புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

என் நேச அதிபதியே -47

அத்தியாயம்-47

   “வித்யுத்” என்று நிபுணன் நெருங்கி வர “இட்ஸ் ஓகே” என்பதாக கையால் தடுத்து, ஆர்யன் அருகே சென்றார் வித்யுத்.

   “வணக்கம் அங்கிள், இந்த நேரம் அழைச்சிருக்க கூடாது. ஆனா உங்க பையன் இந்த நேரம் தான் எங்க வீட்டுக்கு வந்திருக்காரே. அதனால் நேரம் காலம் பார்க்கலை சாரி அங்கிள்.” என்று எழுந்து மரியாதை தரும் பொருட்டு பேசினாலும் வாழைப்பழத்தில் ஊசியாக குத்தினான்.

  வித்யுத் பார்வை ராயல் மீதுயிருக்க “ஆஹ் அங்கிள் ராயலை வச்சி உங்க பையனை மிரட்டலை. ராயல் அதோட வேலையை சரியா செய்யறதை நாங்க தடுக்க கூடாது பாருங்க.

  எங்களிடம் டிரையின் ஆனா நாய்கள். உங்க பையன் விதார்த் எங்க வீட்டுக்கு வந்து அதுக்கு துணை சேர்த்துட்ட மாதிரி நாளைக்கு யாரும் திருடன் கொலைக்காரன் ராயலுக்கு துணை சேர்க்க வந்துட்டா? இன்னிக்கு சும்மா விட்டுடுச்சுன்னு அதோட காவல் காக்குற விதத்துல குறை வந்துடக்கூடாது.

   என்னை பொறுத்தவரை எங்க வீட்டு நாய் மேல கூட குறையில்லாம வளர்க்கிறோம்.

ஏன்னா பழி பாவம் எல்லாம் எப்படி வேண்டுமென்றாலும் வரும். எதுக்கும் தயாரா இருந்துக்கறதும் எங்க பெயர் களங்கமில்லாம இருக்கணும் என்பதிலும் நாங்க சரியா இருக்கணும்.” என்று கூறி “ராயல் இனி நீ போய் தூங்கு” என்று கூற அதனிடம் சென்று படுத்தது.

  விதார்த்திற்கோ தந்தை வஞ்சனையின்றி விளாசப் போகின்றார் என்று புரிந்தது.

   வித்யுத்தோ அதற்கு மாறாக, “விதார்த்” என்று கட்டிக்கொண்டார்.

   வித்யுத்திற்கு தெரியாததா? நிபுணனிடமிருந்து பெறப்படும் வளர்ப்பு பிராணிகள், உயிரை கூட துச்சமாக மதித்து தன்னை வளர்ப்பவருக்கு விஸ்வாசமாக இருக்குமென்று.

  அப்படியிருக்க, ராயல்ஸ் விடுமா? மகனை கண்டு தழுவியப்பின் அவனருகே இருந்த காபி கோப்பையை கண்டு, நிபுணன் அப்படியொன்றும் மகனை அவமதித்து நடக்கவில்லை மரியாதை தந்துள்ளார் என்று புரிய, மகன் இந்த நேரம் வந்தது தவறென்று மகனை எட்டி நிறுத்தி பளிரென்று அறைய கையை ஓங்கினார்.

   ஆர்யனோ தடுக்கும் விதமாக “இங்க உங்க மகனை தண்டிக்க உங்களை அழைக்கலை. கண்டிக்க தான் அழைச்சது.

   ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக பயணம் செய்து இங்க வந்து, ராயல் மாதிரி ஒரு நாய் இருக்குன்னு தெரிந்தும் வீட்டுக்குள்ள, அதுவும் எங்க ஐயா, நான், சர்வேஷ் இருக்கறப்ப வந்திருக்கார். ஒருவேளை என் தங்கைக்கு நிஜமாவே இவரை பிடிக்காம இருந்தா எங்க ரியாக்ஷன் எப்படியிருந்திருக்கும் அங்கிள்?” என்று துளிர் அருகே வந்து, “என் தங்கைக்கு உங்க பையனை பிடிச்சிருக்கு. அவனை விரும்பறேன்னு வாய் வார்த்தையா சொல்லிருக்கா. அதோட விதார்த் நிலையை பார்த்து தாரை தாரையா கண்ணுல தண்ணீர் விடறா. அப்படியிருக்க அவரை காயப்படுத்த முடியுமா?” என்று துளிரின் தலையை வருட “அண்ணா” என்று வெடித்து அணைத்து கேவினாள்.

   “அண்ணனுக்கு தெரியாதுன்னு நினைச்சியாடா? உன் அண்ணன் அந்தளவு முட்டாளில்லை. என் தங்கை பொங்கல் அப்ப நான் வாங்கி கொடுத்த டிரஸை போட்டு தான் ஊருல காக்கா குருவிக்கிட்ட கூட காட்டி பெருமை பேசுவ. அப்படியிருக்க, பொங்கல் அப்ப நீயோ, நான் வாங்கி கொடுத்ததை போடலையே.

   அண்ணன் கொடுத்ததை கூட தவிர்த்து கொரியர்ல வந்ததை எடுத்து உடுத்தியிருக்கன்னா, யார் கொடுத்திருப்பா, என்னனு தெரிந்தியிருக்க மாட்டேனா?

   அன்னைக்கு பைக்ல போனப்ப, நம்ம பைக்கை அடிக்கடி விதார்த் பைக் பாலோவ் பண்ணுச்சு. எவன்டா நான் இருக்கும் போதே என் தங்கைக்கு ரூட் விடறதுன்னு பைக் கண்ணாடியை பார்த்தேன்.

  விதார்த் உதட்டுல குறும்புத்தனமான புன்னகை இருந்தது. இதுல உன் கண்ணுல திருட்டுதனம், என்னிடம் விதார்த் மாட்டிக்க கூடாதென்ற பயம் இரண்டும் தெரிந்தது. அதனால அன்னைக்கு அதை கண்டுக்கலை.

   வீட்டுக்கு வந்ததும் கொரியர் கொடுத்துட்டு போன பெரியவரிடம் ஃப்ரம் அட்ரஸ் கேட்டேன்.‌ மேல உன் பிரெண்ட் அட்ரஸ் எழுதியிருந்தது. ஆனா அவரிடம் கேட்க, சரவணவேலன் அவனோட கூட்டாளி இருக்கறப்ப கொடுத்து விட்டார்னு சொல்லவும், சரவணவேலன் கொடுத்திருப்பானா என்று டவுட். ஆனா உன் கண்ணுல தான் விதார்த் மேல் வழிந்த காதலை பார்த்தேனே?! அதனால் அது யாருன்னு கேட்க, நாகர்கோவில்ல இருக்கற ஜட்ஜ் பையனாம் தம்பினு மட்டும் சொன்னார்.

   உடனே ஜட்ஜ் வித்யுத் போட்டு சோஷியல் மீடியாவுல விதார்த் போட்டோ கலெக்ட் பண்ணினேன். உன்னை பின்‌தொடர்ந்து வந்த சேம் பையன் என்றதும், விதார்த் போட்டோவை கொரியர் தாத்தாவிடம் காட்ட அவரும் அடையாளம் சொன்னார்.

  எனக்கு சரவணனை நீ விரும்பறதா இருந்தா அவன் வீட்டுக்கு போனப்ப உன்‌முகம் மலர்ந்திருக்குமே. நீ விதார்த் பார்த்து தானே முகம் விகாசித்த.

   விதார்த் படிப்பு பத்தி விசாரிக்க, உன் காலேஜ், சரவணவேலன் கிளாஸ்மேட்னு தெரியும். சரவணனுக்கு உன் காதல் தெரிந்தும் அவன் அமைதியா வேடிக்கை பார்ப்பதை கண்டு நானுமே எனக்கு தெரிந்ததா காட்டிக்கலை.

   நீ விரும்பற, அது உன் ஆசை. அதுல அண்ணன் தலையீடல் எப்படியிருக்கும். கெட்டவனா இருந்தா தடுப்பேன். ஆனா விதார்த் கெட்டவனகல்லையே. அதுவும் என்ற துளிர் குட்டி இப்படி கண்ணீர் வடிய பேசறப்ப, பிரிப்பேனா?

   எதுனாலும் வித்யுத் அங்கிள் முடிவெடுத்து முடிக்கட்டும். எப்படியும் நான் என் தம்பி ஐயா பார்க்கற பொண்ணை ஏற்றுக்கறது இருந்தாலும் தங்கை காதலிக்க கூடாதா?!.” என்று பேச அண்ணனுக்கு பொங்கல் அன்றே தெரிந்தும் தன்னை கேள்விக்கேட்டு துளைக்காமல் இருக்க மென்மேலும் அழுதாள்.

   நிபுணனோ “இதுக்கே அழுதா எப்படிடா செல்லம். ஐயாவுக்கும்  பொங்கல் அப்பவே தெரியும். என்ன யார் எவர்னு தெரிந்துக்க போனப்ப கொரியர் ஆபிஸ்ல ஆர்யன் ஐயா இருந்தார். சரவணவேலன் என்றதும் ஐயா அமைதியாக நான் சரவணவேலன் தான் உரிமையில உடுப்பு வாங்கி தந்திருக்கார்னு முத்துவேலனிடம் சம்பந்தம் பேச நினைச்சேன். இப்ப வித்யுத் என்றதும் தயக்கமிருந்தது. அச்சோ சரவணவேலன் மனசு வாடிடுமேன்னு. ஐயா சொல்றதை பார்த்தா சரவணன் விரும்பலையா டா துளிர்.” என்றதும் துளிருக்கு தந்தைக்கும் தெரியுமா என்று‌ வாய் பிளந்து அதிர்ச்சியானாள்‌

இதில் சரவணவேலன் விரும்பலையாடா என்றதும் வேகமாய் மறுத்து, “மச்சானும் இவரும் சிநேகிதர்கள்னு இப்ப தான் அப்பா தெரியும்.” என்றவள் அண்ணன் ஆர்யனை புஜத்தை உடும்பாய் பற்றினாள்.

சர்வேஷோ அப்பாடா அண்ணனுக்கு தெரிந்திருக்கு. நீயேன்டா தங்கை காதல் தெரிந்ததும் என்னிடம் சொல்லலைனு அதட்ட மாட்டாரென நிம்மதியடைந்தான்.

ஆதிராவோ அப்பாவும் பையனும் பேசிக்கறிங்க இங்க இன்னொரு தகப்பனும் பையனும் இருக்காங்க.” என்று வித்யுத் விதார்த்தை சுட்டி காட்டினார்.

சிற்பிகாவோ வித்யுத்தை கண்டு ‘என் வழக்கை வாதடின வக்கில் சார். இப்ப நீதிபதியா இருக்கார். இந்த குடும்பத்துல சம்பந்தம் வைக்கலாம்.

ஆனா என்ன முடிவு எடுப்பாரோ? என்று நினைக்க, "விதார்த் இந்த நேரத்துல இங்க வந்தது தப்பு தான். நிபுணன் சாரிடா. ஆர்யன் என் பையனை நான் கண்டிக்கறேன்." என்று வணக்கம் வைத்து நடத்தார். 

வித்யுத் காரில் ஏறும் நேரம், “அப்பா கொழுந்து என்னை விரும்பறா. நானும் விரும்பறேன்” என்று விதார்த் கூற, கொழுந்து என்று செல்ல பெயரிட்டு கூறியும் வண்டில ஏறுடா” என்று அதட்டி, துளிரையும் கவனித்து ஏறினார்.

"என்னை அவருக்கு பிடிக்காதா அண்ணா" என்று ஆர்யன் கேட்க, "பிடிக்குது பிடிக்கலை என்பதெல்லாம் நாம கேட்க முடியாதும்மா. அவரவர் விருப்பம் அவரவர் முடிவு. 

நீ விரும்பறது அவருக்கு தெரியும்‌. நாங்க விதார்த்திற்கு உன்னை தரமாட்டோம்னு இங்க பேசிக்கலை. பார்ப்போம் உன் திமிர் பிடிச்சவன் லேசுல உன்னை இழக்க மாட்டான்‌.” என்றதும் “அண்ணா?” என்று வாய் பிளந்தாள்.

“குட்டச்சி காதலிக்கறங்க விதார்த் அப்படின்னா நேம் சேவ் பண்ணிருப்பாங்க. ‘Thimir Pidichavan’ இருந்தது‌.” என்றதும் நாணினாள்.

இந்த வீட்ல நான் தான்யா அப்பிராணி பிள்ளை‌.’ என்பதாக சர்வேஷ் வாய்பிளந்து வேடிக்கை பார்த்தான்.

“சரி சரி தூங்குங்க. அடுத்து வீட்ல கல்யாண யோகம் அமையற அறிகுறி நல்லாவே தெரியுது” என்று ராணி ஆச்சி உறங்க கூற அவரவர் அறைக்கு சென்றனார்.

ஆர்யனோ மனையாளை உறங்க விடாமல், “தங்கைக்கு சப்போஸ் கல்யாணம் முடிவானா நமக்கு நிறைய வேலையிருக்கு.” என்று கூற சிற்பிகாவோ நிச்சயம் விதார்த் துளிர் திருமணம் முடிவாகணும்ங்க” என்றாள்.

“ஆமா அதென்ன முகம் வாட்டமா இருக்கு‌” என்று கேட்க, சங்கிலி தொடராய் மனிதனின் செய்கை மாறி வந்து ஒருவரை குற்றம் சாட்டும் விதம் கண்டுரைக்க, ஆர்யனோ “உண்மை தான்‌ தொடர் சங்கிலியா பிரச்சனை வந்தாலும் அவங்கவங்க ஸ்டேஷனுக்கு சரியா போய் சேருதா? அதான் முக்கியம்” என்று உதட்டில் கைவைத்து ஆக்கிரமிக்க, சிற்பிகா நாணம் கொண்டவளாக முகம் சிவந்தாள்.

விடியல் அழகாய் மொட்டுவிட, துளிரோ காலையிலேயே எழுந்து கல்லூரி செல்ல ஆர்வமானாள். 

விதார்த்திடம் காதலிப்பதை உரைத்தப்பின் நிதானமாக பேசும் நேரத்திற்கு காத்திருந்தாள்.

ஆர்யனோ மருத்துவமனைக்கு செல்ல, துளிர் சர்வேஷ் கல்லூரிக்கு சென்றார்கள். 

விதார்த் வகுப்பில் சரவணவேலனிடம் வீற்றிருக்க, துளிர் வந்தாள். 

சரவணவேலனோ “அப்ப பெரியவருக்கு தெரியாத மாதிரியே காட்டியிருக்கார். காதலுக்கு இங்கே பச்சை கொடி தான். அங்க எப்படில?” என்ற கணம் துளிர் வரவும் சரவணவேலன் எழுந்து வெளியேற முயல, “மச்சான் அவர் வீட்ல என்ன சொல்றாங்க” என்று கேட்டு முடித்தாள்.

“ஆஹ் சுரக்காய்கு உப்பு பத்தலைனு சொன்னாங்க” என்று விதார்த் கடுகடுப்பாய் பொரிந்தான்.

“டேய்.” என்று வேலன் சலிக்க, “பின்ன என்னடா நாய் மாதிரி இவ பின்னாடி சுத்தினப்ப லவ் யூ விதார்த்னு சொன்னாளா? இவங்க வீட்டு நாய் என்னை கடிச்சிடும்னு அவங்க அண்ணாவிடம் காதலை ஒத்துக்கிட்டா‌.

அதுக்கு கொஞ்ச நேரம் முன்ன கூட நான் இப்பவும் விரும்பறேன் விதார்த் வாய் வந்துச்சா?

எங்கப்பா என்னை அசிங்கஅசிங்கமா திட்டினார். ராயலுக்கு ஜோடியா ரோஸ்லினை இழுத்துட்டு போயிருக்க, வெட்கமாயில்லையானு கேட்கறார்.

அம்மாவிடமாவது காதலிக்கறதை சொல்ல என்னவாம்னு கடிச்சி விடாத குறை‌. உன்னை பிரெண்ட்லியா தானே வளர்த்தோம்னு ஒரே புலம்பல். இரண்டு பேரை சமாதானம் செய்ய நான் நாய் படாத பாடுபட்டேன்.

ஆளாளுக்கு முறுக்கிட்டு திமிறிட்டு பண்ணறிங்க” என்று ஜாடையாக துளிரை வாறினான்.

“மச்சான் அவங்க வீட்ல என்ன சொன்னாங்கன்னு சொல்வாரா இல்லையா? இப்படி தான் பேசுவார்னா நடையை கட்டுவேன்” என்று கோபமானாள்.

“ஏய் என்ன துள்ளற? நடையை கட்டு, இங்க யாரும் உன்னை பிடிச்சி நிறுக்தலை. எனக்கு பொண்ணு பார்க்க ஈவினிங் போறோம். போதுமா போடி” என்றதும் துளிர் விதார்த்தை முறைத்து, “ராயல் கடிக்கட்டும் விட்டிருக்கணும் பாவம் பார்த்தேன் பாரு என்னை சொல்லணும்.” என்று அகன்றாள்.

“என்னடா பொண்ணு பார்க்க போறதா சொல்லற. அவ ரியாக்ஷன் பெரிசா இல்லை. இத்தனை நாள் என்ற மாமன் மகளை காதலிச்சு, இப்ப வேறொருத்தியை பொண்ணு பார்க்க போவியா?” என்று சரவணவேலன் சப்தமிட, “போனா என்னடா விரோதிக்கே காபி தருவாங்க. பொண்ணு கேட்க போனா அவங்க வீட்டு பொண்ணை தரமாட்டாங்களா?” என்று கண் சிமிட்டினான்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

28 thoughts on “என் நேச அதிபதியே -47”

  1. பார்ரா…. பொண்ணு கேட்க போறாங்களாம்….அதுவும் கொழுந்த…..😀😀😀😀❤️❤️❤️
    Very nice…👌👌👌❤️❤️❤️

  2. Rendu perum ippadi mutite irupingla ipo tha love solli iruka thulir nee munja kamikira. Royal vachi miratinalum nee panathu apadi Roslin kutitu poi kovuka pakuriye thambi yaroda pet therinji intha vela panlama

  3. Super sis semma epi 👌👍😍 renduperum marriage aana kooda muttitu suthuvaanga pola🤣 aaryan ellam therinjum amaidhiya erundhurukaney🧐

  4. ஆத்தி அப்ப எல்லா விஷயத்தையும் தெரிஞ்சுகிட்டு தான் ஆரியன் அமைதியா இருந்திருக்கானா.

  5. ஆர்யன் பொறுப்பான பாசமான அண்ணன் என்று நிருபித்து விட்டார்.
    காதல் கை கூடாதா என்று பயம் இருந்தது. நல்ல வேளை சுபமாக முடிந்தது.

  6. ஆக மொத்தம்… துளிருக்கு கூட ஒரு இளிச்சவாயன் கிடைச்சிட்டான். ஆனா, பாவம் இந்த சர்வேஷ்….!
    இவனுக்கு மட்டும் எந்தவொரு கேடியும்
    கிடைக்கலையோ….???

  7. Wow super ariyan. Wonderful and very understandble brother. Excellent ariyan. You are too smart. Next another marriage. Intresting sis.

  8. Aariyan nibunan rendu perumae silent ah irundhu irukaga thulir ivolo panchayathu unna ah la mattumae vandhuchi sarvesh ne unmai ah vae apprani than da vidharth ne royal ku jodi serka ah parthu thulir kita pesunathuku vidhyuth kita nalla vangi kattikita polayae

  9. Ariyan mass panittan 🔥🔥🔥🔥🔥🔥🔥 nipu Xerox nu ovonulium nirupikkaran 🥰🥰🥰🥰🥰
    Valarpu pathi paysunathu agatum , thangachi love ku sammatham soldra vitham aagattum athanailium varithai upayogam 👌👌👌👌👌👌
    Nalla vayla nipu poi muthutta mapula kaykkama vittan 😮‍💨😮‍💨😮‍💨
    Ivlo nadantha apromkuda ithunga rendum nayrku nayr paysi samathamam agura valiya kanom 😅🤦 ipavum aptiye thaan paysittu murukittu irrukuthunga 😤😤😤😤😤😤😤😤
    Eptiyoo sattuputtunu poonu pakka pooranungalye athuvaraikkum santhosam 🥰🥰🥰🤗🤗🤗🤗🤗

  10. Wow😍😍😍😍😍😍😍😍😍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌ana rendu perukkum vaai mattum kuraiyadhu

  11. ஆர்யன் ஒரு அருமையான அண்ணன் என்று நிரூபித்து இருக்கிறான்…. இங்கு வித்யூத் – துளிர் மீண்டும் முட்டி கொள்கிறார்கள்…. இனி என்ன ஆகுமோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!