Skip to content
Home » உன்னில் தொலைந்தேன்-30 (முடிவுற்றது)

உன்னில் தொலைந்தேன்-30 (முடிவுற்றது)

💟30
                    பவானி எல்லாவிதமான காய்கறி வகைகளும், கறி வகைகளும் செய்து ப்ரஜனுக்கு பிடித்த பாயசம் முந்திரி பக்கோடா என வழக்கம் போல மாலையில் செய்து டைனிங் டேபிளை நிரப்பி வைத்தார்.
       ”அய்யோ அம்மா இதெல்லாம் ஒரே நேரத்தில் இவ்ளோ சாப்பிட முடியாது”
      ”உன்னால் முடிஞ்ச அளவு சாப்பிடுடா கண்ணா” என வேண்டாம் வேண்டாம் என்றாலும் பவானி ஊட்டி விட அதிகமாகவே சாப்பிட்டான்.
                      இரவில் பாதாம் பால் வேறு. ஐயோ அம்மா என்ற கடுப்புடன் அதையும் குடித்து கிளம்பினான்.
             லத்திகா அவனுக்கு எழுதிய டைரியில் என்ன எழுதி இருப்பாள் என்று ஆர்வமாக….
                 அங்கே லத்திகாவும் அதே போல சாப்பிட்டு முடித்து அவனின் டைரியை எடுத்து பக்கத்தை புரட்டினாள்.
          ப்ரஜன் டைரி
          ‘ஹாய் ராட்ஸசி… ரொம்ப தூரம் ட்ராவல்… ஷிப்ல வந்துட்டோம் பட் இங்க இருந்து நடந்து தான் போகணுமாம். ஏதோ பாதி தூரம் நடந்தேன் அதுக்கு மேல முடியலை. முதல் முறை இப்படி செடி, கொடி, செகதி, முள் இப்படி எல்லாம் கடந்து நடக்கிறேன். என் டிரஸ் எல்லாம் வேர்வை. நல்ல வேளை உனக்கு ஏ.சி ஆகாது என்று ஏற்கனவே ஆபிஸ்ல ஏ.சி இல்லாம இருந்து பழகினேன் அதனால இதுவும் என் ராட்ஸசிகாக என்று நினைச்சேன். என் கால்கள் தானா வேகமா நடக்குது’ என முடிக்க கலங்கி கொண்டாள். ஏன் டா இப்படி? என்று திருப்ப,
          லத்திகா டைரி
         ‘டேய் சிடுமூஞ்சி போ டா உனக்கு அந்த பெயர் இனி ஒர்க் அவுட் ஆகாது. அந்த அளவு காதல் வழிய வழிய என்னை காதல் செய்யற.. ஆதாம்(முதல் காதலன் ஆதாம்-ஏவாள்) கூட உங்கிட்ட நிற்க முடியாது டேய் நீ தான் ஆப்பிள் பாய். நீ இங்கருந்து போய் இரண்டு நாள் தான் ஆச்சு. நான் உன்னை அனுப்பி இருக்க கூடாது டா. என்னால உன்னை பார்க்காம இருக்க முடியலை’ என்றதும் சிரித்துக் கொண்டான்.
       ப்ரஜன் டைரி
       ‘வுப் என்னடி இது பத்து நாள் இந்த பிரட் ஜாம்… கடவுளே சாப்பிட முடியலை. இதுல கரையில் பிடிச்ச மீன் எடுத்து, வேக வச்சி சாப்பிட்டோம். ராட்ஸசி உன் காபி, உன் உப்பு பொங்கல், சாம்பார்… அதை விட இது ஓகே தான் டி’ என்றிருக்க ”அடப்பாவி என் காபி என் உப்பு பொங்கல் சாம்பார் விட சூப்பரா? இரு இரு நாளைக்கு அதயே கொடுக்கறேன். என்றே சிரித்து திருப்ப,
       லத்திகா டைரி
      ‘இங்க யாருமே சரியாவே சாப்பிட மாற்றங்க எல்லாம் என்னால தானே. நீ ஒழுங்கா சாப்பிட்டியானு தெரியலை அதனால, என்னாலையும் ஒழுங்கா சாப்பிட முடியலை. அத்தை மாமா கூட அப்படி தான் இருக்காங்க… நேற்று செக்அப் போய் இருந்தேன் டாக்டர் சொன்னாங்க. நான் ஒழுங்கா சாப்பிட்டா தான் நம்ம பேபி கூட ஹெல்த்தியா இருக்குமாம். எனக்கு உன்னை மாதிரி தான் ஹெல்த்தி பாப்பா வேணும் சோ நான் இனி ஒழுங்கா சாப்பிட போறேன். நான் சாப்பிட்டதால் அத்தை மாமா கூட ஒழுங்கா சாப்பிட்டாங்க. எனக்கு நம்ம பேபி ஹெல்த்தியா இருக்குமா டா?’ என்றதும் ”பைத்தியம் நம்ம பேபி நல்லப்படியா இருக்கும் டி” என்றே சொல்லி கொண்டான்.
        ப்ரஜன் டைரி
      இன்னிக்கு எல்லா வகை மண் வளம் பிளஸ் செடிகளை ரிசெர்ச் பண்ணினோம். பட் நாங்க தேடி வந்த மாதிரி இன்னும் எதுவும் கிடைக்கலை. வில்லியமிற்கு நான் நியூ மேரிட் என்று இன்னிக்கு தான் தெரிஞ்சது. எனக்காகவே சீக்கரம் ரிசெர்ச் முடிச்சு கிளம்பனும் என்று சொல்லி கொண்டார். எனக்கு அவரோட பழக வாய்ப்பு கொடுத்தது நீ தான் ராட்ஸசி லவ் யூ டி’ என முடிக்க சிரித்துக் கொண்டாள்.
    லத்திகா டைரி
       ‘ப்ரஜன் இன்னிக்கு வயிற்றில் ஏதோ அசைந்தது பயந்து போய் அத்தைகிட்ட சொன்னேன். குழந்தை வளர்ந்து அசைவு கொடுக்குது என்று சொன்னாங்க. எனக்கு முதலில் பயமா இருந்துச்சு இப்போ அந்த உணர்வு மெய் சிலிர்க்குது டா… எனக்கு இந்த பீல்லை நீ உணரணும் என்று ஆசையா இருக்கு வயிற்றில் இருக்கும் போதே நீ அதை உணர செய்ய எப்போ வருவ?’ என முடித்து இருந்தாள். லத்திகா நீ முதலில் உணர்ந்த அந்த உணர்வை நான் இறுதியில் வந்து எப்படியோ உணர்ந்துவிட்டேன். ஆனால் நிஜமாகவே உடல் சிலிர்த்தது. எப்படி தான் அந்த வயிற்றில் குழந்தை இங்கும் அங்கும் ஓடி விளையாடிட்ருக்கு… கடவுளின் படைப்பே ஆச்சரியம் தான் என்று நினைத்து கொண்டான்.
       ப்ரஜன் டைரி
 இப்போ எல்லாம் எதையும் எழுத முடியலை. பகல் எல்லாம் வேலை சாப்பாடு அது இது என்று நைட் கூட சில நேரம் இந்த பூச்சிங்க தொல்லை. டெய்லி நைட் தூங்கறதுக்கு முன்ன நெருப்பை தான் பற்ற வைக்கிறேன். நீ கொடுத்த லைட்டர்… எனக்கு நைட் எப்படியும் உன்னை நினைவு படுத்திடும் நானே மறந்தாலும் கூட…. இரவு எப்பவும் உன்னை நான் மிஸ் பண்ணுவேன்… உன்னை தினமும் ஆக்கிரமிச்ச நினைவுகள் தான் எப்பவும் எனக்கு தோன்றும் அதன் நினைவில் தானா உறங்கிடுவேன்.’
      லத்திகா டைரி
     ‘என்னனு தெரியலை டா சரியா சாப்பிட்டாலும் ரொம்ப சோர்வா இருக்கு தூங்கி தூங்கி விழறேன். ஆபிஸ்ல இன்னிக்கு உன் புகைப்படத்தின் மேலயே தூங்கிட்டேன் மாமா பார்த்து அமைதியா போயிட்டார். புவனா அக்கா தான் சொன்னாங்க. எனக்கு என்ன செய்யறது என்றே தெரியலை. வீட்ல அத்தை கஷ்டமா இருந்தா ஆபிஸ் போக வேண்டாம் என்று சொன்னாங்க. எனக்கு உன்னை எப்பவும் நம்ம ஆபிஸ்ல பார்த்தே பழகிட்டேனா அதனால பகலில் நீ இங்க இருப்பது போல பிரம்மை. அதனால் பரவாயில்லை என்று ஆபிஸ் கிளம்பிட்டேன்.
       ப்ரஜன் டைரி
    இன்னிக்கு நாங்க போன இடத்துல ஒரே பூச்சி தொல்லை ஓரளவு நாங்க தப்பிச்சுட்டோம். என்கூட இருக்கற ஐந்து பேர்ல ராஜு என்றவருக்கு காலில் தடிப்பு ஏற்பட்டு போச்சு. இன்னும் சிலருக்கு கூட சின்ன சின்ன உபத்திரம் நடந்தது எனக்கு எதுவும் ஆகலை அதிசயம் என்று வில்லியம் சொன்னார். எனக்காக நீ டெய்லி சாமி கூப்பிடுவ எனக்கு என்ன ஆக போகுது சொல்லு’ என்று முடிக்க ஒரு முறை லத்திகா மனம் சரியில்லாமல் அன்று முழுதும் பூஜை அறையிலே இருந்த நாளை எண்ணி கொண்டாள்.
      லத்திகா டைரி
         காலையில் இருந்தே மனசு சரியில்லை அதனால் இன்னிக்கு பூஜை அறையிலே இருந்தேன். உனக்கு எதுவும் ஆகா கூடாது. உனக்கு ஏதாவது என்றால் நான் உயிரோட இருக்க மாட்டேன் ப்ரஜன்’ என முடிக்க லூசு எனக்கு ஒன்னும் ஆகாது.
      ப்ரஜன் டைரி
     இன்னிக்கு எனக்கு நாங்க தேடி வந்த தாவரம் கிடைச்ச மாதிரி இருக்கு பட் ரிசெர்ச் பண்ணிட்டு இருக்கோம் எனக்கு தான் அதுல முழு இன்ட்ரெஸ்ட் நைட் கூட அதனை பற்றி யோசிச்சு அங்க செட் பண்ணின லேப்ல அதனை பரிசோதிச்சேன். ஆனா எனக்கு அதை எப்படி உபயோகம் படுத்தறது என்று தெரியலை அது எதுக்கு யூஸ் என்று கண்டுப்புடிக்கணும். உனக்கு ஏழாம் மாதம் வளைக்காப்பா என்று எனக்கு தெரியலை. எப்படியாவது ஒன்பதாம் மாதம் வளைக்காப்பு இருக்கணும். அப்படியே முடிஞ்சாலும் எனக்காக நீ மறுபடியும் விழா வச்சுக்கிட்டா போச்சு ஏன் டி ராட்ஸசி உனக்கு மாதம் மாதம் கூட நடத்தலாம்’ டேய் கண்ணா உனக்காக தான் ஒன்பதாம் மாதம் விழா ஓகே சொன்னேன்.
       லத்திகா டைரி      
       முந்தாநாள் தூக்கமே வர மாட்டுது டா எனக்கு இங்க பெட் ஏ.சி எல்லாம் இருக்கு பட் நீ இல்லை இந்த பால்கனி வந்து அந்த நட்சத்திரம் கூடவும் வானம் நிலவோடும் பேசிகிட்டு இருக்கேன். இதே நிலா வானம் அங்கயும் நீ பார்த்து ரசிப்ப தானே டா. என்ன எனக்கு சளி பிடிச்சுகிச்சு அத்தை உடனே கஷாயம் வச்சி கொடுத்தாங்க. ஸ்வீட் மதர் இன் லா. உனக்கு பதில் அவங்களுக்கு ஒரு கிஸ் கொடுத்துட்டேன். டேய் கன்னத்துல தான் பொறாமையா…என்றிருக்க சிரித்தான் ப்ரஜன்.
       ப்ரஜன் டைரி
           இன்னிக்கு கொஞ்சம் தூரம் போனோம் அங்க ஒரு பூ இருந்தது ஆரஞ்சு மஞ்சள் கலந்து அது வாடாது உதிராது ஆனா வாசனை தராது என்று வில்லியம் சொல்லிகிட்டு இருந்தார். பக்கத்துல இருந்தா பறிச்சு இருக்கலாம் என்று பேசிக்கிட்டாங்க. அப்போ எல்லோரும் சாப்பிட்டு முடிச்சோம். எனக்கு சடன ஒரு உந்துதல் உனக்காக எப்படியாவது அதனை பறிச்சுட்டு வரணும் என்று… எல்லோரும் ரிஸ்க் வேண்டாம் என்று சொல்லிட்டாங்க. வில்லியம் கூட வேண்டாம் ப்ளீஸ் என்றார்.
        எனக்கு உன் ஞாபகம் தான், முயற்சி செய்து பறிக்க மேல ஏறிட்டேன். ஆமா அது ஒரு கல் மாதிரி இருக்கற மலையில் இருந்துச்சு. கஷ்டப்பட்டு ஏறிட்டேன். பட் இறங்க தெரியலை. அங்கிருந்து விழுந்தா உயிர் போறது நிச்சயம். அப்போ எப்படியோ ஸ்லிப் ஆகி கீழே விழுந்தேன் பட் மை லக் ஒரு பாறையில் பிடிச்சுக்கிட்டேன் என் காலில் செம கீறல் பாறை கீறிடுச்சு செம பிளட் லாஸ்… மயக்கம் வந்துடுச்சு. எனக்கு அந்த நிலையில் உன் ஒருத்தி தான் நினைவு வந்துச்சு. நான் இல்லாம நீ இருப்பியா? நோ வே அதுக்காகவே கையில கிடைச்ச வழியை பிடிச்சு கஷ்டப்பட்டு ஏறிட்டேன்.
           வில்லியம் வந்து கேட்டார் இந்த பூவுக்கு என் உயிர் தான் விலையா என்று.. எஸ் என் லத்திகா பார்க்க போகும் போது விலை மதிப்புயில்லாத இந்த பூ அவளுக்கு தான். அதுக்கு என் உயிர் கொடுத்து வாங்கி இருக்கேன்’ என படித்து முடிக்க வாயினை பொத்தி அழ ஆரம்பித்து விட்டாள். ஏன் டா உனக்கு ஏதாவது ஆயிருந்தா என்ன ஆகியிருக்கும் என விசும்பினாள். கொஞ்ச நேரம் அழுது முடித்து மீண்டும் படித்தாள்.
         ரிசெர்ச் செய்யற தாவரத்தின் ஜெல் சும்மா காலில் தேய்ப்போம்னு தேய்த்தேன் வாட் எ மிராகில் என் தோல் அப்படியே பெவிக் குயிக் போட்டு ஓட்டிகிட்ட மாதிரி இருக்கு ப்ளட் வரலை வில்லியம் கிட்ட காட்டினேன். அப்பறம் தான் தெரிஞ்சது. இந்த ஜெல் குடிக்க முடியாது ஜஸ்ட் அப்பளை பண்றது என்று வில்லியம் பாராட்டினார். என்னால் தான் கண்டு புடிச்சது என்று.
       லத்திகா டைரி
    டேய் ஒன்பதாம் மாதம் வளைக்காப்பு விழா தேதி வந்துடுச்சு நீ வருவியா? என் எல்லா மெயிலுக்கும் நீ ஒரு ரிப்ளை கூட அனுப்பலை. எனக்கு அழுகையா வருது டா. நம்ம குழந்தை அசையறதை உனக்கு உணர வைக்கணும் என்று இருந்தேன். அந்த உணர்வு அனுபவிக்க வருவியா? இல்லை குழந்தை பிறந்த பிறகு தான் வருவியா? எனக்கு எல்லாரும் இருந்தாலும் கடைசியா உன் கையாள வளையல் அணிந்து கொள்ளணும் என்று கொள்ள ஆசை டா…. அது நிறைவேறுமா? நாளைக்கு தான் விழா… என முடித்திருக்க,
      ப்ரஜன் டைரி
    இங்க நெட்ஒர்க் இருக்கற ஏரியா வந்தாச்சு. மெயில் எல்லாம் பார்த்தேன் லாஸ்ட் ஒன் பார்த்தேன் நாளைக்கு உனக்கு வளைக்காப்பு விழா ஓ காட். அப்போ இன்னிக்கே கிளம்பணும் நோ ரெஸ்ட். வில்லியம் கூட, தங்கி முகம் நீட் பண்ணிட்டு ப்ரெஷ் ஆகி, ரெண்டு நாள் இங்க தங்கி, என்ஜோய் பண்ணி கிளம்ப சொன்னார். அவரிடம் வளைகாப்பு விழா என்று சொன்னேன். அப்போ கிளம்பு மேன். உயிரை கொடுத்து பூ பறிச்சு இருக்க, சோ அதை உன் லவ்வர்க்கு கொடு இன்றே கிளம்பு என்று சொல்லிட்டார். சோ நோ ரெஸ்ட் கிளம்பிட்டேன். ஏய் ராட்ஸசி வந்துட்டே இருக்கேன் டி காலையில் உனக்கு ஆனந்த அதிர்ச்சி இருக்கு… நீ ஓடி வந்து ஹக் பண்ணுவியா? கிஸ் பணனுவியா? இல்லை அழுவியா? தெரியலை டி வந்துட்டே இருக்கேன் லவ் யூ டி ராடட்ஸசி…’ என முடிக்க பெருமூச்சை ஒன்றை வெளியிட்டாள்.
          மணி ஒன்று ப்ரஜனுக்கு கால் செய்யலாமா என எடுக்க, பின் அவன் உறங்கட்டும் அவனுக்கு ரெஸ்ட் இல்லை என எண்ணத்தை கைவிட்டாள். அங்கே அவனோ லத்திகாவை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அவனும் கால் செய்யாமல் இருந்தான்.
               இருவருமே ஒன்று முப்பதுக்கு மேல் உறங்கினார்கள்.     

—-

     அதிகாலையில் எழுந்து நின்று ஹாலுக்கு வந்திட “ஹாய் குட் மார்னிங்” என்றே க்ரீன் டீ குடித்த படி ப்ரஜன் கண் அடிக்க,
      ”ஏன் டா காலையிலே கண் முன்ன வர்ற? நீ வருவதற்குள் எனக்கு பைத்தியமே பிடிச்சுடும்” என சோபாவில் அமர்ந்து அங்கிருந்த ப்ரஜனை காண அவன் அப்பொழுதும் அவளை பார்த்து சிரித்தான். 
    ”இந்த இமாஜினேஷன் போக மாட்டுது என ப்ரஜனின் தலையில் கொட்டி கைகளில் கிள்ளி எடுக்க
      ”ஆஹ் அடிப்பாவி ராட்ஸசி நான் நிஜமாவே வந்துட்டேன் டி” என தலையை தேய்து கொண்டே கத்த, பிரஜனின் உருவம் பிரம்மை இல்லை நிஜம் என்று லத்திகா உணர்ந்து
     ”சாரி டா சாரி டா” என்றே மன்னிப்பு வேண்டினாள். 
      ”என்ன ஆச்சு?” என சகுந்தலா வந்து பார்க்க, ப்ரஜன் டீ சிந்தி கிடந்தது.
      ”அச்சச்சோ கொட்டிடுச்சா மாப்பிள்ளை இருங்க வேற எடுத்துட்டு வர்றேன். ஏய் லத்திகா முகம் அலம்பிட்டு வா..” என முறைக்க,
      ”இந்த அம்மா என்ன முறைக்கறதை விட மாட்டாங்க போல” என் முனங்கி கொண்டு நாயகன் அருகே அமர்ந்தாள். 
        ”டேய் நீ என்ன காலையிலே வந்துட்ட…”
       ”ஏன் டி நீ தானே காலையில் என் முகத்தில் விழிக்கணும் என்று ஆர்டர் போட்ட? உனக்காக ஆசையா வந்து நின்றா தலையில் கொட்டுற.. கையை கிள்ளுற… எவ்ளோ நாள் ஆசை டி என்னை அடிக்க?” என்றான். 
       ”பச் அதுக்கு இவ்ளோ குயிக்காவா ?”
       ”அடிப்பாவி மணி எட்டு”
       ”என்னது எட்டா?”
       ”ஹ்ம் போ ப்ரெஷ் ஆகிட்டு வா சாப்பிடலாம். ரொம்ப பசிக்குது” என்றதும் வேகமாக குளித்து வந்தவளுடன் சாப்பிட்டு முடித்தான்.
             அறையில் நுழைந்து ”என்ன டி நைட் லேட்டா தூங்கினியா?” என்றான் ப்ரஜன்.
        அதன் பிறகே யோசித்தவள் ஓடி வந்து அவனின் நெஞ்சில் சாய்ந்து “ஏன் டா இப்படி பண்ணின அந்த பூவுக்காக உயிரை பணயம் வச்சிட்டியே…” என்றதும்
        ”ஏய் அழுவுறியா?”
        ”இல்லையே அது தானா வருது”
        ”அப்படி இல்லம்மா நான் வெளிநாட்டுக்கு போனா எப்படியும் உனக்கு ஏதாவது அலைஞ்சி திரிஞ்சு சம்திங் ஸ்பெஷலா வாங்கி வருவேன் பட் போன இடம் காடு அதான் அங்க என்ன ஸ்பெஷல் என்று யோசிச்சேன் உயிரை பற்றி யோசிக்கலை ஏறி பறிச்சுட்டேன்” என்றான். 
        ”அந்த கீறல்….?”
       ”அதனால தானே சீக்கிரம் கண்டு புடிச்சோம்… வீட்டுக்கும் வந்து சேர்ந்தேன் இல்லைனா இன்னும் எதனால் அது யூஸ் என்று குழம்பி இன்னும் ஒரு மாதத்துக்கு மேல இருக்கும்”
        ”போடா படிச்சதும் மனசு பதறிடுச்சு உனக்கு உடனே கால் செய்யணும் என்று தோணுச்சு பட் லேட் நைட் என்று கால் பண்ணலை”
       ”ஏ.. நானும் அதே தான் யோசிச்சு கால் பண்ணலை” என்று கன்னத்தில் முத்தமிட்டான். 
                       கதவு தட்டும் சப்தம் கேட்க,
      ”இங்க யாரு கரடி” என கதவை திறக்க,
     ”ஹாய் அங்கிள்” என்றபடி ரோஷன் நிற்க,
      ”ஹாய் லிட்டில் பிரெண்ட் என்ன இவ்ளோ சீக்கிரம்?”
    ”உங்க காரை வெளியே பார்த்தேன் வந்துட்டேன்” என்றதும் அடக்கடவுளே நான் தானா…. என முனங்க லத்திகா சிரித்துவிட்டாள்.
                             அதன் பிறகு ரோஷன் ப்ரஜன் கூட மற்ற பிள்ளைகள் சேர்ந்து பட்டம் விட பொழுதுகள் இனிமையாயின.     
                 லத்திகா வீட்டிலே தஞ்சம் ஆனான். அவளுக்கு இந்நாள் வரை கூடவே இருந்து கவனிக்க முடியாத நேரத்தை எல்லாம் சேர்த்து கவனித்தான். அவளுக்கு அவனே சில நேரம் ஊட்டி விட்டான். சில நேரம் லத்திகா அவனுக்கு ஊட்டி விட்டாள்.
       ”ராட்ஸசி அம்மா சொன்னாங்க அவங்களுக்கு மூணு குழந்தைகளை பெற்று கொடுப்பியாம்”
       ”உனக்கு மூனு ஓகே வா” என்று கேட்டாள்.
       ”நிறைய வேணும் பட் உன் ஹெல்தி பார்க்கணும்ல…”
       ”டேய்… உனக்கு எத்தனை வேணும் அத சொல்லு”
       ”எனக்கும் மூனு குழந்தை வேணும். வீடு முழுதும் கலகலன்னு இருக்கனும். நான் மட்டும் தனியா வளர்ந்ததால், எதையும் ஷேர் பண்ணியதில்லை… சண்டை போட ஆள் இல்லை, கூட விளயாட ஆள் இல்லை, எனக்குனு ஒரு அண்ணன் தம்பி, தங்கை, அக்கா இல்லை என்று கொஞ்சம் வருத்தம் அடைஞ்சு இருக்கேன். சொல்ல போனா எல்லோருமே இப்ப ஒரு குழந்தை போதும் என்று இருக்காங்க பட் அது ரொம்ப தப்பு இரண்டு குழந்தையாவது இருக்கணும் அப்போ தான் பெரிப்பா, பெரிம்மா, சித்தி, சித்தப்பா, அத்தை, மாமா அவங்க பசங்க கொலுந்தனர், நாத்தனார், அண்ணி, இப்படி உறவுகள் இருக்கும் இல்லை எல்லாம் அழிந்து போயிடும் அதனால நமக்கு நிச்சயம் மூனு குழந்தைகள் ஓகே” என்றான்.
       ”ஓகே டன். எனக்கும் ஆல்ரெடி அப்படி தான் தோணுச்சு” என இருவரும் சிரிக்க, கொஞ்ச நேரத்தில் பிரசவ வலி வந்து லத்திகா துடிக்க, அவளை பூ போல தூக்கி கொண்டு காரில் அமர வைத்து எல்லோரும் மருத்துவமனைக்கு சென்றார்கள்.
                              அங்கே வெளியே இருக்கும் அனைத்து தெய்வங்களுக்கும் விண்ணப்பம் போட்டான் லத்திகா கதறல் கேட்டு…
                   சற்று நேர ப்ரஜனை கலங்க வைத்த பின் அழகனா ஆண் மகவினை பெற்று எடுத்தாள்.
        சில பல நேரங்களுக்கு பின் லத்திகா வை பார்க்க, அவளின் நெற்றியில் முத்தமிட்டான்.
                குழந்தை பிருத்வியை உரித்து வைத்தது போல இருக்க, கண்களை உருட்டி கொண்டு அங்கும் இங்கும் விழிகளை அசைத்து பார்த்துவிட்டு ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கியது அச்சிசு…
      ”லத்திகா ரொம்ப வலிச்சுதா டி…. சாரி என்னால தானே.. இனி நமக்கு ஒரு குழந்தையே போதும்” என ப்ரஜன் அவளின் கதறல் கேட்டு முடிவை சொல்ல
      ”ஏண்டா பயந்துட்டியா… வலிக்காம எப்படி பிள்ளை பிறக்கும்…? அறிவாளி” என அசதியில் சிரிக்க முயன்றாள்.
       ”இல்லை டி எனக்கு பயம் வந்துடுச்சி நமக்கு ஒரே குழந்தை போதும்…”
      ”கொஞ்ச நேரம் முன்ன மூனு குழந்தைகள் வேணும் என்று சொன்ன… அதுவும் உறவுகள் எல்லாம் வேணும் அதுக்காவது பெத்துக்கணும் என்று வாய் கிழிய பேசின… இதுக்கே பயந்துட்ட…”
      ”இல்லை அப்போ நீ இவளோ கஷ்டப்படுவ என்று நினைக்கலை…ஆசையில் பேசிட்டேன்….” என்றான். 
      ”நீ சரியான அவசரகக்காரன் டா எதையும் யோசிக்க மாட்ட… பையின் இல்லாமல் எதுவும் கிடைக்காது…” என்றாள் நாயகி. 
      ”உனக்கு பையின் கொடுத்து எனக்கு சந்தோசம் வேண்டாம்” என்றான் முறுக்கியபடி
      ”எனக்கு தெரியாது நமக்கு மூனு குழந்தைகள் பிறக்கும்” என்றாள் அவள் அதே பிடிவாததுடன் அவளின் முகம் கண்டு
      ”சரி உன் ஆசைக்காக இன்னோரு குழந்தை மட்டும் போதும்”
      ”இல்லை ப்ரஜன் மூனு குழந்தைகள் வேணும்” என லத்திகா சொல்ல
      ”இல்லை இரண்டு” என்று ப்ரஜன் சொல்ல
     ”இல்லை மூனு” என லத்திகா பிடிவாதத்துடன் சொல்லி முடிக்க
     ”இல்லை இல்லை” என்றே இருவரும் பேச, குழந்தை வீறிட்டு அழுதது.
           உள்ளே வந்த சகுந்தலா மற்றும் பவானி இருவருமே வரவும் ப்ரஜன் லத்திகா வாயை மூடினார்கள்.
           அப்பொழுதும் லத்திகா கண்களில் மறுப்பு செய்து கைகளில் மூனு என்று சொல்ல பிருத்வி வேறுவழியின்றி எப்பொழுதும் போல லத்திகாவிடம் மண்டையை ஆட்டி கைகளில் தம்ஸ் அப் செய்தான். லத்திகா ப்ரஜன் இருவருமே  சிரிப்புடன் இருவரின் கண்களிலும் நிறைவான காதல் வழிந்தது.

                              💟 ——-சுபம்—–💟

                                            -பிரவீணா தங்கராஜ்.

2 thoughts on “உன்னில் தொலைந்தேன்-30 (முடிவுற்றது)”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *