அத்தியாயம்-7
ஆதிரா ரங்கநாயகி அருகே அமர்ந்து கைகளை பிடிக்க, நடுக்கத்தோடு ஆதிரா கைகளை பற்றியபடி வாய் தந்தியடிக்க, பேத்தியை ஏறிட்டார்.
அதன் பின் அருவி போல கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து இருபக்கமும் செவிமடலருகே சென்றது.
பல வார்த்தைகள் கூறி, புரியவைக்க வேண்டியவை. ஆனால் ஆதிரா போன்றோருக்கு இந்த சூழ்நிலையில் ரங்கநாயகி சொல்லாமலே சொல்ல வருவது தெரிந்தது.
“நான் டீ போடுற அம்மா” என்று சிற்பிகா நகரவும், அவள் கிச்சன் சென்றதும், “நீங்க சொல்லணும்னு அவசியமேயில்லை. சிற்பிகா என் பொறுப்பு. அவளை பத்தி நீங்க கவலைப்படாதிங்க. நீங்க மனதைரியத்தோடு ரெக்கவர் ஆகி வாங்க.” என்றதும் ரங்கநாயகி அதற்கும் இமை மூடி திறந்தார்.
ஆதிரா சட்டென கைப்பையிலிருந்து போனை எடுத்து ஆர்யனுக்கு அழைத்தார்.
”ஆர்யன் வாட்சப்ல லொகேஷன் ஷேர் பண்ணிருக்கேன். ஒரு பாட்டிக்கு உடம்பு முடியலை. நீ வந்து பாரு” என்று கூப்பிட உடனே “வர்றேன் அம்மா” என்றான்.
யார் வீட்டுக்கு போகின்றோமென்று அறியாது பைக்கை உதைத்து முறுக்கினான்.
பைக்கின் முன் ஸ்டாண்டில் போனை பொருத்தி அன்னை அனுப்பிய இடத்திற்கு தன் மருத்துவ பார்க்க தேவையானதை எடுத்துக்கொண்டு பறந்தான். நிச்சயம் அது அவன் சந்திக்க பிடிக்காதவளின் இடம் என்று தெரிந்தால் இப்படி இரு சக்கரத்தில் பறந்திருக்க யோசித்திருக்க மாட்டான்.
டீயை நன்றாக கொதிக்க வைத்த சிற்பிகா தன் பாட்டியின் நிலைமையை யாரிடமும் புலம்பாமல் வருத்தமாய் நடமாடி வந்து நிற்க வாசலில் புல்லட் சத்தம் கேட்டது.
சிற்பிகா யாரென்று புருவம் சுருக்கும் நேரம், “ஆர்யனை வரச்சொல்லிருந்தேன். அவன் டாக்டர் தானே ஒரெட்டு ஆச்சியை பார்க்க வரச்சொன்னேன்.” என்றார் ஆதிரா.
சிற்பிகாவோ பேயறைந்தது போல மாறினாள். ஆதிரா வாசல் பக்கம் வந்து ஆர்யனை வரவேற்று உள்ளே அழைக்க, ஆர்யனோ ‘யார் வீடோ’ என்று நுழைந்தான்.
அவன் உயரத்திற்கு தலைவாசல் இடிக்கும் விதமாக இருக்க, சிற்பிகா வீட்டுக்குள் நுழையும் நேரம் தலை தாழ்ந்து வந்தான்.
“நேத்து கிணற்று பக்கம் விழுந்திருக்காங்க ஆர்யன். ஹாஸ்பிடலுக்கு போயிட்டும் வந்திருக்காங்க. அட்மிட் ஆக சொன்னா மருத்துவ வாசனை பிடிக்கலைனு இங்க வந்துட்டாங்க. நேத்தெல்லாம் இடுப்பு பிடிச்சி கஷ்டப்பட்டு நடமாட, இன்னிக்கு படுத்தபடுக்கையா இருக்காங்க.” என்று ஆதிரா பேசிக்கொண்டு போக, ஆர்யனோ வந்ததும் பாட்டியை கவனிக்க ஆரம்பித்தான்.
பல்ஸ் பிடித்து கண்வளையத்தை இழுத்து கண்ணை பார்க்க, பாட்டியை அளவெடுத்து ஆராய்ந்து மெதுவாய் அன்னையை ஏறிட்டான்.
“ஹாஸ்பிட்டல்ல கண்டிப்பா சேர்த்து பார்த்தா நல்லது தானேடா?” என்று கேட்க, அவன் பாட்டியை பார்த்தான்.
“எழுந்துக்க முடியுதா பாட்டி?” என்று கேட்க, தலையை மறுப்பாய் ஆட்டினார்.
“என்ன சாப்பிட்டாங்க?” என்று கேட்டுவிட ஆதிரா சிற்பிகா இருக்கும் இடம் திரும்பினார்.
“சாப்பிட என்ன கொடுத்தம்மா” என்று ஆதிரா கேட்க, “கஞ்சி தான் அம்மா கொடுத்தேன்.” என்று குரல் மட்டும் வந்தது.
திரும்பி நின்றவளுக்கு ஆர்யனை ஏறிட்டு பார்க்க பிடிக்கவில்லை.
ஆர்யனோ “கொஞ்சம் தண்ணி கொண்டு வாங்க” என்று யாரென்று தெரியாமலே முகம் பாராது ஏவினான்.
சிற்பிகாவோ இதற்கு மேல் இவனிடம் கண்ணாமூச்சி ஆடமுடியுமா? இனி இங்கு தான் வாசம் இருக்க போகின்றான். எப்படியும் தன்னை அறியாமல் இருக்க முடியாது என்றதும் தண்ணீரை கொண்டு வந்து அவன் முன் நீட்டினாள்.
கண்ணாடி வளையல் அணிந்த கைகள் அவன் முன் வரவும், முகம் பாராது அதனை வாங்கி பாட்டிக்கு புகட்டினான்.
பாதி நீர் கீழே வழிந்தது. உயிரை கையில் பிடித்திருப்பார்களென்று சிலரை கூறுவார்களே அப்படி தான் இருந்தது ரங்கநாயகியின் நிலை.
தண்ணீர் கீழே வழியவும், சிற்பிகா டவலை எடுத்து வந்து துடைத்தாள்.
ஆர்யனோ அன்னையை கண்டு பார்வையாலையே பாட்டியின் நிலைமையை கூறிவிட்டான்.
ஆதிராவுக்கு அதிர்ச்சியே சிற்பிகா பக்கம் வந்தார்.
மெதுவாக ஸ்டெதஸ்கோப்பை கழுத்தில் போட்டு, “பாட்டிக்கு மனதிடம் உடல்திடம் இரண்டும் குறைந்துடுச்சு. நீங்க ஹாஸ்பிடல்ல நேத்தே சேர்த்திருக்கணும். டூ லேட். அவங்க வாழ்நாள்ல கடைசி நொடியை சுவாசித்துட்டு இருக்காங்க.” என்று மெய்யுரைத்தான்.
“அம்மா பாட்டிக்கு ஒன்னும் ஆகாது. அவரை போக சொல்லுங்க” என்று கண்ணீரோடு சிற்பிகா எரிச்சலும் உரைத்தாள்.
தன் பாட்டிக்கு உடல்நிலை மோசமென்று தன்னை இந்த பெண் வெளியே போக அறிவுறுத்துவதாக எண்ணிவிட்டான் ஆர்யன்.
சிற்பிகாவை ஏறிட்டு “நீங்க பாசத்துல பேசறிங்க. பட் நான் எதையும் மறைக்க கூடாதுனு உண்மையை சொன்னேன்.” என முகம் பார்த்து கூறி விட்டு இரண்டெட்டு நடந்தான்.
அவனுக்குள் அதிவேகமாக கண்ணீரை சிந்திய பெண்ணின் முகமும் வடிவமும் மெதுமெதுவாய் மனதில் பதிவானது.
இரண்டு நொடிக்கும் குறைவாக பார்த்தவளை மனதில் பதிந்தவளை கண்டு, ‘இவ அவளா?’ என்று பின்னங்கழுத்தை தடவியபடி திரும்ப ஏறிட்டான்.
அவளே தான் என்று அவளது கலங்கிய கருவிழிகள் பறைச்சாற்றியது.
இந்த கலங்கிய கண்களை அவனால் நிச்சயம் மறக்க முடியாது. காரணம் திமிராய் பார்த்தவளை இடிப்போல் அடியை வழங்கி இதே போல கண்ணீரை பரிசளித்தவன் இவன் தானே.
இதே அழுத கண்களால் தான் பெட்டி படுக்கையை எடுத்து படிக்க தாத்தா வீட்டில் கிட்டதட்ட துரத்தப்பட்டான்.
சர்வேஷ், அப்பா, அம்மா மூவரும் சிற்பிகா என்றார்களே. அது இவளா? இவ பெயர் தான் சிற்பிகாவா? என்று கோபம் பொங்கியது.
ஆனால் சற்று முன் ரங்கநாயகியை சோதித்தவன் அவரது நிலைமை புரிந்ததால் “அம்மா நான் வெளியே இருக்கேன்” என்று வாசலில் கடந்தான். வரும்போது தலை தாழ்த்தி வந்தவன் போகும் போது அப்படியே நடக்க, தலை கதவின் தாழ்வாரத்தில் இடித்தது.
அதன் வலியை பொருட்படுத்தாது வெளியேறினான்.
அன்னை பின்னால் வந்து, “ஹாஸ்பிடல்ல சேர்த்தா உயிர் பிழைப்பாங்க தானேடா. நேத்து தான் கீழே விழுந்தாங்க.” என்று கூற, “அம்மா காப்பாத்தறதா இருந்தா இப்படி வேடிக்கை பார்க்க மாட்டேன். விரோதிகளுக்கு கூட மனதார வைத்தியம் பார்க்கணும்னு எனக்கு தெரியும் அம்மா” என்று நியாயம் பேசினான்.
சிற்பிகாவோ அவன் வார்த்தையை கேட்டு இகழ்ந்தாள்.
“நான் கிளம்பறேன் அம்மா” என்று ஆர்யன் புறப்பட, ஆதிராவோ என்னை கூட்டிட்டு கூட போகாம ஓடறான்’ என்று மைந்தனை ஆச்சரியமாக பார்த்தார்.
சிற்பிகாவோ, “நீங்க அவரோட போங்கம்மா. பாட்டியை நான் பார்த்துக்கறேன்.” என்று வீராப்பாய் அனுப்ப முயன்றாள்.
ஆதிராவோ மைந்தனின் நடவடிக்கையும், இந்த நிலையில் சிற்பிகாவின் நடவடிக்கையும் கண்டு அதிர்ச்சியானாள்.
இத்தனை காலம் கடந்தும் இவர்களுக்குள் அதே வீராப்பா? இன்னமும் மறக்காமல் தான் திரிகின்றார்களா? ஆர்யன் மறக்கவில்லையா? அவன் டாக்டர் படிக்க போனதும், அனைத்தும் மறந்திருப்பானென்று நினைத்தாளே?!
இப்படி ஓடுவதை கண்டால்? அவனுக்கு எதுவும் மறக்கவில்லை எதையும் மறக்க முயலவும் இல்லை என்பது புரிந்தது.
ரங்கநாயகி அருகே அமரவும் அவரோ கைகள் நடுங்க ஆதிராவை கண்டு நடுங்கினார்.
“நீங்க போங்கம்மா நான் ஆச்சியை பார்த்துக்கறேன்.” என்று அனுப்ப, ஆதிராவுக்கோ மைந்தனிடம் பேசும் முடிவோடு “நான் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ண பேசறேன். நீ எதுக்கும் அழாத.” என்று ஆறுதலுரைக்க “சரிங்க அம்மா” என்று அனுப்புவதில் குறியாக நின்றாள்.
சிற்பிகாவால் ஆர்யனை விரட்ட ஆதிராவை வழியனுப்பினாள்.
ஆதிரா மைந்தனோடு பைக்கில் அமர்ந்து கொண்டார்.
சிற்பிகாவோ பாட்டியிடம், "என்ன விட்டு போயிடாத ஆச்சி." என்று கண்ணீரோடு உணவு புகட்ட முயன்றாள்.
ஆதிராவோ தெரிந்த மருத்துவமனைக்கு அழைத்து படுத்தபடுக்கையாக இருக்கும் நபரை அழைத்து மருத்துவம் பார்க்க அனைத்து அரேஜ்மெண்டும் போனிலேயே தூரிதப்படுத்தினாள்.
ஆர்யன் அன்னையின் செயலை தடுக்கவில்லை. வீட்டுக்கு வந்ததும், '"நீங்க மெனக்கெடறது வேஸ்ட் அம்மா. அவங்க ஆயுள் இன்னிக்கோ நாளைக்கோ" என்று கூறி தன் அறைக்கு நடையிட்டான்.
ஆதிரா தன் கணவன் நிபுணனிடம் சிற்பிகாவின் பாட்டி நிலைமையை விவரித்து ஆர்யன் சிற்பிகா பற்றி உரைத்தாள்.
“நமக்கு சாதாரணமா இருக்கலாம். ஒருத்தன் நம்மளை அடிச்சிட்டான்னு அந்த பொண்ணுக்கும், நம்ம அப்பா அம்மாவை விட்டுட்டு எவளோ ஒருத்தியாள படிக்க சென்னைக்கு அனுப்பபட்டோமேனு ஆர்யனுக்கும் மனக்கசப்பு இப்பவும் இருக்கறது தப்பில்லையே. நாம மறப்போம் மன்னிப்போம் சொல்லி தந்தாலும், சம்மந்தப்பட்டவங்க மனசு வச்சா தான் மாற முடியும்.
உன் பையன் சிற்பிகாவிடம் மன்னிப்பு கேட்க பிடிக்காம தானே ஓடினான். அப்படியிருக்க ‘விரோதி’ என்ற வார்த்தை வந்ததில் எனக்கு அதிர்ச்சி இல்லை” என்று மொழிந்தார்.
ஆதிராவால் தான் தாங்கயியலவில்லை. மகன் பேசியதை.
சிற்பிகாவோ பத்து நிமிடத்தில் “அம்மா ஆம்புலன்ஸ் வந்து ஆச்சியை அழைச்சிட்டு போக நிற்கறாங்க. நீங்க அனுப்பியிருக்கிங்களா? அவர் அனுப்பியிருக்காரா?” என்று கேட்டாள். அக்கணம் போனில் “ஏம்மா ஆதிரா அம்மா தான் கால் பண்ணி சொன்னாங்கன்னு சொல்லறேன். எவனோயொருத்தன் சொன்னான்னா அனுப்ப முடியாது. அவனோட அக்கறை எனக்கு வேண்டாம் உதவியும் வேண்டாம்னு பேசற. வைத்தியம் பார்க்க அழைஞ்சிட்டு போகவிடாம நீயே சாகடிச்சிடுவ போலயே” என்ற கத்தலும் கேட்டது.
ஆதிராவுக்கு மைந்தன் அனுப்பியதாக எண்ணி தடுக்கின்றாளென்று புரிந்திட, "நான் தான்மா அனுப்பியது. கூட்டிட்டு போகவிடு" என்றதும் தான் தலையாட்டி இருப்பாள் போல, "பாட்டியை தூக்குங்கயா." என்று குரல் கேட்டது.
“பணம் எல்லாம் நான் பார்த்துக்கறேன். மருத்துவத்துல தலையிடாத” என்றதும் கையில் பணத்தோடு வளையலை விற்கும் முடிவோடு இருந்தவள் சரியென்றாள்.
ஆதிரா இந்த நிலையிலும் நம்ம பையன் மருத்துவ உதவி பண்ணுறான்னு நினைச்சி அவ அதை வேண்டாம்னு சொல்லறா” என்று கூறவும், நிபுணனோ “இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தது இல்லை.” என்று கூறி தோளைகுலுக்கி சென்றார்.
ஆதிரா மனமோ சங்கடங்களுக்குள் சிக்கிய இருந்தது.
முதலில் பாட்டி நலம் பெற வேண்டியவராக எண்ணினார்.
துளிர் பாட்டி தாத்தாவோட இருக்க, சர்வேஷ் ஆர்யன் மாடியில் பேசுவதை கண்டு, மாலை சிற்றுண்டி தயாரிக்க குடும்பத்தலைவியாக மாறினாள்.
ஆர்யன் தலையில் ஐஸ் ஒத்தடம் கொடுத்தபடி, “அவ வீடுனு தெரியாது. அதே திமிரு கொஞ்சம் கூட மாறலை. இதுல அந்த பாட்டி உயிரோட இருக்கறது அதிசயம்னு சொன்னா வெளியே போக சொல்லுங்கன்னு விரட்டறா. உண்மையை தான் சொன்னேன். எப்பபாரு என்னை விரட்டணும்.” என்று பொரிந்து கொண்டிருந்தான்
“இதுல நம்ம அம்மாவை அவளும் அம்மான்னு கூப்பிடறா. அவங்க என் அம்மானு நீ அப்படி கூப்பிடாதனு தொண்டைவரை வந்துடுச்சு. அம்மா மட்டும் இல்லை சொல்லிருப்பேன்.” என்று திண்ம மார்புகள் ஏறியிறங்க கோபத்தோடு நடமாடி தம்பியோடு ஆதங்கத்தை பகிர்ந்தான்.
“இப்பனு இல்லை. நீங்க போனதிலிருந்து அம்மாவை ‘அம்மானும், நம்ம ஐயாவை அவங்களும் ஐயானு தான் அழைப்பாங்க.” என்று ஏற்றி விட்டான்.
அதோட நானும் துளிரும் படிப்புக்கு காலேஜ் கிளம்பிடுவோம். அவங்க அம்மா கூடவே சுத்துவாங்க. அம்மாவோட அதிகமா இருக்கறது நம்ம ஐயாவை விட அந்த சிற்பிகா தான்” என்று முடித்தான்.
ஆர்யனோ என்னை எங்க அம்மாவிடமிருந்து தள்ளி படிக்க அனுப்பிட்டு இவ ஒட்டிக்கிட்டாளா' என்ற எண்ணம் மேலோங்க தாடை இறுகியது.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

Ada yaruma antha sirpika sollunga
Haha new entry pa. Soluvom solvom after marriage ku piraku.😄😄😄
Marriage kku pirakka ayyo mudiyala sikiram suspense open pannunga
அடேய் ஆர்யா..! உனக்கேன்டா இம்புட்டு கோபம் வருது. பாவம், அந்த புள்ளையே இருக்கிற ஒத்தை உசிரையும் பறி கொடுக்கிற நிலைமையில இருக்கிறா…
நீயும் ஏன்டா
நொந்து போக வைக்கிற…?
நீ எதனாலடா அவளை அடிச்ச
Ragasiyam Anna. Apa thane 4 episode elutha mudiyum
Very nice ma
Yaruma ne… Ena dan aachu ivangalukula… 🧐🧐
What happened between them? Interesting sis.
Appadi enna thaan sandai rendu perukum
ஆஹா சூப்பருங்க
யாருங்க இந்த சிற்பிகா?
ரொம்ப குழப்பமாக இருக்கே
Sema sema interesting epi.. ரெண்டு பேர் சண்டையும் Interesting ah iruku🤣🤣🤣🤣🤣
ஆரியனை சென்னைக்கு விரட்டனதும் இல்லாம ஆதிராவோட ஒட்டிக்கிட்டு(அதுவும் நிபுணரை விட அதிகமாக)இருந்ததை கேட்க கேட்க ஆத்திரம் அதிக மாக தானே செய்யும். சிற்பிகா ஆரியன் கிட்ட ரொம்ப முறைக்காதே,அப்புறம் உனக்குத்தான் கஷ்டம்
Enna da ithu chinna pilainga sandaiya ivangalukuilla 🤦😤 athu sari iva sonnanu ne Yan Chennai poona ? Apti enna avalala 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
ஆர்யன் சொல்றது போல இந்த சிற்பிகாவுக்கு திமிறு ஜாஸ்திதான் போலருக்கு.😂😂🤪 அவன் லைத்தியம் தானே பார்க்க வந்தான் அவன போய் திட்றா😍😍😍 பாவம் பாட்டி😔😔😔❤️❤️❤️❤️👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌👌💗💞💕💓💓❤️💕💖💞💗💗💗💞💖💕❤️💓💓❤️💖💞💗💗Accho sis indha sirpika yaarunu sollidunga illana yosichu yosichu manda kulambidum😵😵😵😵😵
Eagarly waiting😍
Apdi ena dhan pblm rendu perukum neenga ivanga dhan Jodi nu theriyudhu but ipdi fighting roosters ah irundha ivainga epo love pani romance pani pullaya pethu poduradhu namma epo part 3 poradhu
Part 3 ya. 😳😳😳😳😳 Aalai vidunga. Ore pattern na hero heroine iruntha Nala irukathum oru nibhunan iruntha than Rasika mudiyum. Athoda Aryan aathira nibhu mixed peace only.
Nice epi sis😀
Endha sirpika Kum evanukum appdi enna dhan prechanai ya erukum Manda vedikidhu seekirama sollidunga sis 😊🙏
Rendu perum ipadi veembu panraga ava enna panna ivan ethuku aval ah adichan nu theriyala aana innum ipadi rendu perum oruthar innoruthar ah virothi ah than pakkuraga indha Sirpika yaru than sis new entry ah illa part 1 la vandhavala ah
Ena oru porama indha aaryanki.. over possessive da thambi ,.
அந்த பொண்ணு இத்தனை வருஷம் கடந்தும் அவன் மீது கோபப்படுற அளவுக்கு என்ன பிரச்சினை?? இவங்க ரெண்டு பேரும் ஏன் அதே கோபத்தோட ஒருத்தர ஒருத்தர எதிரியா நினைக்கிறாங்க. இதெல்லாம் போதாதுன்னு இந்த சர்வேஸ் வேற ஆர்யன ஏத்தி விடுறானே
Sema sema super aryan till anger and at the same time she also in anger. But till now we are not able to find who is sirpika how she attached to athira family.
Super super nice nalla poguthu. Sirpika and aaryan Kum ena problem ena nadanthuchinu sikram sollunga sisy kathaila ena twist iruku konduvanga veliya
Super Veena nice
Interesting sis
பாவம் ஆர்யன்
டேய் சந்வேஷ் நீ வேற ஏன் டா!!???… என்ன பன்ன போறாங்களோ???
இந்த ஆர்யன் – சிற்பிகா இப்படி ஜென்ம விரோதி ஆக இருக்கும் அளவுக்கு கண்டிப்பாக பெரிய அளவில் பிரச்சினை நடந்து இருக்கிறது…. அது தான் தெரிய வேண்டும்
Super super super super
Iva enna moraponnumari morachitey suthura
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️