புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

என் நேச அதிபதியே -24

அத்தியாயம்-24

மாலை வரும் பொழுது ராணியக்கா‌ வீட்டிலிருந்தார். திருநிறையகத்தின் அடுதல் அறை சாம்ராஜியத்தின் தலைவி. 

நிபுணனின் காலத்திலிருந்து இப்பொழுதுவரை அவ்வீட்டின் மக்கள் வயிறு வாடாமல் பார்த்து பரிமாறும் ஜீவன்.

“ராணி ஆச்சி சித்தப்பா வீட்லயிருந்து எப்ப வந்திங்க?” என்று சிற்பிகா கேட்டாள்.‌

“அட இப்ப தான் கொஞ்ச நேரம் முன்ன வந்தேன். நிபுணன் தம்பி இப்ப தான் இந்தப் பக்கமா ஊர்காரங்களை பார்க்க போனாரு. யாரோ ஒருகளவாணி ஊர் தண்ணி தொட்டியை உடைச்சி வச்சிருக்கானாம்.” என்று டீயை கொதிக்க வைத்தார்.

“ஆங்… ஆதிராம்மா?” என்று கேட்க, அவங்க இன்னமும் வரலை. ஏதோ சீர்த்திருத்த பள்ளில அடுத்து‌ ஆண்டு விழா நடக்கப்போகுதாம். அதுக்கான வேலையில இருக்காங்க.” என்றதும்”ஓஹ்” என்று ஸ்ருதி குறைந்து போனது.‌

‌ சிற்பிகாவையே நோட்டமிட்ட ராணிக்கு “என்னம்மா? புதுப்பொண்ணு புருஷனை கேட்கலையா?” என்று கேட்டதும், “அவர் ஏழு மணிக்கு தானே வருவார். மணி நாலரை தானே ஆகுது ஆச்சி” என்றாள்.

“பரவாயில்லை ஆர்யன்‌ வர்ற நேரத்தை எல்லாம் தெரிஞ்சு வச்சியிருக்கியே” என்றார்.

‘ஆமா நான் இரண்டு‌முறை ரோட்ல வர்றப்ப அவரை பார்த்தேன்.‌ அதனால நினைவிருக்கு’ என்று கூறாது சிரித்து வைத்தாள்.

“சரிடா நான் குருமாவுக்கு காய்கள் பண்ண எடுத்துட்டு வந்து பேசறேன்” என்றார்.

சிற்பிகா மணியை கவனித்தால் நாலரை தானே ஆகுது. ராணி ஆச்சி பின்னாடியே சென்று, “ஆச்சி ஈவினிங் தானே ஆகுது அதுக்குள்ள டின்னருக்கு சமைக்கணுமா?” என்றாள்.

“அட குருமா சட்னி செய்ய வேண்டாமா?” என்றாள்.‌

‌‌ “குருமா செய்துட்டு சட்னி எதுக்கு ஆச்சி?” என்று விழித்தாள்.

ராணி ஆச்சியோ "அட என்ன கண்ணு முழிக்கற? நம்ம வீட்ல என்னைக்கும் இரண்டு மூன்று குழம்பு வகை வந்துடும். 

டிபனுக்கு தொட்டுக்க கடையில விற்கற மாதிரி இரண்டு மூனு சட்னி, சாம்பார், குருமானு இருந்தா தான் வயிற்றுக்கு வஞ்சனையில்லாம சாப்பிட முடியும். 

சட்னி மட்டும் வைக்க முடியுமா? பேரன் ஆர்யன் எல்லாம் இரண்டு வகை இல்லாம சாப்பிட்டதேயில்லை. 

டிபன்னு இல்லை ஆத்தா, பொரியலும் இரண்டு மூனு இருக்கணும். 

காய்கறி தான் தோப்புல காய்குதே. போதாத குறைக்கு வீட்லயே தக்காளி கத்திரிக்காய் காய்கறி எல்லாம் விளையுது. அதெல்லாம் சமைக்கலைனா வீணாகிடுமே.

நம்ம வீட்ல தான் ஒன்னுக்கு மூன்று பிள்ளைங்க இருக்காங்க. வீட்ல விளையுற காய்கறி இரண்டு மூனு வச்சா சுவையா சாப்பிட போகுதுங்க.

நம்ம வீட்ல அள்ளி சாப்பிடறதை விட, அளவா கிள்ளி சாப்பிடுவாங்க. அதனால தானே நிபுணன் தம்பி எல்லாம் இன்னமும் காளையாட்டும் கலையா இருக்கு.

ஆர்யன் தம்பியை பாரு. நல்ல உயரம் அதுக்கேத்த உடம்பு. துளி சதை கூட கூடுதலா போட்டிருக்காதே.” என்றதும் ‘அவன் நல்லா வளர்ந்து வாட்டசாட்டமா இருக்கான். பதினேழு வயசுல கொஞ்சம் ஒல்லியா இருந்தப்பவே அந்த அடி அடிச்சான். இப்ப என்னைய விழுங்கற மாதிரி இருக்கார். இப்ப மட்டும் அடிச்சார் நான் மேல டிக்கெட் வாங்கிடுவேன்’ என்றவள் சிந்தனை ராணி ஆச்சி பேசியதில் சுழன்றது.

‘இவர் காலையில சட்னி மட்டும் அரைச்சேன் அமைதியா சாப்பிட்டார். இரண்டு வகை குழம்பு எல்லாம் கேட்கலையே. அதோட லஞ்ச் கூட புலாவ் உருளை வறுவல் கொடுத்தேன். அமைதியா எடுத்துட்டு போனார்.’ என்றவளுக்கு ஆர்யன் தன்னிடம் பேசியதெல்லாம் ஓட்டி பார்த்தாள்.‌

ஆர்யன் பேசும் போது எரிச்சலாய் இருந்ததால் விட்டால் போதுமென்று வேலைக்கு கிளம்பினாள். தற்போது ஆர்யன் பேசியதை மனதில் ஓட்டி பார்க்க, அவர் என்னிடம் இயல்பான உரையாடலை துவங்கியிருக்கார். நான் தான் வள்வள்ளு கத்திருக்கேன்.

சே எனக்கு ஏன் இப்படி எதையும் மறக்க முடியாத வியாதி. இந்த உலகத்துல மறதி வந்து எத்தனை பேர் ஹாப்பியா இருக்காங்க. ஆனா எனக்கு எதுவும் மறக்காம உசுரை வாங்குது.’ என்றவளுக்கு மண்டை பிளந்தது.

“என்னாச்சு அண்ணி தலைவலிக்குதா?” என்று துளிர் வந்து நெற்றி தீண்டி கேட்க, “இல்லைடாம்மா போரடிச்சது” என்றதும் துளிரோ “இந்த துளிர் இருக்கறப்ப போரடிக்குன்னு சொல்ல கூடாது அண்ணி. ஒரு இரண்டு நிமிஷம் இருங்க. சட்டுனு முகம் அலம்பி டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு இந்தா வர்றேன்.” என்று ஓடினாள்.

இந்த வீட்டில் நிபுணன் ஐயா, ஆதிரா அம்மா எப்பவும் போல பழக, துளிர் முன்பு அக்கா என்றவள் இப்பொழுது அண்ணி என்று கூப்பிடுவதால், புது உறவு கிடைத்த சந்தோஷம் சிற்பிகா முகத்தில் திளைத்தது. நிறைய பேர் அக்கா என்றதுண்டு. சிற்பிகாவுக்கு ‘அண்ணி’ புது அழைப்பு அல்லவா?!

முகம் விகாசிக்க துளிரின் அறையை பார்த்து நிற்க, விசில் சத்தம் கேட்டது.
சர்வேஷ் தான் விசிலடித்தபடி வந்து கொண்டிருந்தான்.‌

“ராயல் அப்பா அம்மா வரலை தானே?” என்று நாயிடம் கேட்க, அது அவன் காலை சுற்றி வந்தது.

‌ “லவ் யூடா” என்றவன் மீண்டும் விசிலடித்து புத்தகத்தை விசிறி போல வீசியபடி வரவும் சிற்பிகா முன்பிருந்த பழக்கத்திற்கும் மரியாதைக்கும் எழுந்தாள்.

‌ சர்வேஷ் விசிலடிப்பதை நிறுத்தியடி ‘இவங்க வேற இருப்பாங்களே. நிம்மதியா இனி விசில் கூட அடிக்க முடியாது’ என்று அவனது அறைக்குள் சென்றுவிட்டான்.

சூடாக மூன்று டீயை எடுத்து வந்த ராணி ஆச்சியோ, “எங்க பிள்ளைகளை காணோம்” என்று தேடினார்.

“துளிர் டிரஸ் மாத்த போயிருக்கா. அந்த தம்பி ரூமுக்கு போயிருக்கு” என்று கூறினாள் சிற்பிகா.

“டீயை எடுத்துக்கோ” என்றதும் ஆச்சி அம்மா வரலையா?” என்று கேட்க, “வேலையிருக்கு தாயி. அம்மா வர நாழியாகும் என்ன வேணும்” என்றதும், “கண்ணு லைட்டா கருவளையமா இருக்கு ஆச்சி.” என்றாள்.

“அதுக்கு எதுக்கு அம்மா. வெள்ளரிக்கா வச்சி எடு” என்று ஆச்சி நகர, “நான்‌ வேணும்னா டிப்ஸ் கொடுக்கவா?” என்று கேட்க, “சூர் அண்ணி” என்று கூற, டீ குடிச்சிட்டு படு” என்றதும் டீக்கு கொதிக்க வைத்த டிகாஷனை, காட்டன் பஞ்சில் தொட்டுகண்ணுக்கு கீழே ஒற்றி எடுத்தாள்.

“அண்ணி கருவளையம் போகுதோ இல்லையோ சுகமா உங்க கையால மஸாஜ் பண்ணி தூங்கற பீலாகுது” என்றதும், சிற்பிகா சிரித்தாள்.

பிறகு வெள்ளரிக்காயை வட்டமாய் கத்தரித்து கண்ணுக்கு மேலே வைத்து கதையளக்க ஆரம்பித்தார்கள்.

சோலியை குலுக்கி கீழே உருட்டி விட்டது போல பெண்கள் சிரிக்கும் சத்தம் ஆர்யன் வரும் போது கேட்க, வாசலிலேயே வண்டியை அணைத்துவிட்டு மெதுவாக வந்தான்.

ராயல் ஆர்யனின் நெஞ்சு வரை தாவி முடிக்க, அதனை கொஞ்சியபடி, “ஐயா அம்மா இல்லாதது போல இருக்கு” என்று வாங்கி வந்த பிஸ்கெட் பாக்கெட்டை பிரித்து ராயலின் தட்டில் வைத்து வந்தான்.

ஆர்யன் வரவும் சோபாவில் வீற்றிருந்த சிற்பிகா எழுந்திருக்க, "அண்ணி அண்ணி என்னாச்சு அமைதியாயிருக்கிங்க?" என்ற துளிரின் கண்ணில் இருந்து வெள்ளரிப்பிஞ்சை எடுத்து வாயில் போட்டான் ஆர்யன். 

“அண்ணா… அது என்னோட ப்யூட்டிக்கு வச்சது” என்று துளிர் எழவும், “என் தங்கை அழகுக்கு என்ன குறைச்சல்? யார் காலேஜில கருவளையம் வந்ததா சொன்னத” என்றதும் துளிருக்கு திக்கென்றது.

விதார்த் வந்து பேச, துளிர் முறுக்கி கொண்டு திரிய, சரியா பேசமாட்டேங்குற, சரியா தூங்கறதும் இல்லையா? கருவளையம் வந்திருக்கு? என்ன பாரு துளிர்” என்று சுற்றி சுற்றி வந்தவனை சட்டைசெய்யாமல் வந்துவிட்டாளே.

“போங்கண்ணா” என்று செல்ல, ஆர்யனோ தன்னை போக கூறி தங்கை செல்ல சிரிப்புடன் பார்த்தவன், தன்னையும் தங்கையையும் கண்டு சிரிப்பவளை ஏறயிறங்க பார்த்து மாடிக்கு சென்றான்.

“தம்பிக்கு செம்பருத்தி டீ” என்று ராணி ஆச்சி கையில் கொடுத்து மாடிக்கு அனுப்ப, திகைத்தவளாக வாங்கி படியேறினாள்.

ஆர்யனோ குளித்து முடித்து தலை துவட்டியபடி, ஷார்ட்ஸ் அணிந்து வர, “டீ கொடுத்துவிட்டாங்க” என்றதும் பொறுமையாக வாங்கினான்.‌

ஸப்பாடி’ என்று கண் நிமிர்த்த வெற்று மார்பில் ஈரம் சொட்ட நின்றவனை கண்டு, தூக்கி வாரி போட்டது.‌

ராணி ஆச்சி விவரித்த ‘ஆர்யன் தம்பியை பாரு. நல்ல உயரம் அதுக்கேத்த உடம்பு. துளி சதை கூட கூடுதலா போட்டிருக்காதே.’ என்ற வரிகள் நினைவு வர, அவன் கட்டுடலை கவனித்தாள்.

பெண்களுக்கு மட்டுமா உள்ளுணர்வு எச்சரிக்கும்? ஆர்யனுக்கும் சிற்பிகா பார்வை ஏதோவொரு உணர்வை விதைக்க, டீ கப்பை நீட்டியவன் டீஷர்ட்டை அணிந்தான்.‌

சிற்பிகாவுக்கு முகத்திலறைந்த உணர்வு. இந்த அசிங்கம் தேவையா? என்றது மனசாட்சி.

 சிற்பிகா கீழேயிறங்க அவளையே கூர்ந்து கவனித்தான். 

இரவு உணவுண்ணும் நேரம் வரை ஆர்யன் கீழே வரவில்லை.

நிபுணன் வந்து “ஐயா சாப்பிட வாங்க” என்றதும் தான் விழுந்தடித்து ஓடியது.

“என்னங்கயா தம்பி தங்கை பொஞ்சாதி இங்கயிருக்கறப்ப மேல என்ன செய்யறிங்க? போன் பார்த்திட்டு இருந்திங்களா?” என்ற நிபுணன் வார்த்தை ஆர்யனை மன்னிப்பு கேட்க வைத்தது.

“சாரிப்பா இன்னிக்கு செய்த ஆப்ரேஷன் ஒன்னு, சக்சஸ்னு சொல்ல முடியாது. இன்னொரு முறையும் ஆப்ரேஷன் பண்ண வேண்டிய சூழல் வரும். அதுக்கு நோட்ஸ் படிச்சேன்.” என்றதும் நிபுணன் கையை உணவு மேஜையில் வைத்து சாப்பிட அழைத்தார்.

ஆர்யனோ சிற்பிகா அருகே அமரவும், அவளோ அடிகண்ணால் அவனை தான் ஏறிட்டாள்.

‌ பின்னங்கழுத்தை தடவி சிற்பிகாவை காண அவளது திருட்டு பார்வை கண்டவனோ பெற்றவரையும், தம்பி தங்கையை தான் சட்டென பார்த்தான்.‌

யாரும் பார்க்கவில்லையென்றதும் திரும்பியவனுக்கு சிற்பிகா அவ்விடத்தில் இல்லை. எங்கப்போனா என்று கழுத்தை திருப்ப, "ப்ரதர் அண்ணி செய்த புலாவ் ரைஸை ஓவன்ல சூடுபடுத்த போயிருக்காங்க" என்றதும் "நான்‌ யாரையும் தேடலை." என்ற ஆர்யன் உணவை விழுங்க, "சர்வேஷ் அண்ணா கேட்டியா?" என்று துளிர் சிரிக்க, சர்வேஷிற்கு அண்ணன் பார்வை மாற்றம் அறிந்ததால் ஆச்சரியப்பட்டான். 

"அம்மா ஈவினிங் லேட்டா வந்திங்களா?" என்று ஆர்யன் பேச்சை‌ மாற்ற, "ஆமா ஆர்யன். அடுத்து ஆண்டு விழா வருது‌. எப்பவும் போல டான்ஸ் புரோகிராம் பண்ணலாம்னு ஏற்பாடு பண்ணிலாம்னா.." என்றதும் சிற்பிகா "கை தவறி விழுந்துடுச்சு அம்மா." என்றாள். 

