புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

என் நேச அதிபதியே -17

அத்தியாயம் -17

      சிற்பிகாவுக்கு ஆர்யனோடு பேச வேண்டுமென்ற எண்ணம் லேசாய் உதித்தது. திருமணம் ஆகப்போகும் கனவுக்கு அல்ல.

   அவன் நம்பரும் தன்னிடம் உள்ளது ஆனால் அவள் பேசினால் அவன் எதிர்வினை எண்ணவாக இருக்கும்.‌ தன்னிடமே மன்னிப்பு கேட்க பிடிக்காமல் வீம்புக்கு சென்னைக்கு சென்றவர்.
   
   தந்தையை அடித்ததை அவன் வீட்டில் கூறாத போது தந்தை தன்னிடம் பேசியதை எவ்வாறு உரைப்பாள்.‌
‌‌
   நிபுணன் ஐயா ஆதிரா அம்மா தன்னை அவர்கள் மைந்தனுக்கு கட்டிக்க கேட்டதும் தன் தந்தை அதிகப்படியாக பேச இருந்த கோபத்திற்கு மசிரா போச்சுயென வார்த்தை கூறி அடக்கி விட்டாள். நரேந்திரனும் ஊருக்கு முக்கியமானவராக நிபுணன் இருக்க, வாயை மூடிக்கொண்டவர் அடுத்த நான்கு நாளில் குடித்துவிட்டு தைரியசாலியாக வந்தார்.

  தந்தை குடித்திருப்பதால் அவரை பொருட்டாக மதிக்காமல் சென்றவளை நிறுத்தி “ஏதோ உன்னை படிச்சி ஆளாக்கி வளர்க்க பார்த்தா, நீயென்னடி பண்ணின. நீ தான் போகக்கூடாத இடத்துக்கு போன. உன்னை யெல்லாம் உலகத்துல உலாவ விட்டு வச்சிருக்கேன்.‌ அப்பவே விஷத்தை வாங்கி தொண்டையில இறக்கியிருக்கணும். இப்ப நல்ல நிலையில் இருக்கற திமிரு.

  நீ என்ன வளர்ந்தாலும் உன்னை பெத்தது நான்.‌ அந்த நன்றி இருக்கா. என்னவோ மசிருக்கு சமமா பேசற” என்று பளாரென அறைந்தார்.

   சிற்பிகா இதற்கெல்லாம் அழவில்லை. அடுத்து அவர் பேசிய வார்த்தை தான் குத்திகிழித்து விட்டது.

“நீ என்ன சுத்தமானவளா? பத்தினியா?” என்று பெற்றவரே முன்பு நடந்தவையை வைத்து தவறாய் பேசவும் இதயம் கனத்தது. அக்கணம் தான் தாரை தாரையாக கண்ணீர் சுரந்தது.

    ஆனால் சிற்பிகாவின் நேரம் இப்படி ஆர்யன் வந்து அவனிடம் வேறு அடிவாங்குவாரென கனவிலும் நினைக்கவில்லை.

  முதலில் அங்கிருந்து கிளம்பினால் போதுமென்று வந்துவிட்டாள்.‌
     ஆனால் அடுத்த நாள் தந்தையோ, ‘என்னையே அடிச்சிட்டான்ல அவன் என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டா தான் உன் கல்யாணம் நடக்கும்’ என்று மிரட்டிவிட்டார்.‌

‌ஆர்யன் வீட்டில் கூறியிருப்பார் தன்னிடம் நிபுணன்‌ஐயாவோ ஆதிரா அம்மாவோ ஏதாவது கேட்டால் தந்தை கூறியதை உரைத்திடும் முடிவில் இருந்தாள்.‌

   ஆனால் ஆர்யன் அன்று நடந்ததை பற்றி மூச்சுவிடவில்லை‌ என்று தெரிய, அவளாக நிபுணனிடம் உரைக்கவும் பயந்தாள்.

   ஏற்கனவே மன்னிப்பு என்ற ஒன்றால் தான்‌ அவன்‌ பாறையை திண்றவனாக மாறியது.
   தானாக போட்டு கொடுத்து மேலும் உரண்டை இழுத்து வைக்க மனமின்றி தவித்தாள்.

    முதல் இரண்டு நாள் இதை பற்றியே சிந்தித்தாள். அடுத்தடுத்த நாட்களில் தந்தையே போன்‌ போடாததால், தந்தை மறந்திருப்பாரென முடிவுக்கட்டினாள்.

     பதினாறாம் நாள் ஆச்சிக்கு சாமி கும்பிடும் நாளும் நிபுணன் ஆதிராவிடம் எந்த உரண்டையும் இழுக்கவில்லை‌. அதற்கேற்றது போல ஆர்யன் அங்கே தலைக்காட்டவில்லை. பெற்றவர் மட்டுமே வந்து திருமணம் பற்றி பேசினார்கள்.
  முப்பது கழிந்ததும் வரும் முகூர்த்த நாட்களில் மணக்க நாளெல்லாம் குறிக்க தலையாட்டி கேட்டுக்கொண்டார்‌. இதற்கு பின் ஆர்யன்‌ அடித்ததை பெரியவர் அவர் வெளியே சொல்லாமல் விட்டுவிட்டு அவர் வேலையை கவனிப்பது சிற்பிகாவுக்கு நிம்மதி உண்டானது.

    ஆனால் நரேந்திரன் இப்பவே கூறினால் மன்னிப்பு கேளாது திருமணம் தடைபெறலாம் என்று திருமணம் நடைப்பெறும் நேரம் தான் யாரென காட்ட காத்திருந்தார்.

     ஏதோ தந்தை திருமணத்தில் கண்ணும் கருத்துமாய் இருப்பதாக சிற்பிகாவுக்கு தோன்றியது.
 
      சிற்பிகாவோ தன் வாழ்வு எதை நோக்கி செல்கிறதென்று அறியாது தனியாக இருந்தாலும் நிம்மதியோட கடந்தாள்.

     நிபுணன் வீடே விழா கோலம் பூண்டிருந்தது‌. ஆர்யன் திருமணத்திற்கு தான் ஏகப்பட்ட கூட்டம். இத்தனை நாட்கள் தாத்தா ஆச்சி மற்றும் முத்துவேலன் மாமா சாருலதா அத்தை என்று வந்து சென்றார்கள்.
    பெரிய தாத்தா மாதவனின் தம்பி கணேஷ் அவரது மனைவி சுஜாதா அவர்கள் மகள் வெண்ணிலா வந்திருந்தார்கள்.

‌ வெண்ணிலா சித்தியின் பையன் ரஞ்சித், அத்தை சாருலதாவின் மகள் ராகவி அண்ணி, மகன் சரவணவேலன் என்று வீடே அமர்க்களமாக இருந்தது.

  துளிருக்கும் சர்வேஷுக்கும் கதை பேச, நேரம் ஓடியது.

   ஆர்யன் அப்பொழுதும் டூயூட்டிக்கு சென்றான்.‌ பந்தக்கால் நட்ட நாளில் கூட நழுவி விட்டான்.

      ஒவ்வோருத்தரின் வாழ்விலும் புரட்டி போடும் திருமண நாள் ஆர்யன் சிற்பிகாவின் வாழ்விலும் வந்தது.

   துளிர், சாருலதா சித்தி, சாருலதா மகள் ராகவி, வெண்ணிலா அத்தை என்று சிற்பிகாவை சுற்றியிருக்க அவள் கண்களோ தன் அத்தை ஆதிராவை தான் தேடியது.

    கல்யாண பதட்டம் தாண்டி சற்று முன் நரேந்திரன் வந்து, “என்னை அடிச்சதுக்கு அந்த ஆர்யன் என்னிடம் மன்னிப்பு கேட்க சொல்லு. இல்லைனா நான் மேடையில ஏறமாட்டேன்.

   கல்யாணத்துக்கு வந்தவங்களுக்கு முன்ன அசிங்கப்படுத்தறேன் என்று முறுக்கி நின்றார்.‌

  இதே வேறு சூழ்நிலை என்றால் நீயொன்னும் அப்பாவா அங்க நிற்க வேண்டாம் இடத்தை காலிப் பண்ணு என்று சிற்பிகா பேசியிருப்பாள்.

  இன்று திருமணம் இருக்க சபைக்கு அநாகரிகமாக நடந்து, ஆர்யனேயோ நிபுணன்‌ஐயாவையோ, ஆதிரா அம்மாவுக்கோ தலைக்குனிவு என்றால் சிற்பிகாவால் தாங்கயியலாது.

    திருமண பதட்டம் தாண்டி அழுகை வந்தது.

  என்னாச்சு அக்கா? அழறிங்க?” என்றதும்”துளிர் ஆதிரா அம்மாவை கூப்பிடு” என்று கையை பிசைந்து கூறினாள்.

துளிரும் சிற்பிகா அழவும் ஓடிவந்து ஆதிரா காதில் கிசுகிசுத்தாள். 

ஆதிராவோ யாகத்தில் கர்ம சிரத்தையாக மந்திரங்களை உச்சரித்த மைந்தனை கண்டு பூரிக்க, துளிர் வந்து 'அந்தக்கா உங்களை கூப்பிட்டாங்க." என்று சுரண்டினாள். 

“விளையாடாத” என்றதும்”அந்தக்கா அழறமாதிரி தெரியுது” என்றதும் ஆர்யன் அன்னையை நிமிர்ந்து பார்த்தான்.‌

நான் போய் அவளை அழைச்சிட்டு வர்றேன்” என்று ஆதிரா நகரவும் நிபுணன் பார்வையும் ஆதிராவிடம் இருந்தது.

ஆர்யன் மந்திரம் உச்சரித்தவன் அன்னை அவசரமாய் செல்ல அங்கொரு கண்ணை பதித்து கொண்டான்.‌

‌‌மணப்பெண்ணின் அறையில் நரேந்திரன் திமிராக அமர்ந்திருந்தார்.‌

சிற்பிகாவோ தவிப்பாய் நிற்க, மற்றவர்களை பார்வையால் வெளியேற கூறினாள்.

சிற்பிகாவை பிடித்து என்னவென்று கேட்க, "அவர் வந்து மன்னிப்பு கேட்கணும்னு சொல்லறார் அம்மா" என்று அழுகையோடு கூறினாள்.‌

‌‌ ஆதிராவுக்கு சுறுசுறுவென கோபம் கொப்பளித்தது.‌ இதென்ன என்றோ நடந்ததற்கு இன்று மன்னிப்பு கேட்க வேண்டுமா? முன்பாவது கேட்க கூறி தானே கட்டாயப்படுத்தினோம் இன்று அதையே கூறினால் நன்றாக இருக்காதே என யோசிக்க, இவள் ஏன் கலங்குகிறாளென்றதும், “என்ன மன்னிப்பு? என்னை தள்ளிவிட்டதுக்கு உன்னை அவன் அடிச்சானே அதுக்கா?” என்றதும் பதறினாள்.

‌‌ “அச்சோ அதுக்கில்லைம்மா. நான் தெளிவா சொல்லறேன்.” என்று சாலையில் தந்தைக்கும் தனக்கும் நடந்த பேச்சு வார்த்தையும், ஆர்யன் வந்து விட்ட அறையும் கூறினாள்.
தற்போது தந்தை முறுக்கி கொண்டு நிற்பதை சுட்டிக்காட்டினாள்.

ஆதிராவுக்கு தலையை தாங்கி அங்கிருந்த சேரில் அமர்ந்தாள். நிபுணனுக்கு அருவா பேச்சு என்றால் ஆர்யனுக்கு கை பேசும் போல. யாரு என்னனு பார்க்காம அடிச்சிருக்கான் என்று நரேந்திரனை பார்வையிட்டாள்‌.

இந்தாளை நானே அடிச்சிடுவேன் பெத்த பொண்ணுக்கு கல்யாணம் எந்த நேரம் வீம்பு பண்ணிட்டு இருக்கான் இந்தாளு’ என்று எரிச்சல் ஆனது.

‌‌”நான் இப்ப என்னம்மா செய்யறது அம்மா” என்று சிற்பிகா கேட்கவும், “இந்த நேரம் சொல்லறியேடா. முன்னவேனா ஏதாவது அவனிடம் பேசியிருப்பேன். முகூர்த்த நேரம் வேற நெருங்குது.” என்றதும் நிபுணன் மனைவி சென்றும் வரவில்லை என்பதால் துளிரிடம் என்னவென கேட்க அவளோ சிற்பிகா அழுததை கூற, நிபுணன் அவசரமாய் சென்றார்.

