அத்தியாயம்-21
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு நேரம் மற்றவர்கள் சொல்வதை கேட்க வேண்டுமென்ற எண்ணம் வலுக்கும். அதுவும் தாலி கட்டிய மனைவி சொல்வதை மற்ற நேரம் செவி சாய்க்காத ஆண் மனம், தன் குடும்பத்தின் மீது அக்கறை காட்டி நடக்கும் தருணம், இவள் பேச்சை கேட்டு பார்த்தால் என்ன? என்று நினைக்க வைத்திடும்.
அப்படிப்பட்ட சூழ்நிலை தான் அக்கா ரஞ்சிதாவின் விஷயத்தில் அமிழ்தினியின் எண்ணத்தை முடிவெடுக்க வைத்தது.
இதுநாள் வரை சென்னைக்கு வா என்று அக்கா அழைத்து சலித்து விட்டதை, மனைவியும் கேட்டதால் ஊரை விட்டு வந்து பார்ப்போமா என்று தோன்றியது.
உடனே ஏற்றுக்கெண்டால் ஆண்வர்கத்தின் மூடி சூடா கீரீடம் விழுந்துவிடுமே. அதனால் அமைதியாக அமிழ்தினியை நோட்டமிட்டான்.
புதிதாய் மணந்தவன் செய்ய கூடிய வேலையே. மனைவியை கண் எதிரேவே நடமாட விட்டு ரசிப்பது.
இதோ ரேவதி ஸ்டோர் முழுவதும் அலைந்து விட்டார்கள். ஒரு புடவை பேண்ட் ஷர்ட் என்று எடுக்க, கடையையே புரட்டி போட்டு நாவல்பழ நிறத்தில் சேலையை எடுத்தாள்.
ரஞ்சிதம் கூட ”பரவாயில்லைடா. உன் பொண்டாட்டி வித்தியாசமான கலரா தான் எடுக்கறா.” என்று பெருமை பேசி வீட்டுக்கு வந்தார்கள்.
ரஞ்சிதா தான் கணவர் கர்ணாவிடம் இன்றைய ஹாஸ்பிடல் விவகாரம் கூறி மாத்திரை சாப்பிட்டு இருவர் அட்மிட் ஆன கதையை கூறினாள்.
கர்ணாவோ இனி அங்க போகாத. என்ன இருந்தாலும் ஒரு பயத்தை தர்றதால வேற ஹாஸ்பிடல்ல செக்கப் போ” என்று கட்டளையிட்டார்.
அர்ஜுனுக்கும் அதுவே சரியென்று தோன்றியது.
பின்னர் மாலை டீ குடித்துவிட்டு கிளம்புவதாக உடைமைகளை அள்ளி வைத்தாள் அமிழ்தினி.
“இங்க இன்னும் இரண்டு நாள் தங்கினா மெரீனா பீச்சு வள்ளுவர் கோட்டம், ஆயிரம் விளக்கு, மகாபலிபுரம்னு கூட்டிட்டு போக சொல்லலாம். இவன் இதுக்கே இரண்டு நாள் கடை மூடவேண்டியதா போச்சுன்னு குதிக்கறான்.
என்னவோ உன்னிடம் அடங்கினா சரி. அதுவும் கேட்கிற மாதிரி தெரியலை” என்று பேசவும், ”அவருக்கே எது நல்லது உதடு கெட்டதுன்னு தெரியுது அண்ணி. இதுல நான் என்னத்த சொல்லறது.” என்று சிரிக்க, அர்ஜுனுக்கு அக்கனமே மனைவியை மஞ்சத்தில் சாய்க்க ஆசைப்பிறந்தது.
கையை கட்டி கல்லு போன்று அவளை வெறித்து, “நேரத்துக்கு பஸ் ஏறணும் அமிழ்தினி” என்றான்.
கணீர் குரலில் ‘அமிழ்தினி’ என்று கேட்க நன்றாக இருந்தது. அதிலும் கணவர் கூப்பிட, ”எல்லாம் எடுத்து வச்சாசிங்க.” என்று பதில் தந்தாள்.
மாமாவிடம் சொல்லிவிட்டு அக்காவிடம் புறப்படுவதாக பையை தூக்கினான்.
“டேய் அம்மாவை இரண்டு மாசத்துல இங்க அனுப்பு. அம்மா கூடயிருந்தா கொஞ்சம் தெம்பா இருக்கும். முன்ன தான் அம்மாவை அனுப்ப மாட்ட. அம்மா கையால் சாப்பிடணும்.
இப்ப தான் உன் பொண்டாட்டி இருக்காளே” என்று அம்மாவை அனுப்ப இப்பவே தம்பியிடம் மனு போட்டாள் ரஞ்சிதா.
“உனக்காக இல்லைனாலும், என் மருமகனுக்காக அனுப்பறேன்.” என்று கிளம்பினான்.
உடம்பை கவனிச்சிக்கோங்க அண்ணி” என்று அமிழ்தினியும் அர்ஜுனுடன் சென்றாள்.
பேருந்து ஏறி இருவருக்கும் ஒரேயிடத்தில் உட்கார இடம் கிடைக்கவும் தான் நிம்மதியானான்.
ஒரேயிடமாக அமையாது தனி தனி சீட் என்று தான் கிடைத்தது. வேறு ஒருவரிடம் என் மனைவி கூட உட்காரவும் என்று மாற்றிக் கொண்டான்.
ஆசையில் மாற்றி கொண்டானா? அன்பில் மாற்றி அமர்ந்தானா? என்பது அந்த தாடிக்காரனின் ரகசியம்.
“மனசுக்கு எந்த உறுத்தலும் இல்லையே.? அக்கா ஏதும் கஷ்டமா பேசிட்டாளா?” என்று நயமாய் விசாரித்தான்.
“சேச்சே நல்லா பழகறாங்க. இந்த வீட்ல அத்தையும் அண்ணியும் நல்லா ஸ்வீட்டா பழகறாங்க” என்று பாராட்டு பத்திரம் வாசித்தாள்.
அர்ஜுனோ “அப்ப நான்?” என்ற தோரணையே மார்க்கமாக கேட்க, “ப்ருட்டா பழகறிங்க. ஜாக் ப்ருட். என்ன பலமுறை குத்தறிங்க. சில முறை இனிக்கறிங்க” என்று தாடி குத்துவதை நாசூக்காய் தொட்டு காட்டி குறிப்பிட்டாள்.
“ஏன் அதிகமா குத்துதா? கண்டிப்பா எடுக்கணுமா?” என்று கேட்டான்.
“சீ… இந்த மூஞ்சில தாடி எடுத்துட்டா பார்க்க நல்லாயிருக்குமான்னு எனக்கே சந்தேகமா இருக்கு. அதோட அந்த தாடி என்னை உரசி உரசி அது மேல, ஒரு இது வருதா…. அதனால் தாடி இருக்கட்டும். ஆனா ட்ரிம் பண்ணிபாருங்க” என்று ஆலோசனை வழங்கினாள்.
அவள் எடுக்க கூறினால் மயிர் தானே என்று நினைத்தான். அவளே இருக்கட்டும் என்றதும் , அவள் கூறியது போல ட்ரிம் செய்ய முடிவெடுத்தான்.
அலங்கார இல்லாத வார்த்தைகள், ஜாலங்கள் புரியாத நிமிடங்கள், இதமாய் வாழ்க்கை நகர, அவள் தோள் மீது கையை போட்டான்.
இரவு நேரம் இருட்டு வேறு பஸ்ஸின் அரை குறை வெளிச்சத்தில் பிரகாசித்தவளின் முகத்தையே அளவிட்டவனுக்கு அப்பொழுதே சென்னைக்கு வந்து கடை வைத்தால் எவ்வளவு பணம் தேவைப்படுமென்று கணக்கு போட்டபடி வந்தான்.
எப்படியும் கையில் வைப்பு இல்லாமல் தெரியாத ஊரில் தெரியாத மக்களை நம்பி கடை வைப்பதற்கு உயிரை உஞமையை அனைத்தும் அடகு வைப்பதற்கு சமம்.
ஆனால் அக்கா, அம்மா, மனைவி ஏன் அப்பாவின் ஆசை சென்னைக்கு வருவது தான்.
அப்பாவின் ஆசை சென்னையில் படிப்பு, வேலை இருப்பது. படிப்பு தான் தனக்கு பதில் தன் பாதி பட்டம் பெற்றவள் இருக்க, வேலைக்காவது காலூன்ற தன் சேமிப்பில் எவ்வளவு உள்ளதென்று நாளைக்கே அறிய நினைத்தான்.
பெரும்பாலும் சேமிப்பில் பணத்தை போடுவதோடு சரி எவ்வளவு உள்ளதென்று கூட இதுவரை ஆராய்ந்தது கிடையாது.
தன் தோள்வளைவில் முகத்தை வைத்து அமிழ்தினி தூக்கத்தில் நெருங்கி வரவும் குளிருவது புரிய ஜன்னலை சாற்றினான்.
