அத்தியாயம்-36
கோவா வந்து இறங்கியதும், தன்னந்தனியாக தனித்திருந்த ஒரு வீட்டில் இறங்கினார்கள். வாடகைக்கென்று பத்து நாட்கள் இருக்க போகுமிடம். பங்களா டைப்பில் கண் கவரும் விதமாக இருந்தது.
தன் கைக்குள் சிற்பிகாவை அழைத்து வந்திருந்தான் ஆர்யன்.
சிற்பிகாவோ மற்ற சுற்றுலா பயணியர்களை பார்த்து இயல்பாய் இருக்க படாத பாடுப்பட்டாள்.
ஆர்யனுக்கு சிற்பிகாவை கண்டு சிரிப்பு வந்தாலும் அவனும் இயல்பாக நடப்பவன் போல அழைத்து வந்தான்.
கோவா என்றாலே உடைகள் சிக்கனமானதாக இருக்குமென்று அனுமானம் இருந்தது. அதை எதிர்பார்த்து எதிர்வினையாற்றாமல் மற்றவர்களை உறுத்துஉறுத்து பாராது நடந்தாள்.
தங்கவிருக்கும் இடம் வந்ததும் அப்பாடி என்று மூச்சு விட்டு அமர்ந்தாள்.
"குளிச்சிட்டு சாப்பிடலாமா?" என்று வந்தான்.
சிற்பிகாவும் இருந்த களைப்பிற்கு தலையாட்டி முடித்தாள்.
குளிப்பதற்கென்று பெட்டியை திறக்க, அவள் விழிகள் தெறித்து விட்டது.
"இதென்ன டிரஸா?" என்று கேட்டாள். மந்தகாச புன்னகை வீசியவன் ஆமா" என்று கள்வனாய் கூறினான்.
பெட்டியிலிருந்து அனைத்து டிரஸை உருட்டியெடுக்க, பாதிக்கு மேல் டெனிம் ஜீன்ஸாக இருந்தது. அதற்கு தோதாக க்ராப் டாப் வேறு எடுத்திருப்பான் போல.
க்ராப் டாப் இதென்ன டெனிம் ஷார்ட்ஸ் கையிலெடுத்து, “எந்த நம்பிக்கையில இதை எல்லாம் நான் போடுவேன்னு நினைச்சிங்க?” என்று கணவன் ஆர்யனை கடிந்தாள்.
அவனோ “புருஷன் ஆசைப்பட்டா போடுவிங்கன்னு ஒரு ஆசை தான்” என்றவன் அவள் கன்னத்தை கடித்தான்.
இடையை கட்டி அணைத்து, "இப்ப போடாட்டி எப்ப போட்டு அழகு பார்ப்பது. ம்ம்ம்" என்றான்.
“நான் இதை போட்டு ஊர் சுத்த வரமாட்டேன். என் உடலை காட்சிப்பொருள் இல்லை.” என்று விடுபட எண்ணினாள்.
“சிற்பி நான் காட்சி பொருளா இருக்க சொல்லலை. இது என் கண்ணெதிரில் போட்டுக்கோ. வெளியே போக ஸ்கர்ட் போதும். வந்ததும் சண்டை வேண்டாம். போய் குளி” என குளியலறைக்குள் தள்ளிக்கொண்டு சென்றான்.
குளித்தார்களா? சண்டையை தொடர்ந்தார்களா? வாதங்கள் முளைத்து கோபங்கள் கூடியதா? அல்லது தாபங்கள் மொட்டுவிட்டு ஆர்யனுக்கு லாபமானதா அது அவ்வறையே ரகசியம் பொதிந்திருக்கும்.
ஆர்யனும் ஷார்ட்ஸ் டீ ஷர்ட் என்று எப்பொழுதும் போல இருந்தான்.
சிற்பிகா தான் நாணியபடி போர்வையை மேலேடுத்து மூட, “இதுக்கு போடாமலையே இருக்கலாம்” என்று சலிக்க, ஆஹ்” என்று சிற்பி அதிர, “ஐ மீன் டெனிம் ஷார்ட்ஸ் சொன்னேன்.” என்றவனின் புஜத்தில் மொத்தினாள்.
“வரவர கை நீளுது” என்றவன் உணவுகளை வரவழைத்தான்.
ஒரு பெண்மணி மட்டும் உணவுகளை தயார் செய்து அலங்கரிக்க, சிற்பிகாவோ அறைக்குள் ஓட துடித்தாள்.
இங்கு இது இயல்பான உடையென்று ஆர்யன் தான் அமைதியா உட்காரு’ என்று வழிநடத்தினான்.
ஆர்யன் திருநிறையகம் வீட்டிற்கு போனில் அழைத்து தான் இங்கே வந்துவிட்டதாக கூறி சாப்பிடுவதாக உரைத்தான்.
வீடியோ காலில் சிற்பி மறுக்க, நார்மல் காலில் அழைத்து பேசினான் ஆர்யன்.
மறுபுறம், “ரொம்ப போரிங்கா இருக்கு உங்கண்ணாவை நீர்விழ்ச்சிக்கு கூப்பிடு துளிர்” என்ற குரலில், “யாருடா குட்டி வீட்டுக்கு வந்திருக்காங்க?” என்றான் ஆர்யன்.
“தமிழ் அக்கா அப்பறம் அவங்க சித்தப்பா பொண்ணு மின்மினி அக்கா.” என்றுரைத்தாள்.
ஆர்யனோ அடுத்த கேள்வி “சர்வேஷ் ரூம்ல இருக்கானா? ஹால்ல இருக்கானா?” என்றான்.
“அண்ணா ரூம்ல இருக்கார்.” என்றாள் துளிர்.
‘கொஞ்ச நாள் உள்ளயே இருக்கட்டும்’ என்று துளிர் கருவ, “எதுக்கு வந்தா அவ?” என்று கேட்டான் ஆர்யன்.
ஆர்யன் கேட்டு பதில் தராமல் இருக்க முடியுமா? துளிரோ “அப்பா அரசியல்ல நிற்கலாம்னு மு கொடுக்க போனார். அதுக்கே கத்தி கூச்சல் போட்டு ரகளை பண்ணிட்டாங்க” என்றாள் துளிர்.
"போனை ஐயாவிடம் கொடு" என்றான். துளிரோ அப்பா பெரியண்ணா பேசுது" என்று கை மாற்றினாள்.
“ஐயா முதலமைச்சர் அரவிந்த் சாதாரணமான விஷயத்துக்காக ஜெயிலுக்கு வந்து தண்டனை முடிந்து போனவரு. தண்டனை காலம் முடிய ஆறு ஆண்டு காலம் நிதானித்து முதல்வரா அரசியல்ல கால் பதிச்சவர்.
நீங்க அய்யாமையை வெட்டியவனை கொலை செய்தவர். அரசியல்ல நிற்க முடியாது. உங்களை மனு கொடுக்க வரவழைச்சு யாரோ அசிங்கப்படுத்த நினைக்கலாம். நீங்க சூதனமா இருங்க” என எடுத்த எடுப்பிலேயே உரைத்தான்.
"ஆறு ஆண்டு காலம் எனக்கு சரிவராதா?" என்று நிபுணன் கேட்டார்.
தண்டனை முடிந்து இத்தனை ஆண்டு காலம் தாண்டி அரசியலில் நிற்கலாமென்று நினைத்திருந்தார். ஆனால் ஆர்யன் கூறவும் மௌவுனமானார்.
“என்னங்கயா?” என்று ஆர்யன் கேட்க, “ஒன்னுமில்லைய்யா. அரசியல்ல நிற்க எனக்கென்ன ஆசையா? ஊர்ல நல்லதுக்குன்னு கொடுக்குற பணம் பாதிக்கு மேல ஆட்சி செய்யறவன் பங்கிட்டு கொள்வதா அரசல்புரசலா தெரியவும் தான் இந்த முடிவு எடுத்தது. இப்ப நான் நிற்கவே முடியாதுன்னா?” என்றவர் மனம் வருந்தியது.
“மனு கொடுக்க இருபது நாள் இருக்குங்கல ஐயா. அதுக்குள்ள யோசிக்கலாம். நீங்க விசனப்படாதிங்க. அரவிந்த் ஆங்கிள் உங்களை எப்படியாவது அவருக்கு சரிசமமாக அரசியல்ல நிற்க திட்டமிடறார். அவசரப்படாதிங்க” என்றான்.
