Skip to content
Home » இதயத்திருடா-16

இதயத்திருடா-16

இதயத்திருடா-16

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

      நற்பவியோ மதிமாறன் பைக்கில் அமர்ந்து, “மாறன் உங்க வீட்டுக்கு போகலாமா?” என்று கேட்டாள்.

     “எனக்கு ஹோட்டல்ல வேலையிருக்கு பவி. சும்மா சும்மா வந்தா நஷ்டத்துல ஓடும்.” என்றான் மதிமாறன்.
  
    “ஏய்… என்னப்பா நீ… தர்ஷன் சார் ஒரு பொதுவான இடத்துல வந்து மீட் பண்ணலாம். யாருக்கும் சந்தேகம் வரக்கூடாதுனு சொன்னார். போதாதற்கு உன் அக்கா மாமாவை பார்க்கனும்னு சொன்னார். டூ இன் ஒன் என்று வீட்டுக்கே வர சொல்லி அட்ரஸ் செண்ட் பண்ணிட்டேன்.” என்று தலை சொறிந்து நின்றாள்.

      “வடிவேல் அண்ணாவிடம் கால் பண்ணிட்டு போலாம்.” என்று போனில் வடிவேலிற்கு தகவல் தந்தான்.

   “அதெல்லாம் பார்த்துக்கறேன் தம்பி.” என்று பேசியணைத்தார்.

     வண்டியை உதைத்து திரும்ப இரண்டு பக்கம் கால் போட்டு நற்பவி அமர்ந்தாள்.

   ஸ்பீடு பிரேக்கில் என்னதான் மெதுவாக சென்றாலும் ஏற்றமிறக்கம் வந்ததும் நற்பவியின் முன்னழகு உரசியது. மதிமாறன் இடது தோளை அவள் இடது கை அழுத்தம் கொடுத்து தீண்டவும், அவனுக்குள் ஏதோவொன்று தீயாய் உருமாறியது.

    எப்பொழுதும் மதுவந்தி புடவை கட்டுவது வழக்கம் அதனால் ஒரு பக்கம் காலிட்டு அமர்வாள். நற்பவியோ இப்படி அமர முதல் முறை இந்த அனுபவம் உணர்ந்தான்.

     வீட்டுக்கு வந்ததும் வாசலில் நிறுத்த, நற்பவி கையை எடுக்கவும் தான் மூச்சை சீராக சுவாசித்தான்.

     “ஏய்… என்னப்பா இப்படி வேர்த்து இருக்கு” என்று நற்பவியின் கர்ச்சீப்பால் துடைத்தாள்.

   அவள் கர்ச்சீப்பில் அவளின் வாசமே வீசவும், ஆழ்ந்து மூச்சை சுவாசித்தவன், கர்ச்சீப்பை விலக்கினான்.

    “ஏய்.. என்னப்பா… ஒரு மாதிரி இருக்க, தர்ஷன் அங்கிளை மீட் பண்ண போறேன்னு நெர்வஸா இருக்கியா. கவலைப்படாதே போட்டு தள்ள மாட்டார். என்ன ஒன்ஸ் என்னை கட்டிக்கறேன்னு சொல்லிட்டு எஸ் ஆகப் பார்த்த கண்டிப்பா கட்டி வச்சி உதைப்பார்.” என்று கிண்டலும் கேலியும் பேசினாள்.

     “எனக்கு வார்த்தை மாறாது. சொன்னதை காப்பாத்துவேன். லவ் பண்ணறேன்னு சொல்லிட்டேன். கல்யாணம் பண்ணுவேன்” என்றான் கோபமாக.

    “பின்ன எதுக்கு இந்த வைரத்துளிகள். உன் முகத்துல?” என்று கேட்டாள்.
  
    “என்னோட இப்படி நெருங்கி யாரும் உட்கார்ந்து வந்ததில்லை.” என்று கூறினான். அவளை பார்க்க இயலாது தடுமாறினான்.

     “மதுவந்தி அக்கா?” என்று வினாவாய் கேட்டாள்.

   “இல்லை… மோஸ்டா சேரி கட்டுவா. அதுவும் காலர் வச்ச பிளவுஸ். அதனால என்னோட வந்தா ஒன்சைட் தான் உட்காருவா. கையில ஒரு பக்கம் ஹண்ட்பேக் கர்ச்சீப். மறுகையில போன். அதனால டச் பண்ண கூட மாட்டா.” என்று கூறினான் மதிமாறன்.

     “அப்ப… நான் தான் இந்த வியர்வை சொட்டியதுக்கு ரீசனா?” என்று ஆர்வமாய் கேட்டாள்.
   
    தலை மட்டும் ஆம் என்பது போல மேலும் கீழும் ஆட்டினான்.

    “இத்தனைக்கும் நீ பிரேக் போடலை. அப் அண்ட் டவுன் ஸ்பீடா மூவ் பண்ணலை. நான் டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என்று கேட்டாள்.
   
    “லைட்டா…” என்றவன் வீட்டுக்குள்ள போ” என்று கையை காட்டி கூறினான்.
  
     “ஒரு லாங் டிரைவ் போகலாம்னு தோனுது. பச் இந்த கரடி வந்துடுவார்.” என்று கவலைப்பட்டாள்.

      “நீ என்ன அவரை ரொம்ப பேசற. கமிஷனர் தெரியுமா? எத்தனை கேஸ் எத்தனை மெடல்?” என்றான் மதிமாறன்.

   “இந்த சித்தார்த் கூட சேர்ந்தா இப்படி தான் அவரை திட்ட தோணும். என்ன முழிக்கிற… ஓ… உனக்கு அவனை தெரியாதுல,” என்றதும், “அதெல்லாம் தெரியும் தர்ஷன் சாரோட பையன். ரீசண்டா நிறைய சர்ச்சைல சிக்கினான்.” என்று கூறினான்.

     “ம்ம்..  நிறைய நியூஸ் பார்க்கற மாறன்.” என்று கூறவும், “டேய் மதிமாறா… வீட்டுக்கு வர உத்தேசம் இருக்கா இல்லையா.?” என்றதும் தான் கேட்டில் நின்று பேசிக் கொண்டிருப்பதை உணர்ந்தார்கள் காதல் பறவைகள்.

    “ஏன்மா கூப்பிட்ட… இரண்டு பேரையும் பார்க்க கண்குளிர இருந்தது. இப்படியே அவங்களை நிற்க வச்சி பார்த்திருக்கலாம். ஆடியோ கேட்கலைனாலும் வீடியோல உன் தம்பி கொஞ்சம் கொஞ்சமா நற்பவியை நிமிர்ந்து பார்ப்பானு பார்த்தேன். கடைசி வரை நம்ம நற்பவி தான் அவனை ரசிச்சிட்டு இருந்தா.” என்றதும் மதிமாறனுக்கு வெட்கம் வந்து தொலைத்தது.

    “அக்கா… நற்பவியோட அங்கிள் நம்ம வீட்டுக்கு இப்ப வர்றார்.” என்று கூறவும் “அச்சோ… இப்பவா?” என்று கேட்டார்.

     “அம்மா… பயப்படாதிங்க அங்கிள் பார்மாலிட்டிஸ் பார்க்க மாட்டார். உங்க வீட்ல ஒருத்தரா மிங்கிள் ஆகிடுவார்” என்று உரைத்தாள்.

     “இருந்தாலும்… என்னங்க” என்று கணேசனை பார்வையிட்டார்.

    “இங்க ஒரு செஃப் வச்சிட்டு ஏன் பயப்படறிங்க. நான் சமைக்கறேன். மணி ஏழு தான் ஆகுது. எட்டுக்குள்ள சமைச்சிடுவேன்.” என்று கிச்சனில் புகுந்தான் மதிமாறன்.

     “நீ சமைக்கணும், வைக்கணும், பாத்திரம் கழுவணும், துணி துவைக்கணும், வீட்டை க்ளீன் பண்ணணும், என்ன காய்கறி வாங்கணும் இதெல்லாம் யோசிக்க வேண்டிய அவசியமே இல்லைம்மா. அவனே பார்த்துப்பான். நீ உட்காரு” என்று செவ்வந்தி கூறவும் நற்பவியோ மகிழ்வாய் அவனின் செய்கையை தூரத்திலிருந்து ரசித்தவாறு அமர்ந்தாள்.

     “இன்னிக்கு வேலை குயிக்கா முடிஞ்சிடுச்சா மா.” என்று செவ்வந்தி கேட்டார்.

    “அக்கா… அவளுக்கு நைட் டூட்டி கூட உண்டு. பேய் மாதிரி சுத்துவா. நான் இங்க இந்த டைம்க்கு வர்றேன்னு வரை நோட் பண்ணியிருக்கா” என்று பேசினான்.

     “அதெல்லாம் இல்லை மா. எட்டு மணி நேரம் என்றால் கூட சொல்லிட்டு கிளம்பலாம். நைட் டூட்டி நானா தான் இவரை பார்க்க வேலையை இழுத்தது.” என்றாள்.

    “நான் ஹெல்ப் பண்ணவா மதி” என்று கணேசன் கேட்க, “நோ தேங்க்ஸ் மாமா. மது கூட பேசுங்க.” என்றவன் சமைப்பதை நிறுத்திவிட்டு, மது என்று முன்னால் மனைவி பெயரை உச்சரித்தை எண்ணி, “சாரி பவி.. தானா.. அக்கா மாமாவோட எப்பவும் மதுவை பேச வச்சிட்டு வேலைப் பார்ப்பேன். அதே மாதிரி பேசிட்டேன்.” என்றான்.
    
   “நான் இப்ப கோபப்படலையே. ஐ நோ மாறா. உன் வாய்ல மதுவந்தி அக்கா பெயர் வரலாம். அது எதார்த்தம். அதுக்கெல்லாம் பீல் பண்ணாதே. சொல்லப்போனா நான் மது அக்கா இடத்துல இருந்து தான் இவங்களை பார்க்கறேன்.” என்றாள் நற்பவி.

    “நாங்களுமே எங்க மகளா தான்மா பார்க்கறோம். இதோ இவன் இருக்கானே இப்படி கிச்சனில் புகுந்து பேசி, சிரிச்சி ஐந்து வருஷம் ஆகப்போகுது.

    வருவான் சாப்பிடுவான் எங்களோட இருப்பான். ஆனா ஒரு வார்த்தை சந்தோஷமா பேசமாட்டான். அவனோட இயல்பே இது தான். மதுவந்தி இறந்ததோட இவன் சந்தோஷம் மொத்தமா போயிடுச்சேனு எத்தனை நாள் வேதனைப் பட்டிருக்கோம் தெரியுமா. இப்ப உன்னிடம் பேசறது பார்க்கறப்ப, நிறைவா இருக்கு டா. என்னவோ இன்னிக்கே கல்யாணமாகி நீ இந்த வீட்ல இருக்கறதா ஒரு சந்தோஷம்.” என்று செவ்வந்தி பேசவும் நற்பவி தோளை அணைத்து விடுவித்தாள்.

    “ஏன் அக்கா… இப்பவே தாலியை கொடு கட்டிடறேன்.” என்றான் கிண்டலாய்.

     “என்ன மதி அவ்ளோ அவசரமா? பொண்டாட்டி யூனிபார்மை ஐயர்ன் பண்ண” என்றார் கணேசன்.

     “போங்க மாமா.” என்று சிரித்தவன் கைகள் கிச்சனில் நளபாகத்தில் விளையாடியது.

     செவ்வந்தி எழுந்து அறைக்குள் சென்று பீரோவை திறந்தார். அங்கிருந்து ஒரு நகைப்பெட்டியை எடுத்து வந்து, திறந்தார்.

     “இரண்டு வருஷமா இவனோட ஹோட்டலை பெரிசுப்படுத்த லோன் வாங்கினான். அப்போ மதுவந்தி நகை, என் நகைனு எல்லாம் போங்க்ல வச்சிட்டோம். இதுவொன்னு தான் மிச்சம். ஆனா இது ஸ்பெஷல். இந்த செயின்ல ஒரு லாக்கெட் இருக்கு. அதுல அவன் போட்டோ இருக்கு” என்று திறந்து காட்டவும் அழகாய் மயக்கும் புன்னகை சிந்தியவனாய் இருந்தான் மதிமாறன்.

     சமைத்து முடித்து ஏப்ரானில் கையை துடைத்தவன், நற்பவியருகே அமர்ந்தான்.

   அவன் அமரவும் மின்சாரம் பாய்ந்த உணர்வில் தேகம் சிலிர்த்திட பேச்சற்று போனாள்.

     “மதிமாறா.. இதை பவி கழுத்துல போடேன். ஆசையா கண் குளிர பார்த்துப்போம்” என்று கூறினார் செவ்வந்தி.

    “ஆமா பா… போட்டுவிடு” என்று கணேசனும் கூறவும் அதனை எடுத்து அவள் கழுத்தருகே கொண்டு சென்றவன் புருவசுழிப்பில் இங்க பாரு என்றும் கண் பாவணையில் அணிவிக்கவா என்றும் கேட்டு வைத்தான்.

    உதடு பிரிக்காமல் மெல்லிய புன்னகை படரவிட்டு அணிவிக்கலாமென கழுத்தை காட்டி நின்றாள் நற்பவி.

      அவன் அணிவிக்க செவ்வந்தி கணேசன் கண்களுக்கு தாலி அணிவிப்பதாக தோன்றியது. ஏன் நற்பவிக்குமே அந்த உணர்வு தோன்றியது.

    “காதுல அலைப்பாயுதே பாட்டு ஓடுதா” என்று காதில் கிசுகிசத்தான்.

     காலர் வைத்த டீஷர்ட் என்பதால் செயின் அவளுக்கு கழுத்தொட்டி இருந்தது. அந்த லாக்கேட் பிரிக்க, அவள் உதட்டருகே மதிமாறன் புகைப்படம் வந்து நின்றது.
  
     சின்ன குறுஞ்சிரிப்பில் அமர்ந்திட, “என்னவோ இன்னிக்கு திருப்திகரமா இருக்கு. உங்க வீட்ல கல்யாணத்துக்கு எந்த தடங்கல் வந்தாலும் இல்லை தடையேயில்லாம சேர்த்து வைத்தாலும் இனி சந்தோஷம்மா. எங்க இரண்டு பேருக்கும் இன்னிக்கே மனசு நிறைஞ்சிடுச்சு.

   கண்டிப்பா மதுவந்தி மனமும் குளிர்ந்திருக்கும்” என்றதும் நற்பவியை கண்டு கடினப்பட்டு முறுவலிட்டு கிச்சன் பக்கம் சென்றான்.

     “அம்மா… என்ன சமைச்சார்னு பார்த்துட்டு வர்றேன்.” என்று கிச்சனில் அவன் இருக்குமிடம் வந்தாள்.

     “என்ன பீலிங்கா?” என்று கேட்டாள்.

     “பின்ன இல்லையா… உனக்கு கஷ்டமா இல்லை. ஒவ்வொரு முறையும் மதுவந்தி பேச்சு அடிப்படும் போது.” என்று கேட்டான்.

     “இல்லவேயில்லைனு சொல்லமாட்டேன். லைட்டா இருக்கு. ஆனா அம்மா அப்பா பேசறப்ப வர்றதில்லை. நீ பேசும் போது வரும். இப்ப கூட பாரு. வர்றப்ப அவங்க உட்கார்ந்த ஸ்டெயில் நான் உட்கார்ந்த ஸ்டெயில்னு.. மேபீ நான் உன் செல்களை தூண்டிவிட்டேன்.

     உனக்கு முதல் தடவையா என் நெருக்கம் புரியவும் செய்தது. அந்த விஷயத்துல நான் என்னையும் வித்தியாசமா நடந்து மதுவந்தி அக்காவை மறக்கடிக்க வைப்பேன். ஆனா நீ நான் நினைப்பேனா நினைப்பேனானு பீல் பண்ணற பாரு. அதான் கஷ்டமாயிருக்கு. இங்க பாரு மாறா. எதுவும் தெரியாம காதலிக்கலை. தெரிந்து தான் காதலிக்கறேன். அதனால பயப்படாம பழகு.” என்றவள், “ஏய்… இறால் தொக்கு சப்பாத்தி, சாலட், இதென்ன கன் ஷேப்ல ப்ருட் டெகரேட் பண்ணிருக்க” என்று ஆச்சரியம் கொண்டாள்.

      “சார் ஒரு பெட்டில உங்களுக்கு பிடிச்ச டிஷ் என்னனு ரிப்போர்டர் கேட்க, என் ஒய்ப் செய்யற இறால் தொக்கு மட்டன் கிரேவினு சொன்னார். வீட்ல இறா உறிச்சி வச்சி டபர்வேர்ல இருந்தது. அதான் இறால் தொக்கு பண்ணிட்டேன். சாதமும் இருக்கு. சப்பாத்தியும் பண்ணிட்டேன். ப்ரூட் சாலட் எப்பவும் போல, எப்பவும் பூ அனிமல் பறவைனு காய்கறில டெக்கரேட் பண்ணுவேன். கடையில தினமும் ஒரு டெகரேட் காய்கறி வைப்பேன். முயல் ஆமை பூனை யானை சிங்கம் தாமரை பூ இப்படி நிறைய, சார் போலீஸாச்சே. அதான் கன்” என்று கண் சிமிட்டினான்.

   ” கேடி..” என்று அவனை இடிக்க, அவனும் அவளை கையால் இடித்தான்.

     கணேசனுக்கோ, “இப்ப செத்தாலும் ஆத்மா சாந்தியடையும் செவ்வந்தி. இதுக்கு தான் உயிரை பிடிச்சி வச்ச மாதிரி இருக்கு” என்றார்.
  
     “எனக்கும் செயின் போடறப்ப அப்படிதாங்க மனசுல தோனுச்சு. நம்ம கடமை முடிஞ்சுது  இனி நிம்மதியா மதுவந்தி கூப்பிட்டா போக வேண்டியது தான். நற்பவி என் தம்பியை பார்த்துப்பா.” என்று கண்கலங்க, கூறினார்.

      “மே ஐ கம் இன்?” என்ற குரல் நால்வரையும் திரும்பி பார்க்க வைத்தது.
  
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

1 thought on “இதயத்திருடா-16”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!