Skip to content
Home » இதயனின் ஹிரீதயம் அவள்‌-3

இதயனின் ஹிரீதயம் அவள்‌-3

முதலாக சந்தித்த இதயனின் ஹீரு (ஹீருதன்யா)…..

                            மேடம் என்ற ஏர் ஹோஸ்டரின் குரலில் தன் சிந்தனையில் இருந்து வெளியே வந்தவள் எதிரே நின்ற பெண்ணை பார்க்க மேம் ஆர் யூ ஓகே உங்களுக்கு எதுவும் வேணுமா...

               முதலில் புரியாத மொழியைப் பார்ப்பது போல் பார்த்தவள் பின் புரிந்து வேண்டாம் தேங்க்ஸ் என்றவளுக்கு புன்னகை கொடுத்து விட்டு சென்றாள்....

             கண்ணாடிக்கு வெளியே தெரியும் மேகங்களைப் பார்த்தவளது சிந்தனை தன்னவனை சந்தித்த நினைவுக்குள் சென்றது.....

       சென்னையில் எப்பொழுதும் போல காலை நேர பரபரப்பிற்கு சற்றும் குறைவில்லாது இன்றும் மக்கள் தேனிக்கள் போல சுறுசுறுப்பாக தங்கள் நாளைத் தொடங்க அதற்கு சற்றும் பொருந்தம்

இல்லாது இருந்தது அந்த வீடு…….

               கேட்டிலிருந்து உள்ளே நடப்பாதையின் இருபுறமும் சிறிய பூந்தோட்டம் , அதை தள்ளி உள்ளே சென்றால் கார் மற்றும் ஸ்கூட்டர் என இரண்டும் நிற்க அதற்கு மேல் வீட்டின் முன்னால் சிறிய வாராண்டா அங்கு  நாற்காலி சிறிய டேபிள் என அழகாக அமர்வதற்காக இடம் ஒதுக்கி இருந்தது......

               வீட்டின் உள்ளே நுழைகையில் முதலில் வரவேற்பறை அதையொட்டி வலது புறம் டைனிங் டேபிள் மற்றும் சமையலறை .., இடதுபுறம் ஒரு அறை , வரவேற்பறை நேராக மாடிப்படி , படியை ஒட்டியே வலது புறம் ஒரு அறையும் , இடது புறம் சாமியறை.....

               மேலே மாடியில் இரண்டு அறை மற்றும் அதற்கு மேல் மொட்டை மாடி என அழகாக வீடு.....

          தன் அன்றாட வாக்கிங்கை முடித்துக் கொண்டு அப்பொழுது தான் வீட்டிற்கு வந்த சற்குணம் ஹாலில் அமர்ந்து சமையல் அறையை நோக்கியவர் வள்ளிமா  ஒரு டீ என்றவரின் குரலுக்கு டீ எடுத்து வந்தார் வள்ளியம்மை.......

                குட் மார்னிங் வள்ளி மா என்றவருக்கு பதில் வணக்கம் சொல்லி டீ கப்பை கொடுக்க....

                  எடுத்து வாயில் வைத்தவர் அடுத்த நொடி கேட்ட பாட்டு சத்தத்தில் கப்பை தவரி விலப் போவ சட்டென பிடித்தவர் நெஞ்சம் ஒருகணம் பதறியது....

                    அவருக்கு மேல் வள்ளி சோஃபா ஓரத்தில் நின்றவர் அதிர்ச்சியில் அந்த சோஃபாவில் விழுந்து நெஞ்சை பிடித்துக் கொண்டார்.....

                      இருவரும் ஒரு சேர மாடியைப் பார்க்க அங்கே ஒரு டிசர்ட்டும் முட்டி தொட்ட ஒரு சாக்ஸ்யும்  அணிந்து கொண்டு படியில் பாட்டுகேற்ப ஆடிக் கொண்டு வந்தால் ஹீருதன்யா....

பெண் : ஏதோ ஒன்னு கொடுக்கதானே
அடுத்த நாளும் வருது
ஆஹா
நல்லதா நான் எடுத்துகிட்டா
நல்லதத்தான் தருது
ஓஹா

பெண் : நம்பி ஒரு கால வைப்பேன்
இன்பமது நூறு வரும்
எது வந்தாலும் புரிஞ்சுகிட்டா
வாழ ஒரு தெம்பு தரும்….

ஆண் : எது என் தகுதி…..
பெண் : லா ல லால லாலா
ஆண் : நெஜமா யார் நான்….
ல ல லாலா
ஹூ இஸ் மீ……

ஆண் : எது என் தகுதி…..
யாரு வந்து சொல்லணும்
நெஜமா யார் நான்…….
என்கிட்டதான் கேக்கணும்…

ஆண் : என்ன தோக்கடிக்க ஒருத்தன் மட்டும்
வருவானே……ஏ…..ஏ…..ஏ…..

ஆண் : ஏஹே…..ஏஹே….

ஆண் : என்ன தோக்கடிக்க ஒருத்தன் மட்டும் வருவானே…
மன்னிக்கணும் மாம்சே….
அட அவனும் இங்க நான்தானே…
அட அவனும் இங்க நான்தானே…

ஆண் : எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்….
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்….

குழு : ஹே ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌…..ஏ ஏ
ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌…..ஏ ஏ
ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌…..

ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌…..ஏ ஏ
டுர்ர்ர்ரர்ர்ர்ர்
யே யே யே யே……

                அந்த பாட்டுகேற்ப ஆடிக் கொண்டே வந்தவள் தன்னை முறைத்து கொண்ருந்தவர்களைப் பார்த்து ஈளித்து வைத்தவள் அவர்களையும் இழுத்து கொண்டு ஆட அவளை முறைக்க முடியாமல் சிரித்து விட்டனர்.....

                     வாலு காலைலே ஆரம்பிச்சுட்டியா என்ற வள்ளி அவள் காதை திருக ....

                     பாட்டி ....பாட்டிஇஇஇ...விடு விடு வலிக்குது என பொய்யா அலற அதில் உண்மையாகவே பதறி அவளை விட்டவர் அய்யோ பாப்பா வலிக்குதா நான் மெதுவா தானா பிடிச்சேன் ....

                  ஆமா பாட்டி இப்பிடியா பிடிப்ப வலிக்குது தெரியுமா என காதை தேய்க்க....

                      அய்யோ மன்னுச்சுரு தங்கம் தெரியாம திருகிட்டேன் எனக்கு அறிவே இல்ல நான் வேணா எண்ணெய் எடுத்துட்டு வரவா டா....

                    அய்யோ வள்ளி மா அவ நடிக்கிற அது தெரியாம நீங்க வேற ஏன் மா அங்க பாருங்க உங்க பின்னாடி நின்னு சிரிச்சிட்டு இருக்க.....

                என்ன என்று பின்னாடி திரும்பியவர் பார்த்தது என்னவோ வாய் பொத்தி சிரித்துக் கொண்டிருந்த தன்யாவை தான்....

                அடி கழுத அவளை அடிக்க கை ஓங்க அதில் இருந்து தப்பித்தவள் மாடிப்படியின் தொடக்கத்தில் நின்றவள் வ்வ்வவே வ்வ்வவே என பழிப்பு காட்டியவள் சிறுத்தை  சிக்கும் ஆனா சிலுவண்டு சிக்காதே என கூறியவள் ஓடிவிட்டாள் ......

                 நீ பாட்டி சொல்ற அப்பவே நான் யோசுச்சு இருக்கனும் சரியான போக்கிரி என்றவர் சிரிப்புடன் குணமிடம் கூறிவிட்டு சமையலறைக்கு சென்று விட்டார்.....

                    சற்குணம் (குணம்)கூட நடந்ததை நினைத்து சிரித்துக் கொண்டே டீயுடன் தன்னறைக்கு சென்று விட்டார்....

                     சரி அவங்க போகட்டும் நம்ம அவங்களைப் பத்தி பாக்கலாம்....

                         வள்ளியம்மை பிள்ளைகளால் கைவிடப்பட்டு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த போது தான் சற்குணத்தின் கண்ணில் பட்டார் அது மட்டும் இல்லாமல் அவருக்கு தூரத்து உறவினரும் கூட ......

    சற்குணம் அவர் மனைவி தாமரை இருவரது பெற்றோருமே இவர்கள் திருமணம் முடிந்த சில வருடத்திலே ஒரு பின் ஒருவராக இறைவனடி சென்று விட்டனர்.....

       வள்ளியம்மையின் வரவு தான் அந்த வீட்டில் ஒரு பெரியவருக்கான இடத்தை நிரப்பியது அதில் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி....

          அவர்கள் இருவரும் அவரை அன்னையாகவே பாவித்தனர் அதில் வள்ளியம்மைக்குமே  மிகுந்த மகிழ்ச்சி.....

         அனைத்தும் மகிழ்ச்சியாக சென்றாலும் கல்யாணம் ஆகி ரெண்டு வருடங்கள் கடந்தும் பிள்ளை செல்வம் இல்லாதது மட்டுமே பெறும் குறையாக இருந்தது அவர்களுக்கு....

            சற்குணத்திற்கு இது கவலையாக இருந்தாலும் தன்னை காட்டிக் கொள்ளாது தாமரையை சமாதானப்படுத்தி அன்பாக பார்த்து கொள்ள அதற்கு வள்ளியம்மை பெரிது உதவினர்........ 

          வள்ளியம்மை தான் தாமரைக்கு  எடுத்து கூறி புரிய வைக்க தன் கவலை தன்னவரையும் பாதிக்கிறது என்பதை புரிந்து கொண்டு தன்னை மீட்டுக் கொண்டதன் பலனாக இனிமையான இல்லறத்தின் அடையாளமாக மூன்று வருடத் தவத்தின் பின் அவர்களுக்கு கிடைத்தவள் தான் ஹீருதன்யா.....

        அழகாய் சென்ற வாழ்வில் யார் கண்பட்டதோ பிரசவத்தில் தாமரை இறந்து விட கைக் குழந்தையை வைத்து கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறியவரைப் புரிந்து கொண்டு தானே முன் வந்து தன்யாவின் ( ஹீருதன்யா இனி தன்யா என்றே அழைக்கலாம் ) பொறுப்பை ஏற்றுக் கொண்டார் வள்ளியம்மை....

                    அன்று தொடங்கி இவர்கள் பந்தம் இதோ இன்னும் கூட  அவர்களுக்கு வள்ளி மா தான் அனைத்தும்....

2 thoughts on “இதயனின் ஹிரீதயம் அவள்‌-3”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *