புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

என் நேச அதிபதியே -37

அத்தியாயம்-37

தன் கண் எதிரில் தன் மாமன் மகளை விதார்த் கை நீட்ட, அதை பார்த்து சும்மா மினுக்கும் மனமா சரவணனுக்கு.

“என்னல எங்க வீட்டு மகாலட்சுமி மேலயே கை ஓங்கற? இதை மட்டும் ஆர்யன் மச்சான் பார்த்துச்சு. உனக்கு ஜென்மத்துக்கும் பொண்ணு கொடுக்க மாட்டார் பார்த்துக்கோ” என்று சரவணவேலன் இத்தனை நாள் விதார்த் துளிரை காண வரும் நேரம் இவ்விடம் வராது தவிர்த்திருந்தவன் வந்து நின்றான்.

"பின்ன கொலைக்காரன் கொலைக்காரன் சொல்லறா? நான் சொன்னேனா? இல்லை எங்கப்பா சொல்லிட்டு இருக்காரா? என்னவோ அந்த நேரம் அட்வைஸ் பண்ணினார்‌. ஆர்யன் மச்சான் சின்ன பொண்ணான சிற்பிகாவை கை நீட்டியது தப்புன்னு பேசினார். 

எங்கப்பாவுக்கு சிற்பிகா அண்ணி கேஸ் டீடெயில் தெரிந்ததால அந்த அக்கா மேல கோபம் வரலை‌. ஆர்யன் அடிச்சதுக்கு பேசினார்.

பேசினவங்களே ஒன்னுக்குள்ள ஒன்னா நண்பர்களா திரியறாங்க. இவளுக்கு என்னவாம். என்னை விரும்பறா தானே? நான் வாங்கி தந்த டிரஸ் போட்டு ஆடினா.” என்று விதார்த் கடுப்பில் மொழிந்தான்.

துளிரோ சரவணவேலன் விதார்த் பேசிக்கொள்ள திகைத்து விழிததாள்‌. விதார்த் கொரியர் அனுப்பிய உடையை அணிந்து ஆடியது இவரால் தான் இவனுக்கு தெரிந்ததா?

அத்தை வீட்டுக்கு வந்த நேரம்கு குடும்பத்தோடு பேசியதை அப்படியே விதார்த்திடம் உரைத்திருக்கின்றார்.

"துளிரு என்னடா பிரச்சனை? ஆர்யன் மச்சான் மாமா உன் மனசு வாட யாருக்கோ கட்டி தருவாரா? நீ விரும்புறவனுக்கு கட்டி தருவாரு." என்று ஆதரவு கரம் நீட்டினான்.

“நான் இவரை விரும்பலை. எனக்கு இவரை பிடிக்கலை.” என்று நிற்காமல் ஓடினாள்.

விதார்த்தோ “பார்ந்தியா? அவளா வந்தா திட்டினா ஓடினா. நான் என்னடா செய்தேன்.

இங்க வந்து உன் பிரெண்ட்ஷிப் கிடைக்கும்னு நினைச்சேனா? அட அப்பாவோட பிரெண்ட் அவரோட தங்கச்சி பையனா அப்படின்னு கை குலுக்கினேன்.

நிபுணன் பொண்ணுனு இரண்டு வருஷம் முன்ன நிபுணன் ஆங்கிள் பொண்ணுன்னு நின்றப்ப, பிரெண்ட்லியா பேச நெருங்கினேன்.

சீனியர்னு அவ மரியாதை தரவும் ஜிவ்வுனு இருந்தது. சரவணவேலன் பிரெண்ட் தான்மானு அறிமுகத்தை விட அவ என் காதலியா பார்த்துட்டேன்.

காதலிக்கறது தப்பாடா.” என்று துளிர் சென்ற திக்கில் பார்வை செலுத்தி உரையாற்றி முடித்தான்.

"தப்போ சரியோ எங்க வீட்டு பிள்ளையை கை நீட்டாத. பொம்பள பிள்ளையை சாமியா மதிக்கணும் எங்கப்பா முத்துவேலனரு அப்படி தான் சொல்லிக்கொடுத்தாப்ல" என்றான் சரவணவேலன்.

