புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

கால் கிலோ காதல் என்ன விலை -24

அத்தியாயம்-24

   அமிழ்தினி சமைக்கும் பொழுதெல்லாம் அர்ஜுன் பேசியதே மனதில் ஓடிக்கொண்டு இருக்க, கையை சுட்டுக்கொண்டு, கருவேப்பில்லையை கருகிக்கொண்டும், பொரியலில் உப்பை போட மறந்து, நிறைய சொதப்பினாள்.
    
    ‘இத்தனை நாள் சண்டைகள் கூட இதன் அடிப்படையில் உதித்ததோ? வேர்த்து வழிய குளிக்க சென்றாள்.
 
   மதியம் சாப்பிட அமரவும் பரிமாற சென்றவளை தடுத்து விட்டான்.‌

   அமிழ்தினி நெஞ்சடைக்க எச்சியை விழுங்க முடியாமல் அமர்ந்திருக்க, “என்ன தான் இந்த உலகம் ரொம்ப டிஜிட்டல் உலகமா மாறினாலும். இன்னமும் நல்லது கெட்டதுக்கு நல்ல நாள், நல்லநேரம் பார்க்கறாங்க.  
   அப்படி தான்அப்பா ஜாதகம் பார்த்தது. என் ஜாதகம் யாரோட பொருந்தமாட்டுதுன்னு அப்பாவுக்கு கவலை. உங்களோடது மட்டும் நல்லா பொருந்திருக்குன்னு தான் டிப்ளமோ படிப்பு, மளிகைகடைக்காரர் என்றாலும் அப்பாவுக்கு பெரிசா தோணலை.
எங்கப்பாவுக்கு படிப்பு உத்தியோகம் இரண்டாம் பட்சமா பார்த்தார். ஏன்னா அப்பாவுமே கடையெல்லாம் வச்சி நடத்தியவர்.

    புருஷனை விட பொண்டாட்டி அதிகம் படிச்சா, ஆம்பளைக்கு இன்பீரியாட்டி காம்பிளஸ் வரும்னு தான் பிளஸ்டுனு அப்பா தரகரிடம் பொய் சொல்லிட்டார். அதோட அக்காவுக்கு போட்ட நகையே எனக்கும் போட்டுடலாம்னுனுனுனு.

  எனக்கு என் லைப்பை அப்பா சொல்லற மாதிரி அமைச்சிக்கறதுல எந்த கஷ்டமும் இல்லை. உங்களை பார்க்காதப்ப, என் தலைவிதி எப்படியோன்னு தவிச்சேன். எப்ப உங்களை கோவில்ல பார்த்து பிடிச்சதோ அதுக்கு பிறகு தலைவிதின்னு நினைக்கலை.

    சரி நல்லவரா தெரியறார் என்ற மதிப்பு உண்டாச்சு. பீடி சிகரெட் கூட கடையில வைக்க மாட்டேன்னு சொன்னப்ப சமூக அக்கறை பிடிச்சது.

   பொண்ணு பார்க்க நீங்க வந்தப்ப நான் போட்ட பிளாக் செயின் அறுந்திருக்கணும். அதை நீங்க கோர்த்து கொடுத்திருக்கணும். இல்லைனா டாலருக்கு இரண்டு பக்கமும் மூன்று மூன்று டிசைன் இருந்த இடத்துல இரண்டு இரண்டு டிசைனா மாறி அளவு சின்னதா மாறியிருந்தது.

எனக்காக மறுபடியும் அப்ப கோவிலுக்கு போய் எப்படியோ அதை தேடியிருக்கிங்க. அப்படி தானே?” என்றதும் அர்ஜுன் சாப்பிட்டபடியே கேட்டிருந்தான்.

  உண்மை தான் அந்த செயினை தேடி அடுத்த நாளே வந்து கோவிலை சுற்றிட குரங்கு மரத்தில் போட்ட இடத்திலேயே தொங்கியிருந்தது.

  கருப்பு செயின் என்பதாலும் கடையில் விற்பதாலும் யாரும் அதை சீண்டவில்லை.

  அர்ஜுன் மட்டும் துரட்டி எடுத்து வந்து எடுக்க கீழே இறக்கும் போது மணி கத்தியில் கயிற்றை பதம் பார்த்து, மணி சிதறியது. செயின் அறுப்பட்டது.

   என்னடா இது என்று சலிப்போடு பொறுக்கி எடுத்து வந்து இரவு நேரம், ஒரு நாள் கதவை பூட்டி கோர்த்திருந்தான்.

  ஏன் செய்தானென்று அவனிடம் விடையில்லை.
 
