Skip to content
Home » கண்ணிலே மதுச்சாரலே-11

கண்ணிலே மதுச்சாரலே-11

அத்தியாயம்-11

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

   ஒரு வாரம் நெட்டி முறித்து தள்ளிவிட்டு, மனதை அழுத்திய பாரத்தோடு, இதோ திலோத்தமா ஆதித்யா வேலை செய்யும் அலுவலகத்தின் முன் வந்து நின்றாள்.

   ரிசப்ஷனில் ஆதித்யா பெயரை கூறி பேச அழைத்தாள்.
   ஆதித்யா பல்லை கடித்து நேரம் ஒதுக்கி, வெளிவந்து திலோத்தமாவை பார்க்க வந்தான்.

  யாரேனும் பார்த்து கேள்வி எழுப்பும் முன், அவள் கையை பிடித்து இழுத்து கீழே கேண்டீனுக்கு வந்தான்.

    “அப்பனுக்கும் மகளுக்கும் ஒரே புத்தியா? நான் வேலை பார்க்குற இடம் வந்து தான் பேசுவிங்களா? எதுக்கு டி வந்த?” என்று கத்துவது கூட பக்கத்து இருக்கையில் இருப்பவருக்கு கூட கேட்காத விதத்தில் கத்தினான்.

  ஆதித்யா தன்னை கைப்பிடித்து அழைத்து வந்ததில் லயித்துயிருந்த திலோத்தமா அவனது தீண்டலில் பாகாய் நெகிழ்ந்திருந்தாள்.

   அவன் தீண்டலை நெகிழ்வாய் காணவும் கையை விடுவித்தான். அதன் பின்னே அவன் பேசியது மனதை வந்தடைந்தது.

  “ஒரு வாரமா உங்க சுவாசம், வாசம் இல்லாம இருந்தேன். இந்த தீண்டல்… இன்னும் நீண்டிருக்கலாம்.” என்றவள் கண்ணீரை துடைத்து, “காலையில வீட்டுக்கு வந்தா ஆபிஸ் கிளம்பற அவசரத்துல இருப்பிங்க. நைட் பேசலாம்னா கதவை திறக்க மாட்டேங்கறிங்க. அப்படியே நான் வாசல்ல நின்றுயிருந்தா, என் தலையை பார்த்து அன்னைக்கு முழுக்க வீட்டுக்கே வராம இருந்திடறிங்க. அதான் ஆபிஸ்ல என்றால் இரண்டு வார்த்தை பேசுவிங்கன்னு வந்தேன்” என்றுரைத்தாள்.
 
  “என்ன பேசணும்…‌ எல்லாம் உங்கப்பாவிடம் பேசியாச்சு. இனி பேச ஒன்னுமேயில்லை. நான் தெளிவா தானே சொன்னேன்.
   ஏன் உங்கப்பா வேற மாப்பிள்ளை பார்க்கற வரை உனக்கு பொறுமை இல்லையா?

  உன் கைப்பிடிச்சு பேச, உங்கப்பன் வேறொருத்தனை பார்த்து வைப்பானே. அதுக்குள்ள என்ன அவசரம்” என்று கேட்க அந்த அமில வார்த்தையில் துடித்தாள்.

  “அப்பா என்னிடம் எல்லாம் சொன்னார். உங்க அப்பாவிடம் வேலை பார்த்து, அவரை ஏமாத்தி சொத்தை பிடுங்கி, அது மாமாவுக்கு தெரிய வந்து இறந்ததாகவும், அந்த இறப்புக்கு பின்ன நீங்க சொந்தக்காரங்களிடம் அடைக்கலம் ஆனதா நினைச்சார்‌.

நீங்க ஆசிரமத்துல வளர்ந்து இப்படி பார்வதி அம்மா மகனா வந்து நிற்பிங்கன்னு நினைக்கலை. அவர் செய்த தப்புக்கு அவரை தண்டிங்க.

