புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

என் நேச அதிபதியே -54

அத்தியாயம்-54

   சிற்பிகா இன்று ஒரு அரசியல் மேடையில் பேச ஆயத்தமாய் ஆனாள்.

   இதுவரை இது போன்று ஏறி பேசுவதெல்லாம் நினைத்து பார்த்ததில்லை.
  இன்று வேறு வழயில்லை பேச வேண்டும். ஆதிரா அம்மாவின் பேச்சை முதலிலிருந்து பார்த்து ரசித்திருக்க, ஏதோ கொஞ்சம் போல எழுதி வைத்ததை பார்த்து பேசிடும் முடிவில் இருந்தாள்.

   இன்றோடு பிரச்சாரம் வேறு முடித்து கொள்வது என எண்ணி கிளம்பினாள். 

  உணவில் கை வைக்கும் நேரம் பாம்பு கடித்த ரவி உத்திரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கிட்டியது.

   ஒரு ஊரில் இறப்பானது ஒன்றுக்கூட்டியது.

   மருத்துவம் பார்த்த மருத்துவராக ஆர்யன் செல்லவும், சிற்பிகாவும் இறப்பு செய்திக்கு போவதாக முடிவெடுத்தாள்.

    ரவி இறப்பில் அவன் மனைவி ‘பாம்பு கடிக்கு எல்லாம் வைத்தியம் பார்த்து பிழைக்க வச்சியே ஐயா. இப்படி தற்கொலை பண்ணிட்டாரே‌. என்னை நிற்கதியாக நிற்க வஞ்சிட்டாரே’ என்று ஒப்பாரி வைத்தார்.

   ஆர்யனோ அமைதியின் சொரூபமாக நின்றான்.

    ரவி உயிரை காப்பாற்றியது ஒருமுறை என்றாலும், தற்கொலை செய்துக்கொண்டாரே என அமைதியாக அஞ்சலி செலுத்தினார்கள்.

   ரவி இறப்புக்கு நிபுணனும் வந்திருந்தார்.

   ஒரு காலத்தில் வெட்டுவதற்கு அருவாளோடு மோதியவர்களே. காலத்தின் வோட்டம் மாறி ரவி இறப்புக்கு வரவழைத்து விட்டானே என்று நின்றார்.

  ஆதிராவுமே தன்னிடம் வாட்டர் பாட்டிலால் அடிவாங்கியவன், இரத்தம் சூடாகயிருக்கும் தருணம் வாலிப பருவத்தில் எப்படியெல்லாம் ஆடினான். ஆனால் காலம் ஒருவனை எப்படி மாற்றி உருகுலைக்கின்றது என்று நின்றாள்.

  ஆர்யனோ அரசியல் மீட்டிங்கில் பேச போகலையா என்று சிற்பிகாவை கேட்டிட, “அட இறப்புன்னு தெரிந்தும் அரசியல் மீட்டிங் எனக்கு அவசியமில்லை” என்று கூறினாள்.

     இதுவும் காட்டுத் தீயாக பரவியது. பிரச்சாரத்தை தவிர்த்து ஒரு‌ தனி மனிதனின் இறப்புக்கு சென்றதில் மேடை, சேர், வாடகை, பந்தல், என்று அனைத்தும் வீணானது. ஒரு கட்டத்தில் அதெல்லாம் விட ஒரு இறப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தது முதன்மையாக பேசப்பட்டது.

   ஞானவேல் தான் ‘எங்க மேடையில் ஏறி பேச தெரியாம அசிங்கப்படணும்னு ஓடியிருப்பா. அதுக்கு ஒரு காரணம். கீழ் சாதி பையன் சாவுக்கு போய் என்னத்த புடுங்க போறா.’ என்று ஆணவமாய் இருந்தான்.

    மக்களுக்கு சிலது நினைவில் இருக்காதென்ற நினைப்பு. எப்பொழுதும் நாம் செய்யும் நன்மை கூட மறந்துவிடுவார்கள். ஆனால் தீமை மறக்குமா? அதுவும் தன் கட்சி பெண்ணிடமே பொதுவெளியில் பாலியல் சீண்டலில் இருந்த வீடியோ வைரலாக தேர்தல் நேரத்தில் உலாவரும் போது, அரவிந்த் தன் கட்சிக்கு கொடுக்கும் பணம் பலமாய் பேசுமென்றான். பணம் பாதாளத்தில் பாயுமென்ற நம்பிக்கை இருந்தது.

   இதோ அதோயென போக்கு காட்டி ஒரு வழியாக வாக்களிக்கும் நாளும் வந்தது.

   சிறந்த கடமையை நிறைவேற்ற நிபுணன் குடும்பம் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பள்ளியில் ஓட்டு போட நின்றனர்.

  எப்பவும் போல துளிரை முன்னே நிறுத்தி சர்வேஷ் அதற்கு பின்னால் ஆதிரா, நிபுணன் என்று வரிசையாக நின்றனர்.

   மருத்துவன் தன் மனைவியை அழைத்து வர தாமதமாக தனியாக வந்தார்கள்.
  
   சிற்பிகா தன் குடும்பத்தோடு கலக்காமல் கணவனோடு வரிசையில் காத்திருந்தாள்.

   ஞானவேலோ நிபுணன் அருகேயிருந்த சர்வேஷை கண்டு சிற்பிகா கணவனென எண்ணி தனியாக இருக்கும் பெண்ணிடம், “ஏன் கண்ணு பிரச்சாரமெல்லாம் முடிஞ்சதா? எவ்ளோ சொல்லியும் தேர்தல்ல நின்னுட்ட, சரி நம்ம கட்சில உடன்படுக்கையில் இருந்தாலாவது ஒருத்தருக்கு ஒருத்தர் வசதியா இருந்திருக்கும். நீ அதுக்கும் ஒத்து வரலை‌.

  இப்ப அநியாயமா சுயேட்சையா நின்று தோற்றுட போறியே” என்று உச்சு கொட்டினார்.

‌ சிற்பிகாவோ பின்னால் நின்ற ஆர்யனை கண்டு ஞானவேலிடம், “உன்னிடம் பேசறது பன்னியிடம் பேசறதும் ஒன்னு. ஹலோ ராக் ஈட்டர்(Rock Eater) கல்லு மாதிரியே நிற்கறது‌.” என்று திட்டிவிட்டு முன்னே நகர்ந்தாள்.

   ஆர்யனோ அடிக்கிற வெயிலுக்கு கூலிங் கிளாஸ் அணிந்து வந்தவன் மெதுவாக கண்ணாடியை கழற்றி, “அதுவொன்னுமில்லை படிப்பு முழுக்க சென்னையா‌. ஐந்தாறு வருஷம் இங்கன தலைகாட்டி போவேனே தவிர ஒரு வாரத்துக்கு மேல தங்கியது இல்லை‌. அதனால நிபுணன் ஐயா புள்ள என்றதும் தனியா நிற்க கவனிச்சிருக்க மாட்ட. நான் தான் சுயேட்சை நிற்கற புள்ளையோட புருஷன்‌ ஆர்யன். ஆர்யன் சன் ஆஃப் நிபுணன்‌.

இதே ஊர்ல ஐந்து தடவை ஜெயித்ததால அந்த வெற்றி மிதப்புல ஓவரா துள்ளற ஞானவேல் நீ தானா?
பாரு நீ யாருன்னு தெரியலைனா கூட பேரு ஊரு எல்லாம் தெரிந்து வச்சிருக்கேன். ஏன் சொல்லு.

என்னவோ என் பொண்டாட்டிகிட்ட உடன்படிக்கை, உடன் படுக்கைனு பேசினியாமே.” என்று பல்லை கடித்து நெருங்கினான்.

   ஞானவேலை தொண்டர்கள் சூழ, “டேய் இருங்கடா… இவனை ஒன்னும் பண்ணலை‌. நிபுணன் மருமகனு தெரிந்தும் உன் பிரச்சார தந்திரத்தை பேசறன்ன உனக்கு ஆயுள் முடியறது ரொம்ப தூரமில்லைனு அர்த்தம்.

   என்ன பார்க்கற நமக்குள்ள இருக்கற டிஸ்டன்ஸ் கூட குறைவு தான்‌. டாக்டர்னா கழுத்துல ஸ்டெத் போட்டுட்டு பவ்யமா பழமா இருப்பேன்னு நினைச்சியா.

   எங்க தட்டினா உயிர் ஸ்தம்பிக்கும்னு தெரியும். இப்ப லேசா உன் பிடரில நேக்கா தட்டினா நீ மயங்கிடுவ. நான் டாக்டர் நானே உன்னை பார்க்கறேன்னு கூட்டத்தை அகற்றிட்டு, ஒரு ஊசி போட்டேன்னு வை‌. வலியில்லாம ரத்தம் வராம மேல டிக்கெட் கொடுப்பேன். பக்கா இயற்கை மரணமா செட் பண்ண முடியும்.

   எங்க ஐயா அருவா பேசி கேள்விப்பட்டியிருப்ப. பழைய கதைன்னு விளையாட்டா இருந்துடாத என்‌ உடம்புல ஓடுறதும் எங்க ஐயா ரத்தம் தான்‌. சீண்டின வகுந்துடுவேன்.

  நான் எல்லாம் உங்க தலீலீலீவன் அரவிந்த்கே அடங்காத ஆளு. என் பொண்டாட்டிகிட்ட வச்சிக்காத.

   ஆமா இதென்ன வேர்வை யா? இப்படி அருவி கணக்கா ஊத்துது. யோவ் பிபீ இருக்கா உனக்கு? சவகாசமா வந்து செக் பண்ணிக்கோ. கவர்மெண்ட் டாக்டர் துட்டு வாங்காம ப்ரியா பார்க்கறேன்.

  டேய் தொண்டன்ஸ்ஸ்ஸ்… கூட்டிட்டு போங்கடா. செத்துட கித்துட போறான். என் பொண்டாட்டி ஜெயிப்பதை பார்த்ததுட்டு பொறுமையா சாக சொல்லுங்க” என்று சிற்பிகா பத்து ஆள் இடைவெளியில் முன்னே நகர்ந்திருக்க, அவளருகே சென்றான்.

  ஞானவேலோ தண்ணீரை குடித்து விட்டு, ஆர்யனையே கண்டான். ஆர்யனோ சிற்பிகாவின் கண்ணிற்கு கண்ணாடியை அணிவித்து, வெயிலுக்கு போட்டுக்கோ என்று கொஞ்சிக் கொண்டிருந்தான்.
  
  ஞானவேல் நிபுணனை எட்டி பார்க்க, அவரோ ஆதிதிராவுக்கு முன் கைகாட்டி நீங்க வோட்டு போடுங்க அம்மினி’ என்பதாக கை காட்டினார்.

   சர்வேஷை கண்டு சி.எம் அரவிந்தின் மாப்பிள்ளை என்று பற்கடிக்க, துளிரோ “ஏய்.. நான் ஓட்டு போட்டாச்சு. அண்ணி உங்க சின்னத்துல ஓட்டு போட்டுட்டேன்” என்று குதுகலித்தாள்.

   ஞானவேல் பார்வை துளிர் மேல் விழுந்தது.

   ஆளாளுக்கு துணைகளுக்கு காவலிருக்க சிறு பெண்ணை கண்டுக்காமல் இருந்ததாக எண்ணினான்.
   உண்மையில் துளிர் போனில் போட்டோ எடுத்து திமிரரசனுக்கு அனுப்பி மகிழ்ச்சியை பகிர்ந்தாள். அவள் விதார்த்தோடு பேசி சிரிக்க மற்றவர்கள் நெருங்காமல் நாகரீகமாய் ஒதுங்கினார்கள். இது ஞானமற்ற ஞானவேலுக்கு தெரியாமல் துளிரை தூக்குவது எளிதென கணக்கிட்டான்.

   துளிரை ஒருவன் நிழல் போல தொடர்ந்து சுத்துவானென்ற விஷயம் ஒருவேளை தாமதமாய் அறியலாம்.

    விதார்த்திற்கு பிக் அனுப்பிவிட்டு “நீ போட்டாச்சா” என்று போனில் கேட்டாள்.

   “ஏய் உனக்கு பதினேட்டு முடிஞ்சு இந்த வருஷம் தானே பஸ்ட் டைம் ஓட்டு போடுற.  நான் எல்லாம் ஐந்தாறு வருஷம் முன்னரே ஓட்டு போட்டு முடிச்சவங்கம்மா‌.” என்றான் விதார்த்.

   “ம்ம்கூம் நான் எங்கண்ணிக்கு ஓட்டு போட்டுயிருக்கேன். எனக்கு இது ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்” என்றால் ஆள்காட்டி விரலில் மையை ஊதி. பதினெட்டு பூர்த்தி அடைந்து இரண்டு வருடமானாப்பின் இப்போழுது தான் தேர்தல் வந்திருந்தது.

  “கொழுந்து… மை காய ஊதறியா?” என்றான் சேட்டை பிடித்தவன்.‌

   ”ம்ம்” என்றவளிடம், “இந்நேரம் உன் உதடு முத்தமிட குவியற மாதிரி இருக்கும். அதை என் கையால பிடிச்சி… ரசிச்சி… ஒத்தடம் வைக்கிறாப்ல என் உதட்டோடு வச்சி எடுத்தா ஜிவ்வுனு இருக்கும்” என்றதும் துளிர் தங்கள் கார் கதவில் உதடு குவித்து பார்த்து வெட்கம் கொள்ள, “ஏய் கொழுந்து, உன் முகம் சிவந்திருக்க போகுது. கொஞ்சம் வெட்கத்தை குறை. இல்லை உங்க அண்ணன்கள் பார்த்து முகம் சிவக்குதுனு வந்து என்னை உதைக்க போறாங்க” என்று கிண்டலடிக்க, “டேய்.. உன்னைய” என்று பேச, நிபுணன் ஆதிரா வரவும், “விதார்த் அப்பா அம்மா வர்றாங்க. போனை வை” என்று துண்டித்தாள்‌.

     “ஏய் கொழுந்து… பச் ஆதினி சர்வேஷ் பத்தி கேட்கலாம்னா வச்சிட்டாளே” என்று நகம் கடித்தான்.‌

    பைக்கை உயிர்ப்பித்து, சரவணவேலனை காண சென்றான்.

   அக்கா ராகவி வீட்டிற்கு சென்றதால் எதச்சயமாக அங்கே அர்ச்சனா வர, சரவணன் அவர்களிடம் நம்பரை பகிர, தற்போது சரவண வேலன் கமிட்டேட் என்று சொல்லும்படி பிஸியாக இருந்தான்.

    எந்நேரமும் போனும் கையுமாக, வாயெல்லாம் பல்லாக சிரித்து பேசி, எப்பொழுதும் சந்திக்கும் இடத்தில் விதார்த் வந்தான்.

  நண்பனை கண்டு கையசைத்து போனில் பேச்சை நீட்டிக்க, விதார்த் பொறுமையாக இருந்தான்.

  “இல்லை அச்சு. அம்மாவுக்கு உன்னை பொண்ணு பார்க்க ஆசைப்படறாங்க. அதுக்காக வருவேன், நேர்ல என்ன கேட்டாலும் வாங்கி தர்றேன்.‌ எங்க வீட்ல பூந்தோட்டத்துக்கு நடுவுல தான் வீடு. தினமும் நீ என்ன கலர் டிரஸ் போடறியோ அந்த கலர் பூ உன் முன்ன கொண்டு வந்து வைப்பேன்.” என்று இளித்து பேசினான்.

‌ “கருப்பு டிரஸ் போட்டா கருப்பு கலர்ல பூ இருக்குமா டா?” என்று விதார்த் சந்தேகத்தை கேட்க, அர்ச்சனாவை ‘அய்யோ உங்க பிரெண்ட் நான் வைக்கிறேன்’ என்று போனை துண்டித்தாள்.

   “ஏன்டா என்னை காதலிக்க விடமாட்ற. காலேஜ்ல தான் துளிர் இருக்கான்னு எவளையுமா பார்க்க முடியலை. எங்கப்பா அம்மாவா தேடி ஒரு புள்ளையை கல்யாணம் பண்ணி வைக்கறாங்க. பேச விடறியா?” என்று சரவணன் அலுத்து கொண்டான்‌.

   “ஏலேய்… நான் கேட்டதுல என்ன தப்பு. நீ பேசினப்ப எனக்கு சந்தேகம் வந்துச்சு. உங்க வீட்ல கருப்பு பூ இருக்கா?” என்று கேட்டான்.

  ”அர்ச்சனாவுக்காக வெள்ளை ரோஸை பிளாக்கா மாத்துவேன் டா‌” என்று காதல் போதையில் கூறினான்.

   “இந்த பேச்சுக்கு குறைச்சலில்லை‌. சர்வேஷ் ஆதினி‌ சந்திக்க வைடான்னு கேட்டேன் ஐடியா கொடுத்தியா?” என்று விதார்த் முகம் தூக்கினான்.

   “டேய் அவனுக்கு நான் மச்சான் முறை. மாமா முறையா மாத்தாத டா.” என்று கும்பிடு போட்டான்.

  “அர்ச்சனாவை எங்களுக்கு இன்ட்ரோ கொடுக்க கூப்பிடு. சர்வேஷ் துளிரை அப்படியே மீட் பண்ண வை. நீயும் சந்திக்கலாம்‌” என்று கூற, “அவன் வரமாட்டான். அப்படியே வந்தாலும் ஆர்யன் மச்சானிடம் சின்ன பையனாட்டம் பர்மிஷன் கேட்பான்‌” என்றதும் ‘அச்சோ முதலுக்கே மோசம்’ என்றான் விதார்த்.

   சந்திப்புகள் எல்லாம் திட்டம் போட்டா அமையும். அதெல்லாம் தானாக வாய்க்குமென்று விதார்த் அறிந்திட நேரம் வரும்‌.

-தொடரும்‌.
-பிரவீணா தங்கராஜ்

26 thoughts on “என் நேச அதிபதியே -54”

  1. Fantastic ariyan. Mini Xerox of nubu. Excellent threat to the opponents. Beautiful narration sis. Ariyan romance also super sis. Pls give daily updates sis.

    1. ரொம்ப ரொம்ப சூப்பரா போகுது கதை ஆர்யனின் ஆட்டம் சூப்பர் எல்லோரும் சேர்ந்துட்டாங்க சர்வேஷ்க்கு தான் ஜோடி யார் என்று தெரியவில்லை சீக்கிரம் காட்டிடுங்க சகிமா வாழ்த்துக்கள்

  2. Superb aaryan enga nibu mari tha but athula oru different irukanume so appa ku aruva na paiyan doctor nu avan bashaila supera pesitan. Aarya kalaku

  3. Niyanvel unnaku per la mattum than arivu iruku aariyan nibu oda xerox da athuvum konjam dosage um athigam ah irukum thulir ku.ne sketch poga motha group um unna round kattidum nu parthuko

  4. அதானே… இவங்க திட்டம் போட்டு என்ன பிரயோஜனம்.
    அதது… தன்னாலேயே நடக்கும்.

  5. என்னாச்சு ரைட்டர் மேடம் கொஞ்ச நாளா உங்கள காணோம்
    அந்த ஞானவேல் பாவம் ஆதிரன பத்தி சரியா தெரியாம அவன் கிட்ட வாயை கொடுத்துட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!