தந்தை செல்லும் தினுசு ஆர்யனுக்குள் என்னவோ அக்கப்போர் நடப்பதை அறிவித்துவிட்டது. அவனது மூளை அதிவேகமாக மந்திரத்தை உச்சரித்தாலும், இந்த நேரம் என்ன பண்ணிட்டு இருக்காங்க?’ என்று சிந்திக்கவும் செய்தான்.‌

ஆதிரா நிபுணன் வரவும் நடந்தவையை கூறினாள்.
நரேந்திரனை பார்த்து ஆர்யனை ஏறிட்டான்.‌
என்னடா ஒரு பிரச்சனையும் கிளம்பலையேனு நினைச்சேன். டாக்டர் மகராசன் செய்த வேலைக்கு ரிட்டர்ன் கிப்ட் இன்னிக்கு வாங்கிடுவார். அம்புட்டு தான் ஜோலி முடிஞ்சுது” என்று நிபுணன் ஆதிராவை பயமுறுத்த, “என்னங்க நீங்க? இந்த நேரத்துல, தாலி கட்டுற நேரம் வந்துடப்போகுது” என்றதும் நிபுணன் ஆர்யனையே உற்று நோக்க, ஆர்யனோ மந்திரம் கூறியவன் ஒரு பார்வை தந்தையை நோக்கினான்.‌

‌ “இங்க வா” என்று நிபுணன் இமை மூடி கையால் அழைக்க, ஆர்யனோ எழுந்தான்.‌

“நீங்க வேற குடும்பம் ஒற்றுமையா இருக்க ஏதாவது மந்திரம் இருந்தா சொல்லிட்டு இருங்க. எங்க ஐயா கூப்பிடறார் என்னனு கேட்டுட்டு வந்திடறேன்” என்று நடந்தான்.‌

கல்யாண மண்டமே ஆர்யனை நோக்கி பார்வையை திருப்பினார்கள்.

  "என்னங்க ஐயா?" என்று பவ்யமாக கேட்டவன் பார்வை மட்டும் தான் தாலி கட்டும் சிற்பிகாவின் வதனத்தை ஏறிட்டது. 

கலங்கிய விழிகள் அவன் காணும் போதெல்லாம் அவனை இம்சை செய்தது. 

நிபுணன் நரேந்திரனை கைகாட்டி, நடந்தவையை கேட்டார்.‌

‌ ”ஆமா ஐயா அவரை அடிச்சேன். அப்ப அவங்க அப்பானு தெரியாது.” என்றவன் இப்ப என்ன அதற்கு என்பது போல நின்றான்.‌

”நீ அவரிடம் மன்னிப்பு கேட்டா தான் சபையில வந்து கன்னிகாதானம் செய்வாராம். இல்லைனா வரமாட்டேன்னு இருக்கார். என்ன செய்ய?” என்று நிபுணன் கூற சிற்பிகா பக்கம் திரும்பினான்.

“மன்னிப்பு கேட்டா தான் நீ மேடைக்கு வருவியா? இங்க நீ பொண்ணா அவர் பொண்ணா? உனக்கு இந்த டிராமால பங்கு இல்லைனா, நீ கண்ணை துடைச்சிட்டு எங்கம்மா கையை பிடிச்சிட்டு வா. அவர் மேடைக்கு வரணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை. கன்னிகாதானம் என்று எந்த சம்பிரதாயமும் எனக்கு தேவையில்லை.

தாலி கட்ட என் கையிருக்கு. உன்‌ கழுத்துல அதுக்கு இடமிருந்தா போதும்.

இல்லை ரோட்ல குடிச்சிட்டு பெத்த பெண்ணையே அடிப்பேன்னு இருந்தவருக்கு மரியாதை தரணும்னா நோ சான்ஸ். அதுக்கு வேற ஆளை பாரு. இந்த ஆர்யன் தப்பு செய்யாத எந்த விஷயத்துக்கும் மன்னிப்பு கேட்க மாட்டான். ஒரு பொண்ணு நடுரோட்ல அழவச்சி வேடிக்கை பார்த்தவரை அடிச்சேன். உங்கப்பா என்றது என்னை பொறுத்தவரை தகவல்‌. முடிவு நீயெடு நான் பேலன்ஸ் மந்திரம் சொல்லணும். அங்க ஒரு குடுமி மந்திரம் சொல்லியே இம்சை கூட்டறார். அம்மா ஐயா என் வேலை முடிஞ்சுது.” என்றதும் அவன் பாட்டிற்கு மேடை நோக்கி நடந்து மாலையை சரிசெய்தபடி வீற்றுக்கொண்டான்.

நரேந்திரனோ "என்னை மீறி போவியா? நான் பெத்த அப்பன் டி" என்ற வார்த்தையை ஒதுக்கி, ஆதிராம்மா நீங்களே கூட்டிட்டு போங்க. எனக்கு தெம்பாயிருக்கும்" என்றதும், கன்னம் பிடித்து அழைத்து சென்றாள் ஆதிரா. 

நிபுணனோ “பசங்க மரியாதை தரணும்னு நினைச்சா முதல்ல பெத்தவங்க மரியாதைக் குறைவான காரியத்தை எப்பவும் செய்ய கூடாது. அப்படி செய்தா மட்டு மரியாதையை எதிர்பார்க்க கூடாது சம்’மந்தி’ என்று சம்பந்தியை மந்தியாக்கி நிபுணன் சென்றார்.

ஆர்யனோ அன்னை கைப்பிடித்து அழைத்து வந்த சிற்பிகாவை ஏறிட்டு சபையிருக்கும் பக்கம் திரும்பினான்.‌

‌ ஒரு பக்கம் கீழே தனது கல்லூரி நண்பர்கள், கூட பணிப்புரியும் டாக்டர்கள், ஊர்மக்கள், மறுபக்கம் தந்தையின் பருத்திமில்லில் வேலை செய்யும் ஆட்கள், அன்னை பாடம் நடத்தும் சீர்த்திருத்த பள்ளியில் கிடைத்த அதிகாரிகளின் நட்புகள், நிறைந்திருந்தார்கள்.

மேடைக்கு வலது புறம் மாதவன் தாத்தா, தங்கலட்சுமி ஆச்சி, சின்ன தாத்தா கணேஷ், சின்ன ஆச்சி சுஜாதா, சாருஅத்தை, முத்து மாமா, ராகவி மதினி அவர் கணவர், முத்து மாமாவின் மகன் சரவணவேலன், நிலவன் மச்சான் அவரது துணைவி சாம்பவி, கையில் அவரது புதல்வி பூவை பிய்த்து விளையாடினாள்‌.

இடதுபுறமோ, நிபுணனின் தம்பிக்கு இணையாக முன்பு இருந்த பரதன் தன் மனைவி எழிலரசியோடும், “எங்க நிபுணன் அண்ணனை அச்சு வார்த்து பார்க்கறப்பால இருக்கு.” என்று பூரித்தான். ப்ரித்தியோ அப்பா அவர் கூப்பிடறார். என்னனு கேட்டுட்டு வர்றேன்” என்று கணவர் பக்கம் செல்லும் முன் தந்தையிடம் கூறிவிட்டு நடந்தாள்.

சுமனோ தன் மகள் மகனோடு முன்னிருக்கையில் உட்கார வைத்துவிட்டு மனைவி நதியாவோடு மேடையில் நின்றார்.

வெண்ணிலா விகாஷ், துளிர் சர்வேஷ் அண்ணனோடு ஒட்டிக்கொண்டு நின்றனர். 

“அண்ணா அக்கா பக்கத்துல தள்ளி உட்காரு, பாலமா கட்டிப்போட?.” என்று கூறவும், “அண்ணா அக்காவா, முறையை மாத்தி சொல்லறேளே, அண்ணா அண்ணி சொல்ல பழகுங்கோ.” என்று துளிருக்கு அறிவுரை வழங்க, “ஓகே புரோகிதர், நீங்க ரெகுலர் டயலாக் சொல்லுங்கோ. ஐ மீன் கெட்டிமேளம் கெட்டிமேளம்” என்றதும், துளிரை தினுசாய் பார்த்தவரோ, ‘ரொம்ப துள்ளறேள், எந்த திமிர் பிடிச்சவனோ வந்து அடக்குவான்” என்று கூறிவிட்டு, மந்திரம் ஓதி கெட்டிமேளம் கெட்டிமேளம்’ என்று முழங்க, நாதஸ்வர ஓசையும், மத்தளமும் துளிரின் செவியை தீண்டவில்லை. திமிரரசன்’ விதார்த் நினைத்து கொண்டிருந்தாள்.‌

இங்கு நரேந்திரன் மூச்சு வாங்க கோபமாய் வெளிநடப்பு செய்தார். அவரை யாரும் கண்டுக்கொள்ளவில்லை‌.

சிற்பிகாவோ தன் மார்பில் வந்து உரசிய பொன் தாலியை பார்த்து, அதனை கட்டியவனை காண, அருகே தாலி கட்டிய கையோடு எதிரே இருக்கும் தன்னோடு படித்த டாக்டர் தோழமைகளை கண்டு கண்களை அந்தப்பக்கம் திருப்பி கொண்டான்.‌

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

40 thoughts on “என் நேச அதிபதியே -17”

  1. Super aaryan. Nee sonnatha pirinjikittu sirpika vanthuta . Oru valiya mrg over . Next unga life la purinjikonga oruthar oruthar

  2. Indha Aryan paiyana endha list la vaikuradhunae therila ka….oru vazhiya kalyanam mudinchu…nalla Vela sirpi appa prachanai ya easy ah indha Aryan paiyan mudichitan…. idhellam nalla tan panran….ana ivanukku romance Vara vaikradhu kastam polayae😊👍

  3. Sirpika kalyanam pannitan ok.aana ippo vum aval oda azhugai mattum avan ah light ah disturb pannuthu yae thavira vera oru reaction um.illayae avan ah thavira ellarum.kalyanathula interest ah irukaga expection Sirpika

  4. Mariyathai ellam kayttu thara kudiyathu illa 😏🤦 Ivan lam oru appan 😡
    Ariyan ne kalakitta poo 👏🤩👌 thali katta Yan Kai irruku 😉🤩
    Apa da motha family um vanthuttanunga apa da ellaraium ithula kattitinga pravee ka 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  5. ஆர்யன்🔥🔥🔥!!!… நிபுணன் புள்ளைன்னா சும்மாவா???… கல்யாணம் நல்லபடியா முடிஞ்சது!!… ரொம்ப ரொம்ப சந்தோஷம் கா😍!!..

  6. ஹைய்… ஆர்யன் சிற்பிகாவை சைட் அடிக்கிறான்… ஆனா அடிக்காத மாதிரி நடிக்கிறான்.

    “நீ பார்த்துட்டு போனாலும்…
    பார்க்காம போனாலும் – நான்
    உன்னை பார்த்துட்டு தானே
    இருப்பேன்…!”

  7. Wow . Marriage over. Super but ariyan romance missing. Eagerly waiting for ariyan and sirpiga romance and good understanding between them sis. Wonderful narration sis

  8. Nice sis ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  9. இந்த நரேந்திரனுடைய கதை அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன் அப்படிங்கற மாதிரி ஆயிடுச்சு 😂😂😂😂😂😂😂😂

  10. ஆஹா, பெரிதாக ஆர்ப்பாட்டம் இல்லாமல் சூப்பராக முடிஞ்சது..
    ஆர்யன் -சிற்பிகா திருமணம்..

    அருமை அருமை

    அதுவும் ஆர்யன் dialogue செம்ம சூப்பர்….

  11. ஆர்யன் சிற்பி திருமணத்தை சிறப்பா நடத்திட்டிங்க இனிமேல் முட்டிகிறது மோதுகிறது இதே யெல்லாம் காண ஆவலாக உள்ளது சகிமா

  12. Adraaa… Adraaaa….. Vera level thala neee…. Nibuvoda payanu prove panita🤣🤣🤣🤣indha kosu(thulir) tholla vera thangamudila…… Seekrama ivalukoru seet eduthu podunga authoramma orey poyya solitu thiriyura🤣🤣🤣🤣🤣

  13. Ivan ennadhan mudivu pannirukkanu onnum puriyalayae avanukku sirpikava pudichu marriage panrana illana ammakaga marriage pannirukkana 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔ennava irukkum

  14. நரேந்திரன் கொடுத்த கொடைச்சல் அதை மீறி ஆர்யன் – சிற்பிகா ஜோடியின் திருமணம் இனிதே சிறப்பாக நடைபெற்றது சூப்பர் அக்கா…..💐💐💐💐

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!