அத்தியாயம்-17
அத்தியாயம்-17
படம் போடவும் அமிழ்தினி படத்தில் மூழ்கி போனாள்.
ராஷிகண்ணா தமன்னா என்று அவர்கள் போர்ட் பக்கம் புகைப்படமாக எடுத்த அர்ஜுனோ படத்தை சீண்டாமல் அமிழ்தினியை ஏறிட்டான்.
அமிழ்தினி கன்னத்தில் கை வைத்து படம் பார்க்க, அவளையே சாய்ந்தமர்ந்து நிதானமாய் ரசித்தான்.
கண்ணு காது மூக்கு உதடு என்று அனுஅனுவாய் ரசிக்க, அவனது எண்ணமெல்லாம் படிப்பை பத்தி எதுவும் சொல்லாம இருக்கா? ஒருவேளை படிக்க காலேஜ்ல புக்கு சீட்டெல்லாம் வாங்கிட்டு படிக்க வைக்காம கல்யாணம் பண்ணிட்டாங்களோ?
ஆனா நடை உடை பாவணை அப்படி தெரியலையே. சின்னதா பொட்டு, அடிக்கடி முடியை க்ளிப் போட்டு ஃப்ரீயா விடறாளே தவிர கொண்டையெல்லாம் போட தெரியலை. இதுல எதுனாலும் போன்ல இந்த ஆஃப் அந்த ஆஃப் என்று வியாக்கியானம் பேசறா. முக்கியமா அம்மா மாதிரி சீரியலை பார்க்கலை. எப்பபாரு பாட்டு தான். என்றவனுக்குள், “அமிழ்தினி அமிழ்தினி” என்று அவளையும் தியேட்டரில் ஓடும் படத்தையும் மாறி மாறி பார்த்தான்.
“அம்மு” என்றதும் திடுக்கிட்டு கழுத்தை திருப்பினாள்.
“கூப்பிட்டிங்களா?” என்று திரும்பி பார்த்து கேட்டு படத்தை கவனிக்க, “அம்முனு கூப்பிட்டா தான் திரும்பற. அமிழ்தினி கூப்பிட்டா கவனிக்க மாட்டேங்குற.” என்று குறைப்பட்டான்.
"எல்லாரும் அம்முன்னு கூப்பிட்டு பழக்கி விட்டுட்டாங்க. இதுவரை என் பெயரை நீட்டி முழக்கி யாரும் கூப்பிட்டதில்லை.." என்று நகம் கடித்தாள், இடையில் சிரித்தாள்.
பேய் படமா? காமெடி படமாடா இது. வர வர பேய் படத்துக்குண்டான பயமேயில்லை என்று அவள் கையை சுரண்டினான்.
“நான் அமிழ்தினினு முழுப்பெயரை தான் கூப்பிட போறேன். அதனால பழகிக்கோ” என்றான்.
அவனை வினோதமாக பார்வையிட்டு தலையாட்டி கொண்டாள்.
ஏன் கூப்பிட்டான் என்று அவளும் கேட்கவில்லை. எதற்கு கூப்பிடோமென அவனுக்கும் பிடிபடவில்லை. அதற்குள் படத்தில் இடைவேளை விழுந்தது, அவர்களுக்குள் இன்னமும் இடைவேளை விழுந்திருந்தது.
ஆளாளுக்கு எழுந்து செல்ல, “நீ போகலையா?” என்று பாத்ரூம் பக்கம் கையை காட்டி கேட்டான்.
“பப்ளிக் டாய்லெட் போக பிடிக்காது.” என்று போனை எடுத்தாள்.
“சரி ஐஸ்க்ரீமா பாப்கார்னா?” என்று கேட்டு சட்டை பையில் துழாவினான்.
ஜஸ்க்ரீம் சமோசாவும் ரொம்ப பசிக்குது” என்றவள் கடிகாரத்தை பார்க்க, மணி சாப்பிடும் நேரத்தை தொடப்போவதாக காட்டியது.
”என்ன இப்பவே நேரமாகுது.” என்று விழிக்க, “நாம என்ன மார்னிங் ஷோ மேட்னி ஷோவுக்கா வந்தோம். நைட்ஷோவு ஏழு மணிக்கு வந்தது. பின்ன மணி ஆகாதா?” என்று அவள் கேட்டதை வாங்க சென்றான்.
போரடிக்கவும் அக்கா அஞ்சனாவுக்கு போன் பேச அழைத்தாள்.
அஞ்சனா எடுத்ததும் “என்னடி இந்த நேரத்துல?” என்றதும் படம் பார்க்க நைட்ஷோவிற்கு ஆரணி வந்ததை கூறினாள் அமிழ்தினி.
“இப்பவே நேரமாகுதே. நைட் இங்க வந்துடறியா?” என்று அஞ்சனா கேட்டாள்.
அமிழ்தினிக்கும் தங்கலாமா? காலையில் காய்கறி இங்கேயே வாங்கி கொள்வார். நள்ளிரவு கிளம்பி வீட்டிற்கு பயணம் செய்து அதிகாலை வருவதற்கு கஷ்டமாக இருக்குமே என்று சிந்தித்தாள்.
“அஞ்சனா அக்கா… அவர் ஐஸ்க்ரீம் வாங்க போயிருக்கார். அவர் வந்ததும் கேட்டு சொல்லறேன். எனக்கென்னவோ வர்றது சந்தேகம் தான். வர்றதா இருந்தா சொல்லறேன்” என்று கூறினாள்.
அஞ்சனாவுமே “சரிடி…. வர்றதா இருந்தா சொல்லு” என்று கூறினாள்.
ஒரு கையில் ஐஸ்க்ரீம், மற்றொரு கையில் சமோசா என்று வந்து நீட்டினான்.
இரண்டு இரண்டு வாங்கியிருந்தான். ஒன்றை இருவர் சுவைக்கும் படமெல்லாம் அவன் ஓட்டவில்லை.
இரவு உணவு உண்ணும் நேரம் நெருங்க, தனி தனி வாங்குவது தான் சரியென்றுபட்டது.
கணவன் மனைவி என்றாலும் வாயும் வயிறும் வேறல்லவா!
படம் ஆரம்பிக்காமல் விளம்பரம் ஓடியது. அமிழ்தினி ஐஸ்க்ரீம் சுவைத்தபடி, “அக்காவுக்கு போன் பண்ணினேன். படத்துக்கு வந்ததை சொன்னேன். படம் முடிஞ்சி நேரமாகவும் அவ வீட்ல வேண்டுமென்றால் தங்கிஞ்டு காலையில் போக சொன்னா.
உங்களுக்கு காலையில் இங்கிருந்தே காய்கறி வாங்கலாம். சரின்னு செல்லிடவா?” என்று கேட்டாள்.
இதுவரை அமைதியாக ஐஸ்க்ரீம் சுவைத்தவன் “உன்னை யாரு அவங்களுக்கு கால் பண்ண சொன்னது.” என்று கத்தினான் அர்ஜுன்.
அதே நேரம் படம் போட விளக்குகள் அணைக்கப்பட்டது. படமும் போடவும் இருட்டில் இவன் பக்கம் திரும்பிய தலைகள் தானாக படத்தை பார்க்க திரும்பியது.
குரலை தணித்து, “நீ படத்துக்கு வந்ததை எதுக்கு சொன்ன?” என்று பொரிய ஆரம்பித்தான்.
“இல்லிங்க போரடிக்குன்னு கால் பண்ணவும் பேசினேன். எங்கயிருக்கன்னு கேட்டதும் அதனால் சொன்னேன். லேட் நைட் வண்டில போக வேண்டாமேன்னு” என்று முடிக்கும் முன், “இதப்பார்… உன்னை கூட்டிட்டு வந்த எனக்கு. உன்னை பத்திரமா வீட்ல விட தெரியும்.
நான் யார் வீட்லயும் தங்க மாட்டேன். எனக்கு தங்கவும் பிடிக்காது.” என்றான் முகத்தில் அடித்தார் போல.
“இல்லிங்க… காய்கறி வாங்க எப்படியும் காலையில ஆரணிக்கு வருவிங்க. இங்க அக்கா வீட்ல இருந்தா வாங்கிட்டு போயிடலாம். எதுக்கு அலைச்சல்னு பார்த்தேன்” என்றாள்.
இமை மூடி தலையை உலுக்கி, “எனக்கு அலைச்சலா, இல்லையான்னு நான் பார்த்துக்கறேன். நீயா இங்க தங்கலாம், இப்படி போகலாம்னு முடிவெடுக்காத.” என்று எரிந்து விழுந்தான்.
கொஞ்ச நேரத்திற்கு முன் இருந்த மனநிலை முற்றிலும் மாறியது.
எரிச்சலாக உணரவைத்திருந்தால், “எதையாவது முடிவெடுக்க வேண்டியது. நான் எங்கயும் தங்க மாட்டேன்.’ என்று முனங்கினான்.
அமிழ்தினிக்கு அதன்பின் படமும் ரசிக்கவில்லை.
ஏன் இந்த கோபம்? அவர் நல்லதுக்கு தானே உரைத்தேன். நள்ளிரவு திரும்பி வீடு சென்று படுக்கவே நேரமெடுக்கும். இதில் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்துக்கொள்வார். உடல்நலமும் பாதிக்கும், தூக்கமும் கெடும், அலைச்சல் அசதி தவிர்க்க எண்ணினாள்.
ஆனால் யார் வீட்டிலும் தங்க மாட்டேன் என்று கூறிவிட்டான். கனிவாக கூட கூறியிருக்கலாம்.
‘அதெல்லாம் சரிவராது அமிழ்தினி. நாம நம்ம வீட்டுக்கு போகலாம்.’ என்று கூட சொல்லி தவிர்த்திருக்கலாம், ஆனால் ஏன் தவிர்க்க வேண்டும். தங்கினால் என்ன? என்ற கடுகடுப்பு அமிழ்தினி முகத்தில் படர்ந்தது.
இங்கு வரும் பொழுது இருந்த மகிழ்ச்சி சற்று குறைந்துவிட்டது போல தோன்றியது.
‘அக்காவுக்கு போன் போடாமலேயே இருந்திருக்கலாம்’ என்று வருந்தினாள்.
படம் முடியும் வரை தாடிக்காரன் வேறு மௌவுனத்தை பிடித்து தொங்க, அமிழ்தினி மட்டும் வாய் திறப்பாளா?!
படம் முடியவும், வெளிவந்து பார்க்கிங் பக்கம் விறுவிறுவென சென்றான்.
‘ஏங்க.’ என்று அவன் வேகத்திற்கு ஈடுக்கொடுக்க முடியாமல் மெதுவாக வந்தாள்.
ஆளாளுக்கு அவளை கடந்து செல்ல, பார்வையால் விழுங்கினார்கள். சுடிதார் அணிந்த சின்ன பெண். கழுத்தில் தாலி அணிந்தாலும் மற்றவர் பார்வைக்கு அவள் அழகு முதலில் பார்வைக்கு படுகின்றதே.
அந்த குண்டு மல்லி வாசம் வேறு. பொறுக்கிகளின் பார்வை சகித்து அர்ஜுன் முன் வந்தாள்.
“கூடவே வரமாட்டியா?” என்று அதற்கும் கடிந்தான்.
அமிழ்தினி வண்டியில் ஏறி அமரவும், அர்ஜுன் வண்டியை முறுக்கினான்.
இரவு உணவை மறந்து வீட்டிற்கு சென்றிடும் வேகம். அமிழ்தினியும் உணவை பற்றி சிந்திக்கவில்லை. அவளுக்கு தான் 'ஏன் இப்படி இருக்கார்' என்ற முகத்தூக்கலில் இருந்தாளே.
ஆரணி தாண்டி சாலையில் வண்டி சென்றாலும், அந்த இருள் சற்று அச்சுறுத்தியது.
தினமும் பகலில் சந்திக்கும் பாதை என்பதால் அர்ஜுன் பெரிதாக பயப்படாமல் வண்டியை ஓட்டினான்.
ஆனால் அமிழ்தினிக்கு சற்று கோபமும் முகதூக்கலும், சண்டையும் மறந்து பயம் கவ்வியது.
என்னதான் இக்காலத்து பேய் படம் பயமின்றி பார்த்து சிரித்து வந்தாலும், சுற்றி இருட்டு தனியாக பயணம் என்று கடக்க, கைகள் உதறியது. இதில் ஒருபக்கம் கால் போட்டு இருக்க அவன் தோளை தான் பிடித்தாள்.
''என்ன இப்படி இருட்டா இருக்கு? கவர்மெண்ட் பஸ்ஸு வேற வண்டி எதுவும் இல்லை." என்று கேட்டாள்.
கையில் கட்டிய கடிகாரத்தை பார்த்து, “அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை தான் வண்டி. அதனால ரோடு இப்படி தான் இருக்கும்” என்றான்.
அவன் ஒரு கையை விட்டு ஓட்டவும் “அய்யோ பார்த்து” என்று ஆட, “கொஞ்சம் ஆடாம உட்காருறியா” என்றான்.
“இல்லிங்க ஒரு பக்கமா உட்காரவும் இருட்டுல நீங்க மேடு பள்ளம் வண்டி விடவும் பிடிக்க கஷ்டமாயிருக்கு” என்று கூறினாள்.
“ஒழுங்கா உட்காரு. இல்லை கீழே விழுந்து வாறணும். அப்பறம் நைட் ஷோ முடிந்து விழுந்துட்டேன். இதுக்கு தான் அக்கா வீட்ல தங்கலாம்னு சொன்னேன்னு சொல்லி காட்டுவ” என்றான்.
“நான் என்னைக்கு சொல்லி காட்டினேன். ஒருபக்கம் கால் போட்டு பிடிக்க கஷ்டமாயிருக்குன்னு தான் சொன்னேன். எப்படா சண்டை போடுவேன்னு காத்திருக்கறது” என்று பின்பாதி முனங்கினாள்.
அர்ஜுன் வண்டியை நிறுத்தி, “இரண்டு பக்கம் கால் போட்டு உட்காரு” என்றான்.
பேந்த பேந்த முழித்து உட்கார்ந்தாள்.
”இப்ப கஷ்டமில்லையே.. இந்த வண்டில சௌவுகரியமா தானே இருக்கு” என்று கேட்டான்.
சாதாரணமாய் கேட்டாலும் ‘இந்த வண்டில சௌவுகரியமா தானே இருக்கு’ என்று வண்டியையும் விட்டுக்கொடுக்காமல் உரைத்தான்.
‘இப்ப நான் வண்டியை குறை சொன்னேனா?’ என்பது போல எண்ணினாலும் வார்த்தையில் கூறவில்லை. இந்த தனிமை பயணத்தை மென்மேலும் கெடுத்துக்கொள்ள தயாராகவில்லை.
‘லேசாக பசிக்க ஆரம்பித்தது. ஆனால் சுற்றிலும் இருட்டு. ஒவ்வொரு ஊரை தாண்டும் போது மட்டும் மெயின் ரோடு என்பதால் விளக்கும் ஆட்களும் இருந்தார்கள். அந்த நேரம் அப்பாடி என்று இருக்கும். அதன் பின் கொஞ்ச நேரத்தில் இருட்டு. பதினைந்து நிமிட பயணத்தில் இருட்டு பழக்கமானது.
குளிர்ந்த காற்று வேறு வீச, துப்பட்டாவை உடலோடு போர்த்திக்கொண்டாள். கூடுதலாக பத்து நிமிடம் கழிய, அவன் முதுகு தோளில் சாய்ந்து முகம் புதைக்க, "ஏய் தூங்கறியா" என்று அதட்டி கேட்டான்.
“இல்லை” என்றாள் அமிழ்தினி.
அவள் அவன் முதுகில் சாய்ந்து கொள்ளவும் அர்ஜுன் மனதில் அழுத்திய கோபங்கள் காற்றில் கற்பூரம் கரைவது போல கரைந்தது.
“தூங்கிகீங்கி விழுந்துடாத” என்றான். ”நான் ஒன்னும் தூங்கலை” என்று கோபமாய் அமிழ்தினி கூறினாள்.
‘கோபத்துல இருக்காளா’ என்று அவளை காண லேசாக முகம் தெரிந்தது.
இதில் ஆவணியாபுரத்தின் பாலத்தில் வண்டி செல்லும் நேரம் டயர் பஞ்சராகும் சப்தம் கேட்டது. வண்டி சற்று தடுமாறியது.
ஓரமாய் நிறுத்தி பார்க்க, அவன் முன்பு ஒருமுறை பேருந்தை பஞ்சராக்க உபயோகித்த ஆணி. மரப்பலகையில் இரண்டு ஆணிகள் அடித்து வைத்தது. இத்தனை நாளாக ரோட்டில் அங்கும் இங்கும் உலாவி கர்மாவாக தன் வண்டியையே பதம் பார்த்ததை கண்டு நொந்தான்.
“என்னாச்சு?” என்று பார்க்க, “பஞ்சர்” என்று கூறினான்.
“பச்.. எந்த முட்டாள் இப்படி ஆணியை ரோட்ல போட்டான். கடவுளே இன்னும் வீடு வரை போகணும்” என்று சலிப்படைந்தாள்.
”நல்லவேளை இங்க வந்து பஞ்சர் ஆச்சு. இல்லைனா நடுரோட்டுல நின்றுயிருப்போம்.” என்று கூறவும் அர்ஜுனுக்கு ‘இந்தா ஆரம்பிச்சிட்டா.’ என்றானது.
வண்டியிலிருந்து ஆணியை அகற்றி அதனை பத்திரப்படுத்திக் கொண்டு இருவரும் நடந்தார்கள்.
வண்டியை உருட்டியபடி அர்ஜுன் வந்தான். “கால் இப்பவே வலிக்குது. பசிக்க வேற செய்யுது” என்று குறைப்பட்டாள்.
