புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

என் நேச அதிபதியே -32

அத்தியாயம்-32

''யாரவன் அவனிடம் என்ன தனியா பேச்சு?" என்று சர்வேஷ் கேட்டதும், 'அவரு அப்பாவோட பிரெண்ட் வித்யுத் சாரோட பையன் தான்" என்று பதில் தந்தாள். 

"ஓ... அப்படியா அப்ப அப்பாவிடம் சொல்லு. அப்பா அம்மா எதிர்ல பேசு. எதுக்கு சந்து பொந்துன்னு நின்று பேசின.‌" என்று அதட்டவும், துளிர் ஆடிப் போனாள். 

பெரியண்ணாவுக்கு தானே இந்த மிரட்டல் வரும். சர்வேஷ் அண்ணா சாதுவாயிற்றே என்று பாவமான முகத்தோடு நோக்கினாள்.

“இல்லை…‌ இது சரியில்லை. உன்‌ மூஞ்சில திருட்டுத்தனம் தெரியுது. உன்னை இங்க மாட்டி விட மாட்டேன். ஆர்யன் அண்ணனிடம் சொல்லி அப்ப கவனிச்சுக்கறேன்” என்று தங்கை பக்கத்திலேயே இலை போட்டு சாப்பிட ஆரம்பித்தான்.

மாமா முத்துவேலனும், அத்தை சாருலதாவும் கூட வந்திருந்தார்கள். ராகவி அண்ணி மணமாகி சென்றதால் சரவணவேலன் மட்டும் வந்திருந்தான்.

“ஏ மாமா பொண்ணு. ஏன் உம்முனு இருக்க? கண்ணு கலங்கியிருக்கு, கறிச்சோறு காரமாவாயிருக்கு” என்று கேட்டு தண்ணீர் பாட்டிலை முன் வைத்தான்.

"மச்சான் நீ எல்லாம் எதுக்கு அத்தை பையன்னு இருக்க? எங்களை கவனிக்காம?" என்று 'தங்கையெல்லாம் உன் கண்ணுக்கு தெரியலையா? என்பது போல இலை மறைவாய் கேட்டான். 

“நீ பொண்ணாயிருந்தா சைட் அடிச்சிருக்கலாம்.” என்றதும் சர்வேஷ் விழிக்க, “அத்தை பையனா இருந்தும் கவனிக்கலைனு சொன்னியே அதுக்கு சொன்னேன்.” என்று பரிமாறியவன் அடுத்த இலைக்கு பரிமாற தாவினான்.‌

'இந்த மச்சானுக்கு தங்கச்சி மேல எந்த ஆசையும் இல்லையா?' என்று தலையிலடிக்காத குறையோடு சர்வேஷ் சாதத்தை விழுங்கினான்.

விதார்த்தோ மறுபக்கம் சத்தமில்வாமல் நழுவியிருந்தான்.

“எனி பிராப்ளம் கால் மீ கொழுந்து.” என்று மட்டும் அனுப்பியிருக்க, போனை எடுத்து பார்த்து கைப்பையில் ஒளித்துவிட்டாள்.

சர்வேஷ் அண்ணா பார்த்து போனை பிடுங்கிவிட்டாள். தந்தையிடமோ தாயிடமோ உரைத்திடுவாரென அஞ்சி கோழி போல விழுங்கினாள்.

ஆதிரா நிபுணன் விழாவில் பிஸியாக இருந்தார். ராணி ஆச்சியோ ‘என்ன அழகா டான்ஸ் ஆடறாங்க’ என்று சிலாகித்தார்.

முத்துவும் சாருவும் அவர்களுக்குள் பேசியபடி நடக்க, விதார்த்தோ சரவணவேலனை பிடித்து நிறுத்தினான்.

“என்னடா சொல்லறான் உன் சின்ன மச்சான்? என் கொழுந்தை திட்டிட்டு இருக்கானா?” என்றதும் “திமிர் பிடிச்சவனே என்ற மாமன் பொண்ணை திட்டு வாங்க வச்சிட்டு கேள்வி வேற கேட்குற.

