💟7
இரு தினம் சொல்லி கொள்வது போல நிகழ்வு ஏற்படவில்லை என்றாலும் சுமுகமாக போனது. மூன்றாவது நாள் பிருத்வியே வம்பை விலைக்கு வாங்கினான். தன் அறைக்கு வந்த லத்திகாவிடம்,
”அன்னைக்கே கேட்கணும் இருந்தேன் . பஸ் வர லேட்டா ஆகுது என்று தெரிந்தும் உன் பாய் பிரென்டுக்கு போன் பண்ணி வர சொல்லி கூட்டிட்டு போய் இருக்கலாமே”
”சார் முதலில் இருந்தே சொல்லிட்டேன் எனக்கு அப்படி யாரும் இல்லை என்று ஏன் கோபம் வருகிற மாதிரி கேள்வி கேட்கறீங்க?”
”நீ இல்லை என்றால் நான் நம்பிடுவேனா?”
” நீங்க நம்பினாலும் நம்பாட்டினாலும் எனக்கு பிரச்சனை இல்லை”
” பொய். அன்னிக்கு ஹாஸ்பிடலில் உன் பாய் ப்ரெண்டோடு தானே வந்த”
என்றதும் லத்திகாவிற்கு சுறுசுறுவென்று சினம் எழுந்தது.
”ஆமா பாய் பிரென்ட் தான்”
”இப்ப தான் இல்லை என்று சொன்ன பிறகு …”
”நீங்க தான் கண்ணுல விளக்கெண்ணெய் விட்டுக்கிட்டு பார்த்து இருப்பீங்களே?”
”இல்லை நான் பார்க்கும் போது நீ மட்டும் தான் தெரிஞ்ச” என்றதும் லத்திகா வயிற்றை பிடித்து கொண்டு விடாமல் சிரித்தாள்.
”இப்ப எதுக்கு இப்படி சிரிக்கிற?”
”அது … அது என் அப்பா நீங்க முகத்தை பார்க்கலயா?”
”இல்லை ஐ அம் சாரி”
”ஏன் வந்ததிலிருந்து எனக்கு பாய் பிரென்ட் பற்றியே கேட்கறீங்க” என்று சமாதானம் ஆகி கேட்க,
நேற்று கூட ரொம்ப அழகா வந்தியா சோ உனக்கு பாய் …” அவன் பேச்சை இடை வெட்டி
” ஸ்டாப் இட் , ஒரு பொண்ணு தன்னை அழகா காட்டிக்க இது தான் காரணம் என்று எப்படி உங்களுக்கு உங்க ஆண் வர்க்கதிற்கு தோணுது . தன்னம்பிக்கை பெருக கூட சாத்திய கூறு இருக்குனு தோணுதா? உங்ககிட்ட போயி பேசி விளக்குறேன் பாருங்க… நீங்க கல்லை மண்ணை ஆராய்ச்சி பண்ண தான் லாய்க்கு” என சட்டென்று வெளியேறிட பிருத்வியோ, ‘இவளுக்கு எப்படி என் ட்ரீம் தெரியும் ஒருவேளை அப்பா சொல்லி இருப்பார் என தோன்றிட அமைதியானான். ஏன் இவளிடம் சதா மல்லுக்கு நிற்கின்றேன். என்பது அவனுக்கே புதிதாகப்பட்டது.
25 வருடம் எந்த பெண்ணிடமும் இப்படி தான் நடந்து கொண்டது இல்லை என்ற உண்மை அவனை தாக்கியது.இவகிட்ட எதுக்கு வம்புக்கு போறேன்… அதானே அவளுக்கு லவ்வர் இருந்தா எனக்கு என்ன இல்லை என்றால் எனக்கு என்ன? எல்லாம் வாயை கொடுத்து நீயே வாங்கி கட்டிக்கற பிருத்வி…. இவள்கிட்ட இனி கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயிண்டெண்ட் பண்ணனும்… என்றே தனக்குள் சொல்லி கொண்டான்.
நாட்களும் வாரங்களும் ஓடின. பிருத்விக்கு ஆராய்ச்சிக்கு போக அப்ளை பற்றிய நினைவே மறந்து போனது. தினமும் அலுவலகம் வந்து ஜம்மென்று லத்திகாவை சைட் அடித்துக் கொண்டு இருந்தான். அவன் மனம் காதலில் விழுந்ததை மட்டும் புரிந்து கொள்ள தெரியாமல் இருந்தான். காதல் என்ன சொல்லி விட்டா வருகிறது.
அன்று ஞாயிறு மாலை நேரம் நான்கு மணி இருக்க பிருத்வி பெட்ரோல் போட வண்டியை நிறுத்த அப்பொழுது தான் பெட்ரோல் போட்டு விட்டு வண்டியை எடுத்த லத்திக்காவை பார்த்தான். அவளை பார்த்து பேசலாமா வேண்டாமா… என யோசிக்க அவன் அவளையே பார்த்த நொடி லத்திகாவை நோக்கி ஒரு ஆடவன் வந்து கொண்டு இருந்தான். அவன் லத்திகாவின் அருகில் வந்ததும் அவளை மேலும் கீழும் பார்த்து பேச துவங்கினான்.
”ஹலோ மேடம் நினைவு இருக்கா ? என்றான் விக்கி.
”ம் நல்லாவே” என்றாள் லத்திகாவும்.
”மற கழண்ட கேஸாச்சே ஞாபகம் இருக்குமோ இல்லயோன்னு நினைச்சேன்.”
”பணத்தாசை பிடிச்ச பேய்களுக்கே நினைவு இருக்கும் போது மற கழண்ட கேஸுக்கு நினைவு இருக்காதா என்ன” என்று திருப்பிக் கொடுத்தாள்.
”ஏய், உனக்கு வாய் ரொம்ப நீளம் அதான் இன்னும் கல்யாணம் ஆகாம இருக்க” என்றான் அவள் கழுத்தில் தாலி இல்லாததை சுட்டிக்காட்டி,
”ஓ ஓஹோ சாருக்கு கல்யாணம் ஆகிடுச்சு போல , கழுத்துல தங்க செயின் , கையில பிரேஸ்லேட் மோதிரம் , பாருடா புது பைக் வேறவா? மாமியார் வீட்ல பிச்சை எடுத்ததா? யார் அந்த அடிமை?” என சிரித்தபடி கலாய்க்க,
”அவ ஒன்னும் உன்னை மாதிரி வாயாடி இல்லை.”
”பின்ன நீ பேசாத மக்கா பார்த்து தானே கட்டிக்கிட்டு இருப்ப” என விடாது பதிலடி கொடுக்க,
இவளிடம் போய் வாயை கொடுத்து வம்பை வாங்கியது தப்பு தான் என லேட்டாக உணர்ந்த விக்கி பைக்கை கிளப்பி கொண்டு விரைந்திட, லத்திகா சிரித்தபடி தனது ஸ்கூட்டி கிளப்பினாள்.
அவர்கள் பேச்சு காதில் விழாத தொலைவு பிருத்வி இருக்க, வீடியோ மட்டும் பார்க்க நேர்ந்தது.
நானே இவைகூட தூரம் இருக்க நினைச்சேன் ஆனா முடியலை… இப்போ இவன் யாரு… இதை கேட்டாலும் கோவிச்சுப்பா.. ஆமா ஆபிஸ்ல ஒர்க் பண்ற பொண்ணு அவ யார்கூட பேசினா எனக்கு என்ன? சே எனக்கு இப்படி சும்மா இருக்கவும் முடியலை… ஆஹ் இவளுக்கும் எனக்கும் வேர்ல்ட் வார்ல கொஞ்சம் பேலன்ஸ் இருக்குமோ… எப்ப பாரு எனக்கும் அவளுக்கும் சண்டை வருது… அவகிட்ட கொஞ்சம் இனிமையா பேச சந்தர்ப்பமே வர மாட்டேங்குது…
அடுத்த நாளே கேட்க எண்ணினான் ஆனால் கேட்க முடியவில்லை. ‘ஆமாம் காதலன்’ என்று கூறிடுவாளோ என அவனுக்கு தெரியாத பதிலின் அச்சத்தால் தத்தளித்தான். எதற்காக தனக்கு அப்பதிலில் அச்சம் வருகின்றது என்றும் அவன் உணரவில்லை…
தொடரும்.
Bczzzz unnaku love vanthuruchu…. Athaan vera yaravathu pesunaaa payam kovam varuthu😂😂😜🧡🧡🧡
Interesting. Waiting for next epi
yen na unakulla love start agiduchi athan ava kitta yar pesinalum yar nu yosikura