பையனோட பேசினேன். அந்த பையன் யாருனே எனக்கு தெரியாதே.” என்று நற்பவி கேட்டதையே கேட்டாள்.

    வயிற்றை தாங்கிப்பிடித்து, “தெரியாம தான் அம்புட்டு நேரமா பேசினியா மா” என்று மஹா வந்து சேர்ந்தாள்.

    அவள் வந்ததும் குரு பயந்து போனான். எங்கே நற்பவி மஹாவை ஏதேனும் செய்திடுவாளோ என்று.

    “ஏம்ம… நீயேன் இங்க வந்த. வூட்டுக்கு போ.” என்று விரட்டினான்.
 
    “சும்மாயிருய்யா… இதா.. நீ கஷ்டப்பட்டியேனு தானே அந்த பையன் கைலாஷிடம் வேலை கேட்டு வந்ததை சொன்னேன். பொம்பள விஷயத்துல சில நேரம் சில்லரையா இருந்தாலும் எங்க சாதி சனத்துக்கு ஒன்னுனா முதல் ஆளா ஆஜராகிடும் அந்த கைலாஷ். அத்த கைலாஷத்துக்கு அனுப்பிட்டியே.” என்று மஹா விசனப்பட்டாள்.

      “முதல்ல யார் அந்த பையன்?” என்றவள், இல்லை.. இங்க எதுவும் பேச வேண்டாம். உன் வீடு எங்க?” என்று கேட்க, கூற மறுத்த இருவரிடமும், “லுக் என்னை கொல்லறதுக்கும் ஆட்கள் சுத்தினாங்க. இந்த வெட்டு காயம் தான் சாட்சி, உங்களையும் தான். நான் நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. முதல்ல சேப்டியா நம்மை நாமளே பார்த்துக்கிட்டு பேசுவோம்.” என்றதும் மஹாவோ குழப்பமாய் நற்பவியை மேலும் கீழும் பார்த்தாள்.

    நேற்று அந்த பையனோடு சிரித்து பேசியவளுக்கு கைகட்டு எதனாலோ என்று பேச ஆரம்பித்தாள். “இந்நேரம் கடையடைச்சிட்டு வூட்டுக்கு வந்து சாப்பிடும். யோவ் நாம வூட்டுக்கு போகலாம். நீங்க எங்க பின்னால வாங்க.” என்று மஹா கூற குருவோ “உனக்கு அறிவேயில்லமே” என்று திட்டியபடி மெக்கானிக் ஷாப்பில் சரிசெய்த ஒரு வண்டியை எடுத்து அவளை ஏற்றி புறப்பட்டான்.

     அவர்களை பின் தொடர்ந்து சகாதேவனோடு நற்பவி காரில் வந்தாள்.
  
     மஹா குரு இருவரும் ஒரு குடிசைப்பகுதியில் நுழைய, “சகாதேவன் அண்ணா… நீங்க ரவுண்ட்ஸ் போயிட்டு சாப்பிட்டு இருங்க. நான் போன் பண்ணறேன்” என்று நடந்தாள்.

   மஹா குரு இருவரும் வீட்டுக்குள் நுழைய, நற்பவியும் வந்தாள். அவள் வந்ததும் கதவை தாழிட்டு, “நீ அந்த பையனோட, நான் பேசியதா சொல்லற… எனக்கு யாருனு தெரியலை. மேபீ எனக்கே தெரியாம இருக்கலாம். நீ எப்ப பார்த்த எங்க பார்த்த?” என்று விசாரித்து கேட்டாள்.

   “அன்னிக்கு கலவரத்துல… காலேஜ் பசங்களிடம் பேசிட்டு இருந்தியே” என்று மஹா கூறினாள்.

   “பச் அங்கயிருந்த பசங்களிடம் பாதி பேரிடம் பேசினேன். எனக்கு அங்க தான் ட்யூட்டி காலையில இருந்து மாலை வரை அங்க இருந்தா என்னிடம் பேச வந்த பசங்களிடம் பேசியிருப்பேன். அதுல நீ யாரை சொல்லற.” என்று கேட்டாள்.

    “வெயிட்… இதுல போராட்டத்துல இருந்த பசங்க முகம் தெரியுதா. அதுல நீ சொல்லறவன் யாரு.” என்று கேட்டாள்.

     மஹா போனை வாங்கி ஒவ்வொன்றாய் பார்த்தாள்.

   நேற்றைய மாணவர் போராட்டத்தில் கலவரத்துக்கு முன்னும் கலவரத்துக்கு பின்னும் என்று நிறைய புகைப்படம் பார்த்தாள்.

    ஒவ்வொன்றாய் பார்க்க உதடு பிதுங்கி இல்லையென காட்டினாள்.

     கடைசியாக பத்து புகைப்படம் இருக்க அதில் மாணவரோடு சேர்ந்து எடுத்த செல்பி புகைப்படத்தில் இருந்தான் சரத்.

     “இவன்… இவன் தான் கைலாஷிடம் வேலை கேட்டு வந்தவன். என்ன வேலை கொடுத்துச்சோ… அதெல்லாம் தெரியாது. ஆனா இவன் தான்” என்றதும் நற்பவி அதிர்ந்தாள்.

