அத்தியாயம்-22
‘knife’ என்ற வார்த்தையை பார்த்து கோபமாய் தன் போனை எடுத்து வெளியே செல்ல முயன்றவளின் கையை பிடித்து கொண்டான் ஆர்யன்.
அவனாக அவளை தீண்டும் போது, அவனுக்கு உடம்பில் அணுக்கள் தாறுமாறாய் ரசவாதம் நிகழ்வதை அறிந்து திகைத்திருக்க, அவ்ளோ மனக்காயத்தில் இருக்க, அவன் தீண்டலில் முறுக்கினாள்.
ஆர்யன் பிடி இரும்புகரமாக இருக்க, அக்கணம் அவளது போன் ஒலித்தது.
அதனால் கையை விடுவித்து விட்டான்.
சிற்பிகாவோ போனை வெறித்து விட்டு, மூக்குறிந்து போனை காதில் வைத்து தள்ளி சென்றாள்.
‘ஆர்யன் ரொம்ப கஷ்டம்னு நினைச்சேன். இல்லை இவளோட வாழறது ஈஸி தான்.
அவளோட ஒரேயறையில் இருக்க தனக்கு வித்தியாசமா தோணலை. பேச பழக முடியுது. பழசை பேசி இது முட்டிக்கிட்டு இருப்போமோனு தவிச்சேன். அதெல்லாம் தேவைப்படாது. இவ கையை பிடிக்கிற அளவுக்கு என் மனசு நெருக்கம் காட்ட தான் செய்யுது’ என்று ஆர்யன் சிந்திக்க, போனை காதுக்கு கொடுத்துவிட்டு தேங்க்ஸ் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். சந்தோஷம்.’ என்றவள் முனுக்கென்று கண்ணீரை தாரை வார்த்தாள்.
இவ்வளவு நேரம் வேறு சிந்தனையில் இருந்தவனுக்கு அவளது கண்ணீர் கண்டதும் சிறு எரிச்சல் பிறந்தது.
அதோடு தேங்க்ஸ் சந்தோஷம் என்று பேசினாலே இதென்ன, அழுகை. ஆனந்த கண்ணீரா? என்று எண்ணினான்.
சிற்பிகாவிடம் பேசிய நபரோ, ‘”இப்ப சொல்லறேன் டி. எழுதி வச்சிக்கோ. என் புருஷனை அவமானப்படுத்தி அனுப்பிட்டல, அங்க என்னைக்காவது உன்னை வீட்டை விட்டு வெளியே துரத்துவாங்க. அப்ப பெத்த கடனுக்கு நீ இங்க தான் வருவ. வேண்டுமின்னா பாரு ஒரே மாசத்துல நீ அவனுக்கு சலிச்சிடுவ. அப்ப துரத்துவான்.” என்று நரேந்திரனின் மனைவி சாந்தி சாபத்தை அள்ளி வழங்க அதற்கு தான் நன்றி உரைத்து கொண்டிருந்தாள் நாயகி.
அதுவும் ஆர்யனை இம்சிக்கும் கண்ணீரோடு.
ஆர்யனோ யாரிடம் அழுதுட்டு பேசறா என்று இரண்டெட்டு எடுத்து வந்தான். அவள் மொட்டை மாடி பக்கமல்லவா பேசிக் கொண்டிருக்கின்றாள்.
சித்தி சாந்தியிடம் அருகேயிருந்த நரேந்திரனோ “பணக்கார இடமா கிடைச்சுதுனு அப்பனை உதாசினப்படுத்திட்டு போயிட்டலடி. அவனுக்கு நீ சலிச்சிப்போய் புள்ளி குட்டினு உன்னை மாத்தி ஓரத்துல போட்டுட்டு அவன் இன்னொருத்தியை தேடி போகணும் அப்ப இந்த குடிகாரன் மாதிரி தான் அவனும். பெரிய புடுங்கி இல்லைனு புரியும்பாரு” என்று வளவள கொழகொழவென கத்தி பேச ஆர்யனுக்கு அது நரேந்திரன் என்று புரிந்து விட்டது.
போனை பிடுங்கி, “யாரது சாந்தி?” என்றான்.
“சித்தி” என்றவள் போனை பெற, கல்யாணத்துக்கு கூட வரமுடியாதவங்க போன்ல வாழ்த்தறாங்களோ. இதுக்கு அழுவற” என்று ஆர்யன் கத்தவும் கீழேயிருந்து நிபுணன் படியேறி வந்தார்.
“என்னங்கயா சத்தம் கீழவரை கேட்குது? என்ன சமாசாரம்” என்று குரல் கொடுக்க, போனை துண்டித்த ஆர்யனோ, “ஒன்னுமில்லைங்க ஐயா. அந்த குடிக்காரன் நேத்து செய்த மடத்தனம் போதாதுனு, போன்ல வேற அழவைக்கற மாதிரி பேசறான். அதுக்கேத்த மாதிரி உங்க மருமக அழுகையை அருவியா விடறாங்க” என்று கூறினான்.
ஆதிராவுமே நிபுணன் கூடவே வர, சிற்பிகா தோளில் கைவைத்து ‘என்னவென்று கேட்க, “அவரு சண்டைப்போட்டவனோட கல்யாணம் கட்டியிருக்க, சலிச்சி போனதும் நீ இங்க தான் வந்து பிச்சை எடுக்கணும். நீங்க பணக்காரங்க அதனால், இவர் இன்னொரு பொண்ணோட வாழலாம். வாழாவெட்டியா திரும்புவனு சபிக்கறாங்கம்மா” என்று அழுதாள்.
ஆர்யனுக்கு நரேந்திரனை அடிச்சி கொல்லும் வெறி. அவன் தான் கீப் வைத்து சுத்துபவன்.தன்னை எப்படி எண்ணலாம்?
பைத்தியக்காரன் பெற்ற பொண்ணுக்கு எப்படி சாபமிட்டு பேசுகின்றானென்ற கோபம் பிறந்தது.
ஆதிராவோ, “எங்களை உனக்கு எத்தனை வருஷம் தெரியும். பணக்காரங்கன்னு பகட்டானவங்களா காட்டிக்கறோமா? எல்வாரும் ஒன்னுனு தானே மதிப்போம்.
ஒருவேளை உனக்கு என் பையன் மேல சந்தேகமா?” என்று கேட்டார்.
சிற்பிகா பதறியபடி, “அம்மா அப்படியெல்லாம் நான் நினைக்குமாட்டேன். கல்யாணம் ஆன அடுத்த நாளே அப்பாவிடமிருந்து சித்தியிடமிருந்து இப்படியான பேச்சு வரவும் அழுதுட்டேன்.
நீங்க எப்படின்னு எனக்கு தெரியாதா?! உங்க பையன் நிபுணன் ஐயா மாதிரி தான். நல்ல மனுஷர்.” என்று பாராட்டு பத்திரமாக பேசினாள்.
ஆதிரா சிற்பிகாவின் உச்சியில் முத்தமிட்டு “அவ்வளோ தான் சிற்பிகா” என்றுரைக்க, அப்படியே கீழே அழைத்து சென்றார்.
மதிய சமையல் ஆரம்பிக்க ஆளுக்கு ஒரு வேலையென்று பார்க்க துவங்கினார்கள்.
“சிற்பிகா இந்த காய்கறி கட் பண்ணு” என்று கத்தியை கொடுக்க, கத்தியை வாங்கி, காய்கறியை வெட்டினாள்.
கத்தி புதிதாக இருக்க காய்கறியை துண்டு துண்டாக வெட்டியது. சிற்பிகா எண்ணமோ கத்தியை பார்த்து ஆர்யனை கண்டாள்.
ஆர்யனும் இவளது அழுகை முடிந்ததா என ஆராய வந்தவன் கண்ணில் கத்தியோடு சிற்பிகா நிற்க, அவனது போன் வேறு கையிலிருக்க, ‘ம்கும் ‘knife’ வச்சிட்டு ‘wife’ முறைக்குது. இந்த நேரம் பெயரை மாத்தவும் தோணலை.
இவயென்ன ஆங்காரத்தோட இருக்காளோ? ஆனா நான் என்ன செய்ய? என்றவன் பிறகு சமாளிப்போமென விட்டுவிட்டான்.
அதற்கேற்றது போல தங்கை துளிர் அருகேயிருக்க, தங்கையோட கதை அளந்தான்.
புது மணப்பெண்ணோ மனதை மாற்ற ஆதிரா தான் காய்கறி நறுக்க கூறியது.
சிற்பிகாவோ ‘நான் என்ன கத்தியா? இப்படியா அவர் மனசை துண்டு துண்டா வெட்டறேன். இப்படி என் இதயத்தை நறுக்கியது அவரு. ஆனா பட்டப்பெயர் மட்டும் எனக்கு?’ என்று தந்தையிடமிருந்து தாவி தன்னவன் மீது எண்ணத்தை புகுத்தினாள்.
அதென்னவோ கட்டிக்க அப்படி யோசித்தவளுக்கு அவன் இந்தளவு தன்னிடம் உரையாடுவது கண்ணில் கருத்தில் பதியவில்லை. எல்லாம் விதியென்றே பழிப்போட வேண்டியது தான்.
நான் இந்த கூர்மையான ஆயுதமா? என் நேம் அப்படி சேவ் பண்ணிருக்கார் என்று மனதில் அதே உழப்பியிருந்தாள்.
திருமணத்திற்கு வந்த கூட்டங்கள் அலைகளாக இருக்க, முகம் காட்டவில்லை. அப்படியேயிருந்தாலும் ஆதிராம்மா நிபுணன் ஐயா எதிரே இவரை முகம் காட்ட முடியுமா? முடிந்தளவு ஆர்யனின் மனம் வருந்தாமல் வாழ வேண்டுமென்று முடிவெடுத்தாள்.
தன்னை தான் தந்தை சித்தி மற்றவர்கள் காயப்படுத்தி பழகிவிட்டதென்ற முடிவு வந்தப்பின் நெளிந்தாள். அதோடு ஆர்யன் கத்தி என்ற அடைமொழியுடன் தொலைப்பேசி எண்ணை பதிய வைப்பதில் ஆச்சரியம் என்ன? அவளால் தான் ஆர்யன் சொந்த தாய் தந்தையை விடுத்து, சொந்தவூரை விடுத்து சென்னையில் படிக்க சென்றது.
அதற்கு ‘knife’ என்று வைக்க வேண்டியது தான்.
சிற்பிகா அழுகை முகம் மறைத்து, மனமும் தெளிவானது. ஆனால் ஆர்யனை காணும் வரையில்…. மீண்டும் அவனை கண்டதும் நான் என்ன கெட்டவனா? என்ற சிறுப்பிள்ளைத்தனம் எட்டிபார்த்தது.
மணமுடித்தவனிடம் குழந்தை போல மாறுவது தானே பெண்ணவளின் மனம் ஏங்கும்.
ஆளாளுக்கு மதிய உணவையும் விழுங்கி, பேசி சிரித்து மிச்ச ஆட்களும் அவரவர் வீட்டுகாகா கிளம்பினார்கள்.
மாதவன் தங்கலட்சுமி இருவரையும் வழியனுப்ப, குடும்பமாய் கிளம்பினார்கள்.
ஆர்யன் சிற்பிகாவை மட்டும் வீட்டில் இருக்க கூறிவிட்டார்கள்.
துளிரோ, “அண்ணி நாங்க நைட் முத்து மாமா வீட்டுக்கு போயிட்டு வருவோம்” என்று தகவலை வேறு அள்ளி வழங்கி சென்றாள்.
மற்றவர்களை சர்வேஷ் காரில் ஏற்றிக்கொண்டு செல்ல, திருநிறையகம் கேட் தாண்டவும் ஆர்யன் மனைவி பக்கம் திரும்ப, சிற்பிகாவோ கத்திப்போல பார்த்து கடந்தாள்.
'நிறைய விஷயம் பேலன்ஸ் இருக்கு. இவளிடம் என்னன்னு பேச்சை ஆரம்பிக்க?' என்று சிற்பிகாவை பின் தொடர்ந்தான்.
“ஹலோ” என்று நிறுத்த வைக்க முயன்றான்.
‘என் பேர் கூட வாயில வராது’ என்றபடி சிற்பிகா ஹாலுக்குள் நுழைந்தாள்.
“கூப்பிட்டுட்டே இருக்கேன் நீ பாட்டுக்கு வந்தா என்ன அர்த்தம்? இங்க பாரு நான் அந்த நேரத்துலயிருந்த மனநிலையில அப்படி நம்பரை சேவ் பண்ணிட்டேன்.
அகைன் மாத்தணும்னு தோணலை. இப்ப என்ன உன் கண் எதிர்ல மாத்திடறேன்” என்று போனை எடுத்தான்.
“ஒன்னும் வேண்டாம். எனக்கு நல்லாவே தெரியுது. இந்த கல்யாணம் ஆதிராம்மாவுக்காக நடந்தது. அப்படியிருக்க நீங்க இப்படி தான் என் பெயரை சேவ் ப்ணணிருப்பிங்க” என்று முறுக்கி கொண்டாள்.
. ”ஓ அப்ப மேடம் என்ன பெயரை சேவ் பண்ணிருக்கிங்க?” என்று அவளது போனை எடுத்து நம்பரை அழுத்த, ”ப்ளீஸ் இப்படி அடிக்கடி வெடுக்குன்னு பிடுங்காதிங்க. போனை என் பர்மிஷனோட எடுங்க. பிரைவேஸி இல்லை” என்று துள்ளினாள்.
ஆர்யனோ மடமடவென எண்ணை அழுத்தியவன், "இல்லை." என்றான். அதோடுகையை கட்டி முறைக்க வேறு செய்தான்.
சிற்பிகாவோ திருட்டு விழிகளால் அங்கும் இங்கும் உருட்டி சேலையை முடிச்சிட்டாள்.
“என் நம்பர் உன் போன்ல சேவ் பண்ணவேயில்லை. இதுல தாம்தூம்னு குதிக்கற. ஆக்சுவலி நானாவது ‘knife’ போட்டிருக்கேன். நீ உன் போன்ல ‘x’னு கூட போட்டு வைக்கலை.
வொண்டர்ஃபுல்…
உண்மை தான் நீயுமே எங்கம்மா ஐயாவுக்காக தானே என்னை கட்டிக்கிட்ட? இனி உன் போனை தொடமாட்டேன்.” என்று அவளது கையில் வைத்தவன்.
”பிரைவேஸி தானே தாராளமா நீ எவ்ளோ நேரம் என்றாலும் தனியா இருக்கலாம்” என்றவன் அவனது அறைக்கு மாடிக்கு சென்றான்.
நீண்ட நேரமாக சிற்பிகாவோ அதேயிடத்தில் நின்றாள்.
சித்தியின் சாபங்கள் காலையில் கேட்டதும், தற்போது ஏற்பட்ட விரிசலும், அவளுக்குள் அச்சத்தை விதைத்தது.
சிற்பிகா ஒன்றும் பயந்தாங்கொள்ளி அல்ல. ஆனால் இந்த திருமணம் என்ற விஷயத்திற்கு அவள் தயாராகவேயில்லை. அப்படியிருக்க அதில் தலையை கொடுத்துவிட்டாள்.
அதிலிருந்து இனி விடுபட்டாலும் தவறே.
அவளுக்கு தலை சுற்றியது. அக்கணம் போன் வர, மயங்கமும் வந்தது. அதனை கைக்கு அகப்பட்ட இடத்தில் தொடுதிரையை நகர்த்தி பச்சை பட்டனை அழுத்திவிட்டு அப்படியே சரிந்து விழுந்தாள்.
சிற்பிகா அட்டன் செய்த போன் அவள் பேசவில்லையென்றதும் ஆர்யனுக்கு அழைத்திருக்க, அவன் உரையாடி அணைத்தான்.
‘என்கிட்ட சண்டை போட்டா ஆச்சி கூட போன்ல பேசமாட்டாளா இவ?’ என்று படியில் தடதடவென வந்தான்.
அங்கே சரிந்து மயங்கியிருந்தவளை கண்டதும், “மை காட்” என்றவன் அவள் கன்னம் தட்டினான்.
அசைவு இருந்ததே தவிர விழி திறக்காதவளை கண்டு வீட்டை பூட்டி விட்டு மாடிக்கு அள்ளி சென்றான்.
இதுவரை எந்த பெண்ணையும் இப்படி அள்ளி கொண்டு வந்ததில்லை. முதல் முறை வினோத மாற்றங்கள் அவனுக்குள் நிகழ்ந்தது.
மாடியில் சிற்பிகாவை மெத்தையில் கிடத்தினான். அவளை ஒரு மருத்துவனாக ஆராயும் விதத்தோடு ஸ்டெதஸ்கோப்பை எடுத்து அவளது நெஞ்சில் வைத்தான்.
இதயம் படபடப்பு வேகமாய் இயங்குவது அறிந்தான்.
-தொடரும்.
- பிரவீணா தங்கராஜ்

😍😍😍😍😍😍😍😍😍😍
Amazing ma
Super epi today but sikram mudinjiduchi sisy konjam daily epi poda mudiumanu parunga sisy. Arjun um varala
பயந்துட்டா போல
Dei Arya un no ava manasula save panni vachikita adhan ph lan save pannala k va adhukaga ava kuda sanda podadha…indha Jodi kuda skrm serndhu romance vandhrum Pola….veena akka ungalukku velai micham tan vidunga…
Interesting
Nice… Eagerly waiting for flash back
Sirpika oda flashback enna nu therincha than iva yen ipadi iruku ah nu theriya varum indha aalu ellam.appan ah petha ponnu ah poi ipadi pesuran
❤️❤️❤️🫰
Super sis very nice epi 👍👌😍 evanga renduperum kandipa utkarndhu pesina ellamey sari agidum parpom 🤔
Sema… Cute fighting
இவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒருத்தர ஒருத்தர புரிந்துகொண்டு வாழ்வாங்கன்னு பார்த்தா ரெண்டும் சண்டை கோழி மாதிரி சிலுத்துகிட்டு போகுதுங்களே.
Interesting sis
அந்த அப்பாவும், சித்தியும்🤦🏻♀️🤦🏻♀️!!… ரெண்டு பேரும் சண்டை போட்டே சேர்ந்துருவாங்க போலயே!!!… என்னாச்சு அவளுக்கு!!…
சூப்பருங்க
Payandurucho
ஆசிரியராக அறிவிருந்தும் நிபுணன் முன்னால் முட்டாளானா ஆதிரா அவளோட மருமக சிற்பிகா அவளோட ஆச்சி இறந்தப்ப கூட தைரியமா சமாளித்து தேறி வந்த துணிச்சல் காரி ஆர்யன் முன்னாடி குழந்தையாகிறாள்……
ஆர்யா உங்க அப்பா கொஞ்சம் முன்னாடி தான் யோசித்தார் பையன் பார்வை அம்புகள வீசரத பார்த்தா சீக்கிரமே குடும்பஸ்தன் ஆகிடுவான் போலன்னு நிபுணன் கணிப்பு பொய்க்காதுன்னு நிரூபிக்கிற……சிற்பிகா கூட வாழறது ஈசி தான்னு யோசிக்கற அளவுக்கு மாற்றம்……ஒரு வாரமாவது தாக்குபிடிப்பியா இல்ல வேலைக்கு போறன்னு சொன்ன நாள்ல ஹனிமூன் கிளம்புவியா…..எம்மாடி சிற்பிகா அவனாவது knife னு உன்னோட நம்பர வச்சிருக்கான் நம்ம என்ன பண்ணோம் அவனோட நம்பர அழிச்சோம நியாபகம் இருக்கா….,.. கல்யாணம் ஆகிடிச்சின்னு கடமைக்கு நடிக்காம இது கூட நல்லாத் தான் இருக்கு……
Superb epi interesting
ஆர்யன் – சிற்பிகா மோதலுக்கு காரணமாக இருக்கும் சம்பவம் பற்றி தெரிந்து கொண்டால் தான் இவர்கள் கோபத்தை பற்றி புரிந்து கொள்ள முடியும்
Super epi sis👍
Nice knife…..
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Super sis ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥰🤩👍👍🤩👍 waiting for next ud
பாவம்….! தொடர்ந்து நிறைய டென்ஷன் தரும் விஷயங்களே நடந்ததுல ரொம்ப பதட்டமாயிட்டாளோ என்னவோ..?
Sooperrrr seekirama rendu perum oruthara oruthar purinjikanum
Spr going sis…. Eagarly waiting for nxt epi 😍😍😍😍😍
Super super sis
Omg what happened to sirpu? Ariyan quick . Go to action. Sema intresting sis.
Superrrrr❤️❤️❤️
Nijama Ivan lam appaneye illa 🤬 chithi athukku mayla 🤦
Ariyan sikkarama sirpi ya purinjuppanu thonuthu but sirpi konjam late pic up thaan poola 😉🤪🤩
First night la heart ah touch pana sonna heart beat ah kekara
Super sema sema what happened to sirpika.
Super super super super super 👌👌👌👌👌👌😍😍😍😍😍❤️❤️❤️
Interesting ud
superb!!!!
🤩🤩🤩Wow… Aara seekrama mariduvan ivadha makkar panra… Aara nee pavam🤣🤣engarudhunda varinga kudumbathula kummiyadikave nu☹️☹️☹️☹️☹️yedheyyy mayangitala adhum knife nu per kagava…. Avandha pavam save kuda panla pera😒😒😒
Super super super super super
அருமை அருமை அருமை