புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

என் நேச அதிபதியே -18

அத்தியாயம்-18

    ஆர்யன் திருமணம் முடித்து ஓமகுண்டலத்தை சுற்றி வந்தான். எல்லாம் சிற்பிகாவின் கையை பிடித்து தான் வலம் வந்தான்.‌

   மூன்று முறை சுற்றி வரவும், சிற்பிகாவை பிடித்த கையை விடுவித்தான்.‌

   சிற்பிகாவுக்கு உயிர் போய் உயிர் வந்த உணர்வு. இத்தனை நேரம் கைகள் நடுங்கியிருந்தாள்.
   எங்கே இன்னமும் கூடுதலாய் ஆர்யன் கையை பிடித்திருந்தாலும் மயங்கி விழுந்திருப்பாள்.

    ஆர்யன் சிற்பிகாவை ஆழ்ந்து மூச்சு விட்டு ஏறிட, சிற்பிகா கடைக்கண்ணால் ஏறிட்டு திரும்பி கொண்டாள்.

    இதே வேறொருவனாக இருந்தால் இப்படி இந்த திருமணம் நடந்திருக்காது. ஏன் தன்னை ஏற்றுக்க மறுத்திருப்பார் என்பதே நிதர்சனம். அதனால் சிற்பிகா நன்றி கடனாக தான் ஆர்யனை கண்டது.

தந்தை பேசிய பேச்சு அப்படி‌. தற்போது எங்கு திரிகின்றாரோ? குடித்துவிட்டு பிரச்சனை செய்ய வருவாரா என் பயந்தாள். ஆனால் அப்படி வந்தால் சத்தமேயில்லாமல் அவரை தூக்கி ஒரு ரூமில் போடவும் தயங்கமாட்டார்கள். 

  திருமணத்திற்கு வந்தவர்கள் பாதி பேர் மேடையேறினார்கள். மற்றவர்‌ பந்திக்கு சென்றனர். சிற்பிகாவுக்கு இப்படியொரு திருமணம் தன் வாழ்வில் நடக்கும் என்று கனவிலும் கண்டதில்லை. சொல்லப்போனால் அவள் திருமணம் என்ற ஒன்று தன் வாழ்வில் கிடையாதென்றே எண்ணினாள்.
அதற்கு நேர்மாறாக இத்தனை ஆடம்பரமும் கூட்டமும் அவளை மலைக்க வைத்தது.

   கொஞ்சம் கொஞ்சமாய் நிபுணன் ஐயா ஆதிரா அம்மாவோட பெரிய பையன் கல்யாணம் என்றால் இந்த கூட்டம் இருக்க தான் செய்யும் என்ற நேரங்கள் புரிந்தது. அதன் பின் சற்று இயல்பானாள்‌

நேரங்கள் நகர புகைப்படங்களாக எடுத்து தள்ளிய பின் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க மணமகன் அறைக்கு மணமக்கள் வந்தார்கள்.  

     தங்கலட்சுமி கையால் பால் பழம் ஊட்டினார். முதலில் பேரனுக்கும் பின்னர் பேத்திக்கும் என்று கொடுக்க சிற்பிகா மறுக்காமல் விழுங்கினாள்.

‌‌ தங்கலட்சமியோ சிற்பிகாவை நோட்டமிட, தங்க நகைகளிலும் உடைகளிலும் மிளிர்நாதாள்.

இதற்கு முன்னும் அவள் ஆச்சி இறந்த தருணத்தில் சென்ற போதும் அந்த இழப்பு நேரத்திலும், பேரழகி‌யாக தான் தெரிந்தாள்.

பேரனுக்கு பாந்தமாய் பொருத்தமே. என்ன இவளால் தான் சண்டையிட்டு தங்கள் வீட்டில் பேரன் படிக்க வந்தது.
அப்படியில்லையென்றால் பேரன் ஆறு வருடம் தங்களோடு இருந்திருக்க மாட்டானே. இவளுக்கு ஒருவிதத்தில் நன்றி கூறலாம். பேரன் தங்கள் வீட்டில் வந்து படித்து கூடவேயிருந்ததற்கு.

ஆனால் இருவரின் சண்டை? இன்னமும் உண்டா? ஆர்யன் எப்பொழுதும் போல இருக்க அவன் மனநிலையை கண்டறியும் சக்தி தங்கலட்சுமிக்கு இல்லையே. 

‌‌
  நிறைய மௌவுனங்கள் அங்கே தவழ, அதை களைக்கும் விதமாக “அம்மா மெட்டி எங்க?” என்று துளிர் ஆதிராவிடம் கேட்க, “நீ தான் உன் ஹாண்ட்பேக்ல வச்சிருக்கேன்னு சொன்ன?” என்று ஆதிரா நினைவுப்படுத்த, “துளிர் நீ ஹார்ட் பேக்லயிருந்து எடுத்து என்னிடம் தந்திருக்க” என்று சர்வேஷ் கால் சட்டை பையிலிருந்து நீட்டினான்‌.

   “அண்ணா அண்ணா இது என் கிப்ட்” என்று துளிர் சர்வேஷ் இடமிருந்து வாங்கி பெரியண்ணா ஆர்யனினிடம் கொடுக்க வாங்கினான்.

  “அக்காவுக்கு போட்டு விடு” என்றவள் அடுத்த நிமிடமே “அச்சோ அண்ணிக்கு போட்டுவிட்டு” என்று ஆர்ப்பரித்தாள். துளிர் அவளது பரிசாக மெட்டியை வாங்கி அண்ணன் அண்ணிக்கு பரிசாக கொடுக்க, ஆர்யனோ மெட்டியை பார்த்து சிற்பிகாவை மாறி மாறி பார்த்தான்‌.

     சிற்பிகாவே “அதை நானே போட்டுக்கறேன்” என்று ஆர்யன் பார்வைக்கு அஞ்சி தவிர்க்க பார்த்தாள்.

  துளிரோ “கஷ்டப்பட்டு நானே சர்வேஷ் அண்ணா கூட போய் செலக்ட் பண்ணி வாங்கினேன். எங்க அண்ணா தான் போட்டுவிடும்” என்று முகம் தூக்கி கூற, “துளிர் இதென்ன சைல்டிஷா? நான் போட்டு விட மாட்டேன்னு சொன்னேனா? பிடிவாதம்‌ எல்லாம் சின்ன சின்ன விஷயத்துக்கு பண்ணாத” என்று அதட்டி விட்டு கையை வாசல் பக்கம் நீட்டினான்.

  சிற்பிகாவோ என்ன என்று விழிக்க, அவன் “அம்மி வெளியேயிருக்கு” என்றான். அம்மி நான்கு தூண்களில் ஒருயிடத்தில் மஞ்சள் குங்குமம் வைத்து இருந்தது.

இவன் கண்ணில் அந்த அம்மி எல்லாம் பட்டுள்ளதே?! ஒரு நாளைக்கு இன்னொரு கல் உருமாற்றம் பெற்றதை கவனித்திருக்கிறது என்ற எண்ணம் சிற்பிகாவுக்கு‌, அதோடு ஆர்யன் இத்தனை பெரிய மேடையில் தனக்கு மெட்டி போட வர, திருமண கூட்டத்திற்கு வந்தவர்கள் கண்டு தயங்கினாள்.‌

    அதுவும் தலைக்கு மேலே ட்ரோன் கேமிராவும் தியேட்டர் அளவிற்கு வீடியோ ஒன்று இவர்களையே சூட் செய்து ஓடவிட்டபடியிருந்தது.

இத்தனை பெரிய கூட்டத்தில் அவன் போடவேண்டாமே என, “நீங்க போய் எதுக்கு கஷ்டப்பட்டுட்டு, நானே போட்டுக்கறேன்‌” என்று யாருக்கும் கேட்காத குரலில் கூறினாள்.

ஆர்யன் அவளையே பார்த்து கீழே ஒற்றை கால் மடக்கி அவளுக்கு மெட்டி போட தயாரானான்.‌

 தயக்கம் எல்லாம் சிற்பிகாவுக்கு எக்கச்சக்கமாயா இருந்தது. 
ஆனாலும் அவன் காத்திருக்க வைக்க பிடிக்காமல் தன் பாதத்தை அம்மியில் வைத்தாள். 

   அம்மியில் சின்னதாய் பூ சுற்றி பெண்ணவள் பாதம் தாங்க காத்திருந்தது.

மெட்டியை எடுத்தவன் மருதாணி பாதத்தில் கட்டை விரலுக்கு பக்கத்தில் உள்ள விரலை பிடித்து அணிவிக்க சிற்பிகா ஆச்சரியமாக அவனை அளவிட்டாள்.

மன்னிப்பு என்ற வார்த்தையை உதிர்க்காமல் என்னால் ஊரை விட்டே படிக்க சென்றவன், என் பாதம் பிடித்து மெட்டி அணிவிக்க மட்டும் எப்படி ஒப்புக்கொண்டான்? கல்யாணம் செய்ய சம்மதித்தான், இந்த ஆச்சரியம் அவளை தொடர்ந்தது.

வலது இடதென இரண்டிலும் மெட்டி அணிவித்து அவளை மெதுவாக ஏறிட்டபடி எழுந்தான்.

பார்வை என்னவோ எந்த உணர்ச்சியை காட்டுகின்றதென்று பிரித்தறிய முடியவில்லை‌.

துளிரோ “ஏய்.. அண்ணா ஹாப்பி மேரீட் லைஃப்” என்று கன்னத்தில் முத்தமிட்டு “சர்வேஷ் அண்ணா பார்த்தியா அண்ணனே அண்ணிக்கு மெட்டி போட்டுடுச்சு. பெட் கட்டிய மாதிரியே மோதிரத்தை கொடு” என்று பிடுங்காத குறையாக வாங்கினாள்.

“என்னன்னா இப்படி பண்ணிட்ட, நீயா போடமாட்டனு நம்பி பெட் கட்டினேன்” என்றவன் ஆர்யன் என்ற பெயரிட்ட மோதிரத்தை போட்டிருந்த சர்வேஷ் தங்கைக்கு அதனை தாரை வார்த்தான்.

“அய்யா எங்கண்ணா பெயர் போட்ட மோதிரம்” என்று அதை மோதிரவிரலில் போட்டு லூசாக இருக்கவும் நடுவிரலுக்கு போட்டு பார்த்தாள்.

இங்கே எல்லோரிடமும் காட்டிவிட்டு தாத்தாவிடமும் தந்தையிடமும் காட்ட நினைத்தாள்.
மோதிரத்தில் கவனம் கொண்ட துளிரோ லிப்டில் சென்று மாடியில் பந்திருக்கும் இடம் செல்ல நுழைந்தாள்.

லிப்டில் விதார்த் மட்டும் இருக்க, “ஹாய் கொழுந்து” என்றதும் திடுக்கிட்டவளாக நின்றாள்.
சுற்றி கண்ணாடியிருக்க, தனக்கு பின்னால் விதார்த் இருப்பதை கண்டு யாருமில்லை என்ற நிம்மதி வந்தது.

“உன்னோட சிந்தனை எங்கயிருக்கு கொழுந்து‌. இங்க ஒருத்தன் இருக்கேன் என்றதே கவனிக்கலை” என்றான்.‌

“நீ.. நீயெங்க இங்க?” என்றாள் பதட்டமாக. யாரேனும் பார்த்தால் யாரு என்ன என்ற வினா பிறக்கும். பிறகு யாரென தெரிந்தால் பிரச்சனையாகுமே.

“சாதாரணமாவே என் கொழுந்து அழகுசிலையா இருப்ப. இன்னிக்கு உங்க பெரியண்ணா கல்யாணம் கல்யாணப் பொண்ணு மாதிரி அலங்காரம் இருக்கும். கண்குளிர பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்.

சும்மா சொல்லக்கூடாது டாப் டூ பாட்டம். சும்மா அசத்தற. தங்க ஓட்டியாணம், தங்கத்துல வங்கி, ப்ப்ப்பபா சும்மா தங்கத்துல ஜோலிக்கற. நகைகடையில வர்ற மாடல் மாதரி. பட்டுசேலை எக்ஸ்டாடினெரி. ஏய் உங்கண்ணி கூட இதே சேரி ஆனா கலர் வேறல?” என்றதும், “எங்கண்ணா எனக்குன்னு பார்த்து எடுத்தது. அண்ணிக்கும் எனக்கும் ஒரே மாதிரி” என்றாள்.

லேசான பதட்டம் குறைந்திருந்தது. அதுவும் விதார்த் இருபக்கம் கையூன்றி அவளை இன்ச் பை இன்ச் அளவிடவும், இத்தனை கூட்டத்தில் யாராவது கேட்டால் சமாளிப்போமென்ற எண்ணம் எழுந்துவிட்டது.

‌ ”நைஸ்.. ஆமா உங்க அண்ணாவுக்கு அந்த அக்காவை பிடிக்காதே எப்படி கல்யாணத்துக்கு சம்மதிச்சியா?” என்றதும் லிஃப்ட் கதவு திறக்க, வெளியேறாமல் நின்றாள்.

விதார்த்தே நம்பரை கீழ் தளத்திற்கு அழுத்திட, ”நான்‌ மாடிக்கு போகணும்.” என்று தாமதமாய் கூறினாள்.

"இதோடா. கதவு திறந்தப்ப போகலை. இப்ப மாடிக்கு போகணுமா? உன்னை பார்த்துட்டு அப்படியே போகலாம்னு இருந்தேன். என் அதிர்ஷ்டம் நீ நான் தனியா வசதியா லிப்ட்ல பேச வாய்ப்பு அமைந்தது." என்றவன் அவளை நெருங்க, துளிருக்கு இதயவோட்டம் எகிறியது.

“ஆமா என்ன சொன்னாங்க? எங்கண்ணனாவுக்கு அந்த அக்காவை பிடிக்காதா? ஏன்?” என்றாள்‌.

“முடிஞ்சா கதை. அது எதுக்கு நமக்கு? அந்த பார்ட் உங்க அண்ணா போர்ஷன். நம்ம லவ் ஸ்டோரிக்கு வா” அவளது மேவாயை நெருங்கும் சமயம் கதவு திறக்க, நான் போறேன்.” என்று ஓட, அவளது கையை பிடித்தான்.

“அய்யோ தனுஜா வர்றா‌. கையை விடுங்க” என்றாள்.

"அவளுக்கு தான் நான் உன்னை விரும்பறது தெரியுமே" என்றான். 

“அச்சோ நிலவன் மச்சான் வர்றார். பிறகு அப்பாவிடம் சொல்லிடுவார்” என்றவள் கையை உருவி ஓடினாள்.

“ஏய் கொழுந்து வளையல் கொழுந்து வளையல்” என்று கத்த, நிலவனை கண்டு ஓட்டமெடுத்திருந்தாள்.‌

தரை தளம் என்பதால் வீட்டுக்கு செல்லும் முடிவோடு வளையலை பத்திரப்படுத்தி காரை எடுத்து கிளம்பினான்‌.
எப்பொழுதும் வீட்டில் உபயோகப்படுத்தும் காரை எடுத்தால் மாட்டிப்பானென்பதால் சாதாரண காரை எடுத்து வந்திரீந்தான் விதார்த்.

அண்ணன் திருமணத்தில் போட்டோவில் விதார்த் பார்க்க ஸ்டேடஸ் விட எண்ணியவளுக்கு அவன் நேரில் வந்தது சந்தோஷமே. ஆனால் சின்ன பயமும் இருந்தது. கூடுதலாக அதுயென்ன ஆர்யன் அண்ணாவுக்கு சிற்பிகா அண்ணியை பிடிக்காதா? பிறகு இந்த கல்யாணம்? அண்ணி காலை பிடிச்சி மெட்டி போட்டார்‌. அய்யோ குழப்பிட்டு போயிட்டானே இந்த திமிர்பிடிச்ச விதார்த்" என்று மேடை நோக்கி நடந்தாள்‌.

ஒருபக்கம் மணமேடையில் ஆர்யனும்‌ மணப்பெண் சிற்பிகாவும் துளிரால் ஆர்யன் தன் பாதம் தீண்டியதை வியந்தபடி நின்றாள்.

ஏதோ பெரிய பொறுப்பும் தன் மேல் விழுவதாக தோன்றியது. நிபுணன் ஆதிரா வீட்டின் மூத்த மருமகள். அவர்கள் குடும்பம் எப்படி? மனிதர்களிடம் எப்படி பழகுவார்கள் என்ற நுணுக்கம் அறிவாள்.‌ கிட்டதட்ட ஆதிரா போல சிற்பிகா பழகும் குணமென்றாலும், ஆர்யனின் பார்வையில் ஆதிரா வேறு சிற்பிகா வேற ஆயிற்றே.

ஆர்யனுக்கு தன்னை பிடிக்காது, பெற்றவளுக்காக மணந்திருப்பாரா? எந்த பிரச்சனையும் வராமல் வீட்டை இதே போல பாசமாய் கட்டி காத்திட வேண்டுமென்று முடிவெடுத்தாள்.

மதியம் பதினொன்று வரை கூட்டம் வந்தவண்ணம் இருக்க, லேசாய் இருக்கையில் அமர முடிந்தது. சர்வேஷிடம் தன் நண்பர்கள் சாப்பிட்டாரா என்ற மற்ற விஷயத்தை கேட்டு கொண்டான்.

இப்படியே மாலை வரை வேஷ்டி சட்டை மாலை என்று நின்றவன், அடுத்த ரிசப்ஷனுக்கும் தயாராக வேண்டி மதியம் போல ஓய்வெடுத்தனர்.

மண்டபத்திலிருந்த அறையில் தனியாக இருக்க, ஆர்யனோ கையை தலைக்கு முட்டு கொடுத்து நீட்டி நிமிர்ந்தான்.‌

சிற்பிகாவோ தூக்கம் வரலை என்று துளிரோடு கதையளந்தாள். துளிருக்கு அண்ணாவுக்கு உங்களுக்கும் என்ன பிரச்சனை? கல்யாணத்துக்கு முன்ன கூட அழுதிங்களே என்று வினா தொடுக்க ஆசை. ஆனால் மணப்பெண்ணிடம் ஏதாவது கேட்டு பிரச்சனை உருவானால் அம்மாவிடம் திட்டு கிடைக்கும். எப்படியும் தங்கள் திருநிறையகம் வருவார் அப்பொழுது கேட்டுப்போமென காத்திருந்தாள்‌ .

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

33 thoughts on “என் நேச அதிபதியே -18”

  1. ரொம்ப ரொம்ப எதிர்பார்போடு போகுது கதை ஆர்யன் சிற்பிகா மோதல் காதல் காண ரொம்ப ஆர்வமாக உள்ளது சகிமா வாழ்த்துகள்

  2. சூப்பருங்க

    மெட்டி சீன் அழகான கதையோட்டம்..

    அருமை

  3. Sirpika confusion mode la yae suthura vitharth yaru sis avanuku kooda Sirpika kum aariyan kum nadantha issue pathi therinchi iruku indha aariyan manasula ippo varaikum enna oduthu nu than theriyala

  4. Super sis semma epi 👌👍😍 aaryan metti potadhu super pa eppdium Eva dhan manaivi nu mudivu pannitan adhan ellathukum thuninjitan pola parpom veetuku poi enna nadakum nu🙄

  5. Aaryan ellam therinjavan avanuku sariyana reason therinjita unnaium purinjipan sirpika. Don’t feel. Avan amma kaga mrg ok sonnalum una nalla pathupan eni paka paka un character therium avanuku

  6. எனக்கென்னவோ ஆர்யன் காதல் இல்லாம, அம்மாவோட வார்த்தைக்காக மட்டும் சிற்பிகா
    மணமுடிக்க சம்மதித்திருக்க மாட்டான்னு தான் தோணுது.
    அப்படித்தானே..,?

  7. Really metti scene osmmmm….. 🥰🥰🥰🥰❣️❣️❣️…. Indha vidharth yaru avanuku epdi sirpika aryan pathi theriyum…. Ayyo thalaiya pichikudhe…. Interesting ah poitruku sis story… Waiting for more episode

  8. மெட்டி சீன் அடி தூள்!!!… விதார்த் யார் வீட்டு பையன்???… சூப்பர் சூப்பர் எபி😍

  9. 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 interesting…….. Thulir ennamo thaniya trackla poitirukku enna aaga pogudho

  10. Metti seen azhagu 😍😍🤩
    Ana enna manasula ninachuttu pandranu thaan thayrilla 🤔
    Intha vidharth apti yaroda paiyana irrupan ??? Ivan pakkam yathum open aagama irrukeya 🧐

  11. அம்மி மிதித்து அருந்ததி பார்த்து மெட்டி போட்டாகி விட்டது
    இந்த துளிர் எப்போது அண்ணன் களிடம் மாட்ட போகின்றாலோ ஆனாலும் இந்த விதார்த் யார் என்று தெரியவில்லையே

  12. ஆனாலும் விதார்த் க்கு ரொம்ப தைரியம் தான்.
    நான் கூட எதிர்ப்பாரக்கல ஆர்யன் சிற்பி க்கு மெட்டி போட்டு விடுவான் னு.

  13. ஆர்யன் சிற்பிகா அவளுக்கு பெட்டி அணிவித்த காட்சி அருமை அக்கா….😍😍😍😍😍😍…. எல்லாம் துளிர் தான் காரணம்…. இந்த விதார்த் அவனால் துளிர் எப்போது மாட்ட போகிறாளோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!