Skip to content
Home » ஐயங்காரு வீட்டு அழகே-39 (முடிவுற்றது)

ஐயங்காரு வீட்டு அழகே-39 (முடிவுற்றது)

அத்தியாயம்-39

Thank you for reading this post, provide your thoughts and give encouragement.

காஞ்சிப்புரம் வரை கேப்-புக் செய்து காருண்யாவையும் குழந்தையையும் அழைத்து வந்தான் ராவணன்.
ரோகிணியோ மடியில் பேத்தியை ஏந்தி வர, நார்மல் டெலிவெரி என்பதால் காருண்யா ஓரளவு வசதியாக சாய்ந்து வந்தாள்.

“ஏன்டா கார் வாங்கலாம்ல? இப்ப பாரு என் பேத்தி வாடகை கார்ல வர்றா” என்று ரோகிணி குறைப்படவும், “அம்மா… உங்களுக்கே நல்லாயிருக்கா? நான் டுவல்த் படிக்கறப்பழே பைக் கேட்டேன். எனக்கு ஜாதக தோஷம் இருக்குன்னு, சீனிவாசன் மாமா சொன்னார்னு பைக் வாங்கவே விடலை‌. நானும் கடுப்புல காலேஜை பெங்களூர்ல பார்த்துட்டேன்.

எங்க கண்ணுக்கு தெரியாம யாரோட பைக்கும் ஓட்ட கூடாதுன்னு‌ கண்டிஷன் போட்டிங்க. என் மனசை நோகடிச்சிட்டிங்க. வேலைக்கு பெங்களுர்ல இருந்தேன். சரி சம்பாத்தியத்துல சேர்த்து வச்சி முதல்ல பைக் வாங்கலாம்னா, உங்க மேலசெண்டிமெண்டா சத்தியம் பண்ணி என்னை பைக் வாங்க விடலை‌. நானா கல்யாணமாகிடுச்சுனு காருவுக்காக உங்களிடம் சொல்லாம கொள்ளாம பைக் வாங்கினேன்.
அப்பவும் ஏன்டா வாங்கினனு போன்லயே சண்டை போட்டிங்க. இப்ப பேத்தி பிறந்து வாடகை கார்ல வர்றானு என்னை குறை சொல்லறிங்க பாருங்க.. இதெல்லாம் டூ மச்.” என்று ஆவேசத்தில் கத்தினான்.

ரோகிணியோ திருட்டு முழி முழிக்க, “பதில் சொல்லுங்க. ஏன் முழிக்கறிங்க” என்று அன்னையே அதட்டினான்.

“டேய்… பேச்சு வாக்குல சீனிவாசன் மாமா தான் உன்னை பைக் வாங்க விடாம வாகன தோஷத்தை சொன்னவர்னு வாயை விட்டுட்டடா. ஆழ்ந்த இரங்கல்” என்று கூறிவிட, ராவணனோ காருண்யாவை காண அவளோ, புஸுபுஸுவென கோபத்தில் திளைத்தாள்.

ராவணன் காஞ்சிபுரம் வரும் வரை திரும்பமலேயே வீட்டிற்கு சென்று எப்படி சமாளிப்போம் என்று ஆழ்ந்த யோசனையில் இருந்தான்.

இடையில் டீ காபி வேண்டுமா?” என்று கேட்க, “நேக்கு எதுவும் வேண்டாம். ஆத்துக்கு வாங்கோ உங்களை வச்சிக்கறேன்” என்று காருண்யா அனலை பொழிந்தாள்.

இதோ அதோ என்று நேரம் கடந்து காஞ்சிபுரம் வந்து சேர, ஆரத்தி கரைத்து வைத்து அமிர்தம் தயாராக இருந்தார்.
கார் வந்ததும் ரோகிணியிடம் ஆரத்தி தட்டை தந்து, ‘ஆரத்தி கரைச்சி கொட்டுடிம்மா‌” என்றார்.

“நீங்களே பேத்திக்கு திருஷ்டி கழிங்கோ” என்று தர, “அச்சோ… நான் இதெல்லாம் செய்ய கூடாது.” என்று ரோகிணியை வலுக்கட்டாயமாக செய்ய வைத்தார்.

காருண்யாவின் தந்தை வீட்டில் குழந்தையோடு இறங்கி வீட்டிற்குள் சென்றாள்.

“அம்மா.. நம்ம வீட்டுக்கு பாப்பா முதல் தடவை வரமாட்டாளா?” என்று ராவணன் ஏக்கமாய் கேட்க, “பக்கத்து பக்கத்து வீடு என்பதால முறையை மாத்த முடியுமாடா? அவ அம்மா வீட்ல தான் போக முடியும். நான் இனி பார்த்துப்பேன்.” என்று ரோகிணி கூடவே சென்றார்.

ஏற்கனவே வீட்டுக்கு தூரம் என்றால் ஒரு சிறிய அறை வீட்டிலிருக்கும். அந்த இடத்தில் காருண்யாவுக்கு என்று சீனிவாசன் பார்த்து பார்த்து பெட்டும் தொட்டிலும் கட்டி சுத்தப்பத்தமாய் வைத்திருந்தார்.

ராவணனோ “ஏன் உன்‌ ரூம்ல ஸ்டே பண்ணலையா?” என்று கொசுவலையோடு இருந்த குட்டி மெத்தையை கொண்டு வந்து வைத்து கேட்டான்.

காருண்யா வாய் திறக்கும் நேரம், “காருண்யா முப்பது நாள் வீட்டுக்கு தூரம்னு இங்க தங்க வைக்கறோம். கயிறு கட்டி பெயர் சூட்டிட்டா அவ ரூமுக்கு போயிடுவா. சாஸ்திரம் சம்பிரதாயம் மீற கூடாது பாருங்கோ” என்று அமிர்தம் கூறவும் ராவணன் காருண்யாவை பார்த்தான்.

“ஆராதனா குட்டி.. அப்பா ரெப்பிரஷ் ஆகிட்டு வந்துடறேன்” என்று குழந்தையோடு பேச, “ஜாதகம் பார்க்கணும். எந்த எழுத்துல நாமம் வைக்கணும்னு சீனிவாசன் சொன்னதும் அந்த எழுத்துல தான் நாமம் சூடணும். அதுக்குள்ள என்ன ஆராதனா. அப்படியெல்லாம் கூப்பிடாதேள்” என்று அறிவுரைக்க, ராவணனோ, அமிர்தத்தை பார்த்து காருண்யாவை காண, ரோகிணியோ நைஸாக நழுவ, சீனிவாசனோ “அம்மா‌.. செத்த வாங்கோ.” என்று அழைத்து சென்றார்.

ராவணன் பெருமூச்சு விட்டபடி, “வயிற்றுல இருந்தப்பவே ஆராதனானு பெயர் வச்சி பேசிக்கிட்டோமா இல்லை. அதென்ன உங்க பாட்டி ஜாதகம் பார்த்து எந்த எழுத்துல வருதோ பெயர் வைக்கணும்னு சொல்லறாங்க‌. என் குழந்தைடி இவ‌. நான் பெயர் வைப்பேன்.” என்று எகிறினான்.‌

“இங்க பாருங்கோ… ஏற்கனவே என் தோப்பனாரை திட்டியிருக்கேள். அதுவும் என்னிடமே. அதெப்படி… எவனோ ஒரு அரைவேக்காடான ஐயர். உங்க ஜாதகப்படி வாகன தோஷம் இருக்குன்னு சொன்னதா என்னிடம் சொல்லியிருப்பேள்.
என் தோப்பனார் அரைவேக்காடா?” என்று ஆரம்பித்தாள்‌.

“நான் உங்கப்பானு உன்னிடம் மென்ஷன் பண்ணலையே?” என்றான் மீசையில் மண் ஒட்டாதபடி..‌

“ரோகிணி மாமி கார்ல சொன்னாளே” என்று கேட்டாள்.

“அதெல்லாம் பழைய மேட்டர். எப்பவோ சொன்னதுக்கு இப்ப சண்டை இழுக்காத. என் பொண்ணுக்கு என் இஷ்டப்படி தான் பெயர் வைப்பேன்” என்றான்.

“ஆஹ்.. ஆராதனா என் பொண்ணும் தான். நானும் தான் பெயர் வைப்பேன்.” என்றாள்.

“என்னனு?” ஆராதனாவுக்கு ஆராதனானு வைப்பியா?” என்று கேட்டதும், “இல்லை… வேற பெயர் வைப்பேன்.” என்றாள்.

“வம்பு பண்ணற பார்த்தியா.. இந்த இடத்துக்கு வந்ததும் என்னை எதிர்த்து பேசணும்னு தோன்றுது.” என்று சண்டைப்பிடிக்க, “உள்ள இருக்காங்களா… பேத்தியை பார்த்துட்டு வந்துடறேன் சீனு” என்று சிவராம் குரல் கேட்க, சண்டை தடைப்பட்டது.

“என்னம்மா.. பிரயாணம் சௌகரியமா இருந்ததா?” என்று சிவராமன் கேட்டு குழந்தையை கவனித்தார்.
“கஷ்டமில்லாம இருந்தது மாமா” என்று மெதுவாக பேசினாள்.

“அம்மாடி.. குட்டிம்மா.. தாத்தா வந்துயிருக்கேன் பாருங்க… ஏன் கண்ணை மூடிட்டு இருக்கிங்க? தூக்கம் வருதா. இல்லை.. உங்கப்பா அம்மா போடற சண்டைக்கு பயந்து தூங்கறிங்களா?” என்று கொஞ்சியபடி கேட்டார். குழந்தை கண் திறவாமல் சிரிக்க, அச்சோ அழகா சிரிக்கா என்‌ பேத்தி.” என்று பூரித்தார்.

“போடற சண்டை உங்களுக்குள்ள இருக்கணும். வெளியே கேட்க கூடாது.” என்று கூறியவர், மருமகளிடம், “ஐயா… கோபத்துல இப்பவரை வீட்டுக்கு வந்து தங்கறதில்லைம்மா. உன்னிடம் முதல்லயே சொல்லலாம்னா. ஜாதகம் பார்த்து சொன்னதே உங்கப்பா என்பதால தவிர்த்தோம். இப்ப பிடிச்சு லெப்ட் ரைட் வாங்கு. வீட்டுல தங்காம, சனி ஞாயிறு கூட காஞ்சிபுரத்துக்கு தலைகாட்டாம, பெத்தவங்களை விட அப்படியென்ன பைக் முக்கியம்னு விளாசு.” என்று நகர்ந்தார்.

“போட்டு கொடுத்துட்டு போறிங்க” என்று ராவணன் போலியாய் முறைக்க, “பெத்தவனோட வலிடா. எத்தனை முறை என் பொண்டாட்டி, உன்னை வீட்டுக்கு வான்னு சொன்னதுக்கு அசால்டா வரமாட்டேன்று அழவச்சவன் தானடா நீ. இது எங்க டர்ன். உன் பொண்டாட்டிகிட்ட மாட்டிக்கிட்டு முழி.” என்று சென்றார்.‌

காருண்யா புஸுபுஸுவென மூச்சு விட, “எனக்கு கசகசன்னு இருக்கு. நான் குளிக்க போறேன்.” என்று ஓடினான்.‌

“லீவுன்னா குளிக்க அழவுற ஆளு நீங்கோ. இப்ப வர்றப்ப தானே குளிச்சேள். எங்க ஓடறேள். நின்னு எனக்கு பதில் சொல்லுங்கோ” என்று கூப்பிட, காதில் வாங்காமல் வெளியேறியிருந்தான்.

“சத்தமா கத்தாதேடி. வயிற்றுல கேஸ் பார்ம் ஆகும். சத்தமில்லாம பேச பழகு. எங்கிருந்து வந்தது ஆம்படையானை நிற்க வச்சி கேள்வி கேட்கற தைரியம்” என்று அமிர்தா ராவணனுக்காக ஆதரவாய் பேசினார்.

‘பாட்டி அவனுக்கு பிடிக்காத ஜீவனே நீங்க தான். தெரிந்தா ஆதரவா பேசுவேளா.’ என்று மனதில் மறுகினாள்.

குளித்து முடித்து ரோகிணி அன்னை கையால் சாப்பிட்டு குழந்தையை பார்க்க வந்தான் ராவணனீ. ஆனால் அடிக்கடி குழந்தையை பார்க்க அமிர்தா தவிர்க்க, இரண்டு நாள் அதை காதில் வாங்காமல் குழந்தையை கொஞ்சினான்.  

“நீங்க செத்த வெளியே போங்கோ. பாப்பாவுக்கு அமுதம் புகட்டணும்.” என்றாள் மூன்றாம் நாள்.
“சோ வாட்.. நீ கொடு” என்று குழந்தையின் பாதத்தில் முத்தமிட்டு அருகேயிருக்க, “நேத்தே பாட்டி ஆம்படையான் எதிர்க்க குழந்தைக்கு அமுதம் கொடுக்க கூடாதுன்னு திட்டினா.” என்று கூற, “ஏன்… உங்க பாட்டி ஓவரா போறாங்க.” என்று மெதுவாக பேசினான்.‌

“பச் நீங்க பேசுவதை விட குறைச்சி தான் பேசறா.” என்றாள் காருண்யா.

ராவணன் எழுந்து வெளியேறிவிட, அவன் சென்னை திரும்ப காருண்யா வெளியே வந்து கூட வழியனுப்ப தடைவிதித்தார்.

ராவணனோ போனில் குடும்பம் நடத்தும் முடிவோடு சென்றான்.‌

போனில் அரை மணி நேரம் பேசினால், அதில் பதினைந்து நிமிடம் சண்டை. பத்து நிமிடம் கொஞ்சல் பத்து நிமிடம் குழந்தையின் சிரிப்பு அல்லது அழுகை என்று சென்றது.
காருண்யாவை அமிர்தம் தான் கூடவே பார்த்துக்கொண்டார்.‌ சற்று தள்ளாட்டம் கொண்டாலும் சமைக்கும் பொழுது ஒரு சேரை அடுப்படியில் போட்டு கஷ்டப்பட்டு பத்திய சாப்பாடு எல்லாம் செய்து பேத்தியையும் பேத்தியின் பூஞ்சிட்டையும் பார்த்துக் கொண்டார். என்ன தான் ரோகிணி சமைத்து தந்தாலும் பழைய ஆளின் பத்திய சாப்பாடு தனி தானே. குழந்தையை ரோகிணி, சிவராமன், சீனிவாசன், அமிர்தம் என்று சீராட்டி பாராட்டி பார்த்துக்கொள்ள காருண்யா ஓய்வில் இருந்தாள். உடலை கவனித்து கொண்டாள்.

சென்னை வீட்டில் ராவணன் மட்டும் என்பதால், சாரதா அக்கா காலையில் சமைத்து வைப்பார். மாலையில் இட்லி ஏதாவது சட்னி செய்துவிட்டு விரைவாக பாத்திரம் கழுவி சென்றிட தனியாக மூன்று மாதம் உலாத்தினான்.‌

அதன்பின் தனிமையை விரட்ட, குழந்தைக்கு ‘ஆராதனா’ என்று பெயர் சூட்டி அழைத்துக் கொண்டான்.
ரோகிணி சிவராமன் கூடவே பார்த்துக் கொள்வதாக வந்து சேர்ந்தார்.

சீனிவாசனும் முதல் முறை கூடவே வந்தார். பிறகு பேத்தியை‌ மகளை விட்டுவிட்டு திரும்பிவிட்டார்.

அமிர்தம் மட்டும் சதா “நேக்கு திடகாத்திரமா உடம்பு இருந்தா நானே என்‌ கொல்லு பேத்தியை பார்த்துப்பேன்” என்று புலம்பினார்.

சென்னை வந்ததும் ரோஸ்லின், ராகவி, இந்து கூடவே ராவணன் டீம் மெம்பர் என்று வரிசையாக வந்து பார்வையிட்டு பரிசு பொருளை நீட்டினார்கள்.

பரிசை மட்டும் கொடுத்து சென்றால் நிம்மதியாகியிருக்கும். “லைட்டா உடம்பு போட்டுட்ட காரு” என்று ரோஸ்லின் கூற, ராகவியும் அடுத்த நாள் வந்து அதையே உரைத்திட, அதற்கடுத்த நாளில் ராவணன் டிவி பார்க்கும் போது, “டிவில மேட்ச் போகுது. பாதி டிவியை நீயே மறைக்கற கொஞ்சம் தள்ளு” என்று கத்தினான்.

"நான் பாதி டிவியை மறைக்கறேன்னு சொல்றேள்" என்று அடுத்து ஆரம்பிக்க, "ஆமா கொஞ்சம் குண்டாயிட்ட தள்ளு‌" என்றான். அவனுக்கு கிரிக்கெட்டில் இருந்த ஆர்வம் மனைவியின் முகபாவனையை மறந்துவிட்டான். 

“என்னை குண்டுன்னு சொல்றேளா? நான் ஸ்லிம்மா அழகா நன்னா தான் இருந்தேன். குழந்தை பெத்ததும் குண்டாகிட்டேன். எல்லாத்துக்கும் காரணம் நீங்க தான்” என்று டிவியை அணைத்துவிட்டு அணத்த துவங்க, ‘ஏய்… மேட்ச் போகுது டிவியை போடுடி” என்று கூற, காருண்யா மறுக்க, “டிவியை அவனாக எழுந்து போட்டான்.

காருண்யாவோ ரிமோர்ட்டை எடுத்து தூரயெறிய, ராவணனோ அன்னையை காண, “எனக்கு எதுவும் தெரியாது‌ப்பா. நான் என் பேத்தியை பார்த்துக்க வந்தேன். உங்க புருஷன் பொண்டாட்டி சண்டையை நீங்களே பார்த்துக்கோங்க” என்று நழுவினார்.

கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டமுமாய் ராவணன் காருண்யா வாழ்க்கை இனிதாய் அப்படி தான் நகர்ந்தது. இங்கே யாரும் சண்டை போடாத கொஞ்சிக்கொண்டே கட்டிக்கொண்டே இருக்கும் கணவன் மனைவி இருப்பது நாடகத்தன்மையே.

After 6 Years…

“அப்பா… நேக்கு பஸ்ட் பிரைஸ்” என்று மடிசார் அணிந்த குட்டி தேவதை அழகாய் டிராபியும் சர்டிபிகேட்டும் எடுத்து கொண்டு தத்தி நடந்து வந்தாள்.

“ஓ… என்ன போட்டி வச்சா. என் ஆரு குட்டி எதுல பஸ்ட் பிரைஸ் வாங்கினா. அம்மா..‌ இங்க பாருங்கோ.. என் குழந்த பஸ்ட் பிரைஸ். மடிசார்ல அந்த ஆண்டாள் மாதிரி இருக்கா.” என்று ஆராதனாவை துக்கி முத்தம் வைத்து கேட்டான் ராவணன்.

“ஸ்லோகம் சொன்னேன். பஸ்ட் பிரைஸ்” என்று துள்ளி குதித்தாள்.

ராவணன் முகம் அப்படியே காருண்யா பக்கம் திரும்பியது. “நீ பாட்டியோட விளையாடிட்டு இரு. அப்பா அம்மாவோட பேசிண்டு வர்றேன்” என்று குழந்தையை அனுப்பினான்.

“ஏன்டி என் குழந்தையை பக்திமானா மாத்தற. வளர்ந்ததும் சாமியை பத்தி அவ என்ன ஒபினியன் வச்சியிருக்காளோ, அதுபடி இருக்கட்டும்னு நமக்குள்ள பேசி முடிவெடுத்தது தானே.” என்று இடுப்பில் கைவைக்க, “இங்க பாருங்கோ.. எல்லாம் பேசி வச்சி எந்த வாழ்க்கையும் வாழ முடியாது. நேக்கு என்ன பழக்க வழக்கம் வருதோ அதை என் குழந்தைக்கு சொல்லி தருவேன். நீங்க மட்டும் போன வாரம் என் குழந்தைக்கு லாலிபாப் வாங்கி தந்தேளே. நான் சண்டை பிடிச்சதுக்கு என்ன கத்து கத்தினேள். இப்ப மட்டும் என்னவாம்?” என்று பொரிந்தாள்.

ராவணன் படித்து படித்து ஆராதனாவிடம் சிக்கன் லாலிபாப் சாப்பிட்டதை அம்மா காருண்யாவிடம் சொல்லக்கூடாதென்று கூறி அழைத்து வந்திருக்க, அவளோ “லாலிபாப் நல்லா மொறுமொறுன்னு இருந்தது.’ என்று கூற வகையாய் ராவணன் மாட்டினான்.‌

அவன் ஒரு பக்கம் அவனுக்கு பிடித்தது போல வளர்க்க, காருண்யா மட்டும் சோடை போவாளா? அவளும் அவள் இஷ்டப்படி வளர்த்திட முடிவெடுத்தாள். இருவருக்குள் நடுவே ஆராதனா பாடு தான் திண்டாட்டம் என்றாலும், இந்த காலத்து குட்டிகள் அதையெல்லாம் பெரிதாக கண்டுக்கொள்ளாமல் தந்தை இருந்தால் தந்தையிடமும். தாய் இருந்தால் தாயிடமும் சமத்தாக மாறி ஒப்பேற்றிக் கொண்டாள்.

ராவணன் விட்ட சண்ஞையை தொடர்ந்தான். “நாராயண மந்திரம், விஷ்ணு சகஸ்ரநாமம், ராமாயண ஸ்லோகங்கள், ஆண்டாள் பாசுரங்கள், அப்பறம் அதென்ன… ஆஹ் ஸ்ரீபாஷ்யம், கீதைபாஷ்யம்,
சந்தியா வந்தனம், இதெல்லாம் இந்த வயசுல சொல்லி தந்து என் பொண்ணை டார்ச்சர் பண்ணற நீ” என்று ஆரம்பிக்க, “ஆஹ்.. காவாலையா.. காவாலையா..னு அப்பாவும் மகளும் ரீல்ஸ் பண்ணற மாதிரி கண்ட கருமத்தை கூட தான் என் மக மனசுல புகுத்தறேள். அதுக்கு பகவான் மந்திரம் சொல்லி தர்றதுல தப்பில்லை.
இந்த ஸ்லோகம் எல்லாம் இறைவனை சேவிக்க மட்டுமில்லை. மனஅமைதியும் தரும்” என்றாள்.

“அது உன் நம்பிக்கை” என்று சண்டைகள் வலுக்க, வெளியே ஆராதனா ரோகிணியிடம் “ஏன் பாட்டி… அப்பா அம்மா காதலிச்சு கல்யாணம் பண்ணிட்டதா என் பிரெண்ட்ஸ் எல்லாம் சொல்லறா. பேசாம நீங்களாம் சேர்ந்து லவ்வை பிரிச்சி விட்டுயிருக்கலாமே. ஏன் அவாளுக்கு நீங்களே கல்யாணம் பண்ணி வச்சேள்? பாருங்கோ வாரத்துக்கு இரண்டு சண்டை போடுறா” என்று குழந்தை குறைப்பட்டுக்கொள்ள, “என்னடிம்மா பண்ணறது… அடிச்சதுக்கு ஒன்னு பிடிச்சதுக்கு ஒன்னுன்னு உங்கம்மா வயிற்றை தள்ளிட்டு நிற்கறா. நாம குறுக்க போகாம இருந்தா போதும். அப்பா அம்மா சண்ஞை அவாளே சரிப்பண்ணிப்பா. நீ பேசாம நில்லு. திருஷ்டி சுத்தறப்ப பேசக் கூடாதோனோ” என்று அமிர்தம் குறைப்பட்டு கொண்டாலும் கொல்லு பேத்திக்கு திருஷ்டி கழிக்க, அங்கே மீண்டும் ரோகிணி, சிவராமன், சீனிவாசன் என்று வந்திருந்தனர்.

இதோ இப்பவோ அப்பவோ என்று ராவணன் காருண்யாவிற்கு இரண்டாவது குழந்தை பிறக்க போகின்றதே.

ஐயங்காரு வீட்டு அழகை ராவணனே ஆராதிக்கட்டும்.

-சுபம்

-பிரவீணா தங்கராஜ்.

ஒவ்வொரு கதையும் எனக்கு ஒவ்வொரு பீல் தரும். சில கதை எழுத வருமா வராதா என்ற எண்ணத்தை தாண்டி எதையும் ஒரு கை பார்க்கலாம்னு வர்ற எண்ணத்துல சில கதை எழுதியது உண்டு. அப்படி சில கதைகள் முதல்ல எழுதியது டைம் டிராவல். அதர்வா சமந்தா மற்றும் இரண்டு ஜோடி வச்சி காமெடி கலந்து ஜாலியா எழுதியது. நெகட்டிவ் கமெண்ட்ஸ் ஒன்று வந்தாலும், நிறைய வாசகர் படிச்சு நல்லாயிருக்குன்னு சொன்ன கதை. கிண்டலில் கதை போட்டப்ப முதலில் பாஸிடிவ் ரிவ்யூ வந்த கதையும் அதுதான்.
  அதற்கடுத்து நதி தேடும் பௌவம். என்ன தான் அப்பாவின் சொந்த ஊர் எட்டயப்புரம் பக்கம் கீழ்யிரல் என்றாலும், என் கணவர் ஊர் திருச்சந்தூர் பக்கம் என்றாலும், நான் பிறந்து வளர்ந்தது சிங்கார சென்னை மட்டுமே. சென்னை பாஷை பேசியது இல்லை. ஆனா நிறைய கேட்டிருக்கேன். இதே ஊர்ல இருக்க சென்னை பாஷையில் நாயகன் நாயகி பேசுவதை முயற்சி பண்ணி எழுத முடியாதானு யோசித்து எழுதிய கதை அது. முக்கோண காதல் கதை. குருவிகூடு மகா இருவரின் காதல் இயல்பா இருக்க விரும்பினேன். பட்டினப்பாக்கம் முன்ன காலையில் மாலையில் விசிட் அடிச்சு எழுதிய கதை. சைட்ல கதை இருக்கு வாசிக்காதவங்க வாசிங்க‌.

அந்த வகையில் ஐயர் பாஷை கதை எழுத வேண்டும் என்று ஆசை. என் ஸ்கூல் பிரெண்ட் ஐயர் பொண்ணுங்க இருக்காங்க. பேசறப்ப என்னை விட லோக்கல் ஸ்லாங் வரும். ஏன் ஐயர் பாஷையில பேச மாட்டேங்கறனு கேட்டா, எல்லாம் கிண்டல் பண்ணுவானு சொல்லுவா. சௌந்தர்யா, ப்ரியா, என்ற இரண்டு பேர் ஐயர் பொண்ணுங்க நட்பு பள்ளி பருவத்தில் உண்டு. சோ ஐயர் பாஷை கேட்பது புதுசில்லை.

அந்த அனுபவங்கள் வைத்து, நானா தான் கதை எழுதியிருக்கேன். யாரின் உதவியின்றி.
ஒருவர் உங்க எழுத்து நட்புல நிறைய இந்த ஸ்லாங் பேசுவாங்களே, அவங்களில் யாராவது உதவியிருப்பாங்களானு கேட்டுயிருந்திங்க. அதெல்லாம் இல்லைங்க. என் எழுத்து ஒவ்வொன்றும் எனக்கானது. மற்ற எழுத்தாளரிடம் எழுதுவதற்கு உதவி கேட்பது எனக்கு பிடிக்காது. காபியும் அடிக்க வராது. எனக்கு வருவதை எழுதிட்டேன்.

அதோட ஆள் பார்த்து, பார்ஸஷியாலிட்டி பார்த்து, சைட் பார்த்து படிக்கறது இங்க நிறைய.
  நமக்கு யாரிடமும் தண்மையா பேச வராது. வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு. கட்டன் ரைட்டா பேசியே பழகிடுச்சு.
  வாசிக்கறவங்க வாசிக்கணும்னு நினைக்கறவங்க வருவாங்க. அது போதும். நான் வியூஸையோ மணியையோ என்னைக்கும் எதிர்பார்த்து எழுத மாட்டேன். எனக்காக எழுதறவ நான். வாசகர் பார்வைக்கு வைக்கின்றேன். அவ்ளோ தான்.

உழைப்புக்கு பலன் உண்டு
எது நமக்குன்னு இருக்கோ அது கிடைக்கும்.
எழுதறது நல்லதா இருக்கணும். யார் மனதையும் கிளர்ச்சியூட்டும் விதமாக எழுதக்கூடாது. இதெல்லாம் எழுத்தில் கடைப்பிடிச்சிட்டு தான் இருப்பேன்.
  சரி போரடிக்கறேன். வாங்கோ நம்மாத்து கதை வாசிக்க வாசிச்சிங்கலா. காருண்யா ஐயர் பொண்ணு. ராவணன் அப்படியில்லை.
இவா சைவம். அவா அசைவம்.
  எப்படியெல்லாம் சிங்க் ஆகி முட்டி மோதி கதை போகுதுன்னு பார்த்தேளா.
கமெண்ட் போட விருப்பம் இருந்தா கீழே பதிவிடுங்கோ‌. கதை கூடவே வாசித்தவா முகநூலில் ரிவ்யு கொடுத்தாலும் ஹாப்பி. இல்லைன்னாலும் ஹாப்பி. எதையும் மைண்ட்ல ஏற்காத ஆளு நான். அடுத்த கதை எழுத போயிடுவேன். அதையுமா வாசிக்க வாங்க. 👍🏻

ஹாப்பி ரீடிங் அன்புடன் நன்றியுடன்.

26 thoughts on “ஐயங்காரு வீட்டு அழகே-39 (முடிவுற்றது)”

  1. Ravan Karunya oda life ipadi than konjam kadhal konjam mothal nu pogum athuku onnum panna mudiyathu avanga ponnu yae ivanga la kalaikira alavuku iruku ivanga fight aana athuvum nalla than iruku

    1. இன வேறுபாட்டில் நடக்கும் திருமணத்தில் ஏற்படும் சச்சரவுகள் எதார்த்தமா சொல்லி இருக்கிங்க. கதை அருமை.

  2. Dharshinipriya

    Super sis semma story 👍👌😍 romba azhagana characters eppovum husband and wife konjam kaadhal konjam sandai nu dhan erupanga adha yedharthama azhaga solliyirukeenga semma pa🥰💞♥️❤️ endha story konjam en life kum connect agum sis because enga veetlaiym naan veg because my mom brahmin en husband nonveg so naanga love marriage adhanala naan avarukaga senji kudupen but touch panna maaten sapida maaten pasangalum avanga eshtam dhan nu vititen no restriction so enaku endha story padikumbodhu neraiya connect achu pa😊 seekirama next story podunga sis eagerly waiting 😎

  3. M. Sarathi Rio

    ஐயங்காரு வீட்டு அழகே..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 39 Final)

    எப்படியோ, முட்டிக்கோ கட்டிக்கோன்னே அடுத்த குழந்தைக்கும் அடித்தளம் போட்டாச்சு போல. ஆனா இந்த சண்டை இவங்க ரெண்டு பேருக்குள்ள இனி எப்பவும் இருக்கும் தான். சாதாரணமா ஒரே வகையறா பார்த்து கல்யாணம்  பண்ணவங்களுக்குள்ளயே அடிச்சுக்கோ பிடிச்சுக்கோன்னு இருக்கிறச்ச, ராவணன் காருண்யா அதர் ரிலிஜன் ஆச்சே.. அப்பசண்டையும் சச்சரவும் இருக்காதா…? அதோட சமாதானமும் இருக்கும் தானே.

    இனி அப்படிதான்ங்க லைஃப் போகும். அதோ ஆராதனாவும் அப்பாவுக்கு ஏத்த மாதிரியும், அம்மாவுக்கு ஏத்த மாதிரியும் நல்லாவே ஆமா போட கத்துக்கிட்டா. புழைக்கத் தெரிஞ்ச புள்ளை.

    எனிஹவ், வழக்கம் போல ஐயர் வீட்டுப் பெண், ஐயங்காரு வீட்டு பையன்னு ரெண்டு பேரையும் இணைச்சு வைச்சு ஒரு கலக்கு கலக்கிட்டாங்க நம்ம 

    எழுத்தாளர் பிரவீணா அவர்கள் 

    வாழ்த்துக்கள் சகி,..!  பாராட்டுக்கள்..!
    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  4. Wow fantastic ending sis especially iyar slang awesome while reading. Beautiful husband and wife karu and ravana. Another diamond to your crown sis. Excellent story with cute ending.

  5. Yeppadiyo konjam Ishtar konjam katam maathiri.. aanalumrendu pulla naduvula.. nee nadthu raja.. nice story. Even naanume mathavanga kitta pesumbothu Iyer baashai varathu..

  6. Kalidevi

    Wow superb ena tha rendu perum sanda potalum apram samadhanam antha edathula iruka thane seiym atha samadhanam panni adutha kolanthaiku ready panitanga karu ravanaaa vum . Ippadiye unga sandai irunthalum rendu per life um nalama poguthe athula antha kutty um avaluku etha mari alaga nadanthukura cute .

    Vazhakam pola unga style la oru different kathai sisy unga kathai padicha e oru Mari stress free ah irukum ithama irukum athe mari tha intha kathium .

    வாழ்த்துக்கள் சகோ 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻💐💐💐💐💐💐💐💐💐

  7. Super super super super super super super super super super super super ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💥💥💥

  8. வணக்கம் அக்கா, நான் உங்கள் எழுத்துக்களின் ரசிகை நீங்க எழுதுற ஒவ்வொரு கதையுமே ரொம்ப பாசிட்டிவா இருக்கும் படிக்க ஆரம்பிச்சா நிறுத்தவே முடியாது படிச்சு முடிச்சே ஆகணுன்ற மாதிரி ஒரு பீல் கொடுக்கும் ஐயங்கார் வீட்டு அழகே ரொம்ப அருமையா இருக்கு அக்கா. Keep on writing akka…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *