அத்தியாயம்-46
நிபுணனுக்கு மகள் காதலிப்பது ஆச்சரியம் அதுவும் வித்யுத் மகனை என்றதும் அதிர்ச்சி.
இங்கிருந்து நாகர்கோவிலுக்கு ஒன்றரை மணி நேர பயணம். இதில் எங்கு சந்தித்திருப்பார்கள் என்ற திகைப்பு.
இதில் ஆர்யன் வளர்ப்பு நாய் ராயலை வைத்து வித்யுத் மகனை அசையவிடாமல் செய்தது கூடுதல் ஆச்சரியம்.
உண்மையில் இத்தனை பேர் எதிரில் துளிர் காதலை ஒப்புக்கொண்டதில் சிலையாக மாறியிருந்தான் விதார்த்.
நிபுணனிற்கு விதார்தை கண்டு நண்பன் மகன் என்ற இரக்கம் பிறக்க, “ஐயா, எதுவானாலும் இப்படி அசையவிடாம நிறுத்தி கஷ்டப்படுத்த கூடாது.
அவரை போக சொல்லுங்க. காலையில ஜட்ஜ் வித்யுத்தை நேர்ல பார்த்து பேசலாம்” என்று கூற ஆர்யன் சமாதானம் ஆகாமல் அவ்விடம் நின்றான். தந்தை பேச்சுக்கு பாதி செவி மடுத்தவன்
திருநிறையக வாசலில் இருந்த சிமெண்ட் திண்டில் விதார்த்தை அமர வைத்து ராயலை அருகே நிறுத்த, விதார்த் வரும் பொழுது அழைத்து வந்த ரோஸ்லினோ ‘எனக்கொன்றும் தெரியாதென்ற ரீதியில் கூடவே இருந்தது.
சர்வேஷ் வித்யுத்திற்கு அழைத்துவிட்டு, “அண்ணா ரிங் போகுது” என்று நீட்டினான்.
விதார்த் இறுக்கமாய் முகம் தூக்கி வைக்க, நிபுணனோ ”ஐயா ராத்திரி நேரம் தொல்லை கொடுக்க வேண்டாமே. இந்த நேரத்துல தன் பையன் காதலிச்ச ஒரு பொண்ணை தேடி வீட்டுக்குள்ள போனது வித்யுத்துக்கு தெரிந்தா சங்கடமாயிருக்கும்.” என்று கூறவும், வித்யுத் “அரை தூக்கத்தில் “ஹலோ உஸ் இஸ் திஸ்?” என்றார்.
ஆர்யனோ நிபுணனிடம் “இருக்கட்டும் ஐயா அவர் பையன் விதார்த்காக ஒரு நாள் ராத்திரி தூக்கம் தொலைக்கட்டும். எத்தனை நாள் அவரோட வார்த்தையை நெஞ்சில் சுமந்துட்டு, என் பையன் என்னை போல கோபத்துல கத்தி எடுத்திடுவானோனு பயந்திருக்கிங்க. அவர் வந்து பார்க்கட்டும். நான் கத்தி தான் எடுத்திருக்கிறேன் ஆனா உயிரை காப்பாத்தன்னு இங்க வந்து உங்க வளர்ப்பை தெரிஞ்சுக்கட்டும்” என்று பேசியவன் மறுபுறம் அட்டன் செய்த வித்யுத்திடம், “ஜட்ஜ் விட்டுத் அங்கிள். உங்க பையன் விதார்த் எங்க திருநிறையகத்துல இருக்கார். அவர் செல்ல பிராணி ரோஸ்லின் கூட. என்ன ஏதுன்னு இங்க வந்து தெரிந்துக்கோங்க. ஆஹ் திருநிறையகம் எங்கயிருக்குன்னு தெரியுமா? திருநெல்வேலி நிபுணன் ஐயா வீடு குகூள் மேப்ல வழியை போட்டு வாங்க.” என்று கூற, வித்யுத் வேகமாக விதார்த் அறைக்கு சென்று பார்த்தார்.
மகன் இல்லையென்றதும் அவனது இருசக்கர வாகனத்தை தேட அதுவும் இல்ல என்றதும் ‘இந்த நேரம் அங்க ஏன் போயிருப்பான்?’ என்று குழம்பினார்.
அவருக்கு அங்கே நிபுணனுக்கு ஒரு மகளிருக்க அவள் பின்னால் மைந்தன் பார்வை சென்றிருக்கும் என்று தோன்றவில்லை. வித்யுத் மகனின் அலைப்பேசிக்கு அழைத்து பார்த்தார்.
அங்கே போனை எடுத்த விதார்த் ஆர்யனை கண்டான். “பேசுங்க” என்று கூறவும் “அப்பா” என்று கூறினான்.
“இந்த ராத்திரி எங்கடா போன?” என்று கேட்க, துளிரை பார்த்து “நான் துளிரை பார்க்க வந்தேன்ப்பா. துளிரை விரும்பறேன். துளிர் துளிர் நிபுணன் அங்கிள் பொண்ணு” என்று கூறவும் வித்யுத் மணியை கண்டார்.
“இந்த நேரத்துல? ஆர் யூ மேட் விதார்த்?” என்று கேட்க, “ஐ ஆம் சாரி டேட்.” என்றதும் ராயல் என்ற ஆர்யன் குரல் கொடுக்க குலைந்தது.
விதார்த் கை தானாக போனில் தந்தை அழைப்பை துண்டித்தான்.
“ராயல்… குலைக்குது? அப்ப ராயலோட கஷ்டடில உட்கார வச்சிருக்கானா?’ என்று அவசரமாய் கிளம்பினார்.
மனைவி ஆர்கலி உறக்கத்திலிருக்க, சத்தமில்லாமல் வெளியேறி இரவாடையின் மேற்சட்டையை அணிந்து கார் சாவியை எடுத்து புறப்பட்ட இருந்தார்.
இந்த வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணி நாய்கள் எல்லாம் நிபுணனிடமிருந்து பெற்றவை. செல்ல பிராணியை வளர்ப்பது ஒரு கலை. அதிலும் தன்னை வளர்க்கும் எஜமான் சொல் பேச்சை கேட்கும் ரகமாக திறம்பட வளர்ப்பது நிபுணனுக்கு எளிதானது.
தான் வளர்த்த ஜானி என்ற நாயெல்லாம் தனக்கொரு கஷ்டமான சூழ்நிலை என்று ஆர்கலி உயிரை காப்பாற்ற குறுக்கே வந்ததே. அத்தகைய திறன் கொண்டு நேசம் வைக்க கற்றுக் கொடுத்தது எல்லாம் நிபுணன் வளர்ப்பில் டிரையின் ஆனது. அப்படியிருக்க விதார்த் அங்கே இருப்பது லேசான பதட்டத்தை தந்தது. நிச்சயம் நிபுணன் அப்படி கடிக்க விட்டு காயப்படுத்த மாட்டான். ஆனால் மகன் மனம் என்ன பயத்தில் தத்தளிக்குமோ என்று தவித்தார்.
பெத்த மனம் கிடந்து தவிக்க, காரில் வேகமாய் இயக்கினார்.
இங்கு நிபுணனோ “ராயலை இழுத்து கட்டிப்போட சென்றார்.
ஆர்யன் அதற்கு தடை விதிக்காமல் வேடிக்கை பார்த்தான்.
சர்வேஷோ இந்த விதார்த் வீடு வரை வந்திருக்காம இருந்திருக்கலாம். இப்ப அண்ணனிடம் மாட்டிட்டு திண்ணையில உட்கார்ந்து நகர முடியாம இருக்கார். அச்சோ பாவமா இருக்கு’ என்று தங்கையை கவனிக்க அவ்ளோ சர்வேஷை கண்டு அனலை காட்டி ஆர்யன் அண்ணனிடம் கெஞ்சல் பார்வை வீசினாள்.
அடிக்கடி துளிர் விதார்த்தை கண்டு உள்ளத்தில் பொறுமினாள்.
‘திமிர் பிடிச்சவன் இப்படி வந்து மாட்டிட்டான். அப்பா என்ன முடிவுல இருக்கார். அம்மா என்ன யோசனையில இருக்காங்க ஆர்யன் அண்ணா ஏன் நாயை வச்சி அசையவிடாம பண்ணிட்டார்.
இதுக்கு இந்த சர்வேஷ் அண்ணாவே பரவாயில்லை. வார்த்தையில் அழுத்தம் கூட்டுச்சு.’ என்று நினைக்க நினைக்க துளிருக்கு அழுகை வந்தது.
நிபுணனோ மகள் கலங்குவதை கண்டு “ராணிக்கா இந்த தம்பிக்கு டீ போட்டு கொடுங்க. டீ குடிப்பிங்களா?” என்று கேட்க, “அம்மா பசும்பால் கொடுத்தாங்க அங்கிள் குடிச்சிட்டு தான் வந்தேன். பட் தொண்டை வறட்சியாகுது. டீ குடிக்கறேன்?” என்று கூறினான்.
ராணிக்கா சமையல் கட்டு பக்கம் நகர்ந்தார்.
சில நிமிடத்தில் டீ சூடாக வந்தது. மருமகள் சிற்பிகா டீயை எடுத்து விதார்த்திற்கு கொடுக்கும் பொருட்டு எட்டு வைக்க, ஆர்யன் நெற்றி சுருங்கி பார்வையிட பழையபடி பின்னடைந்தாள்.
வேறு வழியின்றி ஆதிராவை பார்த்து நிபுணன் விதார்த்திடம் கொடுக்கும்படி பார்வை பார்த்து வைத்தார்.
“என்ன ராணிக்கா எல்லாருக்கும் டீ போட்டுட்டிங்க” என்று நிபுணன் கேட்க, “வீட்டுக்கு கடைக்குட்டி, அதுவும் பொட்டப்பிள்ளைன்னு செல்லம் கொடுத்துட்டோம். இப்ப இந்த நேரம் பஞ்சாயத்தா போயிடுச்சு.” என்று துளியை பார்த்து டீயை எடுத்துக்கோ” என்று கூற, “வேண்டாம் ஆச்சி” என்று மூக்குறிந்து தேம்பினாள்.
ஆதிரா விதார்த்திடம் கொடுக்க, "தேங்க்ஸ் ஆன்ட்டி" என்று பருகினான்.
"ஐயா உங்களுக்கு டீ" என்று நிபுணன் கேட்க "வேண்டாங்க ஐயா" என்று ஆர்யன் தங்கையின் அழுகையை தான் நோட்டமிட்டான்.
விதார்த்திற்கு 'சரவணவேலன் என்னடான்னா தங்கச்சி அழுதா இதயத்துல ரத்தம் வடிப்பார் எங்க மச்சான்னு சொல்லிட்டு திரிவான். இங்க அழறதை நல்லா ரசிக்கறார். என் கொழுந்து இப்படி அழுது நான் பார்க்கணுமா? எல்லாம் என்னை சொல்லணும். கிறுக்குத்தனமா இங்க வந்துட்டேன்.' என்று வருந்தினான்.
ராணி ஆச்சி சுவரோடு சரிந்து கீழே அமர, சிற்பிகாவோ பக்கத்தில் அமர்ந்து, "ஆச்சி... நிபுணன் அப்பாவுக்கு காதலிச்சா பிடிக்காது தானே? அவர் தங்கையான சாருலதா சித்தி காதலிச்சப்ப கூட பிரிச்சி விட்டாங்க தானே? அந்த பாம்பு கடி ரவி அவரை தானே சாருலதா அத்தை விரும்பியது?" என்று கிசுகிசுக்க, "காதல் பிடிக்காதுன்னு யார் கண்ணு புரளியை கிளப்பியது.
காதல் கண்ணை மூடிட்டு வரக்கூடாதுன்னு சொல்லும். தனக்கு வர்ற துணை தனக்கு சரியான்னு பார்த்து காதலிக்கணும்னு சொல்லுவாப்ள.
எங்க நிபுணன் தம்பி குறுக்கால நின்று மகளை அழவைக்கிறாரு. சரியா பாரு. உன்ற வீட்டுக்காரர் ஆர்யன் தான் கண்ணசைவில் உட்கார வச்சி நாட்டாமை பண்ண இருக்கார்.” என்றதும், சிற்பிகா தன்னவனை கண்டாள்.
உண்மையில் நிபுணன் கூட மகளை கடிந்து ஒருவார்த்தை திட்டவில்லை. ஏன் இங்கே யாரும் திட்டவில்லை .
“ஆர்யன் தம்பி தான் பழசை நினைவு வச்சி நிறுத்தியிருக்கு.
உன்னை அடிச்சதுக்கு தான் அந்த நேரத்துல வழக்கறிஞர் வித்யுத் தம்பி, ‘இப்படியா பையனை வளர்ப்பாங்க? உன்னை மாதிரி அவனும் கோபத்துல கை ஓங்கறான். சிற்பிகா என்ன பிராப்ளம்ல உள்ள வந்தான்னு வாதாடின வக்கீலா எனக்கு தெரியும். அவளுக்கு டீச்சர் என்ற முறையில் உன்மனைவியை பிடிக்கலை.
ஆதிராவை பத்தி தெரிந்தா கண்டிப்பா சிற்பிகா மன்னிப்பு கேட்பா. ஆனா இந்த நிமிடம் சிற்பிகா ஒரு சின்ன பொண்ணுனு கூட பார்க்காம இடி மாதிரி அடியை இறக்கியிருக்கான் ஆர்யன். இந்த கோபம் இந்த இடத்துல ஒரு பையன் இருந்து, நீ ஒருத்தனை வெட்டியது போல அவனும் கத்தியால குத்தினா அவனும் சிறைச்சாலைக்கு போகவா நிபுணா. ஆர்யனை சாந்தப்படுத்து இம்புட்டு கோபம் கூடாதுனு சொன்னார்.
ஆர்யன் தம்பியும் ஆதிரா அம்மா சொல்லியும் உன்னிடம் மன்னிப்பு கேட்கலை. வீராப்பா தாத்தா வீட்டுக்கு படிக்க போயிடுச்சு. ஒரு வருஷம் இருக்கும், ஆர்யன் என்னை மாதிரி வரக்கூடாது. மத்தவங்க சொல்லற மாதிரி வந்து நிற்க கூடாதுன்னு சொல்லி சொல்லி அவர் மாமனாரிடம் பேசுவாப்ள. ஆர்யன் தம்பி பக்கத்துல தானே இருக்கும். அதெல்லாம் கேட்டிருக்கும் அப்பா அம்மா மனசுல இருந்த வலிக்கு மருந்தா உன்னை கட்டிக்க சொல்லவும் மறுக்காம சம்மதிச்சிட்டார். கிட்டதட்ட இது பெத்தவங்களுக்கு மனசு குளிர்விச்சிடுச்சு. ஆனா பேசினவருக்கு பதிலடி தர ஒரு காரணம் கிடைச்சு விட முடியுமா? அதான் அவர் பையனை அசைய விடாம உட்கார வச்சிருக்கார்” என்று ராணிம்மா சிற்பிகாவிடம் கிசுகிசுக்க, சிற்பிகாவிற்கு ‘ஒரு செய்கைக்கு தொடர் சங்கிலியாக காரணங்கள் நீண்டு கஷ்டங்கள் நீடித்திருக்கின்றதே என புரிந்தது.
தவிப்பாய் கணவனை கவனிக்க ஆர்யனோ தங்கை தரையில் கண்பதித்து தாரை தாரையாக கண்ணீர் வடிக்க அதை தான் உற்று நோக்கினான்.
துளிர் யாரையும் விழி நிமிர்த்தி பார்க்க அஞ்சினாள்.
விதார்த்தும் அழாதே என்றெல்லாம் வசனம் பேசவில்லை. தனக்காக ‘தன்னை காதலிக்கின்றேன்’ என்றுஇன்று தானே வாய் திறந்து நிற்கின்றாள். இத்தனை நாளாய் விளையாட்டாய் இருந்தவளாயிற்றே.
இது தங்கள் வாழ்வில் சீரியஸான நிமிடம், அழட்டுமென டீயை பருகி ஓரமாய் வைத்தான்.
வித்யுத் கார் காம்பவுண்டிற்கு வெளியே நிற்க, ஆர்யன் சர்வேஷிடம் கதவை திறக்க சொன்னான்.
கதவு திறக்க, கார் உள்ளே வந்தது. வித்யுத் இரவாடையான ஆண்கள் அணியும் நைட் சூட் அணிந்து கீழியிறங்கினார்.
நிபுணனுக்கு அதுவே நெஞ்சை வதைத்தது. இப்படி உடையை கூட மாற்றாமல் அவசரமாய் வந்து நின்றிருக்கின்றானே நண்பன்.
அப்படியா வெட்டி சாய்த்துவிடுவோம்? என்ற வருத்தம்.
வித்யுத் விதார்த்தை கவனிக்க திண்டில் அமர்ந்திருந்தவன் எழாமல் ஆர்யனை காணவும் விதார்த் அருகே டீ கோப்பை இருக்க, நிதானமடைந்தார் வித்யுத்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 aaryan kandipa thangachi sadhagama dhan mudivu seyvan enna thannoda appa VA pesinadhuki badhiladi kudukanum nu nenaikiran hmm parpom 🤔🧐
Aarya nee solrathu niyayam tha athukaga ippadi royal kastadi la utkara vaika kudathu la nee un thangachi ku support panuva therium avarum una thappa eduka mataru ena nadukum wait pannanume . Sikram next ud podunga sisy
Super super ka 😍😍… waiting for next ud
Sema sister viruvirupa poguthu ud koncham udane podunga Arayan sema mass but ena enga Nibunan pecha kekalam
அப்பாடா…! டீ காபி தண்ணியெல்லாம் கொடுத்து திண்ணையிலத்தான் உட்கார வைச்சிருக்கிறாப்ல.. நல்ல வேளை, பயபுள்ளைக்கு ஒரேயடியா மரியாதை தரலைன்னாலும் ஓரளவுக்கு தந்திருக்காப்ல.
அந்தமாட்டுக்கு தப்பிச்சிட் டான்.
இது வித்யுத்தோட இன்னர் வாய்ஸ்.
👌👌👌next ena… Waiting
Aritan konjam over a than poran.Thulir pappa va innum enna panna porano
Super super super ena sis twist vachi mudichiirukiga waiting for next ud ❤️🥰🤩🤩😍🥰🥰🤩😍
Super epi sis👍
ஆர்யனோட ஆளுமை வேற லெவல் 👌👌👌👌👌👌👌
மாட்டிக்கொண்டாயே மங்குனி அமைச்சரே நிலை தான் விதார்த் க்கு
Sema
ஆர்யன்…judge ye nalla கதி கலங்க வைக்கிறப்பா….
வித்யுத்….உனக்கு என்னப்பா அவ்ளோ அவசரம்….அங்க பாரு கெட்டதுலயும் ஒரு நல்லது உனக்கு..துளிர் காதல ஒத்துக்கிட்டா…ஆன அந்த சந்தோசத்தை அனுபவிக்க முடியாம… ராயல் எதிர்ல உட்கார்ந்து இருக்க….
பாப்போம்…ஆர்யன் உன் அப்பா கிட்ட என்ன சொல்ல போறானோ ….?
Wow. Sema twist. Ariyan too manly. Ariyan overtake nib.excellent narration. Eagerly waiting for next episode sis.
❤️❤️❤️❤️❤️❤️👌
Sema sema sema sis…. Spruuuu eagarly waiting for nxt t😍😍😍😍😍😍💕💕💕💕💕💕💕💕💕💕
ரொம்ப ரொம்ப அழகாக இருந்தது ஆர்யனின் ஆட்டம் வேறே மாதிரி இருந்திச்சி ஒவ்வொன்னையும் சொல்லில் அடிக்கிறான் விதார்த்திற்கு நல்லதுதான் செய்து இருக்கிறான் சர்வேஷ்க்கு ஜோடி யாரோ மொத்ததில் அனைத்து சுவையும் நிறைந்தது அதிபதி வாழ்த்துக்கள் மா
Interesting sis
முடிவு வந்துடுச்சு
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
nice!!!
ஆர்யன் காதலுக்கு எதிரி இல்லை ஆனால் வித்யூத் அன்று நிருபன் கிட்ட பேசிய வார்த்தைகளுக்கு இப்போது பதிலடி தர போகிறான்…. இனி என்ன ஆகுமோ
Aryan ennapa vidharth appava kooptu vachu solli kaamikka poriya😟😟😟😟😟😟😟😟😟 eagerly waiting for next ud
Super super super super super
ஆர்யன் வேண்டும் என்று செய்து அனைவரையும் அலற விட்டு விட்டார்.
Super sis
Aariyan vidharth ah ipadi inga okkara vachathuku vera karanam irukum than thonuthu at the same time avan vidhyuth kita sangadam paduthu ra mathiri kelvi kepan nu thonala yen na first of all ava sirpika ah va adichathuku appo sorry kekama veembha poi irukalam aana avanuku ippo iruku ah maturity ku yetha mathiri than handle pannuvan nu thonuthu