இதயத்திருடா-15
- 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
“சாப்பிட்டியா இல்லையா… நீ வருவ வருவனு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்” என்று நற்பவி அருகே வேகமாய் வந்த மாறன் பைக் நிறுத்தி கேட்டான்.
“மஹா வீட்ல சாப்பிட்டேன். நீங்க எங்க இங்க என்னை தேடி வந்திங்களா?” என்று ஆச்சரியமாக கேட்டாள்.
“எனக்கு யார் இருக்கா? உன்னை தவிர? கை அடிப்பட்டிருக்கே சகாதேவன் அண்ணா கார்லயும் நீ இல்லை. வெட்டுகுத்து வேற வாங்கி வச்சிருக்க, பயம் வராதா? அதனால சட்டுனு பைக்ல வந்துட்டேன்.” என்றான்.
“மாறா… என் மேல அந்தளவு காதலா?” என்று தலை சாய்த்து கேட்டாள்.
“எந்தளவுனு வாழ்ந்து காட்டி புரிய வைக்கிறேன். யார் மஹா?” என்று கேட்டான், சகாதேவனிடம் “அண்ணா… நீங்க ஸ்டேஷன் போங்க. நான் மதிமாறனோட வந்துடறேன்” என்று கூறி அவரை அனுப்பினாள்.
“ஏய்… நான் உன்னோட நேரம் செலவழிக்க வரலை. உனக்கு ஆபத்தோனு பயந்து வந்தேன். நீ உன்னோட வேலையை பாரு.” என்றான் மாறன்.
“மாறன்… என்னோட வேலையை தான் பார்க்க போறேன். அதுக்கு உங்க ஹெல்ப் வேண்டும்.” என்று போகும் போதே அன்று துரத்தியவனை தேடி ஓடிபிடிபடாமல் மஹா என்பவள் அடையாளம் சொல்ல, அவனை தேடி கைலாஷ் இடம் சென்று விசாரித்ததை, மற்றும் மாணவர் போராட்டத்தில் வெட்ட வந்தது மாணவியை அல்ல தன்னை தான் என்றும் கூறினாள்
மதிமாறன் வண்டியை நிறுத்தி அவளை காண, “மாறன் அடுத்த ஷாக் ஒன்னு இருக்கு, வண்டியை எடுங்க” என்றதும் “இல்லை நீ சொல்லி முடி” என்றான்.
“என்னை சாகடிக்க முடியலை என்றதும் கைலாஷை போட்டு தள்ளிட்டாங்க. இப்ப இரண்டு மூன்று நாளா மஹாவை தேடி இன்னிக்கு தான் கண்டு பிடிச்சேன்.
விசாரித்தப்ப, அந்த பையனோட நான் பேசியதா சொன்னாங்க. அதுவும் பிரெண்ட்ஸியா… யாருனு கேட்டப்ப கலவரத்தன்று என சொன்னதும் அன்னிக்கு எடுத்த போட்டோ ஒன் பை ஒன்னா காட்டினேன். அவங்க அந்த பையனை ஐடென்டி பண்ணினாங்க.
குமார் என்ற சரத்குமார். உன்னோட கடையில பேரரா இருக்கான். காலேஜுல டாப்பரா படிக்கிறான். இங்க மறுபக்கம் டிரக் கேஸுக்கு தொடர்பு கொண்டிருக்கான்.” என்றதும் மாறன் அங்கிருந்த திண்டில் அமர்ந்தான்.
தலையை தாங்கிக்கொண்டு, சிறிது நேரம் நிதானித்து கொண்டான்.
“உன்னை பற்றி அன்னிக்கு ரொம்ப துருவி துருவி கேட்டான் பவி.
அந்தக்காவுக்கும் உனக்கும் என்னனா சம்மந்தம் லவ்ஸா… அக்கா வீடு எங்க? அவங்க பின்புலம் யாருனு. உன் வேலையை பாருடானு திட்டிட்டேன். ஆனா நீ என்னை விரும்பறது அவனுக்கு தெரியும்.
வடிவேல் அண்ணாவோட நீ பேசறது. நானும் வடிவேல் அண்ணாவும் உன்னை பற்றி பேசறது எல்லாம் கவனிச்சான். நான் ஏதோ வயசு கோளாறுல ஒரு ஆர்வத்துல காதல் கதையை எட்டி ஓட்டு கேட்பதா நினைச்சிட்டேன்
இப்படி உள்நோக்கம் இருக்கும்னு சத்தியமா எதிர்பார்க்கலை.
படிக்கிற வயசு நற்பவி. கால்ல விழாத குறையா பார்ட்டைம் ஜாப் கேட்டான். என்னிடம் ஆறுமாசமா வேலையில கூடவே இருக்கான். உனக்கே தெரியும் படிப்புக்குனு நான் ஹெல்ப் பண்ணுவேன்னு. ஆனா இவன் படிப்போட டிரக் வேற தொடர்பு இருக்குன்னா, என்னால நம்ம முடியலை” என்று அதிச்சியாய் கூறினான்.
“அவனோட வீடு எங்கனு தெரியுமா?” என்றதும், சிறிது யோசித்து “ஒரு தடவை போயிருக்கேன். அவனுக்கு உடம்பு சரியில்லைன்னதும் விசாரிக்க” என்றான்.
“இப்ப காலேஜ்ல இருந்து நேரா உங்க கடைக்கு தானே வேலைக்கு வருவான்?” என்று கேட்டாள்.
“ஆமா.”
“அப்ப முதல்ல அவன் வீட்டுக்கு போவோம். வண்டியை எடுங்க” என்று கூறினாள்.
மாறனும் வண்டியை சரத்குமார் வீட்டை நோக்கி செலுத்தினான்.
“உங்கப்பா… என்ன சொல்லறார்.” என்று கேட்டான்.
“சுரைக்காய்க்கு உப்பு இல்லையாம். வண்டியை ஓட்டு மாறா” என்று கத்தினாள்.
மாறனுக்கு சிரிப்பு வந்தது. “தேவையா உனக்கு.? என்னை கல்யாணம் பண்ண எதுக்கு தான் ஆசை வந்ததோ” என்று கூறியவன் வண்டியை மெதுவாய் செலுத்தினான்.
இங்கிருந்து சந்துல தான் போகணும். பைக்ல போகவும் கஷ்டமா தான் இருக்கும். இந்த தெரு தான். ஆனா முக்குல இருக்கும்” என்று வண்டியை அங்கேயே நிறுத்திவிட்டு அழைத்து வந்தான்.
மேலே டீஷர்ட் கீழே காக்கி உடை, போதாதற்கு காலில் டார்க் ப்ரவுன் ஷூ என்று நற்பவியை போலீஸ் என்று காட்டி கொடுத்தது. அதனால் வழிகள் தானாக விரிந்தது. இடித்து கொண்டு செல்லும் சூழ்நிலை அமையவில்லை.
“அன்னிக்கு நான் வந்தப்ப நொந்துட்டேன். பசங்க பொண்ணுங்கனு இடிச்சிட்டே போனாங்க. யூனிபாஃர்ம்க்கு தனி மரியாதை தான்.” என்றவன் ஒரு அடுக்குமாடி படியில் நடந்தான்.
பாழடைந்தது மாடி, மொட்டைமாடியில் தனிப்போர்ஷன் என்று கைகாட்டினான்.
மாடியில் பூட்டு போட்டு பூட்டியிருந்தது.
“அவன் இப்ப காலேஜ் விட்டு என்னோட கடைக்கு போயிருப்பான். சாவி வேண்டுமே” என்று கூறிய நொடி, அங்கிருந்த செங்கல்லால் பூட்டை உடைக்க கூறினாள்.
