அத்தியாயம்-15
சார்லஸ் தான் ரிஷியை அடிக்க விடாமல் இஷானின் கையை பிடித்து நிறுத்தினான்.
“அவங்க சொல்லறது உங்களால் தாங்கிக்க முடியலை. அம்மா தங்கையை அடிக்க முடியாது, அந்த கோபத்தை தம்பி கிடைக்கவும் கை ஒங்கறிங்களே.” என்றதும், இஷானோ, “அவங்க என்ன பேசறாங்கன்னு தெரியுதா?” என்றான் காட்டமாக.
சார்லஸோ “உங்களுக்கு அவங்க அம்மானா கரெக்டா தான் பேசறாங்க சார்.” என்றான் புன்னகையுடன்.
இஷான் புருவம் சுருக்க, “ஒரு அம்மாவுக்கு மத்தவங்களை பத்தி கவலையில்லை சார். அவங்க பையனுக்கு நல்லது நடக்கணும். அது மட்டும் தான் குறிக்கோள். உங்க ஓய்ஃப் குழந்தையோட இறந்தது உங்களுக்கு தெரிந்து வாழ்க்கையை சலிப்போட வாழ்ந்திருப்பிங்களா? அதை பார்த்து ஒரு கல்யாணம் பண்ண சொல்லி இவங்க கட்டாயப்படுத்தியிருப்பாங்க.
உங்க கேரக்டரே சொல்லும் பிடிவாதம் முரட்டு ஆளுனு. மேரேஜும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்னு இருந்திருப்பிங்க. இப்ப.. உங்க குழந்தை உயிரோட இருக்கானு தெரியவும், புயல் மாதிரி வந்து அவளை தூக்கிட்டு வந்துட்டிங்க.
உங்க குழந்தையை வளர்த்த துகிராவை பத்தி யோசித்திங்களா? அவ உங்க மனைவியோட சாடையில் இருக்கா. துகிராவை பார்க்கும் போது இங்க அவங்க இருந்த போது ஒரு நேரம் இல்லைன்னாலும் ஒரு நேரம் உங்க பார்வை உங்க மனைவின்னு பார்த்திருக்காது?” என்று கேட்க, துகிரா சிலை போல நின்றாள்.
“ஸ்டாப்பிட்… இங்க இருக்கற எல்லாருமே பைத்திய மாதிரி பேசாதிங்க. துர்கா வேற துகிரா வேறனு என் மனசுக்கு தெரியும்.” என்றான்.
“சார்.. இரண்டு பேரும் வேற வேறனு தெரியும். ஆனா ஒரு நேரமாவது அவங்க உங்க மனைவின்னு தோன்றி உங்க இயல்பான வாழ்க்கையில் ஒரு செகண்ட் பார்க்கலைன்னு சொல்லுங்க” என்றான்.
இஷானோ பிடிவாதமாக, “இல்லை” என்றான்.
“ஓகே சார்.. நீங்க அப்படியிருக்கலாம். ஆனா… உங்கம்மா அப்படி யோசிக்க முடியாதே. நீங்களும் துகிராவும் அமுல்யாவோட சேர்ந்து நடந்து வந்தா, அவங்க மனசுல உங்களை முழு குடும்பஸ்தனா தான் பார்க்க தோனும். அவங்க அதை தான் இப்ப சொல்லறாங்க. இதுல தப்பில்லை.” என்றான் தோளைக்குலுக்கி சார்லஸ்.
இஷானோ “என்ன சார் நீங்க விரும்பிய பொண்ணை கழட்டி விட பிளான் போட்டிருக்கிங்களா? அதான் என்னோட கோர்த்து விடறிங்களா?” என்றான்.
சார்லஸோ லேசாய் சிரித்து, வேதனையோடு துகிராவை பார்த்து, “இந்த நிமிஷம், அமுல்யா மட்டும் துகிராவை அம்மானு சொந்தம் கொண்டாடாம, இஷான் அப்பா மட்டும் போதும்னு முடிவெடுத்தா, திரும்பி போறப்ப, துகிராவை கூட்டிட்டு தான் போவேன் சார். ஏன்னா துகிராவை எனக்கு பிடிக்கும்.
ஒரு விதவையா, ஒரு குழந்தைக்கு அம்மாவா தான் அவளோட அறிமுகம். அப்பவே விரும்பினவன். இப்ப கல்யாணமாகத பொண்ணுனு தெரிந்தும் விட்டு போக நான் மடையன் இல்லை. ஆனா மனசாட்சி உள்ளவன்.
எனக்கு அமுல்யாவை குழந்தையிலருந்து தெரியும். குட்டியா துகிரா கையில வச்சிட்டு எங்க வீட்ல, என் சிஸ்டர் மெர்ஸியை பார்க்க வந்ததிலருந்து, அப்ப எல்லாம் பச் எவ்ளோ கியூட்டான குழந்தை அப்பா இல்லாம வளருதேனு பாவமா இருந்தது. அப்பாவுக்கு அப்பாவா அம்மாவா துகிரா பார்த்து பார்த்து வளர்த்தப்ப, ‘என்ன பொண்ணுயா, தனியாளா வளர்க்குறா’ என்ற ஆர்வம் எழுந்தது.
இங்க வருவதுக்கு முன்ன, ஒரு பத்து மாசம் இருக்குமா துகிரா? நான் மெர்ஸியிடம் உங்களை காதலிப்பதா சொல்ல, அவ உன்னிடம் அதை தெரிவித்து, உன் கருத்தை கேட்டு, நடுவுல என் பேரண்ட்ஸ் ஒரு குழந்தைக்கு அம்மாவா இருக்கறவளை கல்யாணம் பண்ணப் போறியானு கேட்டு சண்டை பிடிச்சு, ஒருவழியா அவங்களை கன்வின்ஸ் செய்து, துகிராவும் டைம் கேட்டு, ஏழு மாதம் முன்ன அமுல்யாவிடம் பேசி பழகி, ‘இவரை நான் மேரேஜ் பண்ணினா உனக்கு அப்பா கிடைப்பார்’னு நீ அவளிடம் கேட்டு, அவ இரண்டு மாசம் முன்ன சம்மதிச்சு, எல்லாம் ஸ்மூத்தா போனது.
புயலா இவர் வந்து குழந்தையை தூக்கிட்டு போனதும், நானும் மெர்ஸியும் இங்க வந்தப்பிறகு தான் துகிராவுக்கு கல்யாணம் ஆகாத பொண்ணுன்னு தெரிய வந்தது. நல்ல தோழி.. மெர்ஸி.” என்றவன் இஷானிடம் திரும்பி “துகிரா கல்யாணமாகாத பொண்ணு, அமுல்யா அவ அக்கா பொண்ணுனு தெரிய வந்து எங்க வீட்ல மார்னிங் குயிக்கா மேரேஜ் நடத்த எவ்ளோ ஆர்வம் எங்கம்மாவுக்கு.” என்றவன் துகிராவை பார்த்து, “சாரி துகிரா… அந்த இடத்தில் நான் எதுவும் பேசலை. பிகாஸ் ஒரு அம்மாவா எங்கம்மா பேசியது சரி. இதோ பைரவி அம்மா இஷானுக்காக பேசறாங்களே அது போல.
பட் இப்ப நான் பேசலைன்னா… ஏதோ தப்பா போயிடுமோனு தோன்றுது.
பார்றேன்… நான் லவ் பண்ணறது உன்னை. ஆனா உன்னை இவருக்கு மேரேஜ் பண்ண இவங்க பேசறாங்க. அதுக்கு சப்போர்ட் பண்ணறேன்.” என்றவன் குரல் வேதனையை அடக்கி, “உன்னை கல்யாணம் செய்தா அமுல்யாவுக்கு நல்ல அப்பாவா இருப்பேன்னு தான் முடிவெடுத்தேன். ஆனா உன்னோட உயிர் அமுல்யாவா இருக்கும் போது, அவ எதிர்பார்க்கிற அப்பா தான் அவளுக்கு வேணும். நான் இல்லை. அவளுக்கு அம்மாவா நீ தான் இருக்கணும்னா… நீ இஷானை மேரேஜ் பண்ணறது தான் பெஸ்ட் துகிரா” என்றவன் கண்கள் கலங்கி நின்றது.
“அங்கிள்” என்று படியில் அமுல்யா வேகமாய் வந்து சார்லஸை கட்டிப்பிடித்து, “தேங்க்ஸ் அங்கிள்.” என்றாள்.
அமுல்யாவை கட்டிப்பிடித்து கண்ணீரை கைக்குட்டையால் துடைத்தவன், இஷானை பார்த்து, “உங்க பொண்ணோட மனசை ஒரு தடவையாவது ஜெயித்து, ஆத்மார்த்தமா அப்பானு கூப்பிட வைக்க ரொம்ப ட்ரை பண்ணினேன். துகிராவிடம் சார்லஸ் அப்பானு சொன்னவ, என்னை அப்பானு கடைசி வரை சொல்லலை. இப்ப ஆத்மார்த்தமா அங்கிள்னு கட்டிப்பிடிச்சிருக்கா. நான் அன்பால ஜெயிச்சிட்டேன் சார். உங்க பொண்ணிடம் நீங்க தோற்காதிங்க. அவ ஆசைப்பட்டதை செய்ய பாருங்க” என்றவன், அமுல்யாவின் உச்சியில் முத்தமிட்டு, தன்னோடு இறுக்கி கொண்டான்.
அதன்பின் அவ்விடம் நூலகம் போல அமைதியில் கழிய, “தம்பி சாப்பிட வாங்க. நேரமாச்சு. நீங்க பிரயாண களைப்போட வந்திருப்பிங்க. இரண்டு பேரும் குளிச்சிட்டு வாங்க. ரிஷி உன் ரூம்ல அழைச்சிட்டு போ” என்று கூற, “வாங்கண்ணா.” என்று அழைத்து சென்றான்.
“இதான் பாத்ரூம், உள்ள புது சோப் யூஸ் பண்ணிக்கோங்க.” என்றதற்கு கையில் மினி ஹமாம் சோப்பை காட்டினான் சார்லஸ்.
“சரிங்கண்ணா… குளிச்சிட்டு வாங்க” என்று கூற ரிஷியை நிறுத்தி, “போன தடவை என்னை வில்லன் மாதிரி லுக் விட்ட. இப்ப என்ன மரியாதையா வாங்க அண்ணானு?” என்று கேட்க, “நீங்க துகிரா அண்ணியை விரும்பியவர். மனோதத்துவ டாக்டர். அமுல்யா மனசை புரிந்துக்கொண்டு அழகா உங்க காதலை விட்டு தந்து இஷான் அண்ணாவுக்காக பேசினிங்க. ரியலி… இதுப்போல பேச, சப்போர்ட் பண்ண ஒரு மனசு வேண்டும். அது உங்களுக்கு இருக்கு. அப்ப மரியாதை தரணும் தானே” என்று வியாக்கானம் பேசினான்.
“நான் சொன்னதால உங்க அண்ணா கேட்பாருனு நினைக்க? உங்க அம்மா சொல்லியே கேட்கலை. ம்ம்ம் ஆனா உங்க அண்ணா இஷான் அமுல்யாவுக்காக என்ன வேண்டுமின்னாலும் செய்வார்னு தோன்றுது.
துகிரா எனக்கானவ இல்லைனு புரியுது. இந்த இடத்துல நான் துகிராவிடம் தனியா பேசி புரிய வைக்கிறதை காட்டிலும் அந்த இடத்துல பேசணும்னு மனசுக்கு பட்டுச்சு. பேசிட்டேன்…. என் காதலை… அங்கயே விட்டுட முடிவெடுத்தாச்சு.
என்ன… எங்க வீட்டுக்கு போனா மெர்ஸி என்னை கழுத்தை நெறிக்காத குறையா கேள்வி கேட்பா. அவளுக்கு பதில் சொல்லணும். எங்கப்பா அம்மாவும் எப்படி எடுத்துப்பாங்களோ? ஆண்டவருக்கு தான் வெளிச்சம்.” என்று சிலுவை போட, ரிஷியோ “உங்க மனசுக்கு நல்லதே நடக்கும் அண்ணா” என்றுரைத்தான்.
சார்லஸ் குளித்து வெளியே வர, “அண்ணா… பூரி பிடிக்குமோ தோசை பிடிக்குமா?” என்று பிரதன்யா கேட்க, “ஆக அண்ணானு சொல்லி என்னை பயங்கர தியாகியா மாத்தறிங்க?” என்றவன் துகிராவும் உங்கண்ணாவும் சாப்பிடலை?” என்று கேட்டான்.
அண்ணி அவங்களுக்கு கொடுத்த ரூம்ல இருக்காங்க. அண்ணா அவர் ரூம்ல போய் லாக் பண்ணிக்கிட்டார்.
அமுல்யா அம்மாவோட சாப்பிட்டா, என்னோட படுத்துக்கறேன்னு சொன்னா. அம்மாவும் துகிரா யோசிக்கட்டும்னு சொல்லிட்டாங்க அண்ணா.” என்றாள் பிரதன்யா.
“ம்ம்… நல்லது. தனியா யோசிக்க வைக்கிறது. இப்ப வரை எதுவும் பேசாம போனா… மேபீ அமுல்யா பத்தி யோசிக்கறாங்கனு அர்த்தம். அவங்களை பத்தி மட்டும் யோசித்தா இந்நேரம் மறுத்து பேச்சு வந்திருக்கும். எனக்கென்னவோ பாஸிடிவ் பதில் கிடைக்கலாம்.” என்று பூரியை விழுங்கினான்.
“உங்களுக்கு இப்ப லவ் பெயிலியர். சாப்பிட முடியுதா?” என்று கேட்க, சார்லஸோ, “அட ஒரு கைப்பிடி அன்னம் கிடைக்காம மனுஷங்க எப்படி தவிச்சாங்க. சாப்பாட்டில் வருத்தம் காட்டி என்னம்மா பிரயோஜனம். நான் ஒரு டாக்டர் சாப்பாட்டு தான் உயிர் வாழணும். ரியாலிட்டி தெரிந்தவன்.” என்று பேசினாலும், மாடியில் கண் பதித்தான்.
பைரவியும் வந்து “நன்றி தம்பி. இந்த விஷயத்தை எப்படி சொல்லறது, எப்படி சம்மதிக்க வைக்கன்னு தெரியாம இருந்தோம். இப்ப தான் சொல்லியாச்சு. அடுத்து சம்மதிச்சா பூரண சந்தோஷம் கிடைக்கும். இருந்தாலும் உங்க மனசுக்கு நீங்க நல்லா இருக்கணும்.” என்று வாழ்த்தினார்.
இரவு உணவை துகிரா இஷானை தவிர்த்து இங்கிருந்தவர் சாப்பிட்டனர்.
ரிஷி அறையிலேயே சார்லஸ் படுத்துறங்க இடம் ஒதுக்கப்பட்டது.
மெர்ஸி போன் போட, அமுல்யாவுக்கு இப்ப பரவாயில்லை.” என்று மட்டும் தெரிவித்தான்.
காதலித்தவளை இஷானையே கல்யாணம் செய்ய அட்வைஸ் தந்துவிட்டு வரப்போவதை சொன்னால் மெர்ஸி இப்பொழுதே பொரிந்து தள்ளினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ரிஷியோ, கிசுகிசுப்பாய் அஞ்சனாவிடம் தொலைப்பேசியில் பேச, சார்லஸோ “என்ன தம்பி லவ்வா?” என்று கேட்டான்.
“ஆமா. அண்ணா… ஆக்சுவலி அஞ்சனாவோட அண்ணன் பையன் கிஷோர் மூலமாக தான் அமுல்யா துகிரா அண்ணி இருப்பதே தெரியும்” என்ற விஷயத்தை உரைத்தான்.
“அடப்பாவி… உன் லவ்வு மூலமா என் லவ் புட்டுக்குச்சு பார்த்தியா. ம்ம்ம்… விதி எப்படில்லாம் விளையாடுது. ஆமா உங்கண்ணா லவ்வுக்கு ஒத்துக்கொள்வானா?” என்று கேட்டு பேச, “இஷான் அண்ணாவும் துகிரா.. சே.. துர்கா அண்ணியும் லவ் மேரேஜ் தானே. அதோட அமுல்யா இருப்பது அஞ்சனா மூலமா தான் தெரியும். அதனால என் லவ் சக்சஸ் ஆகும்னு கனவு காணறேன். ஏன்னா அம்மா இப்பவரை அதட்டலை.” என்று பல்லை காட்டி சிரிக்க, சார்லஸோ “உன் காதலாவது வாழ வாழ்த்துகள்டா” என்று கூறி கொட்டாவி விட்டு உறங்கினான்.
இந்த வீட்டில் மேல் மாடியில் இருக்கும் இஷானுக்கும், துகிராவுக்கும் உறக்கம் வரவில்லை. அமுல்யா பேசியதும், சார்லஸ் அறிவுரையும் நெஞ்சை குத்தி கிழிக்க, துடித்தவளாக துகிரா துடித்தாள்.
இஷானுக்கு தனியாக எண்ணங்கள் எங்கெங்கோ ஊர்வலம் சென்றது. அது நல்லதற்கா அல்லது தீயதற்கா இனி தான் அறிய முடியும்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

Super sis nice epi 👌😍❤️ paavam charles avaroda love um true va erundhurkum la🥺 kuzhandhaikaga yosichi oru nalla mudiva yedupanga nu nenaikuren parpom 🤔
Yosichu oru nalla mudiva yedunga
கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே !
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 15)
சார்லஸ் மனுசன், அதான் அமுல்யாவுக்கு என்ன வேணும், துகிராவுக்கு என்ன வேணும்ன்னு யோசிச்சதோட தன் காதலையே விட்டுக் கொடுத்துட்டான். தவிர, துகிரா மேல சார்லஸோட நுனி விரல் கூட படாமல் திருப்பி கொடுக்குறான். ஆனா, இந்த இஷான் என்னமோ உத்தமபுத்திரன் மாதிரி இந்த முறுக்கு முறுக்கிக்குறானே, இவன் துகிராவை முதல் சந்திப்புலயே கிஸ் அடிக்கலையா, புடைவை கட்டுறதை பார்க்கலையா, அடிக்கடி இவனோட பார்வை துகிரா மேல பாயலையா…?
பெருசா அடுத்தவனை பேச வந்துட்டான் பாருங்களேன்..
நல்லவனாகட்டும். அத்தனை நல்லவனா இருந்தால், இவன் முதல் சந்திப்புலயே துகிராவுக்கு கிஸ் அடிச்சதை சார்லஸ் கிட்ட ஒத்துக்கச் சொல்லுங்க பார்க்கலாம்..
வந்துட்டான் பெருசா…
அரிச்சந்திரனுக்கே இவன் தான் டூப் போட்ட மாதிரி.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Super super super super super super super super super super super
PERIYA MANASU PANI ELLA SOLLITAN AANA AVNUKU EVLO VALI IRUKUM INTHA EDATHUL ORU DOCTOR AH MATTUM THAN PESA MUDINJITHU CHARLES NALA ENA MUDIVU EDUKA PORANGALO RENDU PERUM
CHARLES SONNA MARI ISHAN THUKIRA PAKURAN ANTHA EDATHULA AVA DHURGA THAN NINACHI ETHANAIYO VATI IRUNTHU IRUKAN IPO POI SOLRAN
Interesting
👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍💯💯💯💯💯💯
Nice epi