Skip to content
Home » உயிர் உருவியது யாரோ-4

உயிர் உருவியது யாரோ-4

யாரோ-4

Thank you for reading this post, provide your thoughts and give encouragement.

   ஒவ்வொருத்தராய் விசாரணைக்கு கேட்டு விட்டு திரும்ப இரண்டு மணி நேரம் எடுத்தது.

     என்ன சார் சண்முகஷந்தரத்தை போஸ்ட்மார்ட்டம் பண்ணிட்டாங்களா? இறுதி யாத்திரைக்கு போகணும்னு மேலிடத்து உத்தரவு. போகலாமா?” என்று ஞானவேலிடம் கேட்டு வைத்தாள். 

      தலையாட்டி பின் தொடர்ந்தவர் ஷ்யாமிற்கு அழைத்தார்.

     “தம்பி அந்த பொண்ணு அங்க தான் வர்றா. கொஞ்சம் பார்த்து பதமா இருங்க. இங்க எல்லாரையும் அதிர வச்சிட்டா. நீங்க நினைக்கிற மாதிரி இந்த பொண்ணோட ஆர்டர் தானா வந்தது. சந்தானகிருஷ்ணனுக்கு இவளுக்கும் சம்மந்தமில்லை.” என்று கூற, “சரிண்ணா நான் பார்த்துக்கறேன். நீங்க அந்த பொண்ணிடம் பார்த்திருங்க” என்றான்.

   போன் பேசி அணைத்து விட்டு, “மேடம் நீங்க சாப்பிடலை” என்று திவாகர் எடுத்துரைக்க, “ஆமால… ஓகே நீங்க எல்லாம் சாப்பிட்டு வாங்க.” என்றவள் மதிமாறனின் கடைக்கு போக, அங்கே டீ அமோகமாக விற்பனையாகி கொண்டிருந்தது.

     “என்ன சார் நல்ல வியாபாரமா?” என்றதும் மதிமாறன் திரும்பாமலே. “மேம் சாதாரணமான நேரத்துல சுமாரா ஓடும். இன்னிக்கு அய்யா இறந்ததால தொண்டர்கள் கூட்டம் படையெடுத்துடுச்சு. அதான் உட்கார கூட முடியாம டீ வியாபாரம் பிச்சிட்டு போகுது.” என்றவன் நற்பவி சொல்லாமலேயே தலைவாழை இலையை எடுத்து போட்டான்.
  
     “மேம் இன்னிக்கு தயிர்சாதம் லெமன் ரைஸ் ஒன்லி போட்டிருக்கேன். ஊர்ல பெரிய தலை டெத் பாருங்க. எப்பவும் போல எதையும் செய்ய முடியலை.” என்றான்.

    “நோ பிராப்ளம் மதிமாறன். கர்ட்(curd) ரைஸ் போதும்” என்று வாங்கினாள். பிறகு அங்கிருந்தபடியே சண்முகசுந்தரத்தின் இறுதி யாத்திரைக்கு நற்பவி காக்கி உடையில் முன்னே வழிநடத்த, திவாகர் கூடவே வந்து மற்றவரை அதட்டி சற்று திமிராய் மல்லுக்கு வந்தவரை அதட்டி விட்டார்.

     ஷ்யாமோ தந்தையின் தகனம் செய்ய கலங்கியவனாக அழுது ஊரின் மறுபக்கம் இருந்த பிணம் எரியும் இடத்திற்கு வந்தனர்.

     “பொண்ணுங்க எல்லாம் இங்க வரக்கூடாது. நீ போமா” என்று ஒரு பெரியவர் திட்ட, சார் நான் பொண்ணா வரலை. இன்ஸ்பெக்டரா வர்றேன்.” என்றவளை அப்படியிருந்தும் கூட்டத்தில் தடுத்தனர். ஞானவேலோ மேடம் அங்க தான் நாங்க போறோமே ஏன் இப்படி? நீங்க வேண்டுமின்னா சம்பிரதாயத்தை மாத்தலாம். அடுத்தவங்க சம்பிரதாயத்துல தலையிடாதிங்க” என்று கோரிக்கை வைத்து சென்றான். மதிமாறனும் அங்கு தான் வந்ததாலும் தனியாக ஒரு பெண் தூரத்திலிருக்க அவள் பக்கம் வந்தான்.

     “இதுவரை இங்க வந்ததே பெரிய விஷயம். எதிர்கட்சி சாரை அரஸ்ட் பண்ண போனிங்கனு கேள்விப்பட்டேன். பண்ணலையா மேம்.?” என்றான்.

     “அவர் கொலை பண்ணலை. அதனால தான் விட்டு வச்சிருக்கேன். ஆனா டவுட் இருக்கு.” என்றவள் ஷ்யாமின் செய்கையை தீவிரமாக கண்கானித்தான்.

     அஸ்தியை வாங்கிக் கொண்டு வந்த ஷ்யாம்சுந்தர் அவளை தீப்பார்வை பார்த்து கடந்து சென்றான்.
 
     “அவருக்கு உங்க மேல கோபம் மேம். ஊரே சந்தானம் சார் தான் கொலை செய்து இருப்பாரென சொல்லியும் நீங்க கைது பண்ணாம வந்ததில்.” என்றதும் நற்பவியோ அதை காதில் கூட வாங்காது. “இங்க மொத்தம் எத்தனை டீக்கடை இருக்கு?” என்று கேட்டாள்.

     “நாலு மேம். ஊருக்குள்ள இரண்டு. ஊருக்குவெளியே ஒன்னு. ஊருக்குள்ள வந்ததும் இருக்கறது எந்து” என்று நயத்தோடு கூறினான்.

     “அப்படின்னா கொலைக்காரன் உங்க கடையை கிராஸ் பண்ணி தான் இருப்பான். உங்க கடையில சிசிடிவி இருக்கா.?” என்றாள்.

     “இல்லையே மேம். அதெல்லாம் பெரிய பெரிய கடையில வச்சிருக்கறது. என்னோடது அந்தளவு ஓர்த் இல்லை. விரைவில் கடையை பெரிசுப்படுத்தினா சிசிடிவி வைக்கணும் மேம்.” என்றான்.

     தகனம் எரியூட்டி மக்கள் இரண்டு மூன்று குழுவாக பிரிந்து கலைந்தனர்.

     திவாகரோ “மேடம் நாமளும் போகலாம்” என்றதும் ஞானவேல் மதிமாறனை முறைத்துக் கொண்டு சென்றான்.

      “மேம் நான் கிளம்பறேன்.” என்று மதிமாறன் விடைப்பெற்றதும் அவளுமே தங்க போகும் இடத்திற்கு வந்தாள்.

     முதல் நாள் என்பதாலும் இறப்பிற்கு சென்று வந்ததாலும் குளித்து விட்டு நைட் சூட் அணிந்து வந்தாள்.

     காக்கி உடையை துவைத்து ஒட்ட பிழிந்து காய வைத்து க்ளிப் போட்டாள். சுற்றி இருட்டு சூழ்ந்திருந்தது. நற்பவிக்கு சற்று இப்படிப்பட்ட சூழுலை கடப்பது இதுவே முதல் முறை. சென்னையில் இப்படிப்பட்ட இருட்டே இருந்தாலும் ஒளிர்ந்த விளக்குகளால் எங்கும் ஒரு கருமையை ஒருவித நெருடலும் கண்டதில்லை. அதுவும் அக்கா தந்தை இருக்க தனிமை தோன்றியதில்லை. அக்கா நன்விழி திருமணம் முடித்து கணவரோடு சென்றிட , தந்தை நித்திஷ்வாசுதேவனும் அவளுமே இருக்க ட்ரையினிங், போலிஸ் பணி என்று நற்பவி என்றும் பிஸியாக இருந்தாள்.
 
     இன்றும் பிஸியாக தான் இருக்கின்றாள். என்ன தனியாக தெரியாத ஊரில், பழக்கமில்லாத கிராமத்து இருட்டும், வண்டுகள் தவளைகள் சத்தத்தில் நெருடலை உணர்நதவளாக.

    யாரோ சருகு மிதிக்கும் சத்தம் கேட்க, “யாரு?” என்று கேட்டாள்.

     “மேம் நான் தான். டின்னர் எடுத்துட்டு வந்தேன். கடை பையன் இன்னிக்கு மதியமே லீவு எடுத்துக்கிட்டான். அதனால கொஞ்சம் நேரமாகிடுச்சு. ஏன் மேம்… சாப்பிடணும் என்று யோசிச்சிங்களா?” என்று கேட்டான்.

     “சில நேரம் சாப்பாட்டை மறந்துடுவேன். மத்தவங்க சாப்பிடணும்னு நேரத்தை சுட்டிக் காட்டினா தான் நினைவே வரும்.” என்றவள் வாசம் இழுத்தாள்.

     “பூரி உருளையா… நைஸ் ஆமா கடையில எதுவும் செய்யலைனு சொன்னிங்க. இதெப்படி?” என்றாள்.

    “மேம்… இந்த போலீஸ்காரங்களுக்கு சந்தேகம் கவசக்குண்டலமா? கழட்டி வையுங்க. இது நான் வீட்ல நேத்து பிசைந்து வைத்த மாவு இருக்க செய்தது. உருளை மட்டும் போனதும் குக்கரில் போட்டுட்டு குளிச்சிட்டு வந்து தாளிச்சி எடுத்துட்டு வந்தேன். கடையும் மூடியாச்சு. நீங்க அங்க சாப்பிட போவீங்களோனு யோசிச்சிட்டே வந்தேன். நீங்க என்னடானா டிரஸ் சேஞ்சு பண்ணிட்டு சாப்பிடாம தூங்க ரெடியாகிட்டிங்க.” என்று வைத்து விட்டு வர்றேன் மேம்.” என்றான்.

    “மாறன்… இரண்டு நிமிஷத்துல எடுத்துட்டு போயிடுங்களேன். உங்களோட கொஞ்சம் பேசணும்.” என்றாள்.

    “சூர் மேம் சொல்லுங்க” என்றவன் நின்றிருக்க, “முதல்ல உட்காருங்க” என்றவள். “எனக்கு வீட்டை நீட் பண்ண ஒரு சர்வன்ட் வேண்டும் இங்க கிடைப்பாங்களா? மாத சம்பளம் வாங்கிக்கட்டும்.” என்று கூறினாள்.

     “அது… கேட்டு பார்க்கறேன் மேம்.” என்று கூறினான்.

    “அப்பறம் கால் மீ நற்பவி. மேம் மேம்னு சொல்லறது ஒரு மாதிரி இருக்கு.” என்றாள்.

     “அதெப்படி மேம்” என்று தவிர்க்க பார்த்தான்.

      “அப்படி தான். ஆமா சாப்பிட்டிங்களா?” என்றதும் தலையை ஆமா இல்லை என்று மாறி மாறி செய்யவும் “ப்ளிஸ் பீ சீட்டட்” என்றாள்.

    சுற்றி முற்றி பார்த்தவன் பார்வை நற்பவிக்கு சிரிக்க தோன்றியது.

    அவனுக்கும் பூரி எடுத்து வைத்து விட்டு உண்டாள்.

  மதியானமே சொல்லணும்னு நினைச்சேன். தயிர் சாதம் எங்கப்பா செய்தது போலவே இருந்தது.” என்றாள்.

    “அப்பா அம்மாவை கூட்டிட்டு வந்திருக்கலாமே. தனியா… ஒரு வேளை இடம் பார்த்துட்டு கூப்பிடலாம்னு இருக்கிங்களோ?” என்று கேட்டான்.

     “நோ மாறன். அப்பா நித்திஷ்வாசுதேவ் சென்னைல தான் இருக்கார். நன்விழி அக்காவுக்கு இப்ப நிறமாசம். அதனால நான் தான் அப்பாவை அங்கயே இருக்க சொல்லிட்டு வந்தேன். அம்மா வினோதினி நான் டென்த் படிக்கிறப்ப இறந்துட்டாங்க. அதுல இருந்து அப்பா சமையல் அதனால தயிர் தாளிச்சது எப்பவும் அடிக்கடி இருக்கும். ஆனா வித்தியாசமா கேரட் போட்டு மாதுளை போட்டு இஞ்சி துருவி இப்படி தயிர் சாதத்திலேயே வித்தியாசமா செய்வார் மணக்கும். உங்க ஹோட்டல்ல அந்த பக்குவம் இருந்துச்சு. ஆமா யார் குக்கிங்?” என்றாள்.

     “நான் தான் மேம். ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிச்சதால ஏதோ வருது. சரி மேம் கிளம்பறேன்” என்றான்.

    அடுத்த நாள் காலையில் தன் யூனிபார்ம் அணிந்து கிளம்பியவள் போனிடெயில் போட்டு அதனை கொண்டையாக மாற்றி ஜோதிகா க்ளிப்பை போட்டு நேர்த்தியாய் வாறி முடித்தாள்.

    சின்னதாய் மெரூன் நிற பொட்டு அணிந்து கையில் அவள் அக்கா கொடுத்த வாட்சை அணிந்து சென்றாள்.

   அங்கு அவளின் மேலதிகாரி நமச்சிவாயன் அமர்ந்திருந்தார்.

     “வாம்மா… என்ன கிராமத்துல செட்டாகிடுச்சா.” என்று தேனொழுக கேட்டார்.

   சல்யூட் அடித்தவள் “யா சார் கம்பர்டெபிளா இருக்கு” என்று மொழிந்தாள்.

     “அப்பறம் வந்ததும் பிஸியானா கேஸ். எப்படி போகுது?” என்றதும் அவர் வந்த நோக்கம் என்னவோ? என்று இருந்தவள்.

     “கொஞ்சம் காம்பிளிக்கேட்டா இருக்கு சார். அது பிரச்சனை இல்லை. விரைவில் கொலையாளியை கண்டறிந்திடுவேன்.” என்று கூறினாள்.

    “ஷ்யாம் சுந்தர் தான் தெளிவா சந்தானகிருஷ்ணன் தான் கொலையாளினு சொல்லறாரே. சந்தானகிருஷ்ணனே எஃப்.பி லைவ்ல சண்முகசுந்தரத்தை கொலை செய்ய முயன்றதா பேசியிருக்கார் இன்னமும் என்னம்மா?” என்றார்.

     “சார் அவர் அப்படி சொல்லியிருக்கலாம். ஏன் ஆளை அனுப்பி கொன்றிருக்கலாம். சந்தேகம் என்று ஒருத்தர் மேல என்றால் கைது செய்துயிருப்பேன். எனக்கு ஷ்யாம் மேலயும் சந்தேகம் இருக்கே.” என்றாள்.

    “அவன் இறந்து போனவரோட பையன் மா.” என்றார் நமச்சிவாயன்.

     “சோ வாட் சார். ஷ்யாம்சுந்தர் சௌந்தர்யா என்ற பொண்ணை விரும்பறார். பக்கத்து ஊர் மாணிக்க விநாயகம்-அனிதா அவங்களோட ஒரே பொண்ணு. ஆனா வேற கேஸ்ட்.  ஷ்யாம்சுந்தர் அந்த பொண்ணை திருமணம் செய்ய விரும்பியதாகவும், அதுக்கு அவங்க அப்பா நான் உயிரோட இருக்கற வரை அது நடக்காதுனு சண்டை போட்டிருக்காங்க.

       கடந்த ஒரு மாசமா இந்த சண்டை நீடிச்சிட்டு தான் இருக்கு. அதுலயும் இந்த ஒரு வாரமா ஷ்யாம் ரொம்ப கோபப்பட்டு அப்ப செத்துப் போங்கனு பேசியிருக்கார்.” என்றதும் நமச்சிவாயன் வாயை பிளந்து நின்றார்.

     “நீ நேத்து தானேமா வந்த. ஷ்யாம் காதலிச்சது எப்படி தெரியும்.” என்றார்.
   
     “சார் எங்கப்பா நித்திஷ் சென்னை கமிஷனரோட பிரெண்ட். இங்க இரண்டு வாரத்துக்கு முன்னயே எனக்கு இங்க ஜாப் அலார்ட் பண்ணியதும் தனியா போறதால அப்பா கொஞ்சம் தயங்க கமிஷனர் தர்ஷன் சார் அவரோட பையனான டிடெக்டிவ் சித்தார்தை வச்சி இங்க ஊரு எப்படி செட்டாகுமா தனியா இருக்க வசதியானு ஒரு கண்ணோட்டம் பார்க்க அனுப்பினார். அத்தோட இங்க யார் பெரியதலை என்று தெரிந்து வந்து சொன்னான். அவன் கலெக்ட் பண்ணின டீடெய்ல கிடைச்ச இன்பர்மேஷன்.

    பிரச்சனை வந்ததும் அதை யோசிக்கறது இல்லை நாங்க. பிரச்சனைக்கு முன்னாடியே வருமானு யோசித்து முடிவெடுப்பவள் நான்.” என்றாள்.

   நமச்சிவாயனுக்கு சிறிதளவு வேர்த்தது. நற்பவி இன்னும் என்ன என்ன அறிந்து வைத்திருக்கின்றாளோ என்று தவித்தார்.

      “சரி அப்படியே சௌந்தர்யாவை விரும்பினாலும் அப்பாவை கொல்லுவாரா?” என்று கேட்டார்.
  
      “அதை தான் கண்டுபிடிக்கணும் சார். வந்ததிலருந்து சுத்தி சுத்தி சந்தானகிருஷ்ணனை டார்க்கெட் பண்ணவும் என்னோட சந்தேகம் என்னவோ அவர் பக்கம் போகவே மாட்டேங்குது.” என்றாள்.

     நமச்சிவாயனுக்கோ ‘சுத்தம் இதுக்கு தான் தானா பழி வந்ததும் அப்படியே விட்டிருக்கலாம்னு சொன்னேன். இப்ப பழி மொத்தமா அவங்க மேல போட சந்தேகம் வருவதற்கு பதிலா நம்ம பக்கம் திரும்புது.’ என்று நொடித்தார்.

      இங்கு நற்பவி சந்தானகிருஷ்ணன் கொலை குற்றவாளியாக இருக்க மாட்டாரென கூறியதை போலவே, சையத்திடம் சந்தானகிருஷ்ணன் கூறியது போல கொலை செய்ய போன தரணோ “சார் எத்தனை தடவை சொல்லறது. நான் கொலை பண்ணலை. அங்க அதுக்கு முன்னயே யாரோ கொன்னுட்டாங்க” என்றான்.

    “யோவ் என்னய்யா சொல்லற?” என்றான் சையத்.

    “ஆமா சார் நான் கொலை பண்ண போகறதுக்கு முன்னவே அங்க சண்முகசுந்தரம் இரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தார்.” என்றதும் சையத் போன் ஸ்பீக்கரில் கேட்ட சந்தானகிருஷ்ணனோ திகைத்தவராக இருந்தார்.

     “அப்ப அந்த கொலையை யார் செய்திருப்பா?” என்று சந்தானகிருஷ்ணன் திகைத்தார்.

-யாரோ தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

2 thoughts on “உயிர் உருவியது யாரோ-4”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *