அத்தியாயம்-19
திருமணம் முடித்து வீட்டிற்கு சென்று விளக்கேற்றி மூன்று மணி நேரம் வரை திருநிறையகம் நிறைந்தார்கள்.
அதன் பின் மீண்டும் மாலை வரவேற்பிற்கு, மண்டபத்தில் திஉம்பினார்கள்.
ரிசப்ஷனுக்கும் என்று கோர்ட் சூட் அணிந்து ஆர்யன் மேடைக்கு வரவும், அவனை தொடர்ந்து சிற்பிகா வந்தாள்.
சட்டென திரும்பி முடிக்க, சிற்பிகா அவன் தாடையில இடித்தாள்.
“டூ ஸ்டெப் கேப் விட்டு வர்றியா?” என்றான்.
“நான் கேப் விட்டு வந்தேன் நீங்க நின்று திரும்பவும் நான் பார்ககாம மோதிட்டேன். இனி கவனமா இருப்பேன்” என்றவளை மேவாயை தடவி கூர்ந்து பார்த்தான். இவளை எந்த ரகத்தில் சேர்ப்பதென்று ஆர்யனுக்கு குழப்பம்.
அடக்கமாக இருப்பதாக தோன்றவில்லை. அதேகணம் எதிர்த்து பேசும் வழமையும் கைவிட்டதாக தெரியவில்லை.
"துளிர் கோர்ட்ல ரோஸ் வைக்கலை" என்றதும் தங்கை துளிரும் எடுத்து கொடுக்க, அவன் அதனை மென்மையாக தன் இதயப்பகுதியில் வைத்தவன் சிற்பிகாவின் பார்வையால் தடுமாற்றம் கொண்டான்.
‘இவளிடம் முன்ன மாதிரி பார்வையில்லை.’ என்றவன் மேடையேறினான்.
“அண்ணா அண்ணிக்கு கையை கொடு” என்று துளிர் கூறவும் தங்கைக்காக கை கொடுத்தான்.
அக்கணம் சிற்பிகா ஒன்றை நன்கு புரிந்து கொண்டாள்.
ஆதிரா அம்மா மீது வைத்த பாசம் போல இவருக்கு அவரின் தங்கையை பிடிக்கும் என்று.
அதுவும் அவள் சொல்லை தட்டாதவராக என்றதும் சிறு முறுவல் உதிர்க்க, பார்க்கும் கண்ணுக்கு விருந்தாய் அமைந்தது இந்த ஜோடிப்போருத்தம்.
துளிரோ தன் உறவினரை தோழியை உபசரித்து வரவேற்றாள்.
தனுஜாவிடம் பேசியபடியிருக்க, விதார்த் காலையில் வந்தது போல மெதுவாக குனிந்தபடி வந்து அவளை நோக்கி கண்சிமிட்டினான்.
“இவனுக்கு என்ன திமிரு பார்றேன். எங்க அண்ணா கல்யாணத்துக்கு என்னவோ பத்திரிக்கை வச்சி அழைச்சது போல வந்திருக்கான். இதுல காலையில் பேண்ட் ஷர்ட், இப்ப கோர்ட் சூட், யாராவது நீங்க யாரு தம்பினு கேட்டு வைக்க போறாங்க. என் தலை உருளப்போகுது.
எங்கப்பா, சுமன் மாமா, பரதன் சித்தப்பா, நிலவன் மச்சான், சர்வேஷ் அண்ணா அய்யோ அங்கங்க நிற்கறாங்க. இன்னிக்கு எனக்கு பொங்கல் தான்.” என்று தனுஜாவிடம் கூறிவிட, “முதல்ல அவரிடம் போய் இங்கயிருக்க வேண்டாம்னு சொல்லு” என்று தனுஜா கூறவும் விதார்த்தை தள்ளிக்கொண்டு வந்தாள்.
“ஏய் என்ன பண்ணற? யாராவது பார்க்க போறாங்க” என்று அங்கும் இங்கும் கழுத்தை திருப்பி யாரேனும் கவனித்தார்களா என்று நோட்டமிட, “சாருக்கு காலையில வந்தப்ப என்னிடம் லிப்ட்ல பேசினப்ப தெரியாதா? இப்ப என்ன டிரஸ் போட்டு அசத்துறேன்னு பார்க்க வந்திங்களா?” என்றதும் விதார்த் தாடையில் முட்புதர் தாடியை தேய்த்து “பார்க்க தான் வந்தேன். ஆனா தனியா வரலை. இப்ப ஆளை விடு. அப்பறம் சொல்லறேன்” என ஓடினான்.
துளிருக்கு எங்கு சென்றாலும் விதார்த்தை குறிவைத்து நின்றாள்.
தந்தை வேறு நேராக விதார்த் இருக்கும் இடம் வரவும் நெஞ்சில் கைவைத்து விட்டாள்.
”விதார்தை இங்கிருந்து போக சொல்லு தனுஜா” என்று தோழியை நகர்த்த, “சொன்னா கேட்டுட்டு தான் மறுவேலை பார்ப்பார் பாரு” என்று எழுந்தாள்.
அதற்குள் அரசாங்க வண்டி வரிசையாக வந்தது. அதிலிருந்து நீதிபதி வித்யுத்-வம்சி கண்ணன் இறங்கினார்.
அவர் இறங்கியதும் அவர் வந்த அரசாங்க கார்களை அனுப்பிவிட்டார்.
நிபுணனோ "வாங்க நீதிபதி சார். கல்யாணத்துக்கு வருவிங்கன்னு இருந்தேன்." என்று வணக்கம் வைத்து அழைத்தார்.
“ஏன்டா முன்ன வக்கீல் சார் இப்ப நீதிபதி சார். கொஞ்சமாச்சும் ஒரு பிரெண்டா பாருடா.
காலையில கோர்ட்ல வழக்கு இருந்தது. வரமுடியலை” என்றான் வித்யுத். கபடி டீமாலும், வாலிபால் டீமாலும் எதிரெதிர் அணியாக நின்று போட்டியில் வெற்றி தோல்வி கனிகளை பெற்று நண்பர்களாக இருந்தவர்கள். வித்யுத் நாகர்கோவிலில் பெயரும் புகழும் பெற்றவர்.
நிபுணனுக்கு என்ன தான் வாழ்வியல் மேன்மையானாலும் வித்யுத்தை பார்த்தால் மட்டும் சற்று ஏக்கம் உண்டு.
படித்து முடித்து தந்தையை போல வக்கீல் தொழிலில் சென்று தற்போது நீதிபதியாக நிற்கின்றான்.
தன்வாழ்வு என்ன தான் பட்டப்படிப்பு படித்து முடித்தாலும் பருத்தி மில்லிற்கு சொந்தமானவனாக இருப்பது ஏற்றத்தாழ்வை தரவும் வாடுவான். என்ன தான் பெயர் புகழ் பஞ்சாயத்து தலைவர், பலபேருக்கு வேலை தரும் பருத்தி மில் தொழிலதிபராக இருந்தாலும் அவன் கடந்து வந்த பாதை கல்தடமே என்ற எண்ணம்.
“வீட்டுக்காரம்மாவை கூட்டியாந்திருக்கலாம். எங்கவூரு பிள்ளையை தானே கட்டியிருக்க” என்றார் நிபுணன்.
“கூப்பிட்டேன் டா. தம்பி ஆத்விக் அவன் மனைவி மஹா சென்னையிலிருந்து வந்திருக்காங்க. வீட்ல உபசரிக்க இருக்கணும்னு தவிர்த்துட்டா. அப்படின்னாலும் தனியா வரலைடா. என் பையன் விதார்த் இங்க இருக்கான். விதார்த் கம் இயர்” என்று அழைக்க, விதார்த் அவன் தந்தை வித்யுத் அருகே சென்றான்.
”என்னோட ஒரே பையன் விதார்த் வித்யுத். இங்க தான் எம்.பி.ஏ படிக்கறான். அட்வகேட் எடுடான்னா, நெப்போட்டிஸமானு அலுத்துக் கிட்டார். தாத்தா, தாத்தாவுக்கு தாத்தா இதே வக்கீலா கருப்பு கவுனா இருக்கு. நான் பிசினஸ் பண்ண போறேன்னு சொல்லிட்டான்.” என்று அறிமுகப்படுத்த, நிபுணன் கையைபிடித்து குலுக்கினார்.
"ஏன் தம்பி நெப்போட்டிஸம்னு நினைச்சி வக்கீல் தொழிலை விட்டிங்க. காசு பணம் இல்லாம நேர்மையா வித்யுத் மாதிரி இருக்கறவங்க கொஞ்சப்பேரு. அந்த வழில நெப்போடிஸம் இருக்கறதுல தப்பில்லையே." என்றதும் துளிர் தந்தை கைக்குலுக்கி பேச, "இல்லை அங்கிள் போரடிக்கும். நமக்கு பிடிச்சதும் செய்யணும் இல்லையா." என்று பண்பாய் மறுத்தான்.
நிபுணனை இருவரையும் அழைத்து ஏக கவனிப்பு செய்யவும், பாப்கார்ன் திண்ற தனுஜாவோ, “விதார்த் அண்ணா ஜட்ஜ் வித்யுத் சாரோட பையனாம். அய்யோடா கமுக்கமா அந்தண்ணா இருந்திருக்கு பார்றேன். துளிர் நீ பெரிய ஆளு தான். இத்தனை நாள் அந்தண்ணா யாருனுதெரியலை சீனியர் காதலிக்கிறார் என்றால் காதலிக்கணுமானு கேட்ட, இந்தண்ணா ஜட்ஜ் பையன் இனிபயப்படாம காதலிப்பியா?” என்றதும் துளிருக்கு சில ஏமாற்றம் சூழ்ந்தது.
இத்தனை நாளாக விதார்த் யாரென துளிர் அறிந்ததில்லை. அவனாக வந்து பேசி சிரிக்கும் போது ஜிவ்வென்று இறக்கை முலைக்கும். இன்று ஜட்ஜ் வித்யுத்தின் மகன். தந்தைக்கு தெரிந்தவரின் பையன் என்றதும் நிம்மதி பிறந்திருக்க வேண்டும். மாறாக மயான அமைதி அடைந்தது மனம்.
விதார்த் மேடையில் அண்ணன் அண்ணியோடு நின்று புகைப்படம் எடுக்கின்றான். அங்கே அவன் அப்பா தன் தந்தை நிபுணன் அன்னியோன்யமாக அளாவிட்டு கொண்டனர்.
துளிரோ முகம் சோர்ந்து நின்றாள்.
“அப்பா நீங்க பேசிட்டு இருங்க, இதோ வந்துடறேன்” என்று துளிர் முன்வந்தான்.
“ஏய் என்ன பேயறைந்தது மாதிரி இருக்க? நான் வந்தது பிடிக்கலையா? காலையில வந்தது உனக்காக. இப்ப அப்பா ரிட்டர்ன் போக கார் எடுத்துட்டு வந்தேன். கொழுந்து இங்க பாரு.” என்று நாடியை தீண்ட வரவும், வேகமாய் எல்லாரும் இருக்கும் இடமாக சென்று நின்று கொண்டாள்.
விதார்த் பயந்து கிடக்கா அப்பறம் பேசுவோம் என்று தந்தையருகே சென்றான்.
அதே நேரம் தமிழ் நாட்டு முதல்வர் அரவிந்த் சேதுராமன் வரவும், “ஓகே நிபுணன். நீ மத்தவங்களை கவனி. நான் கிளம்பறேன்” என்று வித்யுத் எழுந்தார்.
வித்யுத்தை பொறுத்தவரை அரசியலில் முதல்வர் பதவியில் இருக்கும் அரவிந்தை பற்றி நல்லபிப்ராயம் கிடையாது. அரவிந்த் முன்னால் கைதியாக சிறை தண்டனை பெற்றவர். அதெல்லாம் கபடமாய் கேஸேயில்வாமல் மாற்றி முதல்வரான பிராடு. மற்றபடி கண்ணாடி போல், நல்லவனுக்கு நல்லவரே.
நிபுணனின் தோழன் என்பதால் அவர் வர, வித்யுத் கிளம்பிவிட்டார்.
விதார்த்தோ “கொழுந்து நான் கிளம்பறேன்” என்று கூற வாசல் வரை வந்து எட்டி பார்த்தாள்.
அதன் பின் ஆர்யனின் ரிசப்ஷன் தந்தையின் தோழர் முதல்வர் அரவிந்தால் ஏதோ கட்சிக்காரர்கள் கூட்டமாக திகழ்ந்தது.
அவர் இருந்த பதினைந்து நிமிடம் ஆடம்பரமும் வெடிசத்தமும் காதை கிழித்தது.
திருமணத்திற்கு வந்தவர்களில் சாப்பிடாமல் அவசரமாக செல்பவர்களுக்கு தனியாக பேக் செய்த உணவுகள் ஒருபக்கம் கொடுக்கப்பட்டது.
ஆர்யனும் சிற்பிகாவும் ஓய்ந்து போய் அமரவே மணி பன்னிரெண்டை தாண்டியது.
எப்படியும் சாந்தி முகூர்த்தம் இன்று வேண்டாமென்றதால் துளிரோடு உறங்க சென்றுவிட்டாள் சிற்பிகா. அதே மண்டபத்தில் அறைகள் நிறைய இருக்க, ஒவ்வொரு குடும்பமும் உறங்க சென்றிருந்தனர்.
ஆர்யனோ தம்பியோடு மண்டபத்திலேயே படுக்க தயாரானான்.
நீண்ட நேரமாக நின்றிருக்க, அலுப்பில் படுத்தவுடன் உறங்கினார்கள்.
அடுத்த நாள் குளித்து முடித்து, காலை உணவும் உட்கொண்டு, வீட்டுக்கு வரவே சரியாக இருந்தது.
ஆனால் வந்ததும் கறிவிருந்து என்று சொந்தங்கள் அங்கு தான் வாசம் செய்தார்கள்.
அதனால் மணமக்கள் தனியாக பேச நேரம் அமையவில்லை.
அவர்கள் தனிமையில் பேசவும் ஆசைப்படவில்லை.
ஆளாளுக்கு சொந்தங்களோடு அசைவ உணவை சாப்பிட்டு இரவு ரயிலுக்கு பெட்டி படுக்கையை தயார்படுத்தினார்கள். இரவு உணவும் அழகாக பேக் செய்து தந்து விட்டார்கள்.
ஊருக்கு செய்பவருக்கு தனியாக வேனை நியமித்து அழைத்து போக உதவியாக இருந்தது.
வெண்ணிலா விகாஷ் அவர்களின் அப்பா அம்மாவான சுஜாதா கணேஷ் எல்லாம் வீட்டிற்கு நடையை கட்டியிருந்தார்கள்.
ஏழு மணிக்கு முத்துவேலன் மாமா தோட்டத்து பூக்கள் வந்திறங்கியது.
முத்துவேலன் மாமாவிற்கு பதிலாக அவர் பையன் சரவணவேலன் மற்றும் சர்வேஷ் கட்டிலை அலங்கரித்தார்கள்.
தனது அறைக்கு வந்து நின்ற ஆர்யனோ, சர்வேஷை பிடித்து நிறுத்தி இதெல்லாம் ரொம்ப முக்கியம். ஆகற வேலையை பாரு” என்று கடியவும் சரவணவேலன் ஆர்யன் மச்சானை நோக்கவும், “நீ இப்ப தானே பஸ்ட் இயர். உன்னை யாரு இங்க வரச்சொன்னாது?” என்று நிறுத்த கூறினான்.
. “மச்சான் நான் மாஸ்டர் டிகிரி அதுல பஸ்ட் இயரு. என்னவோ பேட்சுலர் டிகிரி படிக்கிற பஸ்ட் இயர் குழந்தையா?” என்று தந்தை முத்துவேலனின் நக்கலும் பேச்சும் வந்தது.
“என்னல எதிர்த்து பேசற கிளம்பு. ஒரு அலங்காரமும் பண்ண வேண்டாம்.” என்றான் ஆர்யன். சர்வேஷிற்கு ஏற்கனவே அண்ணா அண்ணிக்கு ஆகாது. அதனால சொல்லறார் என்று சரவணனை அழைத்து வெளியேறலாமென்றான்.
“அப்பா வையுவாங்க” என்று சர்வேஷ் அமைதி காத்தாலும் சரவணன் அடம் செய்திட, “ஏலேய் மக்கா பண்ணின அலங்காரம்வரை போதும்.” என்றதும் சர்வேஷோ “நீ வாடா” என்று இழுத்து சென்றான்.
"இருக்குற இம்சை போதாதுனு இவனுங்க வேற" என்றவன் வேஷ்டி சட்டையில் இன்னமும் மாப்பிள்ளை கோலமா? என்று சட்டை பட்டனை கழற்றிட முனைய, 'இப்ப டிரஸ் மாத்தினேன் வீட்ல நண்டு சிண்டு எல்லாம் கல்யாணத்துல விருப்பமில்லைனு மோப்பம் பிடிச்சிடும். அம்மாவுக்காக அந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டியாச்சு. இதையும் கொஞ்ச நேரம் சமாளிப்போம்.' என்று கதவை திறக்க, கையில் பால் செம்போடு சிற்பிகா தலைகுனிந்து நின்றாள்.
என்ன அதுக்குள்ள என்று கைக்கடிகாரத்தில் நேரத்தை பார்க்க, எட்டு முப்பதை தொட்டிருந்தது.
“ந… நல்ல நேரம்னு ஆதிராம்மா அனுப்பிவிட்டாங்க.” என்றதும் வலது கையால் ‘உள்ளப்போ’ என்று அனுப்பி விட்டு தாழிட்டான்.
சிற்பிகாவுக்கு முதுகு தண்டு சில்லிட்டது. அவளுக்கு ஆர்யன் என்றாலே எட்டடி தூரம் ஓடுபவள், ஆதிரா அம்மாவுக்காக தலையாட்டி தானாக சிங்கத்தின் அருகே வந்துவிட்டதாக மலைப்பு.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

Rendu perum pesika kuda mstranga ithula ithuveraiya iva ena pesa pora avan ena porano avana pathavevoduva sirpika
Interesting. I like your writing style
ஆஹா…. நீ தான் சிங்கப்பூர் பெண்ணாச்சே சிற்பிகா…
ஜமாய் பார்ப்போம்.
Sinkama Singapore ah😂
அருமை அருமை
விதார்த் யாரென்று தெரிஞ்சிருச்சு சூப்பருங்க
ரொம்ப எதிர்பார்க்க வைக்கிறிங்க மா ஆர்யன் சிற்பிகாவை புரிந்து கொள்வானா கொடுமை படுத்துவானா என்று எண்ண தோன்றுதுமா வாழ்த்துகள்
Superb epi interesting.. Vidhyuth ipo judge ah👌🏻👌🏻👌🏻 vidharth vidhyuth paiyan ah sema🥰🥰🥰 aravindh entry sema👌🏻👌🏻 aryan sirpi epo pesi epo love panna porangalo😳😳😳😳😳😳
Super nice way
super
Spruuu sis waiting for nxt ud
Nice sis ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰❤️
❤️❤️❤️❤️😅
வித்யூத் பையனா???… சூப்பர் கா!!… எப்போ பேசி ஒரு முடிவுக்கு வருவாங்க???
Vidharth…..
Wow super sis ellar entry um semma pa evanga renduperum eppo pesi eppo love pandradhu 🙄
Vidharth vidyuth oda paiyan ah oh ho nega sir sonna intro ithu than ah Sirpika amaithi kedaiyaathu than ah aana Aariyan oda indha kalyanam endha alavuku seri nu theriyala ivanga rendu perum pesanum nu kooda thought yae varala
Vitharth yarunu solliyachu thanks and story super
Super super super super 👌👌👌👌👌👌😍😍😍😍😍
Nice episode…..
இன்னைக்கு இப்படி இருக்கவங்க தான் பிற்காலத்தில் ஆதர்ஷ தம்பதிகளா இருப்பாங்க
Nethu tan veena akka nenaichen vidharth kalyanathuku vandhrupan ila Ivan oru Vela vidhyuth paiyana irukumo nu thonikittae irundhuchu mrng ungakitta kekalam nu irundhen kekka time kedaikala ipo epi padichadhum tan shock agiruchu guess panna maadhri Avan paiyan tan super….
Wow. Sema scene siss. Excellent narration sis. Ariyan still confusing.
Interesting and nice sis
Aryan epa maaruvan..but sirpi ponnu maathiruva
Ivanga rendu perum innum sariya pesikkavae aarambikkala…….I think kandippa rendu perum sandadhan potukuvanga😉😉😉😉😉😉😉😉😉😉😉
Super sema sema
Yahoooo…. Apovey nenacha vidharth vidyuth orey rhyming ah varudhry nu ipo cnfrm ayidychu…. 😄😄😄… Aravind sethuraman 🤔🤔🤔🤔idhu adhulla😳😳😳… Arakki la varuvanga la mrthyu voda real dad…. Bairav tharika voda payana varuvane mrthyu…. Andha CM Aravind sethuraman ivandhana😃😃😃😃😉😉😉😉. … But idhelam pogatum…. Thulir yen ipo sad agura… Appavoda frnd payan na jolly dhane… Y sogam😆Sirpika sikitaaaa😅😅😅😅😅Ennaga potho
Ada nama vamshi paiyana 🤩🤩🤩🤩🤩🤩🤩 aprom enna thulir un sied ok thaan ne clear aana poothum 🤝
Sirpi normal aa nadakka try pandrathu nalla thayrithu , aari ne enna plan paniruka ?
Eptium kandipa ithunga ipo normal aa kuda paysikka poorathu illa ithula 1st alangaram romba mukiyama 😂🫢
🥰🥰🥰
Interesting epi sis😀
அதான் வந்தாச்சே
Super sis ♥️♥️♥️♥️
Interesting
Super sis. Interesting
செம்ம episode sagi
ஓகோ…. இந்த விதார்த் வித்யூத் மகனா…. அதான் இவ்வளவு தைரியம்…. துளிர் இனி என்ன செய்ய போகிறாளோ….🤔🤔🤔🤔🤔🤔…. ஆர்யன் – சிற்பிகா ஜோடியின் திருமண நிகழ்ச்சிகள் இனிதே சிறப்பாக நடைபெற்றது சூப்பர் அக்கா….☺️☺️☺️☺️☺️☺️
Interesting ud
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
superb!!
Super super super super super