Skip to content
Home » கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-2

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-2

அத்தியாயம்-2

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

    ரிஷி அஞ்சனாவை அவள் வீட்டு தெரு வரை விட்டுவிட்டு, “ஏதாவது ஸ்பெஷல் கிளாஸ்னு சொல்லி சமாளி. எங்க அண்ணாவுக்கும், என்னோட அம்மாவுக்கு நம்ம லவ் மேட்டர் தெரிந்துடுச்சு‌. அண்ணி குழந்தையை கூட்டிட்டு வந்துட்டு நம்ம விஷயத்தில் ஒரு முடிவு எடுப்பாங்க. அதுவரை சமாளி.” என்றான்.

   அஞ்சனா தலையாட்டி கொண்டு, “ரிஷி ஒரு டவுட்” என்றதும் வண்டியை திருப்ப முனைந்தவன் நின்றான்.

“ஆக்சுவலி உங்க அண்ணி எதுக்காக உங்க அண்ணாவோட வாழாம மறைந்து வாழறாங்கன்னு தெரியலை. அப்படியிருக்க உங்க அண்ணி உங்க அண்ணாவோட குழந்தையை வீட்டுக்கு கூட்டிட்டு வருவதா சொல்லற. உங்கண்ணி வருவாங்களா?” என்று கேட்டாள்.

  “அதெல்லாம் எதுவும் தெரியாது. ஆனா எங்க அண்ணா நினைச்சதை சாதித்து பழகியவன். அவனோட பொண்ணை இனியும் விட்டு கொடுத்துட்டு ஏனோ தானோன்ற வாழ்க்கையை வாழ மாட்டார்” என்று அண்ணனை புரிந்தவனாக உரைத்தான்.

  அஞ்சனா நடந்து செல்லவும், ரிஷி தன் வீட்டில் தானாக தன் காதல் கசிந்து ஓரளவு சுமூகமாய் செல்வதாக களிப்படைந்தான்.

    வீட்டுக்கு வந்தபொழுது வீடு வெறிச்சோடி கிடந்தது. பைரவி மட்டும் தலையை தாங்கி வீற்றிருந்தார். தங்கை பிரதன்யா கல்லூரி விட்டு, அறைக்குள் வந்து பாட்டை முனுமுனுப்பது கேட்டது.

“அண்ணா எங்கம்மா?” என்று கேட்க, “அவன் கேரளா கிளம்பி நாற்பது நிமிஷமாகுது. அந்த பொண்ணை விட்டுட்டு வர உனக்கு நாற்பது நிமிஷமா?.
  உங்கண்ணா தான் காதலிச்சிட்டு திடீருனு கல்யாணம் பண்ணிட்டு வந்து நின்றான். இப்ப நீயுமா?” என்று அதட்டவும் மௌனமானான்.

  “போ…போ.. உங்கண்ணா இத்தனை காலம் வாழ்க்கையை வெறுத்து வாழ்ந்தவன், அவனுக்கு ஒரு குழந்தை இருப்பதே உன்னால தான் தெரிந்தது. அந்த ஒரு விஷயத்துக்காக உன்னை இப்ப சும்மா விடறேன். அதோட பிரதன்யா ரூம்ல இருக்கா இரண்டு அண்ணன்களோட காதல் கதை தெரிந்தா அடுத்து அவ வீட்டு படி தாண்ட அஞ்ச மாட்டா அதுக்கு தான் இப்ப உன்னை ஒன்னும் சொல்லாம சும்மாயிருக்கேன் ” என்று கூறினார்.

  ரிஷியோ தலையாட்டி மெதுவாக அவனது அறைக்கு சென்றான்.‌

“இந்த அம்மாவை எந்த விதத்தில் சேர்த்துக்கறதுன்னே தெரியலை” என்று அஞ்சனாவிடம் கடலை வறுக்க ஆரம்பித்தான்.

   இஷானோ வெறித்தனமாக காரை இயக்கினான். மாலை ஆறுமணியே இருட்டுவது போல வானம் காட்சியளித்தது. வழிநெடுக கருமை இருக்க, இனி என் வாழ்வில் இது போன்ற கருமையை விரட்ட தான், என் மகள் இருக்கின்றாள்.” என்று கனவோடு அஞ்சனா தன் மகளை அமுல்யா என்ற பெயரிட்டு குறிப்பிட்டிருக்க, அப்பெயரை ஜெபித்தபடி விரைவாக ஓட்டினான். 

இலக்கை மட்டுமே குறியாக வைத்து வண்டியை இயக்கியவன், தொடர்ச்சியாக காரை ஆவேசமாக ஓட்டினான்.‌
 
  லேசாக தளரும் நேரம் அவன் கண்டது அமுல்யாவின் டான்ஸ் வீடியோ தான். முகத்தில் தண்ணீர் ஊற்றி கழுவி தூக்கத்தை தூரப்போட்டு மகளை காணும் வேட்கையுடன் வந்தான்.
 
13 மூன்று மணி நேர பயணம், தூக்கத்தை, இருட்டை பாராது வந்தான்.
  அடுத்த நாள் காலை ஆறுமணி அளவில் கேரளாவில் தொட்டிருந்தான்.
அஞ்சனாவின் அண்ணன் வீட்டை அடைந்து, அவரிடம் அமுல்யா வீட்டை கேட்டு நின்றான்.

  ‘முதலில் யார் என்னயென்று திகைத்த அஞ்சனாவின் அண்ணன், இஷானும் துர்காவும் வளைகாப்பு விழாவில் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை காட்டவும், விலாசத்தை பகிர்ந்தான்.

“இங்கிருந்து இருபது நிமிஷம் டிராவல் சார்.” என்று தெரிவிக்க, நன்றி நவில்ந்து பறந்தான்.

   அஞ்சனாவின் அண்ணாவிடம், ”நான் வர்றேனு துர்காவிடம் தெரிவிக்காதிங்க” என்று கோரிக்கையும் வைத்து சென்றான்.

துர்காவா?” என்று குழம்பினாலும் தன் மகன் கிஷோரின் தோழியான  அமுல்யாவின் அம்மா பெயரை அறியும் அளவிற்கு அஞ்சனா அண்ணன்  மூளையில் பதிவாகவில்லை.

  இஷானின் இதயம் பலமாய் துடித்தது. துர்கா தன்னை பார்த்தும் எவ்வாறு வினையாற்றுவாளோ என்று சிந்தித்தான்.‌
 
    சண்டை போட்ட நாட்கள் எல்லாம் கண் முன் வந்து செல்ல, தான் திட்டியது எல்லாம் அவளுக்கு என்னை விட்டு விலகும் வரை சென்றதா என்ற வலியிலேயே வந்தான்.

   அட்ரஸ் எல்லாம் சரிபார்த்து அவ்வீட்டின் முன் காரை நிறுத்தினான்.‌

கிட்டதட்ட துர்காவை புதியவளாக தான் நடத்த வேண்டும். குழந்தையை பிரித்ததற்கு அவளுக்கு பாடம் புகட்டும் விதமாக அவளை ஒதுக்கி குழந்தையை மட்டும் அள்ளி கொண்டு கிளம்ப வேண்டும். துர்கா தானாக என்னை தேடி வரவேண்டும் என்ற எண்ணத்தில் கதவில் கை வைத்தான்.

  துர்கா வீட்டின்‌ கதவு திறந்திருந்தது. “அம்மு… பிரஷ் பண்ணிட்டியா? பால் ஆத்தி வச்சிட்டேன் பாரு” என்ற துர்கா குரல். இஷானுக்கு அவள் குரலே புதிதாக கேட்பது போல தோன்றியது.

  “எஸ் மம்மி ஃப்யூ மினிட்ஸ்” என்ற குழந்தை குரல் அறைக்குள் கேட்டதும், அறைப்பக்கம் நடந்தான்.
  அங்கே வாஷ்பேஷன் பக்கம் குட்டி சேரை இழுத்து போட்டு ‘காக்லிங்’ செய்து துப்பிய மகளை கண்ணாடியில்  கண்டான்.
  இளஞ்சிவப்பு நைட்சூட்டில், பேபிகட் ஹேர்ஸ்டையில், என்று முகத்தை கழுவி, குழந்தை பிரஷை அதன் இருப்பிடத்தில் வைத்து திரும்பியவள் இஷானை கண்டு பயந்தவளாய் “ம்மமி” என்று கத்தினாள்.

  இஷான் குழந்தையருகே மண்டியிட்டு அவளை கட்டியணைத்து கண்ணீரோடு முகமெங்கும் முத்தங்களை வாறியிறைத்தான்.‌

  யாரோ ஒரு மனிதர் தன்னை கட்டியணைத்து முத்தமிடுவதாக குழந்தை மிரண்டது.
  “மம்மி ம்மமி” என்று அலறல் வேறு, துர்கா வேகமாய் ஓடிவந்தாள்.

”என்னாச்சு அம்மு” என்று வந்ததும் இஷானை கண்டவள் திடுக்கிட்டாள்.

  “நீ….நீங்க.. இஷான் தானே?” என்று துர்கா கேட்க, ஏதோ முதல்முறை பார்ப்பதை போல அவளை பார்த்தவன், “நான் இஷான் தானானு தெரியாத அளவுக்கு உனக்கு நான் நினைவில்லையா” என்று அடக்கப்பட்ட வலி கோபத்தை தாங்கி கேட்டான்.‌

குழந்தை அதற்குள் திமிறி, துர்காவிடம் வர துடித்தது. இஷான் குழந்தை கையை பிடித்ததை விடாமல் அவளை பார்வையிட்டான்.

  துர்கா முன்பை விட இளமையாக காட்சியளித்திருந்தாள். “நான் என்னடி பண்ணினேன். என்னை விட்டுட்டு தனியா வந்திருக்க? குழந்தை பிறந்ததை மறைச்சியிருக்க? ஆஹ்… உங்க வீட்ல நம்மளை ஏத்துக்கலை என்றதால் குழந்தை பிறந்தப்பிறகு அவங்களா வருவாங்க. நீ போகாத என் மனசுக்கு சரியாப்படலைன்னு கட்டாயப்படுத்தினேன். அதுக்கு இத்தனை கொடிய தண்டனையா?” சொல்லுடி” என்று அவள் கழுத்தை நெறித்தான்.

  குழந்தை அமுல்யாவோ “மம்மிமிமிமி” என்று கத்த துவங்க, “துர்காவோ நெற்றி சுருக்கி, இருமினாள். குழந்தை கத்தவும் இஷான் விடுவித்துவிட்டான்.

  “அமுல்யா.. நீ வெளிய போ. மம்மி இவரிடம் பேசிட்டு வர்றேன்.” என்றாள் துர்கா.

இஷானுக்கு இப்போழுதும் கோபம். குழந்தையிடம் ‘இவர்’ என்று கூறுவதில்.

  குழத்தை தயங்க, “அம்மு.. மம்மிக்கு ஒன்னுமில்லை. நீ பிரஷ் பண்ணிட்டல்ல, போய் பால் குடிச்சிட்டு, ராகி நூடுல்ஸ் சாப்பிடு. பேசிட்டு வர்றேன்” என்று கஷ்டப்பட்டு சிரித்து அனுப்பினாள்.
  குழந்தை இஷானை கண்டு பயத்து வெளியேறியது.

குழந்தை வெளியேறியதும், இஷான் முரட்டுத்தனமாய் துர்காவின் இடையை பிடித்து தன் பக்கம் இழுத்து, முகத்தை தாங்கி இதழ் முத்தத்தை விதைத்தான்.

இதை எதிர்பாராத துர்காவோ, கண்கள் மிரள, இஷானை அடித்து தள்ள முயன்றாள்.

  பத்து நிமிடம் துர்கா கையால் அவன் நெஞ்சில் அடித்து தள்ள முயன்று தோற்று விடாமல் அவனிடமிருந்து விடுபட போராடினாள்.

இஷான் ஒரு கட்டத்தில் முரட்டுத்தனத்தை தளர்த்தவும், “அய்யோ.. நான் துர்கா இல்லை. துகிரா. துர்காவோட தங்கை துகிரா.” என்று தள்ளிவிட்டு கத்த துவங்கி சுவரோடு சாய்ந்து விசும்பினாள்.

  “வாட்?” என்று அதிர்ந்தான் இஷான்.

  மூச்சு வாங்க, மார்பு கூடு ஏறியிறங்க, ”நான் துர்கா அக்கா இல்லை. துகிரா… உங்க ஓய்ஃப் இல்லை.” என்று இஷானிடமிருந்து விலகி பின்னடைந்தாள்.

  இஷானுக்கு ஒரு நொடி உலகமே மீண்டும் கருமை சூழ்ந்தது. “பொய் சொல்லறியா துர்கா?” என்று கேட்டான். முத்தம் வாங்கி மூச்சிரைத்த துகிராவோ, அக்காவோடு அவள் பள்ளியில் எடுத்த புகைப்படத்தை எடுத்துக் காட்டினாள்.
  அதில் இரட்டை சடையுடன் துர்காவோடு நின்றியிருந்தாள் துகிரா.

துர்காவுக்கும் துகிராவுக்கும் ஆறு வயது இடைவெளி என்பதால் சிறுவயது புகைப்படத்தில் வித்தியாசம் தெரிந்தது. இஷான் அதனால் நம்பாத பார்வை பார்க்க, பூட்டியிருந்த பீரோவிலிருந்து ஒரு பிரேம் செய்த புகைப்படத்தை எடுத்தாள். அதில் ஆறு வருடத்திற்கு முன் துர்கா வாயும் வயிறுமாக இருந்த புகைப்படத்தில் சிறு வயது துகிரா துர்கா சாயலில் ஒல்லியாக இருப்பதை கண்டான்.

  “நான் பார்க்க துர்கா அக்கா மாதிரி இருக்கேன். அக்கா… அப்பா அம்மா கூடவே இறந்துட்டா.” என்றாள். இஷானுக்கு இப்பொழுது அவன் செய்த விபரீதம் நெருப்பாய் சுட்டது. இத்தனை தூரம் இங்கு வந்தது தன் குழந்தையை காண. இவள் துர்கா இல்லையென்றால் அக்குழந்தை என்னுடையது இல்லையா? இவளை முத்தமிட்டேனே. இவள் வேறொருத்தன் மனைவி என்றால் நான் செய்த தவறு பெரிதல்லவா?! என்று தலையில் அடித்தான்.

   சில நொடிகள் இருவருக்கும் நிதானமடைய தேவைப்பட்டது.

  இஷான் துர்காவாக நினைத்து தங்கை துகிராவை முத்தமிட்டத்தில் மன்னிப்பு கேட்கும் நிலையில் இருந்தான்.‌
   “மம்மி” என்ற அமுல்யா குரலில் துகிராவோ முகமலம்பி “வந்துட்டே அம்மு” என்று கூறினாள்.
  இஷானோ யாரோ ஒருவனின் மனைவியை முத்தமிட்டது மட்டுமல்ல, இவள் ஒரு குழந்தைக்கு தாய்‌. அந்த தவறும் புரிந்தது.

  “உங்களுக்கு நாங்க இங்க இருப்பதா யார் சொன்னா? ஐ மீன் துர்கா இருப்பதா?” என்று துகிரா தன்னை தேற்றி கேட்டாள்.

  “ஒரு பங்ஷன் போட்டோவுல உன்னையும் குழந்தையும் பார்த்தேன்” துர்கா தான் உயிரோட இருக்கான்னு தேடி வந்து இப்படி நடந்துக்கிட்டேன். ஐம் சாரி” என்றான்‌. துகிராவிடமிருந்து எந்த வினையும் இல்லை. சாரி சொன்னால் ஏற்றுக்கும் நிலையா அது? முத்தமிட்டு விட்டானே.

   இஷானே மீண்டும் “துர்கா அப்ப உயிரோட இல்லையா? நான் வந்து துர்காவை கேட்டப்ப அவங்க குடும்பமே இறந்துட்டதா அங்கிருந்தவங்க சொன்னாங்க. இத்தனை வருடம் அவயில்லை என் குழந்தையில்லைனு ஏனோ தானோனு வாழ்ந்தேன். அந்த வீடியோ பார்த்ததும் துர்கா உயிரோட இங்க இருப்பதா நினைச்சு ஆசையா வந்தேன். அதனால் தான் மனைவின்னு உரிமையா” என்று நிறுத்தினான்.

  “அக்கா வந்து இரண்டாவது நாளே வீடு இடிந்து அப்பா அம்மா அக்கா இறந்துட்டாங்க.
உடனடியா அக்காவை ஹாஸ்பிடல்ல கொண்டு போனப்ப, குழந்தை மட்டும் வயிற்றில உயிரோட இருப்பதா தெரிய வந்து குழந்தையை வயிற்றை அறுத்து எடுத்துட்டாங்க. நான் அப்ப வீட்ல இல்லை. ஆனா இறந்தது நான்னு சிலர் நினைச்சிட்டாங்க.
   வீடும் இல்லை, கையில அக்காவோட குழந்தை. உங்களோடவும் அக்கா சண்டைப்போட்டு வந்ததா சொல்லியிருந்தா. நீங்களும் அப்ப அக்காவை தேடி வரலை. எனக்கு நீங்க எங்க இருக்கிங்கன்னு எந்த டீட்டெயிலும் தெரியாது. குழந்தையை எடுத்துக்கிட்டு நான் வேலை பார்த்த இடத்துல வந்துட்டேன்.” என்றாள்.
 
  இஷான் அதன்பிறகு துகிராவை ஆராய, கழுத்தில் தாலி போல எதுவுமின்றி மெல்லிய சங்கிலியை அணிந்திருப்பதை கண்டான்.

“அப்ப… அமுல்யா என் குழந்தை தானே?” என்று உரிமையாய்  கேட்டான்.

தயக்கமாய் ஆமென்று தலையாட்டினாள் துகிரா.

  “தேங்க் காட்.. அப்ப நான் என் குழந்தையை அழைச்சிட்டு போறேன்.” என்ற வார்த்தையால் துகிரா இதயத்தை தாக்கினான்.

இதுவரை முத்தமிட்டதால் இஷான் முகத்தை பார்வையிட தயங்கி தலைகவிழ்ந்து பேசியவள், “அமுல்யாவை யாருக்கும் தரமாட்டேன். அவ என் பொண்ணு. நான் அப்படி தான் வளர்க்கறேன்.” என்று அமுல்யா முன்னே வந்து தடுத்தாள்.

   இஷானோ, “காக்கா கூயில் முட்டையை அடைக்காத்து குஞ்சு பொரிக்க வைக்கலாம். அதுக்காக காக்காவோட பேமிலியா குயில் மாறிடாது. குயில் தனி பேமிலி.” என்றவன் அமுல்யாவை கைப்பிடிக்க, துகிராவும் அமுல்யாவின் மற்றொரு கையை பிடித்திருந்தாள்.

அமுல்யா இருவரின் பற்றுதலை பார்வையிட்டாலும் இஷானை கண்டு மிரண்டுதான் போயிருந்தாள். அதிலும் இஷான் துகிராவை அமுல்யா பார்க்க பின்னந்தலையை பிடித்து இழுத்து வலி கொடுத்தானே?!

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.


11 thoughts on “கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-2”

  1. Dharshini

    Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 appo endha ponnu amma ellaiya🙄 adei avasarapattu kiss ellam kuduthutiye da🧐 eppo enna nadaka pogudhu 🤔 parpom 👍 ennum konjam periya epi ya podunga sis pls 🙏

  2. Kalidevi

    ippadi periya twist ah vachitinga sisy pavam wife tholachitu ithana varushama kavala pattavanuku kolanthaium serthu kedachitanganu namburathukulla ippadiya aganum ishan ithana yr vegatha kiss la kamichitan irukum thane pirivu na summava athu marana feel kodukume illa ninachitu irunthavanga ipo kedacha solla mudiyatha santhosam irukum illaya , aana ipo kolanthaiya mattum eppadi kuptu poga mudium thukira valathu irukale papa va papom aduthu ena aguthunu

  3. M. Sarathi Rio

    கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே !
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 2)

    அச்சோ…! அத்தனை ஆவலோட வந்தவனை இப்படி ஏமாத்திட்டிங்களே..? இப்படி ஒரு டுவீஸ்டை நாங்க எதிர்பார்க்கவேயில்லை. இந்த துர்கா புருசன் கூட சண்டைப் போட்டுட்டு எமன் வாயில போய் விழுந்திட்டாளே. போகட்டும் குழந்தையாவது கிடைச்சதேன்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான். ஆனா, இவன் கோபமா துகிரா கழுத்தை நெறிச்சதால குழந்தை அதை நேர்ல பார்த்ததால இனி அவன் கிட்ட நெருங்குறதே கஷ்டம் தான் போல. குழந்தையை இமுத்து பிடிக்கணும்ன்னா, இப்ப இவன் துகிராவையும் கூடவே அழைச்சிட்டு வந்து தானே ஆகணும். இதான் விதியோ ?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!