அத்தியாயம்-11
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
அதிகாலை விடியல் மலர, ஜீவிதா தலைவாரி நெற்றி வகிட்டில் குங்குமம் இடுவதை கண்டு யுகேந்திரன் எழுந்தான்.
இத்தனை மாதம் காலை நேரம் எழும் பொழுது எல்லாம். பிடிக்காத கூடலில் ஜீவிதாவை வசப்படுத்த முயல்கின்றாய், என்று அவன் மனசாட்சியே அவனை காயப்படுத்தும்.
நேற்று நடந்த கூடலில் , யுகேந்திரன் மனமோ இத்தனை நாள் காயத்திற்கு மருந்தாக மாறியது.
இல்லையா பின்னே ஜீவிதா வார்த்தையால் வந்து பேசி உரைத்தது, உன் கூடலில் என்பங்கும் உள்ளதென்ற உண்மை அல்லவா?
தனது ஆசைக்கு அவளுமே இணங்கியதாக வந்த ஆனந்தம்.
அவளையே பார்வையிடவும், கண்ணுக்கு கண்மை வைத்தவள் திரும்பினாள்.
“பேக்டரி போகலையா? மணி இப்பவே ஏழரை ஆகப்போகுது” என்றாள். இன்று அவளுக்கு ஏழரை ஆரம்பிக்க போவதை அறியாமல்…
“போகணும்…. நீயும் இப்ப தான் எந்திரிச்சியா?” என்றான்.
“ம்ம்ம்” என்று மென்மையான குரல் வெளிவந்தது.
ஜீவிதா தொடுத்து வைத்த மல்லிப்பூவை தலைக்கு வைத்து, டீயை கொண்டு வர சென்றாள்.
அழகான தேவதை கண்ணெதிர நடமாட, யுகேந்திரன் சந்தோஷம் அடைய, கூடம் வந்து சாப்பிட்டு பேக்டரி கிளம்ப தயாரானாள்.
ஜீவிதா அத்தையோடு மதியம் வரை பேசிவிட்டு அறைக்கு வந்தாள்.
சற்று நேரம் தான் செய்ய போகும் செயலுக்கு கூடுதலாக யோசித்தாள். இரண்டு மணி நேரத்திற்கு பிறகு போனை எடுத்து தன் உடன்பிறப்பான வினிதாவிற்கு அழைத்தாள்.
“அ..அக்கா” என்றதும், “சின்ன குட்டி.. ஏய்… எப்படிடி இருக்க?” என்று வினிதா குரல் உயிர்ப்புடன் வந்தது.
“நான் நல்லா இருக்கேன் அக்கா. நீ எப்படி இருக்க?” என்று விசாரித்தாள்.
வினிதா இங்குள்ள நிலைமையை விவரிக்க முடியுமா?
ஆந்திராவில் ரேனிகுண்டாவில் வேலை பார்த்த சந்திரனுக்கு திருமணமாகி ஒரு மாதத்தில் திடீரென வேலையை இழந்துவிட்டான். அப்படியும் சில நாட்கள் கையிலிருந்த இருப்பை போட்டு, புதிதாக திருமணமான ஜோரில், புது கம்பெனி அவனாக திறந்தான். ஆனால் அதில் பல ரூல்ஸ் அண்ட் ரெகுலேசன் என்று அந்த ஊரின் விலாசம் கேட்டு நிற்க, நண்பனை பார்ட்னராக முடிவுக்கட்டி அவனின் விலாசமும், அவனும் துணை முதலாளி என்று பெயரிட்டு துவங்கியது. பத்திரம் எல்லாம் நண்பன் பெயருக்கு மாறியதும் நண்பன் எதிரியாகி வெளியே துரத்திவிட்டான்.
அங்கே மிச்ச மீதி இருந்த பணத்தில் ஏதோ வாழ்ந்தவர்கள், சந்திரனுக்கு அப்பா மட்டும் என்பாதல்.. அவரோடு சொந்த வீட்டில் வசிக்க, தற்போது சந்திரன் ஊருக்கே வந்துவிட்டான்.
சொந்த வீட்டில் இருந்தாலாவது வாடகை மிச்சம். ஏதோ திருப்பூர் என்பதால் நிறைய தொழிற்சாலை இருக்க குறைந்த ஊதியத்தில் வேலைக்கு சென்று வருகின்றான். திருமணம் முடித்து இந்த ஆறு மாதத்தில், இது தான் இவர்கள் வாழ்வில் நடந்தது.
வினிதா தந்தை கதிரவனுக்கு பெரிய மகளின் வாழ்வில் நடந்ததை அறிய, முற்றிலும் வெறுக்க ஆரம்பித்தார். அன்னை ரேகாவோ கணவருக்கு பயந்து தொலைப்பேசியில் முதலில் பேச மறுத்தாலும், மகளை வெறுத்தாலும் முடிவில் நலம் விசாரித்து கொண்டார். என்ன இருந்தாலும் பெத்த மனம், கோவிலில் வழி மறைத்து வந்து, காலில் விழுந்து கல்நெஞ்சை கரைத்து விட்டாள்.
அதனால் ஜீவிதா அன்னையோடு பேசும் போது ‘அக்கா இங்க தான் வந்துட்டாடி’ என்ற வார்த்தையில் இன்று அக்காவிடம் போனில் பேச முடிவெடுத்தாள்.
“நான் நல்லா இருக்கேன். சின்ன குட்டி… யுகேந்திரன் மச்சான் உன்னை நல்லா பார்த்துக்கறாரா? அம்மா சொன்னாங்க கல்யாணமான புதுசுல என்னால மச்சான் உன்னை பழிவாங்க தான் கல்யாணம் செய்ததா.
நீ நிஜமா நல்லாயிருக்கியா? என்னால உனக்கு எந்த கஷ்டமும் இல்லையே” என்று கேட்டாள்.
அந்த கேள்வியே மடத்தனமானது. நிச்சயம் பத்திரிக்கை வரை அடிக்க சென்று நின்றதால் ஒர் ஆண்மகனுக்கு கோபம் வந்து அதற்கு கிடைத்த மனுஷியை பழிவாங்க தான் செய்வார்.
“நான் நிஜமாவே நல்லாயிருக்கேன். அவர் நல்லா பார்த்துக்கறார். அதை விட அத்தை மாமா நல்லா பார்த்துக்கறாங்க.
நீ ஏன் லவ் பண்ணியதை அப்பாவிடம் முதல்லயே சொல்லலை. நீ சொல்லிருந்தா பாதி பிரச்சனை குறைந்திருக்கும். அப்பா இப்பவும் உன் மேல கோபமா இருக்கார் அக்கா தெரியுமா?” என்று கேட்டாள்.
”தப்பு தான் ஜீவிதா. நான் தப்பா யோசிச்சிட்டேன்.” என்று பேச, பிறகு திருமண வாழ்க்கையை கேட்டாள்.
“நான் சொல்லறது இருக்கட்டும். நீ சொல்லு. மச்சான் உன்னை நல்லா பார்த்துக்கறதா சொல்லுற. ஆனா கல்யாணம் செய்யறப்ப என்னால் தானே கஷ்டம். அப்ப என்னை திட்டினியா?” என்று கேட்டாள் வினிதா.
“அசிங்க அசிங்கமா மனசுக்குள்ள உன்னை திட்டினேன். ஏதோ ஆந்திராவுல இருந்தியாம் இங்க திரும்ப வந்துட்டதா அம்மா சொல்லுச்சு. நேர்ல வந்து திட்டறேன்.” என்று சிரித்தாள்.
அதன் பின் ஒன்றரை மணி நேரம் கடப்பது தெரியாமல் பேசினாள் ஜீவிதா.
சிரித்து கொண்டு போனை அணைத்து திரும்ப, இரும்பில் மோதியது போல உணர்வு. யுகேந்திரன் மதியம் உணவருந்த வந்துவிட்டிருந்தான்.
”யார் கூட பேசிட்டு இருந்த?” என்றான்.
“அ..அக்..அக்கா” என்று கூறினாள்.
அவள் அம்மா அப்பாவிடம் தனியாக இருக்கும் போது பேசுவதை அறிந்தவன். அதனால் இப்பொழுதும் அப்படி தான் அத்தை ரேகாவிடம் பேசியிருப்பதாக எண்ணினான்.
‘அக்கா.’ என்றதும் லேசாக கோபம் பெருகியது.
“என்னை கல்யாணம் பண்ணிக்கறதா சொல்லி தலையாட்டிட்டு, உங்க வீட்டுக்கு அவமானத்தை தந்து ஓடினவ” என்று கேட்க, “இல்லை… என் கூடப்பிறந்து வளர்ந்து, ஒன்னா விளையாடி வாழ்ந்துட்டு, சூழ்நிலையால காதலிச்சி போயிட்ட என் அக்கா கூட பேசினேன்” என்று திருத்தினாள்.
“சீ அசிங்கமாயில்லை. அவளுக்கு போய் வக்காலத்து வாங்கற.” என்று கத்தினான்.
“இங்க பாருங்க… கல்யாணம் யாருக்கு யாருன்னு முடிவாகி முடிஞ்சு போனது. நீங்க நான் வாழ்ந்துட்டு இருக்கறப்ப, அவ யாரை காதலிச்சா என்ன?
நான் வக்காலத்து வாங்கலை. அவ என் அக்கா.
இன்னிக்கு பேசி சிரிச்சு சண்டையை முடிச்சிட்டு உறவுகள் ஒன்று சேரணும். அதை விட்டு பகையா மாத்தி இருபது வருஷம் கழிச்சு, ஏதாவது காரணத்துக்காக பேசணுமா?
இத்தனை வருஷம் பக்கத்துல பக்கத்து ஊர்ல சொந்தம் இருந்து என்ன புரோஜனம். உங்களை திருவிழாவுல தான் முதல்ல பார்த்தேன்.
தாத்தா மாமா எங்கம்மாவை எப்பவோ மன்னிச்சு ஏத்துக்கிட்டிருந்தா எத்தனை லாபம். தாத்தா அறிவுக்கெட்டத்தனமா இருந்துட்டு, இப்பவும் பேசாம இருக்கணுமா?” என்று கூறியதும் சுருண்டு விழுந்தாள்.
“யாரை பார்த்து அறிவுக்கெட்டதனமா பேசற, தாத்தாவை பத்தி என்னடி தெரியும்? பாட்டி தாத்தா கூட வளர்ந்து இருக்கியா? அவங்க பாசம் எப்படிப்பட்டதுனு நீ அனுபவிச்சு இருக்கியா? அத்தை காதலிச்சவன் முக்கியம் என்று மாமா பின்னாடி போயிட்டாங்க. வழி வழியா ஊர்ல பெரிய மனுஷனா கெத்தா இருந்தவரிடம், ரோட்ல போற வர்றவன் கூட என்ன பெரியவரே, உன் பொண்ணு ஓடி போனாலா? ஒழுங்கா வளர்க்கலையா காதலிச்சு கர்ப்பம் ஆனாளா? அதுயிது கேள்வி கேட்டாங்க.
என்ன தான் பொண்ணை வீட்ல சேர்க்காம போனாலும் உள்ளுக்குள் வலி இருக்கும் தெரியுமா?
இன்னிக்கு உங்க அப்பா பழகின இடத்துலயே கூனிகுறுகி போறார் வர்றார். உங்க வீட்ல போய் கேட்டு பாரு. எல்லாம் உங்க அக்கா ஓடிப்போனதால் தான். இதே கஷ்டம் எங்க தாத்தா அப்பா அனுபவிச்சியிருக்கார்.
உங்கப்பாவாது ஊர்ல கொஞ்ச பேருக்கு தெரிந்தவர்? நம்ம தாத்தா வழி வழியா கோவில்ல நல்லது பொல்லதுக்கு நின்றவரு.
ஊர்ல ஒரு தெரு விடாம துக்கம் விசாரிச்சு அவரை வீட்லயே முடக்கியது அத்தையோட காதல்.
காதல் கல்யாணம்னா சம்மந்தப்பட்ட இரண்டு பேருக்கு சந்தோஷமா தான் இருக்கும். ஊரை எதிர்த்து, உறவுகளை எதிர்த்து கல்யாணமாகி, EMI மூலமா வீடு கார் வாங்கி வாழ்ந்து காட்டும் போது, நாங்களும் ஒரு புரட்சி திருமணத்துக்கு முன்னோடின்னு பெருமையா காட்டிக்கலாம்.
ஆனா பெத்தவங்களுக்கு அப்படியா?
சொந்த மண்ணுல, நம்மளை கண்டா பேசவே யோசிக்கிற மனுஷங்க, உங்க வீட்டு பொண்ணு இன்னார் வீட்டு பையனோட ஓடிப்போனாளாமே உண்மையா?னு கேள்வி மேல கேள்வி கேட்டு சாவடிப்பாங்க. உயிரோட செத்து போறது எப்படின்னு அப்ப தெரியும்.
அஞ்சு ஆறு வருஷம் வீட்டை விட்டு வெளியே போகாம, ஊர் தலைவரா இருந்தவர், எல்லாத்திலும் ஒதுங்கி நின்று கவலையோடு செத்து போனார்.
எங்கப்பா கூடியிருந்து தாத்தாவோட கஷ்டத்தை பார்த்தவர். எனக்கு தாத்தா கஷ்டத்தோடா நடமாடியாது தெரியும். உங்கப்பாவிடம் போய் கேட்டுப்பாரு. அந்த வலி எப்படிப்பட்டதுன்னு. வந்துட்டா…
ஆறு மாசம் கூட படுத்து எழுந்து வாழ்ந்து கிழிச்சு.” என்று கூடத்திற்கு சென்றான். அவனுக்கு தன் தாத்தாவை திட்டியதில் ஏககடுப்பு.
கீழே விழுந்த ஜீவிதாவோ, அடிவயிறு சுள்ளென்று வலியை தர, யுகேந்திரன் பேசிய பேச்சை எல்லாம் கேட்டு, லேசாக மயக்கம் வரவும் ‘ஏ..ஏங்..ஏங்க” என்று மயங்கி சரிந்தாள். அவளை அவன் கண்டால் தானே? பேசிவிட்டு வெளியேறினான்.
யுகேந்திரனோ தட்டில் சாப்பாட்டை அள்ளி போட்டு விரசாக சாப்பிட்டு கிளம்பினான்.
‘அக்காவாம் அக்கா. இங்க ஒருத்தனுக்கு களங்கம் நேருமேனு அக்கறை இல்லை. பெத்த தாய் தகப்பனை நினைச்சி பார்க்கலை. அந்த பொண்ணால இவ வாழ்க்கை எப்படி அமைஞ்சுதுன்னு அறிவில்லை.
இவ வாயால இந்த வாழ்க்கை சாபம்னு சொன்னா. இப்ப அவளுக்கு சப்போர்ட் பண்ணுறாளாம் சப்போர்ட்.’ என்று கடுகடுப்பாய் பேக்டரியில் திரிந்தான்.
அங்கு இருந்த நண்பன் ஜெகனோ, “என்னடா மதியம் சாப்பிட போனா இரண்டு மணி வரை இங்க வரமாட்ட. இன்னிக்கு மேட்னி-ஷோ ஓடலையா?” என்று நண்பனை கேலி செய்தான்.
“டேய்… மூடறியா. நானே கடுப்புல இருக்கேன்.” என்று நடந்தவையை கூறினான்.
“இதுல என்னடா தப்பு. அவ அக்கா கூட பேசறா. உனக்கு பிடிக்கலையா நீ பேசாத.
தங்கச்சி சொல்லற மாதிரி காலம் கடந்து பேசி என்னவாக போகுது சொல்லு. இதே உங்கப்பா பேசி உங்க வீட்டுக்கும், அந்த வீட்டுக்கும் நல்ல பழக்கமிருந்து, அந்த பொண்ணு வினிதா, மச்சான் நான் ஒருத்தனை விரும்பறேன். அப்பா அம்மா என்னை போய் உங்களுக்கு கட்டி வைக்க பிளான் போடறாங்க. அவங்களிடம் சொல்லி என்னை காதலிச்சவனோட சேர்த்து வை. உங்களுக்கு பிடிச்சா ஜீவிதாவை கட்டிக்கோங்க பேசியிருக்கும்.” என்று கூறவும் யுகேந்திரன் மௌனமாய் கேட்டான்.
ஜெகனே தொடர்ந்தான் ”டேய்… நீ பேசலைன்னா விடு. அந்த பொண்ணு வினிதா கூட தங்கச்சி ஜீவிதா பேசினா பேசட்டும்.
உனக்கு என்ன அக்கா வினிதாவையா பிடிச்சிருந்தது? தங்கச்சிய தானே பிடிச்சது?! கல்யாண பத்திரிக்கை அடிக்கிறப்ப கூட என்னிடம் இந்த பிள்ளை பத்தி தானே தொனத்தொனனு கேட்டுட்டு இருந்த. அப்படியிருக்க யார் எப்படி போனா உனக்கென்ன டா? கட்டினவளை அதுவும் பிடிச்ச பொண்ணை கல்யாணமாகி ஆறு மாசத்துல இரண்டு முறை கை நீட்டி அடிச்சிருக்க? மனுஷனா நீ” என்று திட்டினான்.
“அது உரிமையில. என் பொண்டாட்டி நான் அடிப்பேன். கடிப்பேன்.” என்றவன் உதடு புன்னகையில் விரிந்தது.
“ஆமா டா… நீ இப்படியே பேசு. அங்க அந்த பொண்ணு ஜீவிதா இவன் வேண்டாம் சரியான ஆன்டிஹீரோவா இருக்கான்னு தலைதெறிக்க ஓடப்போறா” என்று ஜெகன் கிண்டல் செய்ய, யுகேந்திரன் போன் ஒலித்தது.
“யாருடா?” என்று ஜெகன் கேட்க, ”அம்மா” என்றவன் போனை அட்டன் செய்து காதில் வைத்தான்.
“சொல்லுங்கம்மா” என்றான் யுகேந்திரன்.
அடுத்த சில மணி நேரத்தில் மறுபக்கம் கூறிய விஷயத்தில், ”எந்த ஹாஸ்பிடல்… நான் ஹாஸ்பிடலுக்கு வர்றேன்” என்று பதறினான்.
”என்னாச்சு டா?” என்றான் ஜெகன்.
“அம்மா உடனடியா தாமரை ஹாஸ்பிடலுக்கு வர சொல்லறாங்க. அவ மயங்கி விழுந்துயிருக்கா.” என்று நொடியும் தாமதமின்றி பைக் சாவியை எடுத்தான்.
“நான் வரவாடா.” என்று கேட்டதற்கு வேண்டாமென மறுத்து பறந்திருந்தான் யுகேந்திரன்.
-தொடரும்
-பிரவீணா தங்கராஜ்.

ayyo!!!
What happened to jeevitha? Sema.a twist. Yuge u are too late to understand ur wife. Intresting sis.
Kaatumirandi payaley….. Neethaan da thirurru payan… Avalathaa unnaku puduchu erukkunu aolli tholaiama yethuku avala ivlooo tourcher pannanum… Yeruma
Yenda avala puduchi kalyanam pannu yen intha vetti vesham.. avalukku eppo yenna aacho
Po PO oru shocking aana news solla poranga paru epo pathalum ena palakam athu kai neeturathu . ithula unaku jeevi tha pidichi iruka munnave aana ava akka odi ponatha vachi nee avala kasta paduthite vera iruka
உயிரில் உறைந்தவள் நீயடி…!
எழுத்தாளர்: ப்ரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 11)
ஐ திங்க்… அபார்ட் ஆகியிருக்கும் அப்படித்தானே..? ஜெகன் சொன்ன மாதிரி இவன் ஆன்டி ஹீரோவே தான், ஸோ… கொஞ்ச நாளைக்கு இவன் சகவாசமே வேண்டாம்ன்னு ஜீவிதா ஆட்டம் காட்டினாத்தான்..
இவனுக்கு புத்தி வரும்ன்னு நினைக்கிறேன்… என்ன சொல்றிங்க.. டீலா,
நோ டீலா ?
😀😀😀
CRVS (or( CRVS 2797
உயிரில் உறைந்தவள் நீயடி…!
எழுத்தாளர்: ப்ரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 11)
ஐ திங்க்… அபார்ட் ஆகியிருக்கும் அப்படித்தானே..? ஜெகன் சொன்ன மாதிரி இவன் ஆன்டி ஹீரோவே தான், ஸோ… கொஞ்ச நாளைக்கு இவன் சகவாசமே வேண்டாம்ன்னு ஜீவிதா ஆட்டம் காட்டினாத்தான்..
இவனுக்கு புத்தி வரும்ன்னு நினைக்கிறேன்… என்ன சொல்றிங்க.. டீலா,
நோ டீலா ?
😀😀😀
CRVS (or) CRVS 2797