💟27
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
இதோ ப்ரஜன் சென்று இரு வாரம் போனது இதற்கே இப்படி ஆகிவிட்டது என்ற கவலை லத்திகாவை கொன்றது.
வீட்டில் எவ்வளவு நேரம் அப்படியே இருக்க என்று லத்திகாவே ராஜனிடம் ”நான் வேண்டுமென்றால் அலுவலகத்துக்கு வரட்டுமா மாமா” என்றாள்.
”வாம்மா” என்றார்.
அலுவலகத்தில் முன்பு போல பேசி கலகலப்பாக இருக்க முடியவில்லை அவனின் இடத்தில் அமர்ந்தாலும் அவனின் நினைவு. இந்த நேரம் என்ன செய்து இருக்கின்றானோ? எப்பொழுதும் ஏ.சி அறையில் இருந்து பழகியவன் வெயில் சுட்டெரிக்குமோ? என்றே எண்ணி வாடினாள். தானாகவே ஏ.சி அணைத்தாள். ஏசி ஆப் செய்யும் பொழுது முதல் முதலாக அவன் அருகாமை பற்றிய நினைவே தாக்கியது. அவளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போக அவன் துடித்தது. சிறுபிள்ளை எழுப்புவது போல எழுப்பி தனக்கு உணவளித்து, சிந்தினால் துடைத்து விட்டு, மாத்திரை எடுத்து பிரித்து, நீரை புகட்டி அவன் நெஞ்சில் அணைத்து உறங்க வைத்தது… பின்னர் காதலை சொல்லாமல் தன்னை அவனுடையவள் ஆக்கிய போதும், தான் மறுப்பே காட்டவில்லை…. அப்படி மென்மையாய் தன்னை நடத்தி அவனின் மீது எனக்குள் முழு காதலை விதைத்து சென்றானே என கலங்கினாள்.
மேஜையில் இருக்கும் அவனின் புகைப்படத்தில் அப்படியே முகம் பதித்து சாய்ந்து கொண்டாள்.
தினமும் மெயிலில் அவனுக்கு மெசேஜ் அனுப்புவாள் அது அவனுக்கு போய் சேர்வது சந்தேகம் என்றாலும் அனுப்புவதை நிறுத்தவில்லை. அவன் கொடுத்த டைரியில் கூட எழுதி தள்ளினாள்.
பிரிவின் துயரை அவனுக்கு….
தினமும் சாப்பிட அமர்கையில் அவனுக்கு பிடித்த உணவு பார்த்துவிட்டால், அவளுக்கு குபுக்கென கண்ணீர் சிந்திவிடுகிறது. அவனுக்கு நல்ல உணவு கிடைத்து இருக்குமோ? இங்கே எப்பொழுது பவானி அத்தை நெய்யும் முந்திரி பக்கோடா என அவனுக்கு பார்த்து பார்த்து பிடித்ததை, வீட்டிலே செய்து தருவார்களே…. என்றெண்ணிட, அதையே தான் பிரஜனின் பெற்றோருக்கும் தோன்றுமோ என்னவோ சாப்பாடு அப்படியே மிஞ்சி இருக்கும்.
இதே போல தொடர அந்த மாதம் செக்கப்பிற்கு பவானி சகுந்தலா கூடவே செல்ல மருத்துவர் லத்திகாவை சோதித்து லத்திகா சத்து குறைவாக இருப்பதாகவும் எடை கூடவும் இல்லை என்று சொல்லி, நன்றாக உணவு உட்கொள்ள சொன்னார்கள்.
பவானி ஜெயராஜனிடம் சொல்லி அதன் பிறகு சாப்பிடும் போது நன்றாக சாப்பிட வற்புறுத்தினார்கள். லத்திகா அதையே அவர்களுக்கும் சொல்ல அதன் பிறகே ஓரளவு சாப்பிட செய்தார்கள். ப்ரஜன் எண்ணி தங்கள் வாரிசை சரியாக கவனிக்கவில்லை என்ற தோன்ற அதன் பின்னர் லத்திகாவை மிகவும் கவனிக்க ஆரம்பித்தார்கள். அவளுக்கு ஏதேனும் செய்து பவானியை ஊட்டி விட்டு கவனிக்க செய்தார்.
சகுந்தலா இதனை கண்டு மனம் புரிக்கவே செய்தார். தங்கள் மகள் அழைத்து செல்ல எண்ணிட இவர்களுக்கும் ப்ரஜன் இல்லாத நிலை தங்கள் மகள் மூலமாக பார்த்து மகிழ்கின்றார்கள் என மகளை அழைத்து [போக கேட்க எண்ணி விடுவித்தார்கள்.
லத்திகா மேடிட்ட வயிறோடு அவனின் டைரியில் என்னன்னவோ எழுதினாள். சில நாட்களில் ஏதேனும் கனவு கண்டு பயந்தாள் அடுத்த நாள் முழுதும் பூஜை அறையில் இருப்பாள்.
ராஜனுக்கு கவலையாக இருக்கும். ஏன் தான் பிருத்வி இப்படி சென்றானோ என்றே தோன்றும்.
அன்று வயிற்றில் ஏதோ அசைந்து ஊர்வதை போல தோன்ற பதறி கொண்டு பவானியிடம் வந்து சொல்ல,
”இது ஐந்தாம் மாதம் ஆரம்பம் ஆனதால் பிள்ளை வளர்ந்து அசைவு கொடுப்பதாக தெரிவித்தார். அதன் பிறகே லத்திகா அமைதியானாள். ப்ரஜன் இந்த உணர்வை அறிய முடியவில்லையே என்று ஏங்குவாள். பிள்ளை அங்கும் இங்கும் உருளும் பொழுது, அதன் அசைவினை அவள் எண்ணி மகிழ்ந்தாலும் அவன் அதை லத்திகா வயிற்றில் தொட்டு பார்த்து உணரமுடியவில்லை என வருந்தினாள்.
எப்பொழுதும் போல டைரி மட்டுமே எழுதி முடித்து கண்ணீரோடு முடிவைக்க உறங்கினாள்.
இப்பொழுது எல்லாம் தானாக சோர்வு கொண்டு உறங்கவும் செய்தாள். அலுவலகத்தில் பிரஜன் போட்டோ பார்த்தபடி அப்படியே சில நேரம உறங்குவதை கண்டு ராஜன் மனம் பிருத்வியை வசைபாடும்.
என்னதான் அலுவலகம் அம்மா வீடு என்று பார்த்து பார்த்து பொழுதை கழித்தலும், இரவில் ப்ரஜன் இல்லாமல் லத்திகா அந்த நிலவோடும் வானோடும் தான் பேசிக் கொண்டிருப்பாள். பால்கனியில் இருந்தே கூட சில நேரம் உறங்கி இருக்கின்றாள்.
அடுத்த நாள் சளி பிடித்து தும்ப அதற்கும் மருந்து எடுத்துக் கொள்வாள்.
இதோ பிருத்வி கிளம்பி நான்கு மாதம் முடிகின்றது. இன்னும் எத்தனை மாதங்களோ என பரிதவிக்க, அன்று புவனா அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தாள்.
புவானாவிடம் பேசி சிரித்து கொஞ்சம் பேசுவாள். ராஜனும் அங்கே இருப்பதால் புவனா மிதமாக பேசவே செய்வாள். லத்திகாவின் சிறு சிறு சந்தேகம் எல்லாம் புவனா நிவர்த்தி செய்வாள். குழந்தை பற்றி எல்லாம் தெளிவாக கேட்டு கொள்வாள். புவனாவும் தமக்கை போல அவளுக்கு சில கருத்தை தெரிவிப்பாள்.
சகுந்தலா லத்திகாவிற்கு ஏதேனும் செய்து கொண்டு வந்து நிற்பாள். சனி ஞாயிறு சில வேலையில் ரோஷன் கூட அழைத்து வர சொல்லி அவனிடம் பேசுவாள். அவனுக்கு பிரஜன் போலவே கேக் கிண்டர் ஜாய் வாங்கி கொடுக்க சொல்லி அவளை கடைக்கு அழைத்தும் செல்வாள்.
ஏழாம் மாதம் வளைக்காப்பு செய்து அழைத்து செல்ல நினைக்க லத்திகா பிடிவாதமாக ஒன்பதாம் மாதமே வளைக்காப்பு என்று முடிவாக சொல்லிவிட்டாள்.
ராஜன் பவானி கூட அவன் வருவது இயலாது என்று இப்பொழுதே செய்திடலாம் என்றாலும் மறுத்துவிட்டாள்.
அன்று ராஜன் மனம் வருந்தி ”உன்னை பற்றி கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் காட்டுக்கு போய் இருக்கான். ஏன் ம்மா இப்படி உன்னை கஷ்டப்படுத்திக்கற” என்றதற்கு அவளின் மனம் உண்மை கூறியது.
”இல்லை மாமா அவருக்கு இந்த ஜாப் மறந்திருந்தார் நான்தான் அவர் ஆசைப்படறது எல்லாம் நடக்கணும்னு இதுக்கு பார்ம் பில் பண்ணியதே… அவர் அப்போ கூட போக மாட்டேன் என்று தான் இருந்தார். நான் தான் அவருக்கு என்று ஒரு பெயரை உருவாக்க அனுப்பினேன்” என அழுதிட, மற்றவர்கள் வேறு என்ன செய்ய முடியும்? அதுவும் அவன் சென்ற பிறகு…
”கவலைப்படாதே லத்திகா… அவன் நிச்சயம் சிக்கிரமா வந்துடுவான்……” என ஆறுதலூரைத்தார்.
இவ்வாறாக நாட்கள் கழிந்தன.

💕💕💕💕💕💕
Super narration. Intresting
Nice
🌟🌟🌟🌟🌟