Skip to content

கரை தந்த கடலே-13

52 / 100 SEO Score

அத்தியாயம்-13

பிரதீப் தனியறையில் சென்று கதவை அடைத்துக் கொள்ள, காஞ்சனாவோ பிரசன்னாவிடம், “என் பையன் பிரதீப்பை அந்த பொண்ணுக்கு பிடிச்சிருக்காடா? என்ன சொன்னா?” என்று கேட்க, “அய்யோ ஆச்சி, அவங்க இரண்டு பேரும் என்ன பேசினாங்கன்னு தெரியலை. அப்பா அமைதியா வந்துட்டார்.
முரளி மாமாவிடம் கேட்டேன். அந்த கௌசல்யா அவங்க, ஒரு வாரம் போகட்டும். அவரா பதில் சொல்வார்னு சொல்லிட்டாங்களாம். ஆனா முடிவு என்னவாகவும் இருக்கலாம். அதிகளவுல பேராசைப்படாதிங்கனு சொல்லியிருக்காங்க” என்று சோகமாய் வந்தான்.

“ஒரு வாரம் இருக்கே. அப்ப நல்லதா பதில் வரலாம். உங்கப்பா பிரதீப் பிடிக்கலைன்னா அந்த நிமிடத்துலயே மறுத்து பேசுவான்.
பிடிச்சிருந்து சம்மதம் சொல்லிட்டு அப்பறம் சங்கடமா சுத்தக் கூடாதுன்னு யோசிக்கறானோ என்னவோ. காத்திருப்போம்” என்று  நகர்ந்தார்.
தன் பேத்திக்கே கல்யாணம் முடித்தவருக்கு பையன் கல்யாணம் சந்தேகத்திலேயே இருக்கின்றதை அறிந்துக் கொண்டார்.

அதனாலோ என்னவோ பெரிதாக ஆர்வம் காட்டவில்லை காஞ்சனா.

பிரசன்னா தான் பிரதீப் திருமணத்தால் முழு உரிமை எடுத்தபடி முடிவுக்கு காத்திருந்தான்.

இரண்டு மூன்று நாட்களாக பிரதீப் சமைத்து முடித்து தனியாக அறைக்குள் கதவை சாற்றிக் கொள்கின்றார்.

தனியாக கௌசல்யா பேசியதையே மனதில் ஓட்டி ஓட்டி பார்த்தார்.
ஒரு பெண் தன் தந்தையின் பிடிவாதத்தால் தன் இளமையில் நாட்களை விரையமாக்கி, காதலனையே கைப்பிடிக்க காத்திருக்க, காதலனோ அவனது வீட்டு சூழ்நிலைக்காக வேறு பெண்ணை மணந்துவிட்டான். இவளது காதல் தோல்வி அடைந்து, அதிலிருந்து மீண்டு தந்தையை வேறு இழந்து நிற்கின்றாள்.

தற்போது காதலனை  முற்றிலும் மறந்து, வேறொரு ஆடவனான தன்னை மணக்க கேட்டுள்ளாள்.
இதில் அவள் வேலைக்கு செல்வதாக மட்டும் சொல்லியிருக்கின்றாள்.

ஒரு பெண் தன் வாழ்க்கையை மாற்றிக்கொண்டு இயல்பான வாழ்வில் பொருந்திக்கொள்ள முனையும் போது, தானும் இயல்பான திருமண வாழ்வில் இணைவதில் தவறென்ன?’ மனசாட்சி இவ்வாறு எடுத்துரைத்ததும் ஏதோ பெரிய தவறை கூறியதை போல திடுக்கிட்டார்.

அப்ப இன்னொருத்தியை மணந்தா, நான் காதலிச்ச கல்பனா? அவ என்‌ மனசுல இருந்து போயிட்டாளா?’ என்று தடுமாறினார்.

முடிவெடுப்பதில் குழப்பமாக, மகனிடம் இதை பற்றி பேசலாமென்றால், கௌசல்யா காதலித்தை மகனிடம் சொல்வதிலும் தயக்கமிருந்தது.

அந்த பெண் கௌசல்யா, தன்னிடம் அவள் பெர்சனலை கூறியதை, தானாக யாரிடமும் விவாதித்து முடிவெடுக்க இயலாதே.!

வருங்கால சம்பந்தி முரளியிடம் கலந்து பேசலாம். ஆனால் அவருக்குமே இந்த விஷயம் தெரியாமல் இருந்தால்…

தெளிவாக முடிவெடுத்து வாழ பழகிய பிரதீப்பிற்கே அவ்விடத்தில் முடிவெடுப்பதில் ஆட்டம் கண்டது.

ஒரு வாரம் அவகாசம் கேட்டிருக்க, அதில் நான்கு நாள் வெட்டியாக போனதே மிச்சம்.

ஐந்தாம் நாள் கௌசல்யா வேலை செய்யும் இடத்திற்கு வந்து நின்றார்.

பணிமுடித்து சோர்வாக வெளியே வந்ததும், கௌசல்யா முன் பிரதீப் வந்தவர், “உங்களை சந்திக்க தான் ஈவினிங்லயிருந்து வெயிட் பண்றேன்” என்றார்.

“ஈ…வினிங்லயிருந்தா? ஒரு போன் பண்ணியிருந்தா உடனே வந்திருப்பேனே. ஏன் வெயிட் பண்ணினிங்க. போரடிச்சியிருக்கும்” என்றதும், “காத்திருப்பது எப்பவும் சுகமா தான் இருக்கும்” என்றார் பிரதீப்.

கௌசல்யா முகத்தில் சிகைகள் காற்றில் பறக்க, அதை ஓதுக்கியபடி, “ஆபிஸ் முடிஞ்சு பார்க்கறிங்க. தலையெல்லாம் பப்பரப்பானு இருக்கு. இதே காலையில் சந்திச்சிருந்தா மேபீ அன்னிக்கு மாதிரி அழகா இருந்திருப்பேன். இப்ப முகம் எண்ணெய் வழியுமே” என்று அங்கிருந்த கார் கண்ணாடியில் கவனித்தாள்.
பிரதீப்போ “உங்க அழகுக்கு என்னங்க. இப்பவும் அன்னிக்கு பார்த்த மாதிரி இருக்கிங்க. எண்ணெய் வழியற முகமா இல்லை. மனுஷனை சும்மா கட்டி இழுக்கற அழகு.” என்றார்.‌

“தேங்க்ஸ்..” என்று கௌசி பேச, “அன்னிக்கு மாதிரி காபி ஷாப்ல பேசலாமா? எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு” என்றதும் அப்படியே நடந்தனர்.

அங்கே ஜூஸ் கடைகள் மட்டுமே இருக்க, ஜூஸ் கடையில் இரண்டு மாதுளை பழச்சாறை கூறிவிட்டு எதிரெதிரே அமர்ந்தார்கள்.

“என்ன சந்தேகம்? நானும் அவரும் எந்தளவு க்ளோஸா பழகினோம்னு தெரிந்துக்கணுமா?” என்று கௌசல்யா கேட்க அவசரமாய் மறுத்தார் பிரதீப்.

“சேசே இல்லைங்க. சந்தேகம்னா ஒரு ஆண் காதலிச்சப்ப எந்தளவு அந்த பெண்ணோட க்ளோஸா இருந்தார் என்ற கேள்வி தான் முதல்ல வருமா? இது அப்படியில்லைங்க. என்னோட காதலை பத்தி” என்றார் பிரதீப்.

“உங்க காதலை பத்தியா? ஆக்சுவலி நீங்க சுனாமில இறந்துட்டதா நினைச்சு உங்க காதலி சூசைட் அட்டன் பண்ணியதா பிரசன்னா சொன்னார். எனக்கு வேற விவரம் தெரியாது.” என்று ஜூஸை பருகினாள்.

“ம்ம்ம்… ஆமாங்க. சுனாமில நான் இறந்துட்டதா கல்பனா நினைச்சா. அதோட நான் இல்லாம அவ அப்பா, அவளை வேறொருத்தனுக்கு கட்டி வச்சிடுவாரோனு பயந்துட்டு அவசரப்பட்டுட்டா.” என்றவன் தொண்டையை செருமி, “எனக்காக உயிரையே துறந்தவ கல்பனா. அப்படியிருக்க… இப்ப பிரசன்னா பிடிவாதம் பிடிக்கவும், நான் எனக்குன்னு ஒரு கல்யாணத்தை செய்தா, அது என் கல்பனாவுக்கு நான் பண்ற துரோகமா இருக்காது?
அப்படி அவளை மறந்து உங்களை மணக்க என்னால முடிவெடுக்க முடியாம தடுமாறுறேங்க. என்னால பிரசன்னாவிடம் இதை சொன்னா புரிஞ்சுக்க மாட்டான்.

சுஹாசினியை கல்யாணம் பண்ண மாட்டேன்னு சாதிப்பான். என்னை இக்கட்டுல தள்ளி விட்டுட்டான். என்னால முடிவு எடுக்க முடியாம தவிக்கறேன்.” என்று வருந்தினார்.

கௌசல்யா நிதானமாக “சப்போஸ்… நீங்க சுனாமில இறந்துட்டு, கல்பனா உயிரோட இருந்திருந்தா, உங்க கல்பனா உங்களையே நினைச்சிட்டு இருக்கணும்னு நீங்க விரும்புவிங்களா? இல்லை… அவங்க அப்பா அவங்களுக்கு வேற கல்யாணம் செய்து குழந்தை குட்டினு வாழ்வதை விரும்புவிங்களா?” என்று கேள்வியை முன்வைத்தாள்.

பிரதீப்போ அதில் தெளிவடைந்தவராக, “கல்பனா யாரையாவது திருமணம் செய்து வாழணும்னு நினைப்பேன்” என்றவர் சில நொடி விட்டு “ஆனா என்னால கல்பனாவை மறக்க முடியலையே.” என்றார்.

கௌசல்யா புன்னகை பூத்தப்படி, “உங்களை யாருங்க கல்பனாவை மறக்க சொன்னது?” என்றார்.

“இல்லை.. நீங்க உங்க காதலனை மறக்க நேரம் எடுத்திங்க. மறந்துட்டதா வேற சொன்னிங்க” என்றார் பிரதீப்.

கௌசல்யாவோ கலகலவென சிரித்து, “நீங்க பிரசன்னாவுக்கு அப்பாவா இல்லை. கிட்டதட்ட அண்ணாவா இருக்கிங்க. சின்ன பையன் மாதிரி ஏங்க இப்படி குழப்பிக்கறிங்க.

நான் ஷாகரை மறந்துக்க டைம் எடுத்துக்கிட்டேன்.‌ எஸ்.. அவர் வேறொருத்தியோட புருஷன். அதனால நேரம் எடுத்து முழுசா மறந்தேன். இப்ப திருமணம் செய்ய என் இதயத்தை காலி செய்து வச்சிட்டேன்.
உங்க விஷயத்துல நீங்க மறக்க வேண்டிய அவசியம் என்ன? கல்பனா தான் மனைவினு வாழ்ந்திட்டிங்க. பிரசன்னாவுக்கு அம்மானு பதிய வச்சியிருக்கிங்க. அதோட அவங்க இப்ப தெய்வமா இருக்காங்க. அவங்களை நீங்க மறக்க வேண்டாம் தெய்வமா வணங்கலாம்.
அவங்க இடத்தை மொத்தமா எடுத்துட்டு என்னை ஏத்துக்க வேண்டாம். அவங்க இருந்த இடத்துல என்னை வச்சி பாருங்க. பிற்காலத்தில் நீங்க என்னை காதலிப்பிங்க. கல்பனா அக்கா மேல இருக்கற காதலும் பக்தியா மாறும். இதுல குழப்பம் வேண்டாம்” என்றதும் கௌசல்யா ‘கல்பனா அக்கா’ என்றதுமே உலகம் நின்றதாக உணர்ந்தார்.

“இன்னும் புரியற மாதிரி செல்லணும்னா… உங்க பர்ஸில கல்பனா அக்கா போட்டோ அப்பவும் இருக்கலாம். கல்பனா அக்கா போட்டோ பூஜை அறையில், நம்ம ரூம்ல கூட இருக்கலாம். பிரசன்னாவுக்கு அவங்க அம்மா என்றது என்னைக்கு மாறாது.” என்றாள்.

பிரதீப் கௌசல்யா பேச்சில் கண்ணீர் துளிர்க்க, தன்னை கட்டுப்படுத்திக் கொண்டிருக்க, “உங்களுக்கு இப்பவும் குழப்பமா தான் இருக்கும். இன்னிக்கு ஐந்தாவது நாள் தானே. சரியா ஏழாவது நாள் உங்களுக்கு என்னிடம் என்ன பதில் சொல்லணும்னு தோனுதோ, அந்த பதிலை சொல்லுங்க. அதுவரை நிதானமா யோசிங்க.” என்று புன்னகைத்தார் கௌசல்யா.

கௌசல்யா அந்தப்பக்கம் வந்த ஆட்டோவை நிறுத்தி அவரது இரும்பிடத்திற்கு சென்றாள்.

பிரதீப் அதே இடத்தில் தன் பேண்ட் பேக்கெட்டில் பர்ஸை எடுத்து, கல்பனாவின் போட்டோவை கண்டார்.

“நான் மேரேஜ் பண்ணலாமா வேண்டாமா கல்பனா. என்னால பிரசன்னா வாழ்கை பாதிக்கக்கூடாது. அதே நேரம் உன்னை என்னால மறக்க முடியாது. இந்த பொண்ணு கௌசல்யா… ரொம்ப நல்ல பெண்ணா தெரியறா. ஓப்புக்கு தாலிகட்டிட்டு வீட்ல வச்சிக்கவும் முடியாது. ஒரு கட்டத்தில் நீ தங்கிட்டு இருக்கற இதயம் அவளுக்கு சொந்தமாகும்‌.” என்று பெருமூச்சை வெளியிட்டார்.

ஏதுவாயினும் இரண்டு நாளில் தீவிரமாக முடிவெடுத்து கூறலாமென வீட்டை நோக்கி நடையை கட்டினார் பிரதீப்.

வழியெங்கும் தனக்கு திருமணம் நிகழ்ந்தால், இந்த ஊரும் உலகும் எப்படியெல்லாம் கேலி கிண்டல் செய்யும் என்றும் அனுமானித்தார்.

ஊரும் உலகத்தை விட, தன் சொந்த குடும்பமே கேலி செய்யும். அண்ணா அக்கா தம்பி இருந்தும் இல்லாதவர்களா மாறிய நிலையில் சற்று துவண்டார். ஆனால் இவ்வுலகில் உடன்பிறப்புகள் எல்லாம் அன்போடு மட்டும் பழகுவார்கள் என்று எந்த அவசியமும் இல்லை. மனிதர்கள் குணமும் மனமும் மாறிக் கொண்டிருக்கின்றது. அதுவும் இந்த காலத்தில் உறவுகள் ஏதோ பெயருக்கு உள்ளது.
சொற்பமாக மனதார நேசம் வைக்கும் உறவுகள் அபூர்வமாக அமைகின்றது.

இதெல்லாம் யோசித்தவருக்கு, பிரசன்னா நல்ல மகன், சுஹாசினி நல்ல மருமகள், சம்பந்தியாக முரளி-ராதா, காஞ்சனா அம்மாவும் தன்னுடன் வந்துவிட்டார். இதில் கௌசல்யாவும் மணந்துக் கொண்டால் நிறைவான குடும்பமாக தன் வாழ்வும் மாறுமோ?! என்று எண்ணிப் பார்த்தவருக்கு நினைப்பே தித்திப்பாக இருந்தது.

கௌசல்யாவை மணந்திடும் முடிவில் தெளிவானார்.

 

 

 

 

 

6 thoughts on “கரை தந்த கடலே-13”

  1. Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 kowsalya super ah pesinaanga pa pradeep konjam nalla mudiva solluvarunu yethir parkurom parpom 🧐🤔

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!