உனக்கு நல்ல காலம்டி பெரிய மச்சானிடம் மாட்டலை.‌ மாட்டிருந்தா சங்கு தான். என் பக்கத்துல வராதல. பிறவு நான் என்னவோ உனக்கு கூட்டுன்னு நினைப்பான்” என்று சரவணவேலன் தள்ளி சென்றான்.

“ஆமா நீ உலக அழகி உன் பின்னாடி சுத்தறேன்.‌ துளிர் அத்தை பையனா இருக்கவும் உதவி கேட்டா ஓவரா பண்ணற.
என்னடா பண்ணிடுவார் உங்க பெரிய மச்சான். அவருக்கு தெரிந்தாலும் பொத்திட்டு தான் போகணும். இதோ சின்னவன் போனான்ல அப்படி. ஏன்னா துளிர் என்னை விரும்பறா.” என்று பெருமையாக கூறினான்.

‌சரவணவேலனோ “பேசுவடா. நல்லா பேசுவ. வார்த்தையில கூட பெரிய மச்சானை ‘அவர்’னு வருது. நீயெல்லாம் அவர் எதிர்ல பேசுவ? பார்ப்போம் இப்ப தானே வகையா சின்னவனிடம் மாட்டியிருக்க, இவன் துளிரை என்ன பாடு படுத்தறானோ? மாமா அத்தையிடம் போட்டு தந்தான்னா நீ தப்பிச்ச. பெரியவரிடம் போட்டுக் கொடுத்த நீ மாட்டின டி மவனே. தள்ளி நில்லு. சின்னவன் என்னடான்னா என் தங்கச்சி என்ற கண்ணுக்கு தெரியலையா? களவாணி பசங்க எல்லாம் என்ற தங்கைக்கு நூல் விடறாங்கன்னு பார்வை பார்க்குறான்.
இனி உனக்கும் எனக்கும் கொஞ்ச நாள் பழக்கமே வேண்டாம் சாமி” என்று தன் நண்பனை கையெடுத்து கும்பிட்டு நழுவினான்.

‘ரொம்ப பில்டப் பண்ணறானே. பெரியவரிடம் போட்டு கொடுத்தா, என்ன ஆகறது? அவரு ஏற்கனவே காட்டான் மாதிரி அடிச்சது கண்ணுக்குள்ளயே நிற்குது. என் கொழுந்து அடி தாங்குவாளா? அவர் தங்கையை சட்டுனு கைநீட்ட மாட்டார் இருந்தாலும் இங்க வந்து கொழுந்துக்கு குடைச்சல் தந்துட்டேனோ? இதுல சந்துல என்னை களவாணினு சொல்லிட்டானே.. சரி நண்பேன்டா’ என்றவன் சிந்தித்தபடி நேராக நிபுணனை இடிக்க சென்றான்.

“தம்பி” என்றதும் திமிர, “அட நம்ம நீதிபதி வித்யுத் பையன் தானே நீங்க. உங்க அப்பா வந்திருக்காரா?” என்றதும் ‘இல்லை’ என்று தலையாட்டினான்.

"அட வர்றேன் முத்து" என்றவன் விதார்த் நிற்காமல் சென்றதால் அதன் பின் கேட்க மறந்தவாறு நடந்தார் நிபுணன். 

போச்சு போச்சு’ இன்னிக்கு யார் முகத்துல விழிச்சேன்.‌ ஒருத்தர் மாத்தி ஒருத்தர் பார்த்துட்டாங்க. எப்பவும் நைஸா போய் நைஸாக வந்திடுவேன்‌ இன்னிக்கு வகையா நானா ஆஜராகிட்டேன். அப்பாவிடம் போன்‌போட்டு கேட்பாரோ? கேட்டா பார்த்துக்கலாம். நாங்கலாம் யாரு’ என்றவன் நாகர்கோவில் நோக்கி வண்டியை விடுத்தான்.

கொழுந்தோ விதார்த்தால் முகம் வாடி சின்ன அண்ணன் பிடியிலேயே இருந்தாள்.

வீட்டிற்கு சென்று காதலனா என்றால் என்ன பதில் சொல்ல என்று பயந்தாள். அவளுக்கு விதார்த்தை பிடிக்கும்‌‌. அதே சமயம் விதார்த் தந்தை வக்கீலாய் இருந்த காலத்தில் “என்ன நிபுணா பையனை வளர்த்து வச்சியிருக்க? ஒரு பொண்ணை அடிச்சிருக்கான். அவங்க அம்மா சாரி கேட்க சொல்லியும் கேட்காமல் வர்றான்.

இதே போல வளர்ந்தா தப்பு சரியென்றதை கண்ணால பார்த்து காதால கேட்டு முடிவுப் பண்ணுவான். தீர விசாரிக்குமென்ற அறிவே வராது.

வக்கீல் என்பதால் இந்த பேச்சை தான் வித்யுத் அன்று உரைத்தது. 

கூடுதலாக பார்த்து‌ நிபுணா இதே அங்க பொண்ணுயிருக்கற இடத்துல ஒரு பையன் இருந்திருந்து உன்‌மகன் அவசரத்துல அருவா எடுத்து உன்னை போல வெட்டிட்டா என்னயிருக்கும்‌.

மதர் செண்டிமெண்ட் இருக்கலாம் ஆனா வர்ற காலம் எல்லாம் கலியுகம். அதுல கெட்டவங்களுக்கு மத்தியில சகிப்பு தன்மையோட வாழணும்‌. கோபம் வந்தா அருவா கத்தின்னு கையில எடுக்க முடியாது.” என்று கூறிவிட்டு சென்றதால் நிபுணனுக்கு மனம் தாளவில்லை‌.

ஏற்கனவே தான் படிப்பும் இளமையும் நான்கு சுவரில் கடந்ததால், வித்யுத் வக்கீலாக கண்முன் நின்றது நிபுணனுக்கு கூனி குறுக வைத்தது. இதே தன் ஆத்திரம் நிதானம் இருந்தால் வித்யுத் முன் மருத்துவனாக நின்றிருப்பான் நிபுணன்.

மருத்துவம் படிக்க முடியாத தன்னை நினைத்து புளங்குவதை விட, மகனை மருத்துவம் படிக்க நினைத்தார்‌.

இடையில் நிறைய சந்தர்ப்பம் சூழ்நிலை வித்யுத்தை பார்க்க நேர நிபுணன் பக்குவம், தன் தாழ்வுநிலை வித்யுத்திடம் மட்டும் இறங்கியதென்ற பரிமாணம் தன் மனதிலிருந்து களைந்துவிட்டார். ஆனால் சிறு வயதில், நிபுணன் ஆதிராவிடம் புலம்பும் நேரம் ‘வித்யுத் வக்கீல் நான் டாக்டர் ஆகலையே ஆதிரா. நான் அவனிடம் தாழ்ந்துட்டேன். அவன் முன்ன போக பிடிக்கலை.’ என்று வருந்தும் நேரம் துளிர் மனதில் வக்கீல் வித்யுத் அங்கிள் என்றால் தந்தைக்கு பிடிக்கவில்லை என்ற எண்ணம் ஆழ்ந்து விட்டது.

விதார்த்தை மணந்தால் தந்தை நிம்மதி குலையும் என்று துளிர் ஒருபக்கம் விதார்த்தை தவிர்க்கும் அளவிற்கு தான் நடந்து கொள்கின்றாள்.

முன்பு ஆசையாக பார்க்கும் துளிர் கண்கள் மாறுபாட்டால் பின் வாங்கும் ரகமாக மாற விதார்த் அறிந்து விட்டான்.

துளிரோ சாப்பிட்டு முடிக்க சர்வேஷோ, “கையை கழுவிட்டு வருவியா? இல்லை யாருக்காவது வெயிட் பண்ணறியா?’ என்றதும் “சர்வேஷ் அண்ணா என்னை அசிங்கப்படுத்தாத” என்று நகர்ந்தாள்.

சர்வேஷ் இம்மியும் முகபாவத்தை மாற்றாமல் நடையை கட்டு என்பதாக பாடிகார்ட் வேலையில் நடந்தான்.‌

துளிருக்கு வேறுவழியின்றி அண்ணனை திட்டவும் வழியின்றி இருந்தாள்.

ஆர்யன் அண்ணனிடம் சொல்லிடுவாரா? என்று பயந்து வந்தாள்.


இங்கு ஆர்யனோ தீவிரமாய் சிற்பிகா முதுகில் கோலமிட்டு வருடினான்.

அவளோ நெளிந்தபடியிருக்க, “ஹனிமூன் எங்க போகலாம்?” என்றான்.

“உங்கயிஷ்டம்” என்றதும் அவளது முகத்தை நிமிர்த்தி, “நடந்து முடிஞ்சதுல knifeகு இஷ்டமில்லையா?” என்றதும் வெட்கம் கொண்டவள், “இஷ்டமில்லாம தான் என் ஆர்யன்னு சொல்வேனாக்கும்.” என்று எழுந்தவளை எழ விடாமல் அழுத்த பெண்ணவள் முன்னழகு அவன் நெஞ்சில் மோதியது.

“எங்க எழுந்து போற?” என்றவன் சிகையில் கையை நுழைக்க, “குளிச்சிட்டு வந்துடலாம்னு” என்றதும், இறுதிசுற்றுல குளிச்சிக்கலாம்.” என்றவன் கதை பேசவே ஆசைக்கொண்டான்.

"இப்பவே மணி நாலாகுதுங்க. குளிச்சிட்டு கிளம்பினா நல்லது." என்று கூற விடுவித்தான்.

அவளும் குளிக்க சென்றுவிட, மெத்தையின் விரிப்பை ஒழுங்குப்படுத்தினான்.

 சிற்பிகா தலைக்கு குளித்து முடித்து துண்டை கட்டி வரவும், மதியம் உண்ட டிபன் கேரியரை கழுவி அடுக்கி வைத்தாள். அதற்குள் ஆர்யன்‌ குளித்து வந்தவனுக்கு டீயை கொதிக்க வைத்தாள். 

வாசலில் கார் சத்தம் கேட்டதும் ஜன்னல் வழியாக பார்த்து, ஆதிராம்மா ஐயா வர்றாங்க” என்றவள் அவர்களுக்கும் சேர்த்தே டீயை போட ஆரம்பித்தாள்.

ஆர்யன் தான் கதவு திறந்து வரவேற்க வந்தான்.

காற்சட்டையும் பனியனும் அணிந்து தன் வீட்டில் இருக்கும் தோரணையோடு இருக்க, “வாங்கய்யா விழா எல்லாம் சிறப்பா முடிஞ்சதா?” என்று கேட்டு வரவேற்க, “அதெல்லாம் திருப்தியா. டான்ஸ் பாட்டு ஆட்டம்னு ஸ்கூல் ஆண்டுவிழா தான்” என்று ஆதிரா பதில் தர, ‘டீ எடுத்துக்கோங்க அம்மா” என்று ஆச்சி எடுத்துக்கோங்க, ஐயா நீங்களும், துளிர் டீ எடுத்துக்கோ, என்ன டல்லாயிருக்க?” என்று கேட்டாள்.

“ஒன்னுமில்லை அண்ணி. டயர்ட்” என்றவளிடம், “கொஞ்ச நேரம் தூங்கு” என்று மெத்தையை காட்ட, சர்வேஷ் அண்ணனை பார்த்து மெத்தையில் படுத்துக் கொண்டாள்.

ஆதிராவோ "இங்கிருந்து போகற வழியா இருக்கவும் ஒரு எட்டு பார்க்கலாம்னு வந்தோம்." என்றதும் நிபுணன் மைந்தனின் முகமாற்றத்தை கண்டவனுக்கு, லீவு வேற எடுத்திருக்கான்‌என மனைவி காதில் ஓதினார்.

“ரவிக்கு இப்ப பரவாயில்லையா?” என்று கேட்டார்‌‌.

“அதெல்லாம் பரவாயில்லைங்க ஐயா. உசிரு தப்பியது முகத்துல தெரியுது. குடிக்கறதை மெல்லமா நிறுத்துவார்” என்றவன்‌ “சிற்பிகா‌ ராணி ஆச்சிக்கு எலுமிச்சை ஊறுகாய் போட்டதை எடுத்து வச்சியா?” என்றதும்”ஆச்சுங்க மறந்திடக்கூடாதுனு ஜார்ல இருக்கு. கார்ல‌வச்சிட்டு வர்றேன்” என்று எடுக்க, “நீ போ நான் எடுத்துவைக்கறேன்.” என்றதும் சிற்பிகாவோ மெல்லிய வெட்கத்தோடு நகர்ந்தாள்.

சர்வேஷ் காரின் பின் கதவை திறக்க, ஜாரை வைத்த ஆர்யனோ, "சர்வேஷ் எனக்கும் சிற்பிகாவுக்கும் சுவிட்சர்லாந்துக்கு டிக்கெட் எடு" என்றதும், எதற்காக இருக்கும் என்ற யோசனைக்கு முன், "அவங்ககிட்ட முதல்ல பாஸ்போர்ட்புக் விசா எதுவுமில்லை. எதுக்கு அண்ண?" என்றதும் ஆர்யன் முகம் பூவாக மலர்ந்து, "ஹனிமூனுக்கு டா" என்றவன், தோளில் தட்டி "அவங்க இல்லை அண்ணி" என்று செல்லவும் ஆர்யனின் முகமலர்வும் பேச்சும் தனது 'அவங்க' என்ற அழைப்பும் புத்தியில் உரைத்தது. 

அண்ணனை பின் தொடர்ந்தவன் சிற்பிகா அருகே அமர்ந்த ஆர்யன் அண்ணாவை கண்டான், "அம்மா சிற்பிகாவுக்கு பாஸ்போர்ட் விசா இல்லையா?" என்று கேட்டார் ஆர்யன்.‌

‌‌ “இல்லையே ஏன்?” என்றதும்‌ “எனக்கு இந்த ஊரை விட்டு யாரையும் தெரியாது எதுக்கு வெளிநாட்டுக்கு போகப் போறேன் அதனால் எடுக்கலைங்க” என்றதும் “அம்மா ஹனிமூனுக்கு சுவிட்சர்லாந்து டிக்கெட் எடுக்கலான்னா விசா இல்லை. இவளை வச்சி என்ன பண்ணறது.” என்றதும் சிற்பிகா அமைதியானாள்.

நிபுணனோ “பாஸ்போர்ட் விசா வர நாளாகும். அதுக்குள்ள இந்தியாவுக்குள் எங்கயாவது போயிட்டு வாங்க” என்று மாற்று வழி கொடுக்க ஆர்யன் என்ன என்று பார்வையில் கேட்க, உங்கயிஷ்டம்’ சொல்லிட்டேன் என்றது போல ஆர்யனுக்கு விழியால் பதில் தந்தாள்.

அண்ணன்‌ கட்டாய திருமணத்தில் தவித்திருப்பாரென எண்ண, மாறாக இந்த பெண் சிற்பிகாவோடு, தவறு இந்த பெண் என்பதே தவறு. அண்ணியோடு மகிழ்ச்சியாக இருக்கும் தருணம் துளிரை பற்றி பேசினால் அண்ணன் எண்ணங்கள் தங்கையை தான்‌ சுற்றியிருக்கும்.
சிற்பிகா அண்ணி ஒன்றும் கெட்டவர்கள் இல்லையே. அதனால் அண்ணன் அண்ணி வாழ்வு மலர நிம்மதியடைந்தான்.

திருமண வாழ்வில் அண்ணன் மகிழ்வு தடைப்படுமென துளிரை தான் முறைத்தான். 

துளிரோ ஆர்யன்‌ மடியில் தலை வைத்து சர்வேஷை கண்டு அச்சத்தோடு இருந்தாள். எங்கே மாட்டிவிடுவானோ என்று பாரத்தோடு தவித்தாள்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

36 thoughts on “என் நேச அதிபதியே -32”

  1. Aiyoo paavam thulir pulla love pannamalae avala bayamuruthitu irukkan inum love panna aarambichirundha enna pannuvano therilayae….nee kavalapadadha kozhundhu nee paatuku padikura vazhiya paaru meedhi ellam thannala nadakum….nibu chlm enna aryana kuru kuru nu paarthutu irukinga….veena akka indha sarvesh paiyanuku yaarvadhu Kovil Patti veeralakshmi maadhri oru jodiya podunga ka Avan panra alaparai thanga mudila….

  2. Super sisy epi interesting ah pothu daily update pannunga konjam try pani. Thulir apo avanga appa kaga tha avana virumbala nu solrala unamaiya virupam iruka . Sarvesh vera ipo aaryan kitta sollala avan sollita aaryan ena panuvano

  3. தேவையா…? துளிருக்கு இந்த பயம் தேவையா…? அப்படின்னா தப்பு செய்திருக்கான்னு,
    ஒத்துக்குறாளா…??

  4. அடேய் பக்கி கொஞ்ச நேரம் சும்மா இருந்திருந்தால் சர்வேஷோட கண்ணுல மாட்டாம இருந்திருக்கலாமா…. உனக்கு என்ன நீ பாட்டுக்கு போயிட்ட பாவம் அந்த புள்ள துளிர அவங்க அண்ணன் கிட்ட மாட்டிகிட்டு தொண்டையில் சிக்கன முள் ஆட்டம் தவிக்குது.
    ஒரு வழியா சர்வேஷ் மனசு மாறி சிற்பிகாவ அண்ணின்னு கூப்பிட ஆரம்பிக்க போறான் நல்ல தொடக்கம்.

  5. சூப்பர். துளிர் பாவம். துளிர் விதார்த் ஜோடி சேர்த்து வைங்க. சர்வேஷ் ஓவரா பேசறானே இவனுங்க ஜோடி இவனையே தூக்கி சாப்பிடற மாதிரி அதிரடி சரவேடியா போடுங்க …

  6. Super ariyan. Honeymoon started . Good brotherfor sarvesh. Sarvesh also good brother for thulir. Interesting sis.

  7. Sooopeerrrrr.Aryan sirpi cute.Thulir pulla sikkiruchu. Adai nallavanae ava annanga rendu peru irukanga.sangu di unakku.Thulir pavam

  8. Thulir ne vidharth ah avoid pannathu ku ithu than reason ethaiyum araiyum koraiyum.ah ketu ipadi panrigalae adei yen da sarvesh silent party ah irundha ne ipadi sudden ah terror role panra ah unga appa vae love come arranged marriage than da saravana sir unga friend ah ithu anga iruka mathavangaluku theriyum ah

  9. Arumai sis.
    Interesting ஆக போகுது.
    Pavam துளிர் லவ் வரதுக்கு முன்னாடியே இப்படி பயந்து கிடக்கு.
    முறைத்துக் கிட்டு இருந்த ஜோடி honeymoon kku ரெடி. Sarvesh அண்ணன் மனதை புரிந்து கொண்டது super.

  10. இந்த துளிர் நல்லா வசமாக சர்வேஷ் கிட்ட மாட்டி கொண்டு முழிக்கிறாள்…. ஆர்யன் அவனுக்கு விஷயம் தெரிய வரும் போது என்ன செய்ய போகிறானோ….🤔🤔🤔🤔🤔

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!