அத்தியாயம்-15
ஆர்யன் மாலை ஆறுமணிக்கே வீட்டிற்கு கிளம்ப ஆயத்தமானான். காலை பத்து மணி முதல், மாலை ஆறு மணிவரை அவனது டூயெட்டி நேரமென்பதால் பணி முடித்து தனது இருசக்கர வாகனத்தில் பயணித்தான்.
அந்தி சாயும் வேளை என்பதால் பலரும் தங்கள் இருப்பிடம் திரும்பினார்கள்.
அவன் நேரமோ என்னவோ எதிரே ஸ்கூட்டியை தள்ளிக்கொண்டு மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்க சிற்பிகா வந்தாள்.
இதே இரண்டு தினங்களுக்கு முன் அவளை இப்படி பார்த்தால் பல்லை கடித்தபடி கடந்திருப்பான்.
இன்றோ அவனது இருசக்கர வாகனத்தின் வேகம் குறைந்தது.
அவள் அருகே வந்தப்பொழுது மொத்தமாய் வண்டி நின்றது.
என்னாச்சு ஏதென்று அவன் கேளாது, தினுசான பார்வையிலேயே ‘ஏன் தள்ளிட்டு வர்ற?’ என்பது போல பார்த்து வைத்தான்.
அவளோ மேலும் கீழும் மூச்சுவாங்க அவன் வாகனம் நின்றதால், அவளும் தன் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு கையை பிசைந்தாள்.
அவன் பார்வைக்கு ‘என்னாச்சு’ என்ற அர்த்தம் புரிய, அவளோ அவனை போலவே வாய் திறக்காமல், ஸ்கூட்டியில் சாவியை திருகினாள். வேகத்தை காட்டும் கருவிக்கு பேலே பெட்ரோல் காலி என்ற ஒளிர்ந்த குறியிடு பளிச்சென ஆரேஞ்சு வண்ணத்தில் காட்டியது.
ஆர்யனோ சுற்றிமுற்றி பார்த்து யோசிக்க, ஊருக்குள் பெட்ரோல் பேங்க் இல்லை என்றதை புரிந்து கொண்டு, வந்த வழியே திரும்பினான்.
‘இவர் எதுக்கு இப்ப திரும்பி போறார். ஒரு வேளை பெட்ரோல் வாங்க போறாரா, எனக்கெல்லாம் உதவ மாட்டாரே’ என்று அவன் சென்ற திசையை பார்த்து நகம் கடித்தாள்.
இவரை நம்பி இதேயிடத்துல இருக்கறதா? இல்லை பொழுது சாயுதேனு வண்டியை தள்ளிட்டு பெட்ரோல் பேங்க் போகலாமா? அப்பறம் நான் தான் வாங்க போனேனே நீயேன் வந்தன்னு முறைச்சா? அய்யோ இந்த மனுஷன் வாயை திறந்து சொல்லிட்டு போகலாம்ல’ என்று நட்ட நடுபாதையில் தனியாக நிற்க வண்டியை ஓரமாய் நிறுத்தினாள்.
நிபுணன் ஐயா வேற இவரை கல்யாணம் பண்ண கேட்டாரே?! அந்த விஷயம் இவருக்கு தெரியாதா?
ரொம்ப அமைதியா கிளம்பறார்னா அவரிடம் இன்னமும் சொல்லிருக்க மாட்டாங்க.
என்னிடம் சொன்னதுக்கு நான் என்ன முடிவெடுக்கறது? எனக்கு ஐயா, ஆதிரா அம்மா முக்கியம். அதுக்காக இந்த ‘rock eater’ கிட்ட என் வாழ்க்கையை பணயம் வைக்கணுமா? என்றவளின் மனதில் ஆர்யன் பதினேழு வயதில் கன்னத்தில் அடித்தது இன்னமும் வலிப்பது போல ஒரு உணர்வு. இடது கன்னத்தை தொட்டு தடவ, வண்டி சத்தம் கேட்டது. இந்த இடத்தில் இத்தனை பைக் சத்தம் கடந்து போக, தற்போது வருவது அந்த ஆர்யனின் வண்டி என்று அறிந்தவள் கன்னத்திலிருந்து கையை எடுத்து ஸ்கூட்டியில் சாய்ந்தவள் எழுந்து சரியாக நின்றாள்.
புதிதான காலி தண்ணி பாட்டிலை வாங்கி தண்ணீரை காலி செய்துவிட்டு அதில் பெட்ரோலை நிரப்பி கொண்டு வந்திருப்பான் போல, வாட்டர் பாட்டில் புதிதென சொல்லாமல் தெரிந்தது.
‘இந்தா’ என்று அவனாக பேசலில்லை. அவளது ஸ்கூட்டியில் வைத்து விட்டு வண்டியை உறுமி கொண்டு பறந்தான்.
சிற்பிகாவோ அவன் போனதும் ‘அப்பாடி’ என்ற மூச்சுவிட்டு பாட்டிலை திறந்து பெட்ரோலை ஊற்றி, வண்டியை ஸ்டார்ட் செய்ய இயங்கியது.
நெஞ்சில் கைவைத்து நிம்மதியடைந்தவள் வண்டியை வீட்டிற்கு திருப்பி சென்றாள்.
கொஞ்ச தூரம் சென்றதும் ‘அச்சோ பெட்ரோலுக்கு காசு கொடுக்கலை. தேங்க்ஸ் சொல்லலை’ என்று நினைவு வந்தது. ஆமா ஒரு நிமிஷம் கூடுதலாயிருந்தா காசு கொடுத்து நன்றியை சொல்லியிருக்கலாம்’ என சொல்லிக்கொண்டாள்.
ஒரு மனமோ ‘நீ அவர் இருந்தா காசு எடுத்து நீட்டியிருப்ப? தேங்க்ஸை சொல்லிருப்ப?’ என்று கிண்டலாக கேட்டது.
‘கேட்டிருப்பேன்’ என்றவளின் பார்வை அங்கே வண்டியை நிறுத்திவிட்டு ‘குழந்தை தலை திரும்பியிருக்கா பாரு இல்லைனா அவங்க திருப்திக்கு அட்மிட் மட்டும் பண்ணு. அவங்களுக்கு டேஸ் இன்னும் இருக்கு, அந்த பொண்ணு பயத்துல பேசுது” என்று கூறுவது சிற்பிகாவுக்கு கேட்டதும் வண்டியை நிறுத்த எண்ணியவள் அவனை தாண்டி சென்றாள்.
‘பார்த்தியா பார்த்தியா தேங்க்ஸ் சொல்லற மூஞ்சிய, அவரிடம் நீ நன்றியோ சாரியோ என்னைக்கும் கேட்க மாட்ட. ஏன்னா அவர் அடிச்ச அடிக்கு ஜென்மத்துக்கு ஒதுங்கிடணும்னு முடிவே பண்ணிட்ட’ என்று இகழ்ந்தது.
‘ஆமா ஒதுங்கியிருக்கணும்னு முடிவு பண்ணியது நான். ஆனா ஆதிராம்மா அவங்க பையனுக்கு என்னை கல்யாணம் செய்து வைக்க விரும்பறாங்க. அதுக்கென்ன பண்ணறது.’ என்றவள் திரும்பி திரும்பி பார்க்க, ஆர்யனோ தனக்கு பின்னால் யாரின் வருகையை தேடுகின்றாளா என்று திரும்பியவனுக்கு யாருமில்லையென்றதும் தன்னை தான் பார்க்கின்றாளென்றதும் மெதுவாக வண்டியை திருகினான்.
சிற்பிகாவோ அச்சோ கிளம்பிட்டார் என்று பாதையை பார்த்து வண்டியை செலுத்த, ஊர் தெருவுக்கு வண்டி நுழையவும் மின்னலாய் ஆர்யன் சென்றுவிட்டான்.
சிற்பிகாவோ நிதானமாக வந்தவளுக்குள், ஆதிரா அம்மா ஆசையா கேட்டாங்கன்னு நிபுணன் ஐயா சொன்னதுக்கு நாம என்ன முடிவெடுக்கலாம்? என்று வீட்டுக்கு வந்து மண்டை குழம்பியது.
எங்க பிள்ளை படிச்சவன், நல்லவன், பண்பானவன் ஆனா உனக்கு எப்படின்னு தெரியலையேம்மா என்று கூறியது நினைவு வந்தது.
மருத்துவம் படிச்சவன், நல்லவனா என்றால் பாட்டி இறந்த சமயம் இரவில் பணம் வாங்க வந்த பந்தல்காரர்கள் குடித்திருந்த காரணத்தால், என் மேல இருந்த கோபம் வெறுப்பு கூட பின்னுக்கு தள்ளி, ஒரு குடிக்காரன் நிதானமின்றி இருக்க அந்தயிடத்தில் பெண்ணை தனியாக விட்டு செல்லாமல் நின்றானே. இந்த நிகழ்வே போதும் நல்லவனென்றதற்கு. பண்பானவனே இதோ இப்பொழுது கூட தன்னந்தனியாக யாருமற்ற சாலையில் தனியா ஸ்கூட்டியை உருட்டவும் வாய் திறந்து கேட்காமல், பெட்ரோலை வாங்கி வந்து தந்திருக்கின்றான்.
தற்போது ஆர்யனை எண்ணி பார்க்க, அவன் அடித்தது கூட தனது திமிரான பேச்சால் என்று புரிந்தது. அந்த வயதில் அவன் அன்னையை தள்ளி விட்டு அசிங்கமாக பேசியதற்கு அவன் அடிக்காமல் விட்டிருந்தால் தான் தவறு என்று இப்பொழுது மனம் அவனுக்காக சலுகையாக யோசித்தது.
அப்ப ஓகே சொல்லிடப்போறியா?” என்ற மனதிடம் ‘நிபுணன் ஐயா ஆதிரா அம்மாவோட பையனை மணக்க இரண்டு நாள் தவணையில் தாமதம் செய்வதே தவறாக தோன்றியது.
இந்த நேரம் பருத்தி மில்லிற்கும் செல்ல இயலாது நிபுணன் ஐயா இருக்கவும் மாட்டார். ஆதிரா அம்மாவிடம் வீட்டிற்கு சென்று, நேரில் பதில் தரவும் முடியாது. நிபுணன் ஐயாவிடம் போனிலே சொன்னால் நன்றாகயிருக்குமா? கையை பிசைந்து நின்றவளுக்கு பால் பொங்கி வழிய, அடுப்பு அணைந்ததும் பதட்டமாய் அணைத்தாள்.
காபி போட்டு அமர்ந்தவள் போனை எடுத்து நிபுணன் ஐயாவிற்கே எண்ணை சுழற்றினாள்.
நிபுணன் போனை எடுத்து “என்னம்மா இந்த நேரத்துல?” என்று அலுவலகம் சம்மந்தமாக எல்லாம் நான்கு மணியளவில் முடித்துவிடுவாளே என்று கேட்டார்.
“ஐயா… ஆச்சி இறந்ததுக்கு என்னை கடனேனு பெத்தவனுக்கு சொல்லலைனு விசனப்பட்டிங்க. அது பரவாயில்லைனு விட்டாச்சு. இப்ப எனக்கு கல்யாணத்துல சம்மதம்னா அந்தாளிடம் சொல்லணுமா ஐயா?” என்று இலைமறைவாய் பதில் தந்து கேட்டதும் ஆதிரா டவலை கொண்டு வந்து நிபுணனிடம் கொடுக்க, “சிற்பிகா ஒரு நிமிஷம்”என்றவன் தங்கள் அறையில் இருப்பதால் ஆதிராவை பிடித்து நிறுத்தி ஸ்பீக்கரில் போட்டு கேட்க கூறினான்.
“என்ன சொன்னேன்னு கேட்கலை. இன்னொருக்கா சொல்லும்மா.” என்று நிபுணன் பேச, “அதான் ஐயா. நீங்க ஆதிரா அம்மா உங்க பையனுக்கு என்னை கல்யாணம் செய்ய கேட்டாங்கன்னு என்னை பதில் சொல்ல இரண்டு நாள் தவணை கொடுத்திங்க.
