அத்தியாயம்-39
சிற்பிகாவின் பாதம் எடுத்து, தன் நெஞ்சில் வைத்தான்.
அவள் பாதத்தை மயிலிறகு கொண்டு வருடி வருடினான் ஆர்யன். சிற்பிகாவோ நெளிந்த படி “கொஞ்ச நேரம் சும்மா இருக்கிங்களா?” என்று உரைத்தாள்.
"இதுக்கே இப்படியா இது டிரையல்மா இன்னும் எத்தனையோ இருக்கு" என்றவன் அவள் பாதத்தில் மென்மையாக முத்தமிட்டு குட்டி குட்டி நகங்களை வெட்டி எடுத்தான்.
பிறை நிலா போல இருந்ததை சேகரித்தான்.
“இத வச்சு என்ன பண்ண போறிங்க?” என்று கேட்டாள்.
” என்னமோ பண்ணறேன். உனக்கு என்ன? என்றான்.
சிற்பிகாவிற்கு தன் கன்னத்தை சிவக்குபடி அடித்தவன், தன் பாதத்தில் முத்தமிட்டு தற்போது நகத்தினை அளவாய் கத்தரித்து, அதற்கு நகப்பூச்சு போட்டு விடுவதில், அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்.
இந்த குறிப்பிட்ட காலயிடைவெளியில், சிற்பிகாவின் மனநிலை முற்றிலும் மாறி இருந்தது.
தனக்காக யார் இருக்கப் போகிறார்கள், தான் யாருக்காக வாழ வேண்டும்? என்றெல்லாம் நினைத்தவளுக்கு, தனக்காக ஒருவன் உருகி உருகி காதலிப்பது ஆனந்தத்தை தந்தது.
அதுவும் இந்த அளவு அவள் காதலை ஆர்யனிடம் எதிர்பார்க்கவே இல்லை.
அவர் என்னிடம் ஏனோ தானோ என்ற வாழ்வு தான் வாழ்வார், தனக்கு அவ்வாறு தான் திருமண வாழ்வு அமையும் என்று மேம்போக்கிற்காக நினைத்தவளுக்கு, திகட்ட திகட்ட நேசமும் காதலுமாய் இனிமை கிடைத்திருக்க, அசந்து தான் போனாள்.
காட்டன் டெனிம் உடையணிந்து கால் நீட்டி இருந்தவளின் அழகில், நகப்பூச்சு போட்டுவிட்டு, இதழ் ஒற்றலை கொடுக்கவும், “பாதத்துக்கு எல்லா அலங்காரமும் முடிஞ்சுதா.” என்று கேட்க, “என்னை முதல்ல அட்ராக் பண்ணியது உன் மருதாணி கால்கள். அதனால எப்பவும் மருதாணி கால்ல வைக்கணும் புரிஞ்சுதா?” என்று மூக்கை பிடித்து ஆட்டியவன் இதுவரை நகத்தை வெட்டி பேப்பரில் வைத்திருந்தவன் அதனை ஒரு சிறு நகைப்பெட்டி போன்றதில் சேகரித்தான்.
பேப்பரை தூர வைக்கும் நேரம் தெரிந்த முகமாக இருக்க, ஆர்யன் எடுத்து பார்த்தான்.
சர்வேஷ் மற்றும் முதலமைச்சர் அரவிந்தின் மகள் என்றதும் கோபம் பிரவாகித்தது.
“என்ன செஞ்சி வச்சிருக்கான் இவன்? இன்று ஆக்ரோஷமாக ஆர்யன் கத்த ஆரம்பித்தான்.
இந்நேரம் வரை சாதுவாக மிக கனிவான, காதலனாக, கணவனாக கையாண்டிருந்தவன், திடீரென கோபத்தில் கத்தவும் அவன் கையில் வைத்திருந்த பேப்பரை கவனித்தாள்.
அதில் சர்வேஷ் மற்றும் தமிழ்
தோளைத் தொட்டு பைக்கில் செல்லும் பேப்பரை கவனித்தாள்.
” இவன்கிட்ட படிச்சு படிச்சு சொன்னேன் இந்த மாதிரி எந்த வம்புக்கும் போகாதடா, அவளிடம் சேராதேயென்று.
இந்த பொண்ணு இங்க வந்து இருக்குன்னு தெரிஞ்ச அப்பவே உஷார் பண்ணியிருக்கணும்.
எப்படியும் எப்பவும் போல ஒதுங்கி இருப்பானு நினைச்சேன் நான் நினைச்சதுக்கு மாறா, என் எண்ணத்துல லாரி லாரியா மண்ணள்ளி போட்டுட்டு, அவ கூட பைக்ல சுத்திட்டு இருக்கான்.
இதோட பின்விளைவுகள் எப்படி ஆரம்பிக்குமோ கடவுளே” என்று ஆர்யன் கோபத்தில் கத்திக் கொண்டிருந்தான்.
ஏற்கனவே சிற்பிகாவிற்கு ஐயா நிபுணனும்-முதல்வர் அரவிந்தும் நல்ல நண்பர்கள் என்று தெரியும். ஏன் ஆர்யனுக்கு கூட முதல்வர் மகளை மணமுடிக்க வாய்ப்புண்டு என்று கூட நினைத்து இருந்தாள்.
ஏனோ சர்வேஷ் உடன் ஜோடியாக தமிழ் சென்றது கண்டு குழம்பி போனாள்.
சிற்பிகா ஒருவேளை சர்வேஷும் தமிழுக்கும் கூட ஜோடி போட்டு இருப்பார்கள் இவர் எதற்கு இவ்வாறு கோவப்பட வேண்டும் என்று ஆர்யனையே இமைக்காமல் பார்த்தாள்.
“இப்ப எதுக்குங்க கோவப்படுறிங்க ஒருவேளை நிபுணன் ஐயா முதல்வரோட பொண்ணுக்கு சர்வேஷை கட்டிக் கொடுக்கலாம்னு கூட நினைச்சி இருக்கலாம் இல்லையா?!” என்று கூறிய அடுத்த நொடி “ஒன்னும் தேவையில்லை சர்வேஷ் ஒன்னும் அந்த பொண்ண கல்யாணம் பண்ணனும்னு அவசியமே கிடையாது. எனக்கு அந்த பொண்ணை பிடிக்கவே பிடிக்காது” என்று உரைத்தான்.
கட்டிய மனையாளோ "உங்களுக்கு பிடிக்கலைன்னா என்ன? சர்வேஷுக்கு பிடிச்ச போதாதா?" என்று குதர்கமாக பேசினாள்.
“சிற்பிகா ப்ளீஸ் என்கிட்ட ஆர்கியூமென்ட் பண்ணாத எனக்கு பிடிக்கல, இன்னைக்கே கிளம்பு முதல்ல இவனை போய் என்னன்னு கேக்கணும்” என்று கோபமாக போனை எடுத்து கையில் சர்வேஷுக்கு அழைத்தான்.
சர்வேஷ் எடுக்கலாமா வேண்டாமா என்று பட்டிமன்றம் வைத்தபடி அறையில் துவண்டு இருந்தான்.
எப்படியும் ஆர்யன் அண்ணா இன்றைய பேப்பரை பார்த்துவிட்டு கொதித்து இருப்பார் என்று அவன் அறியாததா?! தந்தை நிபுணன் கூட, தாய் ஆதிராவிடம் “இப்ப எதுக்கு அவனோட தமிழை அனுப்பி வைச்ச? இப்ப புது பிரச்சனை ஆரம்பிக்க போகுது பாரு? பேப்பர்ல முதலமைச்சர் பொண்ணு யாருடனோ பைக்ல போய் இருக்கா காதலனா? அப்படியிங்கற மாதிரி செய்தி வெளியாயிருக்கு” என்று எரிந்து விழுந்தான்.
ஆதிராவிற்கு இப்படி ஆகும்னு தெரிஞ்சு தானே அனுப்பாம இருந்தோம். நம்ம பையன் மேல நம்பிக்கை இல்லையென்ற மாதிரியே சந்தேகத்தை கிளப்பி விட்டு, என் வாயாலே அனுப்பி விட்டுட்டாளே, ஐயோ’ என்று ஆதங்கமாய் முழித்தாள்.
தமிழோ கையை பிசைந்தபடி சர்வேஷ் அறையை தான் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
துளிருக்கு மனதில் குத்தாட்டம் போடாத குறை. இப்ப போய் என்ன பத்தி வம்பு இழுத்தா நீ ரொம்ப யோக்கியம் அப்படின்னு கண்டிப்பா வீட்ல கேட்பாங்க. இதுக்காகவே தன்னுடைய காதல் விவகாரம் கொஞ்சம் தள்ளி போலாம் என்ற இறுமாப்புடன் திரிந்தாள்.
சர்வேஷ் போனை எடுக்கவில்லை என்றதும் ஆர்யன் தன் தந்தை நிபுணனுக்கு அழைத்தான்.
போனை எடுத்து ஆதிராவிடம் காட்டியபடி, “பாரு பையன் நிம்மதி ஹனிமூன் கூட போக விடலை. அதுக்குள்ள அவன் நிம்மதி போயிடுச்சு என்று அழைப்பை ஏற்று காதில் வைத்தார்.
“ஏன் ஐயா சர்வேஷ் கூட அந்த பொண்ணு தமிழை ஏன் அனுப்பினிங்க?” என்று எடுத்ததும் கத்தி விட்டான்.
” அது ஒன்னும் இல்ல ஐயா, உங்கம்மா தான் ஏதோ தமிழ் கடைக்கு போகணும்னு சொன்னா, உடனே சர்வேஷ் கூட அனுப்பி விட்டு இருக்கா” என்றார் நிபுணன்.
“ஐயா நம்ம வீட்ல எத்தனை கார் இருக்கு? எத்தனை டிரைவர் இருக்காங்க? அவங்களோட அனுப்ப வேண்டியது தானே? அந்த முதலமைச்சர் பொண்ணை தம்பி தான் கூட்டிட்டு போகணுமா? இப்ப பாருங்க பக்கத்துக்கு பக்கம் பேப்பர்ல முதலமைச்சர் பொண்ணு யாரோ ஒரு பையன் கூட பைக்ல ஊர் சுத்துறான்னு போட்டு இருக்காங்க. என் தம்பிக்கு இல்ல கெட்ட பேரு.
ஆயிரம் நியூஸ் வந்து துவைத்து போட்டு போறவ அந்த தமிழ். என் தம்பி அப்படியா? என் தம்பிக்கு இந்த கெட்ட பெயர் வேணுமா?” என்று கோபமாய் கத்தினான்.
நிபுணன் அறியாததா?! ஏற்கனவே ஆர்யனுக்கு முதலமைச்சர் அரவிந்தை கண்டாலே ஆகாது.
முதலமைச்சர் என்றாலும் தகுதி என்ற ஒன்றியிருக்க வேண்டும். தனிமனித கட்டுப்பாடு ஒழுக்கம் என்பது அரவிந்திற்கு இல்லை என்பது ஆர்யனின் கருத்து.
ஒன்றுக்கு இரண்டு மனைவி வைத்துக் கொள்பவன் எல்லாம் நாட்டை ஆள வந்து விட்டானா? என்ற எள்ளல்.
தற்போது இந்த புதைக்குழியில் இருந்து சர்வேஷை எவ்வாறு இழுப்பது என்ற ஒரே சிந்தனையோடு ஆர்யன் “சர்வேஷிடம் போன குடுங்க ஐயா” என்றான்.
நிபுணனும் தன் மைந்தன் சர்வேஷ் அறை கதவை தட்டி “உங்கண்ணா ஆர்யன் பேசறார்” என்று கொடுத்தார்.
சர்வேஷ் கைகள் நடுங்க தமிழை பார்த்து, அன்னை ஆதிரவை பார்த்து போனை வாங்கி காதில் வைத்தான்.
அந்த பக்கம் வைகுண்ட எழுந்து அனலை கக்கியபடி பேசினான் அண்ணன்.
“இல்லிங்கன்னா ஏதோ வாங்கணும்னு சொன்னாங்க கார்ல கூட்டிட்டு போக போரடிக்குது. பைக்ல போகலாம்னு ஆசைப்பட்டாங்க. அதுக்காக தான் கூட்டிட்டு போனேன்” என்று விவரித்தான்
ஆனாலும் ஆர்யன் “நம்ம வீட்ல எத்தனை பேர் இருக்காங்க பைக்ல கூட வேற யாரையாவது அனுப்ப வேண்டியது தானே. நீ ஏன் கூட கூட்டிட்டு போன?” என்று அதற்கும் திட்டு தான் விழுந்தது.
சர்வேஷோ “தெரியாம கூட்டிட்டு போயிட்டு வந்துரலாம் என்று நினைத்தேன். இப்படி யாரோ ஒரு பத்திரிக்கைக்காரன் போட்டோ போடுவான்னு சத்தியமா நினைக்கலை அண்ணா” என்று அப்பாவியை விவரித்தான்.
“சரி அந்த பொண்ணு இப்ப என்ன பண்ணுது?” என்று கேட்க “பாவம் அண்ணா தமிழ் ரொம்ப உடைஞ்சுதான் போயிருக்கா. அவளுக்குமே இது அதிர்ச்சி தானே” என்று தமிழுக்கு ஆதரவாய் பேசினான் சர்வேஷ்.
இதற்கு ஆர்யன் இன்னும் கூடுதலாக கோபம் கொண்டான். “அவளுக்காக நீ பீல் பண்ணிட்டு இருக்க?” என்று அதற்கும் திட்டு கிடைக்க “அப்படி இல்லன்னா என்ன இருந்தாலும் ஒரு பொண்ணு என் கூட சேர்த்து வைத்து பேசினா கஷ்டமாக தானே இருக்கும்” என்று சர்வேஷ் நயமாய் உரைத்தான்.
“மண்ணாங்கட்டி, மீடியால ஏதாவது லவ்வர்னோ, கல்யாணம் பண்ணிக்கப் போறதா நியூஸ் வரக்கூடாது. ஐயாவிடம் கறாரா சொல்லற. புரிஞ்சுதா” என்று உரைக்க, “சரிங்கண்ணா” என்று தந்தையிடம் போனை கொடுத்தான்.
நிபுணனோ தமிழிடம் வந்து, “உங்க அப்பா எதுவும் போன் பண்ணலையாமா” என்று கேட்டார்.
“இல்லங்க அங்கிள் நானா அம்மாவிடம் பேசினேன். அப்பா நேர்ல வந்து பேசுறேன்னு சொல்லி இருப்பதா தெரிவித்தாங்க” என்று முடித்தாள்.
மின்மினியோ தங்களால் இந்த குடும்பம் தவிப்பதை அறிந்து என்ன செய்வாள்.
சர்வேஷோ தமிழிடம் பார்வையால் பேச, மின்மினியோ தேமேயென இருந்தாள்.
—
தேன்நிலவுக்கு சென்ற ஜொடியோ “இன்னும் நாலு நாள் இருக்கு அதுக்குள்ள போகணுமா?” என்று கேட்டாள்.
“சாரி சிற்பி. அந்த அரவிந்த் நாளைக்கே கூட வரலாம். ஐயாவிடம் சர்வேஷை விலை பேசலாம். ஐயா யோசிக்கறேன்னு சொன்னா கூட அது சர்வேஷுக்கு ஆபத்து” என்று கூறினான்.
“ஏன் ஆபத்துன்னு சொல்றிங்க? ஒருவேளை தமிழை பிடிச்சியிருந்து சர்வேஷ் அழைச்சிட்டு போனா?” என்று எதிர் கேள்வி கேட்டு தடையிட்டாள் சிற்பிகா.
அதற்கு ஆர்யனோ பதில் தந்தான். அதை கேட்டு சிற்பிகாவோ தங்கள் உடைகளை சூட்கேஸில் மடித்து வைத்தாள்.
ஆர்யனோ அடுத்த பிளைட்டில் விமான டிக்கெட் பதிவு செய்யும் மும்முரத்தில் இருந்தான்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

அய்யோ பாவமே
அப்படி என்ன கோவம் ஆர்யனுக்கு
Aravindh ah pathi aariyan oda ennam ah thappu nu solla maten aana Sarvesh ah trap panni irukaga nu eppudi solluran sirpika keta kelvi ah na bathil ah engalukum sollalam. la
Apadi ena pa irukum
Nice waiting for next ud regular kudunga sis suspense thanga mudiyathu ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
❤️❤️❤️❤️🫰🫰🫰
Thuliru…….thapichitta…..enjoy……..,…
Venam antha Tamil pulla Nibunan kudumbathuku.etho oru thithaoda than aAravindh avan magala anupiriukan.venam sis plsssss
ஆரியன் கோபப்படறதுலேயும் நியாயம் இருக்கு, கேரக்டர் சரியில்லாதவன் எல்லாம் நாட்டாமை பண்ணா நல்லாவா இருக்கும்..? அதுவும் அவங்கப்பாரோட வளர்ப்பை பத்தி தப்பா பேசினவரோட பொண்ணை எப்படி இந்த வீட்டு மருமகளாக்க நினைப்பான்..?
Very nice epi👍
Aryan sirpika ta ena sonan tamil ena villakam ithuku munthi panirukalo enaku enamo sarvesh minmini dan jodi nu thonuthu crct ah sis
Wow super. Why ariyan got so angry? Intresting
Apadi yenna bathil and thamizh yenna solli Sarvesh ah sari katina
Wow super 👌
Sema interesting
Aryana ethukku. evlo கோவம்.
Enna பதில் sirpikku sonnan….
தமிழ் enna solli sarvesh கவிழ்த்தா
Ayyo sarvesh tamil கிட்ட kannalae pesaranae
AArya sikiram போய் sarvesh காப்பாத்து
Apadi ena kovam Aravind mela aaryan ku ena nadanthuchi therilaye ivangalukulla etho onu iruku iva etho plan pani vantha mariye aeiduchi nibu konjam ushara iru pa
Sema sis intresting eagarly waiting for nxt ud😍😍😍😍
Super sis semma epi 👍👌😍 avanga plan yetho aaryan ku therinjiruku pa adhan eppdiyo sarvesh a kaapathina sari
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌Apdi ennadhan prachanaya irukkum Aryanukku🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
Yaru iva (Tamil)appavai ya 🤦 adai sarva un paravai enna Ava mayla pooguthu 🧐🤨
Sikkaram vanthu ivala 1st vitta vittu anupu ariya😤😤😤😤😤😤😤😤😤
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Interesting sis
Interesting sis
Aachooo….
Enakum Tamil pidikala… Aryan side dan nanu… Ava venam sarvaku… 😑😑
எனக்கும் கூட அந்த பொண்ணு தமிழோட பார்வையும் சரி பேச்சு பிடிக்கவே இல்லை . அதே மாதிரி அவ ஆசைப்பட்டு சர்வேஷ் கூட போன மாதிரி தெரியல ஏதோ ஒரு ஆதாயத்தை மனசுல வச்சுக்கிட்டு தான் போயிருக்கா .
ஆரியன் கோபப்படுறதில்ல தப்பே இல்லை.
Super super super super super
Super super super super super interesting ❤️❤️❤️❤️❤️
Super sago Semma interesting waiting for next episode
nice!!!
Sema sema interesting epi
👌🏻👌🏻👌🏻♥️♥️♥️
ஆர்யன் தமிழ் அவளை கண்டு ஒதுங்க ஏதோ ஒரு பெரிய காரணம் இருக்க வேண்டும்…. சர்வேஷ் அவனை இந்த பிரச்சினையில் இருந்து எப்படி மீட்க போகிறானோ….