அத்தியாயம்-22
ஓரக்கண்ணால் பெண்ணவளை பார்த்து, அவள் வாய் பிளந்து ரசிக்க, கமுக்கமாய் அறைக்கு வந்தான்.
இளவழகியோ கடையிலிருக்க, அமிழ்தினி அர்ஜுனை பின் தொடர்ந்தாள். ‘அய்யோ லைட்டா ட்ரிம் செய்த தாடி, அளவா வெட்டப்பட்ட ஹேர் ஸ்டையில் எனக்காகவா?’ என்று அவன் குளித்து வெளிவரும் நேரத்திற்கு காத்திருந்தாள்.
அவன் வந்ததுமா “சாப்பாடு எடுத்து வை” என்றான்.
“ஏதோ குறையுதே” என்று குரல் கொடுக்க, அவன் முகம் காட்டாமல் சிரித்தான்.
“நான் பார்த்துட்டேன். சிரிக்கறிங்க” என்று எதிரே சதுர வடிவத்தில் சின்னதாய் ஜன்னலில் மாட்டியிருந்த கண்ணாடியில் அவன் பிரதிபலிப்பு தெரிய உற்சாகம் பொங்க குதித்து கூறினாள்.
அவளின் செம்மையான கன்னம், குழந்தை போல குதித்து மகிழ்வை கண்டு, ஆசைக்கூடிப்போக “தெரியுதுல போடி. சாப்பாடு எடுத்து வை” என்று நாணத்தை கட்டுப்படுத்தி கூறினான்.
”ஆனாலும் இந்த தாடியும் அடர்த்தியான முடியும் அழகு. அது தான் என்னை அட்ராக் பண்ணிச்சு. திட்ட வசதியா, கொஞ்சறதுக்கு வசதியா, நீ..நீங்க.. சொல்விங்களே. அந்த நேரத்துல பிடிச்சிக்க, என்னை உரசும் போது அந்த தாடி… எக்ஸ்டாடினரி பீல் பண்ணவைக்கும்” என்றவளின் வாய் மொழி வெளிப்பாட்டில் கிறங்கினான். இந்தளவு தன்னை பிடிக்குமா? என்ற வியப்புடன் மையலாய் பார்த்தான்.
செவிமடலருகே நெருக்கமாய் வந்து ”இப்பவும் முடியை பிடிச்சிக்கலாம்” என்று அவள் கையை தலைக்கு கொண்டு செல்ல, “சீய்” என்று வெட்கப்பட்டு ஓடினாள்.
தன் தாடியை தடவி பார்த்து அந்த சிறு கண்ணாடியில் உதடு விரிய புன்னகைக்க, உலகை வென்ற மமதை அதிலிருந்தது.
சாப்பாடு எடுத்து வைக்க, இருவரின் விழிகள் அடிக்கடி உரசிக்கொண்டது.
“எப்பவும் அரக்கபறக்க சாப்பிட்டு வருவான். இன்னிக்கு எம்புட்டு நேரம்” என்று இளவழகி புலம்பவும், ‘சீக்கிரம் சாப்பிடுங்க பாவம் அத்தை. கடைக்கு ஆள் வந்துட்டே இருக்காங்க” என்று கூறியதும், “எந்நேரமும் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் வர்றது தான்” என்று நிதானமாகவே சாப்பிட்டான். அவனுக்கு அவளை கொஞ்சம் கூடுதலாக ரசிக்க தோன்றியது. இவ்லையில்லை… அவள் தன்னை ரசிப்பதை மனமுவந்து காண ஆனந்தமாய் இருந்தது.
நீண்ட நேரம் கடந்த முடியுமா? கடைக்கு சென்றதும் இளவழகி கண்ணில் மைந்தனின் மாற்றம் தெரிய, “என்னடா கல்யாணத்துக்கு எடுக்க சொன்னேன். ஆச்பூச்னு கத்தின.” என்றதற்கு “இப்ப எடுத்தது குத்தமா?” என்று முறுக்கினான்.