ஆச்சி இறந்ததுக்கு என்னை கடனேனு பெத்தவனுக்கு சொல்லலைனு விசனப்பட்டிங்க. அது பரவாயில்லைனு விட்டாச்சு. இப்ப எனக்கு கல்யாணத்துல சம்மதம்னா அந்தாளிடம் சொல்லணுமா ஐயா?” என்று மீண்டும் கேட்டதும் ஆதிரா சந்தோஷமாக முகம் மலர, “பெத்தவரிடம் சொல்லணும்மா. கடமைக்கு பெத்ததா இருந்தாலும் நீ அவருக்கு உரிமையான பொண்ணும்மா.
உனக்கு முழுசம்மதம் என்றானப் பிறகு நிச்சயம் ஒரு நாள் கூப்பிட்டு வச்சி பேசணும். ஆனா இப்ப உடனே கல்யாணத்தை பேசாத. ஆச்சி இறந்ததை சொல்லு. அதுக்கு பிறகு அவர் வீட்டுக்கு வந்தார்னா என்னிடம் சொல்லு நானும் ஆதிராவும் வந்து பேசறோம். ஆச்சிக்கு முப்பது கழிச்சு கல்யாணம் பேசிட்டு முடிவு பண்ணிடுவோம்.
ஆர்யனை கல்யாணம் செய்ய சம்மதம்னு சொல்லிட்ட சந்தோஷம்மா” என்று கூறவும் மறுபக்கம் “சரிங்கய்யா நான் ஆச்சி இறந்ததை இன்பார்ம் பண்ணி பேசறேன். ஐயா ஆதிராம்மாவிடம் நீங்க கேட்டு நான் உடனே முடிவு சொல்லிட்டதா சொல்லிடுங்க. அவங்க மனசு கஷ்டப்படப்போறாங்க. எந்த அம்மாவுக்கு தன் பிள்ளையை கட்டிக்க ஒருத்தி தாமதப்படுத்தறதா இருந்தா மனசு விசனப்படும்” என்றதும் ஆதிராவுக்கு கண்ணீர் துளிர்த்து.
“சரிம்மா சொல்லிடறேன். நீ பத்திரமாயிரு.” என்று கத்தரித்துவிடவும் சிற்பிகா நெஞ்சில் கைவைத்து ‘அவரை கட்டிக்க சம்மதிச்சிட்டேன்.’ என்றவள் தலையை தாங்கி ‘அய்யோ அவர் என்னை ரிஜெக்ட் பண்ணிடலாம். நானா செய்தா அது தப்பாயிடுமே. அதுக்கு சம்மதிக்கறது தான் ஆதிராம்மா நிபுணன் ஐயாவுக்கு மனசு குளிரும்’ என்று சமையற்கட்டில் வழிந்த பாலை துடைத்தாள்.
“இந்த பிள்ளைக்கு இருக்கற முதிர்ச்சி சத்தியமா எனக்கில்லைங்க. பாருங்களேன் பெத்தவளுக்கு அவங்க பையனை கட்டிக்க யோசித்தா மனசு கணக்கும்னு பேசறா. அப்ப நான் உங்களை கட்டிக்க இரண்டு மாசம் டைம் எடுத்தேன்.” என்று பழசை மறந்து பேச, அட எங்கம்மா தான் பூமில இருந்தாங்களே. பழைய கதைய விடும்மா.
ஆர்யனும் சம்மதிச்சிட்டான் அந்த பிள்ளையும் சம்மதிச்சிருக்கு. பிறவுயென்ன? முப்பது கழியவும் கல்யாணத்தை வச்சி தடபுடலா அசத்திடுவோம்.
இதுல சிற்பிகா அப்பனை பார்த்து பேசணும். அதுவொன்னு தான் எனக்கு சந்தோஷமான விஷயமில்லை.
அந்த பிள்ளைக்காக அப்பாவிடம் பேசணும்னு சொல்லிட்டேன். ஆனா மனசுக்குள்ள பெத்த புள்ளைய விட்டுட்டு அவன் பாட்டுக்கு இருக்கானே அந்தாளை எல்லாம் தூக்கி போட்டு மிதிக்கணும்னு கோபம் தான் வருது. இதுல சரிக்கு சரி சம்பந்தியா நினைக்கவே கசக்குது.
சேற்றில் மலர்ந்த செந்தாமரைனு சொல்வாங்க. அந்த ஆளு சேறு. அதுல பூத்தவ சிற்பிகா. இந்த அறிவான பொண்ணுக்கு அப்படியொரு புத்திக்கெட்ட அப்பன்” என்று திட்டினார் நிபுணன்.
“அவரை விட்டுதள்ளுங்க. இப்பவாது சர்வேஷ் துளிரிடம் அவங்க அண்ணன் ஆர்யனுக்கு பொண்ணு பார்த்து கல்யாணம் முடிக்க போறதை சொல்வோம்.” என்று மகிழ்ந்தாள்.
“முதல்ல என் மாமனார் மாமியாருக்கு போனை போடு. ரொம்ப சந்தோஷப்படுவாங்க.” என்று கூறவும் ஆதிரா தனது போனில் அன்னைக்கு அழைத்து பேசினார்.
சந்தோஷமாக ஆதிரா “ஆர்யனுக்கு பொண்ணு பார்த்தாச்சு. பொண்ணு சிற்பிகா அவங்க ஆச்சி இப்ப இறந்ததால முப்பது கழிச்சதும் கல்யாணத்தை பேசலாம்னு இருக்கேன். கெட்டது நடந்த இடத்துல நல்லது நடத்திட்டு தனியா இருக்கற அந்த பிள்ளையை நம்ம வீட்டுக்கு முறையா அழைச்சிக்கலாம்னு இருக்கேன் அம்மா” என்றார்.
தங்கலட்சுமியோ “உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? ஆர்யனுக்கும் அந்த பொண்ணுக்கும் ஆகாது. போன வாரம் வரை ஆர்யனுக்கும் அந்த பொண்ணுக்கும் சண்டை. இதுல கல்யாணமா? ஆர்யனுக்கு பிடிக்காம எதையும் உன்னிஷ்டத்துக்கு ஆடாத.” என்று வாழ்த்து சொல்லி சந்தோஷப்படாமல் திட்டினார்.
ஆதிராவோ “அதில்லைம்மா” என்று குறுக்கே பேச, “நீ எந்த விளக்கமும் சொல்லாத. ஊர்ல ஆயிரம் நல்லது பண்ணு. அதுக்கு வீட்லயிருக்கறவன் மனசை காயப்படுத்தி துரும்பையும் அசைக்காத.
என் பேரன் அன்னைக்கு எம்புட்டு கலங்கினான்” என்று பேச மாதவன் என்னம்மா என்னாச்சு?” என்று பதற, “பாருங்க உங்கப் பொண்ணை. ஆர்யனுக்கு அந்த சிற்பிகாவை கல்யாணம் பண்ணறதா உலறுறா. இது தேவையா? புத்திமதி சொல்லுங்க” என்றதும், “அத்தை அத்தை… ஆதிரா சரியா தான் யோசித்திருக்கா. ஆர்யனும் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டான். அந்த பொண்ணும் சம்மதிச்சிட்டா.
அவங்களுக்குள் இருந்த பகை பகையாவா இருக்கணுமா என்ன?” என்றதும் “அதுவந்து மாப்பிள்ளை” என்று தங்கலட்சுமி ஆரம்பிக்க, மாதவன் போனை வாங்கி, “ஆர்யன் சம்மதம் சொல்லிட்டானா மாப்பிள்ளை?” என்று மட்டும் கேட்டார்.
“மனபூர்வமா சொல்லிட்டான் மாமா” என்று முடித்ததும் “சரிங்க மாப்பிள்ளை ஆகவேண்டியதை பாருங்க.” என்று மகிழ்ந்தார்.
தங்கலட்சுமி தான் கொஞ்ச நேரம் அனத்தியது.
இங்கே சர்வேஷ் துளிரை அமர வைத்து ஆர்யன் திருமணத்தை பேச, துளிரோ “அய் சிற்பிகா அக்காவா? அச்சோ அந்தக்கா செம ப்ரிலியண்ட். எனக்கு பிடிச்சிருக்கு” என்று குதித்தாள்.
சர்வேஷோ அந்த அக்காவா? என்று வாய்பிளந்து அண்ணனை நோக்கினான். அப்பொழுது தான் வீட்டுக்குள் நுழைந்து தந்தை பேசியதை கேட்டு துளிர் துள்ளி குதிக்க கண்டவன், ‘பரவாயில்லை ஓவரா சீன் போடாம அம்மா மேல மதிப்பு வச்சி பதில் சொல்லிட்டா.’ என்று ஆனந்தப்பட்டானே தவிர, தன்னை மணக்க ஒருத்தி சம்மதித்தது அவன் கண்ணிலும் கருத்தில் ஏற்றிக்கவில்லை.
துளிரின் சந்தோஷத்தில் தான் வீடு களைக்கட்டியது.
சர்வேஷோ “அண்ண நீங்க அம்மா அப்பா சொன்னது போல அவங்களையா கட்டிக்க போறிங்க?” என்றதும் தான் ஆர்யனோ தலையாட்டினான்.
எங்கே ஆதிரா பக்கம் பார்த்து தலையாட்டி அன்னைக்காக என்று காட்டிப்பானோ என்று நிபுணன் தவித்தார்.
அப்படியென்றால் இது சரிவராதே. ஆனால் சர்வேஷிடம் தலையாட்டும் போது தானாக ஆமென்று கடத்துவிட்டான் ஆர்யன்.
ஆம் அவ்விடத்தில் நிற்கவில்லை. தனது அறைக்கு சென்று தாழிட்டு கொண்டான்.
துளிரோ அச்சோ பெரியண்ணாவுக்கு வெட்கமா என்று கதவை தட்டினாள்.
“குட்டிம்மா ரெப்பிரஷ் செய்துட்டு வருவேன்.” என்று குரல் கொடுத்தான்.
சர்வேஷிற்கோ அந்த அக்கா அடிவாங்கியதுக்கு அது ஆர்யன் அண்ணாவிடம் சம்மதிக்க யோசிக்குமே. அண்ணன் எப்படி ஓகே சொன்னார்? அய்யோ எனக்கே அந்த காட்சி அப்படியே மனசுல பதிவாகியிருக்கு’ என்றவன் நினைத்து பார்க்க, சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் “எவ டீச்சர் எனக்கு எந்த டீச்சரும் பாடம் நடத்த வேண்டாம். அவளை போக சொல்லுங்க” என்று சிற்பிகா கத்தி ஆதிராவை தள்ளிவிட, அதனை பார்த்து தான் வேகமாய் ஓடிவந்து ஆர்யனிடம் “அண்ணா அண்ணா ஒரு அக்கா அம்மாவை பிடிச்சி தள்ளி விட்டுடுச்சு” என்றான்.
ஆர்யனுக்கு கோபம் பொங்கி அவன் காணும் நேரம் ஆதிராவை அடிக்க கையோங்கி சிற்பிகா செல்ல, ஆர்யன் அவளை பிடித்து தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால் தடுத்தவன் பளீரென ஒரறை காது சவ்வு கிழியும் அளவிற்கு செவுளில் விடுத்தான்.
அதன் பின் சர்வேஷிற்கு பெரிய சண்டை உருவானது மட்டும் தெரியும். அண்ணனுக்கும் அம்மாவுக்கு முட்டிக்கொண்டது.
தலையை உலுக்கியவனுக்கு ஆர்யன் அண்ணன் அறைக்கதவை மூடியதும் ‘இன்னமும் அண்ணனுக்கு அந்த பொண்ணு மேல வெறுப்பு இருக்க அப்பா அம்மா எப்படி கல்யாணம் பேசறாங்க? இந்தண்ணா எப்படி சும்மாயிருக்கு? மூன்றாம் உலகப்போர் அணுகுண்டு வெடிச்சிருக்கணுமே.’ என்று சிந்தித்தான்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

கொலை பண்ணிட்டு
ஜெயிலுக்கு போனாளா
கதை எப்படி போகுது என்று ரொம்ப யோசிக்க வைக்கிற மா ஆனாலும் ஆர்யன் சிற்பி கல்யாணம் காண காத்திருக்கிறேன் சகி வாழ்த்துகள்
Idhula enga poi mudiya pogudho 9num purila
Sirpika vum jail la irundha la appo nibu pola ivalukum oru flashback irukum polayae andha reason nibu kum.athira kum theriyum pola athu na la than avaluku ivolo support panraga
Apo sirpika jail la irunthala ethukaga ava apadi pesanum ena achi but ok sollita mrg ku . Very interesting sisy . Next epi ku waiting konjam long ud podunga sisy
1300 words dr
What sirpiga also was in jail? Sema twist. Pls reveal the twist y sirpiga in jail. Ariyan so cute. Ariyan and sirpiga is Tom and Jerry combo. They will fight forever. But they can’t live without them. Without speaking both are very understanding people. Interesting sis.
Intresting sis😍😍😍😍 eagarly waiting for nxt epi💕💕💕💕
Nice ena puthusa oru twist vachiirukiga epa atha open pananuviga waiting for next ud sis
அண்ணாவுக்கு தப்பாத தம்பி
Aasathuriyaaaa aariyan………lovely going……
Sirpi jail la irunthala🤔🤔🤔🤔 Apo yetho fb iruku. Eagerly waiting for nxt epi
அப்படின்னா… சிற்பிகாவும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்தாளா….? ஏன் ..? எதற்காக..?
Sirpi yathukku jail ku poirupa🤔🤔🤔 nipu, Muthu mari enna reason aa irrukum ?
Athunala thaan Ava appan ivala kandukkama irrukana ?
Serva crt aa yosikkara da oru tampiya Annan appa ammakaga thaan ok sonnanu sariya purinjukitta , athye samaiyam annanukum Anna poonu pudikkanumnu ninaikkara pathiya 👌🫶 good da 😍
Ennadhu, sirpika siruvar seerthiruththa pallila padicha ponna, en enna achu
Enathu jail ah
Interesting sis
Sirpika ethuku jail ku pona?
❤️❤️❤️❤️❤️🫰🙄
என்னது சிற்பிகா சிறையில் இருந்தாளா…. எந்த குற்றத்திற்காக இருந்தாள்…. ஆதிரா கிட்ட கடுமையாக நடந்து கொள்ளும் அளவுக்கு என்ன பிரச்சினை
என் காதல் கல்வெட்டை எப்படி ரசிச்சு படித்தேனோ
அதே மாதிரி இதையும் விரும்பி படிக்கிறேன்.
சூப்பருங்க
Super sis nice epi 👍👌😍 sirpika jail la erundhala acho enna story ya erukum parpom 🙄
செம…. நிபு மாதிரி இவளும் ஜெயிலுக்கு போனவளா…. திரில்லிங் …
Nice ud
👌👌👌👌👌👌👌👌👌💓💞💞💗❤️💖💕💕💖❤️💗💞💓💓💞💗❤️💖💕💕💖💗💞💓rock eater name bayangaram😂😂😂😂😂😂😂😂 ovvoru epdiyum romba rasichu padikkira madhiri eludhurukenga👌👌👌👌👌👌👌😘😘😘😘😘😘😘😘😘
❤️❤️
Nice epi sis😀
👌👌👌👌👌
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Interesting sis
Yedheyyy sirpika jail la irundhala🧐🧐🧐😦😦😦…. Idhu enga poi mudiya pogutho…. Adeiii sarveshuuu karaname needhana…. 😆😆😆😆… Ayaya indha thangalaksmi paati ena aadhira ok sonapavum polambunanga… Ipo aaravukum thitite polamburanga…. Apo amma ipo payan adhu matumdha marirku🤣🤣🤣🤣🤣🤣🤣
Super super super super
nice!!!!!