இரவு பத்து மணிக்கு ஆவனியாபுரம் வந்து சேர அவளை எழுப்பினான்.
“நல்லா தூங்கிட்டேங்க” என்று படிக்கட்டில் தடுமாறி வந்தாள்.
அவள் கையை பிடித்து அழைத்து சென்றான்.
இரவு நேரம் அன்று போலவே நாய்கள் குலைக்க, அர்ஜுன் கல்லை எடுத்தான் நாய்கள் ஓட்டமெடுத்தது.
“இப்படி தலைகனத்தோட இருந்தா நாய் கொலைக்கு தான் செய்யும்” என்றவள் பேசவும், “ஊரே இந்த கணம் எப்பவும் அமைதியா இருந்து பழகிட்டு, யாரோ வந்தா புதுசா என்ன ஆள் நடமாட்டம்னு நாய் கொலைக்கு தான் செய்யும்.
என் தலை கனம் இல்லை. முத்தம் வைக்கும் கடிக்கும் போது கையை தலைக்குள்ள விட்டு மூடு ஏத்தற அப்ப மட்டும் கனமில்லையா?” என்றவனின் பேச்சில் வாயை திறக்கவில்லை.
உண்மை தானே. அவன் ஆளுமையில் தன் கைகள் அவன் முதுகையும் தலையையும் பிடிப்பதற்கு உதவுகின்றது. ஆனால் இதை இப்படி பகிரங்கமாய் பேசி நெளிய வைக்காமல் இருக்கலாம்.
ஒரு வேளை நிதானமாய் பேசி சிரித்தால் இந்த பேச்சு வெட்கத்தை கொடுத்திருக்கும். இப்பொழுது கூட வெட்கம் மொட்டு விட்டாலும், ‘அச்சோ’ என்ற பயம். அப்ப மட்டுமா எல்லாம் ஓகே. மத்த நேரம் என்ன பார்க்க அசிங்கமா இருக்கா? என்பது போல அர்ஜுன் நினைத்தால்…..
அவள் மௌவுனமாகவும் தான் பேசிய வார்த்தையின் தோரணையில் அவனுக்கே முதல் முறை புரிய துவங்கியது.
“நான் விளையாட்டா தான் கேட்டேன். குரலை வச்சி தப்பா முடிவுப் பண்ணாத” என்று பேசவும், அவனை பார்த்தாள்.
தெருவிளக்கின் ஒளியில் இரண்டு கையில் பெட்டியை சுமந்து வந்தவனது உருவம், காதல் பேச்சா காம பேச்சா, சாதாரண பேச்சா, கோபம் பேச்சா சட்டென முகத்தை வைத்து அறியமுடியவில்லை. அப்படியிருந்தால் கூடுதல் வசதி.
இதை சொன்னால் எப்படி எடுத்துப்பானோ? திருமணத்திற்கே தாடி எடுக்க மாட்டேன், முடி இப்படி தான் வைப்பேன் என்று அத்தை இளவழகியிடம் கறாராக சொன்னாராமே.
வீடு வரவும் கதவை தட்டினான்.
முன்பு எப்படியும் படம் பார்த்து வருவார்களென்று வெறுமென சாற்றியிருந்தார். இந்த இரன்டு நாளில் அர்ஜுன் இல்லாததால் கதவை தாழிட்டு இருந்தார் இளவழகி.
அர்ஜுன் "அம்மா.. மா'' என்று தட்டவும், கதவு திறக்கவில்லை. ஒன்பதுக்கே கதவை அடைச்சிடுன்னு சொன்னதுக்கு இப்படியா?' என்று புலம்பி கதவை தட்டினான்.
“அச்சோ விட்டா கதவை உடைச்சிடுவிங்க போலயே. ஒரு நிமிஷம்” என்று இளவழகிக்கு போன் மூலமாக அழைப்பு தொடுத்தாள்.
சற்று நேரத்திலேயே "அம்மு" என்று காதில் வைக்க, "கதவை திறங்க அத்தை. நம்ம வீட்டுக்கு வந்தாச்சு." என்று கூறினாள்.
”இந்தா வர்றேன்” என்று அணைத்தார்.
அர்ஜுனோ தனக்கு தோன்றவில்லையே. ஒரு வேளை கதவு திறக்காமல் இருந்தால் அடுத்து இப்படி தான் போன் போட்டிருப்போம். ஆனால் தனக்கு முன் செய்வது? அர்ஜுன் இவ உனக்கு முன்ன வழிகாட்டியாக இருப்பாளோ? என்று மனசாட்சி கூற, ‘எனக்கு முன்ன எந்த வழிகாட்டியும் வேண்டாம். என் பின்ன அவ வந்தா போதும்.’ என்று ஒரு மனம் எஞுத்துரைத்தது.
மனிதனுக்குள் தான் எத்தனை விதமான எண்ணங்கள். அது மனதிற்கு தகுந்தது போல தனக்கு பிடித்தவர் பிடிக்காதவருக்காக தன் ஈகோவோடு, தன்னலமாய் தனக்கேற்ற விதமாக விதிமுறையை வரையறுத்துக் கொள்ளும்.
“ஏம்மா உடனை கதவை திறக்க மாட்டா” என்று கடிந்தான்.
‘வந்ததுமா? அதுவும் இந்த இரவு நேரத்துல?’ என்பது போல அமிழ்தினி எண்ண, “தலைவலிடா, அதனால் மாத்திரை போட்டு படுத்துட்டேன்” என்று கூறவும், “ஆமா” என்று பெட்டியை எடுத்து அறைக்கு போக, “என்னாச்சு அத்தை. ஏன் தலைவலி வந்தது?” என்று அமிழ்தினி கேட்டாள். ஆண் பிள்ளையை விட பெண் பிள்ளைகள் இப்படி கரிசணையாக கேட்டு விடுவார்கள்.
"எப்பவும் வீட்டுக்குள்ளயே இருப்போம் இல்லையா? இரண்டு நாள் கடையிலயே இருக்க, சூடு அப்படியே இறங்கிடுச்சு தலைவலி வந்துடுச்சு. அர்ஜுன் அப்பா இருந்தப்ப கடைக்கு இப்படி முழுநேரமோ பாதி நேரமோ பார்த்துப்பேன். அர்ஜுன் அப்பா இறந்துட்ட பிறகு, அர்ஜுன் கடையை பார்த்துக்க ஆரம்பிச்சான். என்னை கடைக்குள்ள விடமாட்டான். அவனே பார்த்துப்பேன் என்னை ரெஸ்ட் எடுங்கன்னு சொல்லிட்டான்.
இப்ப முழு நேரமும் கடையில் இருக்கவும் தலைவலி வந்துடுச்சு. எதுனாலும் தொடர்ந்து பழகணும். பழகியதை விட்டாலும் பிரச்சனை தான். தூங்கி எழுந்தா சரியாகிடும்.
நீ போய் தூங்கும் மா. காலையில பேசுவோம்" என்று அனுப்பி வைத்தார்.
தங்கள் அறைக்கு வந்தப்போது பெட்டி திறந்து கிடந்தது. துணிகள் உலைத்து போட்டு விட்டு குளிக்க சென்றிருந்தான்.
ஈரம் சொட்ட வெற்று மார்போடு டவலை அணிந்து, தலைதுவட்டியபடி வந்தான்.
முன்பு இந்த கோலத்தில் கண்டதும் ஓடி சென்று ஒளித்துக் கொள்ள தோன்றியது. இன்றோ பார்வை தாழ்த்தி, கள்ளப் பார்வையோடு கணவனை காண ஆரம்பித்தாள்.
உடலுக்கு ஏற்ற உடம்பு போட்டு கனகச்சிதமாக இருந்தான். ஆங்காங்கே நீர்த்துளிகள் வழிய, அர்ஜுன் துவட்டுவதை நிறுத்திவிட்டு அவளை ஏறிட,
”இ..இ..இந்த நேரம் குளிச்சிங்களா?” என்று கேட்டாள்.
”ஆமா” என்றவன் துவட்டுதலை தொடர்ந்தான்.
“ஏன்… சளிப்பிடிச்சிட போகுது” என்றாள்.
“நான்கு மணி நேரத்துக்கும் கூடுதலாக கவர்மெண்ட் பஸ்ல கூட்டத்துல வந்தது. உன்கிட்ட வந்து வேர்வை வாசத்துல உன்னை கஷ்டப்படுத்திட கூடாதே.” என்றவன் தலைக்கு துவட்டிய துண்டை தூர எறிந்து, அமிழ்தினியை அணைத்தான்.
"நான் குளிக்கலையே" என்று கிணற்றில் அடியிலிருந்து பேசும் அளவிற்கு மெல்லிசையாக கூற, "எனக்கு நீ எப்படியிருந்தாலும் ஓகே" என்று தூக்கினான்.