“நீ எடு எடுக்காத போடா” என்று அவனிடம் கூறிவிட்டு “பாரும்மா இவனை. பொண்ணு பார்க்க தாடி எடுடான்னா ‘பொண்ணுக்கு இப்படியே என்னை பிடிச்சா போதும். எவளுக்கு என்னை அப்படியே பிடிக்குமோ அவதான் பொண்ணுனு சொன்னான்.
பொண்ணு பார்க்க வந்துட்டு முடிஞ்சுதா… கல்யாணத்துக்காக இவன் அக்கா மாப்பிள்ளை தாடி எடுக்க சொன்னா கேட்கலை. உங்க அக்கா வீட்டுக்காரர் கூட சொன்னார் எடுக்கலை.
கல்யாணத்துக்கு வந்தவங்க என்ன லவ் பெயிலியரா கேட்டு கேலி செய்தப்பவும் எடுக்கலை. இப்ப வந்து என்னத்துக்கு எடுத்துயிருக்கானோ?
கேட்டா ஒழுங்கா பதில் சொல்வான்னு நினைக்க?” என்று நொடித்து காய்கறி நறுக்கியபடி, டிவி சீரியலை காண சென்றார்.
அமிழ்தினிக்கு வாயெல்லாம் பல்லாக ‘எனக்காக’ என்று மகிழ்ந்தாள்.
அர்ஜுனோ ஓரளவு வியாபாரம் முடியும் தருவாயில் உட்கார்ந்து வீட்டில் இருக்கும் வைப்பு தொகையும், சேமிப்பும் கணக்கிட்டான்.
மதியம் போல சாப்பாட்டு நேரத்தில் அன்னையிடம் வாய் திறந்தான்.
“அம்மா… அக்கா கர்ப்பவதியா இருக்கறதால உன்னை துணைக்கு கூப்பிடுது. குழந்தை பிறக்கறவரை கூடயிருக்கணுமாம். இதுல குழந்தையை பார்த்துக்க தெரியாததால ஒரு வருடமாவது நீ அங்க இருக்க வேண்டியதாயிருக்கும்”
என்று ஆரம்பித்தான்.
“அக்கா என்னிடமும் சொல்லிருந்தாடா. நானே எப்ப போகனும்னு கேட்க நினைச்சேன். மாப்பிள்ளை வீட்ல சம்பந்தி கல்யாணமாகியதும் தவறிட்டாங்க. உங்க அக்கா மாமனார் அவரும் இறந்துட்டார். நாம தானே கூடியிருந்து கவனிக்கணும்.
உன்னை பார்த்துக்க அம்மு இருக்காளே” என்று கூறவும், அமிழ்தினி அத்தை பேச்சை கேட்டு கணவரை ஏறிட்டாள்.
“அதான்மா சொல்ல வந்தேன். நீ அங்க போய் கூடயிருக்கணும்.
அதோட… எனக்கும் அக்கா சொன்னது போல சென்னையில் கடை வச்சி பார்த்தா என்னனு தோணுச்சு” என்றான்.
“அம்மு மழை கிழை பொழியுதா பாரு துவச்ச துணி நனைஞ்சிட போகுது. என்னடா சொன்னா?” என்று நக்கல் செய்ய ஆரம்பித்தார் இளவழகி.
இத்தனை நாளாக கூறியதற்கு அவன் செய்த அலப்பறைக்கு பதில் தந்தார்.
“இந்த நக்கலு தானே வேண்டாம்கிறது. ஏதோ அக்கா கர்ப்பவதியா இருக்கு. நாமளும் அக்கா கூட இருக்கணும். அதுவும் பக்கத்துல சொந்தம் வேண்டும்னு வாய் திறந்து கேட்டுடுச்சு. இப்ப இந்தளவு இறங்கி வந்து பேசினா… நீ என்னை கிண்டலடிக்கற?” என்று இடுப்பில் கை வைத்தான்.
“ஆமா.. உங்க அக்கா கூப்பிட்டப்ப, அப்பா இறந்த புதுசு. அவளும் சென்னைக்கு புதுசு. புதுசா கல்யாணமான இடம்.
ஆத்திர அவசரத்துக்கு பக்கத்துல இருக்க கூப்பிட்டா. நீ மறுத்த. அப்ப போயிருந்தா அப்பாவோட இன்சூரன்ஸ் பணம் இருந்தது. கடைக்கு முதலீடு போட்டுயிருப்ப, இப்ப என்ன இருக்கு? இருந்ததும் கல்யாண செலவுக்கு போயிடுச்சே” என்று வருந்தினார்.
“அம்மா… நாம போகலாமானு கேட்டேன். அப்படின்னா பணம் ஓரளவு இருக்குன்னு அர்த்தம்” என்றுரைத்தான்.
ஏன்டா.. எப்பபாரு காசில்லை பணம் இல்லை, அதுயில்லை இதுயில்லைனு கத்துவ. ஏதுடா?” என்று கேட்டார்.
“அம்மா…. ஆம்பள சம்பாதிக்கிறது பொம்மளைங்களுக்கு பாதியா தான் சொல்லணும்” என்றான்.
இளவழகி முறைக்க, அம்முவும் ஏறிட்டாள்.
இப்ப மாமியாரும் மருமகளும் முறைக்காம பதிலை சொல்லுங்க” என்றதும், இளவழகியோ “எந்த முடிவுக்கு முட்டுக்கட்டையாக இருந்தேன். நீ பார்த்து முடிவெடுடா” என்று கூறிவிட்டார்.
அர்ஜுனுக்கு இதுவே சம்மதமாய் தோன்ற மனைவியை கண்டான். அவளும் தான் சென்னையில் கடை என்று அக்கா வீட்டில் ஆரம்பித்தாள். “அத்தையே முட்டுக்கட்டையா இருக்க மாட்டேன்னு சொன்னாங்க. நான் மட்டும் மறுக்கவா போறேன். உங்களுக்கு எது சரின்னுபடுதோ செய்யுங்க. ஏதாவது பணம் தேவைப்பட்டா சொல்லுங்க.அப்பா போட்ட நகையிருக்கு.” என்று மகிழ்ந்தவள் அவளால் என்ன முடியுமோ அதை கூறினாள்.
“நீ கூடயிரு. அது போதும்” என்றவன் எழுந்து விட்டான்.
அதன் பின் மளமளவென பணம் எடுக்க இடம் பார்க்க, வீடு பிடிக்க, என்று அர்ஜுன் அடிக்கடி சென்னை வந்தான். மச்சான் கர்ணாவோடு அலைந்து திரிந்து வீடும் கடையும் ஒன்றாக இருந்த இடத்தையே முடித்தான்.
ரஞ்சிதா வீட்டிலிருந்து சற்று தொலைவு. ஆனால் நடந்து செல்லும் தூரமே. அதனால் அனைத்தும் சம்மதித்து பணத்தை தந்து அக்ரிமெண்ட் போட்டார்கள். முதலில் ஐந்து வருடம் ‘லீஸ்’ என்ற கணக்கில் அக்ரிமெண்ட் பணமும் கேட்க, அவ்வளவு கொடுக்க முடியாதென்றும், ஒரு வருடம் லீஸும், அதன் பின் வாடகை கொடுக்கும் விதமாக அக்ரிமெண்ட் போட்டு முடித்தார்கள்.
“இந்த வீட்டை வித்திட போறீங்களா?” என்று அஞ்சனா கேட்டதற்கு “அதெல்லாம் இல்லை. இங்க அப்படியப்படியே இருக்கும். சில பொருட்களை மட்டும் எடுத்துட்டு போறோம்” என்றாள்.
அமிழ்தினி தந்தை தேவராஜோ, ”பிழைக்க பட்டணம் போறது சரிதான். ஆனா நல்லாயிருக்கற கடையை விட்டுட்டு போறது தான்…. சரி என்னவோ மாப்பிள்ளை திறமையானவர். உழைப்பாளி, எங்க போனாலும் பிழைச்சிப்பார்” என்று முடித்து கொண்டார்.
சந்திரிகாவும் மகளிடம் வாழ்த்து கூறி அனுப்பி வைத்தார்
ஊரில் பழகிய ஆட்களோ, கவலைக்கொண்டனர்.
இங்கிருந்தால் கடை வசதி என்று கூறினார்கள். சிலரோ, “கல்யாணம் குடும்பம்னு ஆச்சு. இங்கேயே குப்பை கொட்ட முடியுமா? நாளைக்கு குழந்தை குட்டின்னு வந்தா நல்ல ஸ்கூலு வேணும்ல” என்று அமிழ்தினி ஆசையை தூண்டியும் விட்டனர்.
அர்ஜுனோ ஒரு வருஷத்துக்கு குழந்தை கிடையாது” என்று முடிவாக அவளிடம் கூறினான்.
அமிழ்தினியும் அக்காவுக்கு குழநாதை உதிக்கலை. அண்ணியும் இப்ப தான் கர்ப்பமாக இருக்காங்க. அதனால் அவர் சொல்வது சரியென்றாள்.
அர்ஜுன் அமிழ்தினி இருவரையும் ஆவனியாபுரத்தின் நரசிம்மர் ஆலையத்தில் சென்று வணங்கி இறைவன் அருளாசியோடு சென்னைக்கு கிளம்பினர்.
சென்னையில் காலூன்றி, பால் காய்ச்ச, வீட்டிற்கு குடிப்புகுந்து ஓரளவு பாத்திரம் பர்னீச்சரை ஒதுக்கி வைத்தனர்.
கடையில் சரக்கு எல்லாம் போட்டு ‘பொன்வண்ணன் ஸ்டோர்’ என்று தந்தை பெயரில் கடையை திறந்தான்.
முதல் நாள் என்பதால் கடையினை திறந்து வைத்துவிட்டு வீட்டில் அக்கா அக்கா வீட்டுக்காரரோடு பேசினார்கள்.
"கடை வச்சது பெரிசில்லை. நல்லா வியாபாரம் ஆகணும். அது தான் உழைக்கணும்" என்று பேசி மாலை ஆனது. ஓரளவு புது கடை என்பதால் யார் என்ன என்ற விவரம் சேகரிக்க, நட்பு வைக்க, கடன் வாங்க தந்திரமாக வந்தவர்கள் சிலர் என்று கூட்டம் வந்தும் போனதுமாக இருந்தது.
காய்கறி வாங்க அதிகாலை செல்ல வேண்டுமென்ற அவசரம் எதுவுமில்லை. ரெட்ஹில்ஸ் மார்க்கெட்டில் சென்று காய்கறியை வாங்கி வருவான்.
அதுவே கடையில் வைத்து விற்க நேரமெடுத்தது.
பெரும்பாலும் பால் தயிர், முட்டை சர்க்கரை, காபி தூள் டீத்தூள், வெங்காயம், தக்காளி, ஸ்னாக்ஸ் என்று ஓடியது.
மற்றவை காய்கறி எல்லாம் குறுகட்டி வருவதில் வாங்கிடும் நபரே அதிகம்.
எப்படியும் அர்ஜுன் தன் ஊரில் போல இங்கிருக்கும் மக்களும் ஆதரிப்பார்கள் என்ற எண்ணத்தில் வரவில்லை. ஆனால் கொஞ்சம் எதிர்பார்த்தான்.
இளவழகி மகள் வீடு பக்கமென்பதால் அடிக்கடி அங்கு தங்குவதுண்டு. சில நேரம் மகன் வீட்டில் இருப்பார்.
இப்படி தான் ஆறு மாதங்கள் ஓட, வியாபாரம் அமோகமாக இல்லை. இப்பொழுது கடை பிக்கப் ஆகும், அப்பொழுது பிக்கப் ஆகுமென்று அவனை அவனே எமாற்றிக் கொண்டான்.
கையில் இருந்த இருப்பு கரைய துவங்கியது. அம்மு மீது இருந்த மோகமும் கொஞ்சம் குறைய, அடிக்கடி எரிந்து விழுந்தான்.
அவனின் உண்மையான முகத்திருப்புதை அம்மு இங்கு வந்தப்பொழுதே கண்டாள் எனலாம். அதற்கு முன் எல்லாம் கோபமிருந்தாலும் உள்ளே அது உடனோ கற்பூரமாய் கரைவது போல உணர்வாள்.
தற்போது வரும் கோபங்கள் அதன் தொடர்ச்சியாக ஒரு வாரம் சண்டையை நீட்டித்தது.
அம்மு முடிந்தளவு மாமியாரிடம் சண்டை என்று காட்டிக்க மாட்டாள். ஆனால் அர்ஜுன் கோபங்கள் அவள் இதயத்தை அறுக்கும். இதில் அர்ஜுனுக்கு, இவளா இங்க வந்து இருக்கேன். எத்தனை கஷ்டம். இப்பவாவது படிச்சேன்னு வாய் திறக்காளா? என்ற கோபமுமா சேர்ந்தது.
சாதாரணமான கோபங்கள் கூட எரிமலையாக சேர ஆரம்பித்தது.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

Dei varanunu mudivu pannathu nee. Apram.kovam Mattam avakitta. Yethukum yethayo mudichu podran
Very very interesting
Nice epi👍 Business always takes time to development ☹️
தெரிஞ்சதை நீ கேட்டிருக்கலாமே
Un kovatha yen ippadi ava padipa sollala nu kamikira . Kadai konjam porumaiya tha pogum porumai mukiyam bigilu
Spr going waiting for nxt ud💕💕💕
Ivanuku kadai pick up akala nu kovama? Ila iva padichatha solala nu kovama? Pavam amizhthini
Super sis
Yellame ninaicha mari amaiyarathu ila…time varum…athu kula yaraium blame pa na kudthu
அச்சோ…! யார் மேல கோபத்தை யார் மேல காட்டறது. கடையை ஏதாவது நவீனமா செய்ய வேண்டியது தானே…? ஒருவேளை, இவன் தாடியும், முடியும் எடுத்ததால இரிக்குமோ…? இப்ப பாடி பேரு புதருக்குள்ள இல்ல மூஞ்சியை ஒழிச்சு வைச்சுக்கிறானுங்க.
Super super super super super super super 🫰🫰🫰🫰😍😍🥰🤩🥰🤩🤩😍😍🥰🥰🤩
Pls wait Arjun. Shop will pickup soon . Intresting
Super sis nice epi 👌👍😍 Arjun unoda kovam niayama da nee mudivu pannitu Ava mela kova patta enna artham 🙄
Nenaichen nallatana poitrukku edhum nadakalaiyae nu dho arambichitangala enga veena akka aatatha….
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Arjun ithu rombha thappu ava enna panna amma akka ellarum sonnaga atha than aval um.sonna ah ella neram um ore pola irukathu yae athuvum illa neeyae unga appa oda aasai nu than chennai la kadai vaika vandha athuku aval ah blame panna ah epudi
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
💓💓💓💓💓💓💓💓
Ena da idu ipdi marita
அந்த பையன் அர்ஜுன் என்ன பைத்தியமா , ஒரு இடத்தை விட்டு இன்னொரு இடத்தில் வந்து கடை ஆரம்பிக்கும் போது அப்படி இப்படி கொஞ்சம் டல்லா தான் இருக்கும் கொஞ்ச நாள் ஆனா அதானே பிக்கப் ஆகும் அதுக்காக அந்த கோவத்தை பொண்டாட்டி கிட்ட காட்டுவானா
ஏண்டா அவளை வதைக்கின்றாய்
Super super super super super
அருமையான பதிவு
Interesting