Skip to content
Home » கண்ணிலே மதுச்சாரலே-5

கண்ணிலே மதுச்சாரலே-5

அத்தியாயம்-5

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

   அலைப்பேசி எண் பரிமாறப்பட்ட காரணத்தால் ஆதித்யாவோடு பேச ஆசைப்பட்டு நிறைய குறுஞ்செய்தியை அனுப்பினாள் திலோத்தமா.

  பத்து குறுஞ்செய்தி அனுப்பினால் பதினொன்றாவது முறைக்கு பதில் அளித்தான் ஆதித்யா.

   திலோத்தமா தான் அவசரப்பட்டு அதிகமாக பேசி தொலைப்பதாக நினைக்க வைத்தான். உண்மையும் அது தான்‌. அவள் அதிகமாகவே பத்து நிமிடத்திற்குள் ஆயிரம் பேச்சை பேசிட துடித்தாள்.
  
   ஆதித்யா ஒற்றை வார்த்தையில் அவளது ஆசைக்கு கடிவளமிட்டு விடுவான்.

  “திலோத்தமா நான் ஆபிஸ்ல இருக்கேன்‌.”

“மீட்டிங் இருக்கு”

“ஐ காண்ட் டெக்ஸ்ட்” இப்படி ஏதாவது அனுப்பி தொலைக்க, திலோத்தமா அவனை தொந்தரவு செய்வதை தவிர்த்தாள்.

  சரியாக பேச முடியாத பட்சத்தில் பார்வதியிடம் பேசுவாள். மகன் அவனது குணத்தை அவனே கூறாததை எல்லாம் தாயார் ஒன்று விடாமல் கதை கதையாக தெரிவிப்பார்.

  அவனுக்கு இது பிடிக்கும், இது பிடிக்காது, அவன்‌ இப்படிபட்ட ஆள். முதலில் எல்லாம் தமிழே அவனுக்கு வராது. ஆங்கிலப் புலமை மட்டுமே. போகப்போக தமிழை தான் நேசித்தான். ஆங்கிலம் தேவைக்கு ஏற்ப பேசுவான்.

   யாரிடமும் நெருக்கமாக பழகாதவன். சில நேரம் அழுவான். ஆம் அழுவான். தனியாக ஒருமுறை பதினாறு வயதில் அழுதவனை, பார்வதி கவனித்து கேட்டதற்கு, தாய் தந்தையரை கார் விபத்தில் கண்ணெதிரே பறிக்கொடுத்த கதையை கூறியிருந்தான். அதையெல்லாம் அனைத்தும்
மருமகளிடம் பகிர, சில நேரம் ஆதித்யா பேசாமல் கடந்தாலும், அவன் மனதில் சிறுவயது வலி இருப்பதாக அறிந்து புரிந்து கொண்டாள்.

  அதனாலோ என்னவோ விலகி நழுவியவனை மணந்தப்பின் அன்பு செலுத்த ஆசைக்கொண்டாள்.

   அவள் கண்ட கனவு நனவாக காலம் வேகமெடுத்தது.

   திலோத்தமா ஆசைப்பட்டதை விட வெகு விமர்சனையாக‌ ஆதித்யாவோடு திருமணம் நடைப்பெற்றது.

  ஆளாளுக்கு வாழ்த்து கூறி பரிசுப் பொருட்களை தந்து, திலோத்தமாவை திக்குமுக்காட வைத்து திளைத்தனர்.‌

பூமியில் இருக்கின்றாயா? வானத்தில் மிதக்கின்றாயா? இது இரவா? பகலா? எது கேட்டிருந்தாலும் அறியாத அளவிற்கு தன் அருகேயிருந்த ஆதித்யா மீதே தன் உயிரை வைத்திருந்தாள்.

  நாயகன் சார்பில் அவன் அலுவலக நண்பர்களும் கல்லூரி நண்பர்களும் வந்திருந்தனர்.‌ அவர்கள் மட்டுமே அவன் கண்களுக்கு தெரிந்தனர் போல பார்த்து பேசி புகைப்படம் எடுக்கும் தருணம் ஆனந்தமாய் சிரித்து வைத்தான்.

  மற்ற புகைப்படத்திற்கு எல்லாம் அளவாய் அளந்து சிரித்தான்.

  இதில் கைலாஷ் இந்த திருமணத்தை வைத்து தன் முன்னாள் மனைவியோடு சுகமாக வாழ்வதாக பகட்டாக பறைசாற்றிக் கொண்டார் கைலாஷ். 

   திருமணத்தின் ஆதிமுதல் அந்தம் வரை விவரித்து கூற ஆதித்யாவிடம் அபிப்ராயம் கேட்டால் நிச்சயம் ‘மேரேஜ் முடிந்தது’ என்று பதில் தந்திருப்பானே தவிர அவன் திருமணத்தில் விமர்சையாக, பகட்டாக, செலவழித்த ஆடம்பரத்தின் ஒன்றை பற்றி கூட குறிப்பிட்டிருக்க மாட்டான். ஏன் கல்யாண சாப்பாடாக என்னயென்ன உணவு பரிமாறப்பட்டதென்று கூட அவன் கவனித்தானா என்பது கேள்விக்குறியே.!

அந்தளவு அவன் திருமணத்தில் பற்றுதலோடு நின்றான்.‌

அவனே அவனது திருமணத்தை இந்தளவு பற்றுதலோடு கடக்க, வார்த்தையில் திருமணத்தை வர்ணிக்க வேண்டுமா என்ன?!

   மேலும் அவன் மனநிலை அறியாது தனியாக ஹோட்டல் அறையில் சாந்தி முகூர்த்தம் வைக்க சுரேந்திரன் ஏற்பாடு செய்ய, பெண் வீட்டில் சாந்தி முகூர்த்தம் இருந்தாலே போதும் என்று முடித்துவிட்டான் நாயகன்.‌

   மகளும் ஆதித்யா பேச்சிற்கு சம்மதமாய் கூறிமுடித்திட, சுரேந்திரனும் சரி பெண்ணின் ஆசைப்படி விட்டுவிட்டார்.‌

  அலங்கார தேவதையாக அலங்கரித்து முதலிரவு அறைக்கு, திலோத்தமா கைகள் நடுங்க வந்தாள்.

   ஏற்கனவே அவ்வறையில் ஆதித்யா இருந்திருக்க அவனை தேடி கண்களை சுழற்றினாள்.

   பால்கனியில் கையை கட்டி தூரத்தில் காரிருளில் கவ்வியிருக்க, பிறைநிலவு தென்பட்டதை வெறித்தான்.

   “இங்கயிருக்கிங்களா?” என்று கேட்க, அவளை திரும்பி பார்த்தான்.

    “பால்” என்று திலோத்தமா நீட்ட, “அங்க வை” என்றான் ஆதித்யா.

  அளவுக்கு அதிகமாக திலோத்தமா ஆதித்யாவிடம் பேசியது கிடையாது‌. அதுவும் இந்த முதலிரவு சமாச்சாரம் எல்லாம் பேசவேயில்லை. சாதாரண முத்தம் கூட ஆதித்யா திலைத்தமாவிடம் இந்த இடைப்பட்ட நாளில் கேட்டதில்லை.
  அப்படியிருக்க திலோத்தமாவிற்கு நடுக்கம் கூடியது. ஆனால் ஆதித்யா என்றவனோ, என்னவோ இவளோடு கூடி களைத்து ஒரிரு வருடம் வாழ்ந்தவனாக மிக இயல்பாய் “பாலை அங்க வை’ என்கின்றான்.‌

  இவன் தோரணையிலும் பதட்டமில்லை.

  திலோத்தமாவுக்கு மட்டும் பயம் தொண்டை வரை கவ்வியிருந்தது.

    “ஹோட்டல்ல ரூம் டெகரேட் வேண்டாம்னு சொல்லிட்டேன் கோபமா?” என்று மட்டும் கேட்டான் ஆதித்யா.

  “அப்படியெல்லாம் இல்லை சொல்லப்போனா அம்மா இல்லாததால் எனக்கு அங்க புதுயிடம்னு பயம் கூடுதலா இருந்திருக்கும்.

  இப்ப என்னோட ரூம் என்பதால் கொஞ்சம் பயம் குறைந்திருக்கு.” என்று கூறினாள்.

   அவள் கூறி முடிக்க ஆதித்யா அவளருகே வந்து கையை நீட்டவும், நடுங்கியது திலைத்தமா விரல்கள்.

   அதை வருடி கொடுத்தபடி, முதல் முத்தம் வைத்தான்.

  ஆதித்யாவின் மீசையும் சின்ன தாடியும் திலோத்தமாவிற்கு கூச்சத்தை கொடுக்க, மேனி சிலிர்க்க உதடு தந்தியடித்து நின்றாள்.

     அவள் பயத்தை கண்டு பிறைநிலவை காண திரும்பியவன், ”நாம இதுவரை நெருக்கமா பேசி பழகியது கிடையாது. ஆனா இந்த இரவு நெருக்கமா… ” என்றவன் அவளை ஓர் நொடி அளவிட்டு, மீண்டும் வானத்தை வெறித்தான்.

  “உனக்கு இந்த சடங்கு கொஞ்ச நாள் கழிச்சு நடக்கணும்னா சொல்லு. நான் வெயிட் பண்ணறேன்.‌ இல்லை… பழகறதே இதுலயிருந்து ஆரம்பிப்போம்னா பாலை கொண்டா” என்று கூறிவிட்டான்.‌

  திலோத்தமா கைகள் பிசைந்து நின்றாள்‌. ‘இதென்ன… பழக நேரம் எடுத்துப்போமா?’ என்று ஒரு நிமிடம் தோன்றியது. ஆனால் ஏற்கனவே கூட்டுக்குள் இருப்பவனை இன்னமும் பழகியப்பின் என்று தள்ளி நிறுத்த மனமில்லை.

   இன்றே இனிய தாம்பத்தியம் இனித்தாலும், சம்மதம் கூறிவிட்டு ஆதித்யாவின் முடிவை விட்டுவிட வேண்டுமென்று கண்ணாடி பால் டம்ளரை கையில் எடுத்தாள்.

  ஆதித்யா வானத்தை பார்த்து இருந்தாலும் தன் அருகே திலோத்தமா அசைவு தெரிய திரும்பாமல் நின்றான்.

  கொலுசொலிகள் அவள் சமீபத்தில் வந்ததை உரைத்தப்பின் இடது பக்கம் திரும்ப, கையில் பால் டம்ளரை ஏந்தி நின்றாள்.

  “நீ பஸ்ட் சிப் பண்ணிட்டு கொடு.” என்று கூறிவிட்டான்.‌

  பதட்டத்தில் பாதி டம்ளர் வாயில் வைத்து பருகினாள்.

  அதன் பின் “பாதி குடிச்சிட்டேன்” என்று குரல் தந்தாள்.

  மெதுவாக அவள் புறம் திரும்பியவன், வெண்ணிற பற்கள் தெரிய புன்னகைத்தான்.

  அவனது சிரிப்பில் மொத்தமாய் தொலைந்தவளாக அவனையே பார்க்க, பால் குடித்து வெள்ளை மீசை அரும்பிய அவள் உதட்டின் மேற்பகுதியை ஆதித்யா துடைத்தான்.

   அவன் தீண்டலில் திடுக்கிட்டவளிடம் ”கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டமோ” என்றதும் வெட்கம் கொண்டாள்.

   “உன் கண்ணுல தெரியுது” என்றவன் பாலை அருந்தினான்.

  சற்று நேரத்தில் “சில்லுன்னு காத்து வீசுது.” என்று பேச, இந்த இடத்துலே எப்பவும் காற்று இதமா வீசும்.” என்றாள்.

”யா எனக்கு தெரியும். பட் இப்ப டோர் லாக் பண்ணிடலாமா?” என்று கேட்டான். அவன் கேட்டதே வேறு அர்த்தத்தை தந்திட சம்மதமாய் தலையாட்டினாள்.

     பால்கனி கதவும் தாழிட்டப்பின், சிறு ஒளியை உமிழும் லைட்டை போட்டான். அறையை பிரகாசமாக்கும் லைட்டின் சுவிட்சை அணைத்தான். திலோத்தமாவை கைப்பிடித்து மெத்தையில் உட்கார வைக்க, அவளது பயமும் தயக்கமும் சிறு ஒளியில் அழகாய் தெரிந்தது.

  கன்னம் ஏந்தி முத்தங்கள் மூலம் முன்னுரை இயற்ற ஆரம்பித்த ஆதித்யா முடிவுரையை முடித்து உறங்கியது எல்லாம் அந்த காரிருளுக்கே வெளிச்சம்.

   மனதின் பகிர்வை புறம் தள்ளி உடலின் பகிர்வை கையாண்டு மூச்சு முட்ட திண்டாடி திணறி, முத்தங்களை வாறியிறைத்து, இனிமையான இல்லறத்தில் மூழ்கினார்கள்.

     காலையில் திலோத்தமா எழுந்த போது ஆதித்யா பால்கனியில் வீற்றிருந்தான்.

  வானத்தை வெறித்தவன் திலோத்தமா எழுந்திருக்கும் அசைவு தெரிய, பேண்ட் பேக்கெட்டில் கைகளை விடுத்திருந்தவன் கையை கட்டி அவளை காண, திலோத்தமா சேலையை போர்வை போல சுற்றியபடி நிற்க, “சோளக்காட்டு பொம்மை மாதிரி இருக்க” என்று சிரித்தான்.‌

   உதடு கோணித்து, “நைட்டு அழகான ராட்சஸினு காது பக்கம் சொன்னிங்க. இப்ப சோளக்காட்டு பொம்மையா?”  என்று கையை நீட்டி பேச, மாங்கல்யம் தாங்கிய நெஞ்சில் உடை நழுவ பார்த்தது.

  “அச்சோ” என்று பதறி சரிசெய்தவளை கண்டு மேலும் நகைத்தவனை கண்டு போலியான கோபத்தோடு குளியலறைக்கு ஓடினாள்.

  ஆதித்யா மீண்டும் வானத்தை பார்வையிட மும்முரமானான்.

  குளித்து முடித்து டவல் கட்டி வெளிவந்தவள் குளியலறை ஒட்டிய கப்போர்டில் உடையை எடுத்தணிந்தாள்.

   ஓரளவு சேலை கட்டி முடித்து, “அந்த வானத்துல அப்படியென்ன இருக்கு? அடிக்கடி அங்கேயே பார்க்கறிங்க?” என்று கேட்டதும் பதில் சொல்லாமல் சிரித்தான்.‌

   “செமையா பசிக்குது.” என்று பேசியவளின் இடையை பிடித்து தன் பக்கம் இழுத்து, காதுமடலருகே முத்தம் வைத்தான்.

  “அவுச்.. கூசுது” என்று நெளிந்து “சாப்பிட வாங்க” என்று அழைத்து சென்றாள்.

  ஈரம் கொண்ட கூந்தல் அவள் முதுகை ஈரப்படுத்தியது. “சரியாவே தலை துவட்டலையா?” என்று கேட்டதும், “பசிக்குது… அதோட நீங்க முத்தம் வைத்ததும் மொத்தமா விழுந்துடுவேனோனு சரியா துவட்டாம வந்துட்டேன்.” என்று மொழிந்த படி அவன் கைகளை பின்னிபிணைந்து நடந்தாள்.

   சுரேந்திரன் மகளின் மகிழ்ச்சிக்கு எந்த குறையும் இல்லை என்றதும் ஆதித்யாவை ஏறிட்டு “வாங்க மாப்பிள்ளை சாப்பிடுங்க” என்றார்.

   சுரேந்திரன் திலோத்தமா ஆதித்யா மூவர் மட்டுமே உணவு மேஜையில் இருந்தனர்.

  பார்வதி இங்கு தங்க சங்கடப்பட்டு கைலாஷ் வீட்டில் அவரோடு சென்றார்.
  கைலாஷிற்கு ஆதித்யா இல்லாததால் பார்வதியை கட்டாயப்படுத்தி தங்கவைக்க நினைத்தார்.

  பார்வதிக்கு இத்தனை காலத்திற்கு பிறகு வந்தாலும் கணவன் அடித்து துரத்திய நாட்கள் எதுவும் மறக்காமல் இம்சித்தது.

அவர் தங்கியிருக்கும் வீட்டுக்கு போகலாம் என்றாலும் கைலாஷ் விடவில்லை.

  ஆதித்யா வரும் வரை வேறு வழியில்லாமல் தங்க கோரிக்கை வைத்து அன்பால் கொன்றார் கைலாஷ்.

   ஆதித்யாவோ மாமனார் வீட்டில் மேஜையில் நிரம்பியிருந்த பல்சுவை உணவுகளை சுட்டிக்காட்டி “இதுவரை நீங்க இப்படி சாப்பிட்டு இருக்க மாட்டிங்க. எல்லாமே ஒரு வேளைக்கு தயாராகியிருக்கு” என்றதும் ஆதித்யா முகம் கறுத்தது.

   அப்பொழுதே அவன் சிறிதளவு மட்டும் வயிற்றுக்கு நிறைத்து விட்டு எழுந்தான். எங்கள் வீட்டு உணவுகள் மேஜையில் நிரம்பி வழியும், இதெல்லாம் நீங்கள் வாழ்வில் கண்டதில்லை என்ற பேச்சு அதில் அப்பட்டமாய் இருந்தது. அதற்காகவே ஆதித்யா அரைவயிற்றுடன் நிறுத்திக்கொண்டான்.

  “என்ன சரியா சாப்பிடலை. ஏகப்பட்ட ஐயிட்டம் இருக்கே” என்று சுரேந்திரன் பரிமாற மகளிடம் கட்டளையிட்டார். இத்தனை உணவுகள் இருக்க ஆசிரமத்தில் வளர்ந்து கஷ்டப்பட்டவன் காணாததை கண்டது போல இருப்பான் என்று எண்ணி விட்டார் போல. அதோடு வீட்டோடு மாப்பிள்ளை என்றல்லவா இன்னமும் கனவு காண்கின்றார்.

  “ஐயிட்டம் அதிகமா இருக்கலாம். பசியிருக்கறவரை தான் சாப்பிட முடியும்” என்று பதில் தந்து உணவை மறுத்தான். மாமா என்ற வார்த்தை இன்னமும் ஆதித்யா வாயிலிருந்து வரவில்லை‌. நறுக்கு தெறித்த வார்த்தை தவிர அவன் பேசுவதேயில்லை. அதை மீறி பேசவேண்டிய இடத்தில் கஷ்டப்பட்டு புன்னகையை நிரப்பிடுவான்.
 
  “மாப்பிள்ளை துளி சதை கூட கூடுதலா இல்லாம பிட்டா இருக்கறப்பவே நினைச்சேன்.” என்று சுரேந்திரன் மாமானாராய் மாப்பிள்ளையை பெருமையாக நினைத்தார்.‌

  ஆதித்யாவிற்கு தான் என்ன தூக்கி நிறுத்தி பேசினாலும் மாமனார் சுரேந்திரனுடன் ஒட்டமுடியவில்லை.
 
  சில நேரம் சுரேந்திரன் தானா பேச முன் வந்தா, பதில் பேசாமல் அங்கொருவன் நின்று பேசுவதை கூடசெவிமடுக்காமல் ஆதித்யா நகருவதை அறிந்தார்.

   ஆதித்யா கவனிக்காமல் இருப்பதாக சுரேந்திரனுக்கு தோன்றவும், மனதிற்குள் ‘வீட்டோட மாப்பிள்ளையா இருக்கறவனுக்கு இந்த திமிரு ஆகாது. ஆனா நம்ம பொண்ணுக்கு ஏத்தவன்’ என்று அதிருப்தியும் திருப்தியும் கலந்தே ஆதித்யாவை கவனித்தார்.

  -தொடரும்.

எதை எதை எல்லாம் copy அடிக்கறதுன்னு விவஸ்தை இல்லை. நான் என் site லாக் பண்ணி வச்சிருக்கேன். கதை படிக்க லாகின் பண்ணனும். ஏன்மா உங்க சைட் எல்லாம் அப்படியே போன கதை படிக்க முடியுதே, எதுக்கு இப்படி ரிஜிஸ்டர் லாகின் செய்து வாசிக்கவும்னு board.

இதுக்கு முன்ன சைட்ல அப்படி வைக்காம நாங்க வைக்கும் பொது வைக்கறிங்க பாருங்க. அப்படியே ஈ அடிச்சாம் காபி அடிங்க தலைவிதி.
 

 
‌‌

7 thoughts on “கண்ணிலே மதுச்சாரலே-5”

  1. Kalidevi

    Super aadhi life start panita una pathi therinji vachi kitta thilo but avanga kitta ena solla pora therila avarkum panakararnu konjam athigama ve kamikiraru athaium sapadu vishayathula intha kailash ena plan oda vanthu irukaro

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!