அத்தியாயம்-20
ஆர்யன் நிதானமாக மூச்சு விட்டு சிற்பிகா அருகே வரவும், “பால்” என்று நீட்டவும் “அங்கன வை” என்றான்.
காலில் விழவேண்டுமா என்றெல்லாம் சிற்பிகா யோசிக்கவில்லை விழுந்துவிட்டாள்.
ஆர்யன் இவளிடம் இதெல்லாம் எதிர்பார்க்கவில்லை.
“இப்ப எதுக்கு அரத பழசான கல்சரை பாலோவ் பண்ணற? தொட்டு தூக்கி விடணுமா?” என்று எரிச்சலடைந்தான். சாதாரணமாகவே இதெல்லாம் பிடிக்காது. இதில் பிடிக்காதவள் செய்யுமா போது அளவுக்கதிகமாக எரிச்சலடைந்தான்.
“பழைய கல்சர் தான். ஆனா அம்மாவுக்காக தானே நீங்களும் தாலி கட்டினிங்க. அப்படியிருக்க, நானும் எனக்கு வாழ்க்கை கொடுத்த உங்களுக்கு நன்றி சொன்னேன். ஓல்டு கல்சர் அதுக்கு யூஸாகுது.” என்றாள்.
“நீங்களும்னா? அப்ப நீயும் அம்மாவுக்காக கல்யாணத்துக்கு ஓகே சொன்னாரா?” என்றதும், மறுப்பாய் தலையசைத்து, ஆதிரா அம்மா, நிபுணன் ஐயாவுக்காகவும்” என்று இருவருக்காக என் திருத்தினாள்.
ஆர்யனோ “ஓ” என்றவன் “உட்காரு” என்றான்.
மெத்தையிலா? என்ற அதிர்ச்சியோடு முட்டைக்கண்ணே உருட்டினாள்.
அக்கணம் முன்பு துளிரும் சர்வேஷும் தரகர் கொடுத்த புகைப்படத்தை வைத்து தனக்கு வருபவளின் கண்ணை பற்றி விவாதிக்க, துளிர் குட்டி கண் என்று ஒரு பெண்ணின் புகைப்படத்தை நிராகரிக்க சர்வேஷோ குட்டி கண்ணா இருந்தா என்ன? என்று கேட்க அதற்கு துளிரோ எங்கண்ணாவுக்கு முட்டைக்கண்ணு மாதிரி அழகா கண்ணை உருட்டற அண்ணி தான் வேண்டும்.’ என்றது நினைவு வந்து தொலைத்தது.
“பைனலி நான் நடிக்க வேண்டியதில்லை. அதுக்காக உன்னை மொத்தமா ஒதுக்கிடுவேன்னு அர்த்தமில்லை. எங்கம்மா எனக்குன்னு உன்னை தேர்ந்தெடுத்திருக்காங்க.
நான் அந்தளவு மன்னிப்பு கேட்க முடியாதுனு சொல்லியும் இதே வீட்டுக்கு உன்னை எங்கம்மா எனக்கே மனைவியா அழைச்சிட்டு வந்தாங்கன்னா சம்திங் நீ ஸ்பெஷல் தான்.
சோ இப்ப இல்லைனாலும், எனக்குள்ள உன்னை பத்தின எண்ணங்கள் மாறும் அப்ப தாலிக்கட்டின முறைக்கு, முறையா வாழ்வேன்.
அப்படியில்லை இப்பவே லைப்பை ஆரம்பிக்கணும்னாலும், ஒரு ஆணா உன்னை என்னால ஏற்றுக்க முடியும்.” என்றதும் மெத்தையிலிருந்து எழுந்துவிட்டாள்.
“இல்லை… நான் கொஞ்சம் டைம் எடுத்துக்கறேன்” என்று அவசரமாய் மறுத்தாள்.
“இங்க வந்து பால் எல்லாம் கொடுத்தப்ப உன் பார்வை எதுக்கும் ஓகேனு தான் இருந்தது. அதனால் தான் நான் அந்த அர்த்தத்துல பேசினேன்.” என்று விவரிக்க, சிற்பிகாவுக்கு அவமானமாய் போனது.
“ஒருவேளை நீங்க என்னிடம் எதிர்பார்த்து நான் மறுத்து நீங்க அதுக்கு வேற கோச்சிப்பிங்களோனு நீங்க தீண்டினா நான் அதுக்கு ப்ரிப்பர் ஆனேன்.” என்று கையை பிசைந்து கூறினாள்.
எப்படியும் முன்பே கோபமாய் சுற்றுகின்றவன். ஏதேனும் மறுத்து அவமதிப்பு செய்வதாக தவறாய் அர்த்தம் சென்றுவிட்டால்? சிற்பிகா அதனை எடுத்துரைக்கவும், “உனக்கு அந்த கஷ்டம் வேண்டாம். எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. நீ ப்ரிப்பர் மைண்ட் செட்ல இருக்கிறது மற்ற விஷயத்துக்கு சரிவரும். இந்த மாதிரி தேவபந்தத்திற்கு இப்படி எக்ஸாமுக்கு ப்ரிப்பர் பண்ணிட்டு வர்ற மாதிரி வரணும்னு எந்த அவசியமும் இல்லை. சொல்லப்போனா இந்த அலங்காரம் ஆடம்பரம் எதுவும் கூடலுக்கு தேவைப்படாது. அது இயல்பான தருணத்துல மலரணும். எனிவே நீ தூங்கலாம்” என்றவன் கதவை திறந்து வெளியேறினான்.
ஆர்யன் இருப்பது மாடியறை அதனால் அவன் உள்ளே இருக்கின்றானா? வெளியே வந்து விட்டார்களா என்ற நோட்டமிட்டாலும் சட்டென அறிய இயலாது. யாராவது மாடிக்கு வந்து பார்த்தால் உண்டு. இந்த நேரம் யாரும் வருவதற்கு வாய்ப்பில்லை.
மல்லி பந்தல் அருகே வந்து நின்றான். பல்லியின் வாசம் வேறு அவனை மயக்கியது.
ஆழ்ந்து மூச்சுவிடவும் தன் வீட்டு பூவை அதுவும் இந்த நேரம் இப்படி வந்து ரசிப்போம் என கனவும் கண்டதில்லை. ஆனால் உண்மையில் அது தான் நிகழ்கிறது. அறைக்குள் சிற்பிகா தலையிலிருந்த பூவை கழட்டி விடுவதை கண்டான்.
அதோடு நகைகளை ஒரு அங்கிருந்த கப்போர்டில் கழட்டியும் வைத்தாள்.
நிம்மதியாக அவள் ஒருபுறம் தன் வேலையில் திளைக்க, ஆர்யனோ தூரத்தில் தன் வீட்டு வளர்ப்பு நாய் ‘ராயல்’ மண்ணை பிராண்டி படுப்பதை கண்டான்.
இவ எதுக்கு அம்மாவை தள்ளிவிட்டா? இப்ப வரை அது எதுக்குன்னு தெரியாமலே இருக்கோம். இனி தெரிந்துக்கணுமா?
அம்மா இவளை அப்பாவோட மில்லுல அனுப்பிட்டாங்க. ஏன் அம்மாவுக்கு ரொம்ப நெருக்கமானவளா இருந்தா அம்மா கூடவே சீர்த்திருத்த பள்ளிக்கே ஏதாவது உதவியிருக்கலாம்.
சீர்த்திருத்த பள்ளில இவ என்ன செய்துட்டு உள்ள போயிருப்பா? திருட்டு கொலை என்றால் அம்மா இவளை நல்வழிப்படுத்திருப்பாங்களா?
இவளிடம் சாந்தி முகூர்த்தமே இப்ப வேண்டாம் என்ற அளவுக்கு பேசிட்டேன். கையோட அன்னைக்கு நடந்ததை பேசியிருக்கலாம்.
ஆனா அந்த டேஸை அடியோட வெறுக்கிறேன். அதை நினைச்சா இவளோட தனி அறையில் நிற்கவும் முடியாது.
காரணங்களை தேடறதை விட காரணமில்லாம வாழ்வது எப்படியோ? என்று மலைத்தான்.
சிற்பிகா இவனுக்கு மேலாக பதட்டத்தை குறைக்கும் விதமாக தன் தலை பாரத்தை முதலில் களைந்தாள் பின் நகையை கழட்டி வைத்தாள்.
நிதானமாய் படுத்தவள் ‘இவருக்கு என்ன பார்த்தா எல்லாத்துக்கும் ரெடினு தெரிந்ததா?! நானே மறுத்தாலும் கோபமா இருப்பார் என்ன செய்யனு பயந்துட்டு இருந்தேன். நல்லவேளை ஆம்பளைனு என் சம்மதம் இல்லாம மேல விழலை. அதுவரை நிம்மதிடா சாமி.’ என்றவளுக்கு நிம்மதியான உறக்கம் கிட்டியது.
கீழே நிபுணன் அவரது ஜன்னல் பக்கம் திரையை விலக்கவும், மைந்தனின் உருவம் நிழலாய் தென்பட்டது.
ஆதிரா பக்கம் பார்க்க, இத்தனை நேரம் ‘நல்லபடியாக திருமணம் முடிந்தது என்று வாய் கிழிய பேசி முடித்து உறங்கியவளை கண்டு மைந்தனின் நிழலை கவனித்து பெருமூச்சை வெளியிட்டார்.
”என்ன சொல்லு கல்யாணம் எல்லாம் நமக்காக பண்ணணும். அம்மைக்காக ஐயனுக்காக ஆரம்பிச்சா முதல்ல இப்படி தான் இருக்கும்.
இதுங்க என்ன பேசி எப்படி ஒப்பந்தமாகி எனக்கு ஜீனியரை கொண்டாருவாங்களோ?! என்று நீரை அருந்தி படுத்துக்கொண்டார்.
அடுத்த நாள் அதிகாலையில் தான் ஆர்யன் உறங்கியிருக்க வேண்டுமென்று சிற்பிகா சத்தமில்லாமல் எழுந்து குளித்து முடித்தாள்.
ஏற்கனவே இங்கே வந்து பழகியதால் யாரையும் பார்த்து சங்கடப்படும் சூழல் இல்லை. ஆனால் முதலிரவு முடித்த ஜோடியாக தன்னை காண்பவருக்கு எப்படி முகம் காட்டுவதென்ற தயக்கத்தோடு அத்தை ஆதிராவை தேடினாள்.
நிபுணனும் ஆதிராவும் அவர்கள் அத்தை மாமா சமாதிக்கு சென்று வணங்கிவிட்டு மெதுவாக நடத்துவர், துளிருக்கு சிற்பிகாவே காபி எடுத்து நீட்டினாள்.
துளிரோ ஆர்வத்தோடு அண்ணியை ஏறிட, சர்வேஷோ ‘என்ன நேக்கா கல்யாணம் செய்துட்டு கமுக்கமா இருக்கார். இந்த அம்மாவுக்கு அண்ணாவோட ஆக்டிவிட்டிஸ் கண்ணுக்கே தெரியலையா? என்று ஏறிட்டான்.
அவனுக்கும் காபியை கொடுக்க, ‘தேங்க்ஸ்’ என்று பெற்றுக்கொண்டான்.
துளிரை போல அக்காவோ அண்ணியோ சர்வேஷின் வாயில் வரவில்லை.
ஆதிரா வரும் நேரம், துளிரோ விதார்த் கூறியது போல அண்ணாவுக்கு அண்ணியை பிடிக்கலைனா இந்தளவு தெளிவா கியூட்டா ஸ்மைல் பண்ணுவாங்களா? அதனால விதார்த் தவறா சொல்லியிருக்கலாம்.
தன் அண்ணன் ஆர்யனை பிடிக்காமல் போகுமா? என்று நினைத்தவளுக்கு அண்ணனுக்கு இவங்களை பிடிக்குமா பிடிக்காதா? என்று மெதுவாக காபியை பருகி சிற்பிகாவை காண, அன்று மலர்ந்த பூவை போல அழகாய் காட்சியளிக்கும் அண்ணியை அண்ணாவுக்கு பிடிக்காமல் போகுமா? என்று தன்னந்தனியாக சிரித்தாள்.
ஆர்யனோ தான் வந்ததும் கவனிக்காத தங்கையின் காதில் கைவைத்து திருகினான்.
“ஆ அம்மா காது. அய்யோ அம்மா” என்று சிறுவயதில் கூப்பாடு போடும் அதே ராகத்தோடு கத்தவும் ஆதிரா நிபுணன் ஓடிவந்துவிட்டார்கள்.
“அம்மா இந்த அண்ணாவுக்கு காதை திருகணும்னு அண்ணி காதை திருகலாம்ல, எப்ப பாரு என்னையே வம்பளக்குது.” என்று தேம்பினாள்.
”நான் திருகலை நீயா ஊரை கூட்டி” என்று ஆர்யன் கூறி “பாருங்கம்மா இவளை” என்று கூற அவனிடமும் காபியை முன் நீட்டினாள் சிற்பிகா.
ஆர்யன் மறுக்காமல் வாங்கி விட்டான்.
ஆதிராவோ, “உங்கண்ணாவுக்கு அண்ணி கன்னம் தான் பிடிக்கும். அறைய வேண்டி செய்வான். காதை எல்லாம் திருக மாட்டான். என்ன டாக்டர் அப்படி தானே?” என்று ஆதிரா கேட்க, சிற்பிகா விழிக்க, ஆர்யனோ அதான் மாட்டிவிட்டு வேடிக்கை பார்க்கிங்க. சந்தோஷமா?” என்று இடக்காய் கேட்டு அகன்றான். துளிரோ புரியாமல் நின்றாள்.
“ஐயா நாளை மறுநாள் டூயூட்டிக்கு போகணும். லீவு எதுவும் எடுக்கலை” என்று நிபுணனிடம் கூறினான்.
“உங்க வசதிக்கு ஏற்ப பார்த்துக்கோங்க ஐயா.” என்று நிபுணனும் உரைத்திட, “ஐயா நான் எப்ப வேலைக்கு வரணும் ” என்று சிற்பிகாவும் இடைப்புகுந்து கேட்டாள்.
நிபுணனோ மனைவி மகனை பார்த்து, “உங்க ஆதிராம்மாவிடமும், உங்க வீட்டுக்காரரிடமும் கேளுங்க” என்று முடித்துக் கொண்டார்.
ஆதிராவோ, “நானே இன்னிக்கு வரைக்கும் என் சர்வீஸை தொடர்ந்துட்டு இருக்கேன். உன்னை முடக்கி வீட்ல உட்கார வைப்பேனா? உன் ஹஸ்பெண்ட் ஆர்யனை கேட்டுக்கோ” என்று கன்னம் தட்டவும் ஆர்யன் இருந்த இடத்தை காண வெற்றிடமாக இருந்தது.
“அண்ணா காபி குடிச்சிட்டு மாடிக்கு போயிட்டார்” என்று துளிர் கிசுகிசுக்க, ‘இப்ப மாடிக்கு வேற ஏறணுமா? ஏன் தான் இந்த ஆம்பளை பசங்களுக்கு மட்டும் மொட்டை மாடில ரூமை வச்சிடறாங்களோ’ என்று மனதில் முனங்கி மாடிக்கு ஏறினாள்.
மாடிக்கு செல்லும் அவசரத்தில் வேகமாய் ஏற, ஆர்யனோ கீழே செல்லும் அவசரத்தில் வேகமாய் இறங்க முட்டி மோதினார்கள்.
சிற்பிகா தடுமாறி பின்னால் சாய, ஆர்யன் அவளிடையை பற்றி தாங்கினான்.
தலையில் டவலால் கொண்டையிட்டு இருந்தவள், சாயவும் டவல் கீழே விழுந்தது. கருப்பு அருவியாக நீண்ட சிகை கட்ட அவிழ்ந்தது.
டாக்டரின் எண்ணமெல்லாம் பெண்ணவளின் அதிகப்படியான இதய துடிப்பை கேட்டு கொண்டிருக்க, சிற்பிகாவுக்கு எதை பிடித்து தான் சரியாக காலூன்ற என்ற எண்ணத்தில் மிதந்தாள்.
வேறு வழியில்லை என்றதும் ஆர்யனின் திண்ம தோளில் கைவைக்க, வளையல் ஓசை செவியில் கேட்டதும் அவளது மருதாணி கைகளை கவனித்தான்.
திருமணத்திற்கென்று தனியாக, மணப்பெண்ணிற்கு பல்லாக்கில் மணப்பெண் இருக்க, முன்னும் பின்னும் சேவகர்கள் தூக்கி செல்ல யானை மயிலென்று ஒரு ஊர்வலமே சின்ன கையில் மருதாணி மூலமாக வரைந்திருந்தாள்.
அவனது கலை ஆர்வம்(?) மற்றொரு கையையும் கவனிக்க, அதில் குதிரையில் ஒரு இளவரசன் தன் மத்தளம் தவில் என்ற இசைக்குழுவினரோடு வருவது போல மருதாணி வரையப்பட்டிருந்தது.
அவள் கையை எடுக்கும் நேரம் உள்ளங்கையில் இதயம் வரைந்து அதில் ஆர்யன் சிற்பிகா என்ற பெயரை மருதாணியில் கவனித்தான்.
தன் தாய் தந்தை பெயரை இப்படி கையில் பச்சை குத்தியிருக்க கண்டதுண்டா. ஆதிரா நடுவே இதயம் அதற்கு பக்கத்தில் நிபுணன் என்றிருக்க கண்டதுண்டு.
இது மருதாணி என்றதும் ஆர்வம் அதிகரித்தது. காரணம் அன்னை துளிரிடம், “கல்யாண பொண்ணுன்னு தான் பேரு. கைக்கு மருதாணி கூட அவளே வச்சிக்கிட்டா. ஆனா நல்ல டிசைன். கல்யாண பிளவுஸ் கூட அவளே தச்சிட்டா. கல்யாண பிளவுஸ்னு இல்லை. அவ உடுத்தற எல்லாமே அவளே தச்சிடுவா.’ என்ற வார்த்தையை அவன் செவியில் முன்பு விழுந்ததினால் இன்று கையில் இருந்த மருதாணியை பார்வையிட்டான்.
நேற்றெல்லாம் அவள் கைப்பிடித்து கதைத்திருக்கலாம். அவன் தான் நிலவை நட்சத்திரத்தை ரசிக்க சென்று விட்டானே.
நன்றாக காலூன்றியதும் அவனது தோளிலிருந்து கையை எடுத்தவள், ‘நான் வேலைக்கு போகலாம்னு கேட்டேன்’ என்று கேட்க வந்தவனுக்கு அவனது தீண்டல் மயிர்குச்சரிக்க செய்யவும் அறையை நோக்கி ஓடினாள்.
மாடியில் அவள் கால் வைத்து ஏறவும், காலிலும் மருதாணி கண்டவன், கீழே செல்ல நினைத்தவன் பித்து பிடித்து அவளை தேடி வந்தான்.
அவசரமாய் வந்தவள் குளியலறை கதவை மூடிவிட்டு அவன் தீண்டிய இடத்தில் தன் கையால் அழிக்க முனைந்தாள். அது என்னவோ கையை வைத்து துடைத்தால் அழியுமா? அவனது சாதாரண தீண்டலே, அவள் உணர்வோடு கலக்க வைத்திருந்தான் ஆர்யன்.
-தொடரும்.