“அய்யோ அழுக்கா தூசியா இருப்பேன். நானும் குளிச்சிட்டு வர்றேன்” என்று அவனை தள்ளி விட்டு, குளிர்ந்த நீரை கூட பொருட்படுத்தாமல் குளித்து முடித்து உதடு தந்தியடிக்க வந்தாள்.
அவளுமே அர்ஜுன் தலை துவட்டிய துண்டால் உடலை மறைத்து வந்து சேர, இமை மூடி உறக்கத்தில் இருந்தான் அர்ஜுன்.
‘அதானே… விட்டா போதும். தூங்கியாச்சு’ என்று முனங்கி நைட்டியை தேடியவளை வலியகரம் கொண்டு வளைத்து, “யார் தூங்கினா?” என்று இழுத்து மஞ்சத்தில் இனிக்கும் இல்லற இன்பத்தை கூட்டினான்.
நான் என்னை பொறுத்த விஷயத்தில் சரியானவன் என்ற கொள்கையில் சரியாய் இருந்தான்.
அதனாலையே அடுத்த நாள், அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து ஆரணிக்கு காய்கறி வாங்க சென்றான்.
பத்து மணிக்கு தான் வீடு வந்து சேர்ந்தான். எப்பொழுதும் ஒன்பதுக்கு வந்துவிடுபவனே. நேரமாக, வாசலை எட்டி பார்த்து நகம் கடித்த அமிழ்தினிக்கு கண்கள் விரிய ஆச்சரியம் காத்திருந்தது.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
எப்பவும் கமெண்ட்ஸ் போடுற ரீடர்ஸுக்கு நன்றி.
முகநூல்ல இருந்து லிங்க் மூலமாக வாசிக்க வர்றவங்க உங்க கருதாதை வழங்கினால் மேலும் சந்தோஷமா இருக்கும். முகநூலில் கூட மற்றவரின் கதைக்கு உங்க கமெண்ட்ஸ் ரிவ்யு பார்க்கறேன். அப்படியிருக்க ஏன் என்னுடையதுல பாராபட்சம். கேட்டு சலித்து விடும் போல இருக்கு.

Arjun epadi irunthalum azhaku than ipo tream pannitaro
Super 💓💓💓💓💓💓
Very interesting sis
Super epi
Yenna shock vachirunkano
Super
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🥰🥰🥰🥰🫰🫰
Akka arjun ah thaadikaaran ah solli avan azhaga varnipom avana maadhri naan anaiku oruthara paarthen neenga sonna adhae thaadikaaran azhaga irundhanga 🫣black tshirt la sattunu avangala paarthathum arjun nyabagam vandhu sirichiten nalla velai andha time yaarum ila ieundha enna agi irukum yen nilamai🤔…. Super super ka…. Waiting for next ud….
Omg naan traffic police partha abinanthan thinum🫣😌
Spr akka….. Ajju thaadiya trim pannitana lovely 💕💕💕💕💕
Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr sis 👌👌👌👌👌
Super sis ♥️♥️♥️
அட.. எதுக்கு இப்ப ஆச்சரியம் இந்த அம்மு குட்டிக்குன்னு தெரியலையே…???
ஆனாலும் இந்த கருவாய்ப் பையன் முன்னால் போன கடிக்கவும், பின்னால வந்தா எட்டி உதைக்கவும் செய்யறானே…? ஒருவேளை, இவன் அதுவா இருப்பானோ..? அட.. அதான்ங்க நாலு காலு, ஒரு வாலு… கழுதைங்க..!??
Wow super. What happened? Suspense. Intresting sis
Arjun thadiya trim panitan pola 🩷
Super 😍
Crt ah ninaikiran irunthalum intha aambalainga apadi engira ennam munnadi vanthu nikuthu arjun ku konjam padichava athanala ava solratha keka kudathunu ninaikama ava un kuda vazha vanthava unnil pathi ninachi konjam yosichi oru mudivu edukalam . Romance la mannan ah irukan pa
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Arjun ah ippo varaikkum enna nenaikiran avolo easy ah find out panna mudiyala ipadi oru expression less face ah pakkura thu rombha kastam da saamy ammu ivolo surprise aagura alavuku enna vishyam
Super sis nice epi 👍👌😍 Arjun konjam kaaram konjam enipu da nee semma po😍👍👌😍😍😍
வரவர அவனுக்கு ரொமான்ஸ்
கூடுது போல
அருமையோ அருமை
Super sister….
அர்ஜுன் என்கிற பனிப்பாறை இப்போது தான் மிக மிக சிறிய அளவில் கரைய தொடங்குகிறது.
Ena surprise varudu
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
Super super super super
Super super sis
அருமையான பதிவு
சூப்பர்