   “சரத்… இவனை எனக்கு ரீசண்டா தெரியும். எனக்கு கணவரா வரப்போறவரோட ஹோட்டலில் பேரரா வேலை பார்க்கறான்..” என்று மதிமாறன் சரத்தை பற்றி கூறிய போது பார்ட்டைம் ஜாப் பண்ணறான். பணம் சம்பாதிக்கணும்னு இப்பவே ஆசை… அது ஆசையல்ல வெறி என்று இன்று புரிந்தது.

   பத்தொன்பது வயது இளைஞனுக்கு பணம் தேவை பார்ட் டைம் ஜாப் செய்தும் கல்லூரியிலும் என்று இரண்டு இடத்தில் தன்னை பொருத்தி கொண்டவனுக்கு மூன்றாவதாய் பொருந்தி கொண்டு வேலை பார்க்கவும் அத்தனை கடினம் இராது.

     “அண்ணிக்கு இந்த பையனை உங்களோட பார்த்தோம். ரொம்ப க்ளோஸா பேசியதும் நீங்க பணத்தை வாங்கிட்டு கை கூலியா போனதா நினைச்சிட்டேன்” என்று குரு கூறினான்.
  
       “அன்னிக்கே பேசலாம்னு வந்தேன். இதான் இழுத்துட்டு வந்துடுச்சு.” என்று மஹா குருவை திட்டினாள்.

     “நல்ல வேளை மஹா… நேத்து வந்திருந்திங்க அவன் உங்களை நோட் பண்ணிருப்பான்.

     ஆக்சுவலி இந்தே வெட்டே அன்னிக்கு போராட்டம் பண்ணின மாணவரை வெட்ட வந்ததா நினைச்சேன். ஆனா என்னை வெட்ட தான் சந்தர்ப்பத்தை சாதகமா மாத்த நினைச்சிருக்காங்க. என்னை கொல்ல முடியலை என்றதும் கைலாஷை கொன்று போட்டிருக்காங்க.

    அவனுக்கு கர்ப்பிணி பெண் என்றவரை தெரியும் ஆனா உங்களை தெரியாது. நீங்க வெளிநடமாட்டம் இல்லாம இருப்பது நல்லது தான்.” என்றதும், “வயித்துல என்னமோ பண்ணுதே” என்றான் குரு.

    “யோவ் இருயா… சோறு தின்றதிலேயே இரு” என்று திட்ட, “அச்சோ மஹா.. உங்க கணவருக்கு நான் பேசறதில பயத்துல வயிற்றில் புளியை கரைக்குதுனு சொல்லறார்.” என்றதும் மஹா குருவை முறைத்தாள்.

    “சரி மஹா… நீ வெளியே வராதா… உன் கணவருக்கு சாப்பாடு போடு. குரு நீங்களும் முடிந்தளவு கைலாஷ் இருந்த இடம் மீன் பிடிக்கிற இடம் சுண்டல் விற்கறது இதெல்லாம் அவாய்ட் பண்ணுங்க.” என்றதும்.

    “எங்க வயித்துல அடிக்கிறியே.” என்று மஹா குறைப்பட்டாள்.

    “உன் உயிர் முக்கியம் மஹா. வயித்துல ஒரு உயிர் இருக்கு.” என்று தன் இருவரின் போன் எண்ணை கேட்டு வாங்கி கொண்டாள்.

    “சரி வர்றேன்” என்று நற்பவி கிளம்ப, “சோறு துண்ணுட்டு போறியா..” என்று மஹா கேட்டு விட்டாள்.

    “எ… சும்மாயிருமே. அவங்க நம்மூட்ல சாப்பிடமாட்டாங்க” என்று குரு மறுத்தான். 

    “மஹா.. என்ன குழம்பு… தட்டை வை. இன்னிக்கு இங்க தான் சாப்பிட போறேன். ம்ம்… சோறு மட்டும் பிசைந்து வச்சிட்டு ஒரு ஸ்பூன் கொடு. என்னால கையில சாப்பிட கஷ்டமாயிருக்கு” என்று கூறவும் மடமடவென பிசைந்து ஒரு தட்டில் போட்டாள்.

     நற்பவியோ ரசம் பிசைந்து வைத்திருக்க, தொட்டுக்க மீன் வறுவலை நீட்டவும் “மஹா.. நான் வெஜிடேரியன். மீன்லாம் வேண்டாம்…  ஏதாவது ஊறுகாய் அப்பளம் இப்படி கொடு போதும்” என்றதும் மடமடவென பூண்டு ஊறுகாயை நீட்டவும் சப்புக்கொட்டி சாப்பிட்டாள்.

   கிளம்பும் போது “நீங்க இரண்டு பேர் தானா?” என்று கேட்டாள்.
     “ஆமா மா… எங்கப்பா ஜனகராஜூ மூனு மாசத்துக்கு முன்ன தான் செத்துடுச்சு.” என்று கூறவும்
“சரி எதுக்கோ ஜாக்கிரதையா இருங்க” என்று கிளம்பினாள்.

    போனில் சகாதேவனை அழைத்து தான் நடந்து வருவதாகவும் ஆன்தவே பிக்கப் செய்ய கூறி நடந்தாள்.

   வேகமாக ஒரு பைக் நற்பவியை மோதும் அளவிற்கு வந்தது.

-இதயம் திருடுவோம்.
-பிரவீணா தங்கராஜ்.

1 thought on “இதயத்திருடா-14”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *