புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

என் நேச அதிபதியே -30

அத்தியாயம்-30

    ஆர்யன்‌ மனதில் சிற்பிகா காதலென்னும் மாயத்தை நிகழ்த்தியிருந்தாள்.‌

   இதற்கு முன் எந்த பெண்ணிடமும் இதயத்தை தொலைத்ததில்லை‌. ஏன் ஏறிட்டு கண்டதும் இல்லை‌. அதனாலே அன்னையை தள்ளிவிட்ட பெண்ணையே, தனக்கு மனையாளாக அன்னை முன் நிறுத்த, சிற்பிகா கழுத்தில் மாங்கல்யம் அணிவித்திருந்தான்.‌

    எப்படியும் தன் மனதில் காலம் போக இடம் கொடுக்கும் முடிவோடு. ஆனால் இயல்பிலும், பெற்றவர் வளர்ப்பிலும், மூத்த குழந்தையாக விரைவிலேயே மனைவியை புரிந்து இதயத்தில் இடம் கொடுத்து பழக ஆரம்பித்தான்.

  சத்தமில்லாமல் முத்தங்களை வாறியிறைத்தது எல்லாம் தான் தானா?! என்ற ஆச்சரியம் தோன்ற, தன் நிலையை கண்ணாடி காட்டியது.

   கத்தி இதயத்தை ஆழமா குத்திடுச்சு என்று மனைவியை தான் நினைத்தான்.

    முத்தமிட்ட கணம் சிற்பிகா மறுக்கவில்லை. அவள் தான் முதல் நாளன்றே தான் எப்படி பழகுகின்றேனோ அவ்வாறு ஏற்கும் மனதோடு வந்தாளே என்றதும் ஆர்யனுக்குள் வெட்கம் வெளிப்பட்டது.

    இரு கைகளை தேய்த்து சூடுபடுத்தி நெக்ஸ்ட் எப்படி மூவ் பண்ண? ஆர்யா டாக்டரா இருந்துட்டு இப்படி கேட்கறியே? அதுவும் மகப்பேறு மருத்துவம் படிச்சி முடிச்சி, ம்ம்…” என்றவன் மனசாட்சி அவனை கண்டு எள்ளியது.

   கீழே வந்து சிற்பிகாவை தேடினான்.‌

   அவனுக்கே இந்த தேடல்கள் புதிதாக இருந்தது.
   கொஞ்ச நாட்கள் முன்வரை இப்படி அவளை தேடுவாயென்று யாராவது கூறியிருந்தால் முறைப்போடு பார்வையால் பொசுக்கியிருப்பான்.

  துளிர் அறைக்குள் சப்தம் கேட்க, சிற்பிகா குரலும் மெலிதாக கேட்டது. தங்கை அறையில் வாயாட சென்று விட்டாள் என புரிந்திடவும், வழக்கத்திற்கு மாறாக, தங்கை அறைக்குள் நுழைந்தான்.‌

   “எப்பவும் அண்ணி, அண்ணா அப்படி தான். அதனாலயே ஹியர் ரிங் சின்னதா போடுவேன். உங்க ஜிமிக்கி பார்த்ததும் தான் அண்ணா உங்களை எல்லாம் காதை பிடிச்சி திருகலையானு இருக்கு.” என்று கதை அளந்தவளை கண்டு சிற்பிகா எழுந்தாள்.

  தன்னவன், தன் கணவன், தனக்கு எல்லா உறவுகளை கொடுத்தவன், தன்னை விட பெரியவன், டாக்டர் வேறு என்று எழுந்து விட்டாள்.
  
‌தங்கை பேசவும் காதை திருகி “என்ன போட்டு கொடுக்குற ஆஹ். ” என்று காது மடலை திருக, “அண்ணி என்ன சிரிக்கறிங்க.? இவரிடமிருந்து காப்பாத்துங்க.” என்றதும் சிற்பிகாவோ நானா இவரிடமா? என்ன சொல்வேன்? என்ற‌ ரீதியில் இருந்தாள்.

   ஆனால் தங்கை மீதிருந்த பார்வை தன்னிடம் நிலைப்பெற்றதும் ஆர்யன் தங்கையின் செவியை திருகுவதை விடுவித்திருந்தான்.‌

    “அம்மாடி நான் ஜூட்” என்று‌அண்ணனை அண்ணி பக்கம் தள்ளிவிட்டு, ஆதிராவை தேடி ஓடினாள் துளிர்.

    சிற்பிகாவின்‌ மீது விழ வந்தவன் காலை நன்றாக தரையில் ஊன்றிட மேலே விழுவதிலிருந்து தப்பித்தாள்.
ஆர்யன் ஒருவேளை தன் அறையாக இருந்தால் வேண்டுமென்றே கூட தன்னவளிடம் சாய்ந்தகருப்பான்.‌

சிற்பிகா ஆர்யன் நெருங்கி இருக்கவும் வெளியேற நடக்க, ஆர்யன் வழிமறைத்து நின்றான்.‌

  அவள் செல்லும் திசையெல்லாம் வழிமறைக்க “அச்சோ விளையாடிதிங்க” என்று அவன் நெஞ்சில் கைவைத்து தள்ளி ஓடினாள்.
  
அவளது மிருதுவான கைகள் தன் நெஞ்சில் பட்டு செல்ல, ஆனந்தம் கொண்டான்.‌

   சர்வேஷ் வரும் நேரம் துளிரோ அண்ணியை அழைத்து பூக்கட்ட துவங்கினாள்.

   சிற்பிகா பேச்சு வாக்கில் அவளும் பூக்கட்ட துவங்கினாள்.

   பெரும்பாலும் சிற்பிகாவுக்கு பூத்தொடுப்பதும் மாலை கட்டுவது போல வரும். அழகாக குண்டு குண்டாக மாலை போல மல்லியை தொடுப்பாள்.

சர்வேஷோ ஆதிராவிடம் கொடுத்து, "போஸ்ட் கவர் அவங்களுக்கு வந்ததாம்‌. வர்ற வழியில அவங்க வீட்டுக்கு பக்கத்து வீட்லயிருந்தவங்க என்னிடம் கொடுத்து விட்டாங்க" என்று நீட்டவும் ஆதிரா 'எவங்களுக்கு வந்தது?' என்று பார்வையிட, சிற்பிகா என்றதும் சின்ன மகனை தினுசாய் பார்த்து , "சிற்பிகா உனக்கு லெட்டர்" என்றதும் வாங்கினாள்.‌ ஆர்யனோ அவங்க' என்ற வார்த்தையில் தான் தன் தவறை உணர்ந்தான். 

தம்பியை பொறுத்தவரை நான் சிற்பிகாவை தாய்தந்தையருக்காக கட்டிய பெண் என்று எண்ணுகின்றானோ என்று புரிந்தது.

இன்றே மறுத்து அண்ணி என அழைக்க கட்டளையிட்டால் வார்த்தையால் அழைத்திடுவான். ஆனால் உணர்வாய் தன் வீட்டில் தன் அண்ணனுக்கு இணையான துணை என்ற மாற்றம் அவனுக்குள் வராதென்று நிதானமாக இருந்தான்.

கவரை பார்ந்ததும் முகம் பேறயறைந்தது போல மாறியது.
நாட்களையும் கிழமையும் கண்டு மௌவுனமானாள்.

‘எப்படி மறந்தேன்? என் வாழ்க்கையில இந்த விஷயம் மறக்கற அளவுக்கு என்‌ மறதி இருக்கா?’ என் குமைந்தாள்.‌

அதன் பின் வந்த நேரமெல்லாம் அமைதியின் சிகரமாக இருந்தாள். இரவு‌ அனைவரும் சாப்பிட பெயருக்கு சாப்பிட்டு எழுந்தாள்.

சிற்பிகா அமைதிக்கு அண்ணி என்று சர்வேஷ் அழைக்காதது ஒரு‌காரணமென ஆர்யன் எண்ணிக் கொண்டான். 

அதனால் தனதறைக்கு வந்ததும் தன்மையாக பேசலாமென்று இருந்தான். 

எப்படியும் எடுத்து சொன்னால், ‘அதனால என்னங்க சர்வேஷ் சின்ன பையனென்று’ பேசுவாள். அந்தளவு சிற்பிகா பக்குவம் கொண்டவளே.

மணி ஒன்பதாகவும் துளிர் கொட்டாவி விட்டபடி, அறைக்குள் செல்லவும் தான் சிற்பிகா மாடிக்கு நடந்தாள்.

ஆதிரா நிபுணனோ நாளை  சீர்த்திருத்த பள்ளி ஆண்டு விழா என்பதால் வரவு செலவு லிஸ்டை நிபுணனிடம் காட்டினார்.

“ஆண்டு விழாவுக்கு சிற்பிகாவையும் ஆர்யனும் வரவேண்டாம்னு நினைக்கறேங்க” என்றதும் நிபுணனோ “நல்லது. இங்கயே இருக்கட்டும்.‌ ஐயாவுக்கு டூயூட்டிக்கு அடிக்கடி லீவு எடுக்க முடியாது.” என்றதும் ஏதெனும் மிச்சமீதி விடுபட்டதா என்று பேச சர்வேஷ் துளிர் அவரவர் அறைக்கு சென்றிருந்தனர்.

ஆர்யனும் சற்று முன்பு தான் நைஸாக மாடிக்கு கழண்டிருந்தான். சிற்பிகாவிடம் பேச, பழக தனக்கு எடுத்து கொள்ளும் நேரமென்று சென்றவனுக்கு அவள் முதுகு காட்டி படுத்திருக்க, கதவை தாழிட்டு வந்தான்.

எப்பவும் போல பேன் ஏசி இல்லாமல் தான் படுத்திருந்த சிற்பிகாவுக்கு ஏசியை கூட்டிவிட்டு அருகே நெருங்கினான்.

ஒன்னு மருதாணி பாதம். இல்லையா, இந்த பளிங்கு முதுகு, இரண்டும் என்னை டிஸ்டர்ப் பண்ணுது’ என் நினைத்து முதுகில் தன் ஆள்காட்டி விரலால் கோலமிட்டான்.

சிற்பிகாவோ இமை திறந்து நெளிந்தாள். ஆர்யனின் தீண்டல் அவன் மூச்சுக்காற்று இரண்டுமே எக்காரணத்தோடு அணுகுகின்றானென்று சிற்பிகாவுக்கு தெளிவாக தெரிந்தும் பொசுக்கென்ற விழி நீர் கண்களில் நிறைந்தது.

 "சிற்பிகா... சிற்பி... சிற்பிகா... அந்த கடவுள் ஒரு‌ சிற்பத்தை செதுக்கி என்னிடம் கொடுத்துட்டார். 

நளினமா செதுக்கிய சிலை மாதிரி இருக்க, செவியில் குழைய, லேசான விசும்பல் ஒலித்தது.

ஆர்யன் திடுக்கிட்டு அவளை தன் பக்கம் திருப்ப, “நான்… நான் தூங்கணும். தனியா விடுங்க” என்று கூறிவிட்டாள்.

‌ தன் நோக்கம் புரிந்தும் அழுபவளை கண்டு, குழம்பினான்.

‌‌ “என்னாச்சு? ஏன் அழற? நான் தீண்ட கூடாதா? காலையில மாலையில கிஸ் பண்ணினப்ப கோஅப்ரேட் செய்த. இப்ப என்ன?” என்றான்‌.

"இப்ப எனக்கு பிடிக்கலை. ப்ளீஸ்." என்று கூறவும், "காரணம்?" என்றதும், "காரணம் சொன்னா தான் விடுவிங்களா? நீங்க டாக்டர் தானே. இப்ப வேண்டாம்னா விட்டுடுங்களேன். வேண்டாம்னு மனைவியே சொன்னாலும் வற்புறுத்த கூடாதுல" என்றதும் "கூல் கூல்" என்று முதுகிலிருந்து கையை எடுத்துவிட்டான்.‌ அதே போல நெருங்கியிருந்தவன் தள்ளி சென்றான். 

‘ஏதோ லெட்டர் வந்ததே என்ன லெட்டரா இருக்கும்?’ என்று ஸெல்பில் பார்வையிட்டான். எதுவும் அங்கில்லை‌.

முதல்ல தூங்கட்டும், ஆர்யன் அவசரப்படாதடா. என் தனக்குதானே உரைத்து கொண்டான்.

சிற்பிகாவோ ‘எப்படி எப்படி பிரபு இறந்த நாளை மறந்தேன். அவனோட நினைவு நாள்ல அன்ன ஆகாரம் எனக்கு செல்லாது. ஆனா நான் அந்த நாளையே மறந்திருக்கேன்.

இராமேஸ்வரத்துல இந்த நாளில் வருடம் தவறாது, பிண்டம் வச்சி ஆத்மா சாந்தியடைய பூஜை செய்வார்கள். இறந்தவருக்கு மறு பிறவி இல்லாத வேண்டுதலோடு. எல்லாம் செய்வார்கள். தகவலை மட்டும் அந்த குழு தபால் மூலமாக கூறி அதற்கான தொகையை வாங்கிப்பார்கள்.

எப்பொழுது தொகையை முன்கூட்டியே மாதம் முதல் நாள் தனித்து எடுத்து வைக்கும் நேரம், இந்த மாதம் அதற்குண்டான பணத்தை செலுத்தியிருந்தாள். அதன் பின் மறந்துவிட்டாள்.

இதில் தனக்கு திருமணம் அதுயிது என்ற கனவில் ஆர்யன் தீண்டலில் முத்தத்தில் பிரபு இறப்பை மறந்தே போனாள். இத்தனைக்கும் அவனிடம் தன் கடந்தகாலத்தை நீட்டித்து கூறிய கணம் கூட இந்த மாதம் தான் பிரபு தற்கொலை செய்து இறந்தது போனதை கூறவில்லை. அவளை பொறுத்தவரை இந்த மாதத்தில் தான் ஆதிராம்மா நிபுணன் ஐயாவின் வீட்டில் மருமகளாக, ஆர்யன் மனைவியாக மணந்து இவ்வீட்டில் அடியெடுத்து வைத்தது.

அதே நினைப்போடு உள்ளுக்குள் அழுதபடி இருந்தாள்.

இன்னமும் அவளுக்கான நேரம் தேவைப்படுகிறதென்று ஆர்யன் நிதானித்து கொண்டான்.

அழுதழுது உறங்கியவளுக்கு மூன்று மணி அளவில் உறக்கம் களைந்தது.
தலையில் ஆர்யன் கை இருக்க, திரும்பினாள்.

அவன் எட்டி தான் இருந்தான். ஆனால் அவனது வலது கை மட்டும் அவளின் தலை கோதியிருக்க வேண்டும் என புரிந்தது.

அதன் பின்னரே ‘அச்சோ அவர் நேத்து என்னிடம் அந்த அர்த்தத்துல நெருங்கியது போல இருந்தது. இப்படி அழுது மறுத்திருக்கேன். எத்தனை ஆசையா நேற்று மதியம் ஒரு பார்வை பார்த்தார். அவருக்கு நேத்து ஏமாற்றம் இருந்திருக்கும்.” என்று எழுந்தாள்.

குளித்துவிட்டு கீழே வரும் நேரம், வீட்டிலிருந்தவர்களோ, நாங்க சீர்த்திருத்த பள்ளிக்கு வெளியே போறோம் டா. வீட்டை கவனிச்சிக்கோ" என்றார்கள். 

எப்படி நாசூக்காக ஆண்டுவிழா என்றதை தவிர்த்து விட்டார்கள். நானும் இருக்கின்றேனே. ஆர்யன் மனம் வாடியகருக்கும். என்ற யோசனையோடு சரியென்று தலையாட்டினாள்.‌

  மணி ஏழாக மொத்தமாய் ராணி ஆச்சி உட்பட காரில் ஏறவும் மாடியிலிருந்தே கையசைத்து வழியனுப்பினான் ஆர்யன். 

சிற்பிகா கணவன் எழுந்து விட்டாரென டீ போட்டு எடுத்து மாடிக்கே வந்தாள்.

‌ “என்ன அவசரம் கீழ வந்திருப்பேனே” என்று கூற, “இல்லை.. ஹாஸ்பிடல் போவிங்க. லேட்டாயிடும்னு எடுத்தாந்தேன்” என்றாள்.

“எங்க… ஹாஸ்பிடல் போக? நேத்து பாம்பு கொத்தியவருக்கு இரண்டாவது ஊசி போடணும். ஊருக்கு அந்த பக்கம் போகணும். ” என தேநீரை பருகினான்.

“ஏமாற்றத்தை தந்துட்டேன் அது வந்து?” என்று தயங்க, “ஏமாற்றம் ரொம்பவே.‌ ஆனா காரணம் பார்த்தேன்… நேத்து வந்த லெட்டர்? பிரபு இறந்ததை மறந்திருக்க அதானே? ஆக்சுவலி உங்கப்பா கல்யாணத்துல என்ன கலாட்டா செய்து என்ன பண்ணப்போறாறுனு பயத்துல மறந்திருக்க. அதோட பிரபு உன்னோட க்ரஷ். க்ரஷ் எல்லாம் எந்த நேரமும் நினைவுக்குள்ள இருக்க மாட்டாங்க சிற்பிகா. நீ மறந்தது ரொம்ப பெரிய தப்பில்லை.” என்றான்.‌

சிற்பிகாவுக்கு ஆர்யன் பேச்சு தெளிவை தந்தது.
தந்தை எந்நேரம் என்ன செய்ய காத்திருக்கின்றாரோ என்று ஆர்யனை அதற்கு என்ன நினைப்பாரோ என்ற எண்ணங்கள் தான் குடைந்தது. பிரபு ஓரமாய் நினைவிலிருந்து ஒதுங்கி விட்டான்.

‌ அந்த வயதில் காதல் என்ற கோணத்தில் தற்போது எண்ண முடியவில்லை. அதே கணம் அந்த உணர்வுக்காக தான் ராதிகா டீச்சரையே குத்த போனாய். பிரபு உன் க்ரஷ். அவனை அக்காலம் பிடிக்கும். அந்தளவுக்கு பிடிக்கும்.

இன்று நிஜமான துணை உன் கண் முன் நிற்கின்றான்.‌ அவனின் ஆசையறிந்தும் நேற்று மறுத்தகருக்கின்றாய் என்றதும், “நேத்து என்னை முதல் முறை பெயர் சொல்லி கூப்பிட்டிங்க. ஆனாலும் உங்க விருப்பத்தை மறுத்திருக்கேன்.” என்று தப்பை எண்ணி வருந்தினாள்.

"அந்த நேரம் எது நடந்திருந்தாலும் அது பொய்யா இருந்திருக்கும். நல்லவேளை நீ மறுத்திட்ட" என்று கூறவும் சிற்பிகா ஆர்யனின் கண்ணோடு கண் நோக்க, அருகே வந்து நிதானமாக அணைத்தவன் 'கடவுள் எப்பவும் ஏதாவது காரணமில்லாம எதையும் செய்ய மாட்டார்‌ அப்படி தான் நீ விலகவும் காரணம் இருக்கலாம்னு தள்ளி நின்றேன்.‌" என்றதும் அவள் சிற்பிகா அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். 

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
‌‌

49 thoughts on “என் நேச அதிபதியே -30”

    1. Praveena Thangaraj

      ரியல் லைப்ல இந்த புரிதல் வர்றப்ப அந்த தம்பதியினருக்கு நாற்பது வயாதகியிருக்கலாம்‌. 😜

  1. Super. Wonderful understanding ariyan. Very soon sirpu will become your wife. Lovable ariyan. Interesting sis

  2. கணவன் மனைவி புரிதல் வாழ்க்கையில் மிக முக்கியம்….ஆர்யன் நிபுணணின் வாரிசாச்சே இதுகூட இல்லாட்டி எப்படி
    Nice episode

    1. ரொம்ப ரொம்ப அருமையாக போகுது கதையின் பயணம் ஆர்யன் சிற்பியிடம் கோபம் கொள்வானோ என்று நினைத்தேன் ஆனால் மாறாக புரிந்துகொண்டது மனதிற்கு மகிழ்ச்சியே நீங்க சொன்னமாதிரி இப்படியெல்லாம் கணவன் புரிந்து நடக்க நாற்பது வயதுகூட ஆகலாம் ஆனா எல்லா பெண்களும் எதிர்பார்க்கும் குணமும் இது தான் சகிமா வாழ்த்துகள்

  3. கணவன் மனைவிபுரிதல் வாழ்கையில் மிக முக்கியம் …ஆர்யன் நிபுணண் வாரிசாச்சே இந்த அளவூக்குகூட இல்லாட்டி எப்படி…..
    Nice episode…..

  4. Superb 👌
    அந்த புரிதல் இருந்தாலே வாழ்வு சொர்க்கம் ங்க..

    ரொம்ப சூப்பருங்க

  5. Wow semma understanding 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  6. Aaryan doctor tha nu confirm panitan avan porumai la. Crush mattum tha love kedaiyathu but apo athu thoni irukum but ipo athu aaryan ku mattuma un love maruma sirpika nee pesalanalum aaryan pesi un manasa matha try panran paravala good aarya

  7. Super sis nice epi 👍👌😍 nibunan paiyan ellaiya adhan evlo azhaga purinjikuran pa semma sirpikavum seekirama purinji nadandhukanum😊

  8. ஆரியன் ரொம்பவே ஜெனியூனா நடந்துக்கிறான். பட், சிற்பிகா கொஞ்சம் சைல்டிஸ் தான்.

  9. ஆர்யன் – சிற்பிகா ஜோடியின் புரிதல் அருமை அக்கா….👌👌👌👌👌👌👌…. ஆர்யன் அவனுக்கு இருக்கும் அந்த பக்குவம் நினைத்து வியப்பாக இருக்கிறது அக்கா….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!