Skip to content
Home » இதயனின் ஹிருதயம் அவள் -7

இதயனின் ஹிருதயம் அவள் -7

காலையில் நேரமே எழுந்த தனு குணத்திற்கு காலை உணவைச் செய்து விட்டு அவர் வழியில் சாப்பிடுவதற்கு பழங்களை வெட்டி ஒரு டப்பாவில் போட்டு வைத்தவள் குடிக்க தண்ணீர் மற்றும் பிரஸ் ஜூஸ் அனைத்தையும் ஒரு கூடையில் போட்டு வைக்கவும் குணா மற்றும் வள்ளி வரவும் சரியாக இருந்தது…..

                   அவளைப் பார்த்து தலையில் அடித்து கொண்ட வள்ளி ஏன் டி கூறு கெட்டவளே இதெல்லாம் வழியில் எங்களையும் கிடைக்காதா இப்படி கொடுத்து தான் அனுப்பனுமா......

                     இல்ல வள்ளி அதெல்லாம் அப்பாக்கு சேராது நீ சும்மா இரு ......

           ஆமான் டி உங்கப்பா அஞ்சு வயசு அஞ்சலி பாப்பா எதுவும் சேராம போக போடி போடி.....

             வேணாம் கிழவி காலைலேயே என்ன கடுப்பேத்தாத சொல்லீட்டேன் .....

              ஆரம்பிச்சுட்டிங்களா சும்மாவே இருக்க மாட்டிங்களா இரண்டு பேரும் எப்பப் பாரு சண்டை போட்டுட்டு இருக்குறது இருவரையும் முறைக்க......

               ஒருவரையொருவர் பார்த்து கொண்டவர்கள் நாங்க எங்க சண்டைப் போட்டோம் சும்மா பேசிட்டு தானா இருந்தோம் என ஒரே நேரத்தில் சொல்ல .....

            இருவரையும் முறைத்த குணம் தப்பு தான் உங்க இரண்டு பேர் பத்தி தெரிஞ்சும் உங்களுக்குள் வந்தேன் பாருங்க என்ன சொல்லனும்.....

             அதைக் கேட்டு சிரித்தவர்களை முறைத்தவர் பின் விளையாட்டை கைவிட்டு விட்டு இரண்டு பேரும் பத்திரமா இருக்கனும் என அவர் சொல்வதற்குள் தனு ஆரம்பிக்க ......

             யார்க்கிட்டையும் சண்டை போட கூடாது முக்கிய பால் காரன் கிட்ட , காய்கறி விக்கிறவங்க கூட அப்புறம் பக்கத்து வீட்டுக்காரங்கக் கிட்ட யாருடையும் வம்பு பண்ணாம அமைதி இருக்கனும் என வள்ளி முடிக்க இருவரையும் பார்த்தவர் சொல்றது எல்லாம் சரிதான் ஆனா அதைக் கொஞ்சம் செயல்படுத்துனா நல்லா இருக்கும் என்று குறைப்பட ஏனெனில் ஒரு நாளே தாங்காது இதில் இரண்டு நாள் எனில் இருவரும் என்ன செய்து வைப்பார்களோ என்று தான் தோன்றியது....

             அவரின் மன கூற்றை புரிந்தது போல் தனு குறும்புடன் நம்ம கைல எதுவும் இல்ல நைனா எல்லாம் அவன் செயல் என மேலே பார்த்து கைகூப்ப.....

            ஆமாயா எல்லாம் மேல் இருக்கவன் பாத்துக்குவான் என அவர் பங்குக்கு வள்ளியும் வைத்து செய்ய.....

               இருவரையும் ஒரு சேர பார்த்த இதுல மட்டும் நல்ல ஒத்துமையா இருங்க என முறைந்தவர் இருவரிடமும் கூறிவிட்டு செல்ல அவரை வழி அனுப்ப வெளியே வந்தவர்கள் கண்டது  அங்கே நின்ற கணேஷை தான் (சுமதியின் கணவர்).....

              எய்யா கணேசு பாத்து கவனமாக கூட்டிட்டு போயா மெல்லமா ஓட்டிட்டு போபா மத்தக் காரு லாரி எல்லாம் வேகமாக வரும் சரியா.....

               சரி வள்ளியம்மா நான் ஐயாவப் பத்தரமா கூட்டுட்டுப் போயிட்டு கூட்டியாரேன் கவலைப்படாதிங்க.....

                 கணேஷ் அண்ணா உங்களுக்கு தெரியும் இருந்தாலும் சொல்றேன் ஜாக்கிரதை அண்ணா.....

                  அட தனு பாப்பா என்ன நீ தான் பாத்துக்குறேன் நீ கவலைப்படாத சரியா என்றவருக்கு புன்னகையைப் பதிலாக கொடுத்து விட்டு குணத்தை பார்க்க அவளிடமிருந்து வந்தவர் அவளை அணைத்து கொள்ள பாந்தமாக அந்த அணைப்பில் இணைந்தவள் தானும் அவரை அணைத்து கொள்ள இரண்டு நாளைக்கு நிஜமா வள்ளிமா சொல்ற மாதிரி இவ்வளவு அக்கப்போரு கொஞ்சம் ஓவர் தான்டா என அவளைக் கிண்டல் பண்ண.....

                 ப்பா என சிணுங்கியவாறு அவர் நெஞ்சில் அடித்தவள் அவரை விட்டு கோவமாக கைகட்டி வேறு புறம் திரும்பி கொள்ள......

                    அச்சோ எத்தங்கத்துக்கு கோவம் வந்துருச்சு சரிடா தங்கம் அப்பா சாரி நீ இப்படி கோவமா இருந்த நான் எப்படி ஊருக்கு போக சிரிச்ச தானே நான் ஹாப்பியா அங்க போக முடியும் என இருபுறமும் காதில் கைவைத்து மன்னிப்பு கேட்க  சிரித்தவளின் தலையில் கைவைத்து ஆட்டிய சிரித்தவர் போயிட்டு வரேன் டா , அம்மா பத்திரம்மா போயிட்டு வரேன் ஜாக்கிரதை என இருவருக்கும் கையசைத்து விட்டு விடைப் பெற்றார் .......

                  இருவரும் அவர் போன திசையை பார்த்துக் கொண்டிருக்க அங்கிருந்த சுமதி அட இரண்டு பேரும் வாங்க எவ்வளவு நேரம் இப்படியே நிக்கப் போறிங்க வாங்க பாப்பா உனக்கு வேலையிருக்கு இல்ல வாங்க போலாம் இல்லைன்னா லேட் ஆய்டும் வாங்க வாங்க என இருவரையும் இழுத்துக் கொண்டு உள்ளே சென்றாள்......

               சிறிது நேரத்தில் ஒரு லைட் நீல கலர் லாங் டாப் மற்றும் லைட் சிமெண்ட் நிறத்தில் லெக்கின் அதே நிறத்தில் துப்பட்டா அதில் நீல நிற பூக்கள்  தூவியிருந்தது அதை இடப்புறம் போட்டிருக்க ,  ஃப்ரீ ஹேர் விட்டிருந்த முடியை எடுத்து மொத்த வலப்புறம் போட்டிருக்க , நெற்றியில் ஒரு கல் பொட்டு அதன் மேல் சிறிது சந்தக்கீற்று , காதில் ஒரு முத்து வைத்த வளையம் , இடது கையில் வாட்ச் கட்டியிக்க , வலது கையில் ஒரு பிரேஸ்லெட் அவ்வளவு தான் அவள் அலங்காரம் இடது கையில் ஹேண்ட் பேக்கை  பிடித்து படியிலிருந்து இறங்கி  வந்தால் .......

