அத்தியாயம்-5
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
“குழந்தை தூங்குவதை பெத்தவங்க ரசிக்க கூடாது இஷான்” என்று பைரவி கூற, “அம்மா என் குழந்தைம்மா… எத்தனை வருடம் உயிரோட இல்லைன்னு நினைச்சிட்டு சவமா வாழ்ந்துட்டேன். தப்பு பண்ணிட்டேன்மா. துர்கா இறந்தப்ப குழந்தை இருந்ததே. அப்பவே யாராவது வந்தாங்களா. குழந்தை வயிற்றிலேயே இருந்ததேனு கேட்டிருக்கணும்.
வீடு இடிந்து அப்பா அம்மா பொண்ணு மூன்று பேரும் இறந்துட்டாங்கன்னு சொன்னதும் துடிச்சிட்டேன். அதோட துர்கா போட்டோ காட்டி கேட்டேன். ஆமா இறந்துடுச்சுனு சொன்னதும் குழந்தை பற்றி கேட்கவே என்னால முடியாம தடுமாறிட்டேன்மா. அப்ப மட்டும் க்ளியரா கேட்டிருந்தா.. இப்ப என் குழந்தை என் ரூம்ல படுத்து தூங்கியிருப்பா. என்னை அப்பானு கூப்பிட்டுயிருப்பா.” என்று கலங்கினான்.
பைரவியோ, “துர்கா இங்கயிருந்து போகணும்னு விதியிருக்கு. நீ இந்த இடைப்பட்ட வருடம் வாழ்க்கையை தொலைச்சி வாடணும்னு எழுதியிருக்கு. சரி குழந்தையையே பார்த்துட்டு தூங்காம இருக்காத. நீ நேத்து மதியமிருந்து இன்னிக்கு நைட் வரை கார் ஓட்டிட்டு வந்த அலுப்பு இருக்கும். நல்லா தூங்கு” என்று கூற சரியென்றான்.
பிரதன்யா பக்கக்து அறையில் உறங்க, இஷான் மகளின் உறங்கும் அழகை கண்டு உறங்காமல் ரசித்தான்.
நள்ளிரவை தாண்டி, அமுல்யா கண்ணை கசக்கி எழவும், இஷான் பக்கத்தில் படுத்திருக்க, “அம்மா… மம்மி… அம்மா…” என்று குழந்தை அலற துவங்கினாள்.
அவளை பொறுத்தவரை புதிதாக வந்த ஆடவன், அன்னையின் கழுத்தை நெறித்து கோபமாய் பேசியவன். காரில் ஏற்றி ஆக்ரோஷமாய் நடந்தவர். தற்போது அருகே படுத்திருந்தால் குழந்தை ஏற்குமா?
அம்மா… அம்மா… என்று கத்தி ஆர்ப்பாட்டம் தர, பிரதன்யா வேகமாக எழுந்து வந்தாள்.
ரிஷி பைரவி கூட ஓடிவர, “இந்த அங்கிள் எனக்கு பிடிக்கலை. இவர் வேண்டாம். எனக்கு மம்மி தான் வேண்டும். நீ போ… நீ வேண்டாம்” என்று பேயை பார்த்தவளாக ஓடி செல்ல பிரதன்யா வரவும் அவள் பின்னால் வேறு மறைந்தாள்.
இஷான் மண்டியிட்டு, “நான் அவ அப்பானு சொல்லு பிரதன்யா. இந்த உலகத்துலயே அவ சித்தியை விட நான் தான் முக்கியம்னு சொல்லு” என்று தவிக்க, குழந்தை தேம்புவதும் அழுவதும் அதிகமானது.
ரிஷி தான் அண்ணனை கஷ்டபட்டு அழைத்து செல்ல, பிரதன்யா மட்டும் அமுல்யா கூடவே படுத்துக்கொண்டாள். அப்படியிருந்தும் உறக்கம் வரும் வரை “அம்மா…அம்மா” என்று அணத்த துவங்கினாள். பிரதன்யா தட்டி கொடுத்திட உறங்கினாலும் அதிகாலை அமுல்யாவிற்கு உடல் சூடானது.
பைரவியிடம், “அம்மா… அமுல்யாவுக்கு அழுதழுது ஜூரம் வந்துடுச்சு. இப்ப என்னம்மா செய்யறது” என்று கையை பிசைந்தாள்.
டாக்டர் வீடு தேடி வர ஏற்பாடு செய்து, இஷான் தூரிதப்படுத்தி, கவலையோடு காத்திருந்தான்.
டாக்டராக வந்தவரோ “குழந்தை தூக்கத்துல அம்மா அம்மானு அணத்தறா. குழந்தையோட அம்மா எங்க? அவங்களை கூடவே இருக்க சொல்லுங்க. கணவன் மனைவிக்குள்ள ஆயிரம் பிரச்சனை இருக்கலாம். குழந்தையை இந்தளவு அம்மாவிடம் இருந்து பிரிச்சி பார்க்காதிங்க. இன்ஞெக்ஷன் போட்டிருக்கு. ஃபீவர் குறையும். எதுக்கும் இந்த சிரஃப் கொடுங்க” என்று கிறுக்கி தந்துவிட்டு சென்றார்.
வெளியே சில நிமிடத்தில் ஆட்டோ வந்து நிற்கும் சத்தம் கேட்க, ரிஷி எட்டி பார்த்தான்.
துகிரா வரவும், “அண்ணா… அண்ணா… அண்ணி வந்துட்டாங்க” என்று தோளை சுரண்டினான்.
இஷானோ துகிராவை கண்டு, “இடியட்… அவ துர்கா இல்லை துகிரா.” என்று திருத்த, பைரவியோ துகிராவை உச்சி முதல் பாதம் வரை அளவிட்டு, “நீ.. துர்..” என்று ஆரம்பிக்க “நான் துகிரா… துர்கா என்னோட அக்கா, என் குழந்தை அம்மு எங்க.” என்று கண்ணீர் மல்க கேட்டாள். என்ன தான் போட்டோவில் துகிராவை துர்கா என்று கண்டாலும் நேரில் அச்சு வார்த்தது போல இருக்க அதிசயித்து கண்டார்கள்.
“உன்னை யாரு இங்க வரசொன்னா. வெளியே போடி” என்று இடியாக முழங்கினான் இஷான். அவனுக்கு அவளிடம் முத்தத்தை வாறியிறைத்து உறிஞ்சியது எல்லாம் நினைவு வந்து எரிச்சலை தந்தது. மேலும் தன் குழந்தை எவளோ ஒருத்தியின் அணைப்பில் அடங்குவதா?!
பிரதன்யாவோ “அண்ணா… ப்ளிஸ்.. குழந்தைக்கு உடம்பு முடியலை. நீங்க வாங்க. அவங்க பார்க்கட்டும்.” என்று அண்ணனை கைப்பிடித்து இழுத்து வந்தாள்.
“குழந்தை உடம்புசரியில்லாம இருக்கா. அவளோட உடம்பு சரியாகணும். மனசும் நம்ம உறவு தான் இவங்கன்னு நம்மளை ஏத்துக்கணும். இப்படி மிரட்டினாலோ அதட்டினாலோ பிஞ்சு குழந்தை கேட்குமா?” என்று கூற, பைரவியோ பிரதன்யா சொல்வது சரிதானே இஷான்.” என்றார்.
இஷானுக்கு நிதானமாவது சாத்தியமின்றி, முள்ளில் நிற்பது போன்ற உணர்வு தாக்கியது.
பிரதன்யா, பைரவி, இருவரும் அடிக்கடி இஷான் அறையில் அமுல்யாவை காணவந்தனர்.
துகிரா அரை மயக்கத்திலிருந்த, அமுல்யாவிடம், “அம்மா வந்துட்டேன், இதை குடிங்க” என்று பீவருக்குண்டான மருந்தை குடிக்க வைத்தாள். லேசாக கண் திறந்து, அன்னை துகிரா கையில் இருக்க, மருந்தை விழுங்கினாள் அமுல்யா. ஈரத்துணியை தண்ணீரில் நனைத்து நெற்றி வயிறு கை கால் என்று துடைத்தபடக, வாஞ்சையாய் தடவினாள்.
துகிரா கண்ணில் குழந்தையின் உடல்நிலை மோசமானதால் தாயாக பரிதவிப்பை பைரவி உன்னிப்பாக கவனித்தார்.
ஆழ்ந்த நித்திரைக்கு அமுல்யா செல்வதையும், உடலும் ஓரளவு ஜூரத்தில் குறைந்தது போலவும், தோன்ற, கண்ணை துடைத்தாள்.
பிரதன்யா துகிரா அருகே வந்து, “அ…அ..அண்ணி அம்மா உங்களை பேச கூப்பிட்டாங்க.” என்று சத்தமின்றி தீண்டி உரைத்தாள்.
துகிராவோ, “நான் துர்கா இல்லை.. அண்ணினு கூப்பிடாதிங்க ப்ளிஸ்” என்று பிரதன்யாவோடு வந்தாள்.
ஹாலில் பைரவி அமர்ந்திருக்க, முகத்தை வேறுபக்கம் திருப்பியவனாக இஷான் இருந்தான்.
ரிஷி பக்கத்தில் பிரதன்யா அமர்ந்து, “உட்காருங்க” என்று எதிரேயிருந்த சோபாவை சுட்டிக்காட்டினாள்.
பைரவிக்கு எதிரே அமர்ந்தாள். முதலில் அவர்களே பேசட்டுமென்று துகிரா வேடிக்கை காண நினைத்தாள். ஆனால் உள்மனமோ உனக்கு அமுல்யா வேண்டுமின்னா, நீ தான் சொல்லணும்.’ என்று இடித்துரைக்க, “எனக்கு என் பொண்ணு அமுல்யா வேண்டும். தயவு செய்து என்னிடமே கொடுத்திடுங்க.” என்றாள்.
“அவ என் பொண்ணு.” என்று கர்ஜணையாக இஷான் குரலுயர்த்த, “இங்க பாருங்க.. நான் உங்களிடம் பேச வரலை. குழந்தை வீடியோவை பார்த்ததும் பேயா வந்து என்னிடம் அனுமதி வாங்காம, நீங்களா குழந்தையை தூக்கிட்டு வந்திட்டிங்க. அந்த குழந்தையோட மனநிலை என்ன? அவளுக்கு திடீரென ஒரு அப்பா வானத்துலயிருந்து குதிப்பார்னு தெரியுமா? குழந்தை உலகத்துல எந்த மாதிரி பாதிப்பாகும்னு யோசிக்க மாட்டிங்க” என்றாள். கிட்டதட்ட இஷானோடு அன்னை என்ற உரிமைக்காக சண்டை போட்டாள்.
“ஏய்… நான் ஒன்னும் திடீர்னு வானத்துலயிருந்து குதித்த அப்பா இல்லை. உன் வயித்துல அமுல்யா வளரும் போதே…” என்றவன் துகிரா துர்கா வேறு என்றது மண்டையில் உரைத்து, “துர்கா வயித்துல என் குழந்தை வளரும் போதே அவ என் குழந்தை. அமுல்யாவுக்கு நான் அப்பா” என்றவன் அடுத்து பேசயியலாது அமைதியானான்.
பைரவியோ ‘உன் வயித்துல அமுல்யா’ என்றதுமோ மகனுக்கு துகிரா துர்காவாக தெரிந்து தொலைப்பதை கணித்துக் கொண்டார். பைரவிக்குமே துகிராவை கண்டாள் துர்கா போல தானே தெரிகின்றாள். சொல்லப்போனால் துர்காவை விட இளமையாக கூடுதல் அழகாக தெரிகின்றாள். துர்காவை விட சின்ன பெண் என்பதால் அப்படியிருக்கும்.
“அப்பாவா… எங்க சார் இருந்திங்க? எங்க அக்கா வாயும் வயிறுமா, நிறை மாசமா தனியா வீடு தேடி வந்தப்ப, கூட வந்திங்களா? அவ வந்து இரண்டாவது நாளே வீடு இடிந்து இறந்தா. நீங்க போன் போட்டிங்களா? ஓகே… போன் ஆவது வீடு இடிந்து எங்கயோ விழுந்திருக்கலாம். அவ மாசமா வந்தாலே, என்ன ஆனானு வந்து பார்த்திங்களா? அவ இறந்து பத்து நாளா கையில குழந்தையோட நான் தவிச்சப்ப நீங்க எங்க இருந்திங்க?
என்னோட அப்பா அம்மா அக்கா மூன்று பேரையும் எமனுக்கு தூக்கி கொடுத்துட்டு, வீடு வாசல் எல்லாம் இழந்து, தனியா குழந்தையை வச்சிட்டு நின்றப்ப உங்க குழந்தையை தேடி வந்திருக்கலாமே. எத்தனை நாள் ரோட்ல கவர்மெண்ட் ஆஸ்பிடல்ல அரசாங்கம் கொடுத்த உதவில இருக்கறதுன்னு நான் வந்துட்டேன். அப்ப கூட, குழந்தையை தேடி வந்தா இந்த அட்ரஸுக்கு வாங்கன்னு ஆஸ்பத்திரியில கொடுத்துட்டு வந்தேன்.
நீங்க அப்பலாம் வரலை. என் மகளா, என் உயிரா, வளர்த்து ஆளாக்கி அவயில்லாம எனக்கு உலகமேயில்லைனு வாழறப்ப, என் குழந்தையை பிடுங்கிட்டு போறிங்க. எனக்கு என் குழந்தை வேண்டும்” என்றாள்.
“ஏய்… டெலீவெரி டேட் அடுத்த மாசம்னு டாக்டர் சொன்னாங்க. உங்க அக்கா தான் அப்பா அம்மாவை பார்க்கணும்னு அழுது சண்டைப்போட்டு பார்க்க வந்தா. சரி டேட் நெருங்கற சமயம் அழைச்சிப்போம்னு பத்து நாளா பேசாம தவிர்த்தேன். பிகாஸ் எங்களோட லைப்ல அவ போட்ட முதல் சண்டை. என்னை மீறி உங்க வீட்டுக்கு வந்தது. அந்த கோபத்துல தான் நான் போன் பண்ணலை. எனக்கென்ன இப்படியெல்லாம் நடக்கும்னு தெரியுமா? தெரிந்திருந்தா அங்க அனுப்பியிருக்கவே மாட்டேன்.
அப்பவும் மனசு கேட்காம பத்தாவது நாள் அவளை தேடி வந்தப்ப தான், உங்க வீடு இடிந்து மூன்று பேரும் இறந்துட்டதா தகவல் கிடைச்சது.
உங்க பக்கத்து வீட்ல இருந்த பொம்பளை தான் வாயும் வயிறுமா இருந்த பொண்ணா.. அதுவும் செத்துடுச்சுப்பா.’ என்று சொன்னாங்க.
ஹாஸ்பிடல்ல கேட்டப்ப அவ தங்கை மூன்று பேருக்கும் தகனம் செய்துட்டு போயாச்சுனு சொன்னாங்க. ஆனா பிரசவம் பார்த்ததா சொல்லலை. அவங்க ஜென்ரல் டாக்டர்” என்று கூறினான்.
“எனக்கு பிரச்சனை முடிந்து போனதுல ஆரம்பிக்கலை. நீங்க அக்காவை தேடி வரலை வந்திங்க என்பது எனக்கு தேவையில்லாத விஷயம். என் பொண்ணை கொடுங்க. நான் நிம்மதியா போறேன்” என்று முடித்தாள்.
“அவ என் பொண்ணு.” என்று கோபமாக பல்லைக்கடித்தான்.
துகிரா பயந்து நிற்க, “இஷான்… முதல்ல நிறுத்து. நீயும் தான்மா.” என்று பைரவி பேச்சை இடைவெட்டினார்.
“குழந்தைக்கு யாருமில்லைனு நினைச்சப்ப நீ பொறுப்பா வளர்த்த, இப்ப தான் பெத்தவன் வந்துட்டானே. குழந்தையை கொடுப்பது தானே நியாயம். என்ன தான் நீ உயிரா உலகமா பார்த்துக்கிட்டாலும் அமுல்யா உன் குழந்தையில்லையே. துர்கா குழந்தை, இஷான் குழந்தை. ரத்த பந்தம் அவன் இருக்கும் போது, நீ இரண்டாம் பட்சம் தானே” என்று கூற அவ்விடத்தில் தனித்து நின்றாள்.
உண்மை தானே… இஷான் பெற்றெடுத்த தகப்பன். அவன் ரத்தம். என்ன தான் வளர்த்து இத்தனை வருடம் ஆளாக்கி பாதுகாத்தாலும் பெத்தவன் கேட்கும் போது தரவேண்டுமே.’ என்ற உண்மை சுட்டது.
“அமுல்யா இல்லாம என்னால இருக்க முடியாது” என்றாள்.
பைரவியோ, “அமுல்யாவோட தற்போதைய நிலையை பார்த்தா அவளும் உன்னை விட்டு இருக்க முடியாது. இத்தனை நாள் இரண்டு பேரும் அம்மா மகளா ஒன்னா ஒரே வீட்ல இருந்ததால் குழந்தை மனசும், பிரிவை ஏற்க மறுக்கும்.” என்றார்.
“அதுக்கு.?” என்று இஷான் அவசரப்பட, பைரவியோ “நான் ஒரு யோசனை சொல்லட்டுமா?” என்று கேட்டார். துகிரா என்ன யோசனை என்பதாக பைரவியை பார்வையிட்டாள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

Wow super idea bharavi. Intresting sis.
கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே !
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 5)
அடப்பாவி..! இவன் சத்தமில்லாமல் முத்தத்தை கொடுத்திட்டு, இப்ப அவளை சத்தம் போட்டால் மட்டும் இவன் செஞ்சது சரியாகிடுமா..?
ஆனால், எப்படியிருந்தாலும் குழந்தை இஷானுக்குத்தானே சொந்தம். இப்ப இஷானோட அம்மா என்ன சொல்லப் போறாங்க, கொஞ்ச நாளைக்கு அமுல்யாவோட அம்மாவா இருந்து, அவளுக்கு உறவுகளை புரிய வைச்சிட்டு போகச் சொல்லுவாங்களா ? இல்லை நிரந்தரமா துகிராவை இஷானோட முடிச்சு போட்டு வைச்சிடுவாங்களா…? ஆனா இதுங்க ரெண்டும் டாம் அண்ட் ஜெர்ரியா இல்லை இருக்குதுங்க. ஒருவேளை, ஆப்போசிட் போல்ஸ் தான் இச் அதர் என்கிற விதிப்படி நடக்குமோ..? வெளித் அண்ட் ஸீ.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 pesama renduperum appa amma va maaridunga nu solla poranga nu nenaikuren 🤔 parpom 🧐