“ஆமா… சாமியா நீ கும்பிடு. நான் ஏன் மேன். ஷீ இஸ் மை கேர்ள் பிரெண்ட். நீ சாமியா நினைக்க தான் மாமன் பொண்ணு மேல மரியாதையோடு பழகற. நான் காதலிக்கறேன் வேற பீலிங் தான் உள்ள குடையும்‌” என்றவன் தங்கள் வகுப்பு கட்டிடம் நோக்கி நடையிட்டனர்.

விதார்திற்கு எப்படியும் எக்ஸாம் முடியும் முன் இதற்கான தீர்வு முன்கூட்டியே வந்திடுமோ என தயாரானான்.‌ ஆர்யன் வந்தால் சர்வேஷ் நிச்சயம் தெரிப்பானென புரிந்தது.
அப்பொழுது கூட தன் வீட்டில் காதலை பற்றி மூச்சுவிடாமல் கடந்தான்.

ஆர்யனோ மனைவியோடு கூடலும் ஊடலும் சரிசமமாய் போட்டு அவளை முழுங்கால் அளவு மறைக்கும் ஜீன் அணிந்து வெளியே அழைத்து சென்றான்.

பெரும்பாலும் உடைகள் சிக்கனமாய் அணிந்து மற்றவர்கள் சுற்றினாலும் அதை யாரும் கேலியாக பேசவில்லை. பார்வையும் அப்படியொன்றும் கீழ்தரமாய் இறங்கவில்லை.

ஓரளவு அவரவர் இதுதான் இயல்பென்று தங்கள் வேலையை கவனிக்க, அவர்கள் ஊரை சுற்றி பார்த்திடும் முடிவோடு கைப்பிடித்து கடற்கரைக்கு அழைத்து சென்றான்.

பாறைகளும் தெளிந்த நீரோடையும் தாண்டி, சிற்பிகா கண்ணிற்கு ஆங்காங்கே இருந்தவரது உடைகளே காணாது போனாலும் கருத்தில் வந்து அமர்ந்தது.

ஆர்யனோ சின்ன சின்ன மணற்துகள்களை சிற்பிகா பாதத்தில் பூவை போல எடுத்து அவளது பாதத்தை மணலால் ஆராதித்தான்.

 "வெக்சிங் செய்யாமலே வழவழனு இருக்கு" என்று கூற, சிற்பிகா முகம் குனிந்து நொந்து போயிருந்தது. 

"நாம ரூமுக்கே போயிடலாமா" என்றவளிடம், "ஏன் ஊருக்கே போயிடலாமே" என்று சீண்டியிருக்க முகம் வாடியிருந்து. 

“சுவிட்சர்லெந்து போக வேண்டியது சிற்பி. கோவா வாது வந்தகருக்குகோம்‌. இப்படி மூஞ்சி தூக்கினா என்ன அர்த்தம்.
கொஞ்சமாவது சிரி சிற்பி, நிஜமான சிற்பத்தை தான் கட்டிக்கிட்டேனோனு டவுட் டா இருக்கு” என்றான்.

“உங்களுக்கு என்ன? நல்ல வசதி பெயர் புகழ் கொண்ட அப்பா அம்மா‌. வாழ்க்கையை ரசிக்க தயார். சுவிட்சர்லாந்து போக வேண்டியது ஆனாலும் கோவால கால் நீட்டி கடற்கரையில் ரசிக்கறிங்க. சின்னதுலயிருந்து கஷ்டத்தை பார்த்து பார்த்து நடுத்தர குடும்பத்துல வளர்ந்தவ நான். நடுத்தர மனிதர்களோடு கனவுகள் தான் கண்முன் வருது. பெரிசா ஆசைப்படவோ புதுசா இருக்கற வாழ்வையோ யோசிக்க முடியலை. தனியா ஆச்சி கூட வளர்ந்ததால், சுடிதார் சேலைனு உடம்புல சுத்தி இப்ப எதுவும் ரசிக்க முடியலை. ஆட்டோமெடிக்கா தனித்துவமா தெரியறேன்.‌” என்றாள்‌.

ஆர்யனோ அவளை ஆழ்ந்து பார்த்து, கையை நீட்டி ரூமுக்கு போகலாம்” என்றான்.

இல்லை நான் சந்தோஷத்தை கெடுக்கலை” என்றவளிடம். “என் சந்தோஷமே ரூம்ல போதும்” என்று கண்சிமிட்ட சமாதானபடலம் வேறு நடந்தது.


  மின்மினி, தமிழ் இருவரும் காலையிலிருந்து ஊர்சுற்றிவிட்டு மாலை இங்கே வந்து தங்கிய, நேரம் போனது. ஆனால் சர்வேஷிடம் அதிகமாகவே முகதிருப்புதலை கண்டு வாடினாள் தமிழ்.

தமிழ் தன்‌ அன்னைக்கு போன் போட்டு, “ம்மா.. டேடிக்கு கால் பண்ணினேன். லைனே போகலை. தேர்தல் வருதுன்னா பெத்த மகளே கண்ணுக்கு தெரியாதா? என் போன் கால்ஸை அவாய்ட் பண்ணறார்‌.” என்று எகிறினாள்.

ஷமிராவுக்கு தான் இப்படி தன் தாயிடம் கத்தியது தான் நினைவு வந்தது. கால மாற்றம் ஆனால் சம்பவங்கள் மட்டும் கொஞ்சம் முன்னுக்கு பின் முரணாக, தோன்றியது.

“அவர் வீட்டுக்கு வர்றதும் தெரியலை போனதும் தெரியலை‌. கட்சி ஆபிஸ்லயே இருக்கார்.

நான் என்ன செய்யறது‌. (அரவிந்தின் முதல் மனைவி)தாரா அக்காவிடம் கேட்டுட்டேன். ப்ருத்வி கல்யாணம் அதுயிதுனு அலைஞ்சதுல தேர்தல் வர்றதை மறந்துட்டேன்‌. அட்லிஸ்ட் இப்பவும் கட்சி ஆளுங்க, பிரச்சாரம், தொண்டர்களை சந்திக்கறதுனு இல்லைனா என்‌ பதவி போயிடும். எனக்கு இந்த பதவி முக்கியம்னு அக்காவிடம் பதில் சொல்லியிருக்கார். நான் எல்லாம் உங்கப்பாவுக்கு எந்த மூலைக்கு?” என்று குறைப்பட்டார்‌.

"எனக்கு இங்க இருக்க‌ பிடிக்கலை‌ சர்வேஷ் முகம் காட்டறார். அதர்வைஸ் நிபுணன் அங்கிள், ஆதிரா ஆன்ட்டி ஸ்வீட் பெர்ஸன். துளிர் கூட நம்ம மின்மினி மாதிரி பழகறா." என்று நிலவரத்தை கூறினாள்‌ தமிழ். 

“உனக்கு பிடிக்கலையா இங்க வந்திடு. எங்கம்மா போர்ஸ் பண்ணற மாதிரி உன்னை நான் பண்ண மாட்டேன்.” என்று ஷமிரா உரைத்தாள்‌.

“ம்ம்… வர்றேன். ஆனா அதுக்குள்ள சர்வேஷிடம் பேசணும் அம்மா‌. அவன் என் வலைக்குள் விழுந்துட்டா போதும்‌” என்றாள்.‌

 "பார்த்து டி. நீ பேசறது வேற வீடு. அப்பறம் உங்கப்பாவுக்கு உன்னை அங்க கட்டி கொடுக்க பேராசை. எனக்கு அதுலயிஷ்டமில்லை. நீ என்‌ பொண்ணு ராணியா வெளிநாட்டுல வாழணும். அந்த வில்லேஜ்ல தேவையேயில்லை." என்று கூற, "மாம் நான் அப்பறம் பேசறேன்" என துண்டித்தாள் தமிழ். 

தமிழிற்கு அரவிந்தின் அன்னை பெயர் மட்டுமே அடக்கவொடுக்கத்தோடு அமைந்தது. மற்றபடி தாய் ஷமிராவுக்கு கொஞ்சமும் சளைக்காத அளவிற்கு திட்டங்களை தீட்டினாள்.

மின்மினியும் அவளது தாய் சந்தோஷியிடமும் தந்தை இந்திரஜித்திடமும் பேசி அணைத்திருந்தாள். ஆனால் சந்தோஷி போல சாந்த முகம்.

அண்ணன் ப்ருத்வி திருமணம் முடிந்து ஆர்யனை போலவே தேன் நிலவுக்கு சென்ற தம்பதிகள். அண்ணன் திருமணமென்று ஷாப்பிங், ப்யூட்டிபார்லர், மால் என்று நேரத்தில் கழித்தவளுக்கு, இந்த வில்லேஜ் மாற்றமான சூழ்நிலையை தருவித்தது‌. தன் அன்னை சந்தோஷிக்கு இதெல்லாம் பிடிக்கும். கிட்டதட்ட ஆதிரா ஆன்ட்டி போல தான் வெளியே வாசம் செய்வது‌.

ஆதிரா ஆன்ட்டி சீர்த்திருத்த பள்ளியில் இருந்து சேவை செய்கின்றார் என்றால் தாய் சந்தோஷியோ ஆசிரமமே கதி என கிடப்பார். தந்தை கூட அடிக்கடி கேலி செய்வார், ‘இப்படியே ஆசிரமம் போன எங்கண்ணா மாதிரி இன்னொரு திருமணம் செய்துப்பேன்.” என்பார். ஆனால் அதன்பின் விசை மொழிகளை வாறி கட்டிக்கொள்வார்.

இத்தனைக்கும் அன்னை தன்னை போல அமைதி. ஆனால் இந்தர் அப்பாவிடம் மட்டும் பெண் புலியாக மாறிடுவார்‌’ என்று எண்ணி அங்கும் இங்கும் நடந்தாள்.

துளிர் கல்லூரி விடுத்து வரவும் சர்வேஷும் பின்னாடியே வந்தார்.

சர்வேஷ் வந்ததும் வனாததும் கதவை அடைத்து கொள்ள, தமிழோ ‘இன்சல்டிங்’ என்று உச்சரித்தால் ஈ

இதே, தனது வீட்டில் தானுமே இவ்வாறு நடப்பதை மறந்தவளாக யோசித்தாள்

ராணி  ஆச்சி உபசரிக்கும் விதமும் சர்வேஷ் இப்முறை உருமலும் 

தவிர்த்து வீற்றிருந்தான். தமிழ் சர்வேஷ் பார்க்க வேண்டுமென்றெ அவன் எதிரில் அமர, தமிழோ தட்டை பார்த்து சாப்பிட்டு கை அலம்ப அதன் பின் அறைக்குள் சென்றான்.

தமிழோ பின்னாடியே செல்ல, மின்மினி தான் துளிரின் பார்வையால் சங்கடமாய் நின்றாள்‌.

துளிருக்கோ ‘இவனும் காதலிக்க மாட்டான். என்னையும் ஏதாவது திட்டிட்டே இருப்பான். அய்யோ ஆர்யன் அண்ணா வருவதற்குள்ள விதார்த் பக்கம் இருந்து முற்றிலும் விலகணும்.’ என்று முடிவெடுத்தாள்.

விதார்த் விட்டு விலகும் குணமா? என்று ஒரு மனசாட்சி எள்ளியது. ஆனால் இந்த இடைப்பட்ட நாளில் தன்னை கை ஓங்கும் அளவிற்கு மாறியிருப்பதே ஆச்சரியம் என் கண்கள் கலங்கியது. அவன் என்னை அடிக்க ஓங்கிவகட்டானே என்ற வருத்தம் அவளை வருத்தியது.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

31 thoughts on “என் நேச அதிபதியே -37”

  1. Apa Tamil unmaiyavae sarvesh a virumbaliya.ithellam cm oda veliya.sarvesh nee minmini ya kattiko..namma Thulir pappa enna padu pada pogutho

  2. Super sis semma epi 👍👌😍 endha tamizh enna eppdi plan podudhu sari ellaiye🧐 sarvesh thapichidu pa🙄

    1. இந்த தமிழ் அவளை கண்டால் கோபமா வருகிறது…. விதார்த் – துளிர் காதல் யார் மூலமாக தெரிய வருமோ….🤔🤔🤔🤔🤔🤔🤔….

  3. Intha thamizh etho plan panni inga vanthu iruka polaye ena pana pora inga irunthu. Sirpi konjam life enjoy panuma Yen intha yosanai unaku un husband irukan supportive ah don’t feel. Nee vitharth ah love panlaya thulir nee vitalum avan eppadi una viduvan

  4. Ama thulir indha sarvesh paiyan Avanum love panna mattan love panravangalaiyum panna vida maatan ne kavalapadadha veena akka edhuku irukanga avanga ellathaiyum sari pannuvanga…unga periya Annan ipaditan thirupikitu thirinchan ipo Goa varaikum poga vachanga ila veena akka andha unga sarvesh anna rendu maamiyaar irukura veetuku tan vaakapattu povan thulir ne kavalapadadha….

  5. Saravana velan character super .
    Sirpi ஏனம்மா இப்படி இருக்கே
    பழச மறந்திட்டு வாழ்க்கையை அனுபவித்து வாழு.
    விதார்த் உன் வீட்ல தளிர் பத்தி சொல்லுடா
    சர்வேஷ்க்கு , தமிழ் வேண்டாம்.
    மின்மினி ok.
    Interesting going. Waiting for next update.

  6. சிறபியின் எண்ணம் சரியே…. தமிழ் காதல் தானாக உருவாகனும் கட்டாய படுத்தி வர வைக்க மூடியாது

  7. சிற்பிகா சொல்லவது நிதர்சனமான உண்மை …. தமிழ் காதல் தான தோன்றனும் தீட்டம் போட்டு அடை முடியாது

  8. ரொம்ப ரொம்ப அழகா இருந்தது கதை சிற்பி ஆர்யன் காதல் மோதல் சூப்பர் சர்வேஷ் என்னதான் நினைச்சிகிட்டு இருக்கான் அவனும் ஜோடி சேரமாட்டான் விதாத்தையையும்ே சேரவிடமாட்டேங்கிறான் ஆனாலும் மனதிற்கு சர்வேஷ்தான் பிடிக்குது ஒரு அண்ணனா நிபுணனே போல் தங்கையை பாதுகாக்கிறது பிடிச்சிருக்கு வாழ்த்துகள்

  9. 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌appo thamizh villiya🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 indha Thulir loosu edhukku ipdi mandaiya potu kulappitu irukko therila 😔😔😔😔😔😔

  10. Yanakku thayrinju sarvu menmini jodi sariya irrukumnu thonuthu 🤔
    Sirpi ellarum epavum orye mari life la irrukarathula illa …ellar life lium ups and downs varum athukku yatha mari move on aaga palaguna thaan crt life nalla irrukum …epavum orye mari ninachuttu irruntha past , present, future nu yathulium santhosam irrukathu 😤😤😤😤😤

  11. இந்த தமிழ் என்ன வேற ஏதாவது பெரிய பிளானோட இங்க வந்து இருக்காளா??? எனக்கென்னமோ அவளோட செய்கையும் பேசுற முறை எதுவுமே சரியில்லை என்று தோணுது.
    ஆரியா சிற்பிக்கு தான் இந்த மாதிரி டிரஸ் எல்லாம் போட்டுட்டு வெளியே வர பிடிக்கலையே நீ அதெல்லாம் ரூம்குள்ள போட்டு ரசிச்சுக்கலாம் இல்ல பாவமில்ல அவ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!