அத்தியாயம்-6
பைரவி துகிராவிடம், “குழந்தையை நீ கொடுக்காட்டி, எப்படியும் போலீஸ் மூலமாக போய் சட்டரீதியா அப்ரோச் பண்ணினா, சட்டமே எங்களிடம் தான் குழந்தையை கொடுக்க சொல்வாங்க. அந்தளவு எங்களுக்கு போக விருப்பமில்லைம்மா. ஏன்னா ஏற்கனவே குழந்தையை பிரியறது வேதனை.
அது குழந்தையோட மனநிலையையும் பாதிக்கும். உனக்கு குழந்தையோட மனநிலை முக்கியமா நினைச்சா, நீயும் கொஞ்ச நாள் கூடவே இருந்து குழந்தையை பார்த்துக்கிட்டு, நீயாவே அமுல்யாவிடம் இஷானை அப்பானும், நான் பாட்டி, இவ அத்தை இவன் சித்தப்பா, என்று அறிமுகப்படுத்து.
குழந்தை எங்களோடவும் நல்லா பழகிட்டா, அவ மனநிலை பாதிக்காம இருப்பது நல்லது.” என்றதும் துகிரா யோசிக்க, இஷானோ “இவ எதுக்கு கூடவே இருக்கணும். அம்மா அதெல்லாம் வேண்டாம். அமுல்யா கண் திறந்ததும் இரண்டு நாள்ல நான் அப்பா நீங்க பாட்டி அத்தை சித்தப்பானு நம்மளை அறிமுகப்படுத்திட்டு இவளை போக சொல்லுங்க” என்றான்.
“இஷான்… அநியாயமா பேசக்கூடாது. நாம இல்லாத நேரத்தில் நம்ம வீட்டு குழந்தைக்கு இவ தான் உலகமா மாறி பாதுகாத்து வளர்த்திருக்கா. இவளுக்கும் அவ அக்கா குழந்தை மேல அட்டாச் இருக்கும் இல்லையா? இந்த பொண்ணும் மனசளவில் பாதிப்படைவா. இங்க இருந்தா அவளும் பார்ப்பா. நம்ம குழந்தையிடம் காட்டுற கரிசனை அன்பு, கவனிப்பு, எல்லாம் புரியவும், பாதுகாப்பான இடத்துல தான் அக்கா குழந்தை உரியவனிடம் வளருதுன்னு சாந்தமாகும். பிறகு அக்கா பொண்ணுக்காக தான் கன்னிப்பொண்ணா காலம் முழுக்க வாழ முடியாது என்ற நிதர்சனம் புரியும்.” என்றதும் துகிரா பைரவியின் பேச்சில் உண்மை புரிய உறைந்து நின்றாள்.
பிரதன்யாவோ, “அம்மா சொல்வது நியாயம் அண்ணா” என்றாள்.
அம்மாவும் தங்கையும் முடிவெடுக்க, இஷானோ எழுந்து டைனிங்டெபிள் இருக்கும் இடம் நோக்கி வெறுப்பாய் நடந்தான்.
துகிராவோ, அமைதியாக சில நொடிகள் உறைந்தவள், “முதல்ல குழந்தைக்கு உடல்நிலை சரியாகட்டும். பிறகு என் முடிவை சொல்லறேன்” என்று மனமேயின்றி அமுல்யாவை காண அறைக்கு சென்றாள்.
குழந்தை இன்னமும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. துகிராவுக்கு தான் உள்ளமெல்லாம் ரணமாய் வாட்டியது.
இஷானோ ரிஷி அறைக்கு வந்திருந்தான். அமுல்யா உறங்குவது இஷானின் பெட்ரூம். அப்படியிருக்க, அங்கே தற்போது, துகிரா மகளருகே இருக்கவும், தன் அறையிலிருந்தே துரத்தியதாக எரிச்சலோடு இங்கே வந்திருந்தான்.
ரிஷியோ, “அண்ணா… அம்மாவுக்கு அஞ்சனாவை பத்தி தெரிந்துடுச்சு. உன்னோட காதல் கல்யாணம் சண்டை வச்சி, அம்மா என்னை காதலிக்கவே கூடாதுன்னு கண்டிச்சு தான் அனுப்பினாங்க. அப்பவும் அஞ்சனாவை நானா தான் விரும்பிட்டேன். அஞ்சனா விஷயம் தெரிந்ததிலிருந்து அம்மா என்னிடம் சரியாவே பேசலை. பயமாயிருக்கு. என் காதலை கைவிட சொல்வாங்களா? அப்படியெல்லாம் பண்ணாம நீ தான் அண்ணா சப்போர்ட் பண்ணணும்.” என்று கெஞ்ச, ‘இங்கே தன் வாழ்வே எந்த திசையில் பயணிப்பதை அறியாத இஷானோ, தம்பியிடம் “அதெல்லாம் பார்த்துக்கலாம்.” என்று முடித்துவிட்டான்.