நிபுணனோ, “ஒன்னு நாம நிற்கணும். இல்லைனா நம்ம ஆட்கள்ல யாராவது நிறுத்தணும் ஐயா. இல்லைனா நிலைமை மோசம் தான். இங்க அடுத்த பிராஜக்ட் ஒன்னு வருதுயா. அதுல தொழிற்சாலை வருவதா சொல்லறாங்க. இங்கிருக்கற ஆட்கள் சரியில்லை. அதான் என் கவலை.” என்று நிபுணன் உரைக்க, “ஐயா நீங்க எத்தனை பேர் வந்தாலும் நிதானமா முடிவெடுப்பவரு. அரசியல்ல நிற்பது வேண்டுமின்னா தெரியாம இருக்கலாம். ஏன்னா அரவிந்த் அங்கிள் முதலமைச்சர் என்றதால மறந்தகருப்பிங்க. மற்றபடி மனு கொடுக்குற இடத்துல அங்க ஒரு இடுக்கல் வந்தாலும் சமாளிப்பது உங்களுக்கு சுலபம் தான்” என்று பேசவும் நிபுணன் உண்மை தான் உடனே மாற்று வழி யோசிக்க மாட்டோமா என்று நினைத்தார்.
“சரிங்க ஐயா. எதையும் யோசிக்காம தேன்நிலவை கொண்டாடுங்க” என்று நிபுணன் ஆசிர்வதிக்க, ஆர்யன் சிற்பிகாவை பார்த்து”சரிங்க ஐயா” என்று அணைத்தான்.
அன்னை ஆதிராவிடம் சிற்பிகா பேசிக்கொண்டிருக்க, “அம்மாவா?” என்றான்.
ஆமென்று தலையாட்டியவளை அனுஅனுவாய் ரசிக்க, ஆர்யன் விழிகள் தன் மேனியில் படரவும் நெளிந்து, “அம்மா நான் அப்பறம் பேசறேன்” என்று துண்டித்தாள்.
அதன் பின் ஆர்யன் சிற்பிகா தனியாக காதல் படம் ஓட்டினார்கள்.
சர்வேஷோ அடுத்த நாள் கல்லுரிக்கு தயாராக, “காலேஜ் போகணுமா? லீவுக்கு உங்க வீட்டுக்கு தானே வந்திருக்கேன்.” என்று வழிமறைத்தாள்.
துளிரோ நமுட்டு சிரிப்பில் நழுவ பார்த்தாள்.
சர்வேஷோ “துளிரு வண்டில ஏறு.” என்று அதட்டி, தமிழிடம், “போரடிக்குன்னா எங்கம்மா கூட போ. அங்க நிறைய சிறைக் கைதிகள் இருப்பாங்க. அவங்க கதையை கேளு. யார் கண்டா உங்கப்பாரு மாதிரி யாராவது அங்கயும் இருப்பாங்க.” என்று எரிந்து விழுந்தான் சர்வேஷ்.
தமிழ் அதை கண்டுக்காமல் விட்டால் அரவிந்த்-ஷமிராவுக்கு பிறந்தவளாக இருக்காதே. சர்வேஷை காயப்படுத்தும் நோக்கில், “எங்கப்பாரு இருந்தா உங்கப்பாவும் இருப்பாரே” என்றதும் சர்வேஷ் கோபத்தோடு திரும்ப, வளர்ப்பு பிராணி ராயல் தமிழை குலைக்க ஆரம்பித்தது.
அங்கே துளிரோ “அண்ணே காலேஜ் லேட்டாகுது போலாம்” என்று தோளில் அழுத்தினாள்.
“ராயல் வீட்டுக்கு வந்த விருந்தாளி டா. அவங்களை மாதிரியே குலைக்காத” என்று கடிந்தான்.
சர்வேஷ் தமிழிடம் முகத்திருப்புதலை காட்டி, வண்டியை இயக்கினான்.
மின்மினியோ “அக்கா அவங்க வீட்டுக்கு வந்து அவங்களையே காயப்படுத்தறது தப்பு. நீ இப்படி பேசினா அப்பாவுக்கும் நிபுணன் அங்கிளுக்கும் சண்டை தான் வரும்.” என்று கண்டிக்க, “சந்தடி சாக்கில் என்னை போய் நாய்னு சொல்றான்.” என்று தமிழ் அவளது அன்னை ஷமிரா போல பொங்கினாள்.
அதன் பின் மின்மினி தான் தமிழின் மனதை மாற்ற முயன்றாள்.
சர்வேஷ் முகம் இறுக துளிர் கல்லூரிக்கு வந்து விட்டான்.
விதார்த் அதே நேரம் தன் வண்டியில் வந்து கல்லூரி வாசலுக்குள் நுழைந்தான்.
தமிழிடம் பேசிய அதே கோபத்தோடு வந்த சர்வேஷிற்கு விதார்த்தை கண்டதும் உச்சிக்கு ஏறியது.
“அவனும் இங்க தான் இருக்கானா? நீ படிக்கிற லட்சணத்தை முதல்லயிருந்தே ஆராயணும் போல.” என்று வண்டியை நிறுத்தி இறங்கினான்.
“அண்ணா அண்ணா.. எக்ஸாமுக்கு இரண்டு மாசமிருக்கு. தேவையில்லாம பிரச்சனை இழுக்காதே. அவர் என்னை பார்க்க வரலை. இங்க தான் படிக்கறார். அவர் பாட்டுக்கு போறார். நான் பாட்டுக்கு இருக்கேன்.
தமிழ் அக்கா மேல இருக்கற கோபத்தை நீ என்மேல காட்டற. நான் அவரை விரும்பலை.” என்று கெஞ்சினாள்.
“அது அண்ணன் வந்தப்பிறகு நேர்ல சொல்லு நம்பறேன். இப்ப நம்ம முடியலை.
அண்ணன் வர்ற வரை ஒழுங்கா இருக்க பாரு.” என்று திட்டிவிட்டு கிளம்பினான்.
வண்டியில் பயணிக்கும் போது, இங்க அண்ணனும் நானும் எவளையும் ஏறெடுத்து பார்க்காம ஒழுங்கா வளர்ந்து அப்பா அம்மா சொல்லறவளை கட்ட பார்த்தா, இது பொடிக்கழுதை காதலிக்குது. வாய் தான் இல்லைனு சொல்லுது. கண்ணு கள்ளத்தனம் இருக்கு” என்று மனதில் கருவியபடி சத்யவேலனுக்கு அழைத்தான் சர்வேஷ்.
சத்யவேலனோ “இன்னிக்கு பிறந்த நாளா வாழ்த்துகள் மச்சி” என்று தன் சக தோழனுக்கு வாழ்த்திவிட்டு மிட்டாயை எடுக்க, போன் மணி அடித்தது.
“மாமா காலேஜிக்கு வந்துட்டியா?” என்று கேட்டான் சர்வேஷ்.
“டேய் உன் கொழுந்தோட சின்ன அண்ணன்” என்று விதார்த்திடம் உரைத்துவிட்டு, “ஆஹ் வந்துட்டேன் சர்வேஷ். ஏன் கேட்கற?” என்று பதில் பேசினான்.
“சரவண மாமா அங்க நாகர்கோவிலிருந்து நீதிபதி வித்யுத்தோட பையன் விதார்த் படிக்க வந்திருக்கான். அவன் எந்த குரூப் என்னனு விசாரி. கொஞ்சம் அண்ணா வந்ததும் அவனுக்கு ட்ரீட்மெண்ட் எடுக்கணும்” என்று சர்வேஷ் பேசவும், அருகிலிருந்த விதார்த்திற்கு துல்லியமாக செவியில் விழுந்தது.
“விதார்த்தா… சரி சர்வேஷ் நான் வீட்டுக்கு வந்து என்னனு விலாவரியா கேட்டுக்கறேன் வைக்கறேன்” என்று அணைத்தான்.
சரவணவேலனோ “என்னடா பெரியவர் பிஸியா இருக்கார். இவன் துள்ளறான். துளிருக்கு என்ன குடைச்சல் தர்றானோ. நீ கொழுந்திடம் கேட்கறது தானே?” என்றான் சர்வேஷ்.
விதார்த்தோ “ஆமா கேட்டா சொல்லிடுவா” என்று எழுந்து நடக்க, தானாக கால்கள் துளிர் இருக்கும் திசைக்கே பாதை வகுத்தது.
துளிரோ இருந்த கோபத்திற்கு, "இங்கயெதுக்கு வந்த? எங்கண்ணாவிடம் மாட்டி விட்டு நிம்மதியா இருக்க. இன்னும் என்ன வேணும். உங்கப்பா தான் பெரிய நீதிபதியே, கொலைங்காரன் மகளை காதலிக்கறது தெரியாதா.?" என்றதும் விதார்த் இருந்த கடுப்பில், கையை ஓங்கினான்.
“டேய் பங்காளி” என்று சரவணவேலன் குரல் உயர்த்த, துளிரோ சரவணவேலனை கண்டு திடுக்கிட்டாள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

கூட்டு களவாணி மட்டிக்கிட்டான்
Sooperrrrr sooperrrrr
Nice episode
ஆ..ஊன்னா…கையை தூக்குறாங்கப்பா.
Super sis ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Super sis
Thulir pavam sarvesh, vitharrth rendu peridam mattitu mulikkuthu. Tamil overah thullura. Sema nose cut kuduthan Sarvesh.. Honeymoon mudinchi varathukkula enna enna elarai elukarangalo…..
Nice epi sis.
Enaku enavo sarvesh tamil jodi mathiri teriala sarvesh minmini dan jodi nu thonuthu papom
🫣
Saravanan mattikitan thulir kita than ah yemma thulir indha sound ah unga annan kita katta vendiyathu than ah anga silent ah irundhutu inga sound party ah iruku ah Nibu vidhyuth rendu perum ivanga love ku.no sollamatanga than thonuthu parpom
Super 👌 paar da dress theriyama vangitu vanthu podavum vachitan avanum rasika aarambichitan congrats for honey moon aaryan enjoyyyyyy. Inga thulir ava patuku tha iruka sarvesh nee tha avala kan kanikira perla usupethitu iruka
Aduthu saravana maatika porana…. Spr going sis waiting for nxt epi😍😍😍
Interesting
Super………………matikatta……Saravana……..neyumaaaaaaaaa……..enjoy…sirpi…🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Super sis nice epi 👍👌😍 eppdi maatikitiye Saravana rendu pakkamum unaku idi dhan 🤣
Wow
Excellent
Yen tan ka indha sarvesh paiyan ipadi thullitu irukan….ipadi tan oru verappa suthitu irundhan ipo honey moon kondatitu irukan ….skrma indha sarvesh paiyan ku love Vara vainga ka….paavam vidharth….ne kavalapadadha thulir ma ellamae vidharth paarthupan….veena akka en arvind chellakutty Mela en indha Aryan kum sarva kum imbuttu kaandu…
2 wife iruntha pidikuma. 🫣 Bad boy bad boy than
அந்த தமிழ் பொண்ணு ரொம்ப திமிரா பேசுது . அவளை கண்டால் தான் சர்வேஷ்க்கு பிடிக்கலையே அப்புறம் எதுக்கு தேவை இல்லாம அவங்க கிட்ட வம்பு பண்ணனும். துளிருக்கு விதார்த்த ரொம்ப பிடிக்கும் ஆனா அவங்க அப்பாவுக்காக அவரை பிடிக்காத மாதிரி பேசுறா.
ஆரியன் சிற்பியோட ஹனிமூன் வேற லெவல்
❤️❤️❤️❤️❤️🤣🫰
Super excellent narration sis. Ariyan started his honeymoon romance. Nibu don’t feel you may get another way for election. Thulir don’t hide your love.intresting sis.
துளிர் கிட்ட சார்வேஷ்..நல்ல கஞ்சி குடிச்ச மாதிரி வெரைப்பா இருக்கான்..😡😡..பாவம் துளிர்🤷🏻♀️
ஆனா தமிழ் a கண்டா ஓடிரான்…..🏃🏃🏃🏃😆
Super
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Nice epi sis😀
Maman magala kAppatha vanthu neeum kuttu kalavaninu mattikitiye pangu 😆🤷
Aathi inva enna immputtu kovakarana irrukan 🤔 ariyan vida Ivana samalikkarathu kastam poliye da vidhu 😪😪😪
Super super sis
Superrrrr ❤️
Interesting sis
semaaaaaaaaaaaa!!!
Super super super super super super 👍👍👍👍👍👍👍👍👍👍👍
Super super super super super super super super super super super
இந்த தமிழ் அவளுக்கு வாய் அதிகம்…. சர்வேஷ் அவனின் பதிலடி அருமை அக்கா….👌👌👌👌👌👌👌…. சர்வேஷ் – விதார்த் இருவரும் மோதி கொள்ளும் போது என்ன ஆகுமோ
Super super super super super