“பூட்டை உடைக்கணுமா? இது தப்பில்லல” என்று மாறன் பேசவும், “வாயில நல்லா வந்துடும் கதவைத்திற மாறா” என்று திட்டினாள்.
“மரியாதை கொஞ்சமா டவுன்ல போகுது” என்றவன் நாலாவது முறை உடைக்க பூட்டு வாயை திறந்தது.
அதனை எடுத்து வைத்து விட்டு அறைக்குள் நுழைந்தனர்.
வீடா அது குப்பை கூடாக காட்சியளித்தது. ஆங்காங்கே அழுக்கும், துறுகறையும், பெயிண்ட் பிய்ந்த சுவரும் என்று அருவருப்பாய் இருந்தது.
இதில் கீழே மெத்தையென்ற பெயரில் கால்மிதிக்கு கூட பிரோஜனமில்லாத மெத்தை இருந்தது. கிச்சனும் ஹாலும் மட்டும் கொண்ட அறை. கிச்சனில் தண்ணி குடம் மட்டும் இருந்தது. உணவு முழுவதும் மாறன் கடை வகை என்பதால் அங்கேயே சாப்பிட்டு விடுவான்.
ஹாலிலிருந்த புத்தக மூட்டை போட்டுக்கொள்ள துணிகள் என்று இருந்தது.
அந்த வீட்டுக்குள்ளேயே கொடிகயிறு இரண்டாய் போட்டு இருந்தான். அதிலும் சட்டை பனியன் ஜட்டி ஷாட்ஸ் என்று தொங்கியது.
பெரும்பாலும் வீட்டில் எதுவும் இருப்பதாக தோன்றவில்லை. ஆங்காங்கே குப்பைகளும் வெள்ளை திட்டுகளும் இருந்தன.
அதனை தொட்டு நாவில் வைக்க, மாறன் அவள் கையை தடுத்தான்.
“டிரக் தான் மாறா.” என்று இம்முறை விழிப்புடன் தேடினாள்.
கிச்சன் மட்டும் சுத்தமாய் இருப்பது உறுத்தியது. ஆனால் துடைத்து கழுவி விட்டது போல அல்லவா உள்ளதென யோசித்தாள்.
காலில் மெத்தை தட்டுப்பட்டது. அதனை பிரிக்க, மெத்தைக்குள் பவுடராய் டிரக் பேக்கேட் இருந்தது.
ஒரு முப்பது பேக்கேட் கிராம் கணக்கில் ஊறுகாய் போல தனிதனியாய் போட்டு விளக்கில் ஓட்டி வைத்திருந்தான். மற்றவை சர்க்கரை அளவு இருந்தது.
“இது எவ்ளோ இருக்கும்?” என்று மாறனிடம் கேட்டாள். அவன் அதை கையில் தூக்கி “400 கிராம் இருக்கும்” என்றான்.
உடனே நற்பவி கமிஷனர் தர்ஷனுக்கு போட்டோ எடுத்து வாட்ஸப்பில் அனுப்பினாள். அடுத்த நொடி கால் வந்தது.
“அக்யூஸ்டை பிடிச்சிட்டியா?” என்றார் அவர்.
“சார் அக்யூஸ்டோட வீட்ல இருக்கேன். அவன் இப்ப இங்க இல்லை. காலேஜ் முடிச்சி ஒரு கடையில பேரரா இருக்கான்.” என்று தகவல் தந்தாள்.
“லுக் நற்பவி… அதுவொன்னும் பெரிய அளவு பாக்கெட் இல்லை. அவன் விற்க கொடுத்திருப்பாங்க. அவனை பிடிச்சா தான் அவன் கைக்கு எப்படி வரும்னு தெரியவரும். பகிரங்கமா கைது செய்யாத, அவனை பிடிச்சி லாக்கப்ல வை வந்துட்டே இருக்கேன். அப்பறம் அந்த பவுடரை மறைச்சி வை. இப்படி ஒருத்தன் டிரக் விஷயத்துல மாட்டியதா வெளியே தெரிய வேண்டாம். பிறகு சுதாரிச்சிடுவாங்க” என்று கூறவும் “எஸ் சார்.” என்று மாறவிடம் இதை எப்படி எடுத்துட்டு போக என்றதும் அங்கிருந்த கறுப்பு பாலீத்தின் கவரில் போட்டு தோளைக் குலுக்கினான்.
பைக் இருக்குமிடம் வந்ததும் இதை எங்க வைக்க?” என்று கேட்க “அந்த கவலை உனக்கு வேண்டாம். முதல்ல அவர் சொன்ன மாதிரி சரத்தை பிடிக்கணும்” என்று வண்டியை உதைத்தான்.
இங்கே சரத் மதிமாறன் இல்லாததை அறிந்து “எங்க போயிருக்கார் அண்ணா” என்று வடிவேலிடம் கேட்டான்.
“ஏன்டா.. சொல்லிட்டா போவாங்க. கல்லாப்பெட்டில உட்கார்ந்து பார்த்துக்க சொன்னார்.” என்று பதில் தந்தார்.
ரசீதை வைத்து பணத்தை வாங்கி திரும்ப மீதி பணத்தை கொடுத்து விட்டு நம்பகதன்மையாய் இருந்த அப்பாவி வடிவேலை மனதில் வன்மத்தோடு சரத் “தெரிந்துக்க கேட்டேன் அண்ணா. ஏன் முறைக்கிற.” என்று அப்பாவித்தனமாய் முகம் வைத்து நாடகம் இயற்றி நடித்தான்.
நற்பவி மதிமாறன் இருவரும் சற்று நேரத்திலேயே வந்தார்கள்.
நற்பவி காபி குடிக்க அமர்ந்தாள். மாறனோ சரத்தை கிச்சன் பக்கம் கூப்பிட்டான. சரத் வந்ததும் மாறன் உள்ளே சென்றான்.
சில நொடியிலேயே நற்பவி கதவை சாற்றி கையில் விலங்கிட்டு, “என்ன தைரியம் டா. டிரக் விற்குற, பதினெட்டு வயசு தாண்டிட்டா பெரிய புடுங்கினு நினைப்பா” என்று ஒரு அறை விடுத்தாள்.
“எஎன்னக்கா சொல்லற. அண்ணா இந்த அக்கா ஆரம்பத்துல இருந்தே என்னை தப்பானவனா காட்டுது. எனக்கு எதுவும் தெரியாது” என்று மாறனை துணைக்கு கூப்பிட்டான்.
“ஏன்டா அவளுக்கு வெட்டு காயம் ஆனது உன்னால தானே? பிராடு படிக்கறியேனு வேலை போட்டு தந்தா பவுடரா விற்கற?” என்று கடிந்தான்.
“இன்னா அண்ணா அக்காவை லவ் பண்றியா? பச் அக்கோவ் பிடிச்சுட்டியே? நீ ரொம்ப தப்பு பண்ணற அக்கா.” என்று சரத் கத்தினான். நற்பவி எதையும் காதில் வாங்கவில்லை.
“என்னை தூக்கிட்டது தெரிந்தா நீ காலி.” என்றான். காய்கறி வரும் வாசல் பக்கம் சகாதேவன் வண்டி நிறுத்தியிருக்க, சரத்தை குண்டு கட்டாக அதில் ஏற்றி முடித்தான் மதிமாறன்.
கையும் காலும் கட்டியிருக்க, வாயும் பிளாஸ்திரி உதவியில் ஓட்டினாள்.
நேராக ஸ்டேஷன் வந்து அவனை சேரில் கட்டி வைத்தாள்
அவன் இருக்கும் கைதியறையை பூட்டி விட்டு சாவியை கையோடு எடுத்து கொண்டாள்.
-இதயம் திருடும்.
-பிரவீணா தங்கராஜ்.
Apdi podu..
Super narpavi. Excellent narration sis. Intresting sis.