ரிஷி அண்ணன் வாய் சொல்லில் நிம்மதியுற்றவனாக உறங்கினான்.
பிரதன்யாவுமே துகிரா வந்தப்பின் அமுல்யா அருகே இல்லாமல் அவளது அறைக்கு வந்துவிட்டாள்.
இஷான் மட்டும் உறங்க முடியாமல் தவித்தாலும் நேற்றிலிருந்து ஏற்பட்ட அலைச்சல் காரணமாக உறங்கினான். ஒருவேளை மகளருகே இருந்தால் உறக்கத்தை தியாகம் செய்து அவளை கண்டு உறக்கத்தை விரட்டியிருப்பான். ரிஷி அறையில் லேசாக கண் அசந்தான்.
துகிரா தான் குழந்தையை பார்த்து பார்த்து துடித்து கண்ணீரை உகுத்தி, ஒருவழியாக அதிகாலை நான்கரை மணிக்கு இமை மூடினாள்.
இஷானோ ஐந்து பத்து எழுந்தான். மகளை பார்வையிட ஓடிவந்தான்.
அங்கே தன் அறையில், தன் மெத்தையில், தன் குழந்தையோடு, துகிரா உறங்க எரிச்சலானது.
ஆனால் அவனுக்குமே தெரியும், துகிரா நேற்று இரவெல்லாம் உறங்கியிருக்க மாட்டாளென்று.
அதைமீறி மகளை கண்டு நெற்றியில் முத்தம் வைக்க சென்றான்.
அங்கே துகிரா இமை மூடி, அமுல்யா நெஞ்சில் தட்டி கொடுத்த சுவடாக அவள் கைகள் இருக்க, வெளியேறினான்.
முதல்ல இவளை என் ரூம்ல இருந்து விரட்டணும்’ என்றவன் பிரதன்யாவை தேட, பைரவியோ “இங்க என்ன பண்ணற இஷான்” என்று வந்திருந்தார்.
“என் குழந்தையை பார்க்க வந்தேன். இவ என் குழந்தையோட கட்டிப்பிடிச்சு தூங்கறது எரிச்சலாயிருக்கு. எவ்ளோ பணம் வேணுமோ கொடுத்து அனுப்புங்க. இவ இங்க இருக்க வேண்டாம்.” என்று பேச, “தப்பு இஷான்… அவ பணத்துக்காக இங்க வரலை. நம்ம அமுல்யாவுக்காக வந்திருக்கா. அன்பை அவமதிக்காத” என்று கடிந்தார்.
“ஓகே… என் ரூம்ல இருந்து அவளை வெளிய தள்ளுங்க.” என்றான்.
“ஏன்?” என்றதும், “ஏன்னா… எழுந்ததும் நான் ப்ரஷ் பண்ண வேண்டாமா? அங்கயிருப்பது என்னோட திங்க்ஸ். நான் குளிக்கணும், டிரஸ் மாத்தணும். என் ரூம்ல எவளோ ஒருத்தி இருக்கா.” என்றான்.
இஷான் போட்ட சத்தத்தில், துகிரா எழுந்து வந்து கண்ணை கசக்கினாள்.
தான் இருந்தது இஷான் அறையென்று தாமதமாக புரிய, அவளாக பைரவியிடம், “வாஷ் ரூம் போகணும். அது அவர் ரூம்னு இங்க சொன்னது காதுல விழுந்தது.’ என்று வந்தாள்.
“பிரதன்யா அறையை சுட்டிக்காட்டி, “ஏதாவதுனா கேளும்மா” என்றார் பைரவி .
நன்றி நவில்ந்து துகிரா பிரதன்யா அறைக்கு சத்தமின்றி நுழைந்தாள். முகமலம்பி, கொண்டு வந்த பேஸ்ட்டை பிரஷில் பல் விலக்கி, குளித்திட முடிவெடுத்தாள்.
நேற்று பயணம் செய்து வந்ததும் அப்படியே இருக்க, குழந்தை அருகே அழுக்கோடு இருக்க வேண்டாமென முடிவெடுத்தாள்.
அதனால் குளிக்க சென்றாள்.
பாதி குளிக்கும் போதே அமுல்யா அலறும் சத்தம் கேட்டது.
அவசரமாய் ஷவரில் குளித்து வேகவேகமாய் உடைமாற்றினாள். அமுல்யா அழுவதை தொடர விடக்கூடாதென்று ஓடிவந்திட, இஷான் அமுல்யா கையை பிடித்திருக்க, துகிரா வந்ததும் குழந்தை கையை உதற முறுங்கியது.
பிரதன்யாவோ, கையை பிசைந்து நிற்க, பைரவியோ பேத்தியை சமாதானம் செய்ய முயல, எதையும் அமுல்யா காதில் வாங்காமல் அம்மா” என்று கையை உதறுவதிலேயே குறியாக இருந்தாள்.
இதில் துகிரா வரவும், குழந்தை திரும்ப, துகிராவே இஷானின் கையை பிடித்து குழந்தை கையை விடுவித்து அமுல்யாவை அணைத்துக்கொண்டாள்.
அன்னையை கண்டதும் “அம்மா” என்று தேம்ப, “வந்துட்டேன்மா அழாதிங்க” என்று கண்ணீரை துடைத்தாள். ஒரளவு உடல்சூடு குறைந்திருக்க, “ஏன் அழறிங்க?” என்று கேட்டாள்.
குழந்தை சுற்றியுள்ள மனிதரை பார்த்து பயந்திட, “அமுல்யா… இது உங்க பாட்டி வீடு. இவங்க உங்க பைரவி பாட்டி. இது உன்னோட அத்தை.” என்று கூற, குழந்தையோ இஷானை கண்டு தான் நடுங்கியது.
“என்னை அறிமுகப்படுத்து. அப்பானு சொல்லு. இந்த உலகத்துலயே அவளுக்கு நான் தான் முக்கியம்னு சொல்லு” என்று கத்தினான்.
அவன் தொடுகையை தானே குழந்தை விருப்பமின்றி வீல்லென்று கத்த காரணம். தந்தையாய் அதிகளவில் காயம் கொண்டான்.
“என்னத்த அறிமுகப்படுத்த? குழந்தை பார்ககறப்ப, நீங்க என் கழுத்தை நெறிச்சிங்க. அதான் குழந்தை பயப்படறா. அன்னிக்கு கொஞ்சம் நிதானமா இருந்திருக்கலாம்ல. ஆள் வளர்ந்த் அளவுக்கு அறி?” என்றவள் இஷான் பார்த்த தீப்பார்வையில் கப்சிப்பென்றானாள்.
“அண்ணா குழந்தை உன்னை நோட் பண்ணறா. நீ இப்படியே செய்தா எப்படி பழகுவா” என்று கூறவும், “இந்த வீட்ல நீங்க தான் அறிவா.. சரியா பேசறிங்க” என்று இஷானின் முகமாற்றத்தின் ஒவ்வொரு பார்வைக்கும் பேச்சை கத்தரித்து மாற்றிக்கொண்டாள்.
பைரவி இதை பார்த்து தனக்கு தோன்றிய விபரீத எண்ணத்தோடு முடிச்சிட்டார்.
இஷானுக்கு இரண்டு மாதம் கடந்தால், முப்பது வயது. இந்த பெண் துர்காவை விட ஆறு வயது சிறியவள். துர்காவே இஷானை விட ஒரு வயது ஜூனியர். அப்படி பார்த்தால்… துகிராவுக்கு தற்போது திருமண வயது. அதனாலோ என்னவோ உங்களில் யார் அழகு என்ற விதத்தில் போட்டிப் போட்டுக்கொண்டு இளமையில் இருந்தனர்.
இருவரையும் ஒன்று சேர்த்து அழகு பார்த்த பைரவிக்கு இது சாத்தியமா? என்று திகிலை தந்தது.
ஆனால் இஷான் இத்தனை வருடத்தில் துர்கா போனப்பின் திருமணம் என்ற பேச்சையே எடுக்க விடாமல் சுத்தினான். துர்காவை தவிர யாரையும் நினைக்க முடியாது என்று திட்டவட்டமாய் உரைத்தானே.
இப்பொழுது அமுல்யாவை காரணம் காட்டி துர்கா உருவத்தில் உள்ள துகிராவையே மணக்க வைக்கலாம். ஆனால் இஷான் ஒப்புக்கொள்வானா? துகிரா சம்மதிப்பாளா? சூரியன் மேற்கே உதிக்க வைப்பது போல அல்லவா இவர்களை மாற்ற வேண்டும்.
“என்னம்மா பார்த்துட்டே இருக்கிங்க. அண்ணாவை அதட்டுங்க. என்னலாம் பேசறார்.” என்று உலுக்க, “என்னடி பேசினான். நான் கவனிக்கலை.” என்று பைரவி பிரதன்யாவிடம் கேட்டார்.
“அய்யோ அம்மா.. அந்த அண்ணி குளிக்க போனாங்க. என் குழந்தையை பார்த்துக்காம, யாரை மயக்க இந்த நேரத்துல குளிக்க போனனு கேட்கறார்.” என்றதும் பைரவியோ, “இஷான்… என்னடா இப்படி நஞ்சை கக்குற.” என்று அதட்டினார்.
துகிராவோ, “குழந்தை தூங்கிட்டு இருந்தா. எந்திரிச்சா என்னை நகர விடமாட்டா. அதனால தான் குளிக்க போனேன்.
ஏன் இவர் எட்டியெட்டி பார்ப்பதை பார்த்து தான், குழந்தையை இவர் பொறுப்புல விட்டுட்டு போனதே. குழந்தையை பார்த்து ரசிப்பார்னு நினைச்சேன். இவர் தொடவும் குழந்தை எந்திரிப்பானு எனக்கென்ன தெரியும். இவருக்கு பாவம் பார்த்தேன் பாருங்க… என்னை சொல்லணும். யாரை மயக்க குளிச்சேன்னு அசிங்கமா பேசறார்.
நேத்து இங்க வரணும்னு கிடைச்ச பஸ்ல டிக்கெட் எடுத்து வந்தேன். தூசி அழுக்குனு உடம்புல படிந்திருக்கும். குழந்தைக்கு அபெக்ட் ஆகக்கூடாதேனு யோசிச்சேன்.
உங்களை அப்ப அறிவில்லாதவர்னு சொல்ல தயங்கினேன். ஆனா இப்ப சொல்லறேன். நீங்க வடிகட்டிய முட்டாள் முட்டாள் முட்டாள்.” என்றதும் துகிரா கன்னம் சுள்ளென்று எரிந்தது. இஷானின் கைவண்ண்ததில் கன்னம் அறையப்பட்டு தீயாக எரிய, பிரதன்யாவோ “போச்சு” என்று தலையில் கைவைக்க, பைரவியோ “என்ன இஷான் இப்படி பண்ணிட்ட” என்று பதற, ரிஷியோ ‘அச்சோ’ என்று பதற, துகிரா அதிர்ச்சியில் உறைந்தவளாக மாறினாள்.
அமுல்யாவோ இத்தனை நேரம் அழுது அம்மா வேண்டுமென பிடிவாதம் செய்த குழந்தை இஷானின் செய்கையில் கோபம் வந்து, அவனை பிஞ்சு கையால் அடித்தாள்.
தன் கால் உயரத்தில் இருந்த குழந்தை யாரோ ஒருத்தியான துகிராவை அடித்ததும், தன் ரத்தம் தன்னையே அடிப்பதை எண்ணி நொந்தவனாக மண்டியிட்டான்.
அமுல்யா இஷானின் நெஞ்சில் அடித்துமுடிக்க, “அடி…நல்லா அடி.. இப்படியாவது என்னை டச் பண்ணு. வலிக்குது அமுல்யா… நீ அடிக்கிறதால இல்லை. என்னை அப்பாவா பார்க்காம ஒதுங்கறதால” என்று அழவும் துகிராவோ, அவன் நிலையில் இருந்து யோசித்தவளாக இஷானையும் அமுல்யாவையும் மாறிமாறி பார்த்தாள்.
துகிரா பிரதன்யாவின் அறைக்கு செல்ல, அமுல்யாவுமே பின்னாடியே ஓடினாள்.
இஷானோ மண்டியிட்டவன் அங்கேமே உடைந்தவனாய் மகள் செல்லும் தடயத்தை பார்வையிட்டான்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 evan romba pesuraney 🙄 kuzhandhai dhan paavam nadula maatikitu muzhikidhu🤔🧐
Ishan u need some patience to get affection from the kid. Very intresting sis.
கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே !
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 6)
அய்யய்யோ..! ஏற்கனவே கண்ட படி வாயை விடறான், கழுத்தை நெறிக்கிறான், அடிக்கிறான், முத்தம் கொடுக்கிறான். இப்ப அழ வேற செஞ்சிட்டான். இவன் பண்ற கூத்துல, துகிரா இப்ப பெட்டியை தூக்கிட்டு ஊரைப் பார்க்க கிளம்பிடுவா போலயிருக்கே..? இதுல இவங்க ரெண்டு பேரையும் எங்கயிருந்து சேர்த்து வைக்குறது ?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Ishan ku portrait konjam kooda lla
Very interesting super super super super super super super super super
👌👌👌👌 interesting
Nice epi 👍