புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

கால் கிலோ காதல் என்ன விலை -23

அத்தியாயம்-23

ஓரு வார சண்டை அடுத்த ஒரு வார நெருக்கம், மீண்டும் புளியமரமாக சண்டை. இப்படி தான் அம்மு அர்ஜுன் வாழ்க்கை ஓடியது.

மகள் ரஞ்சிதா வயிற்றில் தன் பேரனோ பேத்தியோ வளர, இளவழகி அச்சிறு வரவை எண்ணி பூரிப்பார்.

அர்ஜுன் தான் கடையை கண்டு வாடுவான்.

என்ன தான் உழைப்பை போட்டாலும், சரக்கு வைத்தும் வியாபாரம் பெருமளவு இல்லை. முன்பு ஆவனியாபுரத்தில் வீட்டு செலவு, திடீர் செலவு, என்று எது வந்தப்போதும் மீதி சங்கத்தில் சீட்டு போட்டு பணத்தை சேமிப்பான்.

இங்கு பணத்தை மிச்சப்படுத்தவே முடியவில்லை. வியாபாரம் சரியாக வாடகைக்கும் வயிற்றுக்கும் சரியாக இருந்தது. மிச்சம் மீதி சேமிப்பு என்று எடுத்து வைத்தால் கூட மாதக்கடைசியில் ஏதாவது சேலவு வந்து விடுகின்றது. ஒரே நிம்மதி கடனாளியாக மாறவில்லை.

கடையில் ஈ ஓட்டவும் ஆரம்பித்தான். ஆவனியாபுரத்தில் ஒருத்தர் மாற்றி ஒருத்தர் ஏதாவது வாங்கிக் கொண்டு செல்வார்கள். அப்பொழுது எல்லாம், இரண்டு ரூபா முதல் தேங்காய் சர்க்கரை என்று சில்லரை ஐயிட்டமா வாங்குதுங்க. ஒரேடியா வாங்கிட்டு நம்மளை கொஞ்ச நேரம் உட்கார விடறாங்களா? என்று ஏங்கினான்.‌

ஆனால் இங்கு சற்று நேரம் உட்காரவே எரிச்சலாய் இருந்தது.

சில்லரை வியாபாரமாக இருந்தாலுமே, ஒரு பொருள் வாங்க வந்தால் கூட தேங்காய் விற்கும் விலை என்ன? ஐம்பது நூறு என்று விற்கும்.
சிறுக சிறுக அதுவே கல்லாப் பெட்டியை நிரம்பிடும். பணம் புதிதாக சேரமாட்டேன் என்று சண்டித்தனம் செய்தது‌.

இதில் இளவழகி மகள் ரஞ்சிதாவை அழைத்து மருத்துவமனை போவதாக கூறி மைந்தனிடம் வந்தார்.

“டேய் இரண்டாயிரம் கொடு” என்றார்.

“எதுக்கும்மா?” என்றான் நெற்றி சுருக்கி.

“ஹாஸ்பிடலுக்கு டா. உங்க அக்காவை கூட்டிட்டு போகணும். இன்னிக்கு ஸ்கேன் வேற பார்க்கணும்‌. டாக்டர் பீஸ் மாத்திரை வாங்கணுமே” என்று அடுக்கினார்.‌

“ஒவ்வொரு மாசமும் ஆயிரம் இரண்டாயிரம்னு வாங்கற. மாமா ஒரு தடவை கூட கூட்டிட்டு போக மாட்டாரா?” என்று முகம் சுருக்கி கேட்டான்.

“ஏன்டா… வீட்டுக்கு மூத்த பொண்ணு, முதல் தடவை உண்டாயிருக்கா, பெத்தவங்க வீட்ல தானே பார்க்கறது முறை. என்ன தான் மாப்பிள்ளை காசு தந்தாலும், இதெல்லாம் பிறந்த வீட்ல பார்க்கற மாதிரி வருமா? அவர் கூட்டிட்டு போனாலும் உள்ளவரை வர சங்கடப்படறார் டா. நான்னா டாக்டரிடம் விலாவரியா கேட்டுப்பேன்.” என்று பதிலுரைத்தார்.

“என்கிட்ட ஆயிரம் தான் இருக்கு.” என்று கொடுக்க, “பத்தாதுடா மாத்திரையே ஐநூறுக்கு வந்திடும்” என்று கூறினார்.

அர்ஜுன் நிலை புரியாத இளவழகியோ, இவ்வாறு கேட்க, அவனோ “மாமாவிடம் வாங்கிக்கோ. கட்டி கொடுத்தப் பிறகும் என்னிடம் கேட்டா நான் எங்க போவேன்.” என்று கேட்டான். மகனின் வார்த்தை இளவழகிக்கு சுறுக்கென்றது.

“பொண்ணுங்களை கட்டி கொடுத்துட்டா தலைமூழ்கிடணுமாடா.

என்ன பேசற அர்ஜுன். சீரும் சிறப்புமா கடைசிவரை பிறந்த வீட்ல செய்முறை செய்யணும். இல்லைனா நம்ம வீட்லயிருந்து போன பிள்ளைக்கு மரியாதை கிடைக்காது.” என்று கூறினார். அவர் என்னவோ நடப்பை கூற, அர்ஜுனுக்கு அதற்கு என்‌சேமிப்பு கரையவா? என்று தோன்றியது.

 "அவ வீட்ல மாமா கூட எதிர்த்து பேசாம இருந்தாளே மரியாதை கிடைக்கும். நான் பணம் செலவு செய்தா தான் கிடைக்குமா? 

இங்க எனக்கு வியாபாரம் விற்கலை. நீ என்னடான்னா இஷ்டத்துக்கு செலவு இழுக்கற” என்றான்.‌

இதுக்கே செலவாடா? அடுத்த மாசம் வளைகாப்பு வைக்கணும். வளைகாப்பு முடிய குழந்தை பிறக்கற செலவு இருக்கு. மாமான்காரன் நீ எல்லாம் ரெடியா இருக்க வேண்டாமா?” என்று கூறவும், “எது? வளைகாப்பா? இப்பயா?” என்றான்.‌

"ஏன்டா நாம இங்க வந்தே ஆறு மாசத்துக்கு மேல ஆகுது. ரஞ்சிதாவுக்கு ஒன்பதாம் மாசம் நெருங்குது." என்றதும் ஊரிலிருந்து வந்து எட்டாம் மாசம் கடப்பது கேலண்டரில் காட்டியது‌.ஸ

முருகன் சிரித்த முகத்துடன் கேலண்டரில் நிற்க, ஆண்டியாவது தான் என்று தெளிவாக விளங்கியது. 

“இங்கப்பாரும்மா எனக்கு வியாபாரம் பெருசா ஓடலை. அதனால் கல்யாணம் எப்படி ஆளுக்கு பாதி செலவுன்னு பிரிச்சோமோ. அதே போல வளைகாப்பும் பிரிச்சிப்போம்” என்றான்.‌

"என்னடா இப்படி பேசற. கூட பிறந்தவளுக்கு செய்ய கணக்கு பார்க்கறியா? தப்பு அர்ஜுன். வளைகாப்பு பொண்ணு வீட்ல செய்யணும். குழந்தை பிறந்து கயிறு கட்டி பெயர் சூட்டு விழாவை மாப்பிள்ளை வீட்ல செய்வார். இதான் நம்ம பழக்கம். 

இப்படி கணக்கு பார்க்காதே. இதுல்லாம் அத்தியாவசியம்” என்று கூறி நகர்ந்தார்.

இளவழகிக்கு உள்ளுக்குள் ஏன் இப்படி பிரிச்சி பார்க்கறான். நாளைக்கு ஒன்னுன்னா அவன் தானே நிற்கணும். இப்படி பேசறான்’ என்றதே மனதில் ஓடியது.

அர்ஜுனோ தலையில் கை வைத்து உட்கார்ந்தான்.‌

அம்மா மகன் பேசியதை கேட்க நேர்ந்த அம்முவோ அவர்கள் விஷயத்தில் தலையிடவில்லை‌ .
“என்னங்க அப்பா அம்மா நாளைக்கு வர்றாங்களாம்” என்று மட்டும் கூற, “ஏன் வர்றாங்க” என்று கோபத்தை காட்டினான்.‌

‌ ”இதென்ன கேள்வி ஏன் வர்றாங்கன்னா?” என்று விழித்தாள்.

யாராவது வந்தால் அப்படியா என்று கேட்பது வழக்கம்‌. அதுவும் பெத்த மகளை பார்க்க வருவார்கள். இவர் என்ன? ஏன் வர்றாங்கன்னு கேட்கிறான் என்று அதிருப்தி காட்டினாள்‌.

“இல்லை… காரணமில்லாம யாரும் வரமாட்டாங்களே?” என்றான்.‌

“நான் அவங்க பொண்ணு என்னை பார்க்க என்ன காரணம் வேண்டும்” என்றாள்.‌

‘படிச்ச திமிரு’ என்று முனங்கினான்.

“வர முனங்கறிங்க. ஏதாவது பேசி வந்தாலே பயமா இருக்கு.
நான் ஒன்னு சொன்னா நீங்க வேற அர்த்ததத்துல புரிந்துக்கறிங்க.

என்ன தான் கோபம்? அத்தையிடம் அப்படி பேசறிங்க. இதே அண்ணியிருக்கற பேசியிருந்தா அவங்க இங்க வரமாட்டாங்க.

ஏன் என்னாச்சு.. வியாபாரம் ஓடலைன்னு சொல்றிங்க. எல்லாம் சரியா தானே போகுது. நாம ஒன்னும் காலம் காலமா இங்க கடை வைக்கலையே. புது இடம் புதுக்கடை. பிக்கப் ஆக லேட்டாகும்." என்றாள்.

“இதப்பாரு.. கடை வச்சியிருக்கற எனக்கு தெரியும். நீ பேசாத. இதுவொன்னும் புக் பிரிச்சி பார்த்து படிக்கிற விஷயமில்லை.” என்றான்‌.

அம்மு திகைக்க, “இந்த தாடிக்காரனுக்கு என்ன கோபம். உள்ள வாங்க கொஞ்சம் கொஞ்சி பேசி தீர்க்கலாம்” என்று சிரித்தாள்.

‘உன்னோட படுத்து கிடந்தா கடையும் படுத்துக்கும். போய் சோறாக்க பாரு‌” என்று கத்தினான்.‌ அமிழ்தினிக்கு தன் மீதே அருவருப்பாய் போனது. இப்படி பட்டென ஆசையுடன் பேசியது தவறோ. ஆண் அவனாக ஆசையுடன் நெருங்கும் போது மட்டும் இணைய வேண்டுமா? பெண்ணவளுக்கு ஆசை பாசம் மோகம் கூடாதா?

இளவழகி இல்லாததும் கடைக்கும் ஆளில்லை. சற்று விகற்பமாக பேச, இப்படியா விமர்சிப்பான்? அம்முவிற்கு அழுகை வந்துவிட்டது.

காதலும் காமமும் உற்றவனிடம் உரிமையாக பேச முடியும். அந்த நேரம் முகத்திலடித்தாற் போல பேசினால் பேதை மனம் வாடாதா?

இப்பொழுது எல்லாம் ஆசை உண்டு மோகம் குறைந்து சவிப்பான வாழ்வு அர்ஜுன் வாழ்கின்றான்.

வளைகாப்புக்கு செலவு எவ்வளவு இழுத்து வைக்குமோ என்று பயந்தான்.‌ வளைகாப்பு மட்டுமா கையோடா பிரசவ செலவு வருமே‌.

ஆண்களின் மனதில் வீட்டு செலவும், அடுத்தடுத்த பொறுப்பும் வந்துவிட்டால், அவனின் சுகதுக்கம் இரண்டாம் பட்சமே. 

முதலில் அவனுக்கு அவன் கடமை மட்டும் கண்ணில் பதியும். 

தன்னை நம்பி வந்தவள் வந்துவிட்டால், இனியென்ன? அது தான்.‌

அவளுக்கான காதல் அன்பு அடிக்கடி சில்லறைகளாக பகிர வேண்டும் என்ற ஏக்கங்கள் அவனுக்கு இந்த கடமை பொறுப்பு தாண்டி நினைக்க நாளேடாக்கும். இல்லையேல் மனைவி அடித்து பிடித்து சண்டையின் ஊடே அடிக்கடி ‘நான் உன்‌மனைவி, இன்பம் துன்பம் தாண்டி என்னிடம் இரண்டு வார்த்தை பேசு’ என்று அடிக்கடி நினைவூட்ட வேண்டும்.

அதுவும் காதல் என்றால் என்ன விலை என்று மக்கு சாம்பிராணிக்கு காதல் என்பதே ஒரு வார்த்தை மட்டுமென்று கடப்பார்கள்.

அர்ஜுன் எத்தகையானவன் என்று இன்னும் விளக்க வேண்டுமா?

இளவழகிக்கு தான் என்ன இவன் எதெதுக்கு எல்லாம் கணக்கு பார்க்கறான். முன்ன இப்படி கணக்கு பார்க்க மாட்டான். என்ன ஆனது? என்று மகளை அழைத்து மருத்துவமனையில் வீற்றிருந்தார்.

அம்மு மதிய சமையலை செய்து முடிக்க, சாப்பிட அழைத்தாள். 

“அம்மா வந்ததும் சாப்பிடறேன்” என்றான்.

“அத்தை அண்ணி வீட்ல சாப்பிடுவதா சொல்லிட்டாங்க. இதோட ஈவினிங் வருவாங்க” என்று தட்டில் சோறும் குழம்பும் ஊற்றினாள்.

   "நீ சாப்பிடலை" என்றதும் அம்மு விழிகளிலிருந்து கண்ணீர் முட்டியது. 

“நான் சாப்பிட்டேனா இல்லையான்னு கூட கேட்கறிங்க.” என்று மூக்குறிந்து அழுதாள்.

"ஏன் இதுக்கு முன்ன கேட்கலை" என்றான். 

“முன்னனனனன இங்க வந்த புதுசுல… நான் புதுசுன்னு கேட்டிங்க‌. இப்ப நான் பழசு ஆகிட்டேன்.” என்றாள்.

"படிச்சவ மாதிரியா பேசற. லூசாட்டம்" என்றவன், சாப்பாட்டை பிசைய, அம்மு பேயறைந்தது போல திகைத்தாள். 

என்ன பேசினோம் என்று அர்ஜுன் மண்டையில் ஏறியதும், சாப்பாட்டை பிசைந்த கைகள் மெதுவானது.

“நீயா சொல்வன்னு நினைச்சேன். ஆஹ்ஹான் வாயில வரலை. எனக்கு முன்னவே தெரியும். முதராத்திரி அப்ப உன் ரூம்ல உலாத்திட்டு இருந்தேன். அப்ப மேல் ஸெல்ப்ல புக் இருந்தது.

பார்த்தேன்‌… தே.அமிழ்தினி பி.எஸ்.சி பிசிக்ஸ் ‘அன்னைதெரஸா ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜ்'” என்றவன் தட்டிலே கை அலம்பி, “அம்மாவுக்கு தெரியாது சொல்லலை‌.

படிச்ச பொண்ணா வந்தா மதிப்பு தராது என் டிப்ளமோ படிப்புக்கு படிக்காதவளே போதும்னு நினைச்சேன்.

இப்படி உங்க வீட்ல பொய் சொல்லி கட்டி வைப்பாங்கன்னு நினைக்கலை.” என்றதும், “கடையில ஆள் இல்லையா?” என்ற குரல் கேட்க, “வர்றேன்க்கா” என்றவன் எழுந்தா சென்றான்.‌

அமிழ்தினிக்கு இப்பொழுது என்ன செய்வது என்ற பெரிய குழப்பம். அர்ஜுன் இத்தனை நாளாக ஏன் கேட்கவில்லை.? என்று பயந்தாள்.

இத்தனை நாட்கள் அவள் கூறாதது புத்திக்கு உரைக்கவில்லை.

வயிற்று பசியெடுத்து சாப்பிட அமர்ந்தவளுக்கு சாப்பிடும் எண்ணமே விட்டொழிந்தது‌.

பிரம்மை பிடித்தவளாக நின்றாள்.

-தொடரும்.‌

20 thoughts on “கால் கிலோ காதல் என்ன விலை -23”

  1. Arjun paiyalae indha selavulan irukatan seiyum adhukaga edhuku epadi pesitu iruka kadai enna udanae pick up agiduma innum konjm naal agum adhuku edhuku ellarkitayum mooncha kaatitu iruka…. Ammu ma ne bayapadadha avan unna thitta maatan vidu….

    Super super ka🥰🥰🥰…. Waiting for next ud….

    1. படித்தால் என்ன எல்லோரும் திமிராக நடக்கிறார்களா என்ன.நல்லபடியாகத் தானே இருக்கிறாள்.

  2. Super sis nice epi 👍👌😍 Arjun eppdi pesuradhu enna pudhusa🙄 amizdhini dhan evanukaga maaranum polaruku Evan maara maatan🤔 unmaiya evaley solliyirukalam parpom

    1. அட.. படடிக்கிறது என்ன அத்தனை பெரிய குத்தமா…? இவன் பேசறது தான் ஏடாகூடமா பேசுறான். இப்படியே இவன் பேசிட்டு இருந்தா, அவ மனசு உடைஞ்சிடுவா..
      அப்புறம் இவன் அதை வேற ஒட்ட வைக்கணும்.

  3. Excellent narration. But Arjun this is too much. Your narration of Arjun anger is very practical. Commonly we can see in many husband’s life. Intresting

  4. பேசாம அர்ஜுன் அமிழ்தினிய கூட்டிகிட்டு ஊருக்கே போகலாம் அங்கே இருந்த அப்பவாவது கொஞ்சமாவது அவ கூட சந்தோஷமா இருந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!