  என்னை ஏன் தண்டிக்கறிங்க? நீங்க என்னை பழிவாங்கவா கல்யாணம் செய்திங்க?” என்று கேட்டு விட்டாள். ஆதித்யா அவளோடு வாழ்ந்த நிமிடம் பழிவாங்கும் படலமாகவா வாழ்ந்தான்? இல்லையே… அவன் நெருக்கம் அப்படி இல்லையென்று திலோத்தமா உள்ளம் உரைக்கின்றதே‌.

  “முதல்ல பழிவாங்க தான் கல்யாணம் செய்தேன்.
  பின்ன வேற வாய்ப்பு எனக்கில்லை. உங்கப்பாவை மாதிரி உறவாடி கெடுக்குற புத்தி எனக்கு வரலை.
  
    உங்கப்பாவா தான் வரதட்சணையை அள்ளி தந்து என் அடிமனசுல இருந்த எரிமலையை கனலை கிளறிவிட்டார்.

  வீட்டோட மாப்பிள்ளையா வா, வரதட்சனை என்ன வேண்டும்னு கேட்டு கேட்டு என்னை இம்சிக்கவும், யார் காசு யாருக்கு தர்ற? இதெல்லாம் என் அப்பாவோடதுனு வெடிச்சிட்டேன்.

   இனியும் உன்னோட வாழ்ந்தா அது நல்லாயிருக்காது. உங்கப்பா சொல் கேட்டு நீயே விஷத்தை வச்சி கொல்லுவ. இல்லை.‌‌… நீ என்னை என்ன செய்வன்னு நானே சந்தேகத்தோடு நடமாடுவேன். இந்த இரண்டுமே வேண்டாம். நாம பிரியறது பெஸ்ட். கூடிய சீக்கிரமே விவாகரத்து பத்திரம் அனுப்பறேன். மனமொத்து பிரியறோம்னு எழுதி கையெழுத்து போடு.
   உங்கப்பா எவனை பார்த்து கட்டி வைக்ககறாரோ அவனை கல்யாணம் பண்ணிக்கோ.
   தயவு செய்து என்னை தேடி வராத. நமக்குள்ள நடந்த எல்லாம்… எல்லாமே முடிந்தது.

பெத்தவங்க செய்த பாவம் பிள்ளைங்க தானே தண்டனை அனுபவிக்கணும். உன் ஒருத்திக்காக தானே பணம் பணம்னு அலைந்தார். அந்த பணத்துல தானே நீ வளர்ந்த. உங்கப்பா உன் நிலையை பார்த்து இரத்த கண்ணீர் விடணும்.” என்று கூறினான்.

   “பிரியறது தான் முடிவுன்னு நினைக்கறிங்களா?” என்று திலோத்தமா கண்ணீரோடு கேட்க, “ஆமா” என்று கூறவும், “எங்கப்பா செய்த தண்டனைக்கு நானும் தண்டனை அனுபவிக்கணும். உங்களுக்கு அதானே வேண்டும். சரி… ஒருவேளை நான் வேறொருத்தனை கல்யாணம் செய்து சந்தோஷமா வாழ்ந்தா, எங்கப்பாவுக்கு தண்டனை கிடைக்காதே, எனக்கும் தண்டனை இருக்காதே. அப்ப என்ன செய்விங்க.
  நாம பிரியறது யாருக்காக தண்டனை?” என்று கேட்டதும் ஆதித்யா லேசாய் அதிர்ந்தான்.

   ஆதித்யாவை விட்டு திலோத்தமா வேறு ஒருவனை மணக்க மாட்டாளென்ற கர்வத்தில் அல்லவா அவன் பேசியது. திலோத்தமா மனம் மாறினால்?

   அடுத்த நிமிடம் ஏதேதோ சிந்தித்தவன் “நான் சாப்பிட்டு தூக்கி போட்ட எச்சி இலை நீ.

இந்த எச்சி இலையை திரும்ப கழுவி பூஜைக்கு போகுமா என்ன? அப்படியே போனா போய் தொலை. எனக்கு எந்த கவலையும் இல்லை.” என்று வீம்பாய் பேசினான்.

   திலோத்தமா அவமானமாய் கருதி, மெதுவாய் தலைகுனிந்து அதே நிதானத்துடன் அவனை காண தலையுயர்த்தினாள்.

  தன் இரு கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்து, “தேங்க்ஸ்… நீங்க உங்க வேலையை பாருங்க” என்று நடந்தாள். ஆதித்யா கோபமாய் எழுந்து அவன் பணி செய்யும் இரண்டாம் தளத்திற்கு சென்றான். அங்கிருந்து கீழே எட்டி பார்த்தான்.

   தள்ளாடிய நிலையில் திலோத்தமா தண்ணீர் பாட்டிலை திறந்து தண்ணீரை குடித்து முடித்து, அங்கிருந்த தூணில் சாய்ந்தாள்.

ஆதித்யா மனம் அவளுக்காக துவள, அவளோ அந்த பில்டிங்கை ஏறிட சட்டென மறைந்தான்‌.

   அவள் அதன் பின் ஆட்டோ பிடித்து சென்றதை அறிந்து, “கார்ல வரலையா இவள்” என்று எண்ணி கொண்டான்.
  
   அவங்க அப்பாவுக்கு தெரியாம வந்திருப்பா.’ என்று மனசாட்சி கூறியதும், அலுவலக பணியில் கலந்தான்.
  
   அவனை பொறுத்தவரை திலோத்தமா சுரேந்திரனின் மகள், அவள் விவாகரத்து பெற்றுவிட்டு  இரண்டாவது திருமணம் செய்தாலும் செய்வாள். 

  இனியும் தன்னோடு வாழ விடுவாரா சுரேந்திரன் என்ற எதார்த்தம் புரிந்து யோசித்தான்.

   அதன் பின் வந்த நாட்கள் தனியாளாக தன் வீட்டில் உலாத்தினான்.

   பார்வதி அன்னை வாரத்தில் இரண்டு நாட்கள் தங்கிவிட்டு செல்வார். அதுகூட கைலாஷ் வந்து அழைத்து செல்வதில் குறியாக இருக்கவே, அன்னையை வலுக்கட்டாயமாக அவர் கணவர் கைலாஷ் வீட்டிற்கே போக சொல்வான்.

  “ஏன்டா நான் இருக்கறேனே” என்று பார்வதி கூற, “அம்மா… இங்க வந்தா நீங்க என்னை பத்தி கவலைப்படறிங்க. எனக்கு அது கஷ்டமாயிருக்கு. அதோட நீங்க கைலாஷ்அப்பா கூட தான் இருக்கணும்.” என்று நியாயம் பேசுவான்.

  பார்வதியோ, “அப்ப நீயும் திலோத்தமாவை அழைச்சிட்டு வந்துடுடா. அவ நீ கூப்பிட்டா வந்துடுவா. அவ உன்னை அந்தளவு நேசிக்கறா” என்று கூறுவார். மகன் மனைவியோட குடும்பமாய் வாழ தானே எந்த தாயும் விரும்புவார்.

   இதில் வளர்த்த தாயாக இருந்தாலும் அன்பு கொண்டவராக இருந்தால், இப்படி தானே எண்ணுவார்.

  ஆதித்யாவோ “ப்ளீஸ் மா அவளை பத்தி பேசாதிங்க. நீங்க வர்றப்ப எல்லாம் அவளை பத்தி பேசும் போது எனக்கு உங்களிடம் சகஜமா பேச முடியலை.
   ஏதோ உங்க பேச்சை மீறுற மாதிரி கில்டி ஃபீலிங். புரியுதா அம்மா. அவளை பத்தி பேசாதிங்க” என்று கோரிக்கையை அழுத்தமாய் உரைத்தான்.

பார்வதிக்கு கடைசி வாய்ப்பும் போனது. இனி திலோத்தமா தலையெழுத்து ஆதித்யா மனம் வைத்தால் மட்டுமே‌ முடியும் என்று இறைவனை வேண்டினார்.

    திலோத்தமா அவள் வீட்டு பால்கனி ஊஞ்சலில் தலை சாய்த்து, வெறித்த பார்வையில் இருந்தாள்.
 
  சரியாக தந்தையோடு பேசுவது இல்லை, வீட்டில் இந்த பால்கனி மட்டுமே இருப்பது போல் எந்நேரமும் அங்கு இருப்பாள். ஹாலுக்கு வந்து உணவு மேஜையில் தந்தையோடு பேசி சிரித்து சாப்பிட மறந்தாள்.
  
  சுரேந்திரனே இரண்டு மூன்று முறை உணவை கொண்டு வந்து, “அந்த வெறும் பையலையே நினைக்காதம்மா” என்பார்.

   “யாருப்பா வெறும் பைய? இந்த சொத்து வீடு எல்லாமே அவருடையது.” என்று கூறுவாள்.

  சுரேந்திரனோ அதன் பின் ஆதித்யாவை பற்றி பேசுவதை தவிர்த்தார்.
  
   அதற்கு பதிலாக அழகழகான இளைஞர்களின் புகைப்படம் கொண்டு வந்து காட்டினார்.

   தந்தை கொண்டு வந்த காரணம் அறிந்தவள், “நான் என்ன வேசியா அப்பா” என்று கேட்பாள்.

  “அம்மாடி ஏன்டா இப்படி பேசற. அவனோட வாழவும் முடியாது‌. நான் செய்த பாவத்துக்கு அவன் உன்னை மன்னிக்க மாட்டான். அவன் உன்னை கல்யாணம் செய்ததே பழிவாங்க டா.” என்று கூறுவார்.

  “நான் இப்படி இருப்பது தான் ஆதித்யாவுக்கு சந்தோஷம்னா என்னை இப்படியே விடுங்க” என்று கூறுவாள்.

   சுரேந்திரன் தன் ஒரே மகளுக்காக குறுக்கு வழியில் இரு உயிரை பறித்து சேர்த்த சொத்து, இன்று ஏன் சேர்த்தோம் என்ற இக்கட்டில் தள்ளியது.

  அந்தளவு திலோத்தமா வசதி வாய்ப்பை தள்ளி வைத்து மிடில்கிளாஸ் மக்கள் நிலைக்கு வந்து நின்றாள்.

    எங்கு சென்றாலும் காரில் பறந்தவள், நடராஜா சர்வீஸும், ஷேர் ஆட்டோவும் பழகினாள். உணவெல்லாம் அளவோடு பழகினாள்.

    முக்கியமாக வேலைக்கு சென்று, மாத சம்பளம் பெற்று வாழ ஆரம்பித்தாள்.
   தந்தை பணத்தை தொடாமல் தவிர்த்தாள்.

   இதெல்லாம் கண்டு அவள் தந்தை சுரேந்திரன் உள்ளத்தில் குமறினார். கைலாஷிடம் தினமும் புலம்ப ஆரம்பித்த சுரேந்திரனோ, ஒருகட்டத்தில் “செத்துடலாம் போல இருக்கு டா. வினுசக்ரவர்த்திக்கு நான் செய்த துரோகத்துக்கு இத்தனை நாள் வருத்தப்பட்ட தில்லை. ஆனா என் மக வீட்டோட அவ அறைக்குள்ளே அடைந்திருக்கும் போது ஒவ்வொரு நிமிஷமும் நான் செய்த தப்பு புரியுது.

   அவனிடம் மன்னிப்பு கேட்டா விடுவானா? போனது இரண்டு உயிர். அதுவும் அவன் அப்பா அம்மா. அவன் கண்ணெதிரில் இறந்தாங்களே” என்று குலுங்கி குலுங்கி அழுதார்.

   கைலாஷோ “அழாதடா..‌. நீ என்ன இப்படி நடக்கும்னு தெரிந்தா செய்த. ஒவ்வொருத்தனுக்கும் பணக்காரனா ஆகணும்னு பேராசை இருக்கு. சந்தர்ப்பம் கிடைச்சதும் நீ அந்த துரோகத்தை செய்த. உனக்கென்ன விபத்து நடக்கும்னு ஜோசியமா தெரியும்? இல்லை அவங்க விபத்துல இறந்துடுவாங்கன்னு நினைச்சியா? ஏதோ சொத்து இல்லாம அவதிப்படுவாங்க, அப்படி தானே நடக்கும்னு பண்ணியிருப்ப.

  இப்ப தலைகீழா காலம் கடந்து உன் பொண்ணை பழிவாங்க ஆதித்யாவே கல்யாணம் செய்வான்னு யாருக்கு தெரியும்.

    நான் கூட தான்…. பார்வதி கழுத்தை பிடிச்சி தள்ளினேன். குழந்தை பிறக்கலை நீ வேண்டாம் நான் இன்னொருத்தியை கல்யாணம் பண்ணிக்கறேன்னு விவாகரத்து கொடுத்து அனுப்பினேன்.

  இப்ப காலம் கடந்து நான் இரண்டாவதா கல்யாணம் செய்தவ என் பி.ஏவோட படுக்கையில் பகிரவும் அதை பார்த்து அவளை தொரத்திட்டு, பார்வதியை தேடி வந்தேன். கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டேன். 

  நீயும் மன்னிப்பு கேட்டு பாரு‌. அவன் மன்னிப்பான்.” என்று சாதாரணமாக உரைத்தார். அவருக்கு வந்த ஞானம் எளிதாக எடுத்துக்க வைத்தது. 

  சுரேந்திரனோ “நீ ஒரு உயிரை ஒதுக்கி வச்சியிருந்த கைலாஷ். ஆனா நான் இரண்டு உயிர் இறந்ததுக்கு காரணமா இருக்கேன். இதுக்கு மன்னிப்பு வழங்க மாட்டான்.
   மன்னிச்சு என் மகளோட வாழவும் மாட்டான். அவனுக்கு என்ன சக்கரவர்த்தி பரம்பரை. அவன் முகமே ராஜகளை, இந்நேரம் கூட யாரைவது மணக்க தயாரா இருப்பாங்க.
  
  என் மக தான்… என் மக வாழ்க்கை தான்… இனி எந்த முன்னேற்றமும் இல்லாம பட்டு போச்சு.” என்று துடித்து தலையில் தலையில் அடித்து அழுதார்.

-தொடரும்.

8 thoughts on “கண்ணிலே மதுச்சாரலே-11”

  1. Kalidevi

    Ipo tha puriuthu la ethu evlo periya vishayam nu ethana varushama atha pathi kavalaye padathathuku serthu than ipo un ponnu valkai ippadi aeiduchenu ninachi ninachi feel panra mari aeita ipo aluthu oru use um illaye ena panuva eppadi un ponna vala vaika pora

  2. Dharshini

    Super sis nice epi 👌😍 eppo pirinji enna payan yedhaium seyirathuku munnadi yosikanum eppdi mathavanga vaazkhaiya kedutha edhan nilamai🙄 edhula badhikka patadhu thilo dhan paavam🥺

  3. Pavam seiyurathuku ah na palan ah ippo surendiran anubavaikiraru ippo kooda Thilo ipafi otu thandanai kuduka la na avar thappu ah urandhu iruparu na ra thu doubt than aana enna Thilo than pavam ivaruku ponnu ah piranthathu na la ippo kasta padura ah

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!