💟6
- Thank you for reading this post, provide your thoughts and give encouragement. 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
மாலையில் பவானி டிஸ்ஜார்ஜ் செய்து வீட்டில் சென்றதும் ஜெயராஜனிடம்,
”என்னங்க அந்த பொண்ணு ரொம்ப அழகு, துறுதுறுனு இருக்கா, புத்திசாலி பொண்ணு, அப்பா அம்மாகாக எவ்ளோ யோசிக்கறா நல்ல குணமான பொண்ணு இல்லைங்க” என்றார் பவானி.
”ம் , நானும் அப்படி தான் நினைத்தேன் பவானி”
”நம்ம பிரித்விக்கு கல்யாணம் பண்ணினா இந்த மாதிரி பெண்ணை தான் கட்டி வைக்கணும்”
”எதுக்கு டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி சண்டை போடவா?”
”நீங்க சரியா கவனிக்கலை அவ பேசினத்துக்கு உங்க பையன் வாக்குவாதம் பண்ணவே இல்லை. அவளையே பார்த்துக்கிட்டு இருந்தான்”
”இப்ப என்ன சொல்ல வர்ற? இந்த மாதிரி பொண்ணு மருமகளா வரணுமா இல்லை லத்திகாவே மருமகளா வரணுமா?”
”லத்திகாவே மருமகளா வந்தா நல்லா இருக்குமுங்க” என்று அபிப்பிராயத்தை கூறினார்.
”நம்ம ஸ்டேட்டஸ்க்கு …. ” என யோசித்தபடி இருக்க
”இருக்கறது ஒரே பையன் பணம் சேர்த்து என்ன பண்ண போறோம்” என்று பவானி எடுத்துரைத்தார்.
”எனக்கு மட்டும் பணம் சேர்த்து வைக்க ஆசையா பவானி கொஞ்சம் பொறு, இப்பதான் காட்டுக்கு போறேன் என்று சண்டை முடிஞ்சுருக்கு இப்ப திருமணம் என்றதும் உன் மகன் என்ன சொல்வானோ?” என்று யோசித்தார்.
”ஏங்க காட்டுக்கு போறேன் என்று சொல்றவனுக்கு கால் கட்டு போட்டுட்டா மனைவியே கதின்னு கடக்க போறான்”
”ம் .. பேச நல்லா தான் இருக்கு. சரியா வருமா?”
”அதெல்லாம் சரியா வரும். வாங்க லத்திகா அப்பா அம்மாகிட்ட பேசிடலாம்” என்று அவசரம் காட்டினார் .
”கொஞ்சம் பொறு பவானி. இப்ப தான் ஹாஸ்பிடல் இருந்து வந்து இருக்க, கொஞ்ச நாள் ஆகட்டும்” என தள்ளி வைத்தார்.
மேலும் நாட்கள் மட்டும் நகர்ந்திட, அன்று வழக்கத்தை விட கூடுதல் அழகாகவே இருந்தாள் லத்திகா . அம்மாவின் கடலை மாவு போட்டு குளித்த காரணமோ என்னவோ?!
வேகமாக தான் வந்தாள் இருந்தும் ஸ்கூட்டி பஞ்சர் ஆனது. பஞ்சர் கடையில் விட்டுவிட்டு வர அலுவலகத்தில் ஒரு மணி நேரம் தாமதம் ஆனது.
அவள் வரும் பொழுது மேலிருந்தே அவளை கண்டவன் கடிகாரத்தை பார்த்தான். என்ன இன்னிக்கு லேட்டா வந்து இருக்கா பார்க்க வேற பிரைட் ஆ வந்து இருக்கா… என்ன வா இருக்கும்… என்றெண்ணியவன் அவளிடம் எதையும் கேட்கவில்லை.. ஆனால்
மாலை மணி ஐந்து அடிக்க எழுந்து கிளம்ப தயாரானாள் லத்திகா. அவள் கிளம்புவதை அறிந்து அப்பொழுது பிருத்வி அருகே வந்து,
”வரும் போது ஒன் ஹவர் லேட் போகும் போது மட்டும் கரெக்ட் டைமுக்கு போகணுமா? இருந்து ஒரு மணி நேரம் வேலை பார்த்துட்டு போ” என்று சொல்லிட லத்திகா இதற்கு மேல் கிளம்புவாளா ஜம்பமாக வேலையை தொடர்ந்தாள்.
வேலையில் முழுகியவள் ஒரு மணி நேரத்தை விட கூடுதலாக ஒரு அரை மணி நேரம் போனது தெரியாமல் வேலை செய்தாள்.
பிருத்வி வந்து பார்க்க அவள் பணி செய்வதில் முழ்கி இருப்பதை கவனித்தவன்.
”ஹலோ நீ இன்னும் கிளம்பலையா? நான் ஒன் ஹவர் தான் சொன்னேன். நீ பாட்டுக்கு நேரம் போறது தெரியாம இருக்க?” என்ற பிறகே நேரத்தை கவனித்தாள்.
ஏற்கனவே இரு முறை அவனிடம் ப்லொவ் வாக பேசிவிட்டதால் இம்முறை அமைதியாக இருக்க எண்ணி அவளை அமைதி படுத்திக்கொண்டாள். ஆனால் பார்வையோ அதற்கு நேர்மாறாக தான் இருந்தன அவனை முறைத்து கொண்டு
‘ஓ காட் ‘ என மனதில் சொல்லி கொண்டவள் வேகமாக கிளம்பினாள். அவனுடன் ஒன்றாகவே லிப்டில் பயணித்தாள். எப்பொழுதும் ஸ்கூட்டி நிறுத்தும் இடத்திற்கு வந்த பிறகே ‘சே வண்டி பஞ்சர் இல்லை’ என தலையில் கை வைத்து புலம்ப அவள் புலம்பலை கேட்டவன் அப்படியே நின்று விட்டான்.
லத்திகா நடந்து அருகே இருக்கும் பஸ் ஸ்டாப் சென்று நிற்க , அவளை ஒரு தெரு அளவுக்கு இடைவெளி விட்டு காரை நிப்பாட்டி அவன் புலம்பினான்.
‘சே நேரத்திற்கு அனுப்பி இருக்கலாமோ? இப்ப ஸ்கூட்டி இல்லாம பஸ்ல கஷ்டப்பட்டு போவா. நாம வேணுமின்னா ட்ரோப் பண்ணலாமா? சே சே அவ வர மாட்ட, திமிர் பிடிச்சவ நம்மக்கிட்டயே சண்டைக்கு வந்தாலும் வருவா, என்ன செய்ய? சரி அவ பஸ்ல ஏறினதும் போகலாம் என்று முடிவெடுத்து காரில் இருந்து வெளியே வந்து நின்றவன் பாக்கெட்டில் இருந்து ஒரு சிகரெட் எடுத்து பற்ற வைத்தான். தூரத்தில் இருந்தாலும் அவனது செய்கை லத்திகாவிற்கு நன்றாக தெரிந்தது.
‘அடப்பாவி உனக்கு தம் அடிக்கிற பழக்கம் இருக்கா? பார்த்தா நல்ல பிள்ளை மாதிரி இருக்கு… வேற என்ன என்ன பழக்கம் இருக்கோ கடவுளே காப்பாத்து ‘ என வேண்டிக் கொண்டாள்.
ஆமா இவன் ஏன் இங்க நிக்கறான் வீட்டை பார்த்து போக வேண்டியது தானே. சிடுமூஞ்சி ரயில் வண்டி மாதிரி புகை விடுறத பாரு என அர்ச்சனை செய்து கொண்டிருக்க நினைவு வந்தவளாக தன் வீட்டிற்கு போன் செய்து தான் வர தாமதம் ஆகும் என்று கூறி அணைப்பை துண்டித்தாள்.
அவள் யாருக்கு போன் செய்து இருப்பால் ஒரு வேளை அவள் காதலனுக்கா? அதையும் இருந்து பார்த்து விடலாம் என்ற முடிவுடன் மேலும் சிகரேட் பிடித்தான். பஸ் வர அதில் ஏறி அமர்ந்து திரும்பி பார்க்க பிருத்வியும் காரில் கிளம்புவது தெரிந்தது. ஆக அவன் தனக்காக தன் பாதுகாப்பிற்காக இருந்து கிளம்பி இருக்கின்றான் என உணர்ந்து தானாக மென் புன்னகை படர விட்டாள்.
வீட்டிற்கு வந்த பிறகும் அந்த புன்னகை அப்படியே இருந்தது வழக்கத்துக்கு மாறாக ஏதோ கொறித்து விட்டு தலையணையில் இறுகக் கட்டி கொண்டு உறங்க முயன்றாள்.
பிருத்வியோ சாப்பிட்டு முடித்து அதே போல மெத்தையில் விழுந்தவன் ‘சே இன்னிக்கு அவளை நேரத்துக்கு அனுப்பி இருக்கலாம் பிருத்வி பாவம் அவ என்று யோசித்தவனிடம், அவ எப்ப பார்த்தாலும் சண்டை போடுறா… ராட்சசஷி பொண்டாட்டி மாதிரி என்னையே அடக்கறா? அவளுக்காக பாவம் பார்க்கிறாய் என்று மனசாட்சி சாடியது. அவனையும் மீறி ஒரு புன்னகை இதழில் உதித்தது .
அப்பா சொல்வது போல் ரொம்ப நல்ல பெண். ஆனா சரியான வாயாடி அந்த உதட்டுக்கு ஒரு நாள் பனிஸ்மெண்ட் கொடுக்காம விட மாட்டேன் என தான் போக்கு புரியாமலே புலம்பினான்.
🎊👌👌
Love mode started 🧡🧡🧡🧡
dei ena da yosikura udane enga pothu paru mind
👌👌👌💕💕
💖💖💖💖🌟🌟🌟🌟