அதன் பின்னே அன்னை இளவழகி ஹோட்டல் சென்று சாப்பிட்டு விட்டு வர சொன்னது நினைவு வந்தது.
“அம்மா அப்படியே ஹோட்டல் போய் பரோட்டா சாப்பிட்டுக்க சொல்லுச்சு. நான் சுத்தமா மறந்துட்டேன். நீயாவது நினைவுப்படுத்தலாம்ல” என்று சண்டையிட்டான்.
“எனக்கென்ன தெரியும்? கோபத்துல அப்படியே வந்திங்கன்னு நினைச்சேன்.” என்றாள்.
அதுவும் உண்மை தான் என்பதால் அர்ஜுனோ சலித்துக்கொண்டு நடந்தான்.
நாய்கள் எல்லாம் கத்த ஆரம்பித்தது. ஒரு குழுவாக மாறி இவர்களை பார்த்து குலைக்க, “ஹே ஸூ.. போ… சனியன் இதுங்க வேற” என்று கல்லை எடுக்க, அவனை கண்டு குலைத்து ஓட ஆரம்பித்தது. சில நாய்கள் அப்பொழுதும் நிற்கவும் ‘உன்னை” என்று கல்லை எறிந்தான்.
‘இவன் அர்ஜுன் என்று நாய்கள் கூட அறிந்துவிட்டதோ என்னவோ பிடித்தது ஓட்டம்.
“இப்ப எதுக்கு கல்லால அடிக்கறிங்க. ப்ளுகிராஸ்ல பார்த்தா உங்களை பிடிச்சிட்டு போயிடுவாங்க” என்று கூறினாள்.
படித்த பெண்ணின் புத்தி அப்படி தான் சிந்திக்கும். இங்கே சுற்றி நாய் குலைத்தால் அடிக்க கல் எடுக்காமல் கொஞ்சுவார்களா? படிச்ச பொண்ணுக்கு நான் செட்டாக மாட்டேன் என்ற கோபமும் உருவாக “கொஞ்ச நேரம் சும்மா வர்றியா?” என்று குலைத்தான்.
அமிழ்தினி வாயை திறக்காமல் அவன் கூட நடந்தாள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

Spr going waiting for nxt epi💕💕💕💕💕💕😍😍😍😍😍😍😍
Interesting👍
Yenda ava akka veetuku kupputa varala nu sou adha vitutu ipadi erinju vizhundhu kadaisila vandi panchar thevaiya unaku…. Ketta ennaiyum vaaiya moodu nu sollida poran 🤭…. Ivan kuda night show ila edhukum ae velila kutitu poga sollakudadhu pola…. Yemma ammu ne sonnadha apovae kettrundha ipadi aguma avanalan thooki pottu nalla midhi ma apotan avan vazhiku varuvan….. Kadaisi varaikum sapadu kuda vangi kudukula 🤧
Arjun unnai ellam museum la dhan da vekkanum🤣 rare piece nee amizdhini nee romba paavam ma😬
Super. Interesting. Arjun this is too much.
இவ வேற சும்மா இருக்காம, வாயை கொடுத்து வாய் சண்டையை இழுத்தடிக்கிறா.
Pavam amizh ena ketuta akka veetuku polamnu thana athula irunthu ippadi erichi vilura ava mela padicha ponnuna thimira irukanuma ena una ava ethum thazthi pesalaye apram ippadi munja kamira kathura arjun
படிச்ச பொண்ணுனு தெரிஞ்சு
அத்துவிடற மாதிரியே நடிக்கான்
Intha arjun nethu dan nala pesunan nu paththa inaiku marupadi ipadi kova paduran un akka v2ku varala nu sola vendiyathu dana athuku ethuku kovam amizhdhini um ivan kita kova pesura mathiri nadantha dan ivan amaithi avan sis daily ud potunga
Super super super super
Ada poda ithuku ava veetula la yae sapitu nimathi ah irupu ah ivan enna design yae ippo.varaikum purinchika mudiyala seri ah na kara molaga ah va irupan pola
Super super sis
Nice sis waiting for next ud 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
அர்ஜுன் கொஞ்சம் மெதுவாத்தான் பேசேண்டா அமிழ்தினி பயபடுகிறால்
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
கோவம் வந்தா நீ நீயா இருக்க மாட்ட அப்படிங்கிற அட்வர்டைஸ்மென்ட்க்கு அர்ஜுன் தான் ஏத்த ஆளு. கோவம் வந்துருச்சுன்னா என்ன பேசணும் எது பேசணும்னு தெரியாம ஏதாவது பேசிடறானே.
அருமையான பதிவு
இரண்டுக்கும் புரிதல் இல்ல