புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

கால் கிலோ காதல் என்ன விலை-19

அத்தியாயம் -19

  சைக்கிளில் அத்தனை மூட்டையும் கட்டி வந்தான். புயலாய் வீட்டுக்கு வந்து கடையில் மடமடவென எடுத்து வைத்தான்.

   அமிழ்தினி பேசும் முன் தன் வண்டி சாவியை எடுத்துக் கொண்டு விரைந்தான்.

  பஞ்சர் பார்க்க கொண்டு போவதை உணர்ந்து கொண்டாள்.

   இளவழகியோ, “டேய் சாப்பிட்டுட்டு போடா” என்று கூப்பிட, ”வந்துடறேன் மா. கடையை பார்த்துக்கோ” என்று ஓடினான்.‌

   “இப்படி சாப்பிடாம கொள்ளாம ஓடறானே. கடவுளே…” என்று மகன் சாப்பிடாமல் செல்ல, கவலைக்கொண்டார்.

   அமிழ்தினியும் அவன் சென்றதை கண்டு கவலைப்பட்டு நின்றாள்.

  “ஏன் அம்மு… கடையில இருக்கற பொருட்களின் விலையெல்லாம் தெரிந்து வச்சிக்கோ. நானும் அவனும் இல்லாதப்ப வியாபாரம் பார்த்துப்ப, எப்பவும் என்னையே விட்டுட்டு ஓடறான். வயசாகுது இல்லையா? நான் போனப்பிறகு அர்ஜுனுக்கு நீ தானே துணை. நீ தானே கடையையும் பார்த்துக்கணும்” என்று காலையில் பேசியது போல பேசினார்.

   “அய்யோ அத்தை‌ உங்களுக்கு என்ன வயசு. அதெல்லாம் நல்லபடியா இருப்பிங்க. எதுக்கெடுத்தாலும் இந்த பேச்சு” என்று தேற்றினாள்.

   “நல்லாயிருந்தாலும் நீயும் கடையை கவனிச்சிக்கோ அம்மு. வயசாகுது இல்லையா. உடம்பு ஒத்துழைக்கணும்” என்று கோரிக்கை வைக்க “ச…சரிங்க அத்தை” என்று கூறவும் தான் இளவழகி நகர்ந்தார்.

  அம்முவிற்கு கடையை காணவும் மலைப்பு தோன்றியது.

  மணி பதினொன்றுக்கு தான் வீடு திரும்பினான் அர்ஜுன்.
  
  கிச்சனில் வந்ததும் ஒரு செம்பு தண்ணீரை ஒரே மூச்சில் குடித்து முடித்து “எனக்கு மோர்கஞ்சியா கொடுத்துடும்மா” என்று கடைக்கு வர, கோழி முட்டையை மடிக்க தெரியாமல் மடித்து, பேப்பரிலிருந்து நழுவ முட்டை கீழே உடைந்தது.

   “ஏய்.. உன்னை யார் இங்க அனுப்பியது.” என்று பேப்பரால் துடைத்தான்.

   “சாரி… கை ஸ்லிப் ஆகிடுச்சு” என்று பதற, “நீ உள்ளாற போ” என்று அதட்டினான்.

   கடைக்கு வந்த வாடிக்கையாளரோ “என் அர்ஜுன் உள்ளாற போனா பிறவு வியாபாரத்தை எப்ப கத்துக்கும். ஒரு முட்டை கூட கட்ட தெரியலை.” என்று கேட்டதும் அர்ஜுன் அமிழ்தினியை காண அவளும் கையை பிசைந்து பயந்து நின்றாள்.

   அர்ஜுன் அதற்கு பதில் தராமல், “வேற என்ன அக்கா வேணும்” என்றான்.‌

   “வேறென்ன முட்டை பொரியலுக்கு வெங்காயம் கால் கிலோ கொடு. மிளகுதூள் ஒரு பாக்கெட்டு கொடு” என்று வாங்கி சென்றார்‌.

   அமிழ்தினி அறைக்கு வந்திருந்தாள் கையில் முட்டை நாற்றம் வீசுவும் சோப்பு போட்டு கழுவினாள்.

  அர்ஜுன் வரவும் கையை நுகர்ந்து பார்த்தாள்.

   அவன் காணவும் “சாரி” என்றுரைத்தாள்.

“உன்னை யாரு கடையில முட்டையெல்லாம் கொடுக்க சொன்னது. அம்மாவை தானே நிறுத்தினேன்.‌” என்றான்.

  “இல்லை எத்தனை நாள் அத்தை பார்ப்பாங்க. வயசாகுதே.. நான் கத்துக்கணும்ல” என்று கூறினாள்.

   “எங்கம்மா கத்துக்க சொல்லுச்சா? இங்கப்பாரு உன்னை கல்யாணம் கட்டியது எனக்காக. என் கடையை பார்த்துக்க இல்லை.” என்றான்.‌

‌‌ அமிழ்தினி புரியாமல் நோக்கவும், “நாளை மறுநாள் சென்னை போறோம். அக்கா வீட்ல விருந்து முடிச்சிட்டு அன்னிக்கு அங்க தங்கிட்டு, அடுத்த நாள் கிளம்பறோம். அதுக்கு ஏத்த மாதிரி டிரஸ் எடுத்துக்கோ.” என்றான்.

  “இரண்டு சேலை போதுமா?” என்று கேட்டாள்.
 
   “சுடிதார் போதும். சேலை அவசியமில்லை.” என்று கூறிவிட்டு முகம் கைகால் கழுவ சென்றான்.

  அவன் வேளியே வந்ததும் மோர் கஞ்சி ரெடியாக இளவழகி நீட்டவும், வாங்கி பருகினான்.‌

   அமிழ்தினி ‘எங்க அக்கா வீட்டுக்கு கூப்பிட்டேன் நீ வரலை. உங்க அக்கா வீட்டுக்கு மட்டும் வரணுமா முடியாது. என்ற‌ சண்டையை எதிர்பார்த்தான். ஆனால் முற்றிலும் சமாதானமான பேச்சை அவன் நினைக்கவில்லை.
  
   நேற்று போட்ட சண்டை பேருந்தில் வரும் பொழுது நினைத்துப் பார்த்தானே.

   வீட்டுக்கு வந்த அர்ஜுன் ஓய்வாக கடையில் அமர்ந்தான். பெரும்பாலும் மதிய நேரம் ஆட்கள் குறைவாக வருவார்கள். அதனால் சற்று இளப்பாற முடிந்தது. இரவெல்லாம் செய்த லீலைகள் இதமாக நெஞ்சில் தாக்க இமை மூடினான்.

     அமிழ்தினி மெதுவாக நடந்து வந்தும் கொலுசு சப்தம் காட்டி கொடுக்க, அன்னை டிவி பார்க்க, எட்டி பார்த்து என்னவென்று வினவினான்.

   “சும்மா தான் அத்தை கடை பொருட்களை கேட்டு தெரிந்துக்க சொன்னாங்க. நீங்க வெளியே போன்னு விரட்டறிங்க.
எதுக்கும் நீங்க போனப்பிறகு விலையெல்லாம் தெரியாம முழிக்காம விலையை தெரிந்து வச்சிக்கறேன்” என்றாள்.

    ‘படித்த பெண்ணை கடையில் நிறுத்தவா? வேண்டாமென்று அர்ஜுன் எண்ணினான்.‌

    “இல்லை அவசரத்துக்கு நான் தானே இனி பார்த்துக்கணும்” என்று விடாது கூறினாள்.

    “அவசியம் வரும் போது சொல்லறேன்” என்று முடித்தான். அவள் கல்லூரி சென்று இளங்கலை முடித்தவள் என்று அவள் வாயால் வந்தப்பின் முடிவெடுப்போமென நினைத்தான்.

    அங்கேயே நின்றவளிடம் உள்ள போகலையா என்பது போல பார்த்தான்.‌

  “நேத்து கடையை சரியா பூட்டலை எலி வந்துடுச்சுன்னு அத்தை பயந்துட்டாங்க” என்றுரைத்தாள்.

அவள் கடையை மஞ்சமாய் மாற்றியதற்கு அறிவுறுத்த வருவதாக எண்ணி, “பச்… செய்யும் தொழிலே தெய்வம்னு எனக்கும் தெரியும்.

   ஒவ்வொரு தூணிலும் நரசிம்மர் இருக்கார்னு படிச்சிருப்ப‌, பாரதி மலத்திலும் இறைவன் இருக்கான்னு பாடியிருக்கார். அதுவும் தெரியும் தானே?!

    தாம்பத்தியமும் புனிதமானது தான். அப்படியிருக்க நேத்து நடந்தது தப்பில்லை.” என்று குரலை குறைத்து கூறினான்.
   சப்தமாய் பேசி அன்னை காதில் விழாமல் பார்த்துக்கொண்டான்.

   “நான் அதை சொல்லலை… அவங்க எலினு நினைச்சு பயந்துட்டாங்கனு சொல்ல வந்தேன்.‌ வேறொன்னுமில்லை. அண்ணி வீட்டுக்கு போகணும்னு சொன்னிங்க துணி எடுத்து வச்சிட்டேன்.” என்றாள்.

   “நல்லது.” என்றவன் கண்கள் சுழற்ற உறங்குவதில் ஆர்வமாக இருந்தான்.

   நேற்றைய பொழுதையெல்லாம் அலைச்சல் கண்கள் எரிந்தது. அமிழ்தினி வீட்டிலிருக்க ஓய்வெடுத்திருந்தாள். அர்ஜுன் அப்படியல்ல.

    லேசான ஏமாற்றம் கலந்து அமிழ்தினி அறைக்கு திரும்பினாள்‌. அவளுக்கு தெரியுமா என்ன? அவன் பேருந்திலும் தனிமையிலும் அவளை எண்ணி பார்த்திருப்பானென்று.

    அதன் பின் தினசரி பணிகளாக கடந்தது‌.

    இதோ கடையில் எல்லா பொருட்களும் நிரம்பி வழிய வைத்துவிட்டு காய்கறிகளை மட்டும் பக்கத்து தெரு அண்ணாச்சியிடம் கூடுதலாக வாங்க கூறி, அன்னையிடம் சேர்த்திட உரைத்து பணமும் கொடுத்துவிட்டான்.
   இனி சற்று நிம்மதியாக அக்கா வீட்டுக்கு விருந்துக்கு நேரம் ஒதுக்குவான்.‌

    பேருந்தில் ஏறி அமரவும் அமிழ்தினிக்கு மட்டும் உட்கார இடம் கிடைத்தது. அர்ஜுன் இரண்டு  கம்பியை பிடித்து அமிழ்தினிக்கு பாதுகாப்பாய் நின்றுக் கொண்டான்.‌

  அடிக்கடி ஜன்னலால் பறக்கும் முடியை, செவிமடுத்து பின் ஒதுக்கி அவனை கண்டாள். 

   தன்னை தன் மனைவி காண்பதை உள்ளுக்குள் ரசித்தவாறு அர்ஜுன் நின்றான்.
   அவன் மனதில் டிப்ளமோ படித்த காலம் வந்து சென்றது.
   பெரும்பாலும் அர்ஜுன் முரட்டு முகமாக இருந்தாலும் ரசிக்கும்படியான முகமே. அதனால் சில பெண்கள் அவனை கண்ணிமைக்காமல் ரசித்ததுண்டு. என்ன இந்த டிப்ளமோ சீருடை சிறிது நேரத்திலேயே மற்ற பெண்களின் பார்வையை தடைப்படுத்தி விடும்.‌
  
    அதை எண்ணவும் முகம் லேசான வருத்தத்தை அப்பியது.

  “தம்பி வழியை விடு இறங்கணும்” என்று சீட்டில் இருந்த பெண்மணி எழுந்து கூற,‌ “நீ உட்கார போறியா இல்லை நான் உட்காரவா” என்று அவனுக்கு பின்னாலிருந்த பெண்மணி கேட்க, “என்னங்க வழிவிட்டு வந்து உட்காருங்க” என்று அமிழ்தினி சொல்வதும், என அவன் எண்ணத்தை களைத்தது.

    பாதையில் வழிவிட்டு கையை எடுத்து நகர, வீற்றிருந்த பெண்மணி சென்றதும் அம்மு ஜன்னல் பக்கம் செல்ல, அர்ஜுன் அவளருகே உட்கார்ந்தான்.  

    “என்னதான் யோசிப்பிங்களோ?” என்று அம்மு முனங்க, “எலி கடையை நாசம் பண்ணிய சம்பவத்தை நினைச்சி யோசிச்சேன்” என்று இயல்பாய் மொழிய, “சீ.” என்று கூறியவளின் முகத்தில் அருவருப்பு இல்லை மாறாக இரத்த நாளங்கள் எல்லாம் வெட்கம் பூத்திருந்தது.

    அதன் பின்னே அன்றைய நாட்களை மீண்டும் நினைத்தான். அவனுக்குள்ளும் சிறு முறுவல் கூடியது.
   நானா அவளிடம் அந்தளவு அக்கப்போர் செய்தது. என்னை அறியாமல் இவளிடம் உரிமையை நிலைநாட்டுகிறேன்.

அமிழ்தினி இந்த அர்ஜுனுக்கானவள் என்றவனின் கை, அவள் தோளில் விரிந்தது.

   அம்மு அவன் தோளில் தலையை சாய்த்து கொண்டாள்.

   என்ன ஒரு இதம் சற்று நேரத்தில் பேருந்தில் உறங்கி வழிந்தனர் இருவரும்.

   சென்னை வந்ததும் கண்ணை கசக்கி அம்மு இமை திறக்க அதற்கு முன் தான் அர்ஜுன் விழித்திருந்தான்.‌

    ரெட்ஹில்ஸ் வந்து சேரவே ஒரு குட்டி தூக்கம் போட்டு விட்டனர்.

   வீட்டுக்கு வரும் போது ரஞ்சிதா வரவேற்று, வெயிலுக்கு இதமாக சர்பத் போட்டு கொடுத்தார்கள்.

  அர்ஜுன் அக்கா மாமா வீட்டுக்கு வந்து உட்கார்ந்து கொண்டான்.
அமிழ்தினி தான் சற்று புது இடமென்று தயங்கினாள்.

ரஞ்சிதா தனிக்குடித்தனம் என்பதால் கணவரும் அவளும் மட்டுமே. அதனால் கணவர் வரும்வரை தம்பியிடம் கதை பேசினார்.

இடையிடையே அமிழ்தினியிடமும் பேச்சு சென்றது.
“எங்க வீடு செட்டாகிடுச்சா? அர்ஜுன் எப்படி? உன்கிட்டயாவது ரெண்டு வார்த்தை முகம் காட்டாம பேசறானா? எங்கம்மா ஒரு புள்ளப்பூச்சி நாடகம் பார்த்துட்டு இருக்கும். அவங்களால ஒரு தொந்தரவும் இருக்காது.” என்று கேட்க கேட்க சலிக்காமல் பதில் தந்தாள்.

“உங்க அம்மா அப்பாவிடம் பேசுவியா?
காலேஜ் ஏன் படிக்க வைக்கலை? நல்லா படிக்க மாட்டியோ?” என்று கேட்டதும் அர்ஜுன் அக்காவை பார்த்து முறைத்தான்.
அவ படிச்சவ.. அவளிடம் போய் இந்தக்கா இப்படி கேட்குதே என்று மனதில் திட்டினாலும், ‘இவளுக்கு நெஞ்சழுத்தம் ஜாஸ்தி. என்னம்மா கமுக்கமா மூஞ்சியை வச்சிட்டு இருக்கா? ஒரு மாசமாக போகுது.

கடையில அந்தளவு உருண்டு பிரண்டு கசமுசா செய்தும் நம்பிக்கையா மனம் திறந்து பேசறாளா? ம்ம்ம் எத்தனை நாள் அமுக்குனியா இருக்கன்னு பார்க்கறேன்’ என்று அமிழ்தினியை தான் இமை நொடிக்காமல் கண்டான்.‌

“டேய்… பொண்டாட்டியை பார்த்தது போதும்‌. கேட்டதுக்கு பதில் சொல்லு” என்றார்.

“என்ன சொல்லணும்?” என்றான்.‌

“சென்னைக்கு வந்துடுன்னு வர்றப்ப எல்லாம் சொல்லறேன். பதிலை சொல்லுடா. பக்கத்துல வீடும் கடையும் இருக்கறப்பள இடமெல்லாம் இருக்கு” என்று கூறினார்.

“இந்தா.. சும்மா இதையே சொல்லாத. வர்றப்ப எல்லாம் சாம்பிராணி போடுற” என்று எழுந்து விட்டான். அக்காவின் கணவர் இருக்கும் கடைக்கு செல்வதாக கிளம்பினான்.

அர்ஜுன் செல்வதாக புறப்படவும், “நானும் வர்றப்ப எல்லாம் செல்லுறேன். கேட்கறானா? பொசுக்குன்னு எழுந்து போயிடறான்.‌

 எங்கப்பாவோட சின்ன ஆசை அர்ஜுன் படிச்சி முடிச்சி சென்னையில வேலை பார்க்கணும். என்னையும் சென்னையில் மாப்பிள்ளை பார்த்து கட்டிக் கொடுக்கணும். இதை தவிர பெரிய ஆசை ஏதும் இல்லை அம்மு. 

எங்கப்பா ஆசையில் என்னை கட்டி கொடுத்துட்டாங்க. இவன் படிக்கலை, எங்கப்பா கடையையே கட்டிட்டு அழுவறான்.

அதை தூக்கி போட்டுட்டு இங்க வேற வேலை கூட பார்க்கலாம். படிக்க கூட அம்மா சொன்னாங்க.

எனக்கு இது போதும் அப்பா கடைய கவனிச்சிட்டு வாழ்ந்துட்டு போறேன் சொல்லிடறான்.

கடை வீடு தவிர என்னயிருக்கு. அதை விற்றுட்டு இங்க வரலாம். நாளைப்பின்ன குழந்தை குட்டின்னு வந்தா நல்ல படிப்பு இங்க கிடைக்கும்ல. சொந்தம்னு நான் ஒருத்தி தான். அவன் இங்க வந்துட்டா அக்கா ஒருத்தி கூடயிருப்பான்னு தோணும். 

அம்மாவுக்கு எல்லாம் அவங்களுக்கு பிறகு அர்ஜுனுக்கு பக்கபலமா இருக்கறதுன்னு கவலை. அந்த கவலை போகும். எதையும் காதுல வாங்க மாட்டேங்குறான்.

நீயாவது புத்திமதி சொல்லு. அதென்னவோ நீ சொன்னாளாவது கேட்கட்டும்.” என்று கூறவும் அமிழ்தினி சிந்தனைவயப்பட்டாள்.

 மாமனார் ஆசையாக இவரை படிக்க வைத்து சென்னையில் இருக்க விரும்பியிருப்பது ரஞ்சிதா பேச்சில் புரிந்தது. 

இங்கு வந்தால் என்ன? சொல்லிப் பார்ப்போமா? என்று உள்ளத்தில் குடைந்தது. 

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

14 thoughts on “கால் கிலோ காதல் என்ன விலை-19”

  1. Rendum pesina thana ethana oru vali kedaikum avanum keka matran ivalum solla matra ethana keta munja kamikira ye arjun konjamathu porumai iruka unaku

  2. Yemma ammu ne edhum vaiya thirakadha un naathanaar pechai kettu….avana sonnadhum kekuravan…. apadiyae avan ketuta udanae un naathanaar adhukum oru kadhai sonnalum sollum un maamiyar kita…. Ne porumaiyavae solu…… Modhala ne clg padachirukardha pathi arjun kita free ya pesu…. Aprm matha kadhaiya pesu ma… Super super ka…. Waiting for next ud🥰🥰

  3. அய்யய்யோ..! இவன் தான் முரடன் முத்துவாச்சே..
    அப்புறம் கையை நீட்டி வைக்கப் போறான்.

  4. ஆத்தா மகமாயி நீ சொன்னதும் சரிங்க மகாராணி அப்படியே ஆகட்டும் என்று சொல்பவனா அர்ஜுன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!