  “என்னை விட நீ படிப்புல குறைச்சலென்று கட்டிக்கிட்டேன். ஆனா நீ படிச்சவன்னு முதலிரவு அப்பவே தெரியும்‌. இத்தனை மாதம் ஏன் சொல்லலை? பத்து மாசம் ஆகியிருக்குமா நமக்கு கல்யாணம் முடிஞ்சி? செயினை நான் தான் கோர்த்தேன். எனக்கு உன்னை பிடிச்சிருந்தது. பிடிக்கலைனா ஒரு பொண்ணை தொட முடியாது.” என்றான் கடுகடுப்பான முகத்தோடு.

  கடுவன் பூனையே வாய் திறந்ப் பின் அமிழ்தினி சும்மாயிருப்பாளா?! “சொல்லணும்னு அவசியம் ஏற்படலை. தேவையில்லாத பிரச்சனையை நமகாகுள்ள இழுத்து வைக்க வேண்டாமேனு நினைச்சேன். அதனால சண்டை சச்சரவு தேவையற்ற வாதம் வரமோனு பயம். இப்ப அப்படி தான்னு நிரூபிக்க பார்க்கறிங்க.

   ஒரு பொண்ணுக்கு பிடிக்காட்டியும் முதலிரவு நடக்கும். அவ சகிச்சிடலாம். ஆனா நான் விரும்பி தான் உங்களிடம் தொலைச்சேன். எனக்கு இந்த அர்ஜுன் என்ற‌ தாடிக்காரனை பிடிக்கும்.

  இப்ப எதுக்கு என்ன கேள்விக் கேட்குறிங்க? நான் திமிரா இருந்தேனா? உங்களை மதிக்காம பேசினேனா?

  நெஞ்சில கையை வச்சி சொல்லுங்க. நீங்க தான் ஒரு நேரம் எரிஞ்சு விழறிங்க? ஒரு நேரம் அன்பா இருக்கிங்க. எந்த நேரம் எப்படின்னு தெரியாம நான் எப்படி கல்யாணம் ஆன புதுசுல உங்களிடம் சொல்லறது?

  நீங்க இதை கேட்கவே பத்து மாசம் ஆகுது. நான் பொண்ணு தயங்கி யோசிச்சிருக்க கூடாதா?

   இப்ப எல்லாம் திட்டிக்கிட்டே இருக்கிங்க. இல்லையா முகம் கொடுத்து கூட பேசமாட்டேங்கறிங்க.” என்று முட்டைக் கண்ணை உருட்டி பேசவும், “நான் என்ன எங்கம்மாவை திட்டலையா? இல்லை அதுக்கூட மட்டும் இனிக்க இனிக்க பேசறேன்னா.” என்று அலுத்து கொண்டான்.‌

   “எனக்கே வியாபாரம் சரியா ஓடலை.” என்றான். அது தான் உண்மைக் காரணமும்.

   “அதுக்கு நான் தான் கிடைச்சேனா? வியாபாரம்னா முன்ன பின்ன ஆகும்.

  எங்கப்பா சொல்வார். பெரிய மாப்பிள்ளை விட சின்ன மாப்பிள்ளை கடிமையான உழைப்பாளின்னு. அத்தை கூட அர்ஜுன் எல்லாம் உப்பு விற்கும் போது மழை பெய்தா கூட டப்பால உப்பு பேக் பண்ணி விற்குற புத்திசாலின்னு பெருமையா சொல்வாங்க.

நீங்க தான்‌ தளர்ந்து போறிங்க.” என்றதும் அர்ஜுன் அவளை ஏறிட, அவள் கையை பிடித்து தேடினான்.‌

   தாளிக்கும் போது கடுகு போட்டதும் வெடிக்க, எண்ணெய் தெளிக்க, கையில் பட்டதை தூரத்தில் கண்டிருந்தவன் அவள் கையை நீவினான்.‌

  “உனக்கு என்‌மேல நம்பிக்கை இருக்கா? இல்லை இப்படி மளிகைக் கடைக்காரனை கட்டி தொலைச்சிட்டோமெனு பிற்காலத்துல நினைப்பியா?” என்றான்.

   யாரோ கடைக்கு முன் சில்லரை வைத்து தட்டவும் எழுந்தான். அவசரமாக போகும் கட்டாயத்தில் எழுந்து விட்டான்.

   “கோபமா?” என்றாள் அம்மு. ம்ம்ம’ என்று அவளை ஏறயிறங்க பார்த்து வாஷ்பேஷனில் கையை அலம்பி கடைக்கு சென்றான்.

பின்னாடியே சென்றவள் “இன்னுமா?”‌ என்று சிரிக்க, இல்லையென்றான் விழி அசைவில்.‌

   ஆனால் முகத்தில் எவ்விதமான சலனமும் இல்லை. கடைக்கு வந்த ஆட்கள் முன் மனைவி மீது காதல் அம்பை விடுபவன் அல்ல அர்ஜுன்.

  இதுக்கு முகம் புதர் குள்ள ஒளிஞ்சியிருக்கலாம். அட்லீஸ்ட் சிரிச்சிருப்பார்னு நினைச்சிட்டு மனசை தேற்றியிருப்பேன்.

   உம்முன்னு’ என்று சாப்பிட சென்றாள்.

  காலையிலிருந்து சாப்பிட முடியாது தவிர்த்து விட்டாளே. அர்ஜுன் சாப்பிட்ட தட்டில் சோறை எடுத்து போட்டு சாப்பிட அர்ஜுன் உதடு முறுவலை உதிர்த்தது.

   கடையில் பேக்கெட் போட்டவை எல்லாம் பூச்சி வர ஆரம்பிக்கவும் சோகமானான்.

   வீட்டுக்கு வந்த இளவழகியோ, “உங்க அக்காவுக்கு ரத்தம் குறைவாவே இருக்காம். ஒழுங்கா சாப்பிடற மாதிரி  தெரியுது. ஆனா சத்து பிடிக்கலை. வளைகாப்பு வரை நான் அக்கா வீட்டில் இருக்க சொல்றார் மாப்பிள்ளை.” என்று மகனிடமும் மருமகளிடமும் உரைத்தார்.‌

‌ “இரு” என்று‌ அர்ஜுன் கூறிவிட்டு காலியான ரோட்டை வேடிக்கை பார்த்தான்.

   “இருன்னா? வளைகாப்பு எப்ப வைக்கலாம்னு சொல்லு. அதை பத்தி பேசணும்ல” என்று கூறவும் “எவ்வளவு தான் பணம் வேணும்? நான் என்ன பண்ணணும்? லிஸ்ட் போட்டு சொல்லிடு” என்று மொழியவும் இளவழகி உள்ளாற சென்றார்.

   “எதுக்கு எரிஞ்சி விழறிங்க? நாம தானே செய்யணும். அதுவும் இது போல விஷயம்லாம் சந்தோஷமா செய்யணும். இப்படி மூஞ்சியை தூக்கி வைக்க கூடாது.” என்றாள்.

   அர்ஜீன் ஏறயிறங்க பார்த்து, பதில் தராது இருந்தான்.

அவன் கவனமெல்லாம் இரண்டு பக்கமும் தலை திருப்ப, எல்லாம் ஒன்று‌போல வீடாக தெரிந்தது.

அங்கிருந்தும் இங்கிருந்தும் பார்த்தால் நம் கடையும் வீடு போல தெரியுமோ? என்று எண்ணினான்.

ரெட்ஹில்ஸ் பகுதியும் ஜனரஞ்சகமானது. மக்கள் நடமாட்டம் பேருந்து நிறுத்தம், மார்க்கெட், பலதரப்பட்ட கடைகள், டிபார்ட்மென்ட் ஸ்டோரை தாண்டி, பொன்வண்ணன் ஸ்டோரை வாங்குவது இங்கிருக்கும் மக்களே. இங்கிருக்கும் மக்களில் தன்னை யாருக்கும் தெரியாது. இதெல்லாம் தாண்டி அங்கொரு கடை இருப்பதை மற்றவர் பார்வைக்கு தெரியப்படுத்த நினைத்தான்.

அவன்‌ சிந்தனையை கலைக்கும் விதமாக ஒரு பேப்பரை நீட்டினார் இளவழகி. 

அதனை வாங்கி பார்வையிட்டான்.‌

“இவங்களுக்கு எல்லாம் சொல்லி வளைகாப்பு விழா நடத்தணும்.
முன்னயெல்லாம் பத்திரிக்கை அடிச்சி, வீடு தேடி நேர்ல கொண்டு போய் கொடுத்து வரவேற்போம். இப்ப தான்‌ மொபைல்போன் வந்துடுச்சுல, அம்மாவிடம் நம்பரு இருக்கு. போன்‌போட்டு இந்த தேதி, இந்த நேரம், இந்த இடத்துல வளைகாப்பு வைப்பதா சொல்லி வரவேற்கணும்.

அதை நான் பார்த்துக்கறேன்.

நீ நம்ம அம்மு வோட் அப்பா வீட்டுக்கும் அக்கா வீட்டுக்கும் நேர்ல போய் சொல்லிட்டா போதும்.

ஏதாவது கல்யாணசத்திரம் பிடிச்சு வச்சிடலாம். சுதந்திரத்துக்கு வாடகை சாப்பாடு, இதெல்லாம் எவ்வளவு ஆகும்னு கணக்கு போடு.

இந்த ஊர்ல மாப்பிள்ளை சங்கத்துல இருக்கார். அதனால் அந்த சங்கத்து கல்யாண சத்திரத்துல பாதி வாடகையாம். ஐந்து வகை சாதம், கூட்டு பொரியல் ஐஸ்க்ரீம் மாலை டெக்ரேஷனு, எல்லாம் பணம் தேவை.

குறைந்தது 500 பேராவது வருவாங்க” என்றதும் அர்ஜுன் மெதுவாக கேட்டுக் கொண்டான்.

இந்த நேரம் ஏதாவது பேச முடியுமா?
அம்மா மட்டும் வரவில்லையே. அக்காவும் வந்து படுத்துக் கொண்டிருக்கின்றாள்.

“சரி இரண்டு வாரம் ரெடி பண்ண முயற்சிக்கறேன்.‌ சத்திரம், தேதி முடிவுப்பண்ணுங்க” என்று கூறியவன் வேறு யோசனையில் மூழ்கினான்.‌

மாலையில் இளவழகி ரஞ்சிதாவை விட சென்றார்.

  அன்றிரவு அர்ஜுன்-அம்முவிடம் சுமூகமான இல்லறம் நிகழத்தினான்.‌

அடுத்த நாள் காலை எழுந்ததும், பலகை கம்பு கயிறு என்று வாங்கி வந்தான்.
தன்‌கடைக்கு வெளியே சிலதை விரிவுப்படுத்தினான்.‌

அந்த தெரு‌முனையில் இருந்து பார்த்தாலும் அர்ஜுனின் கடை தெரிய வெண்டும் என்றெண்ணினான்.‌

அதற்காக சரத்தை எல்லாம் தொங்கவிடவும், மற்றவர்கள் அவன் அனுமதியின்றி எடுக்க முடியாத வகையில் சிறு‌கம்பி போட்டு தடுப்பும் அடித்தான்.‌

எல்லாம் செய்து முடித்து வேர்த்து நிமிர, எதிரே தேவராஜன் சந்திரிகா நடந்து வந்தனர்.

 "இவங்க வர்றதை மறந்துட்டேன்" என்றவன் வீட்டுக்குள் குரல் கொடுத்து "அமிழ்தினி" என்றான். 

“என்னங்க” என்று முன் வர, “உங்கப்பா அம்மா வர்றாங்க.” என்றான்.

‌’ம்கூம் அத்தை மாமா வர்றாங்கன்னு சொல்வாரா?’ என்று நொடித்திட, தந்தையை வரவேற்க ஓடினாள்.

"அம்மா அப்பா" என்று வர, "ஏண்டி ஓடி வர்ற, மெதுவா. மாப்பிள்ளை பார்க்கறார்." என்றதும் அம்மு அதை பெரிதாக எடுத்துக்காமல், "எனக்கு பிடிச்ச மாங்காய் ஊறுகாய் எடுத்துட்டா வந்தியா? இதென்ன?" என்று ஆர்ப்பரித்தாள். 

அன்னை அக்கா வீட்டுக்கு போகும் பொழுது எலுமிச்சை ஊறுகாய் போடுவது போல தன் வீட்டிற்கு வரும் நேரம் அவ்வாறு எடுக்காது வருவாரோ என்று கேட்டாள்.

சந்திரிகாவோ “ஏன்டி நாள் தள்ளி போயிருக்கா? மாங்காய் கேட்கற” என்றார்.

“அம்மா.” என்று பல்லை கடிக்க, அதற்குள் இளவழகி வந்தார். வரவேற்றார்.

அர்ஜுனோ “வாங்க” என்றவன் மாமா என்ற வார்த்தையெல்லாம் உதிர்க்க மறந்தான்.

-தொடரும்.

20 thoughts on “கால் கிலோ காதல் என்ன விலை -24”

  1. Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 Arjun eppdiyo manasu vittu pesitan pa endha dhadi karan na purinjikave mudiyalaiye🤔

  2. அதானே..எந்த வீட்ல மருமகன், மாமனாரை மாமான்னு…. கூப்பிற்றாங்க….🤭

  3. kalyanam agida kudathu ippadi mangai ketuda kudathu intha amma ku udane visheshama nu keturuvanga
    crt arjun ipo theliva yosichi oru vali pani iruka eni kadai therium thairiyama nadathu kadaiya

  4. Manasu vittu pesunale pala pratchanaigal mudivukku vanthudum… 👌👌👌👌👌👌 nice going sis waiting for nxt ud 😍😍😍😍

  5. அடேய் கிறுக்கா…! இப்படி கட் அன்ட் ரைட் ஆபீசரா இருந்தா எனக்கே கோபம் வருதுன்னா, அம்முவுக்கு வராதா என்ன…?
    நீ என்ன மேக் டா..,?

  6. அர்ஜுன் நல்ல உழைப்பாளி கண்டிப்பா நல்ல நிலைமைக்கு வருவான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!