புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

என் நேச அதிபதியே-8

அத்தியாயம்-8

   இரவில் மருத்துவமனையில் தன் ஆச்சியை கண்ணும் கருத்துமாய் பார்த்திட, ஐ.சி.யு பிரிவில் தான் சேர்த்திருந்தனர்.

     நர்ஸ் டாக்டர் என ஒன்பது பத்து வரை கூடவேயிருக்க சிற்பிகா திடமானாள். பாட்டி கூட கையை அசைத்து அழாதேயென்று சைகையில் உரைத்தார்.

  “அழலை ஆச்சி அழலை” என்று ஆச்சி பாதமருகே அமர்ந்தாள்.

   “நீ நல்லபடியா திரும்பி என்னோட வருவ ஆச்சி. நீ பிழைக்க மாட்டனு பேசியவன் முகத்துல கரியை பூசணும்” என்று ஆர்யனோ வைதாள்.

   அதன் பின்  உறங்கிப்போனாள். ஆச்சியுமே பேத்தியை கண்டு இனி உலகில் எனக்கென்ன வேலையென்று உறக்கத்திலேயே உயிர் துறந்தார்.

    அதிகாலை நர்ஸ் மூச்சு பேச்சு இல்லாத பாட்டியை கண்டு, டாக்டரிடம் ஓட, சிற்பிகா கண்விழித்தாள். நர்ஸும் டாக்டரும் ஆச்சியின் உடலை ஆராய்ந்து பார்த்து ஸ்டதஸ்கோப் கோப் கழுத்தில் போட்டு “பாட்டி இறந்துட்டாங்கம்மா. அவங்க வர்றப்பவே எங்களுக்கு காப்பாற்ற முடியாதுனு சந்தேகம் இருந்துச்சு. எதுக்கோ ஆதிரா அம்மாவுக்காக முயற்சி பண்ணினோம். ஆனாலும் பாட்டி தூக்கத்துலயே இறந்துட்டாங்க” என்றதும் சிற்பிகா கத்தி கதறி அழவில்லையே தவிர விழிகளிலிருந்து அருவி கொட்டியது.

     “டாக்டர் அவங்க கீழவிழறதுக்கு முன்னவரை நல்லா நடமாடிட்டு இருந்தவங்க. வழுங்கி விழுந்து எப்படி இறக்க முடியும்? என்னால.. என்னால.. எப்படி இது சாத்தியம்?” என்று இறப்பை ஏற்க முடியாது பித்து பிடித்தவள் போல கேள்வி எழுப்பினாள்.

  “அவங்க கீழே விழுந்ததை மட்டும் தான் சொன்னிங்க. எப்படி வழுக்கி விழுந்தாங்களோ? எவ்ளோ நேரமாச்சோ? இறப்பு என்பது அவங்களுக்கு இப்படி அமைந்திருக்கலாம். நம்ம  கையில என்னம்மாயிருக்கு. படித்த படிப்புக்கு மருத்துவம் பார்க்கறோம். ஆனா போகற உசுரை நிறுத்தி உயிர் பிழைக்கிற வித்தையை எந்த மருத்துவனாலையும் முடியாது. நோயுக்கு தான் மருந்துயிருக்கு. தானா இயற்கை மரணத்தை தள்ளிப்போட முடியாது. இவங்களுக்கு ஒன்னும் இல்லை. விழுந்ததில் எழுந்துக்க போராடியிருக்காங்க. அதை மீறி ஒரு நாள் வலியோட தாக்குபிடிச்சிருக்காங்க. ஒரு வேளை அப்ப சொல்லிருந்தா அதுக்கு ஏற்ற மாத்திரை மருந்து பாத்திருப்போம். அவங்க வலியை மறைத்து நடமாடி கூடுதலா படுத்த படுக்கைக்கு ஆளாகி, கடைசில மனதைரியம் குறைந்து உடலும் ஒரே நாள்ல ஓய்ந்து போயிடுச்சு. எந்த மருத்துவமும் இனி முடியாதுயென்ற கட்டத்துல தான் இங்க வந்து சேர்ந்து இப்ப இயற்கையா தூக்கத்துல இறந்துட்டாங்க.” என்று முடித்தார் டாக்டர்.

இதற்கு மேல் டாக்டரை வைத்து பாட்டியை உயிர் பிழைக்க வைக்க சொல்ல முடியுமா? அவரென்ன சாகாவரம் தரும் கடவுளா?

   மருத்துவர் மட்டுமே. மருத்துவர் என்றதும் ஆர்யன் நினைவு வந்தது. இங்கு வரும் முன்னரே பிழைப்பது கடினமென்றானே. வாயை வைத்து சும்மாயிருக்க தெரியாது. என் ஆச்சி உயிரோட வாழறது குறைவுனு அவங்க காதுபட சொல்லியதுலயே அவங்க மனதைரியம் உடைந்திருக்கும்.  என்னை நினைச்சி கவலையில பிழைக்கிற பாக்கியத்தை தவறவிட்டுட்டாங்க’ என்று ஆர்யனை திட்டினாள்.

   அவளது சிந்தனையை கலைக்கும் விதமாக ஆதிரா போன் மணி அழைத்தது. டாக்டர் மூலமாக ஆதிராவுக்கு சிற்பிகா பாட்டியின் மரணச்செய்தி சொல்லப்பட்டிருந்தது.
 
  ஆதிரா போனில் என்றதும் சிற்பிகா போனை எடுத்து “அம்மா” என்று கதற, “ஒன்னுமில்லை டா. ஆச்சி இந்த உலகத்துலயிருந்து வேற உலகத்துக்கு மறுபிறவி எடுத்திருக்காங்க அழாத. நான் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு வர்றேன். உனக்கு நான் இருக்கேன்.” என்று ஆறுதலுரைத்தார்.

  “அம்மா நீங்க சீக்கிரம் வாங்கம்மா. எனக்கு அனாதையா நிற்கற உணர்வு வருது” என்ற் தேம்பினாள்.

   ஆதிராவோ “நீ உன் வீட்டுக்கு வர்றப்ப நான் ஐயா எல்லாரும் இருப்போம்” என்று வாக்கு தந்தாள்.

       ஆதிரா போனை அணைத்து திரும்ப நிபுணனோ, தன் தங்கை கணவர் முத்துவேலனிடம் மலர் மாலையை ஏற்பாடு செய்தார். முத்துவேலன் மலர்களை ஏற்றுமதி செய்வதால் அவரிடம் மற்ற பூக்களுக்கு போனில் சொல்லி முடித்தார்.

  நிபுணனே மற்ற ஏற்பாடு செய்ய ஆட்களை போனிலேயே பணித்தார்.

   சர்வேஷ், துளிர் கூட கல்லூரிக்கு விடுமுறை எடுத்துக் கொண்டார்கள்.

   ஆனால் அங்கே வீம்புக்கென்று வளர்ந்த ஆர்யனோ மருத்துவமனைக்கு செல்ல ஆயத்தமானான்.

   ஆதிரா நிபுணன் இருவரும் மைந்தனை பார்க்க, “என்னம்மா அப்படியே திகைச்சிட்டிங்க. இன்னிலயிருந்து நம்மூர்ல அரசு  மருத்துவமனைக்கு டூயூட்டிக்கு போகணுமே” என்றதும் ஆதிரா தான் ஆர்யன் அருகே வந்து, “சிற்பிகா பாட்டி தவறிட்டாங்க ஆர்யன். அதனால நம்ம எல்லாரும் அங்க போகணுமேப்பா” என்று கூறினார்.

   முழங்கை மடித்துக் கொண்டே “அவ நமக்கு சொந்தமில்லையே. அவயாரோ நாம யாரோ, அப்படியிருக்க நாம ஏன் போகணும்?” என்று வினவினான்.

  நிபுணனுக்கு சினம் துளிர்க்க, “ஏலேய் நம்ம வீட்ல மாடு செத்தாலே மனுஷங்க இறந்ததுக்குண்டான மரியாதை செலுத்தி நம்ம மற்ற பணிகளை ஒதுக்கிடுவோம். இந்த பிள்ளை நம்ம பருத்தி மில்லுல சூப்பரைசரா வேலை செய்யறாரா. அவங்க வீட்டு ஆட்கள் இறந்தா போகணும்” என்றார்.

  “அதுக்கு நீங்க போங்க ஐயா. அம்மா எதுக்கு போகணும்? துளிருக்கு ஏன் காலேஜ் லீவுப்போட சொல்லறிங்க? சர்வேஷ் நீ எதுக்குடா லீவு எடுக்கற?” என்று கேட்டவனை ஆதிராவுக்கு அறையலாம் போல இருந்தது. நெடு நெடுவென வளர்ந்து மருத்துவ படிப்பை வெறு முடித்திருகின்றானே அந்த மரியாதை பெற்றவளாக தர எண்ணினாள்.

   “அப்பாவை விட அவ எனக்கு தான் பழக்கம்” என்று ஆதிரா கூறவும், “எனக்கு இன்னிக்கு முதல் நாள் டூயூட்டி, ஆனா காலையிலயே இழவு வீடா நம்ம வீடு இருக்கு. எனக்கு சாப்பாடு கூட செய்யலை. ஏன்ம்மா உனக்கு நான் முக்கியமில்லையா? இப்பவும் அவ தான் பெரிசா?” என்றான். அவன் கேட்கும் போது வார்த்தையில் வலியிருந்தது. ஆனால் அவன் கிளம்பும் தோரணையும் பார்வையும் வீம்புக்காக மருத்துவமனைக்கு செல்வதாக குறியாக இருந்தான்.

  மாதவன் பேரனை தீண்ட, “சமாளிக்க வேண்டாம் தாத்தா. அம்மாவுக்கு இப்பவரை நான் உயர்த்தி கிடையாது. பரவாயில்லை என் தம்பி தங்கை அவங்களை உயர்த்தி நினைச்சா நான் சந்தோஷப்படுவேன். ஆனா அவங்க எவளோ ஒருத்தியை உயர்வா மதிக்கறாங்க.” என்று தாடை இறுக கூறவும், தங்கலட்சுமியோ “அப்படியில்லை ஆர்யா” என்று ஆரம்பிக்க, “நான் பழசை எதையும் ஆரம்பிக்க இங்க வரலை ஆச்சி. இங்க அம்மா ஐயாவோடு தங்கி இங்க நம்மூர்ல மருத்துவம் பார்க்க வநதிருக்கேன். எவளோயொருத்திக்காக என் முதல் நாள் டூயூட்டிக்கு போறதை என்னால மாத்திக்க முடியாது. அந்த பாட்டிக்கு நேத்தே என்னால முடிஞ்ச மருத்துவம் பார்த்துட்டேன். உயிர் பிழைக்க வைக்க முடியும்னா நானே நேத்து ஹாஸ்பிடல்ல சேருங்கன்னு வற்புருத்தியிருப்பேன். ஐ நோ அந்த பாட்டி இறப்பாங்கன்னு தெரிந்ததால தான் உண்மையை சொன்னேன். ஆனா அவ அப்பவும் வெளியே போக சொன்னா. நான் வந்துட்டேன்.

   இதுக்கு மேலயும் அவளுக்காக என் நிலைமையை தரம் இறக்க மாட்டேன். எனக்கு என் உத்தியோகம் முக்கியம்.” என்று வாசலில் வெளியேற, அத்தை சாருலதாவும் மாமா முத்துவேலனும் இருவரும் பெரிய மாலையோடு வந்திருந்தார்கள்.

   “நான் முதல் நாள் டூயூப்டிக்கு போறேன். எனக்கு ஒரு பூங்கொத்து, அட்லீஸ்ட் ஒரு பூ எனக்கில்லை. ஆனா அவங்க பாட்டிக்கு மலர்வளையம் பேஷ்பேஷ். நீங்களும் ஏமாத்திட்டிங்க மாமா.” என்று தன் பைக்கை உயிர்பித்து முறுக்கி கொண்டு சென்றான்.
  
   “என்ன அண்ணா ஆர்யன் இப்படி பேசறான். நாங்க துக்கம் அனுசரிக்க போறோம் ஆர்யன் டூயூட்டிக்கு போக மாட்டான்னு தான் பூங்கொத்து எதுவும் வாங்கலை.” என்று சாருலதா கேட்க, முத்துவேலனோ “என்ன மாப்பிள்ளை சூடா போறாரு. என்னல சொன்ன?” என்று முத்துவேலனும் மச்சானிடம் கேட்டார்.

    நிபுணனோ “அந்த பொண்ணு வீட்டுக்கு நான் ஏன் வரணும்னு கிளம்பறான். அவன் பழசை மனசுல இருந்து வெளியேத்தலை” என்று முடித்துக்கொண்டார்.

  துளிரோ “பழைசு பழைசுனு என்ன?” என்று சர்வேஷை சுரண்டினாள்.

  சர்வேஷோ “பச் சும்மாயிருக்கியா.” என்று கடுகடுவென உரைத்தான்.

  துளிரோ தனக்கிருக்கும் பிரச்சனையே வரிசைக்கட்டி இருக்க, ஆர்யன் அண்ணா சிற்பிகா பாட்டி இறப்புக்கு வராதது பெரிய விஷயமில்லாது கடந்தாள்.

   அங்கே ஆடிப்போய் வீற்றிருந்தது ஆதிரா தான்.

   மைந்தனுக்கு இத்தனை கல் நெஞ்சமா? என்ற ஒன்று உலுக்கிவிட்டது.

   அவனை படிக்க அனுப்பி பிரிவை பலப்படுத்தி விட்டோமோ? நாகரீகத்திற்காவது ஒரு எட்டு வந்து சென்றிருக்கலாம். ஆனால் இப்படி கிளம்பிவிட்டானே? என்று அதிர்ச்சியாக நின்றவரை, கணவன் நிபுணன் உலுக்கி, “அந்த புள்ள உன்னை தான் தேடும். முதல்ல அங்க போய் அதுக்கு துணையா நில்லு. இவன் முடிவோட டூயூட்டிக்கு போயாச்சு. ஆர்யனை பிறவு பார்த்துக்கலாம்.” என்று கூறவும் தலையாட்டி காரில் ஏறி சிற்பிகா வீட்டுக்கு வந்தார்கள். சிற்பிகா இன்னமும் அவள் ஆச்சி உடலோடு ஆம்புலன்ஸ் வண்டியில் வந்து சேரவில்லை. அதனால் நிபுணனோ ஊருக்கு பெரியவனாக இந்த வீட்டுக்கு பெரியவராகவும் ஆகவேண்டியதை பார்க்க மற்றவரை ஏவினார்.

  சிற்பிகா வேனிலிருந்து இறங்க ஆச்சி உடலை இறக்கவும் அழுதாள். வாய் விட்டு ஒப்பாரி வைக்கும் பழக்கம் அவளுக்கு ஏது. ஆனால் ஆதிராவை தான் ”அம்மா ஆச்சி என்னை விட்டு போயிட்டாங்கம்மா’ என்னை தனியா விட்டுட்டு போயிட்டாங்கம்மா’ என்று அழுதாள்.

  ஆதிரா கண்ணீரை துடைத்துவிட்டு அணைத்துக்கொள்ள மற்ற வேலைகள் நடந்தது.

  ஒருவழியாக அறிந்தவர் தெரிந்தவர், பழகியவர்கள் என்று சபை நிறைந்தது.

   ஆச்சிக்கு செய்யும் கடமையை ஆற்றி முடித்து விட, கொள்ளி போட நிபுணன் நான் செய்கின்றேன் என்று இறங்க, “ஐயா நீங்க எதுவும் செய்யாதிங்க. பிறவு பிரச்சனை வரும்.” என்று தடுத்தாள்.

“என்ன பிரச்சனை வந்துடப்போகுது. நீ சம்மதிச்சா கொள்ளி போடலாம்மா” என்றார் நிபுணன்.

   “இல்லிங்க ஐயா உங்க பெரிய பையனுக்கு அதெல்லாம் பிடிக்காது. வேண்டாம்னா விட்டுடுங்க” என்று முடித்தவளை கண்டு நிபுணன் ஆதிராவை ஏறிட்டார்.

  ஆதிராவோ ‘இந்த நிலையிலயும் அவன் என்ன சொல்வான்னு பேசறாளே’ என்று கலங்கினாள்.

  நேரம் ஆகின்றது என்று அறிவிக்க, முத்துவேலனோ ‘ஏங்கண்ணு நான் அப்பன் அத்தாளை சின்ன வயசுலயே இழந்துட்டேன். நான் கொள்ளி போடறேன். இப்ப என்ன மாப்பிள்ளை என்னை என்ன சொல்லிடப்போகுது. நீ எதுவும் யோசிக்காம இரு தாயு.” என்று சிற்பிகாவை பேசவிடாமல் முத்து பாட்டி உடலை எடுக்க செய்கையில் கூற, எடுத்துவிட்டார்கள்.

   “இல்லை அவரு” என்று மறுக்க வந்தவளிடம், கையில பிணத்தை எடுத்துட்டா நிற்காம போகணும் தாயு. வழிவிடு உங்க ஆச்சியை நிம்மதியா வழியனுப்பு” என்று கணீரென்று உரைக்க தடுக்கவில்லை.

   ஆச்சியை நான்கு பேர் தூக்கி நடக்க, அந்த திசையை பார்த்து புள்ளியாய் இடுகாட்டிற்கு செல்லும் வழியில் தெரு மறையும் நேரம் மயங்கி சரிந்தாள் சிற்பிகா.

  ஆச்சி படுத்த படுக்கையாக மாறியதிலிருந்து மருத்துவமனையில் சேர்த்த பிறகும் பச்சைதண்ணீர் வாயில் படாமல் இருந்தால் மறங்கி சரியவேண்டியது தான்.

    ஆதிரா துளிர் சாருலதா என்று சூழ்ந்து அவளை கைதாங்கலாக வீட்டுக்குள் வரவைத்து துளிரை வைத்து எலுமிச்சை பழச்சாற்றை பிழிய வைத்து உப்பு சர்க்கரை கொடுத்து பருக வைத்தார்.

   கண் விழித்தப்பொழுது கட்டி அணைத்து ஆதிரா நிற்க, அவர் மடியிலேயே படுத்துக் கொண்டு கண்ணீரை உகுத்தினாள்.

    கொஞ்சம் போல டீ பிஸ்கேட் என்று தொட்டு ஊட்டிவிட்டு கொஞ்சம் கொஞ்சமாய் வயிற்றை நிறைத்தார் ஆதிரா.

  ஆண்கள் இடுகாடு சென்று வந்தார்கள்.

     ஆதிரா சிற்பிகாவௌ விடுத்து இம்மியும் நகரவில்லை. யாராவது ஆர்யனை பற்றி விசாரிக்கும் போது சங்கடமாய் பதில் தந்தார்.

  தன் மைந்தன் இந்த சூழ்நிலையில் அரசு மருத்துவமனையில் டூயூட்டிக்கு சென்றது பெருமையாக சொல்ல வேண்டியது. ஆனால் இறப்பு நடந்த வீட்டிற்கு கூட வராமல் சென்றதால் அதை பெருமையாக உரைக்க மனமில்லை.

    ஆதிரா நிபுணனை தான் அடிக்கடி பார்த்து நின்றார்.
  நிபுணனுக்கும் என்ன செய்வதென்ற தவிப்பு. ஆர்யன் நிலையிலிருந்து யோசித்தால் அவன் மனம் காயப்பட்டதே. அதனால் நடுநிலையாக விட்டு பிடித்தார்.

    இறப்பு வீட்டில் கூட மதியம் போல உணவு பரிமாறப்பட்டது. ஆதிரா சிற்பிகாவை சாப்பிட வைத்தாள்.  ஆனால் ஆர்யனுக்கு மதியம் உணவு கூட அங்கே கொடுத்தனுப்பவில்லை என்ற எண்ணம் கொழுந்துவிட்டு எரிந்தது. முதல் நாள் டூயூட்டிக்கு வந்ததால் பலரும் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். ஆனால் மகிழ்ச்சி என்பது உதடு மட்டும் விரிந்திருக்க மனமோ அன்னை தனக்கு திருநீர்யிட்டு வழியனுப்பவில்லை. உணவு பரியாறவில்லை. மதியமும் உணவை கொடுத்தனுப்பவில்லை. தன்னை அடியோடு இந்த நொடி மறந்துவிட்டு அவள் அருகில் ஆறுதல் உரைத்திருப்பாரென கடுகடுவென மாறினான்.

   அந்த கோபம் எல்லாம் சிற்பிகா என்பவள் மீது ஆழமாய் பதிந்தது.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

நிபுணன் பையன் டோட்டலா எப்படி இருக்கான். 🤣🤣 விரைவில் காரணம் சொல்லறேன்.

  உங்க கமெண்ட்ஸ் எப்பவும் எனக்கு பெரிய உற்சாகம் தரும். என் சைட்ல எழுத வந்த மத்தவங்களுக்கும் உங்க ஆதரவை தாங்க. 😊

39 thoughts on “என் நேச அதிபதியே-8”

  1. ஆனாலும் இந்த ஆரி பயலுக்கு தலைக்கு மேல கோபம் வருது😂😂😂😂😂ஆனா நிபு அளவுக்கா இல்லையானு போகப் போகத் தெரியும்😊😊😊😊😊சிற்பி இந்த நிமிசமும் ஆரியோட நடந்த பிரட்சனையை மனசுல வச்சி பேசுறளவுக்கு என்ன பிரட்சனை நடந்திருக்கும்🤔🤔🤔🤔🤔🤔

  2. அப்படி என்ன தான் நடந்ததோ..ரெண்டு பேருக்கும்….அதை சொல்லிடுங்க பா…இல்லனா தலையே வெடிச்சிடும்.போல…..🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🥴

  3. சூப்பருங்க

    சரி காரணம் இல்லாமல் கோப படமாட்டான் ஆர்யன்..நிபுணன் மகன் அல்லவா..
    விட்டு பிடிப்போம்.

  4. Avan yaaroda paiyan ka….avankita irukura pathi alavadhu kovam avankita irukadhu….idha enga nibu chlm azhaga solli puriyavaipaaru…..

  5. Aariyan ivolo koba padra alavuku avanukum sirpika enna issue chumma react panra aalu illa avan sirpika vishyathula mattum ipadi thanaku importance illa nu yosikiran ah avan andha alavukku hurt agi irukan than thonuthu

  6. Ipdi idhunga rendum muttikitu nikkura alavukku apdi ennadhan prachanaya irukkum🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 aiyyo namma yosuchu mandaiya kulapika venam…..Pravee sis seekiram nengalae sollirunga👍👍👍👍👍👍👍👍

  7. Nibuna kovathaium kamichi but atha porumaiya ena pannanumo paniduvan but aaryan ku over ah kovam varuthu ethuku therilaye ena prachanai apadi rendu perkum sikram sikram sollunga sisy

  8. Athu enna SST murugasha 🤪
    Ellathaium pakkuvama purinju Amma appa va pathi thayrinju nadanthukkura ariyan Yan iva visiyathula athuvum death ku ipti mugam kattarathu 😤😤😤😤😤😤😤😤 yanga nipu kuda ivlo pannala ne avan pilai avana vida mijitta 🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨😮‍💨

  9. ஆயிரம் தான் காரணம் சொன்னாலும் ஆர்யன் பண்ணது தப்பு. நல்லதுக்கு போகலனாலும் கெட்டதுக்கு கண்டிப்பா போய் தான் ஆகணும் அதுவும் அவனுடைய அப்பா ஊருல அவ்வளவு பெரிய ஆளா இருக்கும்போது சின்ன வயசுல நடந்த பிரச்சனைக்கு இன்னமும் அவளை பிடிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டு திரியறது ரொம்ப சில்லியா இருக்கு .
    சிற்பிகாக்கு இருந்தது துணையாக இருந்தது அவ பாட்டி மட்டும்தான் அவங்களும் இறந்துட்டாங்க அந்த பொண்ணோட நிலைமை எப்படி இருக்குமுன்னு ஆர்யன் கொஞ்சம் யோசிச்சு பார்த்து இருக்கலாம்.

    1. அச்சோ….! இவனுக்கு என்ன இம்புட்டு கோபம் வருது.
      அப்படி அவன் இந்தளவுக்கு சிற்பிகா மேல கோபம் காட்டுறதுக்கு என்ன காரணம்…? அவனோட கமருகட்டை இவ பிடுங்கி தின்னுட்டாளோ…???

  10. Aryan unmaiyavea pavam than….. Ena irunthalum appa amma vitu pirinju ivlo naal irunthutu ipoyum first day of duty kum pasama anupi vaikama irukanga….. Nibu and Aryan 2perukum amma pasam mulusa kedaikala….

  11. ரொம்ப எதிர்பார்க்க வைக்கிறிங்க சகி ஆர்யன் நல்லவனா கெட்டவனா கதை ரொம்ப சூப்பரா இருக்கு சகி விதுரன் அளவுக்கு ஆதியும் நிபுணன் அளவுக்கு ஆர்யனும் இருப்பார்களா சகி உங்களின் கதை பயணத்தில் நாங்களும் வருகிறோம் உங்களோடு வாழ்த்துகள்

    1. Praveena Thangaraj

      Nibhunan name vankitan sis. Vidhuran level ku. Solla pona athai Vida close agitan. Paiyan ini than. Aana Ivan appanuku salaithavan ilai varuvan. Aana ivanuku konjam kopam iruku.

    2. விதுரன் & ஆதி கதை பெயர் நினைவில்லை பெயர் சொல்லவும்

      1. Praveena Thangaraj

        விதுரன் கதை துஷ்யந்தா ஏ துஷ்யந்தா சிஸ்
        ஆதீரன் கதை வல்லவா எனை வெல்லவா சிஸ்
        நிபுணன் கதை என் காதல் கல்வெட்டில் சிஸ்

  12. Endha paiyanuku evlo kovam varudhe pa adhu sari nibunan paiyan na summa va aana eppdi kova padra alavuku enna nadandhirukum therilaiye 🙄 parpom seekirama sollidunga sis

  13. ரெண்டு பேருக்கும் பிடிவாதம் தான்!!.. அப்படி என்ன நடந்திருக்கும்???…

  14. என்ன தான் கோபம் இருந்தாலும் ஒருவரின் இறப்புக்கு வராமல் இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது…. ஆர்யன் நீ செய்தது தவறு தான்…. இவன் கோபத்தின் காரணம் என்னவாக இருக்கும்….🤔🤔🤔🤔🤔

  15. Enaku vartham baaa… Nibu voda payan ivlo ego voda irukan…. Authoramma…. Ennadhidhu… Idhukumelayuma medhuva solla poringa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!