ஆதிராவோ “இட்ஸ் ஓகே டா.” என்று நிபுணனை பார்வையிட்டார் ஆதிரா.

சிற்பிகா கீழே சிந்தியதை சுத்தம் செய்ய முனைய, “அம்மாடி நான் பார்த்துக்கறேன். நீ போ” என்று ராணி ஆச்சி அனுப்பவும், “சாரி ஆச்சி. ரியலி சாரி” என்று கண்ணீர் வராது கலங்கியவளாக நடந்தாள்.

நிபுணனை மனையாளிடம், “வேலை விஷயத்தை இனி வீட்ல பேசாத ஆதிரா” என்று மட்டும்‌ கூற ஆதிரா சம்மதமாய் தலையாட்டினார்.

ஆர்யனுக்கோ ஆண்டு விழா அப்ப தான் நான் அவளை அடிச்சது?’ என்ற எண்ணம் ஓடியது. ஆனால் அதற்காக இப்படி அதிகபட்சமாக இருக்க வேண்டியதில்லையே‌ என்றவனுக்கு யாரிடமாவது கேட்டுவிடலாமா என்று தோன்றியது.

ஆனால் யாரிடமும் கேட்டறியவும் ஆர்யனுக்கு விருப்பமில்லை.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

‌‌

32 thoughts on “என் நேச அதிபதியே -24”

  1. ஒரு விஷயத்தை பத்தி தெரிஞ்சுக்கணும்னா ஒன்னு சம்பந்தப்பட்டவங்க கிட்ட கேக்கணும் இல்லையா அவங்கள பத்தி அந்த சம்பவம் நடக்கும்போது பக்கத்துல இருந்தாவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கணும் . இது எதுவுமே செய்யாமல் மனசுல வச்சுக்கிட்டு இருந்தா இந்த கேள்விக்கு எப்ப தான் விடை கிடைக்கும்.

  2. Interesting. Sirika en evlo தடுமாற்றம்
    Suspense Aryan க்கு மட்டும் அல்ல எங்களுக்கு தான்

  3. ரொம்ப ரொம்ப சூப்பரா போகுது கதை ஆர்யனின் எண்ணத்தை சீக்கிரம் சிற்பி சொல்வாளா இல்லை ஆதிராவிடம் கேட்பானா அவனைவிட எனக்கு தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளதுமா சீக்கிரம் நடந்தது என்ன என்று சொல்லிவிடுங்கள் சகி வாழ்த்துகள்

  4. Sikram ena nadanthuchinu sollunga sisy interesting ah poitu iruku story nadula twist romba naala pothe ava ethayo ulla vachi kasta padura

  5. Super sis nice epi 👍👌😍 appdi enna dhan nadandhirukum 🙄🤔 seekirama sollidunga sis suspense thaanga mudiyala pa🤧

  6. சீர்திருத்த பள்ளியை பற்றி பேசினாலே சிற்பிகா தடுமாற்றம் அடைகிறாள்…. அப்படி அங்கு என்ன தான் நடந்து இருக்கிறது….🤔🤔🤔🤔🤔

  7. Aara nee pesama sirpi kitaye keklamla… Yen ivlo thayangura… Avalukum konjam relief ah irukum la unkita solita… … Heyyyheyyyy…. Sight adikriya sirpi….. 😅😅😅😍😍😍indha Thulir ku epo pooja podaporinganu dha nanum wait panitruka sissyyyyy…. 🤣🤣🤣🤣🤣😁😁😁😁pora pokula oru social service.. Edho ennala mudinjadhu🤣🤣🤣🤣🤣

  8. அட யாராவது ஒருத்தர் அப்படி என்ன தான் நடந்துச்சின்னு கொஞ்சம் சைல்லிட்டு தான் போங்களேன். எங்க மண்டை வலிக்குது இல்லை. ஆர்யனுக்கு கூட அப்புறம் சொல்லிக்கோங்கப்பா…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!