புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

என் நேச அதிபதியே-5

அத்தியாயம்-5

இரவு தாமதமாய் வந்தாலும் சூடான உணவை விழுங்கி, நெடுநேரம் பேசியபடி உறக்கத்திற்கு சென்றனர்.

அடுத்த நாள் மாட்டு பொங்கல் என்று ஆர்யன் தன் வீட்டில் வளர்க்கும் அன்னம் மாட்டினை குளிப்பாட்டிக் கொண்டிருந்தான்.

நிபுணன் அதிகாலை எழுந்ததும், “ஐயா என்ன நீங்க போய் அன்னத்தை குளிப்பாட்டிட்டு இருக்கிங்க. நம்ம மாறப்பன் வருவான்” என்று பதட்டமாய் வந்தார் நிபுணன்.

“என்னய்யா நம்ம அன்னத்தோட விழா. நாம குளிப்பாட்டறதுல என்னயிருக்கு” என்று வைக்கோலால் குளிப்பாட்டினான் ஆர்யன்.

மகனை பார்த்து “நீ டாக்டர் ஐயா. இதெல்லாம் எதுக்கு?” என்று சங்கடமாய் கேட்டதும், “நம்ம வீட்டு மாடு ஐயா. இதே பட்டினத்துல பெட் அனிமல் டாக் குளிப்பாட்டி விடாம இருக்காங்களா? அது மாதிரி தான். நமக்கு நம்ம அன்னம்-கருவாயன் விருப்பமான விலங்கு தானே” என்று விளக்கமளிக்க, கர்வமாய் ஒரு புன்னகை உதிர்த்து வீட்டின் மற்றொரு செல்ல பிராணியான ‘ராயலை’ குளிப்பாட்ட சென்றார் நிபுணன்.

  அன்னத்தை குளிப்பாட்டி முடித்து அதன் துணையான கருவாயன் காளையை குளிப்பட்டி மாலை போடும் நேரம் ஜல்லிக்கட்டிற்கு தயாரான காளை போல வீராப்பாய் நின்றிருந்தது.

பெரும்பாலும் காலை பத்து பதினொன்று மணிக்கு பொங்கலிட்டு வழிப்பட்டு கொம்பிற்கு வண்ணம் தீட்டிய கரும்பும் பொங்கலும் மஞ்சள் வைத்து வழிபட்டு விடுவார்கள். அதனால் ஆர்யன் தீவிரமாக டாக்டர் என்பதை தாண்டி தன் வீட்டு விலங்கினை அலங்கரித்தான்.

சர்வேஷ் பாதியில் வந்து கலந்துக் கொண்டான்.

ஆதிராவோ மற்ற ஏற்பாடு எல்லாம் செய்து முடித்தாள்.

துளிரோ தழைய தழைய பாவாடை தாவணியில் வலம் வந்து கற்பூரம் காட்டி வழிபட்டாள். பெரும்பாலும் வீட்டிற்கு பெரியவர்களை தான் தீபாராதனை செய்வது வழக்கம். இங்கு எல்லாம் துளிர் தான் ஆரம்பித்து விடும் பெரிய மனுஷி.

நிபுணன் தன் மகளை அன்னையாக பாவித்து கண் கலங்க, தங்கலட்சுமி மாதவனை மாமியார் மாமனாராக மறந்து தாய் தந்தையாக பாவித்தார்.

‌ “ஐயா மில்லுக்கும் வாங்க.” என்று நிபுணன் கூப்பிட “வர்றேன் ஐயா. இனி இங்க தானே வாசம். மில்லு இன்னிக்கு லீவு தானே. இந்த வாரத்துல ஆட்கள் இருக்கறப்ப வர்றேன்.” என்று முகமலர்ந்து கூறினான்.

      நிபுணனோ மகன் கூறுவதும் சரியென்றார்.
   பின்னர் தன் தங்கை வரவும், “அத்தை வர்றாங்க ஐயா.” என்றதும் ஆர்யன் தன் தந்தையின் கூடபிறந்த உடன்பிறப்பான ஒரே தங்கை சாருலதாவை காண ஓடினார்.

    சாருலதாவை தாண்டி முத்துவேலன் மாமா வந்ததும் கட்டியணைக்க, “எங்க ஜல்லிக்கட்டி காளை ஆர்யன் குட்டி வந்துட்டாரு. எப்படிய்யா இருக்க?” என்று கண்கள் முழுக்க, நிரப்பி சாருலதா கணவர் கேட்டார்.

    “ரொம்ப நல்லாயிருக்கேன் மாமா அத்தை.” என்று இருவருக்கும் கூறிவிட்டு, “உங்களை பார்க்க நேத்தே வரலாம்னு  துளிர் கிளம்பினா. நீங்களா ஐயாவை பார்க்க எப்படியும் வருவிங்க ஒரு தூக்கம் போட்டுட்டேன்.
   ராகவி  மதினி எப்படியிருக்காங்க. மாமா எல்லாம் சௌவுக்கியமா?” என்று வரிசையாக விசாரித்தான். இத்தனை நாட்கள் என்னதான் போனில் உறவாடினாலும் நேரில் பேச ஆயிரம் இருந்தது. மாதவன் தங்கலட்சுமி இருவரும் சேர்ந்து கொண்டனர்.

   முத்துவேலன் சாருலதாவிற்கு இரண்டு பெண் பிள்ளைகள். இருவருமே ராகவி-ரத்னா. ராகவி பிறந்து இரண்டு வருடம் கழித்து பிறந்தவள் ராகவி. இருவருக்கும் மணமாகிவிட்டது.
 
   முத்துவேலன் கூட ‘என் மகளுங்க இளையவளா இருந்தா உனக்கு கட்டிக்கொடுத்துருப்பேன் ராசா’ என்பார்.
   ராகவி தத்னா இருவருமே மணமாகி பெங்களூரிலும் மும்பை என்று அவரவர் துணைவர்களோடு சென்றுவிட்டார்கள். முத்துவேலனுக்கு சொந்தம் என்பது இல்லாத காரணத்தால் எப்பொழுதும் தங்கை கணவரான நிபுணனோடு பொங்கல் கொண்டாட்டத்திற்கு வந்துவிடுவார்கள்.
 
   அதனால் அவர்களின் நலத்தை எல்லாம் கேட்டு, பொங்கல், கரும்பு கூடவே அடிக்கடி இனிப்பு, காரம் என்று சிற்றுண்டி பலகாரங்கள் கொரித்தபடி நேரங்கள் போனதே தெரியவில்லை. இதில் ஊர் கோவில் அருகே மேடை, பந்தல் போட்டு ஆட்டம் பாட்டம் என்று இளைஞர்கள் கலக்கினார்கள்.
   
  ஒரு பக்கம் காது சவ்வு கிழியும் வரை ஒலிப்பெருக்கியில் சினிமா பாடல்கள் அலறியது.

  மாலை மாட்டுவண்டி கட்டிக்கொண்டு ஒரு உலா வந்தார்கள் நிபுணனின் வாரிசுகள். என்ன தான் கார், பைக் என்று வரிசைகட்டி வீட்டிலிருந்தாலும் இதுபோன்ற நாட்களில் மாட்டுவண்டி தனித்துவம் வாய்ந்தது. சிட்டியில் இருக்கும் ஆட்கள் சிலர் இன்னமும் மாட்டுவண்டியை குழந்தைகளுக்கு அதிசயத்து சுட்டிக்காட்டி மகிழ்வதும் உண்டல்லவா?

     வண்ண கோலங்களும் பட்டுபாவாடை கூட்டமும், கோவிலை ஒட்டிய கடைகள் என்று ஆர்யன் தன் சொந்த மண்வாசம் உணர்ந்து வண்டியை விடுத்து இறங்கினான்.
 
   கோவிலில் பாதி பேருக்கு ஒன்று கூடி திரண்டார்கள்.

   நிபுணன் பையன் வந்துவிட்டாரா என்ற நலன்விசாரிப்பு கூட்டத்தை கூட்டிவிட, ஆர்யனோ ஒவ்வொருத்தரிடமும் முகம் திருப்பாமல் பதில் தந்தான்.

    “அண்ணா இந்த பை எவ்ளோ விலை” என்று சிற்பிகா சற்று தூரத்தில் விலை கேட்க, கடைக்காரரோ தலையை தூக்கி தூக்கி ஆர்யனை காணும் ஆவலோடு, சிற்பிகா பேச்சை கவனிக்கவில்லை.

   “அண்ணா பை விலை என்னனு கேட்டா அங்கயே பார்க்கறிங்க” என்று மென்மையாய் கேட்டாள்.

  “நிபுணன் ஐயா பையன் வந்துட்டார் போல. என்னம்மா கேட்ட?” என்று மீண்டும் கேட்டதும் சிற்பிகா ‘நிபுணன் ஐயா பையன்னா?’ என்று எட்டி பார்த்தாள்.

  அவள் பார்க்க கூடாதவன் என்ற பட்டியலில் முதலிடம் பிடித்த ‘ஆர்யன்’ என்று மனசாட்சி மறக்காமல் நினைவேட்டிலிருந்து எடுத்துரைக்க, சிற்பிகா கை தானாக இடது கன்னத்தை தாங்கியது.  

    நொடியில் ஆர்யன் கண்கள் சுற்றி சுழன்று ஒவ்வொருத்தராய் கவனிக்க, கையிலெடுத்த பையை வைத்து விட்டு நடையை தூரிதப்படுத்தினாள்.

  இத்தனை கூட்டத்தை தாண்டி அவன் நிச்சயம் தன்னை காண மாட்டான். அப்படியே கண்டாலும் தன்னை அவனுக்கு தெரியாது. தனக்கு தான் இந்த சங்கடங்கள் என்று முனங்கினாள்.

     கைப்பையை விற்கும் வியாபாரியோ சிற்பிகா செல்லவும் தான், “அம்மா விலை கேட்டுட்டு போறியே. கம்மி விலை தான்மா வாங்கிக்கோ” என்று கூப்பிட கூப்பிட ”எனக்கு இந்த ஹாண்ட் பேக் பிடிக்கலை அண்ணா” என்று நிற்காமல் நடையிட்டாள். 

  ”நிறைய பை இருக்கும்மா. ஒவ்வொன்னா எடுத்து காட்டறேன்” என்றுரைக்க சிற்பிகா அதை கேட்க நின்றிருந்தால் தானே?! அவள் தான் ஓட்டமெடுத்து கடை பாதைக்கு போட்டிருந்த குறுக்கு வழிபாதையில் தன் வீட்டு பாதை நோக்கி விரைந்திருந்தாள்.

      ஆர்யன் தன்னை கண்டு ஒருத்தி விழுந்தடித்து ஓடியது தெரியாமல் ஒவ்வொருத்தராக துளத்தெடுத்த கேள்விக்கு பதில் தந்தான்.

வரும் வழியெல்லாம் முனங்கியபடி ஸ்கூட்டியில் பயணித்தாள். “இவனை யாரு இங்க வரச்சொன்னது. அப்படியே படிப்பு முடிச்சு ஒரு ஹாஸ்பிடல் கட்டி அங்கயே பேமஸ் டாக்டரா பெயரெடுத்து வாழ வேண்டியது தானே. இங்க எதுக்கு வந்தானோ? இவனை பார்த்ததுக்கு என் கண் அவிஞ்சி போயிடுச்சு.” என்று வீட்டுக்கு வந்து தலையை தாங்கி கொண்டாள்.

      “இனி ஆதிரா அம்மா ஐயா எல்லாரிடமும் எட்டி நின்று பழகணும். இப்ப பழகற மாதிரி பழகினா நந்தி மாதிரி மூக்கு வேர்த்து வந்துடுவான்.” என்று நடந்ததை வைத்து மீண்டும் மீண்டும் எரிச்சலடைந்தாள் 

   நடந்து முடிந்த பழைய நிகழ்வுகளால் தனக்கு லாபமென்பதை விட, இவன் செய்த செயல் அவனை எட்டி நிறுத்தி அவன் நிழலையும் தீண்டிடும் எண்ணத்தை முறியடித்தது.

    தன் பேத்தி யாரையும் கடிந்து பேசாதவள். வீட்டுக்குள் நுழைந்ததிலிருந்து யாரையோ திட்டி தீர்த்து சாடுவது புரிய, “யாரை டி திட்டிட்டு இருக்க?” என்றார் உடல் நலிந்த குரலில்.

   தனக்கிருக்கும் ஒரேயொரு பாட்டி அவளிடமிருந்து இந்த கேள்வி வரவும், “இப்ப நான் எவன்னு விம்போட்டு விளக்கணுமா உனக்கு? அவன் மூஞ்சிலயே முழிக்க கூடாதுனு ஓடிவர்றேன். இதுல யாருனு அறிமுகம் தரணும். பெரிய ஹீரோ. அறிமுகப்படுத்தி விலாவரியா சொல்ல” என்று கத்திவிட்டு முகமலம்ப சென்றாள். “யாருனு கேட்டா இந்த குதி குதிக்கற?” என்று கேட்டப்பின் சிற்பிகா முகமே துவண்டுவிட்டது.

     இன்றைய நாளின் முடிவு கசப்பானதாக இருக்குமென்ற எண்ணத்தோடு உணவை கூட தவிர்த்துவிட்டு உடையும் மாற்றாமல் படுத்துவிட்டாள்.

   “வயித்தை காயப்போட்டு படுத்துட்ட? சாப்பிட வாடி” என்று கூப்பிட, “நீங்களே சாப்பிடுங்க ஆச்சி எனக்கு பசிக்கலை” என்று முடித்து கொண்டாள்.

   “இப்படி வயசு புள்ள சாப்பிடாம கொள்ளாம படுத்தா என்ன அர்த்தம். இன்னிக்கு நான் இருக்கேன். சாப்பிடலைனா ஏன்டி சாப்பிடலைனு கேட்கறேன். நாளைக்கே செத்துட்டா என்னடி பண்ணுவ?” என்று கேட்க, ‘இந்த ஆச்சிக்கு இதே வேலை. சாப்பிட்டியா தூங்கனியா இந்த இரண்டை தவிர எதுவும் கேட்காது.’ என்று குப்புறப்படுத்து கொண்டாள்.

     ஆர்யனோ நின்று நிதானமாக தங்கைக்கு ஏகப்பட்டதை தன் வருமானத்தில் வாங்கிக்கொண்டு குவித்திருந்தான். 

    எல்லாமே சின்ன சின்ன பொருட்கள் என்றாலும் பெரிய பெரிய சந்தோஷங்களை தாங்கியிருந்தது. அதன் இனிமையில் நிம்மதியான உறக்கத்திற்குள் கட்டுண்டான்.

    ஆர்யன் அடுத்த வாரம் முதல் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிப்புரியும் ஆயத்தத்தோடு இருக்க, அதற்கு ஏற்றது போல நிறைய பணிகள் இருந்தது.
 
   ஒருபக்கம் அதனை பார்த்துக்கொண்டே, பருத்தி மில்லில் பணிப்புரியும் ஆட்களுக்கு தந்தை எப்பொழுதும் ஜென்ரல் செக்கப் செய்ய மருத்துவரை அழைப்பார். இந்தமுறை தானே சென்று அவர்களுக்கு மருத்துவ செக்கப் பார்த்து நலம் விசாரித்து பருத்திமில்லையும் ஓரெட்டு கண்குளிர பார்த்திடும் முடிவோடு அன்றைய நாளில் காரில் வந்திறங்கினான்

    சிற்பிகா கம்பியூட்ரில் வரவு செலவு கவனிக்க, ஆர்யன் தடாலடியாக உள்ளே நுழைந்து வரவும் கூட்டங்கள் இங்கும் மொய்த்தது.

   சிற்பிகாவிற்கு இங்க என்ன திடீரென வந்துட்டான். எப்பவும் முன்னாடியா ஆதிரா அம்மா பேச்சுவாக்குல சொல்வாங்க. நைஸா இவன் வர்ற நாளா லீவு எடுத்துப்பேன்.
இன்னிக்கு இப்படி வந்துட்டான் பேசாம வீட்டுக்கு ஓடிடணும். எதுனாலும் நிபுணன் ஐயாவிடம் வயிறு வலி தலைவலினு சொல்லிடலாமென்ற முடிவோடு தன் முன்னால் அவனை போலவே இம்சித்த சிகையை காதுமடலருகே ஒதுக்கி வைத்து வேக வேகமாய் டிபன் பேக்கை விட்டுவிட்டு ஓடினாள்.

  தன்னை சுற்றி ஒரு கூட்டம் இங்கு வந்தாலே மொய்த்திட, அதன் ஆனந்த மிதப்பில் பதிலளித்தவனின் பார்வை வட்டத்தில், ஒரு பெண் மட்டும் முக்காடுயிட்டு செல்வது வினோதமாக தென்பட, தன் ஆறடி உயரத்திற்கு கழுத்தை மட்டும் வளைத்து பார்வையிட்டான்.

   கருவிழிகள் இரண்டும் திரும்பி திரும்பி பார்த்து செல்ல சுவரஸ்யம் கூடியபடி அளவிட்டான்.

   சுடிதாரில் முக்காடுயிட்டு மறைந்திருந்தாள் சிற்பிகா.

     தந்தை வரவும் அப்பெண்ணை பருகிய கண்களும் மனதும் மற்றது மறந்து ஐயாவோடு தான் வந்த காரணத்திற்கான பணியை தொடர்ந்தான்.

   நிபுணனோ வேலையை ஏவ சிற்பிகாவை தேடி, அவளுக்கு அலைப்பேசியில் அழைக்க, “வயிற்றுவலி ஐயா. வீட்டுக்கு வந்துட்டேன். மன்னிச்சிடுங்க” என்று கூறினாள்.

  “அட நம்ம பருத்தி மில்லுக்கு டாக்டரே வந்துட்டார். மருந்து வாங்கி போட்டிருக்கலாமேமா. எதுக்கு போனிங்க” என்று கூற, “இல்லைய்யா வயிற்று வலி தூங்கி எழுந்தா பெட்டர்.” என்றதும் நிபுணன் வேறென்ன கேட்க விடுமுறை எடுக்காத பெண் சட்டென கிளம்பியதால் இதற்கு பின் ஏன் என்ன என்று காரணத்தை ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தி யோசிக்க தோன்றவில்லை. எல்லாம் ஆர்யனின் சிரிப்பும் பேச்சும் அவன் தன்னிடம் பணிசெய்யும் ஆட்களுக்கு ஸ்டெதஸ்கோப் கொண்டு ஆராயும் அழகில் மைந்தன் மீதியிருந்த பார்வை அகற்றாது கவனித்தார்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

41 thoughts on “என் நேச அதிபதியே-5”

  1. Alaga pothu story aana ivanga rendu pwrkun nadula ena nadanthuchi theeilaye ethuku sirpika ippadi odi oliyura aaryan ah parthu . Ivanga story flash back ah illa twist ah sisy konjam sikram sollidunga

  2. Dei Aryan unna partha rasikardhuku kootam tan varudhu ana iva mattum enna da pathadi thalli odra….adhuvum avalae unna thitura avalae odra ungalukkulla enna pblm nu Vera therila…..skrm ah ivangalukkullla enna panchayat poituruku nu sollunga akka….. excitement thangala…..

  3. அட.. இவங்க ரெண்டு பேருக்கும் நடுவில அப்படி என்ன தான் நடந்துச்சின்னு தெரியலையே…!
    ஆனா, ஆர்யனுக்கு அது சிற்பிகான்னு அடையாளம் தெரிஞ்சிடுச்சா இல்லையா..?

  4. அட.. இவங்க ரெண்டு பேருக்கும் நடுவில் அப்படி என்ன தான் நடந்துச்சின்னு தெரியலையே..!
    ஆனா, ஆர்யனுக்கு அது சிற்பிகான்னு அடையாளம் தெரிஞ்சிடுச்சா இல்லையா..?

  5. ஆஹா சூப்பருங்க
    ஆனாலும் எவ்வளவு யோசிச்சாலும் இந்த சிற்பிகா யார் என்று புலப்பட மாட்டேங்குது
    .

  6. Nice ud sis waiting for next ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  7. அம்மா சிறப்பிக்க, ஆர்யன் ஹீரோ. நீ ஓடவும் முடியாது. ஒழியவும் முடியாது. 3 rd meetingla matta போறே

  8. Super sis semma epi 👍👌😍 endha ponnu en eppdi odi oliyanum ennava erukum parpom 🤔 seekirama next epi podunga sis 🙏

  9. மாட்டு பொங்கல் சிறப்பாக நடைபெற்றது சூப்பர் அக்கா….👌👌👌👌👌👌…. ஆர்யன் – சிற்பிகா இடையில் உள்ள பிரச்சினை என்னவாக இருக்கும்….🤔🤔🤔🤔🤔🤔🤔…. தலை தெறிக்க ஓடும் அளவுக்கு என்ன பிரச்சினை ஆக இருக்கும்….🤔🤔🤔🤔🤔

  10. இப்படி தல தெறிச்சு ஒடற அளவு அப்படி என்ன தான் நடந்துருக்கும் 🤔🤔🤔🤔🤔

  11. ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு சகி ஆர்யனின் ஜோடி சிற்பிகாவா சகி கதையின் நகர்வு ரொம்ப எதிர்பார்க்க வைக்குது சகி என்னை மறக்காமல் தேடினதுக்கு நன்றி சகி வாழ்த்துகள் உங்கள் பயணம் தொடர

  12. Inga enna track ka oduthu…. Iva yen ipdi odrs…. Avan hero ma.. Villain nahiii😄😅yar indha paati, sirpika… Ivangalukum enna nafandhychu

  13. 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💖💞💞💕💗💗💓💕💞💖💖💕💗💗💞💖💖❤️❤️❤️❤️❤️❤️💓💓💗💓💕💞💞💖💞💞💕💗💗💕💞💖💖💕❤️❤️❤️❤️❤️💓wow next ennanu romba aarvama irukku

  14. நிபுணனோட பையன் கண்டிப்பா தப்பானவனா இருக்க மாட்டோன். ஆனால் சிற்பிகா எதுக்காக ஆர்யன இந்த அளவுக்கு கரித்து கொட்றா

  15. அப்படி என்ன நடந்திருக்கும் ரெண்டு பேருக்கும்!!!.. இந்த ஓட்டம் ஓடுறா??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!