- பிரவீணா தங்கராஜ்

Nalla rasanai……..for maruthani……….super
nice
Sikram aaryan manasu mariduvan iva manasula ena ninachitu iruka therilaye thottatha alicha poguma sari aeiduma sirpika
Super …
Going interesting
Rasika arambichuta apram pidika arambikum super
Sema romance
Wow sema romance sis. Ariyan great. What a fantastic narration of mehandi. Excellent. Super sis.
Thank u. Recent ah oru marriage la ponnu Kai fullah irunthathu so story ku use panikiten
❤️❤️❤️❤️🫰🫰
Enna da nadakkuthu inga moment…… Spr going sis waiting for nxt ud 😍😍😍😍😍
இந்த ஆர்யன் மனதில் என்ன இருக்கிறது என்று கண்டு கொள்ள வெகு நாட்கள் ஆகாது…. மருதாணி வருணனை சூப்பர் அக்கா….👌👌👌👌👌…. இனி என்ன ஆகுமோ
அது சரி, பிடிக்காதவன் தொட்டா தானே அப்படி செய்யத் தோணும் புருசன் தொட்டதுக்கு ஏன் இந்த பாடு படறா….???
Nice sis waiting for next ud and flash back
Super pa.Ivanga flash back enna va irukum.
Nice
Yenma sirpika Avan thottutan yen ipadi pottu thechiturukku idhellam overah ila …..Munna epadiyo ipo oru alavadhu unkita pesuran ila adha paaru adhavitutu ipadillam panna…aryanae unna thottadhukunedhum nenaika mattan Pola…ana ne panradhu adhigam tan sirpi…. Super ka
Very nice…… Interesting
ரொம்ப ரொம்ப அழகாக போகுது கதை ஆர்யனின் மனம் சீக்கிரம் சிற்பியிடம் சாய்ந்துவிடும் போலேயே சிற்பி புரிந்துகொள்வாளா சகிமா வாழ்த்துகள்
❤️❤️❤️❤️👌👌👌
Megandhi design vera level enna imagination enna iva avan touch pannathu ku ipadi react panra ah aariyan ne mehandhi design ah parthutu feel agura ah aana anga feelings positive ah illa yae
Excellent
1st yantha reason ku Ava antha school ku poonnu thayriyanum , 1st nit preparation lam set aagathu enna irrunthalum pakkathula varum poothu bayam face la kattikuduthurum 🤦😶
Ipo Kai kaluvunatha avan patha avlo thaan paysanumnu ninachathu kuda kovathula kanama poirum 😤🤷
Kali arvam athigam poola ….🤩🤪avalye maruthani vachukittum avanga payr potturuka paravailla puilla konjam thayriruku 😊
Sissy…. Mehandi varnanai arpudham💕💕💕💞💞💞….
Ivan seekrama matikuvan poliye…. Iva ena thottaduke poi fresh agura…. 😦😦😦😦… Ipo avan vandhana soli mudinchuuuu…. Vandha konjodu nalla impression um gaaliiii… Sethaaaa😅😅😅😅😅😅
மயிலாஞ்சி மயிலாஞ்சி மாமன் உன் மயிலாஞ்சி.பையன் அவ மருதாணில விழுந்துட்டானோ.
Lovely epi 🥰🥰🥰🥰🥰 mehandi narration sema
Interesting. Super
Nice and interesting sis
Aha first step ah rasikka arambichachi eni poga poga love vandhiduma parpom 👌👍😍
Rasichu pudipanganu paatha pudichaprum rasikaranga.. very good
மயிலாஞ்சி மயிலாஞ்சி மாமன் உன் மயிலாஞ்சி.பயன் அவ மருதாணில விழுந்துட்டான்யா.விதார்த் வித்யூத் பையனா
மருதாணி சொன்னது சூப்பர் கா!!… எப்படி பேசி புரிய போதுங்களோ???… அருமையான எபி கா!!…
Nice epi sis 👍
மருதாணி design கண்முன்னே படமாக ஓடியது சோ ஸ்வீட் சகி
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Sema sema sis
😲😲😲😲🥰🥰🥰👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Interesting superb
Super super super