புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

என் நேச அதிபதியே -9

அத்தியாயம்-9

  மாலை சூரியன் கொஞ்சம் கொஞ்சமாய் மறையும் தருணம் ஆர்யன் தன் ‘திருநிறையகம்’ பெயர் கொண்ட வீட்டுக்கு வந்தான்.‌

‌ சர்வேஷ் டிவி பார்த்திருக்க, துளிரோ சர்வேஷ் அருகே பறித்த மல்லிப்பூவை தொடுத்துக் கொண்டிருந்தாள்.

   எப்பொழுதும் கல்லூரிக்கு மல்லிப்பூ சூடாமல் சென்றதில்லை.
   ஆர்யன் வரவும், “ஐ அண்ணா வந்துடுச்சு. முதல் நாள் எப்படிப் போச்சுன்னா?” என்று ஆர்வமாய் கேட்டாள்.‌

   ஆர்யன் வீட்டை பார்வையால் அலசியபடி தங்கை கேள்விக்கு பதில் தராமல் “அம்மா எங்க?” என்றான்.‌

     சர்வேஷ் வாயெடுக்கும் முன் துளிரோ முந்திக்கொண்டு, உங்க ரூம்ல தான் இருக்காங்க அண்ணா” என்றதும் லேசான முறுவல் பூத்து அறைக்கு வந்தான். அங்கே காலையில் வீசிசென்ற டவலை அப்பொழுது தான் உதறி காயப்படுத்த, நான் காலையில வீசியெறிந்தது இப்ப வந்து நீட் பண்ணறாங்க. அப்ப இவ்ளோ நேரம் அங்க தான் இருந்தாங்களா?’ என்றவனுக்கு வந்த கொஞ்ச நஞ்ச சிரிப்பும் மறைந்தது.

   “இப்ப தான் வந்தியா ஆர்யா. குளிச்சிட்டு வா ஸ்நாக்ஸ் எடுத்து வைக்கறேன்.” என்று கூறவும் தலையாட்டினான்.
  
   ஆர்யன் உம்மென்று நகர, ஆதிரா மைந்தன் முன் வந்து, “ஏன்டா உம்முன்னு இருக்க? முதல் நாள் எப்படி போச்சு?” என்று கேட்டதும், தன் உடைமையை அங்கிருந்த டேபிளில் வைத்து, ”ஒவ்வொருத்தரும் வாழ்த்து சொன்னாங்கம்மா. முதல் நாள் அதுவும் ஐயா பையன் டாக்டர் ஆகி சொந்தவூர்லயே வந்ததால,தேடி தேடி மத்த டாக்டர்ஸ், நர்ஸ், ஏன் பேஷண்ட் கூட, நிபுணன் ஐயா பையனா தம்பினு கைகுலுக்கி ஆசிர்வாதம் செய்தாங்க.” என்றுரைத்தான். அவன் உரைத்தது வாழைப்பழத்தில் ஊசியேற்றும் விதமாக இருந்தது.

    ஆதிராவுக்கு லேசான குற்றவுணர்வு தலைதூக்கியது.
   மைந்தன் தன்னை தான் இலை மறையாக சாடுவது படித்த டீச்சருக்கு தெரியாமலா?

   இப்பொழுதே ஆரம்பித்தால் வாக்குவாதம் அமையும் என்று முறுவலோடு கடந்திட, ஆர்யனும் அன்னையை நிறுத்தி வாதம் செய்யும் மனநிலையில் இல்லை.

   ஷேவரை திறந்து முகத்தில் நீர்விழ நின்றவன் ‘இன்று காலையிலிருந்து அவளால் தான் ‘எல்லாம்’ என்ற எண்ணத்தால் அவளையே நினைத்து கொண்டிருந்தான்.’ முகம் பாறையாக இருந்ததே தவிர கொஞ்சமும் குளிர்நீரால் சாந்தமடையவில்லை.
   
  அவனாக நீரை அணைத்து விட்டு ஈரம் சொட்ட வந்தான்.

   உடைமாற்றி அப்படியே ஹாலுக்கு வரவும், “என்னடா சரியாவே தலை துவட்டலையா” என்று ஆதிரா பதறி துவட்ட ஆரமபித்தாள். ஆர்யன் உயரத்திற்கு துவட்ட கஷ்டமாகவும், அவனை சோபாவில் அமர வைத்து துவட்டினாள்.

   இன்றைய நாள் முழுவதும் இருந்த கடுகடுப்பு அன்னையின் இந்த அன்பான செய்கையால் சாந்தமடைந்தது.

   தங்கலட்சுமியோ பொட்டுகடலை, பொரி, உப்பு, ஒமப்பொடி, பச்சை வெங்காயம், புதினா, கொத்தமல்லி, பெப்பர் தூள் என்று கலந்தவையை ஒரு பௌவுலில் ஸ்பூன் போட்டு கொடுக்கவும் அள்ளி அள்ளி சுவைத்தான்.
  
   துளிரோ “அம்மா அங்கயே தங்கிடுவிங்களா இங்க வருவிங்களா?” என்று கேட்டதும் தான் தாமதம், நெற்றி சுருக்கி ஆர்யன் அன்னையை காண, ஆதிராவோ மகனை கண்டு சங்கடமாய் “இன்னிக்கு ஒரு நாள் ஸ்டே பண்ணுவேன்” என்று கூறவும் ஆர்யன் கையிலிருந்த பௌவுலை டேபிளில் வைத்தான்.

   “என்னய்யா வச்சிட்ட?” என்று தங்கலட்சுமி கேட்டதும், “வயிறு ஃபுல் ஆச்சி” என்று கூறியவன் அன்னையிடம் தலை துவட்டுதலை நிறுத்தி எழ ஆரம்பித்தான்.

     ஆதிராவோ டவலை பணிப்பெண் ஒருத்தியிடம் காயப்போட கூறிவிட்டு, “துளிர் ஆச்சி சட்னி அரைச்சிடுவாங்க. நீ அவங்க கூட சேர்ந்து அண்ணனுங்களுக்கு நெய்தோசை மட்டும் ஊத்தி கொடு.” என்று தாடை பிடித்து செல்லம் கொஞ்சினார்.

    ஆர்யனோ “ஆச்சி இதுல ஏதாவது ஒரு பொண்ணு சீக்கிரமா கட்டிவையுங்க. நான் கல்யாணம் பண்ணிக்கறேன்.” என்றான். அவன் பேச்சு தினுசாக இருந்தது.

   சொன்ன வார்த்தைகளுக்கு ஆதிராவும் மற்றவரும் ஆனந்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பாறை போல முகத்தை வைத்து கண் மூடி போட்டோ கூட பாராது ஏதாவது ஒரு பொண்ணு’ என்ற வார்த்தை எல்லாம் பேசவும், ஆதிரா “ஆர்யன்” என்று நெடுமரமாக வளர்ந்தவனின் தோளில் கையை வைக்க, அதனை தன் இடது கையால் எடுத்துவிட்டு, “ஆமா அம்மா. என்னை பார்த்துக்க எனக்கொருத்தி தேவைப்படறா. என்னை காலையில டூயூட்டிக்கு போனா வழியனுப்ப, காலையில சாப்பிடாம போனா என்னை நிறுத்தி சாப்பிட வைக்க, மதியம் நான் சாப்பிட்டேனா இல்லையானு தெரிந்து எனக்கு லஞ்ச் கட்டிக் கொடுக்க, வீட்டுக்கு வந்ததும் எனக்காக பாசத்தோட ஸ்நாக்ஸ் ரெடிபண்ண, என் ரூமை நான் போன பிறகு நீட்டா வச்சிக்க, நைட் எனக்கு சூடா தோசை சுட்டுக்கொடுக்க, உங்களை போலவே… சாரிம்மா நீங்க செய்விங்கன்னு நான் எதிர்பார்த்த அம்மா பாசம் மாதிரி எனக்கு ஒரு பொண்ணு வேணும்.” என்றான்.

   ஆதிராவோ எச்சிலை கூட்டி விழுங்கி, “ஆர்யன் நீ ரொம்ப கோபத்துல இருக்க. அதோட பழைசை மறக்காம மனசுல போட்டு வன்மத்தை வளர்த்துட்டு இருக்க” என்று ஆரம்பித்தவுடன் ஆர்யன் நிதானமாக கையை கட்டி பேச்சுக்கு பிள்ளையார் சுழிப்போட்டதால் தொடர்ந்தான்.

    “வெல் கோபம் இருக்கும்மா. பழசை மறந்துட்டு தான் இருந்தேன். ஆனா நீங்க என்னை விட அவளோடு நலனுக்கு முன் நிற்கறப்ப எனக்கு நான் ஏன் பழசை மறக்கணும்னு வீம்பு வருது. அதோட வன்மம் வளருதா இல்லையானு எனக்கு தெரியலை. ஆனா உங்க மேல எனக்கு கோபம் வருது” என்று பேசவும் துளிரோ ஆர்யன் அண்ணனை வாய்பிளந்து வேடிக்கை பார்த்தாள்.

   அன்னையிடம் அதிகமாக தந்தை சண்டை போடுவார் ஆனால் அதெல்லாம் புன்முறுவலோடு கடக்கும். ஆர்யன் அண்ணன் கடினமான முகத்தோடு பேசுவது எல்லாம் அவள் வாழ்நாளில் காணாதது அல்ல. சிறுவயதில் தான் தவறு செய்தால் இந்த முகம் தான் கண்டிக்கும். அதனால் தான் சர்வேஷை விட ஆர்யன் அண்ணா என்றால் அச்சமுண்டு.

   இன்று அதே முகம் ஆனால் அன்னையையே கேள்வி கேட்பதில் துளிருக்கு சிற்பிகா மீது அண்ணாவுக்கு என்ன கோபமென்று கதை கேட்கும் ஆவலில் நின்றாள். சர்வேஷோ அண்ணன் பேச வேடிக்கை பார்த்தான். அவனால் அண்ணனை தடுக்கும் சக்தியில்லை.

  மாதவனும் தங்கலட்சுமியும் தான் ஆர்யனை பிடித்து “என் ராசா இப்படி பேசற. என் கண்ணுல அம்மாவை கஷ்டப்படுத்தாதே” என்றார் தங்கலட்சுமி. மாதவனோ ”ஆர்யன் இந்த நேரம் வாதம் வேண்டாம்யா?” என்று தடுத்தார்.

   “பேசட்டும் அப்பா எத்தனை நாள் கோபமோ பேச்சுல வெடிக்கட்டும். எதையும் மனசுல அழுத்தி வச்சிருந்தா மனவுளைச்சல் தான் ஆகும். என் பையன் பேசட்டும். அதுவும் வளர்ந்துட்டான் சொந்தவூர்ல முதல் நாள் டாக்டர் உத்தியோகம் பார்க்க போறப்ப அவனுக்கு எத்தனை ஏமாற்றம் இருக்கும்னு என்னால புரிஞ்சுக்க முடியுது.

      ஆனா ஒன்னு மறந்துட்ட ஆர்யன். நீ படிச்சி முடிச்சி டாக்டரா பட்டம் வாங்கினப்ப, சென்னையில் டூயூட்டிக்கு முதல் நாள் போகறப்ப   எனக்கு சிறைக்கைதிக்கு பாடம் எடுக்கறதுக்கு விருது கொடுத்தாங்க. நான் அன்னைக்கு அங்க போகலை. உனக்காக… என் மகன் முதல் நாள் வேலைக்கு போறான்னு நான் காலையிலேயே கோவிலுக்கு போய் உனக்கு அர்ச்சனை பண்ணி உன்னை கண்நிறைய வழியனுப்பினேன். அதை நீ மறந்துட்டியா?

   உனக்கு அது நினைவிருந்தா, அம்மாவை புரிஞ்சிருந்தா இந்த கேள்வியே பிறந்திருக்காதுல?
   நம்ம வீட்ல ஒருத்தியா வளர்ந்தப்பிள்ளையோட ஒரே உறவை இழந்துட்டு அனாதையா நிற்கறேன்மா நீங்க வாங்கம்மான்னு அழுதுட்டு சொல்லறப்ப, என் பையன் டூயூட்டிக்கு போகறான்னு என்னால உன்னை கவனிக்க முடியலை. என் பையன் என்னை புரிஞ்சிட்டு என் கூடவருவான்னு முட்டாளா நினைச்சிட்டேன்.

   சிற்பிகா விஷயத்துல ஒரு மன்னிப்பு கூட கேட்காம தான் என்னை பிரிஞ்சி போய் படிக்க போனதே அடிக்கடி மறந்துடறேன்.
  
   ஒரு மன்னிப்பே கேட்காத உன் மனசு, இப்ப மட்டும் அவளுக்காக யோசிக்குமா என்ன?
  
     உனக்கு கோபம் அம்மா மேல இல்லைடா கண்ணா. அதை புரிஞ்சிட்டு என்னிடம் பேசு.” என்று கன்னத்தை தட்டினாள்.
 
   ஆர்யனுக்கே அன்னையை எதிர்த்து கேட்டது இப்பொழுது வலித்தது. உண்மை தானே ஜனாதிபதியிடம் விருது வாங்க வேண்டிய அன்னை அன்று தான் டூயூட்டிக்கு செல்ல வேண்டுமென்று அதை ஒதுக்கி வைத்தார்.
அவர்களை போய் இப்படி காயப்படுத்திவிட்டோமேயென வருந்தினான்.

   “இவனுக்கு எல்லாம் விளக்கிட்டு இருக்க ஆதிரா. காலையிலயே ஒரடி கன்னத்துல சப்புனு அறைந்து கூட வாடான்னு இழுத்துட்டு போயிருக்கணும். அப்ப விட்டுட்டு இப்ப பக்கம் பக்கமா விளக்கிட்டு இருக்க.” என்று நிபுணன் வேஷ்டியை மடித்து கட்டி வந்தார்.

   ஆதிராவின் கன்னத்து ஈரத்தை துடைத்து, “இன்னொரு முறை என் பொண்டாட்டியை கேள்வி கேட்கறதா இருந்தா, அடுத்த நிமிஷம் நீ இந்த வீட்லயிருந்து வெளியே போலாம். அவ இந்த வீட்டு ராணிடா. ராணியை கேள்விக் கேட்கற அதிகாரம் இந்த ராஜாவுக்கே இல்லை. நீ இளவரசன் மடடும் தான் புரிஞ்சுதா?” என்ற கர்ஜணையில், தங்கலட்சுமி ‘என்னங்க இது மாப்பிள்ளை இப்படி பேசறார்’ என்று பேரனுக்காக நின்றார்.

  மாதவனோ மாப்பிள்ளை எது செய்தாலும் சரியானது என்றும், இப்பவும் மகளுக்காக நிற்கும் மாப்பிள்ளையை கண்டு பூரித்தார்.
 
   ஆதிராவோ “சும்மாயிருங்க அவன் என் பையன் என்னிடம் தான் உரிமையா வாதம் பண்ணுவான். சின்ன விஷயத்துக்கு எல்லாம் வீட்லயிருந்து வெளியே போனு பையனை சொல்லறதா.” என்று கணவரை கண்டித்து மகனிடம் திரும்பி, “ஆர்யன் உங்கப்பா என் மேல இருக்கற அன்புல பேசறார். உன் மேல பாசமில்லைனு அர்த்தமாகிடாது. தேவையில்லாம நீயும் வேதனைப்பட்டு மத்தவங்களையும் காயப்படுத்தாத.

    அம்மா இன்னிக்கு போயிட்டு நாளைக்கு வந்துடுவேன். வீட்டை பார்த்துக்கோ நீ தான் இந்த வீட்டு ஆணிவேர்” என்று எக்கி நெற்றியில் முத்தமிட்டு தலையை கலைத்து விட்டு கிளம்ப ஆயத்தமானார்.

    “சர்வேஷ் அம்மாவை கொண்டு போய் விட்டுட்டு வா” என்று நிபுணன் சின்னவனுக்கு ஆணையிட்டார்.
  
  ஆதிராவோ நின்று ஆர்யனை க
பார்த்து, “சர்வேஷ் வேண்டாம் நீ பைக் ஓட்டறியா? இங்க வந்ததும் துளிர் சர்வேஷை கூட்டிட்டு பறந்த. இந்த அம்மாவை ரவுண்ட்ஸ் அடிக்கலையே ப்ளீஸ் கூட்டிட்டு போறியா?” என்று தலைசாய்த்து கேட்டதும் ஆர்யன் மெதுவாக தலைதாழ்த்தி வர சம்மதித்தான்.
 
   ஆதிரா வேண்டுமென்றே தான் மகன் மனதில் இன்னமும் சினமிருந்தால் வரமாட்டான். மனதில் சினம் குறைந்து குளிர பரவினால் வருவானென்ற கணிப்பில் தான் அழைத்தாள். அதற்கேற்ப ஆர்யனும் சாவி கொத்தை எடுத்து நடக்க நிபுணனை பார்த்து பார்வையாலே வருவதாக சொல்லிவிட்டு, குழந்தைகளை பார்த்துக்க தன் அன்னை தங்கலட்சுமிடம் கூறி மகனை பின் தொடர்ந்தார்.

   ஆர்யனோ அவ வீட்டுக்கு போறேன். அவ வீடுன்னு தெரிந்தே போறேன். அவளை பார்க்க நேரிடலாம்னு தெரிந்தே போறேன். ஆண்டவா என் மிச்ச வாழ்க்கையில இவளால அம்மாவுக்கும் எனக்கும் எந்த பிரிவும் மனதாங்கலும் வந்துடக்கூடாது என்ற வேண்டுதலோடு அன்னை ஆதிராவை அழைத்து கொண்டு இருளை கிழித்து தனது இருசக்கர வாகனத்தில் பறந்தான்.

   அவள் வீடுவந்ததும் இறக்கிவிட்டுவிட்டு அவளை காணாமல் வந்திடும் முடிவோடு தான் வண்டியை கூட அணைக்காமல் திருப்பினான்.

   விதி அன்னை ஆதிரா ரூபத்தில் அவனை நிற்க வைத்தது. ‘ஸ்ஆ’என்ற அன்னையின் முனங்கலால் நின்றான். செருப்பை தாண்டி ஆதிராவின் பாதத்தில் முள் தைத்தது.

-தொடரும். 
-பிரவீணா தங்கராஜ்
 

33 thoughts on “என் நேச அதிபதியே -9”

  1. நிபுணனோட மொத்த வாழ்க்கையையும் சொல்ல இந்த ஒரு சீன் போதும்…
    சூப்பர்..

  2. Excellent nibu. Sema punch. She is my queen. No one have rights to ask question. Excellent understanding between them. Ariyan too cute. Super. Sis.

  3. Enga nibu nigar nibu vae tan yaarum varamudiyadhu….dei Aryan ne ipo pala confusion la iruka unaku andha sirpi tan veena akka mudivu pannitanga adhanal unaku ava Mela love ah Vara vachi un confusion lan clear panniduvanga da…

  4. Super epi sisy paravala tak nu konjam kovam koranji amma va purinji kitta aarya . Ipovum aathira nibuna love tha increase aeite iruku . Good nibu

  5. Nibu ore varthai la yae athira kum unnakum iruka bonding ah sollita ah aari unnoda kelvi ku.ippo bathil kedaichitha ah
    Thulir unnaku mattum illa engalukum innum aari kum sirpi kum enna prachanai nu solla matraga neyachum ketu sollu

  6. Wow super sis semma epi nibunan semmaiya pesinan pa kandipa wife a vittu kuduka koodadhu nu evana parthu ellarum kathukanum pa 👏👏👏 aaryan ku evlo kovam varudha happa😳 appavaiye minjiduvan polaye appdi enna dhan evanukum andha pillaikum nadula nadandhirukum seekirama sollidunga sis 🤧

  7. Athu epti thaan intha pilingalukku nama evlo pannalum yathathu oru nal onnu panna thavaritta Amma va ipti ellam paysa manasu varuthu 😰 oru pakkam vaythanaiya irruku innor pakkam apdi enna ego sandai , chinna pilainga mari avalukku importance kudukaringanu sandai poodaranayenu irruku 😔😔😔😔😔😔😔😔

  8. அட இவனுக்கு சிற்பிகா மேல இந்தளவுக்கு கோபம் வர என்ன காரணம்ன்னு தெரியலையே. இதுல நம்ம மண்டையை வேற உருட்டுறானே.

  9. ரொம்ப ரொம்ப சூப்பரா போகுது கதையின் பயணம் என்ன சகி ஆர்யனுக்கும் சிற்பிகாவுக்கும் இருக்கும் பிரச்சனை தான் என்ன தினமும் எதிர்பார்க்க வைக்கிறிங்க சகி எப்போதான் சொல்விங்க சகி வாழ்த்துகள்

  10. Wow 👌👌👌👌👌👌👌👌👌👌👌💞💞❤️❤️💕💓💖💖💖💖💖💓💗💗💕❤️❤️💞💞❤️💕💗💓💖💓💕❤️💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌Amma paiyyan conversation excellent 👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍

  11. ஆதிரா, நிபுணன் மகனுக்கு பேசவா சொல்லி கொடுக்கனும்!!… அசத்தல் உரையாடல் கா!!.. கடைசில எப்பையும் போல நிபுணன் மாஸ்😍!!!..

  12. எந்த ஒரு இறுக்கமான விஷயத்தையும் இலகுவா கையாள்வதில் ஆதிராவை அடிச்சுக்க முடியாது. எவ்வளவு கோவமா இருந்த தன்னுடைய மகனை இவ்வளவு அழகா கோபத்தை குறைத்து இருக்கா ளஏ👌👌

  13. நிபுணன் ஆதிரா காதல் காலங்கள் கடந்தும் மாறாமல் இருப்பது நிறைவாக உள்ளது அக்கா….😍😍😍😍😍😍…. இந்த ஆர்யன் அவனின் கோபத்திற்கு காரணம் எப்போது தெரிய வரும்

  14. Mom-son relationship…. Sollave mudila… Ivlo possessive ah…. Boys ku…. Idha padikumbothudha purinjukuta… Avangalukum amma na konjam love adhikam nu…. But…. Nibuuuuu😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰gethu gethu gethu…. Always lovable hubby…. Payankitaye vitutharamatengraru…. Vera level…. Character malum adhira luckydha😄😄😄😄😄

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!