அத்தியாயம்-20
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
காரை சடன் பிரேக்கிட்டு நிறுத்தினான். (நேத்து ஒரு ரீடர் சடன் பிரேக் போடலையானு கேட்டிங்களே… இந்தா போட்டுட்டான்.)🤩😝
ஜீவிதா குலுங்கி முடித்து முகம் அதிரவும், வண்டியை இப்படிச் சட்டென நிறுத்திய மடத்தனத்தை உணர்ந்தான்.
சற்று மௌனம் ஆக்கிரமிக்க, “நான் சொன்னது காதுல வாங்கினிங்களா?” என்று கேட்டாள் ஜீவிதா.
“இல்லை… நாய் குறுக்கால வந்துச்சு பிரேக் போட்டேன். அதனால காதுல விழலை. மறுபடியும் சொல்லு” என்று கூறினான். ‘நான் லைவ் யூ யுகி’னு சொன்னதைக் கேட்டு பிரேக் அடிச்சிட்டு நாய் குறுக்கப் போச்சுன்னு சமாளிக்கிறார். வேண்டுமின்னே என் வாயல சொல்லி கேட்க வைக்கறார்’ என்று அறிந்தாள்.
“ஐ லவ் யூனு சொன்னேன்.” என்றாள் அழுத்தமாய்.
“வேற?” என்று ரோட்டை பார்த்து யுகேந்திரன் கேட்க, “அதான் சொன்னேன்.” என்றதும் நெஞ்சு விடைத்து மூச்சை உள்ளிழுத்து விட்டான். ‘யுகி’ன்னு அழகா சொன்னா. இப்ப அதைக் கட் பண்ணிட்டா. இவளை…’ என்று கடுகடுத்தான்.
தலையைத் தலையைச் சொரிந்த ஜீவிதா “இன்னும் கோபமா?” என்று கேட்டாள்.
“நீ முழுசா மறுக்கா சொல்லு. அப்ப கோபம் குறையும்” என்று கூறினான்.
“மறுக்கா… என்ன சொல்லணும்… நீங்க அடிச்சு தள்ளிவிட்டதும் நான் மயங்கிட்டேன். அத்தை வந்து …” என்றவளிடம், “ஏய்… மறுக்கா சொல்லுனா. முதல்லயிருந்து சொல்ல சொல்லலை. கடைசியாகச் சொன்னதை இன்னொரு முறை சொல்லிட்டேயிரு.” என்றான்.
அவள் நகம் கடித்து யோசித்துக் கடைசியா… ‘ஐ லவ் யூ யுகி’ என்றதில் வெட்கம் கொண்டாள்.
“ஐ லவ் யூ யுகி” என்று அவன் கை புஜத்தில் சாய்ந்தாள். அவனுக்குப் பிடிக்கும் என்றபட்சத்தில் கணவன் பெயரை செல்லச் சுருக்கமாய்த் தனிமையில் அழைக்க கசக்குமா?
“சொல்லிட்டேயிரு அதான் தண்டனை” என்று அவனும் மையலாய் கூறி வண்டியை இயக்கினான்.
“ஐ லவ் யூ யுகி
ஐ லவ் யூ யுகி
ஐ லவ் யூ யுகி…..”
என்று சொல்லிக்கொண்டே வர, கொஞ்சம் கொஞ்சமாய் அவன் உதடு வளைந்து புன்னகை பூத்தது.
அவள் மூச்சு வாங்கவும் “போதும்” என்றவன் தண்ணீர் பாட்டிலை நீட்டினான்.
அதைக் குடித்து முடித்து, “நமக்குள்ள சண்டை காணாம போச்சு தானே?” என்று உறுதிப்படுத்திக் கொள்ளக் கேட்டாள்.
“இப்ப வரை போட்ட சண்டைக்கு வரவு வச்சி, பைசல் பண்ணியாச்சு. இனி சண்டை வந்தா அந்தக் கணக்குக்கு மட்டும் தண்டனையைப் பார்த்துக்கறேன்” என்று கூறி ‘நந்தவனம்’ வீட்டுக்குள் காரை நுழைத்தான்.
ஏற்கனவே வீட்டில் உமாதேவி கணவரிடம் மருமகளுக்கு இரண்டு குழந்தைகள் பிறக்க போவதை கூறியிருந்தார். அதனால் தான் உமாதேவி அதிகமாக மெனக்கெட்டு கவனித்ததில் அவர் தலையீடவில்லை.
எப்படியும் வாரிசு சந்தோஷமாய் வீட்டை நிறைத்தால் போதுமென்ற ஆனந்தம்.
மருமகளும் மகனும் மருத்துவமனை செக்கப் முடித்து வரவும் உமாதேவி வாசலுக்கு வந்தார்.
யுகேந்திரன் ஜீவிதா புன்னகை முகம் நல்லபடியாக இரட்டை குழந்தைகளின் வரவை கூறிவிட்டதை உணர்த்தியது.
அன்னையைப் பார்த்தும் “என்னடா சொன்னாங்க ஆஸ்பிடல்ல?” என்று வந்து நின்றார்.
உமாதேவிக்கு ஏற்ற நக்கல் பிடித்த பையனாக, “ஆஹ்.. சுரக்காய்க்கு உப்புப் பத்தலையாம். உங்க மருமகளுக்கு ஹீமோகுளோபின் இல்லையாம். இரண்டு குழந்தைகளை மறைச்சி வைச்சிருக்கா அதுக்கு ஏத்த மாதிரி சாப்பிடணும். காக்காவுக்குச் சோறு வச்சது மாதிரி சாப்பிட்டா உள்ளயிருக்கற என் இரட்டை குழந்தை எடை குறைவாயிருக்கு.” என்று கத்திவிட்டுக் கிளம்பினான்.
“இவன் ஏன் என்னிடம் கத்தறான்.” என்று உமாதேவி கேட்க, “நீங்களும் மறைச்சிட்டிங்கள்ல அத்தை.” என்று கூறினாள்.
”ம்கூம்” என்று நொடித்துக் கொண்டு, இனி மெத்தையிலருந்து இறங்கின அவ்ளோ தான். ஒழுங்கா சாப்பிடு.” என்று திட்டி அகன்றார்.
யுகேந்திரன் இங்கிருந்து கிளம்பி பேக்டரி வந்தான். தையல் இயந்திரத்தின் சப்தம் கேட்க, ஜெகனை தேடினான்.
“ஏம்மா.. பேக்கிங் யாரு? பத்துப் பீஸ் வைக்கிற இடத்துல பதினொன்று வச்சிருக்கிங்க பாருங்க” என்று எடுத்து கூற “அச்சோ’ என்று ஒழுங்காக மாற்றினார்கள்.
“ஜெகன்.” என்று கூப்பிட “வர்றேன் டா” என்று கூறிவிட்டு, “பெறாக்கு பார்க்காம வேலையைக் கவனிங்க” என்று பணியாட்களை அதட்டி விட்டு நண்பனை காண சென்றான்.
“என்ன டா செக்கப்பு போயிட்டு வர்றதா சொன்ன. இன்னிக்கு திரும்ப வந்துட்ட?” என்று நடந்து வந்தான் ஜெகன்.
“ஜீவிதா கன்சீவாயிருக்கா டா.” என்றான் யுகேந்திரன்.
“ஏன்டா புத்தி கித்தி பேதலிச்சிடுச்சா? அதுக்குத் தானே செக்கப் போன?” என்று மொழிந்தான்.
”டேய்… அவ டபுள் டமாக்கா ஆஃபர்ல இருக்கா. ஒன்னு இல்லை இரண்டு. அவ வயிற்றுல இரண்டு குழந்தைகள்.” என்று ஆனந்தத்தின் வெளிப்பாட்டில் அதீத மகிழ்ச்சியில் கூறினான்.
“டேய் மச்சி.. என்னடா சொல்லற?” என்று கேட்டான்.
“அந்தச் சில்வண்டு நான் மூன்று நாள் குத்தி காட்டி பேசி அடிச்சதுல, அவளுக்குள் இரண்டு குழந்தைகள் வளர்றதை மறைச்சிருக்கா” என்று டாக்டர் கூறியதை தான் கவனிக்காமல் நடக்க, அதற்கேற்றது போல அம்மாவும் பொண்டாட்டியும் ஆட்டம் காட்டிய கதையை விவரித்தான்.
“மேட்னிஷோ நைட்-ஷோ நடத்தி இரண்டு குழந்தைகளா?. டேய் நீ மார்னிங் ஷோ நடந்தலை இல்லை ட்ரிப்பிள் ஹிட் அடிச்சிருப்ப.” என்று எப்பொழுதும் போலக் கேலி செய்தான்.
நண்பன் பேச்சில் முறைப்பது போலக் காட்டிக் கொண்டாலும் ரசித்தான் யுகேந்திரன். ஜெகனோ சிரிப்பை நிறுத்தி, ‘டாக்டர் சொன்னதை முதல்லயே ஒழுங்கா கேட்டுத் தொலைக்கக் கூடாது. மச்சான் இனி ரொம்பக் கவனமா பார்த்துக்கோ.
அந்தப் பொண்ணு உன்னை உயிரா காதலிக்குது. அது அந்தப் பொண்ணு முகத்துல பிரகாசமா தெரியுது.” என்று சீரியஸாக அறிவுரையை வழங்கினான்.
“ஐ லவ் யூ யுகின்னு முந்நூறு தடவை சொன்னா. இல்லை சொல்ல வச்சேன்.” என்று கெத்துக் காட்டினான் யுகேந்திரன்.
“வேண்டாவெறுப்பா கர்ப்பிணி பிள்ளையை முந்நூறு தடவை ஐ லவ் யூ யுகி’னு சொல்ல வச்சியிருக்க? நீ இன்னமும் மாறலையாடா அதே கிராமத்து ஆன்டி ஹீரோடா நீ.” என்று ஜெகன் வாறினான்.
“அடச்சீ… அவளா தான் ஐ லவ் யூ யுகினு சொன்னா. அது கேட்டு மனசு முழுக்கப் பட்டாம்பூச்சி பறக்கவும், நான் அவளை விடாம சொல்ல வச்சி ரசிச்சு கேட்டேன்.” என்று இன்பக் கடலில் மிதந்தவனாய்க் கூறினான் யுகேந்திரன்.
“ஆக மொத்தம் அந்தப் பிள்ளையைக் காதலிக்க வச்சிட்ட. வாழ்த்துகள் ராசா.” என்று ஜெகன் கூற, நண்பர்கள் இருவரும் இணைந்து நகைத்தனர்.
யுகேந்திரனிடம் தெரிவித்த பின் தான் தன் பெற்றவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று இரட்டை குழந்தைகள் தரித்திருப்பதையே உரைத்தாள்.
ரேகா அதற்குத் திட்ட ஆரம்பித்தார்.
“எதுஎதுல விளையாடறதுன்னு இல்லை ஜீவிதா. மாப்பிள்ளை திரும்பக் கோபப்பட்டார் அடிச்சார்னு கண்ணைக் கசக்கிட்டு வராத. உன்னைச் சொல்ல கூடாது எல்லாம் எங்கண்ணி கொடுக்கற இடம்.” என்று பொரிந்தார்.
‘அம்மா அப்பாவிடம் சொல்லிடு.” என்று துண்டித்து விட்டாள்.
கதிரவனிடம் உரைத்திருக்க, “அட ஜாக்கிரதையா இருக்கச் சொல்லு. இப்படி விளையாடி மாப்பிள்ளை கோபத்தைக் கிளற வேண்டாம்.” என்று ஒருபக்கம் உரைத்தார்.
மாலை நெருங்க மாடத்தில் விளக்கேற்றினாள் ஜீவிதா.
அதைக் காண சரியாக வந்து நின்றான் யுகேந்திரன்.
அடிக்கடி சந்தேகம் இருந்தது. வயிறு ஐந்தாம் மாசமே சற்றுப் பெரிதாக இருக்கின்றதே என்று. அதற்கு விடை கிடைத்த வெற்றி மிதப்பில் மீசையை முறுக்கி வந்தான்.
மனதில் நிறைந்தவனைக் கண்டு உவகை மலர, அன்னநடையிட்டு அருகே வந்தாள்.
தட்சிணாமூர்த்தியோ, “ஏன்டா நம்ம வீட்டு தோட்டத்துல பூத்த மல்லிப்பூவே தினமும் இரண்டு முழத்துக்கு இருக்கும். நீ என்ன வெளியே கடையில வாங்கியிருக்க” என்று பேப்பர் படித்ததைப் பார்த்தபடி கேட்டார்.
“காலையில் வந்த பேப்பர் இன்னமும் படிக்காம வேடிக்கை பார்க்கிங்க” என்று உமாதேவி கணவரை அடக்கினார். மகன் யுகேந்திரனே மனைவிக்கு இப்பொழுது தான் பூ வாங்கி வந்து நீட்டுகின்றான். இதில் கேலி பேசுவதா?!
யுகேந்திரன் தந்தைக்குத் தாய் கொடுத்த பதிலில், சிரித்து நழுவி தன்னவளை அறைக்குள் தள்ளிக் கொண்டு சென்றான்.
வாழையிலையில் மல்லிப்பூ வைத்து, உருட்டி நூலால் முடிச்சிட்டதை அவிழ்த்து அவன் கையால் ஜீவிதா தலையில் சூடினான்.
“மல்லிப்பூ வாசம் இருந்தா உங்களைக் கட்டி இழுக்கும்னு சொல்விங்க. இன்னிக்கு வச்சிட்டு நைட்டு அணத்திட்டு இருக்கக் கூடாது. டாக்டர் சொன்னது எல்லாம் நினைவிருக்குல்ல” என்று கேட்டாள்.
“இருக்கு இருக்கு. அடுத்து ஏழாம் மாசம் வளைகாப்பு வச்சாலும் உங்க வீட்டுக்கு அனுப்ப மாட்டேன். எட்டாவது மாசம் ஆரம்பிக்கவும் ஹாஸ்பிடல்ல சேர்த்திடுவேன். ஒன்பதாம் மாசம் டெலிவெரி ஆனதும் என் பொண்ணைத் தூக்கிப்பேன்.” என்றவன் பேச்சை இடைவெட்டினாள்.
“பையன்” என்றாள்.
“பொண்ணு.” என்றான்.
“இல்லை பையன்” என்றாள்.
“இந்த யுகேந்திரனுக்கு அழகான தேவதை பிறக்கணும்” என்றான் அழுத்தமாக.
கணவனின் பிடிவாத குணம் அறியாமலா?
அதான் இரண்டு குழந்தைகள் வரப்போகுதே அதுல ஒரு பொண்ணு ஒரு பையன் வரலாம். சும்மா எதுக்கெடுத்தாலும் சண்டை விவாதம் பண்ணாதிங்க” என்று கூற, “பண்ணினா என்னடி பண்ணுவ?” என்று கேட்டான்.
“அப்பறம் முத்தம் வச்சி கொல்லுவேன்” என்று கூற எங்க சாம்பிளுக்கு இரண்டு கொடு” என்று கேட்க, தன் இரு பாதத்தை எக்கி யுகேந்திரன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
“இந்த முத்தம் என்னை ஒன்னும் பண்ணாது. இப்ப நான் ரிட்டர்ன் தர்றேன் பாரு” என்று குனிந்து அவள் செல்விதழை முற்றுகையிட்டான் யுகேந்திரன்.
விரும்பிய திருமணமோ, வேண்டாத திருமணமோ, வாழ்ந்து பார்த்து முடிவில் புரிதலில் இதயங்கள் இணைந்திடும். அப்பொழுது தெரியும் அவர்கள் வரத்தை வாங்கி வந்தவர்களென்று.
*சுபம்*
பிரவீணா தங்கராஜ்

Super sis nice story 😀 pidikama marriage panni eppo oru happy couple ah erukanga semma 😘 appdiye enna kozhandhai porandhuchu nu oru epilogue podunga pa pls 🙏 seekirama next story podunga sis eagerly waiting 😊
உயிரில் உறைந்தவள் நீயடி..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 20)
இதுவும் நல்லாத்தான் இருக்குது, முன்பு வெறுப்பான எகத்தாளமான பேச்சால அவளை கொன்னான், இப்ப முத்தத்தாலயும் தன்னோட காதல் மொத்தத்தையும் காட்டி கொல்றானோ…?
அதாவது வைச்சா குடுமி, சிரைச்சா மொட்டைங்கிற
ரேஞ்சுல… சூப்பர்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Very nice story
Wow super. But u didnt expect story going to end. Wonderful narration sis. Really a feel good story sis. Fantastic sis. Keep rocking sis.