              நேராக டைனிங் டேபிளுக்கு வந்தமர்ந்தவள் தனக்கு தேவையானதை வைத்து சாப்பிட்டவள் தட்டை எப்பொழுதும் போல் கழுவி அதன் இடத்தில் வைத்து விட்டு சோஃபாவில் அமர்ந்திருந்த வள்ளியிடம் வர அவளைப் பார்த்தவர் என்ன டி என்ன வேணும் .....

        எனக்கு எதுவும் வேணாம் உனக்கு எதுவும் வேணுமா வள்ளி கேட்க வந்தேன்......

          இல்ல டி எனக்கு எதுவும் வேண்டாம் .....

           அப்போ சரி வள்ளி நான் போய்ட்டு வரேன் நீ சாப்பிட்டு மாத்திரை போடு டாடா அவரின் கன்னத்தில் முத்தம் வைத்தவள் அவர் அடிக்கும் முன்பு வெளியே ஓடிவிட்டாள்......

          ம்ப்ச் இவளோட கன்னத்த எச்சி பண்ணாதேனா கேக்கறளா பாரு கன்னத்தை தேய்த்து செல்லமாக அழுத்துக் கொள்ள......

            வெளியே வந்த தனு அங்கே பூக்களுக்கு தண்ணீர் விட்டு கொண்டிருந்த சுமதியைப் பார்த்து விட்டு அவளிடம் செல்ல பார்க்க அதற்குள் அவளைப் பார்த்த சுமதி கையிலிருந்ததை கீழே போட்டு விட்டு அவளிடம் விரைந்தாள்.........

             என்ன பாப்பா என்ன வேணும் , சாப்டியா நான் வேணா எடுத்து வைக்கவா.......

               ஒன்னும் இல்ல கா ரிலாக்ஸ் அப்பறம் நான் சாப்பிட்டேன் நீங்க பாட்டிய இரண்டு பேரும் சாப்பிடுங்க , அக்கா ஒரு உதவி எப்பவும் அப்பா நான் முதல்ல வருவாங்க அப்புறம் தான் நான் இன்னைக்கு மட்டும் நான் வரைக்கும் கொஞ்சம் பாட்டி கூட இருக்கிங்களா........

               அட பாப்பா இது எல்லாம் நீ சொல்லனுமா நீ போய்ட்டு வா பாப்பா நீ வரைக்கும் நான் அம்மா கூட  இருக்கேன்.....

               நன்றி கா என கூற அதற்கு ஒன்றும் கூறாமல் சிரித்தவரை பார்த்து பாய் கா கூறி சென்று விட்டாள்......

               நேராக அனிதா வீட்டின் முன்பு நின்று ஹாரன் அடிக்க அதில் அடித்து பிடித்து வெளியே வந்தவளை ஏன் டி இப்படி வர வீட்டுக்குள் இருந்து தானா வர என்னமோ நாய் துரத்திட்டு வர மாதிரி ஓடி  இப்படி வர......

                 ஏன் டி கேக்க மாட்ட சீக்கிரம் வண்டிய எடு டி ஒரு கொடிய மிருகம் என்ன தாக்க வருது பின்புறம் அமர்ந்தவள் அவசரப்படுத்த ....

                வீட்டுக்குள்ள மிருகமா என்ன டி உளர லூசு திட்டியவள் வண்டியை எடுப்பதற்குள் விஜயா வெளியே வர அவரை பார்த்தவள் வண்டியை நிறுத்தி விட அதில் கலவரமானவள் அடியேய் வண்டிய எடு டி .......

          இரு டி விஜி மா வர்றாங்க பேசிட்டு போலாம் இல்லைன்னா திட்டுவாங்க.....

           அய்யோ அதெல்லாம் சாயங்காலம் பேசிக்கலாம் நம் வண்டிய எடு முதல்ல நச்சரிக்க அதற்குள் அங்கு வந்த விஜியா அனிதா முதுகிலே ஒரு அடி வைக்க.....

           என்ற அம்மே கத்தியவள் அவரை முறைத்து கொண்டே முதுகை தேய்க்க அவளை கண்டு கொள்ளாத விஜி தனுவிடம் பேச தொடங்கி விட்டார்......

            என்ன தங்கம் வீட்டுக்கே வர மாட்டிங்கிற......

             நானும் எங்க அப்பாவும் தான் மாட்டிக்கிட்டோம் அவ பாவம் விடுங்க தப்புச்சுக்கிட்ட அனிதா அலுத்துக் கொள்ள அவளை முறைத்த விஜியை பார்த்து சிரித்த தனு அப்படி எல்லாம் இல்லை விஜி மா இந்த மாசம் வேலை கொஞ்சம் அதிகம் அதான் வர முடியல நாளைக்கு வெளியே போலாம் விஜி மா எல்லாம்......

           பாருடா நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை ஆச்சே நீ குணம் அண்ணா கூட இல்லை சுத்துவ இன்னைக்கு இப்படி சொல்ற ........

            அப்பா கிராமத்து போயிட்டாங்க விஜி மா .......

           அப்போ சரி டா நம்ம நாளைக்கு வெளியே போலாம் இப்போ போயிட்டு வாங்க லேட் ஆச்சு சாயங்காலம் பேசலாம் பாய்.....

          ஓகே விஜி மா பாய் தனுவிற்கு கையசைத்தவர் அனிதாவை முறைத்து கொண்டே சாயங்காலம் வீட்டுக்கு தானா வருவ வாடி நைட்டுக்கும் அதே தான் உனக்கு அவளை மிரட்ட  .......

          அதெல்லாம் எங்க அப்பா பாத்துப் பாரு என சிலுப்பிக் கொண்டு சொல்ல....

           பாக்குறேன் டி பாக்குறேன் உங்க அப்பா வந்து என்ன செய்றாருன்னு நானும் பாக்குறேன் முறைத்து விட்டு உள்ளே சென்றுவிட்டார்.....

            இவர்கள் உரையாடல் புரியாமல் வண்டியை எடுத்தவள் அவளிடமே அதை கேட்க என்ன டி ஆச்சு எதுக்கு அம்மா திட்டிட்டு போறாங்க.....

          அது ஒன்னும் இல்ல பங்கு எங்க அம்மா காலைல செஞ்ச பிரேக்ஃபாஸ்ட் எடுத்து காக்காய்க்கு போட்டுட்டேன் அதை ஒரு தப்புன்னு சொன்றாங்க பங்கு .......

             எது வண்டியை சடன் பேர்க் போட என்னடி சொல்ற எதுக்கு அப்படி பண்ண.......

              என்ன ஷாக்கிங்கா அட சீ வண்டியை எடு அவளை திரும்பி முறைத்து விட்டு வண்டியை எடுக்க....

             மனுசன் ஒரு நாளைக்கு அந்த உப்புமாவ சாப்பிடலாம் இல்லையா வாரத்துல இரண்டு நாளுன்னு சாப்பிடலாம் ஆமாவா ......

               ம்ம்ம் ஆமா .....

               என்ன பெத்த தாய் இருக்கே மாசத்துல பாதி நாள் அதைதான் பண்ணுது அதுவும் உப்புமால உப்பே போட பண்ண தப்பா இல்லையா அதான் காக்கு போட்டேன் ஆனா பாவம் அந்த காக்காக்கு என்ன ஆகுமோ தெரில அதை நினைச்சு தான் ஒரே கஷ்டமா இருக்கு.......

          அனிதா புலம்பலைக் கேட்டு சிரித்துவிட்டாள் ஏன் டி பாவம் இல்லையா அம்மா.........

           அப்போ நான் பாவம் இல்லையா ஹியூமன்ஸ் டா நீங்க எல்லாம் உப்புமா போட்டே கொல்றீங்க ......

           ஹா..ஹா..ஆஆ சரி டி அப்போ நீ போய் சமைக்க வேண்டிய தானா வாய் மட்டும் பேசுற இல்ல.....

            வாட் நான் சமைக்குறதா ஏன் டி இவ்வளவு விபரித ஆசையெல்லாம் உனக்கு வருது, நான்  சமச்சதை சாப்பிட்டு நானே சூசைட் பண்ணிக்கவா போடி......

           அப்போ வேற வாய்ப்பு இல்ல ராஜா உனக்கு வாச்சது அந்த உப்புமா தான்.....

            ஆமா ஆமா எல்லாம் மிஸ்டர் சேகர் சொல்லனும்.....

               ஏன் டி அப்பா என்ன பண்ணாரு இப்போ புரியலை.....

              ஆன் அவர் தானா இவங்கள எனக்கு அம்மாவ கூட்டிட்டு வந்தாரு.....

                என்ன கூட்டிட்டு வந்தாரா மாடே அவங்களுக்கு தான் டி உன்ன பெத்தாங்க.....

               அல்லாம் ஒன்னு தான் சாப்பிட தூங்கன்னா என்ன தூங்கிட்டு சாப்பிட்டு என்ன கூறியவள் ஹாஸ்பிடலில் வந்ததும் இறங்க பார்க்கிங்ள் ஸ்கூட்டியை லாக் பண்ணிவிட்டு அவளுடன் நடந்தவள் உதாரணம் கூட தின்றது தூங்குறது தான் வரும் இல்லையா......

                 அப்புறம் எனக்கு பசிக்கும் இல்ல விளம்பர பாணியில் சொல்ல அதை கேட்டு நின்றவள் அனிதாவை ஒருமுறை நன்றாக பார்த்தவள் தூ..உஉஉ துப்பிவிட்டு போக......

                  சே...சே.... வாட்டர்லையும் அடிவாங்கியாச்சு , ஃபுட்லையும் அடிவாங்கியாச்சு என்ன கொடுமை சரவணா இது தனியாக நின்று பேசியவளை அனைவரும் ஒரு மாதிரி பார்த்து விட்டு போக அதில் தெளிந்தவள் அவர்களுக்கு பல்லைக் காட்டுவிட்டு தனுவிடம் வந்தவள் பன்னி இப்படியா விட்டுட்டு போவ தனியா பேசறதப் பாத்து எல்லாம் ஒரு மாதிரி பாத்துட்டு போகுதுங்க .......

             சரி விடு ஹனி எல்லா உன்னோட பேசி தான் நீ பைத்தியம்ன்னு தெரிஞ்சுபாங்க இப்போ பேசாமலே தெரிஞ்சு இருக்கும் சிரிப்பை அடக்கிய படி சொல்ல......

              அவள் சொன்னதை புரிந்து கொள்ளாமல் ஆமா சொன்னவளுக்கு நொடியில் புரிய நான் ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லை டி இன்னைக்கு உன் கொள்ளாம விடமாட்டேன் தனு வை நெருங்க அவள் கையில் மாட்டாமல் ஓடியவள் திடிரென நிற்க அவளை துரத்தி வந்த அனிதாவும் அவளை திடிரென நிற்பாள் என எதிர்பார்க்காமல் அவள் மேலே வந்து மோதி நிற்க ஒரு நொடி தடுமாறிய தனு பக்கத்திலிருந்த சுவற்றை பிடித்து தன்னை நிலைப்படுத்தி கொண்டவள் இடிமாட்டுக்கு பொறந்தவளே இப்படியா வந்து இடிப்ப ........

               நோ பேபி இதுல என் தப்பு  எதுவும் இல்ல நீ தான் நின்ன அதுக்கு நான் என்ன பண்ண முடியும் , சரி நின்ன அப்போ பேலன்ஸ் பண்ணி நின்னுயிருக்கனும் மீ வாட் டு டூ பேபி .....

               நல்ல வக்கனையா பேசு ஆலப்பாரு எருமை......

                சரி நம்ம பஞ்சாயத்த அப்புறம் வச்சுக்கலாம் நீ எதுக்கு நின்ன......

                 அச்சோ மறந்துட்டேன் பாரு கீழே தலையில் அடித்தவள் கீழே குனிய .......

                 யேய் பரவால்ல டி எப்பவும் நம்ம சண்டை போடுறது தானா அதுக்கு எதுக்கு கால்ல எல்லாம் நான் மன்னிச்சுட்டேன் தள்ளி நிற்க......

                  நினைப்பு தான் நாயே உனக்கு அம்மணி கால்ல வேற விழனுமா தங்கள் காலுக்கடியில் கிடந்த பொருளை எடுக்க....

                   என்ன டி இது  .....

                   ம்ம்ம் புதையல் உனக்கு பங்கு வேணுமா......

                     எனக்கு வேணாம் டி நீயே வச்சுக்கோ ஆமா யாரோடது இது.....

                     ம்ம்ம் என் அத்தை பையனோடது .....

                    அதை உண்மையென நம்பி   நிஜமா என கண்ணில் ஹார்ட் மின்ன கேட்டவளைப் பார்த்து கடுப்பாவள்...

                     அடிங்க அவதார் குட்டி நானும் உன்னோட தானா இருக்கேன் எனக்கு மட்டும் எப்படி தெரியும் தானே கடுப்புல சொல்றேன் அது உண்மையான்னு கூட யோசிக்காம பதில் பேசிட்டு இருக்க......

                      சோ சேட் அப்போ பையன் யாரும் இல்லையா இவ்வளவு நேரம் நீ பேசியது வீண் என்னும் வகையில் கேள்வி கேட்க......

                    உன்னைப் பத்தி தெரிஞ்சும் பேசுனேன் இல்லையா என்ன சொல்லனும் சரி விடு இது யாருதுன்னு பாத்து குடுக்கலாம் வா.......

                    இருடி எப்படியும் தொலைஞ்சு போச்சுன்னு தெரிஞ்சா தேடிட்டு வருவாங்க இல்லையா அப்பறம் என்ன வெயிட் பண்ணு......

                     அட அறிவே சரி இரு சரியாக  யாராவது இதை தேடுறாங்களா என பார்க்க ஐந்து நிமிடத்தில் இருவரும் வந்து மற்றவர்களிடம் எதையோ கேட்பதும் அவர்கள் இல்லை என்பது போல் தலையசைப்பதைப் பார்த்து அவர்கள் தான் என அவர்களை நோக்கி இரு அடி எடுத்து வைப்பதற்குள் தனு நோக்கி வந்தான் அவர்களுடன் வேலை செய்யும் வினோத்........

              தனு எங்க என்ன பண்ற அங்க ஒரு மாத்திரை பெயரைக் கூறி அங்க இல்லைன்னு சொல்லி கேட்டுட்டு நீ போய் அங்க என்னனு பாரு இல்லையன்னா சிதம்பரம் சார் திட்ட போறாரு......

              ஆமா இல்லைன்னா அவரு பாராட்டிருவாறு ஏன் டா வினோ நீ வேற...

                  பாராட்ட மாட்டாரு ஆனா இதுக்கும் சேர்த்து திட்டு விழும் பரவில்லையா.....

                 சரி டா வா போலாம் ஹனி நாங்க போறோம் நீ போய் இதை குடுத்துரு ஜாக்கிரதை செக் பண்ணிட்டு கூடுக்கனும் விளையாட கூடாது புரியுதா போ நீ வாடா நம்ம போலாம்......

                    இவர்கள் போனதை பார்த்த ஹனி திரும்பி அங்கு நின்றிருந்த இருவரைப் பார்க்க அவர்கள் இன்னும் சிலரிடம் கேட்பதை பார்த்து அவர்களிடம் சென்றவள் தனக்கு முதுகு காண்பித்து நின்றவர்களை பார்த்து சார் கூப்பிட.....

                    யாரோ தங்களை அலைப்பது கேட்டு திரும்பினார்கள் அவன் இதயன் மற்றும் சரத்.......

3 thoughts on “இதயனின் ஹிருதயம் அவள் -7”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *