Skip to content
Home » உன்னில் தொலைந்தேன்-5

உன்னில் தொலைந்தேன்-5

    💟5  
                                     லத்திகா எப்பொழுதும் தன் தந்தையை ஆறு மாதத்திற்கு ஒரு முறை புல் ஹெல்த் செக் அப்பிற்கு அழைத்து செல்வாள்.


            அன்றும் அப்படி அழைத்து சென்று எல்லா டெஸ்ட் பார்த்து விட்டு ரிப்போர்ட்காக காத்திருந்தனர். அப்பொழுது ஜெயராஜன் லிப்டில் ஏறுவதை பார்த்து விட்டு அவரிடம் பேச எழ, அவரும் லத்திகாவை கண்டு லிப்டின் அருகே இருந்தார்.  


       ”என்ன சார் இங்க?” என்று கேட்டாள். 
       ”என் மனைவி பவானி இந்த ஹாஸ்பிடல்ல தான் இருக்காம்மா?”


       ”அப்படியா? இப்ப எப்படி இருக்காங்க சார்?” என்றாள் கரிசணையாக 
      ”வந்து நீயே பாரு லத்திகா” என்று அழைத்தார். 


      ”சார் அது வந்து அப்பா … ” என இழுக்க,
       ”ஓ  அப்பா வந்து இருக்காரா?”


         ”ஆமா சார்” என கூறி ”அப்பா இங்க வாங்க” என அழைத்து ”அப்பா இவர் எங்க MD ஜெயராஜன் சார்” என்று அறிமுகப்படுத்தினாள். 
       ”வணக்கம் சார்” என்றார் அவரும் . 


       ”என்னது உங்களுக்கும் சாரா?” என நகைக்க,
       ”அப்பா..  சார் ஒய்ப் இங்க தான் இருக்காங்க பார்த்துவிட்டு வரட்டுமா? நீங்க ரிப்போர்ட் வாங்கிட்டு இருங்க” என்றதும் சரி என சொல்லிட இருவரும் விடை பெற்றனர்.


        ”அப்பாவிற்கு என்ன ஆச்சு லத்திகா?” என்று கேட்டார். 
       ”அது மன்தலி செக்கப் சார் வேற ஒன்னும் இல்லை ரிப்போர்ட் கூட எல்லாம் நார்மல் தான்”  என்று கூறி  மேலே பிருத்வி இருந்தால் என்ன செய்ய என யோசிக்க  அறையும் வந்தது அவள் மனதை படித்தவர் போல,


       ” பிருத்வி பில் கட்டிட்டு வர்றேன் சொல்லி இருக்கான் இன்னும் வரலை போல” என்றதும் தான் அப்பாடி அதுக்குள்ள போயிடனும் என சொல்லி கொண்டு பவானியை சந்தித்தாள்.
       ”எப்படி இருக்கீங்க மேம்” என லத்திகா கேட்டவாறு கைப்பையில் இருந்த திருநீற்றை பவானியின் நெற்றியில் வைத்து விட்டாள். 


       ”நம்ம ஆபிஸ்ல ஒர்க் பண்றா, பேர் லத்திகா. ரொம்ப நல்ல பெண்” என்று மனைவிக்கு அறிமுகப்படுத்தினார்.  
       ”ஓ, நல்லா இருக்கேன் மா…”
      ”என்ன மேம் உங்களை டென்சன் பண்ணிட்டாங்களா? இப்படி ஹாஸ்பிடலில் விட்டுட்டாங்க…  நீங்க ஏன் மேம் கவலையை பக்கத்துலே வச்சிக்கிட்டு இருக்கீங்க எல்லாம் வளர வளர தான மனிதர்கள் வாழ்த்துப்பாங்க… நீங்க கவலைப்பட்டு எதுக்கு உங்க உடல் நிலையை கெடுத்திகிட்டிங்க…” என்று பிருத்வி பற்றி கவலைப்படாதீர்கள் அவன் தானாக எல்லாம் செய்வான் என்று மறைமுகமாக சொன்னாள். 


       ”அப்பா மகன் எல்லாம் என் பேச்சை கேட்கமா இப்படி பண்ணிட்டாங்க…. எனக்கும் அவனை தவிர யாரு இருக்கா?” என்று பேசிட ஜெயராஜன் லத்திகாவை பற்றி பேச்சை ஆரம்பித்தார்.
       ”பவானி லத்திகாவை பெண் பார்த்துவிட்டு போனாங்க. பட் பிடிக்கலை என்று சொல்லிட்டா ஏன்னு கேளு?” ஜெயராஜன் பேச்சினை வளர்த்தார். 


       ”ஏன் மா”
       ”ஐயோ மேம் அது எதுக்கு”
       ”நான் சொல்றேன் பவானி. அப்பா அம்மாக்கு அவ சம்பளத்துல பாதி கொடுக்கணுமாம் அதுக்கு ஓகே என்றால் கல்யாணம் என்று சொல்லி இருக்கா, ஆனா இவ மனசை புரிச்சுக்கலை அவன் கேன்சல் பண்ணிட்டான்.”
       ”என்னங்க நீங்க சிரிச்சுக்கிட்டு சொல்றிங்க, அந்த பெண் கஷ்டப்பட போறா” என்றாள் பவானி.
       ”நோ மேம் கஷ்டம் எல்லாம் இல்லை, எனக்கு என் அப்பா அம்மா தான் முக்கியம் அதனால அந்த செல்பிஷ் மேல கோவம் மட்டும் தான். வருத்தம் எல்லாம் இல்லை.”
        ”ரியலி கிரேட் மா” என்றார் பவானி.


       ”ஐயோ மேம் இதுல பெரிய விஷயம் இல்லை. என் கடமை தான். பையனா பிறந்தா செய்ய கூடியது தான்” என்றாள் தன்னடக்கத்துடன். 


       வேகமாக கதவை திறந்து வந்தான் பிருத்வி. லத்திகாவை பார்த்து புருவம் சுருக்கி பார்த்தவன் பவானி அருகே இருந்த ஆரஞ்சு பழச்சாறை கண்ணாடி கப்பில் ஊற்றி மடமடவென குடித்து முடித்தான்.
       ”சரிங்க மேம் நான் கிளம்பறேன் உடம்பை பார்த்துக்கோங்க டேப்லேட் எடுத்துக்கோங்க ரெஸ்ட் எடுங்க. வர்றேன் சார்” என கிளம்ப பவானியோ,
       ”என்ன அதுக்குள்ள போகணுமா. இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கலாமே எனக்கு பேச்சு துணைக்கு ஆளே இல்லை” என பவானி சிறுபிள்ளையாய் மொழிந்தார். 


       ”இல்லை மேம் அது வந்து …. கீழே ….” என்று தயங்கினாள். 
        ”உனக்கு ஒன்னு தெரியுமா பவானி உன் பிள்ளை நம்மகிட்ட மட்டுமில்லை லத்திகா கூடவும் சண்டை போட்டுட்டான்”
        ”நான் ஒன்னும் சண்டை போடலை” என பிருத்வி ஆரம்பித்து ”வாய் இருந்தா நான் ஸ்டாப்பா பேச வேண்டியது” என முனங்கினான்.


       ”ஹலோ சார், நீங்க தான் ஸ்டாப் இருக்காங்க சொல்லியும் திட்டினீங்க அதுக்கு பிறகு தான் நான் பேசினேன். ஓகே கத்தினேன் போதுமா” என்று கூறிய பிறகே ஜெயராஜன்-பவானி இருப்பதை உணர்ந்து


       ”சாரி சார் அன்னைக்கு மாதிரியே ப்லோவ்வா …” என தலை தாழ்த்தி, பின்னர்
      ”சார் நான் கிளம்பறேன் கீழே அவர் வெயிட் பண்றார்” என்று விடை பெற்றாள்.


                                பிருத்வி மனமோ யார் அந்த அவர் என்று ஆர்ப்பரித்தது. தன் தாய் தந்தை முன் ஒரு பெண் அதுவும் தனக்கு கீழே தனது அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் தன்னை மிடுக்கோடு பேசிவிட்டு மூக்கை உடைத்து செல்வது கருத்தில் பதியவில்லை.


                                             ஜன்னல் வழியே இமைக்க மறந்து பார்த்து கொண்டு இருந்தான் லத்திகாவின் அவர் யாரென்று.
                        லத்திகா தன் தந்தையை அழைத்து வெளியே வரும் சமயம்,

      ”பில் செட்டில் பண்ணிட்டியா பிருத்வி ” என்று அவன் அன்னை வினவ, 

      ”ஆங்… பண்ணிட்டேன்ம்மா”என்று திரும்பி கூறி ஜன்னலை பார்க்க ஒரு ஆட்டோவில் ஜீன் அணிந்த கால்கள் மட்டுமே அவன் கண்களுக்கு தெரிந்தன. அதற்கு அருகே லத்திகா நிற்க, லத்திகா தன்னை யாரோ பார்ப்பது போல் உணர அந்த ஹாஸ்பிடல் கட்டிடத்தை நிமிர்ந்து பார்த்தாள். 

 ஜன்னலில் பிருத்வி முகம் தெளிவாக தெரிந்தது. இவன் எதுக்கு என்னையே பார்க்கிறான் என நினைத்தபடி ஆட்டோவில் ஏறி வீட்டை அடைந்தாள். 

                                         பிருத்விகோ யாரவன்? அவளின் காதலனா? எதற்காக வந்து இருப்பாள். என்று யோசித்தவன் ஜெயராஜனிடம் கேட்கவில்லை.
                                                                         -தொடரும்.

2 thoughts on “உன்னில் தொலைந்தேன்-5”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *