அத்தியாயம்-20
Thank you for reading this post, don't forget to subscribe!அலுவலகம் வந்து பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தியவனிடம், அவனுடன் வேலை பார்க்கும் தேவந்திரன் “என்ன மச்சி மாமனார் வீட்ல பைக் வாங்கி தரலையா? காருண்யா பைக்ல வர்ற” என்றான்.
“இந்த வம்பு தான் வேணாங்கறது. எனக்கு தான் எங்கம்மா பைக் வாங்க விடாம லொல்லு பண்ணற விஷயம் உனக்கு தெரியும்ல? நைஸா காருண்யா ஸ்கூட்டியாவது ஓட்டிட்டு வந்தேன். மாமனார் வாங்கி தரலையானு கேலி பண்ணற. ஏழரை முடியட்டும் நான் என் சொந்தகாசுல வாங்கிப்பேன்.” என்றான்.
இதே காருண்யாவிடம் யாராவது இவ்வாறு கேட்டால், இந்நேரம் கோபப்பட்டு, ‘என்ன இப்படி பேசறேள்’ என்று முகம் தூக்கி வைத்திருப்பாள். ராவணன் கேலிக்கு அதே நடையில் திருப்பி கொடுக்க, வியந்தாள்.
ஜோடியாக இருவரும் வருவதில் அலுவலகமே திரும்பி பார்த்து ‘ஹாய்’ என்று வரவேற்றனர். ரோஸ்ஸின் எல்லாம், “என்னடி சேலை எல்லாம்?” என்றுரோஸ்லின் கேட்க, “சும்மா.. மேரேஜ் முடிஞ்சு அப்படியே சுடிதார்ல வந்தாலும் என்ன சொல்வேள். என்னடி ஒரு சேஞ்சும் இல்லைன்னு கேலி சேய்வேள். அதுக்கு தான் சும்மா சேலை கட்டிட்டு வந்தேன்.” என்று விவரித்தாள்.
ஷாலினியோ லேசான சோகத்தோடு, ராவணனை கடந்து வலியோடு செல்ல, “பார்த்தியா… இன்னமும் சோககீதம் வாசிக்கறா.” என்று கண்ணை காட்ட, “பச் அதெல்லாம் அவரே பார்த்துப்பார்.” என்றாள்.
“எவரு..” என்று ரோஸ்லின் ராகம்பாட, “உத்தியோகத்தை கவனிப்போமோனோ” என்று நினைவுப்படுத்த, ரோஸ்லினை விட்டு ராவணன் அருகே அமர்ந்தாள்.
அவன் வந்ததும் லேப்டாப் ஆன் செய்திருந்தான். எப்பவும் காருண்யா வந்தால் வீசும் ஜவ்வாது சந்தனவாசம் இன்றும் அவன் நாசியை துளைத்தது. இம்முறை மனையாளை உரிமையோடு பார்வையிட, “வந்ததும் சைட் அடிக்க ஆரம்பிச்சட்ட, இதுக்கு தான் லீவு எடுத்துட்டு ஹனிமூன் போகணும்.” என்று ஜெயந்த் வாறினான்.
“பிராஜக்ட் முடிக்க இன்னும் நாலு மாசம் தான் இருக்கு. இதுல இரண்டு பேர் லீவு போட்டுட்டா விளங்கிடும்” என்றான் ராவணன். சைட் அடித்ததை மறுக்கவோ, ஹனிமூன் பற்றியும் பேச காருண்யா தான் சங்கடமாய் நெளிந்தாள்.
ஆளாளுக்கு அரை மணி நேரம் கேலி கிண்டல் செய்துவிட்டு வேலையில் மூழ்கியிருந்தனர். எந்நேரமும் இவர்களை பார்ப்பதா மற்றவர்களுக்கு வேலை?
லஞ்ச் வரும் நேரம், இருவரும் சாப்பாட்டை திறந்து சுவைக்க, “ஏ ஒன் காரு. டேஸ்ட் நாக்குல ஓட்டுது. நெய் வேற ஊத்தியிருக்கியா” என்று நுகர்ந்து கேட்டான்.
ஆமென்று அவள் கூறியதும், “பார்த்தியா இத்தனை நாள் காருண்யானு முழு பெயர் வரும். இப்ப காருவாம் காரு.” என்று கிண்டல் அடித்தனர் குழுவினர்.
“ஏ.. முன்னவே நான் காருன்னு தான் கூப்பிடுவேன். எல்லாரும் இருக்கும் போது ஜாக்கிரதையா காருன்னு சொல்லாம கவனமா தவிர்ப்பேன். இப்ப எல்லாரும் இருந்தாலும் கவனமா பேசணும்னு தோன்றலை.’ என்று உண்மையை கூறினான்.
உண்மை தானே.. முன்பு செல்லப்பெயர் என்று கூறி இல்லாத கிண்டல் கேலி செய்து தங்களை தாங்களே பேசும் பொருளாக மாற்றினால் காருண்யா கோபப்படுவாள். இன்று அப்படி கோபம் வந்தாலும் அவள் என் மனைவி என்றதில் அவளும் தன்னை கணவன் என்ற கோணத்திலும் எடுத்துக்கொள்வார்கள் என்று காருவென அழைத்தான்.
”முன்னவே வா…” என்று ஷாலினி வாய் பிளந்து கேட்டாள். “பிஃப்த்-ல இருந்து காரு தான்” என்றான் ராவணன்.
ஷாலினியோ வேண்டுமென்றே “நிஜமாவுமே இது அரேன்ஜ் மேரேஜா? இல்லை லவ் மேரேஜா? சின்ன வயசுலயிருந்து லவ் பண்ணி கல்யாணம் பண்ணிருக்கிங்க தானே?” என்று அவள் கற்பனையை இங்கே புகுத்தி கேட்டாள்.
காருண்யா கோபம் கொள்ள, “அட… அவங்க லவ் எல்லாம் பண்ணலை. எல்லாம் உன்னால… நீ அன்னைக்கு இருந்தா பிரச்சனையே வந்திருக்காது.” என்று போட்டு உடைத்தான் ஜெயந்த். ஹரன் வந்து பார்த்தப்பின் சந்தேகத்தின் பெயரில் கல்யாணம் நின்றதே சிலருக்கு தெரியாது ஏதோ காதல் கல்யாணம் என்று எண்ணியிருந்தனர். அதனால் “ஓ மை காட்.” என்று முடிந்து போன விஷயத்திற்கு உச்சி கொட்டினர்.
“ஏதோ சைல்வுட் பிரெண்ட்ஸ் என்பதால் இரண்டு வீட்டு பெரியவங்க சேர்த்து வச்சாங்க. இதே முன்ன பின்ன தெரியாதவங்களா இருந்திருந்தா காருண்யா லைப் என்னாகியிருக்கும்.” என்று காருண்யாவுக்காக கவலைப்பட்டாள் ரோஸ்லின்.
”ம்கூம்’ அதான் ராவணனை அவ பக்கம் இழுத்துட்டாளே. அவன் அவளையே தான் விழுங்கறான்” என்று சாப்பிட்டு ஷாலினி எழுந்துக்கொண்டாள்.
காருண்யா சாப்பிட்டு விட்டு டிபன்பாக்ஸை லேசாக அலம்பி வைக்கும் பொருட்டு எழுந்து சென்றாள். ரோஸ்லினும் கூடவே சென்றதால், “ஏய்… அன்னைக்கு பேட்சுலர் பார்ட்டில ப்ரிட்ஜ்ல எவன்டா டிரிங்க்ஸ் வச்சது.” என்று கேட்டதும் சுந்தரோ “ஏய் நான்தான் சில் பீர் வேண்டும்னு கொஞ்ச நேரம் வச்சேன் அப்படியே மறந்துட்டேன். ஏன்டா… அச்சோ.. காருண்யா வீட்ல யாராவது வந்து பார்த்துட்டாங்களா? உன்னோட அப்பா அம்மா?” என்று பயந்தவனாக கேட்டான்.
“இப்ப வந்து துக்கம் விசாரி. நல்ல வேளை அப்பா அம்மா காருண்யா வீட்டு ஆட்கள்னு யாரையுமா கூட வரவேண்டாம்னு சொல்லிட்டு, நாங்க மட்டும் வீட்டுக்கு வந்தோம். முதல் நாளே பீர் பாட்டிலை ப்ரிட்ஜ்ல இருக்கறதை பார்த்துட்டா. ஏதோ நான் குடிக்காரன் மாதிரி.” என்று நிதானமாய் கோபத்தை வெளிப்படுத்தினான்.
“நீ தான் குடிக்க மாட்டேன்னு சிக்கன் பப்ஸ் திண்ணுட்டு இருந்தியே.” என்றான் இன்னொருவன்.
“அதை விடு பீரை என்ன செய்த?” என்றான் முதலாமானவன்.
ராவணன் முறைத்தபடி, “என்ன பண்ணுவாங்க வாஷ்பேஷன்ல கொட்டிட்டேன்.” என்றான்.
“மூவாயிரம் டா” என்றான் அதன் விலையை அறிந்தவன்.
“சோ வாட்.. அதை கொட்டலைனா அவ என்னை எரிச்சியிருப்பா..” என்று ராவணன் அலுத்துக்கொண்டான். ‘முட்டையையே குப்பைக்கூடையில் போட்டுவச்சிட்டா. பீரை கீழ ஊத்தலை அவ்ளோ தான்.’ என்று மனைவிக்கு பயந்த கணவனாக அன்றே மாறியிருந்தான்.
“அடப்பாவி எல்லாத்தையும் கீழே கொட்டிட்டியா? சில்லுனு இருந்திருக்குமேடா. காருண்யா சொன்னான்னு கொட்டிட்டியா.” என்று கவலைக் கொண்டான் சுந்தர்..
ராவணனோ “சண்டை வராம போனதே அதுவரை சந்தோஷம்னு இருக்கேன். சில்லுன்னு இருந்திருக்குமா. பேச்சை பாரு பேச்சை” என்று எழுந்தான்.
அவனும் டிபன் பாக்ஸை லேசாக அலம்பிவிட நினைத்தான்.
காருண்யாவோ “கொடுங்கோ நான் வாஷ் பண்ணறேன்” என்று வாங்க, இவனோ மறுத்தான்.
“பரவாயில்லை.. நானே வாஷ் பண்ணிடறேன்” என்று டிபன் பாக்ஸை கழுவினான். இவர்கள் பேச்சு ஒன்னும் பாதியுமாக விழுந்தாலும் பேச்சு செல்வதை யூகித்திருந்தாள் காருண்யா.
ராவணனுக்கு அந்த பழக்கமில்லை என்றதில் திருப்தி உண்டானது.
அதுவரை பகவான் கருணை மழை பொழிந்ததில் பாக்கியம் பெற்றவளே.
ஹரனிடம் பேசும் போது ஒருமுறை அவனுக்கு அப்பழக்கம் உள்ளதென்று அறிவாள். ஹரனே கூறியது. கடவுள் தனக்கு சரியானதை மணயாளனை தான் தந்துள்ளாரா என்று ஒரு நொடி இதமாய் மனதை நிறைத்தது.
ராவணனை பார்த்துக்கொண்டே ரோஸ்லினை இடிக்க வர, “வரவர கண்ணும் தெரியலை காதும் கேட்கலை. என்ன காருண்யா விஷயம்? இந்த ராவணன் கவுத்திட்டானா” என்று கிசுகிசுக்க “சீ போ” என்று சிரித்து அவளது இடத்துக்கு வந்து அமர்ந்தாள்.
இதற்கு முன் இந்த உணர்வு ராவணனிடம் வந்ததில்லை. ஆனால் மணமான இந்த பத்தாம் நாளில் லேசாக இடம் பிடிக்க முயல்கின்றான்.
கல்யாணத்தன்று எந்தளவு பயந்தோம் என்று எண்ணுகையில் இந்த நிமிடம் அந்த பயமெல்லாம் முட்டாள் தனமாக தோன்றியது.
மாலை ஆனதும் ராவணன் கூடுதலாக வேலையில் மூழ்கியிருக்க, “இன்னும் எவ்ளோ நாழியாகும்” என்று கேட்டவளிடம், இருபது நிமிடம் ஆகும். நீ போனா போ காரு” என்றவன் ஸ்கூட்டி சாவியை அவளிடம் கொடுத்தான், கணினியை தவிர்த்து பார்வையிடவில்லை.
கூட இரு ஆண்கள் வேலை பார்த்துக்கொண்டிருக்க, கணவனுக்காக அவளுமே காத்திருந்தாள்.
“ராவணன்.. ஏய் ராவணன்… டைம் ஆகுதுடா.. வீட்ல பொண்டாட்டி தேடுவா. உனக்கென்ன உனக்காக உன் கூடவே போகலாம்னு காருண்யா வெயிட் பண்ணறா. எங்களுக்கு அப்படியா… லேட்டா ஆனா காச்மூச்னு கத்துவாங்க. பிள்ளைங்களும் தேடுவாங்க” என்று கூறி காலையில் வேலைக்கு விரைவாக வந்து பார்க்கலாமென்றார்கள்.
“சரி அப்ப குயிக்கா வாங்க” என்று கணினியை அணைக்க முற்பட்டான்.
“ஆக்சுவலி நீ கால்ல வெந்நீரை கொட்டிட்டு ஹாயா பறக்கணும். புதுமணஜோடி என்று பார்க்க தான் தெரியற. ஆனா வேலை விட்டு இன்னமும் வீட்டுக்கு ஓடமாட்டேங்கற. இதுக்கு தான் தலைமை பொறுப்பு உன்னிடம் இருக்கு” என்று கேலி செய்து கடந்திடவும், மாறாத புன்னகையோடு கணினி அணைத்து எழுந்தான்.
மற்றவர்களோடு காருண்யாவை அழைத்துக் கொண்டு நடந்தான்.
“நீ கிளம்பணும்னா கிளம்பியிருக்களாமே” என்று கூற, “ஆத்துல போய் சுவரை வெறிச்சிட்டு இருக்கணும். அதுக்கு இங்க கூடவே வந்துடலாம்னு தோன்றியது.” என்று கீயை அவனிடம் நீட்டினாள்.
ஸ்கூட்டியை அவளிடமிருந்து வாங்கி, “ரொம்ப குட்டியா தெரியுது. அன்கம்பர்டபிளா தான் இருக்கு.” என்றான்.
ராவணன் உயரத்திற்கு ஸ்கூட்டி சரிவருமா? அதையே நாயகி உரைத்திட, தலையாட்டி ஒப்புக்கொண்டான்.
வீட்டுக்கு வந்ததும் குளிக்க ஆயத்தமானாள். ராவணன் முகம் கைகால் மட்டும் கழுவிக்கொண்டு டிவியில் மூழ்கினான்.
“காபி கொண்டு வந்து நீட்ட, “இந்த டைமில் காபியா?” என்று மறுக்க பார்த்தாலும் ஆசையாக காருண்யா தரவும் பெற்றுக்கொண்டான்.
“இந்த பிராஜக்ட் இன்னும் நாலு மாசம் இருக்கே. அப்பறம் ஏன் இன்னமும் விரைவா முடிக்க யோசிக்கறேள்” என்றாள்.
“ஏற்கனவே நாலு மாசம் ஆகிடுச்சு. ஒரு பிராஜக்ட் சரியான ஆட்களை வச்சி செய்தா, மினிமம் ஆறு இல்லை ஏழு மாசத்துல செய்திடலாம். அப்படியிருக்க குயிக்க முடிச்சிட்டா ஜவஹரிடம் மேலிடத்திலும் டீமுக்கு நல்ல நேம் கிடைக்கும். அதோட ஏதாவது செய்ய கொடுத்துட்டா முதல்ல அதை முடிச்சிடணும். இல்லைன்னா தூக்கம் வராது.” என்றான்.
“பொய் சொல்லாதேள். நன்னா தூங்கறேள்.” என்றாள்.
“தூங்கறது வரம் மாதிரி. எல்லாருக்கும் கிடைக்காது காரு. கிடைக்கும் போது நல்லா தூங்கணும்” என்றான்.
காலையில் செய்த பருப்பை சாம்பாரா மாத்திட்டு, கிச்சடி செய்யவா?” என்று கேட்டவளிடம் சரியென்று அவளோ கிச்சடி செய்து வந்து நீட்ட, “இது உப்புமா இல்லை” என்று முகத்தை அஷ்டக்கோணலாக மாற்றி கேட்டான்.
“கிண்டல் பண்ணாதேள். காய்கறி எல்லாம் போட்டு நெய் ஊத்தி நட்ஸ் எல்லாம் சேர்த்திருக்கேன். கிச்சடி இது. சாப்பிட்டு பார்த்து சொல்லுங்கோ” என்றாள்.
“உப்புமால இதெல்லாம் போட்டா கிச்சடியா” என்றான் சோகமாக.
காருண்யாவோ “உங்களை.” என்று கூற, அவள் தன்னை துரத்துவதாக எண்ணி ஓட, காருண்யாவோ அவனை பிடிக்க ஓடினாள். இரண்டு படுக்கையறை கொண்ட அறையில் அங்கும் இங்கும் ஓட, காருண்யா கைகளை பிடித்தபடி, அவளை சோபாவில் தள்ளி அவளருகே இடித்தபடி அமர்ந்தான்.
இருவரது கைகள் உரசிட, தேகம் சிலிர்த்து, காருண்யா எழுந்தாள்.
ராவணனோ அவள் செல்லவும், ‘நல்லா தானே போயிட்டு இருந்தது.’ என்று தலைகோதி நடந்தான். அவனுக்கும் ஏதேதோ உரசல் வேலைக்காட்டியது. தள்ளி நிறுத்தி வாழ வேண்டுமென்று இருவருபே நினைக்கவில்லை. ஆனால் எதுவும் கட்டாயத்துடன் ஆரம்பிக்க கூடாது. இதயத்தின் உள்ளிருந்து நேசத்துடன் பிறக்க வேண்டுமென்று எண்ணியிருந்தான் ராவணன்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
எங்கடா கமெண்ட்ஸை காணோம்.
வரவர குறையுது. 🥹 சரி ரைட்டு.. நான் கதை முடிச்சி கொட்ச நாளில் எடுத்துடுவேன்.
வாசிக்கறவங்க வாசிங்க. கமெண்ட்ஸ் பண்ணறவங்களுக்கு நன்றிகள்❤️
Wow super sis semma epi 👌😍❤️ Karunya sight adikira alavuku munneritiya super ma 😘 eppdiye odi pudichi velaiyaditu erunga edha andha paati vandhu partha semmaiya erukum pa😂😂😂
Wow.. spruuuuu👌👌👌👌👌👌 waiting for nxt epi 😍😍👌💕💕💕💕💕💕💕💕💕
Asusal u r rocking sissy
Mangaiku yetha manaalan dan.. mangai maararala paarpom apa dana equal aagum
Wow super super..awesome narration sis. Cute cute expressions are extraordinary sis. Soon waiting for honeymoon. Episode sis
Interesting😍😍 super👍👍
Chorme la than Nan unkala lokin panni erukkan daily ulla pona lokin password kakuthu enniku ulla pokava mutiyala comments la ulla poi than ennikku 20ep patichan anakku than prapalama Ella app la mistake sister
Light ah pathikichu 😁